World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: victims of Gujarat pogrom found in mass grave

இந்தியா: குஜராத் இனப்படுகொலையில் பலியானவர்கள் பாரிய புதைகுழியில் கண்டு பிடிப்பு

By Jake Skeers
24 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

2002ல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் காணாமல் போய்விட்டவர்களில் சிலரது உடல்கள் சென்ற மாதக் கடைசியில் பண்தர்வதா கிராமத்தில் பாரிய புதைகுழியிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு அடையாளமில்லாத குழியில் சுமார் 20 உடல்கள் குவியலாக புதைக்கப்பட்டிருந்ததை பலியானவர்களின் உறவினர்கள் தோண்டி எடுத்தனர்.

வகுப்புவாத வன்முறை நடைபெற்று ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கிராம மக்கள் இன்னும் என்ன நடந்தது என்பதை அம்பலப்படுத்த முயன்று வருகின்றனர். அங்கு நடைபெற்ற எந்தக் கொலைகளுக்கும் எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படவில்லை. போலீசார் சாட்சியை மறைத்து வருவதாகவும் மற்றும் குற்றங்களை செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இறந்தவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெப்ரவரி கடைசியில் கோத்ராவில் ஒரு இரயில் தீ விபத்தில் 58 இந்து தீவிரவாதிகள் மடிந்ததை தொடர்ந்து 2002 மார்ச்சில் அந்த மாநிலம் முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட வகுப்புவாத வன்முறையின் ஓர் அங்கமாக பண்டர்வாடா கலவரம் நடைபெற்றது. பாரதீய ஜனதாக் கட்சி (BJP) மாநில அரசாங்கத்தினால் தூண்டி விடப்பட்டு இந்து வெறியர்களின் குழுக்கள் அப்பாவி முஸ்லீம்களை தாக்கினார்கள். வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோதும் அவற்றில் இருந்தவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது உள்ளூர் போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் கலவரங்களில் குறைந்த பட்சம் 2000 மக்கள் இறந்தனர்.

பண்தர்வாடா நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை இந்து தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அந்தப் பகுதியில் பல்வேறு கூட்டங்களை நடத்தியது. அருகாமையிலுள்ள பல கிராமங்களை சேர்ந்த கும்பல்கள் திரண்டு வந்து பண்டர்வாடாவல் உள்ளவர்ளுடன் சேர்ந்து அந்த நகரில் வாழ்ந்த 70 முஸ்லீம்களை ஒருங்கிணைந்தமுறையில் தாக்குதலில் ஈடுபட்டு மற்றும் அவர்களது வர்த்தகங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்தனர். அந்த வன்முறையில் குறைந்தபட்சம் 34 பேர் கொல்லப்பட்டனர்.

கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஊடகங்களுக்கு உறவினர்கள் தகவல்களை தந்த பின்னர் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளும் போலீசாரும் வழக்கத்திற்கு மாறான விளக்கத்தை தந்தனர். அந்த பாரிய புதைகுழி மூடிமறைக்கப்பட்ட ஒரு விவகாரமல்ல, மாறாக முறையாக அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட்ட ஒரு சட்டபூர்வமான கல்லறையடக்கம்தான் என்று விளக்கினர். அதற்குப் பின்னர் அந்த கல்லறையை கண்டுபிடித்தவர்களை மிரட்டுகின்ற ஒரு முயற்சியாக போலீசார் உறவினர்கள் மீதும் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒரு தொண்டர் மீதும் சட்டவிரோதமாக ஒரு கல்லறையை தோண்டியதாக குற்றம்சாட்டினர்.

இந்த கூற்றுக்கள் அபத்தமானவை. அவர்களுக்கு அந்த கல்லறை பற்றி தகவல் தெரிந்திருக்குமானால், பலியானவர்களின் சொந்தக்காரர்களுக்கு அதைப் பற்றி போலீசார் தெரிவிக்கவில்லை. ஒரு உள்ளுர் கிராமவாசியான குலாம் கராதி இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியது என்னவென்றால் ஒரு காடுகள் நிறைந்த பகுதியில் அடையாளம் எதுவுமில்லாத குழியில் சடலங்கள் குவிக்கப்பட்டிருப்பது பற்றி தமக்கு சந்தேகமிருப்பதாக தெரிவித்தார். ''சடங்குகள் பின்பற்றப்பட்டிருந்தால் ஒரே குழியில் 20 சடலங்களை குவித்திருக்க முடியாது. கல்லறைகள் எங்கே? என கேட்டிருந்தார்.

ஒரு உள்ளூர் நகரசபை ஊழியர் குடித்திருந்த நேரத்தில் புதைக்கப்பட்டவர்களின் சொந்தக்காரர்களுக்கு புதைகுழி தொடர்பான தகவல்களை உளறிக் கொட்டியதால் அந்த கல்றையை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மகனான அமீனா ரசூல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்கு மத்திய புலனாய்வு துறையை (CBI) வரழைக்கவும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே மரபணு (DNA) சோதனையை நடத்துவதற்கும் கட்டளையிட வேண்டும் என்று மனுசெய்துள்ளார்.

''இறந்தவர்களின் எந்த முறையான பிரேத பரிசோதனையும் போலீசாரால் நடத்தப்படவில்லை'' என்று அந்த மனு குறிப்பிட்டது. வெள்ளை அங்கிகளுக்கு பதிலாக பலியானோர்கள் அவர்களது சொந்த உடுப்புக்களிலேயே புதைக்கப்பட்டிருக்கின்றனர். ''வழக்கமாக பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்கள் வெள்ளை உடுப்புக்களால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே பலியானோர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அணிந்திருந்த ஆடைகள் அப்படியே இருந்தன'' அது குறிப்பிடுகிறது.

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) கலவரங்களில் கொல்லப்பட்ட மக்களது எண்ணிக்கை பற்றிய தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது என்றும் மனு சுட்டிக்காட்டியது. ''உள்ளூர் போலீசார் முதலில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் சாவு எண்ணிக்கை 8 என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் உண்மையிலேயே மடிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்த பட்சம் 26 ஆக இருக்கும்'' அது குறிப்பிடுகிறது. ''போலீசார் [கலவரங்களின் போது] அப்பாவி குடிமக்களை காப்பாற்ற தவறிவிட்டது மட்டுமல்லாமல், அந்த குற்றம் பற்றி சாட்சியம் இல்லாததால் நேர்மையாக விசாரிக்கவில்லை மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை சாட்சியம் இல்லாததால் விடுதலை செய்து விட்டனர்.'' என மேலும் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்திலுள்ள பா.ஜ.கட்சி அரசாங்கம் அந்த மனுவை எதிர்த்து மற்றும் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களையும் புலன் விசாரணைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது. CBI யை இதில் சம்ந்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்வது மாநில போலீஸ் இடையே ஒரு ''உற்சாகக் குறைவு தாக்கத்தை'' ஏற்படுத்தும் என்று ஒரு அரசாங்க வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். அதே போன்று மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த புலன் விசாரணையில் எந்த பாத்திரமும் இல்லை என்று மாநில அரசாங்கம் கூறியது.

ஜனவரி 13ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் CBI ஐதராபாத்திலுள்ள மரபணு கைரேகைப் பதிவு மற்றும் புறஅடையாள (Diagnosis) ஆய்வுக்கூடத்தில் DNA மாதிரிகளை எடுத்து சோதனையிட வேண்டும் என்று கட்டளையிட்டது. என்றாலும் இந்த சிறிய சட்ட சலுகை அந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை உறுதிப்படுத்தாது. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தபோதிலும் அவர்களுடைய உயிர் பயத்தால் 2002ல் பண்தர்வாடா விட்டு தப்பி ஓடியவர்கள் இன்னும் கிராமத்திற்கு திரும்பி வரவில்லை. ஒரு துரித விசாரணையின் பின்னர் நீதிமன்றம் 2002 நவம்பரில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து விட்டது.

சாட்சியங்கள் போலீசார் மீது குற்றம் சாட்டின. ''அந்த வழக்கு தோல்வியுற்றதற்கு காரணம் போலீசார் எங்களது அறிக்கைகளை முறையாக பதிவு செய்யவில்லை. நாங்கள் 56 பெயரை குறிப்பிட்டோம் அவர்களில் எட்டு பேரை மட்டுமே நீதிமன்றத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர்'' என்று அவர்கள் Frontline சஞ்சிகைக்கு தெரிவித்தனர். ''உண்மையான குற்றவாளிகளை அவர்கள் கொண்டு வரவில்லை ஆனால் ஒரு கையுள்ள மனிதன் உட்பட போலியான நபர்களை குற்றவாளிகள் என்று போலீசார் அழைத்து வந்தனர். எனவே எவரும் அவர்களை அடையாளம் காட்டவில்லை என்பது தெளிவு. மேலும் 56 சாட்சிகளில் ஆறு பேர் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். மற்றும் அந்த நகரத்தில் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் சாட்சிகளில் பலர் உண்மையைக் கூறுவதற்கு பயந்தனர். அவர்கல் பலர் எங்களை அப்போதும் கூட அச்சுறுத்த முடியும் என்பதால் நாங்கள் எங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல இயலாத நிலையில் இருந்தோம். CBI புலன் விசாரணைகளை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும்.'' என கூறினர்.

பண்தர்வாடா அனுபவங்கள் குஜராத்தின் பிற இடங்களில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு நிகழ்ந்தது போன்ற அதே அனுபவங்களை கொண்டதாகும். 2002 மார்ச் மற்றும் ஏப்ரலில் 151 நகரங்களும் மற்றும் 993 கிராமங்களும் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டன. 900 இற்கு குறைவானவர்களே இந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டதாக மாநில அரசு கூறினாலும் 2000 இற்கு மேற்பட்டோர் பலியானதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தக் கலவரங்களில் சம்மந்தப்பட்டவர்களை வழக்குதொடராமல் தவிர்த்து பாதுகாக்கும் அதே நேரத்தில் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தவர்கள் மீது தவறான முறையில் வழக்கு தொடுப்பதில் போலீசாரும் அரசாங்க அதிகாரிகளும் ஈடுபட்டதாக பரவலாக கருதப்படுகிறது. நீதிமன்றங்கள் வன்முறைகள் தொடர்பாக வெகுசிலரைத் தான் தண்டித்திருக்கின்றன மற்றும் முன்னணி அரசியல் அல்லது போலீஸ் அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை: ''சோர்வடையச் செய்கின்ற சச்சரவு: சாட்சிகளுக்கு அச்சுறுத்தலும் தொந்தரவும், மனித உரிமைகள் செயலூக்கர்களும் வக்கீல்களும் 2002 குஜராத் வகுப்புவாத வன்முறைக்கு யார் பொறுப்பு என்பதை விசாரித்து வருகின்றனர்''' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ''மாநில அதிகாரிகளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாது, கலவரங்களை தூண்டிவிட்டவர்களும் வன்முறையில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், சாட்சியங்கள் மற்றும் செயலூக்கர்களை நீதியை கேட்பதிலிருந்து சோர்வடைய செய்வதற்கு அவர்களை அச்சுறுத்தி தண்டனையிலிருந்து தப்புவதற்கான ஒரு சூழ்நிலையை பா.ஜ. கட்சி மாநில அரசாங்கம் உருவாக்கியுள்ளது.'' என குறிப்பிட்டது.

அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ள வழக்குகளில் போலீசார் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய மறுத்திருக்கின்றனர் அல்லது இந்து மேலாதிக்கவாத அரசியல்வாதிகள் மற்றும் 2002 படுகொலைகளில் சம்மந்தப்பட்ட செயலூக்கர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு முக்கியமான சாட்சியத்தை விட்டு விட்டனர். மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் வக்கீல்கள் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற இந்து தீவிரவாத குழுக்களின் அச்சுறுத்தல்களையும் மற்றும் மிரட்டல்களையும் எதிர்கொண்டனர்.

அந்த கலவரங்கள் தொடர்பாகவும் மற்றும் அதற்கு முந்திய கோத்ரா ரயில் தீ விபத்து தொடர்பாகவும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்த இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நடைபெற்ற விசாரணை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அறிக்கை தாக்கல் செய்யாமல் தள்ளிவைத்துக்கொண்டே வருகிறது. நானாவதி - ஷார் ஆணைக்குழு தொடக்கத்தில் 2002 ஜூனில் ஒரு அறிக்கையை தருவதற்கு கேட்டுக் கொள்ளப்பட்டது ஆனால் நான்கு முறைகள் புதிய காலக்கெடு தள்ளி வைக்கப்பட்டு தற்போது 2006 ஜீனில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

2004 ஏப்ரலுக்கும் 2005 அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் நானாவதி-ஷார் ஆணைக்குழு முன் அளிக்கப்பட்ட வாய்மூல வாக்குமூலங்களும் மற்றும் பல சத்தியபிரமாண வாக்குமூலங்களும் அந்த வன்முறையை மோடியும் அவரது பா.ஜ.கட்சி மாநில அரசாங்கமும் தூண்டிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளன. மாநில புலனாய்வு துறையின் (SIB) ஒரு மூத்த அதிகாரியான R. ஸ்ரீகுமார் அந்தக் கலவரத்தின் போது மோடியும் மற்றும் மூத்த அதிகாரிகளும் கோத்ரா தீ விபத்திற்கு பின் சந்தித்து பாக்கிஸ்தான் புலனாய்வு துறையின் ஒத்துழைப்போடு முஸ்லீம் பயங்கரவாதிகள்தான் தீ விபத்திற்கு காரணம் என்ற ஒரு சதி ஆலோசனை தத்துவத்தை ''உற்பத்தி செய்தார்கள்'' என ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்தார். ஸ்ரீகுமார் தந்துள்ள சாட்சியத்தின்படி இந்த தத்துவம் கலவரங்களை தூண்டி விடுவதற்கு சுரண்டிக்கொள்ளப்பட்டதுடன் மற்றும் அதற்கு பின்னர் 2002ல் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வகுப்புவாத விஷத்தை ஊட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது ''எந்த போதுமான சான்றும் இல்லாது உருவாக்கப்பட்டது.''

அந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவரங்கள் குறித்து போலீஸ் டைரக்டர் ஜெனரல் K. சக்கரவர்த்தி தம்மிடம் தெரிவித்ததாக ஸ்ரீகுமார் குற்றச்சாட்டையும் கூறினார். மோடி போலீசாரை '' இந்துக்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். இது தவிர போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக போலீஸ் தலைமை அலுவலகங்களில் மூத்த மாநில அமைச்சர்கள் அமர்த்தப்பட்டனர் என்றும் ஸ்ரீகுமார் சாட்சியம் தந்தார். அவர்கள் வகுப்புவாத கொலைகளும் கற்பழிப்பிலும் மற்றும் சூறையாடல்களிலும் சில நேரங்களில் பங்கெடுத்துக் கொண்டனர் மற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்று குறிப்பிட்டார்.

வகுப்புவாத இனப்படுகொலையிலும் மற்றும் அதற்குப் பின்னர் நடைபெற்ற மூடிமறைக்கும் நடவடிக்கைகளிலும் போலீசார், அரசியல்வாதிகள் மற்றும் மாநில அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அமைதியாக இருந்ததன் மூலமும் மற்றும் அவர்களின் கூட்டுசதியாலும் மோடியும் மற்றும் பா.ஜ. கட்சியும் குற்றங்களில் இருந்து தப்பிக்க முடிந்தது. இந்து மேலாதிக்கவாத பா.ஜ. கட்சிக்கு ஒரு மதச்சார்பற்ற மாற்றீடுக் கட்சி என்று காங்கிரஸ் கூறிக் கொண்டாலும் அக்கட்சி ஒரு நீண்ட வகுப்புவாத வரலாற்றை கொண்டதாகும். 2002 மாநில தேர்தலில் நரேந்திர மோடியின் வகுப்புவாத பிரசாரத்திற்கு காங்கிரஸ் அரசியல் இடம்கொடுத்த காரணத்தினால் இந்திய பத்திரிகைகள் அதற்கு ''மிதமான இந்து பேரினவாதம்'' என்று முத்திரை குத்தின.

Top of page