World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese government preparing for greater social unrest

சீன அரசாங்கம் பெரும் சமூக கொந்தளிப்பிற்கு தயாராகிறது

By John Chan
6 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த பல மாதங்களுக்கு மேலாக, சீன ஆட்சி தொடர்ந்து பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருவது, அது பெரிய அரசியல் கொந்தளிப்பு வெடிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதையும், வெகுஜன ஒடுக்குமுறை மூலம் அதை சந்திப்பதற்கு தயாரிப்பு செய்து வருவதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

ஜீலை 28-ல் ஆளும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான People's Daily, முதல் பக்கத்தில் ``வளர்ச்சியை அதிகரிக்க ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது`` என்று தலைப்பிடப்பட்ட ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அந்த கருத்து ``மற்றெல்லாவற்றையும் விட ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது முதன்மை பெறுகிறது. ஸ்திரத் தன்மையை சிதைக்கின்ற மற்றும் சட்டத்திற்கு சவால் விடும் எந்த நடவடிக்கையும் நேரடியாக மக்களின் அடிப்படை நலன்களுக்கு பாதகம் விளைவிக்கும்`` என்று எச்சரித்திருந்தது.

People's Daily கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுதந்திர சந்தை பொருளாதாரக் கொள்கைகளால் பயனடைந்தவர்களின் சொத்து மற்றும் செல்வத்தை பற்றித்தான் "அடிப்படை நலன்கள்`` என்று கூறுகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கு இடமும் வைக்கவில்லை. அந்த தலையங்கம் ``வேறுபட்ட மக்களும், வேறுபட்ட குழுக்களும் [சந்தை] சீர்திருத்தத்தின் மற்றும் அபிவிருத்தியின் பலாபலன்களை வேறுபட்ட அளவுகளில் அனுபவித்து வருகிறார்கள் என்பது தவிர்க்க முடியாதது`` என்று அறிவித்தது.

அன்குய் மாகாணத்திலுள்ள Chizhou நகரத்தில் பரவலாக செய்தி வெளியிடப்பட்ட கலவரத்தை தொடர்ந்து, அந்த கருத்து வெளியிடப்பட்டது. ஒரு இளம் மாணவர் ஒரு உள்ளூர் வர்த்தகரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்களும் வேலையில்லாதிருப்போரும் போலீசாருடன் தெருக்களில் சண்டையிட்டார்கள் (சீனாவின் மற்றொரு ஆவேசக் எதிர்ப்பு---என்ற கட்டுரையை காண்க)

இந்த சம்பவம் தனிமைபடுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியல்ல. சென்ற மாதம், பொது பாதுகாப்பு அமைச்சர் Zhou Yongkang ரொயட்டர் இடம் கூறும் போது 2004-ல் 3.8 மில்லியன் மக்களுக்கு மேற்பட்டோர் சம்மந்தப்பட்ட 74,000 பேர் கொண்ட ''வெகுஜன நிகழ்ச்சிகள்'' நடைபெற்றன, இது முந்தைய ஆண்டில் நடைபெற்ற 58,000 எதிர்ப்புக்களைவிட அதிகமாகும் என்று தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் கொந்தளிப்புக்களுக்கு பதிலளிக்கின்ற வகையில், சீன அரசாங்கம் ஆகஸ்ட் 18-ல் பெய்ஜிங், ஷங்காய், சோங்கிங் மற்றும் டியான்ஜின் உட்பட 36 பெரிய நகரங்களில் பலத்த ஆயுதந்தாங்கிய ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' கலவரத் தடுப்பு சிறப்பு போலீஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. ஹனான் மாகாணத்தில் வறுமை வயப்பட்ட தலைநகரான Zhengzhou-விற்கு முதலாவது 500 பேர் கொண்ட கலவரத் தடுப்புப் படை அனுப்பப்பட்டது.

இத்தகைய சிறப்புப் போலீஸ் படையை முதலில் Zhengzhou-ற்கு அனுப்புவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் நாட்டின் மிக கொந்தளிப்பான பிராந்தியங்களில் அது ஒன்று என்பதால் தான். சென்ற ஆண்டு ஜீலை 31-ல், அருகாமையிலுள்ள ஒரு நகரில் உள்ளூர் அதிகாரிகள் சட்ட விரோதமாக நிலத்தை விற்றுவிட்டார்கள் என்பதை கண்டிப்பதற்காக கிராம மக்கள் கண்டனப் பேரணி நடத்தியதை ஒடுக்குவதற்காக கண்ணீர்புகை குண்டுகளும் துப்பாக்கிகளும் அடங்கிய துணை இராணுவ போலீஸ் அனுப்பப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பின்னர், ஹன் சீன இனத்தவருக்கும் ஹூய் முன்லீம்களுக்கும் இடையே ஒரு வன்முறை மோதல் வெடித்து பதட்டம் நிலவியபொழுது அதிகாரிகள் ஹனான் மாகாணத்திலுள்ள ஒரு பகுதியில் (கன்ட்ரியல்) இராணுவ சட்டத்தை பிரகடணப்படுத்தினர். (``கிராம புற சீனாவில் கலவரம் ஆழமானதைத் தொடர்ந்து இராணுவச் சட்டம் பிரகடனம்`` என்ற கட்டுரையை காண்க.)

மேலும் கலவரங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்து அந்தப் பகுதிக்கு அதிரடிப்படை போலீஸ் படைப்பிரிவு அனுப்பப்பட்டிருக்கிறது. ஹெனான் மாகாணத்தில் அந்தப் பிரிவுகளுக்கான பயிற்சியளிக்கும் பொறுப்பு வகிக்கும் ஒரு அதிகாரி ஆகஸ்ட் 19-ல் ``தைப்பே டைம்சிற்கு பேட்டியளித்த போது கூறினார். ``நாங்கள் உண்மையான போர் நிலவர பயிற்சி அளித்து வருகிறோம். ஏனெனில் எங்களது அன்றாட பயிற்சிகளில் கூர்மையான நிலவரத்தில் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறோம்``.

சீன அரசாங்கத்திடம் ஏற்கனவே ஒரு மில்லியன் வீரர்களை கொண்ட மக்கள் ஆயுதப் போலீஸ் என்கின்ற துணை இராணுவப் படை உள்ளது. என்றாலும், புதிய பிரிவுகள் நகரப் பகுதிகளில் பெருமளவில் நடக்கின்ற கலவரங்களை ஒடுக்குகின்ற போலீசாரின் ஆற்றலை கணிசமாக உயர்த்துகின்ற வல்லமையுள்ளதாகும். மக்கள் விடுதலை இராணுவத்திற்காக கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகளை இனி நம்ப முடியாது என்று ஆட்சி கருதுவதன் ஒரு பகுதிதான் இந்த பிரிவுகள் அமைக்கப்பட்டிருப்பதாகும்.

1989 மே-ஜீலை நடைபெற்ற வெகுஜன அரசாங்க எதிர்ப்பு இயக்கம் பிரதானமாக நகரங்களில் மட்டுமே எல்லைப்படுத்தப்பட்டிருந்தது மற்றும் நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மேலாதிக்கம் செலுத்தியது. தெருக்களில் மிகப் பெரிய கும்பல்களின் மீது பெய்ஜிங்கில் இராணுவப்பபிரிவுகள் சுடுவதற்கு மறுத்துவிட்ட நிலையில், ஆட்சியானது கிராமப்புற மாகாணங்களிலிருந்து புதிதாக இராணுவ கட்டாய சேவையில் சேர்க்கப்பட்ட புதிய துருப்புக்களை 1989 ஜீன் 4 அன்று நடைபெற்ற தியனென்மென் சதுக்க படுகொலைகளை நடத்துவதற்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயிற்று.

இன்றைய தினம், சீனாவில் விவசாயிகளின் மிகவும் கிளர்ச்சிவாத சமூக தட்டினர்கள் உள்ளனர். நாட்டுப்புறத்தில் சுதந்திர சந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைத்து மகத்தான ஏற்றத்தாழ்வுகளுக்கு வழி செய்து விட்டது. ஆட்சியோடு தொடர்புடைய ஒரு சிறுபான்மை பணக்கார விவசாயிகள் உள்ளூர் தொழிற்சாலைகளையும் அதிக லாபம் தரும் நிலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதே நேரத்தில் மிகப் பெரும்பாலான விவசாயிகள் வாழ்வதற்கே வசதியின்றி தவிக்கின்றனர் அல்லது நிலத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டுவிட்டனர். வேலை தேடி நகரங்களை நோக்கி குடியேற வேண்டிய கட்டாயம் மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இதன் ஒரு விளைவாக, தொழிலாள வர்க்கத்தின் அளவும் அதன் சமூக எடையும் மகத்தான அளவிற்கு வளர்ந்து விட்டது.

சீனாவின் நகரங்களில் ஒரு சமூக இயக்கம் வெடித்துக்கிளம்புமானால் ஆட்சிக்கு எதிரான மனக்குறைபாடுகளை எழுப்புவதில் தொழிலாளர்களோடு கிராமப்புற ஏழைமக்களது பிரிவுகளும் சேர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சீனாவின் ஆளும் வட்டாரங்களில் இராணுவப் பிரிவுகள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிவிடக் கூடும் என்ற அச்சங்களும் நிலவுகின்றன. சென்ற மாதம், மக்கள் விடுதலை இராணுவ தினசரி தனது இரண்டு மில்லியன் போர் வீரர்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிட்டது --அவர்கள் பெரும்பாலும் விவசாயிகளிலிருந்து கட்டாய இராணுவ சேவைக்கு திரட்டப்பட்டவர்கள்-- கண்டன ஆர்பாட்டங்களில் ``அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்`` என்று எச்சரித்து. முன்னாள் இராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பெய்ஜிங்கிலுள்ள இராணுவ தலைமை அலுவலகங்களுக்கு வெளியில் கண்டனப் பேரணிகளை நடத்தினர் தங்களது வறுமைநிலை மட்டத்து ஓய்வூதியங்களை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பெய்ஜிங்கின் இந்த வளர்ச்சியைக் குறிப்பிட்டு நியூயோர்க் டைம்ஸ் ஆகஸ்ட் 24-ல் கருத்துரைத்தது, ``ஒரு எதேச்சதிகார ஆட்சியை கொண்டு வருவதற்கான பெரும் வெளிப்படுத்தும் நடவடிக்கையின் தொடக்கம் இது என்று எவரும் முன்கணிக்கத் தயாராக இல்லை... [ஆனால்] சீன அதிகாரிகளால் வெளியிடப்படும் பதில், எச்சரிக்கையும் குழப்பமும் கலந்த கலவையாக காணப்படுவது, இது இங்கு உருவாகி வருகின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் கடுமையான அக்கறையுடன் ஆராயப்படுவதன் ஒரு தெளிவான அறிகுறியாக உள்ளது" என்று எழுதியிருந்தது.

முன்னாள் அரசாங்க ஆலோசகரும் Peoples Daily-ல் தலையங்கம் எழுதுபவருமான Wu Guoguang, டைம்சிற்கு பேட்டியளிக்கும் போது கூறினார், ''கண்டனத்தை தூண்டிவிடுவதற்கு பல்வேறு பெரிய சமூக பொருளாதார காரணிகள் உள்ளன, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் இடைவெளி மற்றும் பல நிலம் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணிகளும் அமைந்திருக்கின்றன. ஆனால் வெகுஜனங்கள் ஆத்திரத்துடன் இருப்பது அடிப்படையிலேயே கட்சி அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி வருவது பற்றியதுதான். அரசாங்கம் தூய்மையானதாகவும் திறமைமிக்கதாவகவும் இருக்குமானால், அதிக அமைதி நிலவும். ஆனால் இதில் புரிந்து கொள்வது என்னவென்றால் அதிகாரிகள் அரசின் நலன்களை பின் தொடர விரும்பவில்லை, அவர்கள் தங்களது சொந்த நலன்களை சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிகளில் கடைபிடிக்கவே விரும்புகிறார்கள்."

வெகுஜன மக்களை வறுமையில் தள்ளி பன்னாட்டு மற்றும் சீன பெருநிறுவனங்கள் மில்லியன்கணக்கான தொழிலாளர்களை கொடூரமான முறையில் சுரண்டுவதை செயல்படுத்தி வருகின்ற கட்சி அதிகாரிகளின் மற்றும் அரசாங்கத்தின் பாத்திரத்தில் இருந்து அவர்கள் மீதும் அரசாங்கத்தின்மீதும் மக்கள் கொண்டுள்ள கடும் வெறுப்பு பிரிக்க முடியாதபடி அமைந்திருக்கிறது.

1990-களில் தொழில்துறை மறுசீரமைக்கப்பட்டபோது, குறைந்தபட்சம் 40 மில்லியன் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்களிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டனர், அதே நேரத்தில் இன்னும் அதிகாரபூர்வமாக கலைக்கப்படாத திவாலாகிவிட்ட அரசு நடத்துகின்ற நிறுவனங்கள் மேலும் 30 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 12 அமெரிக்க டாலர்கள் வீதம் வழங்கி வருகிறது. மில்லியன் கணக்கான விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்துவிட்டு அல்லது விவசாயம் செய்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள், கடலோரப் பகுதிகளை ஒட்டி உருவான தொழிற்சாலைகளில் மிகப்பெரும் அளவிற்கு சுரண்டப்படும் மலிவு ஊதிய தொழிலாளர்களாக இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த காலகட்டத்தில் சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை சீர்குலையும் என்பதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உண்டு. 1990-களிலிருந்து வெள்ளம் போல் வெளிநாட்டு நேரடி முதலீடு வந்து கொண்டிருந்ததால் சராசரியாக 8 முதல் 9 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்றாலும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் கச்சாப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் சீன யானின் மறுமதிப்பீடு அத்துடன் ஒரு முதலீட்டு பூரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஆகியன பொருளாதாரத்தில் ஒரு கடுமையான ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றன.

இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 9.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், அரசின் மேம்பாடு மற்றும் சீர்திருத்தக் கமிஷன் தந்துள்ள புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால், சீனாவை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறை நிறுவனங்களின் லாபங்கள் 19.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது -இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தைவிட 22.5 சதவீத புள்ளிகள் குறைவாகும். என்றாலும் அந்தப் புள்ளி விவரங்களுக்குள்ளேயே பிரதான முரண்பாடுகள் காணப்படுகின்றன. நிலக்கரி, சுரங்கங்கள், உலோகம் மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகள் போன்ற தொழிற்துறைகளில் ஓராண்டிற்கு முன்னர் கிடைத்ததைவிட கணிசமான அளவிற்கு இலாபம் உயர்ந்திருந்தாலும் கச்சாப்பொருட்களின் விலை உயர்வினால் சீனா முழுவதிலும் தொழிற்துறையில் 59.3 சதவீதமாக உயர்ந்து 13.25 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நஷ்டங்கள் பெருகியுள்ளன----- இது 1999-க்கு பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்த அளவாகும்.

இதற்கு ஒரே வழி இலாபம் ஈட்டும் திறன்மீது ஏற்படுகின்ற அழுத்தங்களை மாற்றி ஊதியங்களை வெட்டுவதும், வேலை நிலைகளை கட்டுப்படுத்துவதும் மற்றும் கூடுதலாக வேலைகளை நீக்குவதும்தான். முதலீட்டை ஈர்ப்பதற்கான, சீன அரசாங்கம் பொதுமக்களிடையே பெருகிவரும் கோரிக்கையான மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் மற்றும் விவசாய நிலத்தை புதிய தொழிற்துறை மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களாக மாற்றுவதற்கு மக்கள் தெரிவிக்கின்ற எதிர்ப்பையும் புறக்கணிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சிக்கு ஏற்படும். அப்பட்டமான அரசு பாலாத்காரத்துடன் கண்டனங்களின் தவிர்க்கமுடியாத தீவிரப்படுத்துதலை சந்திப்பதற்கு பெய்ஜிங் தயாராகிக்கொண்டு வருகிறது.

Top of page