World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

A socialist strategy for workers' power: the only answer to France's "First Job Contract"

தொழிலாளர்கள் அதிகாரத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயம்: பிரான்சின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" ஒரே விடை

Statement of the World Socialist Web Site Editorial Board

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

 பிரான்ஸ் முழுவதும் ஏப்ரல் 4ம் தேதி கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த சட்டத்திற்கு (CPE) எதிராக நடவடிக்கை தினத்தில் நடைபெறும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் போது கீழ்க்கண்ட அறிக்கையானது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களால் வழங்கப்பட இருக்கிறது. pdf வடிவமைப்பில் ஆங்கிலம், பிரெஞ்சு இரு மொழிகளிலும் இருக்கும் இந்த அறிக்கையை இறக்கம் செய்து, நகலெடுத்து எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்கு மிகப் பரந்த அளவில் வினியோகிக்குமாறு வாசகர்களையும், ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தம்" பிரான்சில் மட்டும் இல்லாமல் ஐரோப்பா மற்றும் சர்வதேசம் முழுவதிலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை எதிர்கொண்டுள்ள அடிப்படை வர்க்க மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

கெளரவமான ஊதியம், மற்றும் பாதுகாப்பு உள்ள வேலைகள், கல்வி, சுகாரதார பாதுகாப்பு, போர் அல்லது அடக்குமுறை இல்லாத, அச்சமில்லாத வருங்காலம் என்ற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய தேவைகள், இப்பொழுது ஒரு தோற்றுவிட்ட அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதிய உயரடுக்கின் சிறு தன்னலக்குழுவின் நலன்களுடன் சமரசம் காணமுடியாத பூசலை எதிர்கொண்டு நிற்கின்றன. அதிகாரத்தையும் செல்வத்தையும் கட்டுப்படுத்தும் ஒருசிலவராட்சி, முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலைசெலுத்த தள்ளுகிறது.

பொருளாதார "முன்னேற்றம்" மற்றும் பூகோளமயமாக்கலின் உண்மைகளின் தவிர்க்க முடியாத விளைவுகளை எதிர்க்கும் தற்காலத்திய Luddites கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயந்திரமயமாக்கலை எதிர்த்த மற்றும் இயந்திரங்களை அழித்த பிரிட்டீஷ் தொழிலாளர்கள் குழுவின் உறுப்பினர்) ஆக பிரெஞ்சு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் முகத்தில் கரிபூசிக் காட்டும் முயற்சிகளின் உண்மைப் பொருளுரைதான் இது. இது ஒன்றும் பொருளாதார வாழ்வை உலகளவில் ஒருங்கிணைப்பது அல்ல, இலாபக் குவிப்பு மற்றும் தனியார் செல்வக் கொழிப்பின் தேவைகளுக்கு சமூகத் தேவைகளை கீழ்ப்படுத்திக்கொள்வதாகும். தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் மீதான தாக்குதலைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எந்தக் காரணமும் இல்லாமல் இளந் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு முதலாளிகளை அனுமதிக்கும் "முதல் வேலை ஒப்பந்தத்தில்" (CPE) கையெழுத்திட்டுள்ள வகையில், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் சார்பாக மட்டுமல்லாமல், சர்வதேச ஆளும் வர்க்கத்தின் சார்பாகவும் செயல்பட்டிருக்கிறார்.

பிரெஞ்சு மக்களின் மிகப் பரந்த பெரும்பான்மையினரின் எதிர்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ந்துவரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கருத்துக் கணிப்பின் முடிவுகள் இவற்றிற்கு எதிராக உள்ள சிராக்கின் நடவடிக்கை வர்க்க உறவுகளில் ஒரு திருப்பு முனையை சுட்டிக் காட்டுகிறது. தமது அமெரிக்க சகாக்களிடம் இருந்து வழிகாட்டும் நெறிகளை பெறும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஒரு நூற்றாண்டு காலமாக தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்றுள்ள அனைத்து சமூக வெற்றிகளையும் அழித்து தகர்ப்பதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது. மக்களுடைய ஜனநாயக உறுதி, விருப்பம் ஆகியவற்றால் இது தடுப்பிற்கு உட்படாது.

மிகத் திறமையான அவநம்பிக்கைத் தன்மையுடன்கூட, தன்னுடைய தொலைக்காட்சி உரையில் சிராக் ஜனாநாயக வழிவகைக்கு உடன்பாடு உடையதாக தன்னுடைய முடிவை சித்திரித்துக் காட்டினார். விவாதம் அடக்கப்பட்ட நிலையில், பாராளுமன்றத்தில் சடுதியில் இயற்றப்பட்ட ஒரு சட்டம், முதலாளிகள் சங்கங்கள் முன்வைத்துள்ள கருத்தைத்தான் ஏற்கும் ஒரு சட்டம், மக்களில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கும் ஒரு சட்டம், ஜனநாயகத்தின் உருவம் என்று அறிவிக்கப்படுகிறது!

CPE க்கு எதிரான மக்கள் இயக்கமானது, அரசாங்கம் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளுவதற்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் எந்த முன்னோக்கு இருந்தாலும் அது மோசடி என்பதைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது, மற்றும் அரசாங்கத்தை வீழ்த்தி, அவ்விடத்தில் தொழிலாள வர்க்கத்தால் உண்மையாக கட்டுப்படுத்தப்பட்டு, அதன் நலன்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தை கொண்டு வந்து பதிலீடு செய்யும் தேவையை முன்வைத்துள்ளது. தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம், சமூகத்தைச் சோசலிச முறையில் மறுஒழுங்கமைத்தல் என்ற இதன் உள்ளார்ந்த பிரச்சினை என்றுமிராத வகையில் மிகவும் நேரடியாக வெளிப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளான சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் அரசாங்கத்தை அமைப்பது என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள்மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தாது. 1995ம் ஆண்டு பரந்த வேலைநிறுத்த இயக்கத்திற்கு பின்னர் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த, அப்பொழுது சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான பன்முக இடது அரசாங்கம் செயல்படுத்திய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூகச் செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றின் வரலாற்றுச் சான்றுகள், புதிய சோசலிஸ்ட் -கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசாங்கம் எந்தக் குறிப்பிடத்தக்க வகையிலும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி சிராக் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து மாறுபட்டு இருக்காது என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

இப்போராட்டத்தின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கமானது பழைய அதிகாரத்துவ அமைப்புக்களான தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டுச் சுயாதீனமாக இயங்கக்கூடிய, ஒரு புதிய, புரட்சிகரமான தலைமையை கட்டியமைக்க வேண்டிய தேவையை தெள்ளத்தெளிவாக முன்வைத்துள்ளது. இந்த இயக்கங்கள் CPE க்கும் கோலிச ஆட்சிக்கும் எதிராக போராட்டத்தை முன்னின்று நடத்தவேண்டும் என்பதற்கு பதிலாக, மீண்டும் 1930, 1968, 1995 மற்றும் 2003 ஆண்டுகளில் நிகழ்ந்ததை போலவே மக்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தி அதை ஆளும் உயரடுக்கின் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் கொண்டு வந்து இயக்கத்தை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

தொழிற்சங்கங்களோ, உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளோ, சிராக் முடிவைக் கூறிய பின்னரும் கூட, அவருடைய அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஏப்ரல் 4ம் தேதி நேரடி நடவடிக்கை தினத்தன்றும் அத்தகைய கோரிக்கைகளை எழுப்பப் போவதில்லை; மேலும் இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆலைகளில் இருப்பவருக்கும், அலுவலகங்களில் உள்ளவர்களுக்கும் ஞாயிறுன்று தேசிய மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவால் விடுக்கப்பட்டுள்ள மட்டுப்பாடு இல்லா வேலைநிறுத்தத்திற்கான அழைப்பிலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 28ல் திரண்டுவந்தது போலவே, கிட்டத்தட்ட அனைத்து பொதுப் போக்குவரத்தும் நடக்குமாறு தொடரும் வகையில் தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளைக் வேண்டுமென்றே மட்டுப்படுத்த உள்ளன.

வெகுஜன எதிர்ப்பானது, தன்னுடைய அரசாங்கம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனத்தின் வலுவற்ற தன்மை, தனிமைப்படுத்தப்பட்ட தன்மை ஆகியவற்றை அம்பலப்படுத்தி விட்டன என்பதை சிராக் நன்கு அறிவார். எனவேதான் CPE பற்றிய விதிமுறைகளில் சில "சலுகைகள்" காட்டுவதாக அவர் கூறி, தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். இந்த சூழ்ச்சிக்கையாளலின் பொருளுரை இன்னும் நேரடியாக தொழிற்சங்கங்களுக்கும், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளுக்கும் அவற்றின் "அதி இடது" உதவி அமைப்புக்களான LCR, LO இவற்றின்பால் இன்னும் நேடியாகத் திரும்பி, எதிர்ப்பை கட்டுப்படுத்தி, திகைக்க வைத்து நெறிபிறழவைப்பதாகும். இக்கட்சிகள் சிராக் மீண்டும் தேர்வு செய்யப்படுவதில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தன; அதையொட்டித்தான் அவருடைய Movement for a Popular Majority (UMP) என்பது தேசிய சட்டமன்றத்தில் தற்போதைய பெரும்பான்மையை அடைய முடிந்தது. 2002ல் ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் புதிய பாசிச தேசிய முன்னணி வேட்பாளரான ஜோன் மரி லுபென் இடம் ஜோஸ்பன் தோல்வியடைந்ததை அடுத்து, இந்த "இடதுகள்" சிராக்கிற்கு வாக்குப் போட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தனர்; அந்த நெடுங்கால வலதுசாரி அரசியல்வாதியை "குடியரசை" காப்பாற்றுபவர் என்றும் சித்திரித்தனர். அவருடைய இன்றைய பிற்போக்கு கொள்கைகளுக்கு இவர்கள்தான் அரசியல் பொறுப்பை ஏற்கவேண்டும்.

உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோழைத்தனம், அடிபணிந்து நிற்றல் ஆகியவற்றின் தர்க்க நிலையின் தன்மையினால் அவர்கள் இப்பொழுது கோலிச UMP யின் மிகத் தீவிர வலதுசாரிப் பிரிவின் பிரதிநிதியான நிக்கோலா சார்க்கோசியின் அரசியல் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. UMP இன் தலைவரும், உள்துறை மந்திரியுமான சார்க்கோசி அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் வில்ப்பனை எதிர்த்து நிற்கத் திட்டமிட்டுள்ளார். தான் CPE க்கு ஆதரவைக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளபோதிலும், வில்ப்பனுக்கு எதிரான மக்கள் சீற்றத்தில் இருந்து பயனடையும் வகையில் அவர் தனது நிலையை உறுதிசெய்யும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தாதற்காக பிரதம மந்திரியைக் குறை கூறினார்.

லு பென்னுடைய முகாமிற்குள்ளே இருக்கும் இனவெறியாளர்கள், பாசிஸ்டுகளின் ஆதரவை நாடும் சார்க்கோசி, கிட்டத்தட்ட 2000 பேர் கைது செய்யப்பட்ட நிகழ்வான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலீஸ் வனைமுறை மற்றும் ஆத்திரமூட்டல்களை மேற்பார்வையிடும் அதேவேளை, புலம் பெயர்ந்த இளைஞர்களை தொடர்ந்து கண்டனம் செய்து வருகிறார். இப்பொழுது அவர் உயர்நிலை பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை முறியடிக்க இப்பொழுது போலீசை பயன்படுத்துகிறார்.

சிராக்கின் பேச்சை தொடர்ந்து, சார்க்கோசி தொழிற்சங்கங்களுடனும் மாணவர்கள் கூட்டமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்ற ஆரம்ப முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். ஞாயிறன்று அவர் CFDT (Confédération française démocratique du travail- பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) இன் தலைமைச் செயலர் François Chérèque மற்றும் UNEF என்னும் மாணவர் அமைப்பின் தலைவரான Bruno Julliard இருவரையும் அழைத்திருந்தார்; இருவருமே சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைந்தவர்கள் ஆவர். இவ்விருவரும் சார்க்கோசியுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று கூறினர்.

இப்படிப்பட்ட போக்கின் வளர்ச்சிகளானது, போர்க்குணம் மட்டுமே, இவ் இயக்கம் எதிர்கொண்டுள்ள அரசியல் பணிகளின் பிரச்சினைகளை தீர்க்க இயலாது என்னும் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. புரட்சிகர சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு புதிய கட்சியை கட்டியமைப்பதை விட வேறு வழி ஏதும் கிடையாது.

இவ்வேலைத்திட்டத்தின் மையப்பகுதியாகத்தான் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் அமைந்துள்ளது. முதலாளித்துவ பூகோளமயமாக்கல் சகாப்தத்தில், CPE உடன் தொடர்புடைய பிரச்சினைகள் எதுவுமே பிரெஞ்சு தேசிய-அரசின் எல்லைகளுக்குள்ளே தீர்க்கப்பட முடியாது. அதேபோல் 1960கள், 1970கள் காலத்தின் சமூக, சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மீண்டும் திரும்புதல் என்பதும் முடியாத செயலாகும்.

தொழிற்துறை வளர்ச்சி முன்னேறிய நாடுகளில் இருந்து குறைவூதிய தொழிலாளர் உழைப்பு இருக்கும் இடங்களுக்கு தொடர்ந்து வேலைகளை மாற்றும் வேலைகளை குறைக்கும் நாடுகடந்த நிறுவனங்களை பிரான்ஸ் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இன்று எதிர்கொண்டுள்ளது.

தொழிலாளர்களுடைய உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தை வளர்த்தெடுப்பது அவசியமாகிறது. அத்தகைய இயக்கம் அனைத்து தேசிய இனங்கள், நாடுகள், மதங்கள் ஆகியவற்றை சார்ந்த தொழிலாளர்களை கட்டாயம் ஒன்றிணைத்து, தொழிலாளர்கள் தாங்கள் விரும்பித் தேர்வு செய்யும் எந்த நாட்டிலும், முழு சட்ட சம உரிமைகளை கொண்டு, வாழ்வதற்கும் வேலை பார்ப்பதற்குமான உரிமைகளை கட்டாயம் ஆதரிக்கும்.

இவ்வியக்கம் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அயர்வின்றி தளராமல் கட்டாயம் பாதுகாக்கும் மற்றும் ஏகாதிபத்திய போரை எதிர்க்கும், ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அனைத்து வெளிநாட்டுப்படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரும்.

பெரும் நிதிய, தொழில்ரீதியான, வணிக நிறுவனங்கள் ஜனநாயக மற்றும் பொது உடைமையின் கீழ் கொண்டுவரப்பட அவ்வியக்கம் கட்டாயம் போராடும்; அப்பொழுதுதான் பொருளாதார வாழ்வு பெருநிறுவன இலாபக் குவிப்பு மற்றும் தனியார் செல்வக் கொழிப்பிற்கு கீழ்ப்படுத்தப்படாமல் மாறாக, வறுமையை அகற்றுவதற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான வேலைவாய்ப்பையும் தரமான வாழ்க்கைத் தரங்களையும் வழங்குவதற்கு அறிவார்ந்த முறையிலும் சர்வதேச ரீதியாகவும் ஒழுங்கு செய்யப்படும்.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக தன்னுடைய சொந்த வேலைத்திட்டத்தில்-ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத் திட்டத்தில் கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியமைக்கும் மையக் கருவிதான் உலக சோசலிச வலைத் தளம் ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இணைய தள வெளியீடுதான் உலக சோசலிச வலைத் தளம் ஆகும். பல தசாப்தங்களாக இது மார்க்சிசத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மரபியத்தையும் பேணி வருகிறது. WSWS ஐ படிக்குமாறும், பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை கட்டியமைக்குமாறும் நாம் அனைத்து இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அழைக்கிறோம்.

Réunion Publique

L'unique réponse au CPE : une stratégie socialiste pour le pouvoir ouvrier

le 9 avril 2006 à 10h00

A l'église St Hipployte
27, avenue de Choisy
75013 PARIS
Métro : Porte de Choisy

See Also:

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டம் பற்றிய நெருக்கடி தீவிரமடைகிறது

பிரான்ஸ்: ஜனாதிபதி சிராக் "முதல் வேலை ஒப்பந்தத்தை" சட்டமாக்குகிறார்

பிரான்ஸ்: புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெசன்ஸெனோ தொழிலாளர் அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கு இடது மறைப்பை கொடுக்கிறார்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" அரசியலமைப்புக் குழுவால் ஒப்புதல் பெற்றது

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" நெருக்கடியைத் தீர்க்க ஜனாதிபதி சிராக்கிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கில் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலைநிறுத்தம்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது

பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக திரள்வதற்கு தயாராகின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

1936ம் ஆண்டு பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்

பிரான்ஸ் : மே-ஜூன் 1968ம் இன்றும்

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page