World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New Orleans: the specter of military dictatorship

நியூ ஓர்லியன்ஸ்: இராணுவ சர்வாதிகார காட்சி

Statement of the World Socialist Web Site Editorial Board
10 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

மிகவும் அதிர்ச்சியூட்டும் தகுதியின்மை மற்றும் புறக்கணிப்பு மனப்பான்மையால் பண்பிடப்படும், சூறாவளி கத்திரினாவால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித துயரத்திற்கு தொடக்கத்தில் அரசாங்கம் நடந்துகொண்டமுறையானது, சீரழிக்கப்பட்டுவிட்ட நியூ ஓர்லியன்ஸ் நகரில் இப்போது கொடூரமான திறமை மிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு வழி தந்துவிட்டிருக்கிறது.

நான்கு சிக்கலான நாட்களில், வாஷிங்டன் பத்தாயிரக்கணக்கான பெரும்பாலும் ஏழைகளும் தொழிலாள வர்க்கத்தினருமாக உள்ள நியூ ஒர்லியன்ஸ்-ல் எந்தவித நம்பகத்தன்மையுள்ள மீட்பு பணியையும் முடுக்கிவிடுவதற்கு இயலாமையில் இருந்தது. அவர்கள் வெள்ளம் பாய்ந்த தெருக்களில் தங்களது எதிர்காலத்தை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் விடப்பட்டனர். அவர்களில் பலர் பொங்கி வந்த தண்ணீரால் அல்லாமல் உணவு மற்றும் மருந்துகள் இல்லாமல் மடிந்து போயினர்.

தற்போது அந்த நகரத்தில் துருப்புக்கள் வெள்ளம் போல் நடமாடிக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசாங்க அதிகாரிகளும் எல்லா வகையான போலீஸ்காரர்களும் உலகிலேயே மிக பலத்த ஆயுத முகாம்களாக அந்த நகரத்தை மாற்றியிருக்கின்றனர். ஆயுதந்தாங்கிய துருப்புக்களும் தலைக்கவசமும் துப்பாக்கி குண்டு பாயாத சட்டைகளை அணிந்த போரீலீசாரும் அந்த நகரத்தில் வீடுவீடாக சென்று துப்பாக்கி முனையில் கட்டாயமாக அந்த நகரத்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இன்னமும் அந்த மக்களை கட்டாயமாக வெளியேற்ற கட்டளையிடவில்லை என்றும் ``குறைந்தபட்ச பலாத்காரத்தின் மூலம்`` மட்டுமே அவ்வாறு செய்யப் போவதாகவும் நகர அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று கூறினர். பல சந்தர்ப்பங்களில் ஆயுதந்தாங்கிய துருப்புக்கள் விடுகின்ற கோரிக்கைகளே அந்த மக்களை வீடுகளிலிருந்து விரட்டுவதாக அமைந்திருக்கிறது. ``15 எம் 16எம் துப்பாக்கிகள் உங்களை நோக்கி நீட்டப்படும்போது, அவர்கள் உங்களை சுவற்றை ஒட்டி அணிவகுத்து நிற்குமாறு கட்டளையிடும்போது அது ஒரு வகையில் பீதியூட்டுவதாக உள்ளது`` என்று ஒரு நியூ ஒர்லியன்ஸ் வாசியான ஒரு பெண் வாஷிங்டன் போஸ்டிடம் தான் ஏன் வெளியேறினேன் என்பதை விளக்கினார்.

என்றாலும், இதர சம்பவங்களில் அதிகாரபூர்வமான தகவல்களை பொய்யாக்குகின்ற வகையில் தொலைக்காட்சி செய்திகள் போலீசாரும் துருப்புக்களும் வீடுகளின் கதவுகளை உதைத்து மக்களை இழுத்துக் கொண்டு வந்து பிளாஸ்டிக் விலங்குகளை பூட்டுவதை காட்டுகின்றன. நியூ ஓர்லியன்ஸ் போலீஸ் துறை வெள்ளிக்கிழமையன்று 200 பேரை கைது செய்ததாக ஒப்புக் கொண்டது.

இன்னும் அந்த நகரத்தில் 10,000 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. மேலும் மோசமான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. திரும்பி வரும்போது தங்களுக்கு வீடு இருக்காது என்று பலர் நியாயமாகவே அஞ்சுகின்றனர். ``இந்தப்புற நகரை பணக்காரர்களுக்காக ஒதுக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்`` என்று ஒரு மனிதர் New orleans Times Picayune பத்திரிகைக்கு வியாழக்கிழமையன்று கூறினார்.

இந்தப் பேரழிவின் முதல் பதினோரு நாட்கள் இன்றைய அமெரிக்காவின் இரண்டு அரசியல் உண்மைகளை அம்பலப்படுத்தின. முதலாவதாக பயங்கரவாத அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிற்கு எதிராக ``உள் நாட்டுப்பாதுகாப்பை" பலப்படுத்துவது என்ற எல்லா பேச்சுக்களுமே அமெரிக்க அரசாங்கம் எந்த கடுமையான சிவில் பாதுப்புத் திட்டங்களையும், அவை இயற்கை பேரழிவாக இருந்தாலும் சரி மனிதனது பேரழிவாக இருந்தாலும் சரி வெகுஜன பேரழிவுகளிலிருந்து அமெரிக்க மக்களை காப்பாற்றுவதற்கு உருவாக்கவில்லை.

இரண்டாவதாக 2001 செப்டம்பர் 11-ஐ தொடர்ந்து வாஷிங்டன் இராணுவ - போலீஸ் அமைப்பின் நிரந்தரமாக வளர்ந்து கொண்டு வரும் அதிகாரங்களை பெருக்குவதற்கு பயங்கரவாத தாக்குதல்களை சுரண்டிக்கொண்டது. அதே நேரத்தில் நாடு தழுவிய இராணுவ சட்டத்தை கொண்டு வருவதற்கு விரிவான முன்னேற்பாடுகளை செய்து வந்தது.

தொடக்கத்திலேயே, இந்த பேரழிவு அவசர உதவி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான புஷ் நிர்வாகமும் அரசாங்க அமைப்புக்களும் முற்றிலும் தயார் நிலையில் இல்லை என அம்பலப்படுத்தியது. பாரியளவிற்கு மனித உயிர்கள் இழப்பு மற்றும் மக்கள் இடம் பெயர்ந்தது ஆகியவை தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் தடுக்கப்பட்டிருக்க முடியும். பல ஆண்டுகளுக்கு மேலாக அந்த நகரம் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுவதை உறுதி செய்து தருவதற்கான கடல் அலை தடுப்புச் சுவர்களை பலப்படுத்துவதற்காக அமெரிக்க இராணுவ பொறியாளர்களால் கேட்கப்பட்ட பணமானது பல ஆண்டுகளாக வெட்டப்பட்டு ஈராக் போருக்காக திருப்பிவிடப்பட்டது.

அந்த சூறாவளி நிலத்தை நோக்கித் தாக்கியதும், அந்த நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்தாயிரக்கணக்கான மக்களை சொந்தத்தில் வெளியேறுவதற்கான வாகன வசதியில்லாதவர்களை அல்லது தங்களை சொந்த முயற்சியால் அந்த நகரத்தை விட்டு வெளியேற முடியாதவர்களை உடனடியாக அந்த நகரத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எந்தவித கடுமையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த சூறாவளி தாக்கியவுடன் அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் குழப்பம் மற்றும் செயலிழந்த நிலை பற்றி பிடித்தாற்போன்று காணப்பட்டது, மிகப் பெரும்பாலான உயிர்களை காப்பாற்றியிருக்க கூடிய நேரத்தில் அவசர உதவி முயற்கள் தாமதப்பட்டன.

இதுபோன்ற அவசர உதவிகளுக்கு பொறுப்பான முதன்மை அமைப்பு மத்திய அவசர நிலை அமைப்பாபு (FEMA) அந்தப் பணிக்கு தயாராக இல்லையென்பது தெளிவாக தெரிந்தது. அதன் திறமைகள் பல ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக குறைக்கப்பட்டன. FEMA உள்நாட்டு பாதுகாப்பு துறையுடன் சேர்க்கப்பட்டவுடன் தான் நிதிவசதிகளும் ஆதாரங்களும் ``பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போருக்கு`` திருப்பிவிடப்பட்ட நிலையில் இந்த சீர்குலைவு மிக வேகமாக நடைபெற்றது. இதற்கிடையில் புஷ் நிர்வாகம் அந்த அமைப்பின் தலைமை அதிகாரிகளை தனக்கு வேண்டிய அரசியல்வாதிகள் தஞ்சம் புகும் இடமாக ஆக்கிவிட்டது.

FEMA தலைமைப் பதவிகளில் 8-ல் 5 பதவிகள் முன்னாள் புஷ் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார ஊழியர்களுக்கும் மற்றும் இதர குடியரசுக்கட்சி அரசியல் உதவாக்கரைகளுக்கும் தரப்பட்டிருக்கிறது என்று வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட் அம்பலப்படுத்தியது. இந்த ஐந்து பேரும் அவசர நிலை நடவடிக்கைகளிலோ அல்லது பேரழிவு நிவராணப் பணிகளிலோ எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள் அவர்.

வெள்ளிக்கிழமையன்று FEMA இயக்குனர் மைக்கேல் பிரெளன் வளைகுடா கடற்கரை பேரழிவு மண்டல நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கான பெயரளவு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த முயற்சி ஒரு தீப்பிழம்பு போல் கிளம்பிய விமர்சனங்களை தொடர்ந்து பிரெளனின் திறமைக்குறைவு தொடர்பாகவும் அவர் தனது வாழ்க்கை குறிப்பில் தந்துள்ள விவரங்களுக்கு எதிராக தவறான செயலில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவும் அவர் சேதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரெளனை ஒட்டு மொத்தமாக பதவிநீக்கம் செய்து விட வேண்டும் என்று முன்னணி ஜனநாயகக் கட்சியினர் கோரும் அதேவேளை, அத்தகைய ஒரு தனிமனிதர் FEMA வின் தலைவராக இருப்பது அந்த அமைப்பின் செயல்பாடு அடிமட்டமாக குறைக்கப்பட்டதன் அடையாளச் சின்னமாகும்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிரெளனுக்கு பதிலாக வளைகுடா கடற்கரை பேரழிவு நடவடிக்கை பணிகளுக்கு தலைவரான அமெரிக்க கடற்காவற்படை மூன்றாம் நிலை அதிகாரி துணை அட்மிரல் தாட்வ அலென் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்தை அறிவித்த உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் மைக்கேல் செட்டாப் ஒரு மூத்த அதிகாரி பதவியேற்பது இராணுவப்படைகளுடன் உள்ளிணைந்து செயல்படுவதற்கு வகை செய்யும்" என்று கூறினார். இப்போது இராணுவப்படை நியூ ஓர்லியன்சை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தலைமையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது இந்த பேரழிவிற்கு இராணுவமயமாதல் பதில் நடவடிக்கையாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

FEMAவும் இதர சிவிலியன் அமைப்புக்களும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை என்ற நிலையை எதிர்கொண்ட அரசாங்கம், வேறு வழியில்லாமல் இராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியத்திற்கு உள்ளானது. இராணுவத்தை பயன்படுத்த முடிவு செய்து விட்டால் அதனால் திட்டவட்டமான விளைவுகள் ஏற்படும்.

பேரழிவு நிவாரணத்திற்கு போதுமான அளவிற்கு திட்டமிடப்படவில்லையே தவிர இராணுவமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையும் இராணுவச் சட்டத்தை கொண்டு வருவதற்கும் அதற்கான ஒத்திகைகளை நடத்துவதற்கும் மற்றும் உள்நாட்டு கலவரத்தை ஒடுக்குதலுக்கும் மாதிரி திட்டங்களை ஒத்திகை செய்தன மற்றும் நன்கு அபிவிருத்தி செய்தன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் நான்கு ஆண்டுகளில் பென்டகனும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் இவை திட்டமிடலின் குவிமையமாக இருந்திருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் செயல்பட தொடங்கியதும் இராணுவம் அழைக்கப்பட்டது. இராணுவம் தனது சொந்த அதிகார பகுப்பு முறைகளையும் நடைமுறை கொள்கைகளையும் பின்பற்றியதால் அதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டன.

முதலில் அந்த நகரமே சுற்றிவளைத்து சீலிடப்பட்டது. தப்பி ஓட முயன்ற மக்கள் துப்பாக்கி முனையில் திருப்பி அனுப்பப்பட்டனர். நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். செஞ்சிலுவைச் சங்கம் இதற்கு முன்னர் பல்வேறு பேரழிவு நடவடிக்கைகளில் முன்னணி பங்கு வகிக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. New orleans மாநாட்டு மண்டபத்திற்கு வெளியிலும் சூப்பர் டம் பகுதிகளிலும் வறுமையில் வாடி பசியால் செத்துக் கொண்டிருந்த மக்களை இந்த உலகமே பார்த்து அதிர்ச்சியடைந்தது.

பென்டகன் போதுமான படைகளுடன் தலையிட உறுதியளிக்கப்பட்ட பின்னர்தான் இராணுவம் தலையிடுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மூத்த தளபதிகள் "போர்க்கால நடவடிக்கை" மற்றும் முன்னேற்பாடு பற்றி பேசினர் மற்றும் மக்கள் வெளியேற்றப்படுவதற்காக குவிந்திருந்த மண்டபத்தில் "திடீரென்று புகுவது" என்று முடிவு செய்யப்பட்டது.

இப்போது அந்த நகரம் தானியங்கி ஆயுதங்களுடன் மயிர்சிலிர்க்க நிறைந்திருந்ததுடன் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வந்து தெருக்களில் ரோந்து சுற்றுவதும் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நகரத்தின் பெரும்பகுதி தண்ணீருக்குள் மூழ்கி ஏறத்தாழ பொது மக்கள் தப்பி ஓடிவிட்டதில் தெளிவான கேள்வி என்னவென்றால் நியூ ஓர்லியனில் இந்த பாரியளவிற்கான ஆயுதப்படைகள் எதற்காக? எனவே இந்த அளவிற்கு இராணுவம் நடமாடுவது மேலெழுந்தவாரிகயாக பார்க்கும்போது முட்டாள்தனமானது. ஆனால் ஏற்கனவே இராணுவ சட்டத்தை கொண்டு வருவதற்காக இடைவிடாது நடத்தப்பட்ட இரகசிய ஆலோசனைகளின் விளைவாகத்தான் இந்த அளவிற்கு படைகள் நடமாடுகின்றன.

இந்த இராணுவ நடவடிக்கைகளின் குவிமையம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, தனியார் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மீதமிருக்கும் நகரத்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதும்தான்.

நியூ ஓர்லியன்சிலிருந்து அம்பலத்திற்கு வரும் நம்மை உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டினரும் அதன் அரச சாதனமும் சாமானிய அமெரிக்கர்களின் வாழ்வை பொருட்படுத்தவில்லை என்பதுதான். அம்பலத்திற்கு வந்த அருவருக்கத்தக்க வெளிப்பாடு என்னவென்றால் 10 நாள்கள் வரை அதிகாரிகள் அந்த சூறாவளியால் மடிந்து விட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத்தவறிவிட்டனர், அவை தெருக்களில் அழுகிக்கிடந்தன.

அந்த சூறாவளியில் உயிர்தப்பி பிழைத்தவர்கள் ஊடகங்கள் மீது புகாராக கடுமையாக கூறிக் கொண்டிருப்பது என்ன வென்றால் தங்களை அகதிகள் என்றழைப்பதைதான். அவர்கள் அந்த சொல்லை கசப்பாக எடுத்துக் கொள்வதற்கு காரணம் பெரும்பாலும் ஏழை கறுப்பர் இன மக்கள் தங்களது சொந்த நாட்டிலேயே வீடற்றவர்களாக அந்நியர்களாக ஆகிவிட்டோமே என்ற கவலைதான். அப்படியிருந்தும், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு மேலாக குற்றவாளிகளை போல் பெருமளவில் நடத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

கட்டாயமாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்று கூறப்படவில்லை. ஒரு விமானம் நிறைய ஏற்றப்பட்டு அந்த விமானம் நியூ ஓர்லியன்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுகிற வரை அந்த விமானத்தில் ஏற்றப்பட்டவர்கள் Utah விற்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்று கூறப்படவில்லை என Salt Lake Tribune பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்லப்படுபவர்கள் பலரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை போன்று நடத்தப்படுகிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சிவில் பாதுகாப்பு அல்லது மனித நேய உதவி இரண்டிற்குமே தக்க முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இராணுவச்சட்டத்தின் பக்கம் திரும்பியிருப்பது அமெரிக்காவின் சமுதாய அமைப்பிலும் அரசியல் முறையிலும் ஆழமாக வேரூன்றிக்கிடக்கின்றன.

ஒரு கால் நூற்றாண்டிற்கு மேலாக ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி நிர்வாகங்கள் இரண்டுமே மிகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடமிருந்து நிதியாதிக்க செல்வந்தத்தட்டினருக்கு நாட்டின் செல்வத்தை மாற்றித் தருவதை நோக்கமாகக் கொண்ட கொள்கையை கடைப்பிடித்து வந்தன. வறுமையை மட்டுப்படுத்துவதற்கு கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் அவர்கள் திட்டமிட்டு வெட்டினார்கள். பொருளாதார பிரமிடில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களுக்கு அதிக அளவில் கொழுத்த வரி வெட்டுக்களை தருவதற்காக வறுமையை மட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை வெட்டினார்கள். இப்படிப்பட்ட நடைமுறைகளின் காரணமாக ஆளும் செல்வந்தத்தட்டினர் மகத்தான சமூக ஏற்றத்தாழ்வுகளையும் குழப்பநிலைகளையும் உருவாக்கினர். அவை நியூ ஒர்லியன்சில் மேலெழுந்தவாரியாக பேரழிவாக வெடித்தது.

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆழமாகிக் கொண்டு வந்ததோடு இணைந்து அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டன - அவை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற சாக்குப் போக்கிலும் "உள்நாட்டு பாதுகாப்பு" என்ற வகையிலும் நடத்தப்பட்டன - மற்றும் இராணுவ வலிமையை உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கிற்று.

நியூ ஓர்லியன்சில் நடைபெற்ற சம்பவங்கள் இந்த நிகழ்ச்சிகளின் மகத்தான ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதியால் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அசாதாரணமான அதிகாரங்களை மேற்கொண்டது, ஒரு இரகசிய நிழல் அரசாங்கம் உருவாக்கப்பட்டது, செப்டம்பர் 11-க்கு பின் அம்பலத்திற்கு வந்தது. தேசபக்த சட்டம் நிறைவேற்றப்பட்டது, உள்நாட்டு பாதுகாப்புத்துறை உருவாக்கப்பட்டது. மற்றும் ஒரு அமெரிக்க வடக்கு இராணுவ தலைமை உருவாக்கப்பட்டது. அது அமெரிக்க மண்ணிலேயே நாடு தழுவிய முதலாவது இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை அலுவலகமாகும். அத்துடன் சேர்த்து ஒரு போலீஸ் - இராணுவ சர்வாதிகாரத்திற்கான கட்டுக் கோப்பு உருவாக்கப்பட்டது. நியூ ஓர்லியன்சில் அத்தகையதொரு ஆட்சியின் ஒத்திகைதான் நடந்து கொண்டிருக்கிறது.

நியூ ஓர்லியன்சில் நடைபெற்ற இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தந்திருக்கின்ற பதில் அவர்களது மோசடித்தன்மையையும் கையாலாகாதத் தன்மையையும் காட்டுகிறது. உள்ளூர் மாகாணம் மற்றும் தேசிய அளவில் இயற்கை பேரழிவுகளுக்கு போதுமான முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதிலும் அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இராணுவத்தை திரட்டுவதிலும் தேசபக்தி சட்டத்தை கொண்டு வருவதிலும் இதர ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்துவதிலும் குடியரசுக் கட்சிக்காரர்களின் முழு பங்காளிகளாக செயல்பட்டார்கள்.

தற்போது ஜனநாயகக் கட்சிக்காரர்களின் பிரதான கோரிக்கைகளே திணிவிகி பிரெளனை பதவியிருந்து நீக்கிவிட்டு அவரை புஷ்சின் வெள்ளை மாளிகைக்கு ஒரு பலிகடாவாக ஆக்கி 9/11 விசாரணை பாணியில் நியூ ஓர்லியனின் பேரழிவிற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு அதே போன்றதொரு மூடி மறைக்கும் அறிக்கையை தயாரிப்பதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்சி எந்த மாற்றுத் திட்டத்தையும் முன்னெடுத்து வைக்கவில்லை அல்லது தங்களது வாழ்வு பேரழிவினால் சிதைந்து விட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணம் அளிக்கின்ற எந்தவிதமான முன்மொழிவுகளையும் தரவில்லை அல்லது இராணுவத்திடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்ததற்கு சிறிது கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் விரிவான உழைக்கும் மக்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அதிர்ச்சி தரும் நீதியோடு சேர்த்து இந்த நிகழ்ச்சிகளால் எழுந்துள்ள அப்பட்டமான ஆபத்துக்களை ஒரு அரசியல் தெளிவோடு புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த ஆபத்துக்களை தற்போதுள்ள இருகட்சி அரசியல் கட்டுக்கோப்பிற்குள் சமாளித்துவிட முடியாது அதற்கு மீண்டும் இணைய முடியாத அளவிற்கு ஜனநாயகக் கட்சியுடன் வெட்டி முறித்துக் கொண்டு, சமுதாயத்தை சோசலிச முறையில் சீரமைப்பதற்கு போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சுதந்திரமான அரசியல் இயக்கம் உருவாக்கப்படுதல் தேவைப்படுகிறது.

See Also :

கேட்ரினாவின் பேரழிவுகரமான தாக்கத்தின் அரசியல் பொறுப்பை தட்டிக்கழிக்க வாஷிங்டன் முயலுகிறது

சூறையாடல் மீதான நடவடிக்கை
நியூ ஓர்லேயன்ஸ் போலீஸ் உயிர்கள் மீட்பதை நிறுத்துமாறும் உடைமைகளை காக்க தொடங்குமாறும் கட்டளை

Top of page