World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

கிஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ tக்ஷீணீரீமீபீஹ்tலீமீ ஜீறீவீரீலீt ஷீயீ tலீமீ ஹிஷி ஷ்ணீக்ஷீ ஷ்ஷீuஸீபீமீபீ

ஒரு அமெரிக்க பெருந்துயரம் --- அமெரிக்கப் போரில் காயமடைந்தவர்களின் அவலம்

By James Cogan
7 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற கிரிமினல் போர்களின் பயங்கரமான பாரம்பரியங்களில் ஒன்று அமெரிக்க முன்னாள் படையினர்கள் பலர் ஊனம் அடைந்ததும், நோய் வாய்ப்பட்டதும் அல்லது மனத்தளவில் பாதிக்கப்பட்டதுமாகும் ---அவர்களில் பலர் 20 வயதைக் கொண்டவர்கள்--- அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஒரு கணிசமான தட்டினர் அவர்களது குடும்பங்களில் மற்றும் அவர்கள் வாழ்கின்ற சமுதாயங்களினால் ஏற்படுகின்ற தாக்கத்திற்கு அப்பாலும், இந்த பெருந்துயரங்களின் அளவு சரியாக பிரசுரிக்கப்படுவதில்லை.

வியட்நாமில் 17 சதவீதம் பேர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது 23 சதவீதம் பேர்கள் இறந்ததோடு ஒப்பிடும்போது மருந்துகள், உடல் கவசம், போக்குவரத்துகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, ஈராக்கில் அமெரிக்கப் படையினர்களில் காயம்பட்ட 9 சதவீதம் பேர் மட்டுமே இறந்தனர். நவம்பர் 2001 முதல் அமெரிக்கப் படையினர்களின் அதிகாரப்பூர்வமான இறப்பு எண்ணிக்கை பிப்ரவரி 7 நிலவரப்படி 2513 ஆகும். இதில் ஆப்கானிஸ்தானில் 261 பேரும் ஈராக்கில் 2252 பேரும் இறந்தனர். காயமடைந்தவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை 17,096 ஆகும். இதில் ஆப்கானிஸ்தானில் 676 பேரும் ஈராக்கில் 16,420 பேரும் ஆவர்.

முந்திய போர்களோடு ஒப்பிடும்போது இறப்பு விகிதம் குறைவாக இருப்பது எதைக் காட்டுகிறது என்றால் கொடூரமான காயமடைந்த படையினர்கள் உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான். காயமடைந்தவர்கள் அனைவரையும் ஈராக்கில் கணக்கிட்டால் அவர்களில் 6 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்ப முடியாததற்கு காரணம் அவர்களது உடல் உறுப்புக்களை வெட்ட வேண்டிய கட்டாயத்தினால்தான். இதற்கு முந்திய போர்களில் இத்தகைய தரப்பினர் மூன்று சதவீதம் பேராகத்தான் இருந்தனர். இராணுவ மருத்துவ மனைகளில் மட்டுமே 330-க்கும் அதிகமான துருப்புக்களின் ஒரு கை அல்லது கால் வெட்டப்பட்டதோடு -----53 பேருக்கு, ஒன்றிற்கு மேற்பட்ட அங்கங்களை துண்டிக்கும் சிகிச்கைள் நடைபெற்றுள்ளன. இப்படி அங்கங்கள் துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும். மரைன் நிறுவனம் பாதிப்புக்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிடுவதில்லை அந்த படைப்பிரிவு ஈராக்கில் மிகக்கடுமையான இரத்தக்களரி போர்களில் ஈடுபட்டது மற்றும் அமெரிக்க பாதிப்புக்களில் அவற்றிற்கு சேதம் கணிசமான அளவிற்கு இருக்கும்.

2005 அக்டோபர் 25-லும் இந்த ஆண்டு ஜனவரி 31-லும் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரைகள் படுமோசமாக காயமடைந்த துருப்புக்கள் சிலரது நிலையை பட்டியலிட்டிருக்கிறது--- அத்தகைய துருப்புக்கள் "பன்முக அதிர்ச்சிக்கு" ஆளான நோயாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். தம்பாவிலுள்ள முன்னாள் துருப்புகளுக்கான மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் ஸ்டீவன் G. ஸ்கொட்டை மேற்கோள் காட்டி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பன்முக அதிர்ச்சி என்று வகுக்கப்பட்டுள்ள நோயாளிகள், ''தலைகளில் காயம் அடைந்தவர்கள் கண்பார்வையிழந்தவர்கள் மற்றும் காதுகள் கேட்பதில் கோளாறுள்ளவர்கள் நரம்புகள் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் பன்முக எலும்பு சிதைவிற்கு உட்பட்டவர்கள் காயம் சீரடையாததாகவும் தொற்று நோய்க்கும் மற்றும் உணர்வுபூர்வமான பாதிப்பிற்கும் இலக்கானவர்கள் அல்லது முறையான செயல்பாட்டு பிரச்சனைகள் உள்ளவர்கள். சிலரது அங்கங்கள் அல்லது முதுகுத் தண்டு வடப்பகுதிகள் வெட்டப்பட்டிருக்கின்றன."

மிகக் கடுமையாக காயமடைந்தவர்களை உயிர்பிழைக்க வைத்து அவர்களுக்கு மறு வாழ்வு தருவதற்கென்று அர்பணிக்கப்பட்டுள்ள நான்கு சிறப்பு மருத்துவ மனகைளில் குறைந்த பட்சம் 215 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் பல புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்---- ஈராக்கில் சாலையோர குண்டு வீச்சுகளினால் முக்கியமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பலருக்கு மூளையில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவர்களுக்கு எப்படி பேசுவது என்றும் மீண்டும் நடப்பது எப்படி என்றும் எப்படி உணவை விளங்கவேண்டும் என்று கூட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும். பென்டகன் எதிர்கால போர்களுக்கு முன் கூட்டியே திட்டமிட்டிருப்பதால் முன்னாள் போர் துருப்புகளுக்கான விவகாரத்துறை மேலும் 21 அத்தகைய சிறப்பு மருத்துவமனைகள் அமைப்பதற்கு திட்டமிட்டிருப்பது ஒரு ஆபத்தான அடையாள சின்னமாகும்.

டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ள ஒரு வழக்கு ஒரு 29 வயது மரைன் சம்மந்தப்பட்டதாகும். அவருக்கு பெருமளவில் மூளையில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாம் தர நெருப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் அவரது நரம்பு மண்டலம் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளது. தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்து கொள்வதற்கும் சிகிச்சைக்கும் மற்றும் மறு வாழ்விற்கும் அவருக்கும் அவரது இளம் மனைவிக்கும் ஒவ்வொரு ஆண்டும் பல நூறாயிரம் டாலர்கள் தேவைப்படும்.

வால்ட்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த ஒரு இராணுவ டாக்டர் போல் பாஸ்கினா 2005 அக்டோபரில் டைம்சிடம் கூறினார். "ஒரு உடல் உறுப்பை இழந்து விடுகின்ற ஒருவர் மீண்டும் ஒரு பொருள் உள்ள செயல்பாட்டுத் திறனுள்ள வாழ்க்கையை நடத்துவது ஒரு சவாலாகும். ஆனால் அவரது மிருதுவான திசுக்களில் ஏற்படுகின்ற காயங்கள் எலும்பு முறிவுகள் தலையில் காயங்கள் முதுகுத் தண்டுவடக் காயம் பக்கவாதம் இதற்கெல்லாம் மேலாக மூன்று உறுப்புக்களை இழந்து விடுகின்ற மனிதனது வாழ்வு எவ்வாறிருக்கும்?"

தங்களது காயங்களின் அளவு பற்றியும் எப்படி காயமடைந்தார்கள் என்பது பற்றிய நினைவுகள் வரும்போதும் அதனால் ஏற்படுகின்ற உணர்வுபூர்வமான மற்றும் உளவியல் அடிப்படையிலான பிரச்சனைகள் உடலுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிவாரண நடவடிக்கைகளை சிக்கலாக்குகின்றன. சென்ற மாதம் டாக்டர் ஸ்கொட் டைம்சிடம் குறிப்பிட்டார். "வாழ்நாள் முழுவதும் நாங்கள் இந்த நோயாளிகளை தொடர்ந்து சென்று சிகிச்சையளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த தனிநபர்களுக்கு நமது நாட்டின் நீண்டகால உறுதிமொழிகள் பற்றி நான் பெரிதும் கவலைப்படுகிறேன். காலப்போக்கில் அதற்கான வளங்கள் இருக்குமா?".

ஆப்கனிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்க இராணுவ வீரர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது காயங்களால் உண்டுபண்ணப்பட்ட நீண்டகால விளைவு தொடர்பாக கவலை ஏற்படுகிறது. 2001 நவம்பர் முதல் காயமடைந்தவர்கள் அல்லது மடிந்தவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களுக்கு மேல் 20,000 ஐ நெருங்கி கொண்டு வருகின்ற நேரத்தில் இப்போது மத்திய ஆசியா அல்லது மத்திய கிழக்கிலிருந்து பத்தாயிரக் கணக்கான போர் வீரர்கள் ''போர் அல்லாத காயங்கள்'' அல்லது நோயினால் நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றனர் மற்றும் அமெரிக்கா திரும்பிய பின்னர் அவர்களில் பத்தாயிரக் கணக்கானவர்கள் உளவியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அமெரிக்காவின் போக்குவரத்து கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை டிசம்பர் 13-ல் சலோன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ள பத்திரிகையாளர் மார்க் பெஞ்சமின் ஆப்கனிஸ்தானிலும் ஈராக்கிலும் போர்க்களங்களிலும் கலந்து கொள்ளாத நிலையில் காயமடைந்து நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ள மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 25,289 துருப்புக்கள் என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

எடுத்துக்காட்டாக அமெரிக்க இராணுவ மருத்துவத்துறை மிக அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் 2003 மார்ச் 19-க்கும் 2005 நவம்பர் 30-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈராக்கிலிருந்து இராணுவத்தை சேர்ந்தவர்கள் 21,610 பேர் நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றனர்---- அதாவது இந்த புள்ளி விவரத்தில் மரைன் கடற்படை அல்லது விமானப் படைப் பிரிவுகளை சார்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். ''போர் களம் அல்லாத சூழ்நிலைகளில் முதுகு பகுதி காயங்கள் எலும்பு முறிவுகள் மிருதுவான திசுக்கள் சம்மந்தப்பட்ட காயங்கள் மற்றும் பார்வை மற்றும் காது கேட்கும் கோளாறுள்ள மொத்தம் 6,087 பேர் நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றனர். மேலும் 12,417 பேர் ''நோய்வாய்ப்பட்டவர்கள்'' என்ற பிரிவில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்த நோய்களில் பொது அறுவை சிகிச்சை நரம்பு மண்டல கோளாறுகள் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் தற்கொலை செய்து கொள்கின்ற உணர்வுகள் உள்ளவர்கள் மற்றும் அதிர்ச்சிக்குப் பிந்திய மன அழுத்த கோளாறுகள் (Post-traumatic stress disorder -PTSD) ஆகிய நோய்களுக்கு இலக்கானவர்களும் அடங்குவர்.

போரில் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை, படையினர் திரும்பி வந்ததும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்னாள் துருப்புகளுக்கான விவகாரங்கள் துறை (Department of Veterans Affairs -VA) யின் சுகாதார சேவையை நாடுகின்ற ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கில் பணியாற்றிய முன்னாள் படையினர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 100,000-ஐ தாண்டி விட்டது--- அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பணியாற்றி விட்டு பின்னர் அமெரிக்க இராணுவத்திலிருந்து விலகிக் கொண்டவர்கள் எண்ணிக்கை நான்கில் ஒருவர் என்ற அளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

1991 போரில் முன்னாள் துருப்புக்கள் வளைகுடா போர் நோய்க்குறி என்றழைக்கப்படும் வியாதியால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை கணக்கிடப்படாத அளவிற்கு விடப்பட்டிருக்கிறது. இது பற்றி கருத்துத் தெரிவித்த சில நிபுணர்கள் நீர்த்த யுரேனியம் அல்லது ஆந்தராக்ஸ் ஊசிகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் ஆகியவற்றால் இந்த நோய்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். 1999 வாக்கில் 100,000-ற்கு மேற்பட்ட முதலாம் வளைகுடா போரில் ஈடுபட்ட படையினர், முன்னாள் துருப்புகளுக்கான விவகாரங்கள் துறையின் மருத்துவ சிகிச்சைகளை நாடினர். அவர்கள் வெள்ளை தழும்புகள் நுரையீரல் புற்று நோய் நிரந்தர சிறுநீரக மற்றும் ஈரல் கோளாறுகள் மூச்சுக் குழாய் கோளாறுகள் நிரந்தர களைப்பு மூட்டு வலி போன்றவற்றிற்காக சிகிச்சை பெற்றனர்.

டலாஸ் மோர்னிங் நியூஸ் டிசம்பரில் சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் துருப்புகளுக்கான விவகாரங்கள் துறையின் புள்ளி விவரங்களின் படி 9600 முன்னாள் ஆப்கன் மற்றும் ஈராக் போர் வீரர்கள் PTSD-காக சிகிச்சை பெற்றனர். அந்தக் கோளாறுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆப் மெடிசனில் இராணுவம் நடத்தியுள்ள ஒரு ஆய்வு பிரசுரிக்கப்பட்டிருப்பதில் பைத்தியத்திற்கு சிகிச்சை பெற்றான் என்ற கெட்ட பெயர் எற்பட்டு விட கூடாது என்பதற்காக PTSD சிகிச்சை தேவைப்படும் முன்னாள் படையினர்களில் 25 முதல் 50 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ மனைகளை நாடி வந்தனர். ஆப்கனிஸ்தான் முன்ாள் படையினர்களில் 11 சதவீத பேரும் ஈராக் முன்னாள் படையினர்களில் 18 சதவீத பேரும் ஏதாவது ஒரு கட்டத்தில் PTSD நோய் குறிகளுக்கு இலக்காவர் என்று பாதுகாப்புத்துறை மதிப்பிட்டிருக்கிறது. இத்தகைய நோய்கள் அதிகரிக்கும்போது தற்கொலை அல்லது வன்முறை செயல்களில் ஈடுபடக்கூடும் மற்றும் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கின்ற மற்றும் உணர்வுபூர்வ நெருக்கடிக்கும் இட்டுச் செல்லக்கூடும் இத்தகைய உடலை வருத்தும் கடுமையான நோய்களை முன்னாள் போர் வீரர்கள் பத்தாயிரக் கணக்கில் தாங்களே சமாளித்துக் கொள்கிறார்கள் என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

மின்னசோட்டாவிலுள்ள நகரான ஹிப்பிங்கில் என்ற நகரில் வெளிவரும் டெய்லி ரிபூய்ன் பத்திரிகை இந்த மாதம் ஒரு தேசிய காவலர் பிரிவை சார்ந்த ஈராக்கில் ஓராண்டு பணியாற்றி விட்டு 2005 ஜனவரியில் அமெரிக்கா திரும்பியுள்ள கீத் ஹப் என்பவர் பெப்ரவரியில் ரோட்டரி சங்கக் கூட்டத்தில் ஆற்றிய உரையை வெளியிட்டிருக்கிறது: "உங்களது உலகத்தோடு ஒத்துப் போவதற்கு நாங்கள் மிகக் கடுமையான நேரத்தை சந்தித்தோம் மற்றும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்ந்தோம். ஒரு கொலைகாரனை திருமணம் செய்து கொண்டாள் என்பதை எனது மனைவியிடம் நான் சொல்ல முடியவில்லை மற்றும் அதில் நான் நன்றாக செயல்பட்டேன். சமுதாயத்தில் மீண்டும் இணைவதில் நான் கடுமையான நேரத்தை சந்தித்தேன். அங்கிருந்து விட்டு திரும்புவது எப்படியிருந்தது என்று என்னால் விளக்கிக்கூற முடியவில்லை.

2005 டிசம்பரில் ஸ்டார்ஸ் & ஸ்டிரைப் இராணுவத்திற்குள் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை எடுத்துக்காட்டியுள்ளது. அது போர் மண்டலத்திலிருந்து திரும்பி ஓராண்டிற்கு பின்னர் 21 சதவீத முன்னாள் போர் வீரர்களிடம் குடிபோதைமுறை கேடு இருப்பதை காட்டுகிறது 22 சதவீதம் பேர் திடீர் கோபத்திற்கும் முரட்டுத் தனத்திற்கும் இலக்காகின்றனர் மற்றும் 15 சதவீதம் பேர் தங்களது திருமணத்தை முறித்துக் கொள்ள கருதுகின்றனர்.

இதற்கு முந்திய போர்களில் ஈடுபட்ட முன்னாள் படையினர்களுக்கு VA சிகிச்சைகளை அளிப்பதற்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற நேரத்தில் VA மருத்துவமனைகளும் மருந்தகங்களும் தேவை மற்றும் அமெரிக்க இராணுவ வாதத்தின் அலை வீச்சுக்களால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதால் சோதனையிட கட்டணங்களை செலுத்து முடியாத நிலையில் உள்ள வியட்நாம் மற்றும் 1991 வளைகுடா போர் முன்னாள் படையினர்கள் VA மருத்துவமனைகளை நாடி வருவது அதிகரித்துள்ளது. அத்துடன் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட முதியவர்களாகி விட்ட படையினர்களும் அவற்றை நாடி வருகின்றனர்.

2007 நிதியாண்டிற்கான முன்னாள் துருப்புக்கள் விவகாரத்துறையின் புஷ் நிர்வாக பட்ஜட் முன்மொழிவு 80.6 பில்லியன் டாலர்களாகும். இதில் மருத்துவ உதவிக்காக 34.3 பில்லியன் டாலர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன---- இது 11 சதவீத உயர்வாகும். இப்போது பெருகிக் கொண்டு வரும் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு, இதர திட்டங்களான பொது மருத்துவ பராமரிப்பு மருத்துவ உதவி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வெட்டுவதன் மூலம் சரி செய்யப்படலாம் என்று தோன்றுகிறது.

Top of page