World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Protests continue despite government retreat on "First Job Contract"

பிரான்ஸ்:"முதல் வேலை ஒப்பந்தச்" சட்ட விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கினாலும், எதிர்ப்புக்கள் தொடர்கின்றன

By Rick Kelly and Antoine Lerougetel
12 April 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

அரசாங்கம் "முதல் வேலை ஒப்பந்த" (CPE) சட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ள போதிலும், செவ்வாயன்று கோலிச அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். CPE-ஐ பதிலீடுசெய்வது தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான அரசாங்கத்தின் பேரங்கள் பற்றி செய்தியை அறிந்த பல இளைஞர்களுக்கிடையே அரசாங்கத்திற்கு எதிராக உள்ள எதிர்ப்பையும் ஐயுறவாதத்தையும் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

கிட்டத்தட்ட 41,000 மாணவர்கள் பாரிசிலும் மற்ற பிரெஞ்சு நகரங்களிலும் அணிவகுத்துச் சென்றனர். நூறாயிரக் கணக்கான இளைஞர்களை ஈர்த்து தெருக்களுக்கு கொண்டுவந்த முந்தைய ஆர்ப்பாட்டங்களைவிட இப்பொழுது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. பல பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் ஈஸ்டர் விடுமுறையில் உள்ளனர் என்றாலும், நேற்றைய கூட்டம் குறைவாக இருந்ததற்கு முக்கிய காரணம் தொழிற்சங்கங்கள், குறிப்பாக சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய ஆதரவுடன், பிரதம மந்திரி டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் அரசாங்கத்துடன் கொண்ட உடன்பாடு ஆகும்.

திங்களன்று, முதலாளிகளுக்கு இளந்தொழிலாளர்களை காரணமின்றி பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ள CPE திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று சிராக்கும் வில்ப்பனும் அறிவித்திருந்தனர். திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளில் அனுபவமற்ற தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு உதவித் தொகை மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை பல துறைகளில் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. இப்புதிய சட்டம் பெயரளவு நலனைத்தான் கொடுக்கும். 160,000 பேர் திட்டத்தின்படி தகுதி பெறுவர் என நம்பப்படுகிறது; 2006ம் ஆண்டில் இதற்கான செலவு 150 மில்லியன் யூரோக்கள் அதாவது ($182 மில்லியன்) இருக்கும் எனக் கூறப்படுகிறது.

CPE ஐ திரும்பப் பெறுதல் என்பது சிராக்கிற்கும், வில்ப்பனுக்கும் சங்கடத்தை அளித்த பின்வாங்குதலாகும்; சட்டம் தேவையானால் மாற்றப்படும், ஆனால் கைவிடப்பட மாட்டாது என்று இருவருமே முன்பு வலியுறுத்தியிருந்தனர். அவர்களும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்குகளும் CPE இயற்றப்பட்டதை ஒட்டி வெளிவந்த சமூக எதிர்ப்பின் மகத்தான வெடிப்புத் தன்மையை எதிர்பார்க்கவும் இல்லை, அதற்குத் தயாராகவும் இல்லை; இச்சட்டமோ வில்ப்பனால் மிக விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வகை செய்யப்பட்டது; விவாதங்கள் கூட நடத்தப்படவில்லை. குறிப்பாக வில்ப்பனுக்கு, இந்த CPE திரும்பப் பெறுதல் என்பது இவருடைய பிரதம மந்திரி பதவிக்கு ஊறு ஏற்படுத்தும், இவருடைய ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு அரசியல் தோல்வி ஆகும்.

சிராக்கிற்கும், வில்ப்பனுக்கும் ஏற்பட்ட இந்த பின்னடைவு, இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய செழுமைக்கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட நலன்புரி அரசு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பை தகர்ப்பதற்கான ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களால் செய்யப்படும் உந்துதல்களை பிரெஞ்சு இளைஞர்களும் தொழிலாளர்களும் தோற்கடித்துள்ளனர் என்ற பொருளை தந்துவிடாது. மக்கள் எதிர்ப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தோல்வி கண்ட, மற்றும் பெருகிய முறையில் தானே தனிமைப்படுத்தப்பட்ட நிலையைக் கண்ட அரசாங்கம் ஒரு சூழ்ச்சியை கையாண்டுள்ளது: அதன் முக்கிய உள்ளடக்கம் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உதவியை நாடி, அதன் மூலம் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் இவற்றைச் சிதைத்தல் என்பதாகும்; அதையொட்டி வேலைப்பாதுகாப்பின்மீது புதிய தாக்குதலை நடத்துவதற்கு இன்னும் கூடுதலான கால அவகாசத்தைப் பெறலாம் என்பது அவற்றின் கருத்தாகும்; இம்முறை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வெளிப்படையான அல்லது மறைமுக ஒப்புதலை பெற்று அவ்வாறு செய்யலாம் என்று அவை கருதுகின்றன.

தொழிற்சங்கங்களும், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளும் தங்கள் பங்கிற்கு இயன்ற அளவிற்கு தொழிலாளர்களையும் மாணவர்களையும் அடுத்த சுற்றுத் தாக்குதல்களுக்கு அரசியல் ரீதியில் தயாராகாதா வகையில் முட்டாள்தனமான நன்னிலை உணர்வையும் போதும் என்ற மனப்பான்மையையும் ஏற்படுத்த முயன்று வருகின்றன.

CPE திரும்பப்பெறப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பின்னர், தொழிற்சங்கங்களும் மாணவர் சங்கத் தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) தலைமையகத்தில் கூடினர். இக்கூட்டம் செய்தியாளர் மாநாடு எனக் கூறப்பட்டாலும், CGT இன் தலைவர் Bernard Thiabault செய்தி ஊடகத்திடம் தான் மாணவர்கள், தொழிலாளர் அமைப்புக்களின் தலைவர்களை வெற்றியை கொண்டாட அழைத்துள்ளதாக கூறி அனைவருக்கும் சாம்பேயின் அளித்தார்.

உத்தியோகபூர்வ "இடது" அரசியல் கட்சிகளுடன் இணைந்த வகையில் தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே வெகுஜன இயக்கம் அரசாங்கத்திற்கும் அதன் முழு வலதுசாரி வேலைத்திட்டத்திற்கும் எதிரான வெளிப்படையான போராட்டமாக அபிவிருத்தி அடைவதை தடுக்கத்தான் முற்பட்டன. இப்பொழுது அவை அரசாங்கம் தொழிலாளர்களுடைய நிலைமைகளை கீழறுத்து, வேலைப்பாதுகாப்பின்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தக்கவைத்துக் கொள்ளும் நிலைமையிலும்கூட "வெற்றி" கிடைத்துள்ளது எனக் கூறிக்கொள்ளுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் ஒன்றான புதிய வேலை ஒப்பந்தம் (Le Contrat de Nouvelle Embauche -CNE) என்பது சிறு முதலாளிகள் எந்த வயதுத் தொழிலாளியாயினும் அவர்களை முதல் இரண்டு ஆண்டுகள் வேலைக்காலத்தில் காரணமின்றி பணிநீக்கும் உரிமையை கொடுத்துள்ளது. சமவாய்ப்புச் சட்டத்தில் (L'égalité des chances) பிற்போக்கு நடவடிக்கைகளின் தொகுப்பே நிறைந்துள்ளது; இதன்படி நடைமுறையில் வேலைக்கு சேர்க்கும் குறைந்த வயது இன்னும் குறைக்கப்பட்டுள்ளது; முதலாளிகள் 15 வயதினரையும் இரவுநேர வேலைக்கு அமர்த்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள மாணவர் சங்கத் தலைவர்கள் பலர் அரசாங்கம் CPE-ஐ திரும்ப பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை பயன்படுத்தி எதிர்ப்பு இயக்கத்தை கைவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திங்களன்று Confédération Étudiante எனப்படும் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த June Coudry மாணவர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தார். முக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் தொழிற்சங்கமான UNEF இன் தலைவரான Bruno Julliard இனி வரக்கூடிய அணிதிரளல்கள் CPE க்குப் பதிலாக வரவிருக்கும் புதிய சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, விடுமுறையில் இல்லாத 62 பல்கலைக் கழகங்களில் 27 ல் தொடர்ந்து "தொந்திரவுகள்" உள்ளன, ஐந்து முற்றிலும் மூடப்பட்டுள்ளன அல்லது முற்றுகைக்கு உட்பட்டுள்ளன. மாணவர்கள், பருவகாலத் தேர்வுகள் முடிவுறுவதற்காக அரசாங்கம், போலீஸ், பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர் தொழிற்சங்கத் தலைமையில் இருந்து அனைத்து முற்றுகைகளையும் கைவிடுமாறு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சினை பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

பெப்ருவரியில் CPE எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதிலிருந்தே மூடப்பட்டிருக்கும் Rennes பல்கலைக்கழகத்தில், கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தியதில் இரு புறத்திற்கும் சமமான ஆதரவு இருந்தது திங்கள் அன்று தெரியவந்துள்ளது. முற்றுகையை கைவிடும் முடிவு தனித்தனியே வாக்கெடுப்பு எண்ணப்பட்டபின்தான் குறுகிய வித்தியாசத்தில் ஏற்கப்பட்டது.

மாணவர் தொழிற்சங்கத்தின் (Syndicats étudiants) நிலைப்பாடு தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு குழுவின் (La Coordination nationale étudiante) நிலைப்பாட்டிற்கு எதிரிடையாக உள்ளது. இந்த அமைப்பு பள்ளி, பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டுள்ளது, இது கடந்த வார இறுதியில் CPE பற்றி அரசாங்க அறிவிப்பு வரும் முன்பு கூடியது. ஞாயிறன்று வெளியடப்பட்ட அறிக்கையில் மாணவர்களின் பிரதிநிதிகள் தாங்கள் "CPE க்குப் பதிலாக CPE Mark II க்கொண்டு வரும் எந்த அரசாங்க தந்திரத்தையும், வேலைப்பாதுகாப்பற்ற தன்மை என்ற முத்திரை கொண்டிருப்பதால் "நிராகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். CPE, CNE மற்றும் சம வாய்ப்புச் சட்டம் அனைத்தும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் புலம்பெயர்ந்தோர், தஞ்சம் கூறுவோர் ஆகியோரின் உரிமைகளை பாதிக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டமும் கைவிடப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு, "தொழிற்சங்கங்களும், மாணவர் சங்கங்களும் உடனடியாக அரசாங்கத்துடன் அனைத்து பேச்சு வார்த்தைகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், எமது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, வட்டார ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் ஆகியவற்றிற்கான அழைப்பு விடுக்கப்படவேண்டும்." என்றும் கோரியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் ஒரு "ஒருமித்த தேசிய ஒருங்கிணைப்புக் குழு" வை அமைக்க, மாணவர்கள் "தொழிலாளர்களையும் அவற்றின் அமைப்புக்களையும்'' தங்களின் சொந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாறு ஊக்குவித்தனர்.

திங்கள் இரவு, Rennes ன் பள்ளி மாணவ பிரதிநிதியாக தேசிய மாணவ ஒருங்கிணைப்புக்குழுவில் இருக்கும் Yasmina Vasseur உலக சோசலிச வலைத் தளத்திடம் தொழிற்சங்கங்கள், மாணவர்கள் சங்கங்கள் ஆகியவற்றின் நிலைமை பற்றி உரையாடினார். "நான் ஏமாற்றம் அடைந்தேன்". "அவர்கள் சாம்பெயின் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நாங்கள் கொண்ட குறிக்கோள்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றே பொருள். அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக காட்டிக் கொண்டதெல்லாம் வெறும் பகட்டுத்தனம்தான்" என்று அவர் கூறினார்.

UNEF பற்றி அவர் குறிப்பிடத்தக்க வகையில் குறைகூறினார்: "அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களை கொண்டிருந்தனர். CPE மற்றும் பிற கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை பேச்சு வார்த்தைகள் கூடாது என்று நாங்கள் வாக்கு அளித்தோம்; ஆனால் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்தச் சென்றுவிட்டனர்."

பாரிசில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WSWS இன் நிருபர்கள் பல மாணவர்களுடன் பேசினர்; அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் உறுதியைத்தான் வெளிப்படுத்தினர்.

''நாங்கள் தொடக்க நிலையில் இருக்கிறோம்'' சோர்போன் பல்கலைக் கழகத்தில் மொழியியல் மாணவியாகிய Yasmina Mraizika கூறினார்: "புதுச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது; சமவாயப்புச் சட்டம் மற்றும் CNE க்கு எதிராகவும் இயக்கத்தை விரிவாக்க நாங்கள் விரும்புகிறோம்; அதுவும் பாதுகாப்பு தன்மை அற்ற இன்னொரு ஒப்பந்தம்தான். எங்களுடைய இயக்கம் வேறு ஒரு உலகை ஏற்படுத்தும்; அது மக்களுடைய வாழ்க்கையை பாதுகாப்பின்மைக்கு உட்படுத்தும் வழிவகைகள் அனைத்தையும் எதிர்க்கும். போராட்டத்தில் வருங்காலத்தை பொறுத்தவரையில், நாங்கள் நம்பிக்கை உடன் இருக்க வேண்டும்; சிலர் நழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே."

சோர்போனிலேயே மெய்யியல் பிரிவில் மாணவராக உள்ள Julien Lucy, தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டிற்கு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்: "இயக்கத்தை இன்னும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை தொழிற்சங்கங்களுக்கு கிடையாது. அவர்கள் அரசியல் ரீதியாக இவ்வியக்கத்தைத் களைப்படைய வைக்கத்தான் சூழ்ச்சிசெய்கின்றனர். தொழிற்சங்கங்களுக்கு, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதில் ஆர்வம் இல்லை; அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.

முக்கிய அணிவகுப்புக்களை தவிர தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளும் நேற்று நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட நூறு மாணவர்கள் Bordeaux ஐ ஒட்டி ஒரு சாலை வரி செலுத்துமிடத்தை கைப்பற்றி கட்டணம் இல்லாமல் வண்டிகளை செல்ல அனுமதித்தனர். Dunkirk அருகே இளைஞர்கள் இரயில் நிலையங்களை ஆக்கிரமித்து TGV அதிவிரைவு வண்டி ஒன்றை நிறுத்தினர்; அதன் பின்னர் தாமதிக்கப்பட்டுவிட்ட பயணிகளிடம் கூட்டம் போட்டு அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் ஏன் எதிர்ப்புக்களைத் தொடர்கின்றோம் என்று விளக்கினர். Nantes Atlantique விமான நிலையத்தில் விமான வழித் தடங்களையும் குறுகிய காலத்திற்கு மாணவர்கள் ஆக்கிரமித்தனர்; பின்னர் அவர்கள் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் இதற்கிடையில் அரசாங்கம், வணிகக் குழுக்கள் ஆகியவற்றுடன் தங்களுடைய ஒத்துழைப்பை அதிகப்படுத்தப் போவதையும் தெளிவுபடுத்தியுள்ளன. வேலைகொடுப்போர் கூட்டமைப்பான Medef தெரிவித்துள்ள "சமூகப் பங்காளிகள்" தனியே கூட வேண்டும், CPE நெருக்கடியின் படிப்பினைகள் பற்றி விவாதிக்க வேண்டும், வருங்காலத்தில் "தடைற்ற சந்தை" சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளதற்கு நேற்று தொழிற்சங்கத் தலைவர்கள் உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்.

CPE திரும்பப் பெறப்பட்டுள்ளது பிரெஞ்சு, ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளின் உறுதியான இரண்டாம் உலகப்போருக்குப் பின், தொழிலாள வர்க்கம் போராடி பெற்றுள்ள சமூக நலன்களை தகர்க்க வேண்டும் என்ற போக்கை சிறிதும் மாற்றவில்லை; அதேபோல் அமெரிக்க முறையில் தொழிலாளர் உறவுகள் இருக்க வேண்டும் என்ற கருத்தும் மாறவில்லை. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரும் முன்னாள் பிரான்ஸ் வங்கியின் கவர்னருமான Jean- Claude Trichet என்ன தேவைப்படுகிறது என்ற தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியபோது சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாகத்தான் பேசினார்.

"ஐரோப்பாவில் மற்ற நாடுகளை போலவே பிரான்சும் சீர்திருத்தங்களை மிகத் தாமதமாகவும் அதையொட்டி அதிக விலை கொடுத்தும்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்று நாம் வாழும் உலகில் இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது" என்றார் அவர்.

பிரெஞ்சு செய்தி ஊடகத்திற்குள்ளேயே செவ்வாயன்று விவாதம் தொழிற்சங்கங்கள் இன்னும் கூடுதலான வகையில் "சீர்திருத்த" நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்பதை மையமாக கொண்டிருந்தது. "வழிவகைப் பிரச்சினைகளை பொறுத்த வரையில், சீர்திருத்தங்கள் (உண்மையானவை) தனியே போருக்குப் புறப்பட்டால் செய்ய முடியாது என்பதை நாம் இப்பொழுது தெரிந்து கொண்டுள்ளோம்." என்று முக்கிய வலதுசாரி ஏடான Le Figaro கூறிற்று. ஒரு தலையங்கத்தில், "சீர்திருத்த தன்மைகளின் அளவுகோல் பற்றிக் கூறும்போது, மிக மோசமான முறையில் அவை கையாளப்பட்டால், சிறு பிரச்சினைகள்கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். ஏராளமான பகுதிச் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தவிர்க்கப்பட வேண்டும்." என்றும் அது தெரிவித்துள்ளது.

Le Figaro விற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி, "தான் "பிளவு" பற்றிய கருத்தை (அதாவது பிரான்சின் தற்போதைய சமூக மாதிரியில் உள்ளதை) கைவிட்டுவிடவில்லை" என்று கூறியுள்ளார். சார்க்கோசி CPE நெருக்கடியில் இருந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் மக்கள் இயக்கத்திற்கான ஐக்கியத்தின் (UMP) ஜனாதிபதி வேட்பாளருக்கான முன்னணி நபராக எழுச்சி பெற்றுள்ளார். தொழிற்சங்கங்களை ஓரம் கட்டியதற்காக அவர் வில்ப்பனை குறைகூறியுள்ளார்; தொழிற்சங்கங்களுடன் பங்காளித்தன்மையுடன் "சுதந்திர சந்தை" சீர்திருத்தங்களை தொடர இருக்கும் தன்னுடைய விருப்பத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

See Also:

பிரான்ஸ்: அரசாங்க தாக்குதலுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்துகையில், தொழிற்சங்கங்கள் "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றியதில் பின்வாங்குவதற்கு சமிக்கை

பிரான்ஸ்: பல்கலைக்கழக, உயர்நிலை பள்ளி மாணவர்கள் பொது வேலை நிறுத்தத்தை கோருகின்றனர்

தொழிலாளர்கள் அதிகாரத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயம்: பிரான்சின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" ஒரே விடை

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டம் பற்றிய நெருக்கடி தீவிரமடைகிறது

பிரான்ஸ்: ஜனாதிபதி சிராக் "முதல் வேலை ஒப்பந்தத்தை" சட்டமாக்குகிறார்

பிரான்ஸ்: புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெசன்ஸெனோ தொழிலாளர் அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கு இடது மறைப்பை கொடுக்கிறார்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" அரசியலமைப்புக் குழுவால் ஒப்புதல் பெற்றது

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" நெருக்கடியைத் தீர்க்க ஜனாதிபதி சிராக்கிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கில் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலைநிறுத்தம்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது

பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக திரள்வதற்கு தயாராகின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

1936ம் ஆண்டு பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்

பிரான்ஸ் : மே-ஜூன் 1968ம் இன்றும்

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page