World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chemical spill pollutes water supply in north-eastern China

வட-கிழக்கு சீனாவில் தண்ணீர் அளிப்பை மாசுபடுத்திய இரசாயனக் கசிவு

By John Chan
1 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

வடகிழக்கு சீன நகரமான ஹார்பனில் ஒரு இரசாயன தொழிற் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தானது, தண்ணீர் அளிப்பை மாசுபடுத்தியுள்ளதோடு, ரஷ்யாவின் தூரகிழக்கிலுள்ள மாநகர மற்றும் நகரங்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசிற்கு சொந்தமான சீன தேசிய பெட்ரோலிய கழகம் (CNPC) நடத்தி வருகின்ற ஜிலான் பெட்ரோலிய இரசாயனக் கழகத்தில் உள்ள ஒரு பெரிய தொழிற்கூடத்தில் நவம்பர் 13 அன்று இந்த வெடிவிபத்து நடந்தது. அது நாட்டின் மிகப்பெரிய பென்சீனை தயாரிக்கும் சொங்குவா ஆற்றுக்கு அருகில் ஜிலான் மாகாணத்திலுள்ள ஜிலான் நகரத்தில் இந்த வளாகம் அமைந்திருக்கிறது. இரசாயனத்தை சேமித்து வைக்கும் ஒரு கோபுரம் வெடித்துச் சிதறி தீ பிடித்தது. அதில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் விஷப்புகை அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவி 10,000 ற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு இலக்கானார்கள். அதைவிட படுமோசமான சம்பவங்கள் பின்னர் நடந்தன.

100 தொன் அளவுக்கு பென்சீன் சோங்குவா ஆற்றில் கொட்டப்பட்டது. அது நிரோட்டத் திசையில் நகர ஆரம்பித்தது. விஷத்தை தூண்டுதல் செய்யும் பொருளான பென்சீன் பரவலாக பிளாஸ்டிக்குகள், சலவைப் பொருட்கள் மற்றும் இதர இரசாயனப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு ஏற்றபடி வாய்ப்புண்களிலிருந்து ரத்தக் கோளாறுகள் வரை, ஈரல் பாதிப்பு மற்றும் வெண்குஷ்டம் ஆகிய நோய்கள் ஏற்படும். ஒரு 80 கிலோ மீட்டர் அளவிற்கான விஷக்கசிவு ஹார்பனை நோக்கி நகர்ந்துள்ளது. ஹீலாங்ஜியாங் மாகாணத்திலுள்ள அந்த பெரிய தொழிற்துறை நகரத்தில் ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்கள் தாங்கள் தண்ணீர் தேவைக்காக ஆற்றைத்தான் நம்பியிருக்கின்றனர்.

தொடக்கத்தில் சீன அரசாங்கம் இந்தப் பேரழிவின் வீச்சை மூடி மறைக்க முயன்றது. நான்கு நாட்களுக்கு, நவம்பர் 22 அன்று நகரத்தில் தண்ணீர் வழங்குவதை ஹீலாங்ஜியாங் மற்றும் ஹார்பன் அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். ஆனால், குடியிருப்பாளர்களுக்கு தந்த தகவலில் பராமரிப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் அதிகாரிகள் ரகசியமாக அருகாமையிலுள்ள திரவ கொள்களத்திலிருந்து சோங்குவா ஆற்றிற்கு திருப்பிவிட்டு மாசுபட்ட தண்ணீரை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டனர்.

என்றாலும் ஹார்பனில் விரைவாக பரவிய வதந்திகள் என்னவென்றால் ஒரு பூகம்பம் அல்லது வேறு ஏதோ ஒரு பேரழிவு உடனடியாக நிகழக்கூடியதை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. பீதியினால் உந்தப்பட்ட மக்கள் கிடைக்கின்ற உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்கினர். ஒரு நில நடுக்கம் ஏற்படலாம் என்ற கவலை காரணமாக உறையும் பனியில் பலர் வீட்டிற்கு வெளியில் தூங்க ஆரம்பித்தனர். அந்த நகரத்திலிருந்து தப்பி ஓடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஹார்பன் ரயில் நிலையத்தில் குவிந்தனர். மற்றும் அந்த நகரத்திலிருந்து புறப்படும் எல்லா விமானங்களிலும் பயணச்சீட்டை பதிவுசெய்தனர்.

இந்த குழப்பமான காட்சி சீனாவின் புத்தாண்டு விடுமுறை காலத்தில் கிராமப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கிராமங்களுக்கும் சிறிய நகரங்களுக்கும் திரும்பிச் செல்கின்ற காட்சியைப் போல் அமைந்திருந்தது. ஒரு 50 வயது முதியவரான பாங் சிஜூன் பினான்சியல் டைம்சிற்கு அந்த ரயில் நிலையத்தில் பேட்டியளித்த போது, அவரும் அவரது மனைவியும் அருகாமையிலுள்ள ஜிக்சி நகருக்கு செல்வதாக தெரிவித்தனர். ''நான் தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன், உண்மையான தகவலை அரசாங்கம் தரும் என்று நான் நம்பவில்லை'' என்று கூறினார்.

இந்த பீதியை எதிர்கொண்ட அதிகாரிகளும், CNPC-யும் ஜிலானில் ஏற்பட்ட வெடிவிபத்து நகரத்தின் தண்ணீர் அளிப்பை பாதிக்கும் என்று ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. ஆனால், அந்த இரசாயனம் ஆற்றுக்குள் விடப்பட்டதால் அவை எந்தவித ''தீங்கும்'' விளைவிக்காதவை என்றும், மற்றும் தண்ணீரின் தரம் ''வழக்கமாக'' உள்ளது என்றும் தவறான தகவலைத் அவர்கள் தந்தனர்.

பாதுகாப்பு வரையறைக்கு மேல் குறைந்த பட்சம் 100 மடங்குகள் அதிகமாக சோங்குவா ஆற்று நீரில் பென்சீன் கலந்திருக்கிறது என்று அரசு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (SEPA) நவம்பர் 23ல் இறுதியாக உறுதிப்படுத்தியது. நவம்பர் 24ல் இறுதியாக அந்த இரசாயன கசிவு ஹார்பன் தண்ணீர் வழங்கும் பிரதான பகுதிக்குள் சென்ற போது எச்சரிக்கை செய்வதில் ஏற்பட்ட தாமதமானது, ஜிலான் மற்றும் ஹார்பனுக்கு இடையில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூறாயிரக்கணக்கான மக்கள் அந்த மாசுபட்ட தண்ணீரை குடித்திருப்பர் அல்லது பயன்படுத்தியிருப்பர்.

ஹார்பனில் SEPA செய்த மதிப்பீடுகளின் படி, நவம்பர் 28 வாக்கில் தண்ணீரில் கலந்திருக்கும் பென்சீன் அளவு பாதுகாப்பானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், மாசுபட்ட தண்ணீர் அப்போதும் குழாய்களில் இருக்கக் கூடும் என்பதால் பல நாட்கள் கழித்த பின்னர் தான் உள்ளூரில் வழங்கப்படும் தண்ணீரை பாதுகாப்பாக அருந்த முடியும் என்று எச்சரித்தது. அதிகாரிகள் தாமதமாக பென்சீன் விஷ அறிகுறிகள் பற்றி குடியிருப்பு மக்களிடம் எச்சரிக்கை செய்தனர். ஹார்பனில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் மருத்துவ மனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

குடியிருப்பாளர்களுக்கு தூய்மையான தண்ணீர் வழங்குவதற்காக அரசாங்கம் 100 புதிய கிணறுகளை தோண்டியது. மற்றும் மூடப்பட்ட 400 கிணறுகளை திரும்பவும் திறந்தது. அத்துடன் நகருக்குள் தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரை வண்டிகளில் அனுப்பியது. என்றாலும், போத்தல் தண்ணீர் இலவசமாக வழங்கப்படவில்லை. கழிவுப்பொருட்கள் சேகரிப்பாளர் ஜீ யான்லியாங் நவம்பர் 25 அன்று பிரிட்டன் கார்டியன் பத்திரிகையிடம் கோபமாக குறிப்பிட்டார்: ''பணக்காரர்களுக்கும் கம்யூனிச காரியாளர்களுக்கும் இது சரி. ஆனால் மிகப் பெரும்பாலான ஏழை மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக வீணாக பணத்தை செலவிடுவதற்கு வசதி பெற்றிராதவர்கள்''. நகரத்தின் தொழிலாள வர்க்க மாவட்டங்களில் தெருக்களை சுத்தம் செய்யும் டிரக்குகள் தண்ணீரின் முதன்மை ஆதாரத்திற்கு ஏற்றவகையில் உருவாக்கி குடி தண்ணீரை கொண்டு செல்வதற்காக மாற்றப்பட்டுள்ளது. தங்களது குடுவைகளிலும், கலன்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்ள மக்கள் மணிக்கணக்கில் உறை பனியில் காத்திருக் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசியல் சேதக் கட்டுப்பாடு

ஜிலான் வெடிவிபத்து ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் அவற்றின் அமைப்புக்கள் தண்ணீரில் பென்சீன் கலந்திருக்கும் அளவை கண்காணிக்கத் தொடங்கிவிட்டன என்று சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அரசு நடத்தும் பத்திரிகையான சீன நீயூஸ் வீக் தந்துள்ள தகவலின்படி, ஷிலோஜியாங் மாகாண கவர்னர் ஜாங் சூவாஜி அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் பொது மக்களுக்கு தண்ணீரில் கலந்திருக்கும் விஷத்தன்மை குறித்து பொய் சொல்வதென்று முடிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். ஏனெனில் அந்தக் கசிவு குறித்து தகவல் தருவதற்கு மத்திய தலைமையின் அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் செய்தியாக பரவலாக வெளியிடப்பட்ட பின்னரும் மத்திய அதிகாரத்தின் செய்தியை மட்டுமே பத்திரிகைகள் வெளியிடவேண்டும் என்று இதர மாகாணங்களிலிருந்து ஹார்பனில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சீன பத்திரிகையாளர்களுக்காக நவம்பர் 25 ல் ஒரு புதிய கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

தண்ணீர் மாசுபட்டது பற்றிய தகவல் வெளியிடப்படுவதற்கு தயக்கம் காட்டப்பட்டதற்கு ஒரு காரணம், அரசாங்கத்தின் செயல்படாதன்மை அந்த ஆட்சி தொடர்பாக வட கிழக்கு பகுதிகளில் ஏற்கனவே நிலவுகின்ற பரவலான அதிருப்திக்கு தூபம் போட்டு விடும் என்பதால்தான் ஆகும்.

சீன அரசு நடத்துகின்ற கனரக தொழிற்துறைக்கு மைய அடித்தளமாக இந்த பிராந்தியம் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த தசாப்தத்திற்கு மேலாக ஏராளமான திவாலான அல்லது கட்டுப்படியாகாத நிறுவனங்களை மூடி, அல்லது ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து அரசு நிறுத்தி வைத்துள்ளது. CNPC எடுத்துக்காட்டாக 1990-களில் 150,000 வேலையாட்களை அகற்றியதோடு, ----அவற்றில் பலர் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்---- அதனை இலாபகரமாக நடத்துவதற்கு மறுசீரமைப்பு செய்தது. இந்த நடவடிக்கையானது, பரந்த வேலையில்லாதோருக்கு அதிருப்தியை உண்டுபண்ணியது. அண்மை ஆண்டுகளில் சீனாவில் நடைபெற்றுள்ள சில மிகுந்த போர்க்குணமிக்க கண்டன எதிர்ப்புக்கள் CNPC நடத்திய டாக்கிங்கின் எண்ணெய் வயல்களில் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போது நடைபெற்றது.

வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் கிளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும் சீன அரசாங்கம் ''வடகிழக்கை புத்துயிர் ஊட்டுவது'' என்றழைக்கப்படும் ஒரு கொள்கையை செயல்படுத்தி வருகிறது. திவாலாகிவிட்ட அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகளை வாங்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அது ஊக்கம் அளித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் மது வகைகளை தயாரிக்கும் நிறுவனமான ஆன்ஹிஸ்சர்-புஷ்க் (Anheuser-Busch) சென்ற ஆண்டு ஹார்பன் மதுபானம் காய்ச்சும் இடத்தை கையகப்படுத்தியது. இந்த நிறுவனம், இந்தப் பிராந்தியத்தில் தண்ணீரை பயன்படுத்தும் ஒரு பிரதான தொழிற்சாலையாகும் மற்றும் இரசாயன கசிவினால் இந்த தொழிற்சாலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதர முதலீட்டாளர்களுக்கு தூய்மை கெட்ட தண்ணீர் சப்ளை தொடர்பாக பீதி உணர்வு ஏற்பட்டு விடும் என்பதால், அரசாங்கம் எச்சரிக்கை விட்டதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பயம் எழுவது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. 2003-ம் ஆண்டில் (கடுமையான மூச்சுத் திணறல் நோயான) SARS கிளம்பியதை தொடர்ந்து அதன் வீச்சு பற்றி தகவல் தருவதில் நடைபெற்ற மோசடிக்கு இது போன்ற கவலைகள் தான் காரணமாகும்.

இறுதியாக சீன அரசாங்கம் தண்ணீர் நெருக்கடி தொடர்பாக உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு காரணம் ரஷ்யாவிற்கு அது எச்சரிக்கை விடுத்தாக வேண்டும் என்பதினாலாகும். சீன-ரஷ்ய எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சோங்குவா ஆறு சைபீரியாவிற்கு தண்ணீர் சப்ளை செய்கின்ற பிரதான ஆதாரமான அமூர் ஆற்றுக்குள் சென்று சேர்கிறது. தூய்மை கெட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு அவசர நிலை பிரகடணத்தை வெளியிடுவதற்கான திட்டங்களை ரஷ்யாவின் தூரகிழக்கு கபரோஸ்கி பிராந்தியம் அறிவித்துள்ளது. இந்தக் கழிவு அந்தப் பகுதிக்கு டிசம்பர் 8 வாக்கில் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிகாரிகள் தண்ணீரை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை சோதனை செய்து வருகின்றனர். மற்றும் அந்தப் பகுதிக்கு 60 டிரக்குகளில் பாட்டில்களில் நிரப்பபட்ட தண்ணீரை அனுப்பியுள்ளனர்.

ஆற்றுத் தண்ணீரில் பனிக்கட்டிகள் மிதந்து செல்வதால் பென்சீனை ஆற்று நிரிலிருந்து வெளியே தள்ளுவதற்கு இந்த குளிர்காலம் முடியும் வரை தாமதமாகலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்றாலும், பெய்ஜிங் மற்றும் மொஸ்கோ இரண்டுமே அந்த அச்சுறுத்தலை குறைத்தே மதிப்பிட்டு வருகின்றனர். சீன அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஒரு நிருபர்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சீனாவிற்கான ரஷ்ய தூதர் சேர்ஜி ராசெளவ் இந்த கசிவு எல்லையை கடக்கின்ற நேரத்தில் ''தீங்கு பயக்கின்ற கருப்பொருட்களின் செறிவு குறைந்து சகஜ நிலைக்கு வந்து விடும்'' என்று குறிப்பிட்டார்.

இந்தப் பேரழிவு தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்திரத்தை மட்டுப்படுத்தும் வகையில் சீன அரசாங்கம் ஒரு ஒருங்கிணைந்த பிரசாரத்தை துவக்கியுள்ளது. பிரதமர் வெண்ஜியாபோ இந்த வாரக் கடைசியில் ஹர்பனுக்கு விஜயம் செய்தார். அவர் ரஷ்யாவிற்கு இந்தக் கசிவு தொடர்பாக முறையான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டார் மற்றும் அதற்கு காரணமான அதிகாரிகளை தண்டிப்பதாக உறுதியளித்தார். அந்த வெடிவிபத்து நடைபெற்ற ஜிலான் மாகாணத்தின் துணை கவர்னரும் ஹார்பனுக்கு விஜயம் செய்து, அந்நகர மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மற்றும் 71 டன்கள் தூய்மையான தண்ணீரை தானமாக வழங்கினார்.

ஹைலான்ஜிங் மாகாண கவர்னரான ஜாங் சவ்ஸி ''அந்தத் தண்ணீர் வரும் போது முதலாவதாக தான் குடிக்கப் போவதாக'' அறிவித்தார். CNPC நிர்வாகம் தான் ''குற்றம் செய்திருப்பதாக'' ஒப்புக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆனால், இரசாயனத்தை தவறான முறையில் தொழிலாளர்கள் கையாண்டதால்தான், அந்த வெடி விபத்து ஏற்பட்டது என்று அவர் பழி போட்டார்.

பினான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ள ஒரு இரசாயன தொழிற்துறை நிபுணர் குறிப்பிட்டது என்னவென்றால், உயர்ந்த வெப்பத்தில் நைட்ரிக் அமிலத்தையும் பென்சீனையும் கலக்கும் போது ஒரு அடைப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதாகும். பாதுகாப்பு வால்வு வெப்பத்தை உமிழ்வதற்கு தவறிவிட்டதானது, ஒரு ''நிர்வாகத் தவற்றின்'' முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றும் சாதனத்தில் எந்தக் குறையும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அது போன்ற ஒரு ''தவறுக்கான'' மூலங்கள் தனிமனிதர்களது தவறுகள் அல்ல, மாறாக சந்தையின் தேவையினால்தான் நடைபெறுகின்றன. ஹார்பன் நெருக்கடியை உருவாக்கிய சூழ்நிலைக்கு சீன அரசாங்கம் தான் ஒட்டு மொத்த பொறுப்பாகும். அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சந்தை-சார்பு கொள்கைகளை செயல்படுத்தினர். தொழிற்துறை உற்பத்தி நெறிமுறைகளை தளர்த்தினர். மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை கொடூரமாக சுரண்டுவதை செயல்படுத்தினர். இதன் விளைவு குழப்பமான தொழிற்துறை வளர்ச்சியாகும். தற்காப்பு தரங்கள் பற்றியோ சுற்றுப்புற சூழல் மாசுபடுவது பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சீன சுரங்கத் தொழிலாளர்களை கொல்வதற்கு காரணமாக அமைந்த நிலக்கரி உற்பத்திக்கான படுவேக முயற்சியை போன்று, ஜிலான் வெடி விபத்து பாதுகாப்பு உட்பட வேறு எந்த கண்ணோட்டத்தையும் விட உற்பத்தி பெருக வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கை தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. நவம்பர் 27 ல் ஹார்பனில் ஏற்பட்ட கசிவு நகருக்குள் வருகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்தில், அதே மாகாணத்தில் குட்டைஹி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு பாரியளவு வெடிவிபத்தினால் குறைந்த பட்சம் 164 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 10 பேரை இன்னும் காணவில்லை.

டியான் ஜியாங் கவுண்டி தென்மேற்கு ஜோகிங் நகர சபை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு இரசாயன தொழிற்கூடத்தில் நவம்பர் 24ல் ஏற்பட்ட வெடிவிபத்தினால் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். மற்றும் மூன்று பேர்கள் காயமடைந்தனர். ஆறாயிரம் மக்கள் அந்தப் பகுதியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மற்றும் அருகாமையிலுள்ள நீர் வளங்கள் தூய்மை கெட்டன.

BP, மிட்சுபிஷி இரசாயன மற்றும் எக்ஸான் மொபைல் (Mitsubishi Chemical and Exxon Mobil) போன்ற சீன மற்றும் பன்னாட்டு பெட்ரோலிய இரசாயன தொழிற்கூடங்கள் சீனாவில் தங்கள் உற்பத்தியை பெருக்கிக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரித்து வருவதால், அதற்கான தொழிற்துறை தேவைகள் பெருகி வருகின்றன. அதற்கொரு அடையாளம் சீனத் தொழிலுக்கு 16.5 மில்லியன் தொன்கள் எத்திலின் (ethylene) தேவைப்படுகிறது. இது பிளாஸ்டிக் தயாரிப்பில் ஒரு அடிப்படை மூலப் பொருள் ஆகும். ஆனால், உள்நாட்டு உற்பத்தி சென்ற ஆண்டு 6.2 மில்லியன் தொன்களைத் தான் தொட்டது. இதன் ஒரு விளைவாக எத்திலின் மற்றும் இதர இரசாயனப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஜேர்மனியின் மிகப் பிரமாண்டமான BASF, ஜியாங்சூ மாகாணத்தில் இரண்டாவது பெரிய அரசாங்க பெட்ரோலிய இரசாயன நிறுவனமான சினோபெக்குடன் (Sinopec) கூட்டு சேர்ந்து 2.9 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு தொழிற்சாலையை கட்டியுள்ளது. அது பிளாஸ்டிக் தயாரிப்பில் ஒரு அடிப்படை மூலப் பொருளான எத்திலீனை 600,000 தொன்களும் மற்றும் இதர இரசாயனப் பொருட்களை 1.1 மில்லியன் தொன்களும் ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கும். 2010 வாக்கில் சீனாவில் தனது விற்பனையும், லாபங்களும் 10 சதவீதத்திற்கு பெருகும் என்று BASF மதிப்பிட்டுள்ளது.

சீனாவிலுள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் நீர், மண் மற்றும் காற்றில் மாசுபடுத்தும் பொருட்களை கலந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. உலக வங்கி தந்துள்ள தகவலின்படி, உலகிலேயே அதிக அளவிற்கு தூய்மை கெட்ட 10 நகரங்களில் 6 சீனாவில் உள்ளது. மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது, உயிர் இழப்பு அல்லது நோய் நொடிகள் மூலம் நாட்டிற்கு ஏற்படும் இழப்பு ஓராண்டிற்கு 54 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டிற்குள் நேரடியாக வருகின்ற வெளிநாட்டு முதலீடுகளில் ஏறத்தாழ பாதி அளவாகும்.

சீன பிரதேசத்தில் மூன்றில் ஒரு பகுதியில் அமில மழை பொழிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட ஏரிகள் மற்றும் ஆறுகள் மாசுபட்டிருக்கின்றன. மற்றும் 20 சதவீதத்திற்கும் குறைவான கழிவுப் பொருட்கள்தான் தூய்மைப்படுத்தப்படுகின்றன. கிராமப்புற சீனா பற்றி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நவம்பர் 14ல் வெளியிட்ட அறிக்கை, ''பல நீர் நிலைகளில், தண்ணீர் சப்ளை தடங்களில் அளவிற்கு அதிகமான இரசாயனப் பொருள்கள் கலந்திருக்கின்றன. மற்றும் அவற்றை புதிய தண்ணீர் வளமாக பயன்படுத்துவதற்கு முன்னர் அந்தத் தண்ணீரை தூய்மைப்படுத்தியாக வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் வர்த்தக-சார்பு நெறிமுறைகளின் கீழ், தண்ணீரை மாசுபடுத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் பொருளாதார இழப்புக்களில், அவர்கள் 20 முதல் 30 சதவீதம்தான் இழப்பீடாக வழங்குகின்றனர். இதில் அதிகபட்ச இழப்பீடு 200,000 யென்களாக (சுமார் 25,000 டாலர்களாக) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஹார்பனில் நடந்த கடுமையான சம்பவத்தில் கூட குற்றம் செய்த நிறுவனம் ஒரு மில்லியன் யென்களை (125,000 டாலர்களை) வழங்கினால் போதும். இது மில்லியன் கணக்கான மக்களுக்கு உடல்நிலை மற்றும் அவர்களது வாழ்விற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவோடு ஒப்பிடும் போது மிகவும் அற்பமான இழப்பீடாகும்.

Top of page