World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's role in US-led gang-up against Iran inflames debate over Indo-US ties

ஈரானுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுச் சேரலில் இந்தியாவின் பங்கு, இந்திய - அமெரிக்க உறவுகள் மீதான விவாதத்தை பற்ற வைத்துள்ளது

By Vilani Peiris and Keith Jones
10 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவிடமிருந்து பலத்த அழுத்தங்களின் காரணமாக சென்ற வாரக் கடைசியில் சர்வதேச அணு சக்தி அமைப்பு கூட்டத்தில் (IAEA) ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் அறிக்கை தர வேண்டும் என்ற இந்தியாவின் முடிவானது, இந்தியா தனது எதிர்காலத்தை அமெரிக்காவுடன் பிணைத்துப் போடவேண்டும் என்ற மட்டத்திற்கு அது தொடர்பாக இந்தியாவின் அரசியல், இராணுவம் மற்றும் பெரு நிறுவன செல்வந்த தட்டினருக்குள்ளே விவாதத்தை மேலும் கிளறிவிட்டிருக்கிறது.

ஈரானை ஒரு ஓடுகாலி அரசு என்று அறிவிக்கும் வாஷிங்டனின் முயற்சிகள் மற்றும் எதிர்கால பொருளாதார தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் உள்ளார்ந்த அச்சுறுத்தல் ஆகியன இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை எதிர்கொள்வதற்கு ஈரானின் எண்ணெயையும் எரிவாயுவையும் வலுவாக சார்ந்திருக்கின்ற புது டெல்லியின் திட்டங்கள் மற்றும் தெஹ்ரானுடன் அது கொண்டுள்ள நீண்டகால உறவுகளை அச்சுறுத்தியுள்ளது. அத்துடன் இந்து குறிப்பிட்டிருப்பதைப் போல் வாஷிங்டன் "இந்தியாவின் தலைவாசலிலேயே ஒரு புதிய [இராணுவ] மோதலை" தொடக்கவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்சும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்ற ஜீலையில் கையெழுத்திட்ட அணுகரு ஆற்றல் ஒப்பந்தத்தோடு இந்தியாவின் ஈரான் கொள்கை பற்றிய பிரச்சனை பின்னிப்பிணைந்துள்ளது.

மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்த உடன்படிக்கை இந்தியா ஒரு அணு ஆயுத அரசு என்றும் பெரிய வல்லரசு என்றும் சர்வதேச அங்கீகாரத்தை கொண்டிருப்பதாகவும் இந்தியாவின் எரிசக்தி பற்றாக் குறைக்கு ஓரளவிற்கு தீர்வு காண்கின்ற வகையில் இது இந்தியா சிவிலியன் அணு தொழில் நுட்பத்தை அமெரிக்காவிலிருந்தும் இதர அணுகரு ஆற்றல் அளிப்புக் குழு அரசுகளிடமிருந்தும் இறக்குமதி செய்வதற்கு வகை செய்வதாகவும் கூறி பாராட்டியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், இராணுவப் பகுதியினர் மற்றும் ஏராளமான இந்தியாவின் அணுக்கரு விஞ்ஞானிகள் உட்பட மேலும் பலர் அதற்கான வாஷிங்டனின் விலை அளவிற்கு அதிகமானது என்று வாதிடுகின்றனர். புஷ் நிர்வாகம் இந்த பேரத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக தனது கட்டளைப்படி இந்தியா செயல்பட கட்டாயப்படுத்தி வருகிறது, தனது விரைவு-செறிவூட்டல் திட்டம் (fast-breeder program) உட்பட இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் திட்டத்தின் பெரும் பகுதியை சர்வதேச சோதனைக்கு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கா கோருவது, இந்தியாவின் சுதந்திரமான அணு ஆயுதங்கள் வல்லமையை அச்சுறுத்துகிறது மற்றும் அமெரிக்கா சிவிலியன் அணுகரு ஆற்றலையும் (இதர ஒப்பந்தங்கள் மூலம்) இராணுவ தொழில் நுட்பத்தையும் இந்தியாவிற்கு அளிப்பது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அதனை மேலும் இலக்காக்கக் கூடிய நிலையைத் தான் உருவாக்கும்.

சென்ற வாரம் நடைபெற்ற IAEA வாக்கெடுப்பை தொடர்ந்து ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடாளுமன்ற எதிர்கட்சிகளும் இந்தியாவின் IAEA வாக்களிப்பு தொடர்பாக மற்றும் ஈரானை தனிமைப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் மிரட்டுவதற்கும் அமெரிக்கா தலைமையிலான பிரச்சாரம் தொடர்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றியும் ஒரு நாடாளுமன்ற விவாதத்தை நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

இதற்கிடையில் இந்திய-அமெரிக்க அணுகருஆற்றல் பேரத்தை விமர்சிப்பவர்கள் மற்றும் மொத்தத்தில் எதிர்ப்பவர்களது பட்டியல் வளர்ந்து கொண்டே செல்கிறது. சென்ற வாரக் கடைசியில் இந்தியாவின் அணு சக்தி துறைத் தலைவர் கூறியது என்னவென்றால் சென்ற ஜூலை மாதம் உடன்பாட்டை இறுதியாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது எந்த இந்திய அணுக்கரு ஆற்றல் வாய்ப்புவசதிகள் சிவிலியன் என்று கருதப்பட வேண்டும் என கட்டளையிட முயன்றது. மற்றும் அத்தகையதை சர்வதேச சோதனைகளுக்கு உட்படுத்துவது பந்தாட்ட கோல் கம்பங்களையே மாற்றுவதற்கு சமமாகும். நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா இந்தியாவை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கணக்கில் எடுத்து அணுக்கருஆற்றல் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்கு செவ்வாய் கிழமையன்று முன்னாள் பிரதமர் V.P. சிங் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் "இந்த உடன்படிக்கையை நாம் மீளாய்வு செய்தாக வேண்டும் மற்றும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து எவ்வளவு கறந்தெடுப்பதற்கு விரும்புகிறது என்று பார்க்க வேண்டும்" என்று V.P. சிங் குறிப்பிட்டார்.

ஈரான் மற்றும் இந்திய-அமெரிக்க அணுக்கருஆற்றல் உடன்பாட்டு பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விட்டதற்கு காரணம் புஷ் நிர்வாக அதிகாரிகளும் அமெரிக்க நாடாளுமன்ற முன்னணி உறுப்பினர்களும் திரும்பத் திரும்ப தெளிவாக்கி இருந்தது என்னவென்றால் இந்தியா ஈரானுடன் அவற்றின் மோதல்களில் அமெரிக்காவை ஆதரிக்காவிட்டால் அணு சக்தி பேரம் வெளிப்படுத்தப்படும்.

சென்ற செப்டம்பரில் IAEA வில் ஒரு வாக்கெடுப்பு நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் முதலில் தெளிவாக வந்தன. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது கடமைகளை மீறியதை இந்தியா எப்படி வாக்களித்து கண்டிக்கிறது என்பது அணு ஆயுதப் பரவலை தடுப்பதில் இந்தியா பொறுப்பை ஏற்பதில் தயாராக இருக்கிறதா என்பதற்கு முக்கிய சோதனையாக இருக்கும் என்று புஷ் நிர்வாக அதிகாரிகளும் அவர்களது பல நாடாளுமன்ற கூட்டாளிகளும் அறிவித்தனர். UPA அரசாங்கம் உடனடியாக அதன் வழியில் விழுந்தது. இந்தியா சர்வதேச அரங்குகளில் தனது பாரம்பரிய கூட்டாளிகளிடமிருந்து பிரிந்தது --ரஷ்யா மற்றும் அணிசேரா இயக்கத்தின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தனர்--- மற்றும் ஒரு மூலோபாய பங்குதாரர் என்று வர்ணித்த அரசுக்கு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு தீர்மானத்திற்கு வாக்களித்தது.

இந்த மாதம் நடைபெற்ற IAEA கூட்டத்திற்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகள் அறிவுமழுங்கியவர்களாகவும் கூட இருந்தனர். நடைபெறவிருக்கின்ற IAEA கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரானை குறிப்புரைப்பது தொடர்பாக இந்தியா வாக்களிக்கவில்லையென்றால் இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்படிக்கை "செத்து விடும்" என்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர் டேவிட் மம்போர்ட் அறிவித்தார். இந்திய அரசாங்கம் மற்றும் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் மம் போர்டின் கருத்துக்கள் இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிடுவதாகும் என்று கண்டனங்களை தெரிவித்ததை எதிர் கொண்ட புஷ் நிர்வாகம் அவற்றிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. என்றாலும் சில நாட்களுக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் அதையே தான் குறிப்பிட்டார். ஜனவரி 27-ல் "இந்தியாவிற்கு சிவிலியன் அணு சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய கட்டத்திற்கு வர வேண்டும், இந்தியா சில கடினமான தேர்வுகளை எடுத்தாக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய-ஈரானிய உறவுகளின் முக்கியத்துவம் கருதியும் புது டெல்லி மீது அமெரிக்கா அழுத்தங்களை தருகின்ற தெளிவான நிலை கருதியும் சென்ற வாரக் கடைசியில் நடைபெற்ற IAEA கூட்டத்தில் இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்திய பத்திரிகைகளுக்குள்ளேயும் அரசியல் செல்வந்த தட்டினருக்கு இடையிலும் தீவிரமானதொரு விவாதம் நடைபெற்றது. UPA அரசாங்கத்தை பதவியில் தக்கவைத்து நிற்பதற்கு பாராளுமன்ற வாக்குகளை வழங்கும் இந்திய மாக்சிச கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி வாக்கெடுப்பை தவிர்க்க வேண்டும் என்று கோரியது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான UPA அதன் முடிவை தனது சட்டை பைக்குள்ளேயே வைத்துக் கொண்டது. பொது மக்களோடு அதை பகிர்ந்து கொள்ள மறுத்து இரகசியமாக வைத்துக்கொண்டது, எப்படி இந்தியா வாக்களிக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக விவாதிக்கவில்லை (அதே போன்று எதிர்க்கட்சிகளுக்கு வாஷிங்டனிடம் என்ன முன் மொழிவுகளை தாக்கல் செய்தது அவற்றில் எந்தப் பகுதி இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் சர்வதேச சோதனைக்கு திறந்து விடப்படும் என்பது பற்றிய விவரங்களை தரவில்லை என்றாலும் இந்தியா வழங்க முன் வந்ததை --அமெரிக்கா தள்ளுபடி செய்தது-- அந்த முன் மொழிவுகள் பரவலாக கேபிடல் ஹில்லிலும் இந்தியாவிலுள்ள அமெரிக்க சிறப்பு ஆய்வு நிபுணர்களிடமும் விநியோகிக்கப்பட்டது.)

சென்ற நவம்பரில் நடைபெற்றதை போல் IAEA வாக்களிப்பு மீண்டும் ஒத்திபோடப்படும் என்று UPA அரசாங்கம் நம்புவது சந்தேகமில்லை அல்லது சில உடன்படிக்கைக்கு பெரிய வல்லரசுகள் வரக்கூடும் அமெரிக்காவிற்கு குறைவான கவனத்தை ஈர்க்கின்ற ஒரு இந்திய வாக்களிப்பு உருவாகக்கூடும்.

என்ன நடந்தது என்றால் ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்காவுடனும் EU அரசுகளுடனும் ஈரானை ஐ.நா.விவாதத்திற்கு அனுப்புவதை ஆதரித்து வாக்களிக்க உடன்பட்டு விட்டன என்பது தெரிந்த மறுநாள் மன்மோகன் சிங் CPI (M) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை ஒரு கூட்டத்திற்கு அழைத்து இந்தியா பெரிய வல்லரசுகளோடு சேர்ந்து வாக்களிக்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவை பெற்று இருக்காவிட்டால் இந்தியா எப்படி வாக்களித்திருக்கக் கூடும் என்பதை திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஆனால் அரசாங்கம் வாக்கெடுப்பிற்கு முன்னரும் அதற்கு பின்னரும் பல சமிக்கைகளை தந்தது அவை என்னவென்றால் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பின்பற்றி அமெரிக்காவின் உதவியை பெறுகின்ற வாய்ப்பு கிடைக்குமானால் கொண்டலிசா ரைஸ்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்தியா ஒரு உலக வல்லரசாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அவற்றை உதறிவிட்டு செல்வது என்பதாகும்.

சென்ற வாரம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இடது முன்னணி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட மன்மோகன் சிங் இந்தியாவின் வெளியுறவு கொள்கை தொடர்பாக ''எந்த ஒரு தனிப்பட்ட குழுவும் எந்த வகையானதொரு இரத்து அதிகாரத்தையும் பெறக்கூடாது" என்று குறிப்பிட்டார். அண்மை மாதங்களில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகள் அதிகம் கூடாது என்று கூறி வருகின்ற இரண்டு முன்னணி அமைச்சர்கள் தங்களது அமைச்சக பொறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கிடமிருந்து அவரது பதவி பறிக்கப்பட்டது மற்றும் ஐ.நா. உணவுக்கு எண்ணெய் மோசடி சம்மந்தமாக விசாரித்த வோல்க்கர் அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது என்ற காரணத்தினால் நட்வர் சிங் அமைச்சர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டார். ஈரான்- பாக்கிஸ்தான்- இந்தியா எரிவாயு குழாய் இணைப்பை பகிரங்கமாக முன் மொழிந்து வந்த பெட்ரோலிய அமைச்சர் மணி சங்கர் அய்யர் சென்ற மாதம் மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்ட போது அவரது அந்தஸ்து குறைக்கப்பட்டது.

அமெரிக்கா தனது கட்டளைப்படி நடப்பதற்கு இந்தியாவை மிரட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது அதிகரித்து வருவதால் இந்த பதட்ட உணர்வு பெருகிக் கொண்டு வருகிறது மற்றும் இந்திய-அமெரிக்க உறவுகள் தீவிரமடைந்து நீடிப்பது தொடர்பாக இந்தியாவின் செல்வந்த தட்டினருக்குள் பெரிய கவலைகளும் பதட்டங்களும் அதிகரித்திருப்பது ஐயத்திற்கிடமற்றதாகும். UPA அரசாங்கம் ஒரே நேரத்தில் சீனாவுடன் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு முயன்று கொண்டு வந்தாலும் சீனாவிற்கு எதிர் எடையாக இந்தியா பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்தியாவின் நட்புறவை பேணி வளர்த்து வருகிறது என்பதை இந்தியாவின் அரசியல் செல்வந்த தட்டினர் மிகத் தெளிவாக அறிந்தேயிருக்கின்றனர்.

இந்தியாவின் ஈரான் கொள்கை மற்றும் இந்திய - அமெரிக்க அணுக்கரு ஆற்றல் உடன்படிக்கை தொடர்பாக சந்தேகங்களை எழுப்புவோர் அதிகாரபூர்வமான இந்திய அரசியல் - நிறமாலையின் அனைத்து தரப்பிலும் இடம் பெற்றிருக்கின்றனர். தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமராக இருந்த அட்டல் பிஹாரி வாஜ்பாயின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இதுவரை இந்திய - அமெரிக்க உறவுகள் நெருக்கமாக ஆக வேண்டும் என்று கூறி வந்தவருமான பிரிஜேஷ் மிஸ்ரா சென்ற மாதம் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை "குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்" என்று கூறினார். மிஷ்ரா கூறியுள்ளபடி, அந்த உடன்படிக்கையில் சிறப்பு அம்சங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஜீலை 18ல் நடத்தப்பட்ட பேரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்படும் விதம் மற்றும் அது விரிவாக விளக்கப்படும் முறை ஆகியவை அமெரிக்காவின் நோக்கம் அணு ஆயுதங்களை பெறுவதில் நமது வல்லமையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது மற்றும் அது நமது மூலோபாய வல்லமையை பாதிக்கின்ற தன்மை கொண்டது."

இப்படி கண்டனம் செய்பவர்கள் அணியைப் பார்க்கும் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது அரிதாகவே வியப்புக்குரியது. ஆனால் அனைவரும் மற்றும் இடது முன்னணியும் சேர்த்து UPA அரசாங்கத்துடன் ஒரு பொதுவான குறிக்கோளை பகிர்ந்து கொள்கின்றன - எப்படி இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் தேசிய-அரசின் நலன்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது என்பதாகும்.

இடது முன்னணியானது அண்மை மாதங்களில் அரசாங்கம் ஒரு ''சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை'' மீண்டும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் "பல் துருவ உலகை" வளர்க்க வேண்டும் என்றும் கிளர்ச்சி நடத்தி வருகிறது. நடைமுறையில் இதற்கு என்ன பதில் என்பதை கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ரஷ்யாவும் சீனாவும் IAEA வில் அமெரிக்காவை எதிர்க்கும் என்று இடது முன்னணி நம்பியது ஆனால் இந்த வல்லரசுகள் வாஷிங்டனோடு ஒரு பேரத்தை உருவாக்கி கொண்ட பின்னர் இடது முன்னணி முழு நிர்வாணமாக விடப்பட்டுவிட்டது.

IAEA வாக்கெடுப்பு முடிந்த பின்னர் CPI(M) பொதுச் செயலாளர் காரத், "நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு தீர்க்கமான ஒன்றல்ல.... மற்றும் அதை ஒரு பிரச்சனையாக நாங்கள் ஆக்கவில்லை" என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஈரான் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற அதன் அழைப்பை இடதுசாரி அணி தற்போது திரும்பத் திரும்ப விடுத்து வருகிறது, அதே நேரத்தில் UPA அரசாங்கம் நவீன தாராளவாத சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருவது அல்லது புஷ் நிர்வாகத்தை தழுவி நடந்து கொள்வது அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதை விலக்கிக் கொள்வதற்கு காரணமாக அமையாது என்று வலியுறுத்திக் கூறி வருகிறது. CPI(M)-ன் பொலிட் பிரோ உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான ஜோதிபாசு இந்த வாரம் கூறியுள்ளதைப் போல், "காங்கிரஸ் கட்சி பல பிச்சனைகளில் நமது கருத்துக்களுக்கு செவிமடுக்கவில்லை என்ற உண்மைக்கு அப்பாலும் சிறிது காலத்திற்கு இந்த அரசாங்கம் பதவியில் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

Top of page