World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP candidate in California: Extend full rights to all immigrants!

கலிபோர்னியாவில் சோசலிச சமத்துவக்கட்சி வேட்பாளர்: அனைத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு முழு உரிமைகளும் வழங்கப்படவேண்டும்

5 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

நாடாளுமன்ற 29வது கலிபோர்னியா மாவட்டத்தில் SEP வேட்பாளராக போட்டியிடும் ஜோன் பேர்ட்டன் கீழ்கண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இவை இறக்கம் செய்து வினியோகிப்பதற்கு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் PDF வடிவத்தில் கிடைக்கக்கூடியவை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுவரும் புலம்பெயர்ந்தோருக்கு-எதிரான ஒடுக்குமுறை மற்றும் தண்டனைச் சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு, நாடு முழுவதும் கடந்த வாரம் ஆவணங்கள் உள்ள மற்றும் ஆவணங்கள் பதியப்படாத மில்லியன் கணக்கான புலம் பெயர்ந்தோர் தெருக்களுக்கு இறங்கியிருந்தனர். தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படுவதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது வகுப்புக்களை புறக்கணித்து புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக அணிவகுத்து வந்தனர்.

எப்படி அவர்கள் இந்த நாட்டில் நுழைந்தார்கள் என்பதை பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்த அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என்பதை அமெரிக்க கீழ்சபையின் பிரதிநிதியாக போட்டியிடும் ஒரு சோசலிஸ்ட் வேட்பாளராகிய நான் ஆதரிக்கிறேன்.

வாழ்க்கைத்தரம் மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் போராடி வருவது, மற்றும் மெக்சிகோவில் பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற உழக்கும் நிலைமைகளுக்கு எதிராக சுரங்கத் தொழிலாளர்கள் அணிதிரண்டிருப்பது, இங்கிலாந்தில் ஓய்வூதியங்களை பேணுவதற்காகவும் பிரான்ஸ் தொழிலாளர்களினால் உழைக்கும் நிலைமைகளை பாதுகாப்பதற்கும் புலம்பெயர்ந்தோர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் நாட்டிற்கு நாடு தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராடுவது பூகோளம் முழுவது நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தின் முழுமையின் ஒருபாகமாக இளைஞர்களும் மற்றும் வயதானவர்களும் இணைந்து இந்த கண்டனங்களை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவிலுள்ள குடியரசு மற்றும் ஜனநாயகக்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பெருவணிகங்களின் அரசியல் பிரதிநிதிகள் அனைத்து தொழிலாளர்களினதும் மற்றும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரது ஜனநாயக உரிமைகளையும் மற்றும் வாழ்க்கைத்தரங்களையும் கீழறுப்பதற்காகவும் தாக்குதலுக்குட்படுத்துவதற்காகவும் எல்லைப் பிரச்சினையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் வர்க்க சார்பு வெளிப்படையானதும் மன்னிக்கமுடியாததுமாகும்: வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் இதர நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட அதே போன்ற உடன்படிக்கைகளின் கீழ், இலாபத்தை தேடி தேசிய எல்லைகளை கடந்து முதலீடு சுதந்திரமாக நகர்வதாக இருக்க வேண்டும் ஆனால் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளில் பணிப்புரிவதற்கு சுதந்திரம் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான பேரணிகளின் பிரதான கவனம் HR 4437 என்ற கீழ்சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா ஆவணம் இல்லாத தொழிலாளர்களை குற்றம்வாளி என்று விளக்கம் தருவதுடன் மற்றும் உதவிதேவையானவர்களுக்கு உதவுகின்ற சமூக தொழிலாளர்கள் மற்றும் சுகாதார சேவை தொழிலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரது நடவடிக்கைகளை குற்றமாக்குகின்றது. ஆனால் காங்கிரசின் முன் உள்ள அனைத்து மசோதாக்களின் நோக்கமும் அதில் செனட் நீதிக்குழுவும் மற்றும் ஜனநாயகவாதிகள் ஆதரவை பெற்ற வாசகமும் அடங்கும், அது அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்துவதாகவும், கொடூரமாக சுரண்டப்படும் மலிவூதியத்தின் இருப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நீட்டிக்கச்செய்வதை உறுதி செய்துவதற்காகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்காக 29வது மாவட்டத்திலிருந்து போட்டியிடும் அதன் வேட்பாளராகிய நானும், அத்தகைய முன்மொழிவுகள் அனைத்தையும் திட்டவட்டமாக புறக்கணிக்கிறோம். புலம்பெயர்ந்தவர்களை பொருளாதார அல்லது சமூகரீதியாக ஓரங்கட்டுவதற்கு அல்லது தண்டிப்பதற்கு, குற்றவாளிகளாக்கப்படுவதற்கு எந்த வகையில் முயலுவதாக இருக்கும் எந்த வகைச் சட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். புலம்பெயர்ந்த குடும்பங்களும் மற்றும் தனிநபர்களும் ஆவணங்கள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவர்கள் விரும்புகின்ற எந்த நாட்டிலும் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் அமைதியாக பணியாற்றவும் மற்றும் வாழ்வதற்கும் அவர்களது உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் பாதுகாக்கிறோம். சட்டப்பூர்வமான ஒரு ஓட்டுனர் பத்திரம் பெறுகின்ற உரிமை உட்பட, ஆவணம் இல்லாத புலம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை கல்வி சுகாதாரம் மற்றும் தொழிற்பயன்களை மறுக்கும் எந்த விதியையும் அல்லது சட்டத்தையும் நாங்கள் புறக்கணிக்கிறோம்.

அமெரிக்காவையும் மெக்சிகோவையும் பிரிக்கின்ற பாலைவனத்தை கடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மடிகின்றனர். பொருளாதார தேவைகளால் உந்தப்பட்டு அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மிக ஆபத்தான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அதிக அளவில் உருவாகியுள்ளது. ஏனெனில் கலிபோர்னியா எல்லையில் ஒரு உலோக முள்வேலி அமைக்கப்பட்டிருப்பதும் மற்றும் மத்திய முகவர்களின் இராணுவம், அது தவிர ஆயுதங்தாங்கிய வலதுசாரி கண்காணிப்பு குழுக்களான Minutemen போன்ற குழுக்கள் உட்பட அவர்கள் நுழைவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலாகும். சராசரியாக, ஒரு நாளைக்கு ஒரு புலம்பெயர்ந்தோர் வீதம் வெப்பத்தாலும், தாகத்தாலும், உறைபனியாலும் மடிகின்றனர்.

இப்படி, ஆவணமில்லாமல் வருகின்ற தொழிலாளர் பட்டியலில் மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்கள் மட்டுமின்றி இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்று அழைக்கப்படுபவர்கள் பட்டியலில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர், 29ஆவது நாடாளுமன்ற மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் சீனாவிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள், பசிபிக் மகாசமுத்திரத்தை மறைமுகமாக கப்பலில் தைரியமாக கடந்து வந்துவிடுகின்றனர். அவர்கள் எல்லையை கடந்ததும் கிரிமினல் கும்பல்கள் அவர்களை கொத்தடிமை கடன்காரர்களாகவும் மற்றும் இதர வகை அடிமைத்தனங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.

நமது எல்லைகளிலும் மற்றும் துறைமுகங்களிலும் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டுள்ள மனித துயரங்களுக்கும் மில்லியன்கணக்கான தொழிலாளவர்க்க குடும்பங்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதற்கும் பொறுப்பு பெரு வணிகங்களும் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும், குடியரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயகக் கட்சியுமாகும். அவற்றுடன் சேர்த்து மெக்சிகோவிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் மற்றும் இதர நாடுகளிலும் இருக்கின்ற ஆட்சிகளும் உழைக்கும் மக்கள் மீது கொடூரமான சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை திணிப்பதன் காரணமாக நல்ல வாழ்வைத்தேடி அவர்கள் புலம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் உரிமைகள், வேலைவாய்ப்புக்கள், ஓய்வூதியங்கள், கல்வி, கண்ணியமான சுகாதார சேவை மற்றும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றிற்காக நடைபெற்று வருகின்ற போராட்டம், முதலும் முடிவுமாக சர்வதேச தன்மை கொண்டது. இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நான் விடுகின்ற வேண்டுகோள் பேரினவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வுகளின் அனைத்து கோரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள உங்களது சகோதர மற்றும் சகோதரிகளோடு பொது போராட்டத்தில் ஐக்கியப்பட்டும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிக்காரர்களிடமிருந்து முறித்துக்கொண்டும் நமது சொந்த தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு போராட வேண்டும்: அது சோசலிச சமத்துவக்கட்சியாகும்.

இந்த கோரிக்கைகளையும் மற்றும் முன்னோக்கையும் ஆதரிக்கின்ற அனைவரும் இந்தப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நமது கட்சியின் வேலைதிட்டங்களை விவாதிப்பதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் வாக்குச்சீட்டில் சோசலிச சமத்துவக்கட்சிவேட்பாளர்கள் இடம்பெறுவதற்கான விண்ணப்பத்தில் பங்குபெறுவதற்கான இந்த பிரச்சாரத்திற்கு ஓர் அங்கமாக ஆவதற்கு சோசலிச சமத்துவக்கட்சியையும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தையும் தொடர்பு கொள்ளவும்.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு சோசலிச மாற்றீட்டை கட்டியெழுப்ப எமது பிரச்சாரத்தை ஆதரிக்கவும்.

பொதுக் கூட்டங்கள்

Los Angeles
Wednesday, April 5, 7-9 p.m.
Public Policy Building, Room 1246
UCLA Campus

Pasadena
Wednesday, April 26. 7 p.m.
Neighborhood Unitarian Church
301 North Orange Grove Avenue.

Top of page