World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: How Lutte Ouvrière aids unions' betrayal of struggle vs. Gaullist regime

பிரான்ஸ்: கோலிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை காட்டிக்கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு லுத் உவ்றியேர் எவ்வாறு உதவுகிறது

By Peter Schwarz
12 April 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

மில்லியன்கணக்கான மக்கள் பங்கு பெற்றிருந்த ஐந்து தேசிய நடவடிக்கைகள் தினங்களுக்கு பின்னர், தொழிற்சங்கங்கள் கோலிச ஆட்சியின் "முதல் வேலை ஒப்பந்த" (CPE) சட்டம், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடந்த இயக்கத்தை விற்றுவிடுவதற்குத்தான் ஒத்துழைக்கின்றன. அவை ஆட்சியில் உள்ள Union for a Popuar Movement (UMP) என்பதுடன் விவாதங்களை நடத்தி வருகின்றன; இதையடுத்து அரசாங்கம் புதிய சட்டத்தில் மிக சர்ச்சைக்குரிய பகுதிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டு; அதேநேரத்தில் தொழிற்சங்கங்களுடைய நெருக்கமான ஒத்துழைப்புடன் வேலைப் பாதுகாப்பின் மீதான அதன் தாக்குதல்களை மீளமுறைப்படுத்துவதற்கு வேலை செய்கிறது.

CPE திரும்பப் பெற்றுவிடப்பட்டாலும்கூட, சமீபத்திய வாரங்களில் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள், இளைஞர்களுடைய வாழ்வில் அதிக மாறுதல் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தொழிற்சங்கங்களுடைய ஆதரவுடன் வேலைப்பாதுகாப்புக்களின் சரிவுகள் மற்றும் சமூக உரிமைகளின் மீதான தாக்குதல்கள் ஆகியவை தொடரும்.

ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள் வெகுஜன இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும், ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கதிற்கு நேரடி சவாலாக அது செல்லாதபடி கட்டுப்பாட்டில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள பெருமுயற்சியை மேற்கொண்டிருந்தன. சோசலிஸ்ட் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தங்களுடன் இணைந்துள்ள மாணவர் அமைப்புக்களுடன் பூசல் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்பியிருந்ததை தெளிவுபடுத்திவிட்டன.

எதிர்ப்பு இயக்கத்தை தகர்த்துவிட்டதின் மூலம், தொழிற்சங்கங்கள் UMP தலைவர் நிக்கோலா சார்க்கோசியுடன் இணைந்து செயலாற்றியதுடன், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேசிய தேர்தல்களில் அவர் சிராக்கிற்கு அடுத்தபடியாக ஜனாதிபதியாக வரக்கூடிய முயற்சிகளுக்கு பேராதரவும் கொடுத்துள்ளன. மாணவர்களுக்கு எதிராக மிருகத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உள்துறை மந்திரி என்ற வகையில் பொறுப்பு கொண்டுள்ள சார்க்கோசி, சர்வாதிகார வகையிலான ஆட்சி நடத்த வேண்டும் எனக் கருதும் வலதுசாரி அரசியல் வாதியாவார். தொழிற்சங்க தலைவர்கள் அவருடன் சேர்ந்து பேச்சு வார்த்தைகளுக்கு ஆர்வம் காட்டியமை அவர்களுடைய அரசியல் சீரழிவில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது.

இந்தக் காட்டிக் கொடுப்பை மறைப்பதில் லுத் உவ்றியேர் (Lutte Ouvrière -LO) ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது. CPE முழுப் பிரச்சினையின்போதும், தொழிற்சங்கங்கள் பற்றியோ அல்லது உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் பற்றியோ ஒரு சொல் கூட இது விமர்சிக்கவில்லை. அரசாங்கத்துடன் தீவிரமான முறையில் மோதல் ஏற்பட்ட நிலையில், தன்னுடைய "சுதந்திர சந்தை" கொள்கைகளின் கீழுள்ள கருத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத அதன் தன்மையை தெளிவுபடுத்திய வகையில், அரசாங்கம் மோதலை கண்டிப்புடன் கொண்டிருந்த நிலையில், தொழிற்சங்கங்களின் தலைவர்களுடைய ஏமாற்றுத்தனமான பங்கு வெளிப்படையாயிற்று; அதேபோல் அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கின் தாக்குதல்களை முறியடிக்க எதிர்ப்பு ஒன்றே போதும் என்ற பிரமையை லுத் உவ்றியேர் வளர்த்தது; இதன் உட்குறிப்பு தொழிலாள வர்க்கத்தினால் நடத்தப்படும் சுயாதீனமான அரசியல் போராட்டமோ அல்லது தொழிலாளர் அதிகாரத்திற்கான சோசலிச மூலோபாயமோ தேவையில்லை என்பதாகும்.

நீண்ட காலமாக தொழிற்சங்க சூழலில் தன்னை உறுதியாய் பதித்துவைத்துக்கொள்ள முற்பட்டுள்ள LO, தன்னுடைய அரசியல் போராட்டம், பிரச்சாரம் ஆகியவற்றில் தன்னனியல்பான போர்க்குணமானது அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதற்கு தொழிற்சங்க தலைவர்களை நிர்பந்திக்கும் என்ற கருத்தை பேணிவருகிறது. அதனுடைய வலுவான புள்ளி -தத்துவம், வரலாறு, அரசியல் அறிவு, வேலைத்திட்டம் முன்னோக்கு இவற்றை இழிவுபடுத்தலுடன் சேர்ந்து, தூய "நடவடிக்கை" அதாவது வேலைநிறுத்தங்கள், "தெருக்களின் சக்தி" ஆகும்.

பூசலுக்குட்பட்ட சட்டம் திரும்பப் பெறவேண்டும் என்ற பொதுவாக ஏற்கப்பட்ட கோரிக்கையை தாண்டி இந்த அமைப்பின் அறிக்கைகளிலும், வெளியீடுகளிலும் வேறு எவ்வித முன்னோக்கை காண்பதும் வீணாகும். ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும் என்று தேசிய மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு விடுத்த அழைப்பிற்குக் கூட LO விடம் இருந்து எந்த விடையிறுப்பும் கிட்டவில்லை.

"நடவடிக்கையில் விரிவாக்கமும் தொடர்ச்சியும் அரசாங்கத்தை CPE திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு வலியுறுத்தும்". LO தலைவர் ஆர்லெட் லாகியேர் (Arlette Laguiller) ஆற்றிய உரையில் காணப்படும் இந்த சொற்றொடர் மக்கள் இயக்கத்தைப் பற்றி LO கொண்ட மொத்த நிலைப்பாட்டையும் கூறுகிறது; ஏதோ இந்த ஒரு சட்டம் திரும்பப் பெற்றுவிட்டால், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தீர்ந்துவிடும் என்பது போல் இந்நிலைப்பாடு உள்ளது.

UMP உடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவோம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறிய பின்னர், ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்ற நடவடிக்கை தின நிகழ்வுகளுக்கு பிறகு, LO வின் செய்தித்தாள் கீழ்க்கண்ட தலைப்புடன் வெளிவந்தது: "சற்றே ஓய்வு எடுக்கும் நேரம் இது அல்ல; போராட்டம் தொடரப்பட வேண்டும்."

அதனுடைய தலையங்கத்தில், LO தொழிற்சங்கங்கள் UMP உடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது துரதிருஷ்டவசமான, தவறாகப் புரிந்து கொண்டதின் விளைவு ஆகும் என்று உதறித் தள்ளியது. CPE பேரத்திற்கில்லை என்பதை அறிந்த தன்மைக்காக தொழிற்சங்கங்களை அது பாராட்டியது; மேலும் "அது திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ஒரே எளிய வழி" என்றும் கூறியது.

UMP ஐ சந்திக்கும் தொழிற்சங்கங்களின் முடிவு பற்றி தலையங்கம் வெறுமமேன கூறியதாவது: "இப்படி நடந்து கொள்ளும் விதத்தில், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு மிகுந்த வலிமையுடன் நிற்கும்போது, அரசாங்கம் பின்வாங்கும் நிலை மிகப்பெரியதாக இருக்கும்போது, தொழிற்சங்கத்தினர் அவர்களை தளர்வுறச் செய்யும் நடவடிக்கைதான் எடுத்துள்ளனர்."

முந்தைய தலையங்கங்களை போலவே இத்தலையங்கமும் "விடமால் தொடர்க" (On continue!) என்ற கூப்பாட்டுடன் முடிவுற்றது.

மேலும் LO கூறுவதாவது, "பல்கலைக் கழக மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோரின் இயக்கம் எப்படியும் தொடரும். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கள் தொடர்ந்து கட்டாயம் வெளிப்படுத்தப்படவேண்டும். சிராக்கிற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதில்லை; இயக்கம் தொடரப்படலாம், தொடரப்படக் கூடும். CPE, CNE இவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்கள் நிறுத்தி விடாமல், CPE, CNE இரண்டும் திரும்பப் பெறப்படும் வரை, தங்கள் கோரிக்கைகள் கவனத்திற்கு வரும் வரை, போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்." [CNE என்பது மற்றொரு சட்டம்; இதை சிராக் திரும்பிப் பெறவில்லை; இது மிகப் பெரும் தொழிலாளர் பகுதிகளின் வேலைப்பாதுகாப்புக்களை பறிக்கின்றன.]

LO விற்குள்ளேயே ஒரு சிறுபான்மைப் பிரிவு கட்சிச் செய்தி ஏட்டில் வாடிக்கையாக ஒரு கட்டுரையை வெளியிட்டு வருகிறது; அது இன்னும் வெளிப்படையாக அனைத்தையும் கூறும். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகத்தை, தெருக்களில் இருந்து கொண்டு வரும் அழுத்தத்தின் மூலம் கடந்து விடலாம் என்று தெரிவிக்கிறது.

லுத் உவ்றியேர் ஏட்டின் ஏப்ரல் 7ம் தேதி பதிப்பில், இந்தப் பிரிவு (கன்னை) எழுதியது: "... தொழிலாளர்களின் செல்வாக்கு மண்டலத்தை அணிதிரட்டுவதை தொடர்ந்து விரிவாக்கம் செய்தல்தான் அரசாங்கத்தையும் முதலாளிகளையும் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் தொடர்பானதில் பின்வாங்க வைக்கமுடியும். ஐயத்திற்கிடமின்றி பேச்சுவார்த்தைகளில் மாட்டிக் கொள்ளும் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், தெருக்களுக்கு வந்த மூன்று மில்லியன் மக்கள் செல்லும் திசையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், இன்னும் பல மில்லியன் மக்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ள ஆதரவு, உடன்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதோடு, அதைப் பெருக்கவும் வேண்டும்."

பிரெஞ்சு அரசியலை கண்ணுற்று வருபவர்களுக்கு, தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு ஒன்றும் ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியும் அல்ல.

1990 களின் நடுப்பகுதியில் இருந்து, பிரான்சின் தொழிலாளர் வர்க்கம் மீண்டும் மீண்டும் அரசாங்கம், முதலாளிகள் ஆகியோரின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி வந்துள்ளது. ஆனால் இந்தப் போராட்டங்கள் அனைத்துமே தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளால் நாச வேலைக்கு உட்படுத்தப்பட்டு விடுகின்றன; அவை தொழிலாளர்களை முதுகில் குத்தி விடுகின்றன; அல்லது முட்டுச்சந்துக்குள் தள்ளிவிடுகின்றன.

1997ம் ஆண்டிற்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சித் தலைவர் லியோனல் ஜோஸ்பன்னுடைய "பன்முக இடது" அரசாங்கத்திற்கு அலன் யூப்பேயின் கோலிச அரசாங்கம் வழிவிட்டபின், ஜோஸ்பனும் சமூகநலன்புரி செலவினக் குறைப்புக்களை செயல்படுத்தும் கொள்கையைத்தான் தொடர்ந்தார்; இறுதியில், இது வலதுசாரி மீண்டும் பதவிக்கு வருவதற்கு வகை செய்தது.

பொருளாதார பாதுகாப்பின்மை, வேலையின்மை, பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், இனவெறி, போர், ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் இவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு பழைய அதிகாரத்துவக் கருவிகளில் இருந்து அரசியல் அளவில் சுயாதீனமாக இருக்கும் ஒரு புதிய கட்சியை கட்டியமைப்பது அவசியமாகிறது. அனைத்து எல்லைகள், இனப் பிளவுகளையும் கடந்து உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக இயக்கும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே இது சாத்தியமாகும் .

தேசிய பொருளாதாரத்தின் அனைத்து கூறுபாடுகளின்மீதும் உலகப் பொருளாதாரம் கொண்டுள்ள மேலாதிக்கமானது, 1960களிலும் 1970களிலும் கூட தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் நன்மைகள் கொடுத்திருந்த சமூக சீர்திருத்தவாத கொள்கையை கீழறுத்துள்ளது. இதுதான் தொழிற்சங்கங்களும் உத்தியோகப்பூர்வ "இடது" கட்சிகளும் வலதுபுறம் சாய்வதற்கு காரணமாகும். சிராக், வில்ப்பனுடைய அரசாங்கத்துடனான அவற்றினுடைய வேறுபாடுகள் பெரும்பாலும் தந்திரோபாய வகையில்தான் இருக்கின்றன. அடிப்படை "சீர்திருத்தம்", தொழிலாளர் சந்தையை "நவீனப்படுத்துதல்" என்பவை தேவை என்பதை அவை ஒப்புக் கொள்ளுகின்றன; இதன் பொருள் கடந்த கால சமூக வெற்றிகள் மற்றும் சமூக உரிமைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகும்; சர்வதேச போட்டிக்கு ஈடுகொடுத்து நிற்பதற்கு பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு அது அத்தியாவசியமானதாகும், இதனை அவை ஆதரிக்கின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் சீர்திருத்தக் கட்சிகள் வலதுபுறம் திரும்பியிருப்பது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். ஜேர்மனியாயினும், இங்கிலாத்து, இத்தாலி, அமெரிக்கா ஆயினும், "இடது" மற்றும் வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கை அவற்றின் சாராம்சத்தில் ஒன்றாகத்தான் உள்ளது. ஜேர்மனியில் சமூகஜனநாயகவாதிகளும், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் பெரும் கூட்டணி ஒன்றை கூட அமைத்துள்ளன; எல்லா இடங்களிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கம், மற்றும் முதலாளிகளுடன் வெகு நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றனர்.

LO வைப் பொறுத்தவரையில் அது சொற்களில்தான் சோசலிசத்தை உபதேசிக்கிறது; ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பு எனக்கூட அது கூறிக்கொள்ளுகிறது; உண்மையில் இந்த அமைப்பின் மூலங்கள் 1940 களில் உள்ளது என்றாலும் கூட, இது ட்ரொட்ஸ்கிச உலக இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததே இல்லை. மிக எளிய தொழிற்சங்க போர்க்குணம் மற்றும் எதிர்ப்பு இவற்றுடன் இயக்கத்தை மட்டுப்படுத்திக்கொள்ளும் வகையில், இந்த அமைப்பு அதிகாரத்துவ கருவிகளுக்கு பெரும் பணியை அளிக்கிறது; ஒரு புரட்சிகர மாற்றீடு எழாமல் தடுப்பதற்கு வேலை செய்கிறது.

LO க்கும் பிரான்சில் "தீவிர இடது" இன அழைக்கப்படும் மற்றொரு பிரிவுக்கும் இடையே தொழிற்பகுப்பு முறை ஒன்றைக் காணமுடியும். LO செயலற்ற நிலையில் இயங்கும்போது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) செயலூக்கத்துடன் பங்காற்றுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர், ஏன் சோசலிஸ்ட் கட்சியுடன்கூட சேர்ந்து கொண்டு LCR அறிக்கைகளை கூட்டாக வெளியிட்டு, இக்கட்சிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்பிற்காக பாடுபடுகிறது. பொதுவாக LO இத்தகைய கூட்டணிகளில் சேராமல் ஒதுங்கித் தன் வழியே செல்லும். ஆயினும், இது தொழிலாள வர்க்கத்தை பழைய அமைப்புக்களின் தளைகளில் இருந்து விடுவிக்க முயற்சிக்கும் சுயாதீன அரசியல் முன்முயற்சிகளால் ஒருபோதும் சேர்ந்துகொள்ளப்படுவதில்லை.

2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் சுற்றில், தேசிய முன்னணியின் ஜோன் மரி லு பென், கோலிச ஜாக் சிராக்கிற்கு எதிராக நின்றபோது, LCR சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்றது; LO பெரும் தயக்கத்திற்கு பின்னர் வாக்கே அளிக்க வேண்டாம் என்று கூறியது. இவை இரண்டுமே செயலூக்கத்துடன் கூடிய மற்றும் ஒருங்கிணைந்த, தொழிலாள வர்க்க, தேர்தல் புறக்கணிப்பை நிராகரித்தன; அத்தகைய முன்னோக்குத்தான் உலக சோசலிச வலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டிருந்தது. அத்தகைய புறக்கணிப்பு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன நிலைப்பாட்டை ஏற்க உதவியிருக்கும்; மேலும் சிராக்கிற்கு எதிரான வருங்கால போராட்டங்களுக்கும் தயாரித்திருந்திருக்கும்.

தன்னுடைய சொந்த கொள்கைகளின் விளைவுகளுக்கான அரசியல் பொறுப்பை ஏற்க LO மறுக்கிறது. தான் அதிக முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை என்று கூறி அந்நிலையை நியாயப்படுத்துகிறது; உண்மையில் அதன் வேட்பாளர் ஆர்லெட் லாகியேர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளில் 6 சதவிகிதத்தை பெற்றிருந்தார்.

இக்கண்ணோட்டம்தான் சமீபத்திய LO வின் தத்துவார்த்த இதழான Lutte de classes TM CPE க்கு எதிரான போராட்டம் பற்றிய நீண்ட கட்டுரையின் முடிவில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரை கூறுவதாவது: "உழைக்கும் மக்களின் உளப்பான்மையை மாற்றும் வகையில் புரட்சியாளர்களோ மற்றும் அவர்களின் அரசியல் கிளர்ச்சிகளோ அதிக விளைவை கொண்டிருக்கவில்லை. போராடுவதற்கான உறுதியை மீண்டும் பெற வேண்டும் என்ற உணர்வில் இத்தகைய மாறுதல்கள் பெரும்பாலும் நம்மைவிடக் கூடுதலான மக்கள் ஆதரவு, உறுப்பினர் எண்ணிக்கை இவற்றை கொண்டுள்ள அமைப்புக்களின் செல்வாக்கினால் விளைகின்றன."

தொழிலாளர் அதிகாரத்துவங்களின் முன் இதைவிட நயமற்ற, நாணமற்ற வகையில் காலில்விழுந்து வணங்கலை பார்ப்பது அரிதாகும்.

See Also:

பிரான்ஸ்: அரசாங்க தாக்குதலுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்துகையில், தொழிற்சங்கங்கள் "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றியதில் பின்வாங்குவதற்கு சமிக்கை

பிரான்ஸ்: பல்கலைக்கழக, உயர்நிலை பள்ளி மாணவர்கள் பொது வேலை நிறுத்தத்தை கோருகின்றனர்

தொழிலாளர்கள் அதிகாரத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயம்: பிரான்சின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" ஒரே விடை

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டம் பற்றிய நெருக்கடி தீவிரமடைகிறது

பிரான்ஸ்: ஜனாதிபதி சிராக் "முதல் வேலை ஒப்பந்தத்தை" சட்டமாக்குகிறார்

பிரான்ஸ்: புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெசன்ஸெனோ தொழிலாளர் அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கு இடது மறைப்பை கொடுக்கிறார்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" அரசியலமைப்புக் குழுவால் ஒப்புதல் பெற்றது

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" நெருக்கடியைத் தீர்க்க ஜனாதிபதி சிராக்கிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கில் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலைநிறுத்தம்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது

பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக திரள்வதற்கு தயாராகின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

1936ம் ஆண்டு பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்

பிரான்ஸ் : மே-ஜூன் 1968ம் இன்றும்

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page