World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold march and meeting against US-Israeli aggression in Lebanon

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி லெபனானில் அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஊர்வலமும் கூட்டமும் நடத்தவுள்ளது

4 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

மத்திய கிழக்கிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் பரந்த எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், இஸ்ரேல் புஷ் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன், தென் லெபனானில் தனது தரைப்படைத் தாக்குதலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. இந்த தாக்குதலில் நகரங்களும் கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு முழு ஜனத்தொகையும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளது. இதன் இலக்கு, நாட்டை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அடிமை அரசாக்கும் அகன்ற மூலோபாயத்தின் ஒரு பாகமாக லெபனான் பிராந்தியத்தின் ஒரு பெரும் பகுதி ஊடாக யாரும் உள்நுழையாத பகுதியை ஸ்தாபிப்பதாகும்.

புஷ் நிர்வாகமானது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஆகிய வளம் நிறைந்த பிராந்தியம் பூராவும் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் அதன் மூலோபாய இலக்கை அடைவதற்காக சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான எதிர்கால ஆத்திரமூட்டல்கள் மற்றும் யுத்திற்கு வழியமைப்பதன் பேரில், இஸ்ரேல் யுத்த திட்டங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. எந்தவொரு பெரும் வல்லரசும் லெபனான் மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது இஸ்ரேலை கண்டனம் செய்யவோ இல்லை. இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாஸி தலைவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அடிப்படைக் குற்றமாகும்.

இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை துரிதப்படுத்தியுள்ள நிலையில், தனக்கு வாஷிங்டனின் ஆதரவு தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்தக் குற்றவியல் நடவடிக்கையை அமைதியாக பொருத்துக்கொள்கின்றது. இந்தக் குற்றத்திற்கு தாம் உடந்தையாய் இருப்பதை மூடி மறைப்பதற்காக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), லெபனான் மீதான யுத்தத்தை நிறுத்துமாறு அதனது இஸ்ரேல் பங்காளிக்கு அழுத்தம் கொடுக்குமாறு புஷ் நிர்வாகத்தின் அரசியல் குண்டர்களுக்கு வெற்று அழைப்புவிடுத்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, லெபனானுக்கு எதிரான கொள்ளையடிக்கும் யுத்தத்திற்கு எதிராக ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக கொழும்பில் ஒரு ஊர்வலத்தையும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகின்றது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் அதில் பங்குபற்றுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

FèF: ஆகஸ்ட் 8, செவ்வாய்க் கிழமை.

ஊர்வலம்: கொழும்பு 10, மருதானை, தெமட்டகொட வீதியில் பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

கூட்டம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும்.

Top of page