World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Human Rights Watch catalogues Israeli war crimes in Lebanon

லெபனானில் இஸ்ரேலிய போர்க்குற்றங்களை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு பட்டியலிடுகிறது

By Rick Kelly
4 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch-HRW) நேற்று வெளியிட்டுள்ள 50 பக்க அறிக்கை ஒன்றில் இஸ்ரேல் போர்குற்றங்களை புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ''அழிவுகரமான தாக்குதல்கள்: லெபனான் குடிமக்கள் மீது இஸ்ரேலின் பொறுப்பற்ற முறையில் நடத்தியுள்ள தாக்குதல்கள்" என்ற தலைப்பில், இந்த அறிக்கை இன்னும் கூடுதலான முறையில் சியோனிய அரசாங்கம் வேண்டுமென்றே குடிமக்களை இலக்கு வைப்பதை தன்னுடைய குற்றம் சார்ந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தெற்கு லெபனானில் உள்ள மக்களை அச்சுறுத்தி, வெளியேற்றுவதை கொண்டுள்ளது என்பதற்கு அதிகமான நிரூபணங்களையும் கொடுத்துள்ளது.

"லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களின் வடிவமைப்பு "போரில் ஈடுபட்டிருப்போரையும் சாதாரண குடிமக்களையும் வேறுபடுத்துவதில் உள்ள தோல்வி ஒன்றும் தற்செயல் நிகழ்வுகள் என விளக்கவோ, உதறிவிடவோ முடியாதவை" என்று அறிக்கை விளக்கியுள்ளது. "இதன் வடிவமைப்பும் தீவிரமும் அவற்றின் விளைவுகளும் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன."

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னனுக்கு இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கவும் "சட்டத்தை மீறியவர்கள் எப்படிப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கான விதிமுறைப் பரிந்துரைகள் அளிப்பதற்கு" சர்வதேச விசாரணைக் குழு ஒன்று நிறுவ வேண்டும் என்று HRW அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் லெபனியக் குடிமக்கள் மீது தன்னுடைய தாக்குதல்களை பற்றி முறையாக மறைத்துப் பொய்யும் கூறியுள்ளதற்கான கூடுதலான சான்றுகளையும் அறிக்கை கொடுத்துள்ளது. "மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, ஹெஸ்போல்லாவை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் பதிலடித் தாக்குதல்களில் இருந்து காத்துக் கொள்ளுவதற்காக கேடயமாகப் பயன்படுத்தியது என்பதற்கு எச்சான்றையும் காணவில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது. இது இஸ்ரேலின் கூற்றுக்களுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். "இந்த அறிக்கையில் ஆவணமிடப்பட்டுள்ள குடிமக்கள் இறப்புக்கள் எதிலும், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கொள்ளும் நேரத்திலோ அதற்கு முன்போ, ஹெஸ்பொல்லா படைகள் அல்லது ஆயுதங்கள் அருகிலோ அப்பகுதில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை."என குறிப்பிட்டுள்ளது.

இந்த முடிவுகள் மிகப் பரந்த அளவில் HRW லெபனானில் நிகழ்த்திய ஆய்வுகளில் இருந்து வந்தவை ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை கண்ணுற்றவர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆய்வாளர்கள் பேட்டியும் இந்த அறிக்கைகளை தங்களுடைய தாக்குதலுக்குட்பட்ட இடங்கள் பற்றிய ஆய்வுகள், மருத்துவமனைகளில் இருந்து வந்த தகவல்கள் மற்றும் மனிதாபிமான குழுக்கள், அரசாங்க அமைப்புக்கள் ஆகியவற்றில் இருந்து கிடைத்த குறிப்புக்களுடன் ஒத்துப்பார்த்துச் சரியெனக் காண்கின்றன. இஸ்ரேலிய ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் 153 பேர் இறப்பிற்கு காரணமானதை அறிவதற்கு இவ்விசாரணை கையாளப்பட்டது; அந்த எண்ணிக்கை போரின் முதல் இரு வராங்களில் நடந்த லெபனிய இறப்புக்களின் மொத்தத்தில் மூன்றில் ஒரு பகுதியையும்விட அதிகமாகும்.

ஜூலை 30ம் தேதி தெற்கு லெபனிய நகரமான கானாவில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றியும் அறிக்கையின் ஒரு பிரிவில் கூறப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் கருத்தின்படி, ஆரம்ப மதிப்பீடுகள் கிட்டத்தட்ட 60 குடிமக்கள்தான் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது சரிந்த கட்டிடங்களில் இருந்து தப்பியோடியவர்களின் எண்ணிக்கையை கணக்கில் சேர்க்காத வரையில் குறைத்து மதிப்பிட்டப்பட்டுள்ளது. 16 குழந்தைகள் உட்பட 28 பேர்தான் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் கூறினார்கள்; 13 பேர் பற்றித் தகவல் தெரியவில்லை என்றும் பலரும் இன்னும் இடிபாடுகளுக்கு இடையே புதையுண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தப்பிப் பிழைத்தவர்கள் ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்கள் அப்பகுதியில் இருந்து ஏவப்பட்டன, உள்ளூர்வாசிகள் போராளிகளால் "பொதுமக்கள் கேடயங்கள் போல்" பயன்படுத்தப்பட்டனர் என்பதை சீற்றத்துடன் மறுத்துள்ளனர். "ராக்கெட் ஏவியவர்களை இஸ்ரேலியர்கள் உண்மையிலேயே பார்த்தார்கள் என்றால், அவர்கள் எங்கு போனார்கள்?" HRW இடம் குண்டுவீச்சிற்குட்பட்ட கட்டிடத்தில் இருந்து தப்பிய 61 வயது விவசாயியான முகம்மது மஹ்மூத் ஷால்ஹெளப் கூறினார்: "நாங்கள் இஸ்ரேலியர்களிடம் எங்கள் இறந்தவர்களை காட்டினோம்; அவர்கள் ஏன் ராக்கெட் ஏவியவர்களை காட்டக்கூடாது?" அங்கு வசிக்கும் மற்றொருவர் காசி அய்டாஜி கூறினார்: "வீட்டிற்கு அருகில் ஹெஸ்பொல்லா ஏவுகணையை ஏவியது என்றால் 50 பேர் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்களா?"

தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் கானாவில் வசிப்பர்களை தவிர, டஜன் கணக்கான செய்தியாளர்கள், மீட்புப் பணியில் இருப்பவர்கள், சர்வதேச பார்வையாளர்கள் ஆகியோரையும் HRW பேட்டி கண்டது. அழிக்கப்பட்ட கட்டிடத்திலோ அல்லது கானாவில் எப்பகுதியிலுமோ ஒரு ஹெஸ்பொல்லா இராணுவத் தடம் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக எவரும் கூறவில்லை.

இப்படிப்பட்ட இடிபோன்ற சான்றுகள் இருந்த போதிலும்கூட, நேற்று இஸ்ரேலிய இராணுவம் தன்னுடைய உள் விசாரணையில் "எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள கிராமத்தின் இல்லங்களில் சந்தேகத்திற்கு உரியது, எனவே அப்பகுதி காலி செய்யப்பட வேண்டும் என எச்சரிக்கைவிட தகுதியுடையவை எனக் கருதப்படுபவை அல்லது இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுக்கள் விடப்படும் பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் எப்படி தாக்குதல் இருக்க வேண்டும் எனக் கூறும் இராணுவ வழியமைந்த நெறிகளுக்கு ஏற்பத்தான் கட்டிடம் இலக்காகக் கொள்ளப்பட்டது" என்று அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் டான் ஹலுட்ஸ் மீண்டும் குடிமக்களை பாதுகாப்புக் கேடயங்களாக ஹெஸ்பொல்லா பயன்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டைக் கூறியதுடன் அக்கட்டிடத்தில் குடிமக்கள் இருந்தனர் என்று தெரிந்திருந்தால் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்திருக்காது என்றும் கூறினார்.

அறிக்கை இந்தப் பொய்கள் அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. மனச் சிதைவு அல்லது தவறு என்பதற்கு முற்றிலும் மாறான வகையில் கானாவில் நடந்த கொடூரம் பொதுமக்கள் வாழும் பகுதிகள் வேண்டுமென்றே இலக்கு கொள்ளப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் நன்கு அறியப்பட்டுள்ள மோசமான திட்டங்களில் ஒன்றுதான் என்பது தெளிவு.

இஸ்ரேலின் தாக்குதலில் முதல் இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 5,000 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது விமானத்தாக்குதலில் சேதமுற்றுள்ளன. "மிகப் பெரிய பொதுமக்கள் இறப்புக்களை இல்லங்களை தாக்கியதின் மூலம் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது; இதற்கு எந்த வெளிப்படையான இராணுவ இலக்கும் வீடுகளுக்கு உள்ளேயோ அல்லது அப்பகுதியிலோ கிடையாது" என்று அறிக்கை கூறியுள்ளது. சில இடங்களில் வசிப்பவர்கள், அண்மையில் இருப்பவர்கள் வீட்டைச் சுற்றி நின்று இறந்தவர்கள் சடலங்களை அகற்றியபோதும், காயமுற்றோருக்கு உதவியபோதும் போர் விமானங்கள் மீண்டும் அவர்களை தாக்கின."

HRW மிக விரிவான முறையில் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளது. ஓரிடத்தில் இஸ்ரேலிய போர்விமானங்களும் Apache ஹெலிகாப்டர்களும் தெற்கு லெபனியக் கிராமமான ச்ரிபாவில் ஜூலை 19 அன்று தொடர்ச்சியான குண்டு மழைகளை பொழிந்தன. "முதல் தாக்குதலுக்கு பின்னர் கிராம மக்கள் அண்டை கிராமங்களுக்கு பாதுகாப்பிற்காக ஓடத் தலைப்பட்டனர். தங்கள் கண்காணிப்பு இடத்தில் இருந்து இதைப் பார்த்த இஸ்ரேலியர்கள் Apache ஹெலிகாப்டர்களை கிராமத்திற்கு உயரே வட்டமிடுமாறு செய்து எங்களை அங்கிருந்து நகராமல் தடுக்க முற்பட்டனர். அதன் பின்னர் அக்கிராமப் பகுதி முழுவதும் குண்டுத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது" என்று கிராமவாசி ஒருவர் கூறினார்.

மூன்று இஸ்ரேலிய போர் விமான ஜெட்டுக்கள் இதன்பின் குறைந்தது 13 வீடுகளையாவது தாக்கின; கட்டிடங்கள் சரிந்தன; அஸ்திவாரங்கள் நிலைகுலைந்தன; இவற்றில் மக்களோ நிறைந்திருந்தனர். இத்தாக்குதலில் 26 முதல் 42 மக்கள் கொல்லப்பட்டனர். சரியான எண்ணிக்கை இப்பொழுதும் தெரியாது; ஏனெனில் மீட்புப் பணியாளர்கள் இன்னும் கிராமத்தை சென்று சடலங்களை மீட்க முடியவில்லை; இஸ்ரேலிய போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உள்ளூர்வாசிகளை இடிபாடுகளை சரிசெய்ய முடியாமல் தடுக்கின்றன. HRW ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஹெஸ்பொல்லா இராணுவ நடவடிக்கைக்கான ஆதாரங்களை எதையும் காணவில்லை; தப்பிய மக்களுடைய தகவல்களான அக்கிராமத்தில் இருந்து ராக்கெட்டுக்கள் விடப்படவில்லை என்பதையே இது உறுதி செய்கிறது.

கணக்கிலடங்கா இஸ்ரேலிய தாக்குதல்கள் தெற்கு லெபனானில் தப்பியோடும் சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்டது பற்றியும் அறிக்கை விரிவாகக் கூறுகிறது. சில நாட்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் டஜன்கணக்கான பொதுமக்கள் வாகனங்கள் மீது நடத்தப்பட்டன. இதுகாறும் சான்றுகளுடன் வந்துள்ள ஆவணங்களில் மோசமான தன்மையுடைய தாக்குதல் ஒன்றில் ஜூலை 15 அன்று லெபனிய எல்லைக் கிராமமான மார்வாகினில் இருந்து கிராம மக்கள் திரளாகச் சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல் ஆகும். இஸ்ரேலிய பாதுகாப்பு படையிடம் இருந்து வெளியேறவேண்டும் என்ற உத்திரவு கிடைத்த பின்னர் கிராம மக்கள் அருகில் இருந்த UNIFIL (ஐக்கிய நாடுகளின் லெபனானில் உள்ள இடைக்காலப் படை) புகலிடம் நாடினர். அங்கிருந்து நிராகரிக்கப்பட்டபின் அவர்கள் வாகன வரிசையாக வடக்கே சென்றனர். இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் இரண்டு வாகனங்கள் மீது குண்டுகளை வீசி 21 பேரைக் கொன்றனர்; இதல் 14 குழந்தைகளும் இரு கருவுற்ற மகளிரும் அடங்குவர். இக்குடிமக்கள் எவரும் ஆயுதங்களை கொண்டிருக்கவில்லை; எவ்விதத்திலும் ஹெஸ்பொல்லாவுடன் தொடர்பும் கொண்டிருக்கவும் இல்லை.

மருத்துவ அதிகாரிகள், உதவிக்குச் சென்ற வாகனங்கள் ஆகியற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்காக கொண்டது. குறைந்தது 28 பேராவது படுகொலை செய்யப்பட்டிருந்த கானாவில், அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு இரண்டு முதலுதவி வண்டிகளில் மூன்று காயமுற்றோர் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படும்போது போர் ஜெட்டுக்கள் தாக்கின. இரண்டாவது தாக்குதலில் இரண்டாம் முதலுதவி வண்டி சில நிமிடங்களுக்கு பின்னர் தாக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது. "இத்தாக்குதலில் செஞ்சிலுவைப் பணியாளர்கள் ஆறு பேரும் காயமுற்றனர்; அவர்கள் மருத்துவம் பார்த்துவந்த மூன்று நோயாளிகளுக்கும் கூடுதல் காயங்கள் ஏற்பட்டன. நோயாளிகளில் ஒருவர், நடுத்தரவயதினர், இத்தாக்குதலில் காலை இழந்தார்; அவருடைய வயதான தாயார் பகுதி இயக்கமற்றவரானார். மூன்றாம் நோயாளி, ஒரு சிறு பையன் தலையில் கூரிய காயங்களுக்கு உள்ளானான்".

HRW இஸ்ரேலின் கிளஸ்டர் வெடிமருந்துகள் (Cluster munitions) பயன்படுத்தப்படுதலையும் கண்டித்துள்ளது; இவை பெருமளவு பொதுமக்கள் இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. லெபனிய உள்கட்டுமானமான மின்விசை அமைப்புக்கள், சாலைகள், விமான நிலையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளது பற்றியும் இந்த அமைப்பு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது; லெபனானில் வெள்ளை பொஸ்பரஸை (White phosphoras) இஸ்ரேலியர் பயன்படுத்தப்பட்டது பற்றிய குற்றங்களையும் ஆய்ந்து வருகிறது. போர்க்களங்களில் வெளிச்சத்தற்காக ஆரம்பத்தில் இந்த இரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்போது, இது உடைகளையும் தோல்களையும் எரித்து கொடூரக் காயங்களையும் இறப்புக்களையும் கூட ஏற்படுத்தும்.

அறிக்கை அளித்துள்ள போர்க்குற்றங்களின் பட்டியல் வரிசை மிகப் பெரிய அளவிற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல்கள், "பயங்கரவாதத்திற்கு எதிரான" போரோடு எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுவதோடு, கடந்த மாதம் ஹெஸ்பொல்லாவால் கைப்பற்றப்பட்ட இரு இஸ்ரேலிய படையினரை மீட்பது பற்றியும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இத்தாக்குதல் லெபனானை சியானிய நாட்டிற்கு அடிபணிந்த, தனக்கு ஆதரவான ஒரு நாடாக குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்பதையும், லெபனானிலிருந்து தனக்கு எதிராக வரும் அனைத்து இஸ்ரேலிய எதிர்ப்புக்களும் நசுக்கப்படவேண்டும் என்ற பல ஆண்டுகளான இராணுவ, அரசியல் மூலோபாய திட்டமிடல் இஸ்ரேலுக்குள் நிகழ்த்தப்பட்டது என்பதையும் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லெபனிய மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டதும் இந்த குற்றம் சார்ந்த மூலோபாயத்தின் மத்திய, முக்கிய கூறுபாடு ஆகும்.

HRW இந்த முக்கியமான அரசியல் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை; ஏன் இத்தனை குடிமக்களை இஸ்ரேல் கொலை செய்கிறது என்பது பற்றி விளக்கவும் முற்படவில்லை. அறிக்கையின் பரிந்துரைகளில் அது இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் பொறுப்பற்ற முறையில் சாதாரண மக்களை தாக்குவதை நிறுத்தவ வேண்டும் என்றும் கூறியுள்ளது. புஷ் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் லெபனானில் அமெரிக்கா அளித்துள்ள ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தபடுகின்றன என்பது பற்றிய விசாரணை வேண்டும் என்றும் கூறுகிறது.

இத்தகைய முறையீடுகள் செவிட்டுக் காதில் ஊதிய சங்குபோல், முற்றிலும் பயனற்றுப் போய்விடும். பிரதம மந்திரி எகுட் ஒல்மெர்ட்டின் அரசாங்கம் சர்வதேச சட்டம் எவ்விதத்திலும் இஸ்ரேலுக்கு பொருந்துவதாக தான் கருதவில்லை என்று கூறிவிட்டார்; மூத்த மந்திரிசபை உறுப்பினர்களும் தெற்கு லெபனானில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நியாயமான இலக்குத்தான் என்று அறிக்கை விடுத்துள்ளனர். புஷ் நிர்வாகம் சர்வதேசச் சட்டத்தின் நெறிகள் மீது கொண்டுள்ள இகழ்வு நன்கு தெரிந்ததுதான்; அது பற்றி நிறையச் சான்றுகளும் உள்ளன; குவாண்டானமோ வளைகுடாவில் விசாரணையின்றி தடுப்புக் காவலில் இருந்து ஈராக்கியப் படையடுப்பு வரை இந்தப் பட்டியல் நீளும். தற்போதைய நெருக்கடியில் வாஷிங்டன் டெல் அவிவின் லெபனான் மீதான தீவிரத் தாக்குதலில் பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது; இதற்கு காரணம் அப்பொழுதுதான் "புதிய மத்திய கிழக்கு" என்று கொண்டலீசா ரைஸ் விவரித்துள்ள நிலைமை உருவாக்கப்பட முடியும்.

See Also:

போருக்கு எதிரான போராட்டத்தில் எந்தப்பாதையில் முன்னோக்கிச் செல்வது?

கானா படுகொலை: லெபனானில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர்

லெபனான் போர்நிறுத்தத்தை எதிர்க்க புஷ், பிளேயர் சந்தித்து இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்

ரைசின் மத்திய கிழக்குப் பயணம்: போரை துரிதப்படுத்துவதில் "இராஜதந்திரம்"

 

Top of page