World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian PM threatened to resign to ensure success of Indo-US military exercise

இந்திய-அமெரிக்க இராணுவ பயிற்சி வெற்றிபெறுவதை உறுதிசெய்வதற்காக பதவி விலகுவதாக அச்சுறுத்திய இந்திய பிரதமர்

By Kranti Kumara and Keith Jones
1 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சிகள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு மேற்கு வங்காள இடது முன்னணி அரசாங்கத்திடமிருந்து ஒரு உறுதிமொழியை பெறுவதற்காக இந்திய பிரதமர் மன்மேகன் சிங் ஒரு தொடர் அசாதாரணமான அச்சுறுத்தலை மேற்கொண்டார் என்று அண்மை பத்திரிகை செய்திகள் வெளியிட்டன. அந்த அச்சுறுத்தல்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் தலைமையிலிருந்து இராஜினாமா செய்வது மற்றும் மத்திய அரசாங்கத்தின் அல்லது ''ஜனாதிபதி'' ஆட்சியின் கீழ் மேற்கு வங்காளத்தை கொண்டு வருவது உட்பட பல்வேறு அச்சுறுத்தல்கள் அடங்கியிருந்தன.

மேற்கு வங்காளத்தில் இந்திய மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஒரு கூட்டு பயிற்சியை ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் தொடக்கத்தில் மேற்கு வங்காள முதலமைச்சரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (Buddadeb Bhattacharjee) உடன் தொலைபேசி உரையாடலில் மன்மோகன் சிங் அந்த அச்சுறுத்தல்களை விடுத்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளுகின்ற இடது முன்னணிக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பொதுவான எதிர்ப்பு நிலவுவதால் அந்த பயிற்சிக்கான பாதுகாப்பு உத்திரவாதத்தை அவரால் வழங்க இயலாது என்று எச்சரித்து மத்திய அரசாங்க பயிற்சி நடத்தும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பட்டாச்சார்யா மத்திய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

பட்டாச்சார்யாக்கு மன்மோகன்சிங் சிறிதும் இடம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்கீழ் பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்களில் மத்திய அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார். அதற்கு பின்னர் மேற்கு வங்காள அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு பணியவில்லை என்றால் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அல்லது மாநில அரசாங்கத்தை நீக்கி விட்டு மத்திய அரசாங்க ஆட்சியை திணிக்க வேண்டும் என்று பட்டாச்சார்யாவிடம் குறிப்பிட்டார்.

இதில் எந்தவொரு நடவடிக்கையும் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். காங்கிரஸ் கட்சியினால் தலைமை தாங்கப்படும் UPA அரசாங்கம் ஒரு பன்முக கட்சி கூட்டணியாகும். அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக இடது முன்னணிக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாக்சிஸ்ட்) நாடாளுமன்ற ஆதரவில் தங்கியிருக்கிறது. மன்மோகன் சிங் இராஜினாமா செய்திருப்பாரானால் அந்த அரசாங்கம் தொடர்ந்து இருப்பதே கேள்விக்குறியாகியிருக்கும்.

அதே அளவுகோலைக் கொண்டு பார்க்கும்போது இந்திய மற்றும் அமெரிக்க இராணுவ ஸ்தாபனங்களுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்க்கின்ற நோக்கில் 1977 இலிருந்து ஆறு முறை தேர்தல்களில் வெற்றிபெற்று அதிகாரத்தில் இருக்கும் மேற்கு வங்காள இடது முன்னணி அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டிருக்குமானால் UPA அரசாங்கம் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு இடது முன்னணி ஆதரவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் மிக முக்கியமாக இந்தியாவின் ஆளும் செல்வந்த தட்டினரின் நவீன தாராளவாத பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களையும் மற்றும் அமெரிக்காவுடன் மூலோபாய கூட்டினை வளர்ப்பதற்குமான பொதுமக்களது எதிர்ப்பை சமாளிப்பதற்கு எதேச்சதிகார வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களும் மக்களும் கருதியிருப்பர்.

மன்மோகன் சிங்குடைய அச்சுறுத்தல்களின் வெடிக்கும் தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது அவர் மோசடி வேலையில் ஈடுபட்டிருந்தார் என்று நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. என்றாலும் அத்தகைய தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் அச்சுறுத்தலைக் கூட விடுத்திருப்பது அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் காங்கிரஸ் தலைமையின் உறுதியை வலியுறுத்தி எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும், அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களிலிருந்து அரசு செலவீனங்களை இராணுவத்திற்கு மாறியமைப்பதற்கும், முதலீடுகளை மாற்றியமைப்பது, சட்டங்களை மாற்றுவது மற்றும் தனியார்மயமாக்கல் உள்ளடங்கலான நவீன-தாராளவாத வேலைதிட்டங்கள் உட்பட அரசாங்க கொள்கையின் முக்கிய விஷயங்கள் தொடர்பாக அவர்களுடன் மோதிக்கொள்வதிலிருந்து தனது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்பதை அவரது இடது கூட்டணியினர்களுக்கு ஒரு தெளிவான சமிக்கை அனுப்புவதற்கு சிங் பெரும்பாலும் விரும்புகிறார்.

அது மோசடி வேலையாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மன்மோகன் சிங் விடுத்த அச்சுறுத்தல்கள் அவர் விரும்பிய பயனை தந்தது. CPM தலைமையிலான மேற்கு வங்காள அரசாங்கம் முற்றிலுமாக விட்டுக் கொடுத்துவிட்டது. பட்டாச்சார்யா தனது முழு ஒத்துழைப்பை வழங்கியதுடன், மத்திய அரசாங்கத்திடம் மாநில நிர்வாகத்தை ஒப்படைத்தார் மற்றும் இராணுவ பயிற்சிகளின் வெற்றியை உறுதி செய்து தருவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழங்கினார்.

இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அவரோ அல்து CPM தலைவர்களில் வேறு எவருமோ மன்மோகன் சிங்கின் அச்சுறுத்தல்கள் பற்றி அதற்கெல்லாம் மேலாக ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதற்கு அவர் விடுத்த அச்சுறுத்தல் பற்றி ஒரு வார்த்தை கூட தொழிலாள வர்க்கத்திடம் மூச்சுவிடவில்லை. அப்படி செய்திருப்பார்களானால் மக்கள்-சார்பு கொள்கைகளை தொடர்வதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற அடிப்படையில் புதுடெல்லி ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அரசாங்கத்தின் தன்மை குறித்து ஸ்ராலினிஸ்ட்டுக்களை சிக்கலுக்குளாக்கும் கேள்விகளை எழுப்பியிருந்திருக்கும்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மத்திய அரசாங்கத்திற்கு சரணாகதியடைந்தமை கோழைத்தனத்தின் ஒரு விஷயம் மட்டுமல்ல என்றாலும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கடந்த 29 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தில் இந்திய முதலாளித்துவத்தை அவர்கள் நிர்வகித்து வருவதன் ஒரு விளைவாக அவற்றின் மூலம் பெறப்பட்ட சலுகைகளுடனும் வசதிகளுடனும் ஐயத்திற்கிடமின்றி பிணைந்துள்ளனர். தற்போதுள்ள அரசியல் ஒழுங்கினை பாதுகாப்பவர்கள், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி திணிக்கும் ஒரு முயற்சி அந்த மாநிலத்திலும் இந்தியா முழுவதிலும் வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடும் என்பது பற்றி அஞ்சுகின்றனர்.

மேற்கு வங்காளத்திலுள்ள மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கலைக்குண்டா விமானப் படைத் தளத்தில் நவம்பர் 7ம் திகதியிலிருந்து தொடங்கி 12 நாட்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றிறாத பெருஅளவிற்கு கூட்டு இந்திய-அமெரிக்க விமனாப்படை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சிகளின் அமெரிக்க விமானப் படையின் F-16 ரக விமானங்களும், விமான எச்சரிக்கையும் கட்டுப்பாட்டு முறை (AWACS) விமானங்களும் உள்ளடங்கலான அமெரிக்க விமானப்படைகளின் ஒரு முழு பட்டாளமும் இந்த பயிற்சிகளில் ஈடுபட்டன.

பனிப்போருக்கு முற்றுப்புற்றி வைக்கப்பட்ட பின்னர் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு பாரியளவிற்கு வளர்ந்திருக்கிறது. சென்ற ஜூனில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு உடன்படிக்கை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், ஆயுத திட்டங்களையும் இந்தியா கணிசமான அளவிற்கு வாங்குவதற்கு வகை செய்வதுடன் மற்றும் ஐ.நா. அங்கீகாரம் இல்லாமல் வெளிநாடுகளில் இந்திய-அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளுக்கு சாத்தியக்கூறை வழங்குவதாகும். பூகோள-அரசியல்ரீதியாக இந்தியா அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கூட நகர்ந்துகொண்டிருக்கிறது. அது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பை ஆதரித்து, ஈராக்கில் அமெரிக்கா-நிறுவிய பொம்மை ஆட்சியை அங்கீகரித்து மற்றும் சென்ற செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேச அணு சக்தி அமைப்பின் (IAEA) கூட்டத்தில் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சேர்ந்து கொண்டு ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.

இந்த வளர்ச்சியினால் கலவரம் அடைந்ததாலும் மேற்கு வங்காள மாநில தேர்தல்களில் தங்களது இடது நம்பகத்தன்மைகளை புதுப்பித்துக்காட்ட வேண்டிய ஆர்வத்தினாலும் இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் சென்ற நவம்பரில் நடைபெற்ற பயிற்சிகள் தொடர்பாக ஒரு பிரச்சனையை உருவாக்கினர். ஆனால் இது அவர்கள் தங்களையே இழிவுபடுத்திக் கொள்கின்ற வகையில் தங்களது நிலையிலிருந்து பின் வாங்குவதில் முடிவடைந்தது.

ஏராளமான CPM தீவிர ஆதரவாளர்களும் தொழிலாளர்களும் இதர இடதுசாரிகளும் இந்திய - அமெரிக்க விமானப் படைகளின் பயிற்சிக்கு எதிரான கண்டனங்களில் பங்கெடுத்துக் கொண்டு அந்த பயிற்சிக்கு மாநில அரசாங்கத்தின் ஆதரவு தொடர்பாக தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பட்டாச்சார்யா மத்திய அரசாங்கத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி அந்த விமானப்படை பயிற்சி எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் நடைபெறுவதற்கு உறுதிசெய்து தருகின்ற வகையில் இந்த கண்டனங்கள் கடுமையாக போலீசாரால் கண்காணிப்பு செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்குடைய அச்சுறுத்தல்களின் கடுமையான தன்மைகளுக்கு அப்பாலும் அவர் பட்டாச்சார்யாவுடன் அவர் உரையாடியமை இந்திய பத்திரிகைகளில் மிகச் சொற்பமாக வெளியிடப்பட்டது. இடதுசாரி அணியுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் இந்து பத்திரிகை, CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் ஜனவரி 8ல் திரிபுரா விஜயம் தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தபோது இந்த விவகாரம் குறித்து மறைமுகமான குறிப்புக்களை மட்டுமே தந்திருக்கிறது. இராஜினாமா செய்துவிடுவதாக மன்மோகன் சிங் விடுத்திருந்த அச்சுறுத்தல் பற்றி கரத்திடம் கேட்கப்பட்டபோது அவர் ''பிரதமர் பதவி விலக முன் வந்தார் என்பது போன்ற செய்திகளை இப்போது தான் முதல் தடவையாக நான் கேள்விப்படுகிறேன்'' என்று கூறியதாக இந்து வெளியிட்டிருக்கிறது.

தனது அரசியல் குழுவின் சக உறுப்பினரான பட்டாச்சார்யா, சிங் இவ் அச்சுறுத்தல் பற்றி தகவல் தர ஏன் தவறி விட்டார் அல்லது ஏன் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற விமானப் படை பயிற்சிகளுக்கு தங்களது எதிர்ப்பை CPM தலைமை திடீரென்று ஏன் விட்டு விட்டது என்பது பற்றியோ அந்த செய்திப்பத்திரிகை கரத் இடம் மேலும் கேட்டு விவரம் திரட்டவில்லை. மேற்கு வங்காள முதலமைச்சரை பொறுத்தவரை அந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்துக்கூறுதலையும் தவிர்த்து விட்டதாக தோன்றுகிறது.

''பிரதமரின் இடதுசாரி கொக்கி'' என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையை அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளும் நவீன-தாராளவாத சீர்திருத்தங்களை ஆதரிக்கும் ஒரு முன்னணி பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கிறது. அந்த உரையாடலின் விளைவு குறித்து பெரும் மனநிறைவு தெரிவித்திருப்பதுடன், தேவைப்படும்போது ஸ்ராலினிஸ்ட்டுகளுடன் கடுமையான பேச்சுவார்த்தைக்கும் ''மென்மையாக-பேசுகின்ற'' வல்லமையை மன்னோகன் சிங் பெற்றிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

பட்டாச்சார்யாவுடன் மன்மோகன் சிங் நடத்திய உரையாடல் பற்றிய மிக முக்கியமான செய்தி Rediff.com இல் வெளிவந்திருக்கிறது. ''இந்திய-அமெரிக்க பயிற்சிக்கு CPM கண்டனம் தொடர்பாக மன்மோகன் பதவி விலக முன் வந்தார்'' என்ற தலைப்பில் அது ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. ''மாநிலங்களை கட்டுப்படுத்தும் கடமைப்பாட்டை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு வழங்குகின்றது என்ற ஒரு செய்தி அனுப்பப்பட்ட பின்னர் தான் பிரதமர் இராஜினாமா செய்ய முன் வந்தார் என்பதே ஒரு சிலருக்குத்தான் தெரியும்'' என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

இராணுவ விவகாரங்களில் மத்திய அரசாங்கத்தின் தனித்த அரசியலமைப்பு அதிகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை மந்திரிசபை இயற்றி அந்த விமானப்பயிற்சி இடையூறின்றி முன்னெடுப்பதற்கு மன்மோகன் சிங் கொண்டிருந்த உறுதியை வலியுறுத்திக் காட்டுகிறது எனவும் மற்றும் மத்திய அரசாங்கத்தினால் உருவாக்கி அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு மாநில அரசுகளின் கடமையை பற்றியும் அந்த கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது.

பதவி விலகல் அச்சுறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றொரு செய்தி வலைத் தளமான காஷ்மீர் டைம்ஸ் மட்டுமே வெளியிட்டிருந்தது என்றாலும் இப்போது அந்த செய்தி அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. அரசாங்கத்தின் கட்டளைப்படி செயல்படுவதற்கு இடது முன்னணியை நெருக்குகின்ற வகையில் அச்சுறுத்தல்களை பயன்படுத்துவதற்கு மன்மோகன் சிங் தயாராக இருக்கிறார் என்பது குறித்து ஒரு மூத்த அதிகாரி பெருமைப்பட்டுக் கொண்டதை செய்தி நிறுவனங்களின் தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் கட்டுரை ''அமெரிக்கா தொடர்பான ஒரு பெரிய பிரச்சனை வருகின்றபோது பிரதமர் தனது ஆற்றலை காட்டுகிறார்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை இந்திய பத்திரிகைகள் ஆராயத் தவறி விட்டமை இந்திய ஆளும் தட்டினரும் அவர்களது இடது முன்னணி கூட்டணியினர்களும் மிகவும் வெளிப்படுத்துகின்ற இந்தியாவிலுள்ள வர்க்க உறவுகளை பிரதிபலிக்கின்றது. அவையாவன, அரசாங்கத்தின் முற்றுமுழுதான பலவீனம், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு எதேச்சாதிகார மற்றும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களை பயன்படுத்த தயாராக இருப்பது, ஸ்ராலினிஸ்ட்டுகள் அரசியல்ரீதியாக கீழ்படிந்த நிலைமை மற்றும் UPA அரசாங்கத்தின் தன்மை குறித்து வெகுஜனங்களை ஏமாற்றுவதும், தனது அடிப்படை நலன்களுக்கு ஆபத்து வருகிறது என்று நம்புமானால் ஆளும் வர்க்கம் கொடூரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தயாராக இருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கும் அவர்கள் உடந்தையாக செயல்பட்டு வருவதுமாகும்.

Top of page