World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Pentagon spells out strategy for global military aggression

பூகோள இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பென்டகன் வெளிப்படையாய் விளக்கிக் கூறியுள்ள மூலோபாயம்

By Bill Van Auken
9 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

2007 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை புஷ் நிர்வாகம் தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், அது இராணுவ செலவினத்தில் ஒரு பெருமளவு உயர்வைக் கோரியுள்ளது. பென்டகன், நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள ஒரு நீண்டகால மூலோபாய ஆவணம், பூகோள இராணுவவாதத்தின் ஒரு ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தை நடத்துவதற்கு கூடுதல் பில்லியன்களை பயன்படுத்த வாஷிங்டன் நோக்கங்கொண்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது.

இந்த ஆவணத்தில் அடங்கியுள்ள பாதுகாப்புத் துறையின் நான்காண்டு பாதுகாப்பு மீளாய்வில் (Quadrennial Defense Review - QDR) ''நீண்ட போர்'' பற்றிய தெளிவற்ற விளக்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பொது மக்களது கிளர்ச்சிகள் மற்றும் பூகோள-மூலோபாய போட்டிகள் இரண்டிலும் அமெரிக்க நலன்களின் சவால்களை ஒடுக்குவதற்கு பூகோளம் அனைத்திலும் இராணுவ வலிமையை பயன்படுத்துவது சம்மந்தப்பட்டதாகும். குறிப்பாக அந்த ஆவணம், சீனாவை தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒரு ஆற்றல்மிக்க இராணுவப் போட்டியாளர் என்று குறிப்பிட்டுள்ளது.

இராணுவ செலவினத்தை ஒரு 7 சதவீதம் அதிகரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் வரவு செலவுத் திட்டம் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலம் மொத்தம் 440 பில்லியன் டாலர்கள் சென்றடைகிறது. இந்த முன் மொழிவு அதிகரிப்போடு சேர்த்து முக்கியமான உரிமை வாய்ந்த திட்டங்களான மருத்துவ பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் போன்றவற்றில் கடுமையான வெட்டுக்களுக்கும் கேட்டுக் கொள்கிறது.

இந்த உயர்வுடன் அமெரிக்காவின் அணுக்கரு குவியலை நிலைநாட்டுவதற்கு ஆற்றல் துறைக்கு நிதி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் போர்களுக்கு பத்து பில்லியன் கணக்கான டாலர்களும் ஒன்றிணைந்துள்ளது. வரும் ஆண்டில் அமெரிக்காவின் இராணுவ செலவினம் அரை டிரில்லியன் குறியீட்டளவிற்கு மேல் சென்று விடும். இது அனைத்து இதர நாடுகளும் சேர்ந்து செலவிடுகின்ற தொகைக்கு கூடுதலாகும். உலகம் முழுவதும் ஆயுதச் செலவினங்களுக்கு ஒரு டிரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகின்றன. இது இவற்றிற்கு பாதிக்கு மேலான தொகையாகும்.

சிறப்பு நடவடிக்கைகளுக்காக -----ஒரு 20 சதவீதம் அதிகரித்து------- 5.1 பில்லியன் டாலர்கள் உட்பட பென்டகன் வரவு செலவுத் திட்டம் பெருத்துள்ளது. அதாவது இராணுவத்தின் சிறப்புப் படைகள் மற்றும் கடற்படை போன்றவற்றில் கொலைக் குழுக்கள் விரிவுபடுத்தப்படும். அவை கிளர்ச்சித் தவைர்களை கொல்கின்ற, படுகொலைக் குழுக்களை அனுப்புவது உட்பட, கிளர்ச்சி-எதிர்ப்பு தலையீடுகள் எங்கும் பரவியிருப்பதில் பயன்படுத்துவதற்கு பயிற்சி பெற்றவையாகும். இத்தகைய பிரிவுகளில் 2011 வாக்கில் 14,000 துருப்புக்களை கூடுதலாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதன் மூலம் இத்தகைய படைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 64,000 ஆகிறது.

ஒரு மிகவும் நடமாடும் படைப்பிரிவு அடிப்படையிலான படைகளை மாற்றி, எதிர்க் கிளர்ச்சி போரிற்கு விரைவாக அனுப்புவதற்கு இராணுவத்திற்கு மேலும் 6.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு வகை செய்கிறது.

குளிர்யுத்த கால பிரமாண்டமான இராணுவ படைக்குப் பதிலாக, எண்ணிக்கை குறைவாகவும் அதே நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும் இயங்கச் செய்ய ''இராணுவ மாற்றத்தை'' பாதுகாப்பு செயலர் டொனால்டு ரம்ஸ்பெல்டு வாதிட்டு வருவதற்கு அப்பாலும், பென்டகன் வரவு செலவுத் திட்டத்தில் ஆயுதங்கள் பெறுவதற்காக 84.2 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளது. இவற்றில் பெரும் பகுதி குளிர்யுத்த காலத்தில் துவக்கி வைக்கப்பட்ட திட்டமான பல பில்லியன் டாலர் ஆயுதங்களாகும் இவற்றை அமெரிக்க இராணுவத்திற்கு உள்ளேயும் வெளியிலும் இடம் பெற்றுள்ள விமர்சகர்கள் தற்போது இவை பெரும்பாலும் அவசியமற்றது என்று கருதுகின்றனர்.

இந்த திட்டங்களில் மிகப் பெரியது ஏவுகணை தடுப்பு திட்டமான ''நட்சத்திரப் போர்களாகும்''. இதற்கு சென்ற ஆண்டை விட ஒரு 20 சதவீதம் கூடுதலாக 10.4 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் திரும்பத் திரும்ப சோதனைகளில் தோல்வியடைந்துள்ளது. மற்றும் அது பயனுள்ள வகையில் செயல்படுமா என்பது பற்றி பரந்த ரீதியாக சந்தேகங்கள் உள்ளன.

மற்றொரு 5.3 பில்லியன் டாலர்கள் F-35 கூட்டு தாக்குதல் போர் விமானம் கட்டுவதற்கும் 2.8 பில்லியன் டாலர்கள் F-22A விமானத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மற்றொரு ''மறை முக'' தாக்குதல் போர் விமானமாக வான்வெளியிலேயே சண்டையிடுவதற்கு எதிர்பார்க்கும் இயல்புள்ளதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய விமானம் சோவியத்தில் எப்போதுமே வடிவமைக்கப்படவில்லை. இத்தகைய விமானங்கள் விமானப் படையில் ஏற்கனவே 100 உள்ளன. அவை தற்போது எந்த இராணுவமும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை.

மற்றொரு சக்திவாய்ந்த அணுவாயுத தாக்குதல் நீர்மூழ்கி கட்டுவதற்கு 2.6 பில்லியன் டாலர்கள் கடற்படை பெற்றுள்ளது. அத்தகைய 60 கப்பல்கள் உயர்ந்தளவில் இருக்கும் கடற்படையிடம் உள்ளன. அத்தகைய நீர் மூழ்கி ஒன்றை புதிதாக கட்டுவதற்கு கடற்படைக்கு 2.6 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புதிய DD(X) ரக நாசகாரி கப்பல்களுக்காக 3.4 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். மேலும் CVN - 21 விமானம் தாங்கிக் கப்பலுக்காக 1.1 பில்லியன் டாலர் செலவிடப்படும். (இது உடனடியாக செலுத்தப்படும் தொகை மட்டும் தான் ஒரு விமானம் தாங்கி கப்பலை கட்டுவதற்கு 12 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

இந்த முன்மொழிவுகள் நீடித்திருக்கும் ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மற்றும் பாரியளவு விரிவாக்கம் பற்றி, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவற்றிற்கு எதிராக ஜனாதிபதி டுவைட் ஐசனோவர் எச்சரிந்திருந்தார். அப்போது அவர் ஒரு வளர்ந்து வரும் ''இராணுவ - தொழிற்துறை வளாகம்'' பற்றி பேசினார். ஜெனரல் டைனமிக்ஸ், நோர்த்ராப் கிரம்மன், போயிங் மற்றும் லாக்ஹீடு மார்ட்டின் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் பங்கு விலைகள் வரவு செலவுத்திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடுமையாக உயர்ந்துள்ளன.

ஈராக் போருக்கு நிர்வாகம் திருட்டுத் தனமாக நிதி கொடுப்பது நீடித்துக் கொண்டிருக்கிறது. அது பென்டகனின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு ''அவசர துணை மானிய கோரிக்கைகள்'' என்பதன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நாடாளுமன்றத்திலிருந்து ஏற்கனவே 50 பில்லியன் டாலர்களை நிர்வாகம் பெற்றுள்ளதோடு, நடப்பு நிதியாண்டில் பாக்கியுள்ள நாட்களுக்கு ஈராக் தலையீட்டிற்காக நிதியளிப்பதற்கு மற்றுமொரு 70 பில்லியன் டாலர்களை அடுத்த இரண்டு வாரங்களில் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் சேர்த்து இது வரை ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்களுக்கு ஆன செலவு 440 பில்லியன் டாலர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் வியட்நாமில் 13 ஆண்டுகள் நடைபெற்ற (பணவீக்கத்திற்கான அப்பொழுது சரிப்படுத்துதல்) போருக்கான செலவை இது வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு மாதத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவு விகிதம் 10 பில்லியன் டாலர்கள். இது சென்ற ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும். ஈராக்கில் அழிக்கப்பட்டு விட்ட அல்லது சேதமடைந்த ஏராளமான இராணுவ தளவாடங்களை பழுதுபார்த்து பழைய நிலைக்கு கொண்டுவர நிதியளித்ததையும் சேர்த்து திடீரென்று உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று பென்டகன் தெரிவித்தது.

இந்த பாரியளவு செலவின முன்மொழிவு இறுதியாக ஒரு கொள்கையாக உக்குவிப்பதை, அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் தீர்க்கமான பிரிவுகளும் இரண்டு பெரிய கட்சிகளும் ஆதரிக்கின்றன. அது உலக சந்தையில் அமெரிக்க முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதை சமாளிப்பதற்காக ஒரு வழியாக, அமெரிக்க இராணுவ மேலாண்மையை பயன்படுத்துவதாகும். யாரோ ஒரு தலைமறைவாக உள்ள பயங்கரவாத ஆபத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க ஆயுதப்படைகள் உருவாக்கப்படவில்லை. ஆனால், வலுவான பொருளாதார போட்டியாளர்கள் மற்றும் பொதுஜன இயக்கங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்திற்கு வருகின்ற சவால்களிலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் அவை உருவாக்கப்பட்டதாகும்.

வரவு செலவுத்திட்ட கோரிக்கையோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ள QDR ஆவணத்தில் இந்த மூலோபாயம் விளக்கப்பட்டிருக்கிறது. வாஷிங்டனின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்'' என்ற சொற்றொடர் அதிக அளவில் மாற்றப்பட்டு ''நீண்ட போர்'' என்ற பதத்தை அந்த ஆவணம் பயன்படுத்தப்படுவது ஆபத்தான விளை பயன்களை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தற்போது தலையீடுகளின் முடிவுகள் பற்றி பொருட்படுத்தாமல், அது தொடர்ந்தும் ஒரு நிரந்தர போர்க்கால அரசிற்கு நீண்டகாலமாக அமெரிக்க மக்களையும், அமெரிக்க இராணுவ அதிகாரிகளையும் பழக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்தப் பதமாகும்.

அந்த ஆவணம் குறிப்பிடுவதை போல்: ''தற்போது அந்த போராட்டம் ஈராக்கிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நமது நாட்டையும் அதன் நலன்களையும் பூகோளம் முழுவதிலும் வரும் ஆண்டுகளில் வெற்றிகரமாக பாதுகாத்து நிற்பதற்கு முன்னேற்பாடுகளையும் தயாரிப்புகளையும் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.''

மற்றொரு குறிப்பிடத்தக்க திருப்பமான கலைச்சொல் பென்டகன் ஆவணம் பிரதான எதிரியை பயங்கரவாதிகள் என்று விளக்கவில்லை. மாறாக ''வன்முறை தீவிரவாதிகள்'' அல்லது ''தீவிரவாதிகள்'' என்றே வர்ணிக்கிறது. இந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலாக நடந்து விடவில்லை. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு வரும் எந்த மற்றும் அனைத்து எதிர்ப்புக்களையும் வன்முறையில் அடக்கி ஒடுக்குவதற்கு அமெரிக்க இராணுவ அமைப்பை உருவாக்குவதில் பென்டகன் மீளாய்வு மூலோபாய கருத்துருக்களை முனைப்பாக குறிப்பிட்டிருக்கிறது.

வாஷிங்டனின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பவர்கள், அவர்களது கருத்தியல் கருத்துருக்கள் எதுவாக இருந்தாலும் ''தீவிரவாதிகள்'' என்று இரக்கமின்றி ஒடுக்கப்படுவர். இந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ள கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களை மட்டுமே இலக்காக கொண்டது அல்ல. ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் அதன் ஆதரவு ஆட்சிகளுக்கும் எதிராக எழும் எந்தவொரு பொதுமக்களது இயக்கத்தையும் ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா ஆகிய இரண்டு பற்றியும் திரும்பத் திரும்ப QDRல் குறிப்பிட்டிருப்பது முக்கியமானதாகும். சிறப்பு நடவடிக்கை படைகள் (Special Operations Forces - SOF) பற்றிய அதன் பிரிவுகளில் அந்த ஆவணம் குறிப்பிட்டிருப்பதாவது: ''SOF மிகவும் தேவைப்படும் மற்றும் சிறப்புத் தன்மை கொண்ட பணிகளை குறிப்பாக நீண்டகால அடிப்படையில் மறை முகமாகவும் ரகசியமாகவும் அரசியல் ரீதியில் தூண்டுதலுக்குரிய சூழ்நிலைகளில் மற்றும் மறுக்கப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நேரடி நடவடிக்கைகள் என்று வரும் போது பூகோள ரீதியாக உயர் மதிப்பு மிக்க இலக்குகளையும் மற்றும் ஆபத்தான தனிநபர்களை கண்டு பிடித்து தனிமைப்படுத்தும் ஒரு விரிவுபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியிலான வல்லமையை பெறும். வழக்கத்திற்கு மாறான போர்களிலும் மற்றும் வெளி நாட்டு படைகளுக்கு பயிற்சியளிப்பதிலும் எதிர்கால SOF ஒரே நேரத்தில் டசின் கணக்கான நாடுகளில் செயல்படுகின்ற வல்லமையை பெறும்..... அதே நேரத்தில் முக்கிய புவியியல் செயல்பாட்டு பகுதியில் நுணுக்கம் வாய்ந்த, பிராந்திய திறனை பெருக்கிக் கொள்ளும்: மத்திய கிழக்கு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன்அமெரிக்கா''.

லத்தீன் அமெரிக்காவை பொறுத்தவரை அந்த ஆவணம் இராணுவத் திட்டமிடுதலில் ஒரு அதிகரித்து வரும் கவலையை வழங்குகிறது. ''வெனிசூலா போன்ற சில நாடுகளில் ஜனரஞ்சக எதேச்சாதிகார அரசியல் இயங்கங்கள் எழுச்சிபெற்று, வென்றெடுத்த பயன்களை அச்சுறுத்துகின்றன. மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்றதன்மைக்கு ஒரு மூலாதாரமாக உள்ளன'' என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த ஆவணம் தற்போது நன்று ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்கத் தத்துவமான ''முன்கூட்டித் தாக்குதல்'' பற்றி, அதாவது இராணுவ ஆக்கிரமிப்பை விளக்கிக் கூறுகிறது. பென்டகன் ''அமெரிக்கப் படைகளை மிகுந்த விறுவிறுப்போடும் மிகுந்த அதிரடிப் போக்கோடும் செயல்படச் செய்வதற்கு'' திட்டமிட்டிருக்கிறது என்று அது அறிவிக்கிறது.

''புதிய மூலோபாய சூழ்நிலையை'' சந்திப்பதற்கு அமெரிக்க இராணுவத்தால் செய்யப்பட்டுவரும் வரிசையாக நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைப் பட்டியலிடுகையில், அந்த ஆவணம் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது: "தேசங்களுக்கு எதிராக போர் நடத்துவதிலிருந்து-----நாம் போரில் ஈடுபட்டிருக்காத நாடுகளில் போர் நடத்துவது," ஒரு நெருக்கடி தொடங்கிய பின்னர் அதற்கு பதிலடியாக நடவடிக்கை எடுப்பதிலிருந்து (எதிர்வினை ஆற்றல்) --- பிரச்சனைகள் நெருக்கடிகளாக ஆவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது(செயல்திறம் சார்தல்); "பாதுகாப்பு படைப் பிரிவுகள் ஒரே இடத்தில் நின்று பாதுகாப்பதிலிருந்து - நடமாடிக் கொண்டே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது;" மற்றும் "ஒரு போருக்கு தயாராக இருக்கின்றதிலிருந்து (சமாதானத்திற்கு) ---- கடும் போர்புரியும் படையாக இருப்பது."

அதே போன்று அந்த ஆவணம் உள்நாட்டு நோக்கங்களுக்காக அமெரிக்க இராணுவத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாஷிங்டனின் நோக்கங்களையும் விளக்கியுள்ளது. பென்டகன் வெள்ளை மாளிகையின் கட்டளைப்படி, ''சட்ட அமுலாக்கம் தெரிவிப்பதற்கான சிவில் அதிகாரம்/அல்லது இதர நடவடிக்கைகளுக்கான ஆதரவிற்கு இராணுவப் படைகளை பயன்படுத்தும் என்றும் அது குறிப்பிடுகிறது. ''US NORTHCOM ற்கு [அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரங்களை கண்காணிப்பதற்காக 2002ல் உருவாக்கப்பட்ட இராணுவ கட்டளை அமைப்பு] முடிந்த வரை சம்பவங்கள் நடப்பதற்கு முன்னர் உள்நாட்டில் இராணுவப் படைகளையும், தளவாடங்களையும் அனுப்புவதற்கு அதிகாரமளிக்க வகை செய்ய கருதியிருக்கிறது'' என்று மேலும் ஆவணம் குறிப்பிடுகிறது.

''மூலோபாய சந்திப்பு முனைகளில் அமைந்துள்ள நாடுகளை தேர்ந்தெடுத்து வடிவமைப்பது'' என்ற ஒரு பிரிவில் அந்த ஆவணம் தெளிவுபடுத்துவது என்னவென்றால், அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உலகின் எந்தப் பிராந்தியத்திலும் சவாலாக எந்த ஒரு நாடும் தோன்றாது தடுப்பதை நோக்கமாக கொண்டு அமெரிக்க இராணுவம் கட்டப்பட்டு வருகிறது என்பதாகும்.

''பிராந்திய மேலாதிக்கத்தை சாத்தியமாக்குவதற்கு இதர திறமைகளை அல்லது வளர்ந்துவரும் இடையூறுகளிலிருந்து எந்த இராணுவ போட்டியாளரையும் எதிர்ப்பதற்கு வாஷிங்டன் முயலும்'' என்று அது எச்சரிக்கிறது. அந்த தடுப்பு முயற்சிகள் தோல்வியடையுமானால், ஒரு விரோதப்போக்கு வல்லரசின் அதன் மூலோபாய மற்றும் நடவடிக்கை நோக்கங்களையும் அமெரிக்கா தடுக்கும் என்று அது மேலும் வெளிப்படையாக எச்சரிக்கிறது.

குறிப்பாக அந்த ஆவணம் சீனாவை தனிமைப்படுத்தி, அது ''அமெரிக்காவுடன் இராணுவ அடிப்படையில் போட்டியிடுவதற்கு மிகப் பெரிய வல்லமை பெற்றிருப்பதுடன் நாசம் விளைவிக்கும் இராணுவ உயர் தொழில் நுட்ப நடவடிக்கைகள், காலப் போக்கில் பாரம்பரிய அமெரிக்க இராணுவ அணுகூலங்களை ஈடுகட்டி முன்னேறிச் செல்கின்ற வல்லமை உள்ளதாக'' வர்ணிக்கிறது.

2001ல் வெளியிடப்பட்ட QDRல் சீனா மறைமுகமாக "ஒரு அஞ்சத்தக்க வளங்களை கொண்டதன் ஒரு இராணுவ போட்டியாளர்" என்று குறிக்கப்பட்டிருந்தபோதிலும், பெயரால் குறிப்பிடப்படக்கூட இல்லை, அதன்மீதானதில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது

புதிய நீண்ட தூர ஆயுதத் திட்டங்களில் செலவிடுவது எதிர் காலத்தில் சீனாவுடன் ஒரு இராணுவ மோதலில் ஈடுபடுவதற்காக தயாரிப்புச்செய்யும் நோக்கம் கொண்டதாகும் என்று நடப்பு ஆய்வு தெளிவாக கருத்துரைக்கிறது. பெருகிக் கொண்டு வருகின்ற இராணுவ வல்லமைகளுடன், அதேபோல ''ஆசிய போர்க்களத்தின் மிக பரந்த தூரங்கள், சீனாவின் கண்டம் அளவிலான ஆழமான எல்லைப் பரப்புக்கள், மற்றும் வழியில் ஏற்படும் சவால் மற்றும் அமெரிக்க தளங்களில் தொலைதூரத்தில் உள்ள மறுக்கப்பட்ட பகுதிகளில் நீடித்த நடவடிக்கைகளை கொண்ட ஆற்றலுள்ள படைகளின் மீதாக ஒரு ஊக்கத்தை வைக்கின்றது" என்று அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.

இந்த வெளிப்படையான இராணுவ அச்சுறுத்தல் சீன அரசாங்கத்திடமிருந்து சீற்றமான கண்டனங்களை தூண்டிவிட்டிருக்கிறது. பென்டகன் ஆவணம் ''சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளது'' என்று குற்றம் சாட்டி வாஷிங்டனிடம் தமது அரசாங்கம் ''கடுமையான முறையீட்டை தாக்கல் செய்திருப்பதாக'' சீன வெளிவிவகார பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ''சீனாவின் வழக்கமான பாதுகாப்பு அமைப்பு குறித்து பொறுப்பற்ற மற்றும் மேலோட்டமான கருத்துக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அவர் அமெரிக்காவை கேட்டுக் கொண்டார்.

ஆவணங்களில் சீனாவை குறிப்பிட்டிருப்பது தொடர்பாக சீன டெய்லியில் ஒரு சீன வெளியிறவுக்கொள்கை பேச்சாளர் ''எல்லைகள் குறித்து தவறான எண்ணத்தில் அமெரிக்கா அதன் பாகமாக கவலை தெரிவிப்பது'' என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

''சீனாவின் இராணுவம் நவீனமயமாக வேகப்படுத்தப்பட்டு வருவது முற்றிலும் நியாயமானதாகும். அமெரிக்கா 19 வது நூற்றாண்டு கடைசியிலும் 20 வது நூற்றாண்டு துவக்கத்திலும் தனது கடற்படை வல்லமையை பெருக்கிக் கொள்வதற்காக பெரும் எடுப்பில் முதலீடு செய்ததைப் போன்று, ஒரு பெரிய வல்லரசு தனது முன்னேற்றத்தின் ஒரு புதிய கட்டத்தில் எடுக்க வேண்டிய அவசியமான நடவடிக்கை'' என்று சீன சமகாலத்திய சர்வதேச உறவுகள் அமைப்புக்களின் அமெரிக்க ஆய்வுகள் கழக துணை இயக்குனர் யான்பெங் எழுதினார்.

இராணுவ செலவினங்கள் அதிகரித்திருப்பது அல்லது புதிய போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைமையிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்பார்க்க முடியாது. பல ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாவட்டங்களை சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் ஒப்பந்தங்கள் கிடைப்பதை பாராட்டியுள்ளனர். கனைக்டிகட் செனட்டர் ஜோ லைபர்மேன், பென்டகன் மற்றொரு அணு நீர் மூழ்கிக்கு திட்டமிட்டு அதை குரோட்டனிலுள்ள ஜெனரல் டைனமிக்ஸ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படுவது போன்ற நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார்.

2006 ல் நடைபெறும் இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஈராக் போருக்கு மற்றும் பூகோள அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் போட்டியிட கருதவில்லை. ஆனால், இதனை பின்தொடர்வதில் நிர்வாகத்தின் செயல்பாட்டை விமர்சிக்கின்ற ஒரு கட்சியாகத்தான் போட்டியிட விரும்புகிறது. ஈராக்கில் மிகப் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டு, பற்றாக்குறை அளவிற்கு சென்று விட்ட தரைப்படைகளில் மேலும் 30,000 துருப்புக்களை சேர்த்துக் கொள்வதற்கு சென்ற ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த ஒரு முன்மொழிவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பென்டகன் தவறிவிட்டது என்று நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

Top of page