World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Supreme Court imposes sweeping ban on public debate on toxic warship

நச்சுப்பொருள் கொண்ட போர்க் கப்பல் தொடர்பான பகிரங்க விவாதத்தை இந்திய உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளது

By Sarath Kumara
18 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

கிளெமென்சோ என்கிற பிரஞ்சு நாட்டு விமானந்தாங்கிக் கப்பலை இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான குஜராத்தில் ஆலங் என்ற உடைக்கும் தளத்தில் அழிப்பதற்கான திட்டங்கள் மீதான எதிர்ப்புக்கள் மற்றும் விவாதத்தை திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஒரேயடியாக தடை செய்துள்ளது. பிரெஞ்சு நாட்டு நீதிமன்ற ஆணைக்கிணங்க பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் கிளெமென்சோ பிரான்ஸ் திரும்ப ஆணையிட்டிருக்கும் நிலையில், இந்திய நீதிமன்றத் தடை ஒரு தீக்குறியான முன்னுதாரணத்தை அமைக்கிறது.

கிளெமென்சோ பிரச்சினை பற்றி எந்த பகிரங்க விவாதமும் கல்நார் (அஸ்பெஸ்டாஸ்) சுமையேற்றப்பட்ட இந்தக் கப்பல் ஆலங் தளத்தில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்த தீர்ப்பினை வழங்கும் அதிகாரத்துக்கு சவால்விடும் என்று கூறிக்கொண்டு, கிளெமென்சோ விவகாரம் தொடர்பான அனைத்து எதிர்ப்புக்கள் மீதும் மற்றும் பத்திரிகையின் விளக்க கட்டுரைகள் மீதும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஐந்து தினங்களுக்கு தடை விதித்தது. கிளெமென்சோ இந்தியாவில் உடைக்கப்படலாமா என்பது குறித்து "ஆதரவான அல்லது எதிர்ப்பான அல்லது நடுநிலையான" அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளை நீதிமன்றம் தடைசெய்வதால், பத்திரிகை தடையானது மொத்தத்தில் அனைத்து உள்நோக்கங்களையும் காரணங்களையும் கொண்டதாகும்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான அமைப்பால் கொண்டு வரப்பட்ட பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை வழங்க அமர்ந்துள்ள இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதியான அரிஜிட் பாஸயாத், இந்த விஷயம் தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்களையும் எழுதப்பட்ட கட்டுரைகளையும் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம், இனியும் யாராவது அவ்விதம் செய்வது தெரியவந்தால், அவர்மீது முதல் தோற்றத்திலேயே நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்ததாக கருதப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்தார்.

பொது விஷயங்களை குடிமக்கள் மற்றும் பத்திரிகைகள் விவாதிப்பதை அடிப்படை உரிமைகளை அவமதிப்பாக வர்ணிக்கும் பாஸயாத், கிளெமென்சோ மீதான பத்திரிகை கருத்துக்களை, நீதிமன்ற அதிகாரங்களை அபகரித்து தகவல் ஊடகங்களே "நடுவர்" ஆக நடத்தும் ஒரு "ஊடக விசாரணை" என தெரிவித்தார். இந்த நீதிமன்றத்தில் இந்தக் கப்பல் சம்மந்தமான வழக்கு நீதி வழங்கப்படுவதற்காக நிலுவையில் இருக்கும்போதே, தகவல் ஊடகங்களே இந்த விஷயத்தில் நீதிமன்ற விசாரணைகளைப்போல் விசாரணைகளை நடத்திவருவதாக பாஸயாத் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிளெமென்சோ கப்பலை பிரிக்க திட்டமிட்டிருப்பது இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள பசுமை இயக்கம் (Greenpeace) சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி இயக்கத்தினரின் எதிர்ப்புக்களை தூண்டிவிட்டுள்ளது. தேவையான பலனளிக்க கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பான அல்லது சுகாதார பாதுகாப்பான பணியிடப்பகுதிகள் பற்றாக்குறையாக இருக்கும் இந்தியாவில், ஆபத்தான விஷத்தன்மையான கல்நார் (Asbestos) அதிக அளவில் உள்ள இந்த கப்பலை பாகம் பாகமாக உடைக்க இருக்கும் ஆலங் தள தொழிலாளர்கள் உயிரிழக்கும்படியான அபாயத்துக்கு உள்ளாவார்கள் என்று இத்திட்டத்தை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தியாவில் இந்தக் கப்பலை பாகம் பாகமாக உடைப்பதன் மூலமும் அதன் மூலம் நச்சுக் கழிவுகள் பற்றிய பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளை தவிர்த்து செல்வதன் மூலமும் பிரெஞ்சு அரசாங்கம் 5 மில்லியனிலிருந்து 8 மில்லியன் மதிப்புள்ள யூரோ நாணயத்தை சேமிக்க எதிர்பார்த்திருந்தது.

இதற்கிடையில் பிரான்சிடம் சில சலுகைகளை பெறுவதற்காகவும் கப்பல் உடைக்கும் பணியில் இந்தியாவின் முன்னணி நிலையை நிலை நிறுத்தும் எண்ணத்திலும் கிளெமென்சோ கப்பலை இந்தியாவில் உடைக்க இந்திய அரசு ஆவலுடன் இருந்தது. குறிப்பாக இந்திய இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் ஆதரவாக உள்ளன ஏனெனில் அவை பிரெஞ்சு தயாரிப்பு ஆயுதங்களையும் அந்த ஆயுத அமைப்பு முறைகளை பெறவும் அணுக்கரு ஆற்றல் ஒழுங்குமுறை அமைப்பில் இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட பிரெஞ்சு நாட்டின் ஆதரவை பெறவும் ஆவலாக உள்ளன. இந்த ஞாயிறும் திங்களும் (பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில்) பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்தக் விஷயங்கள் முக்கியத்துவம் பெறும்.

இந்தக் கப்பலை இந்தியாவில் உடைப்பதற்கு எதிராக பொதுமக்கள் திரண்டு எழுந்திருப்பதை தடுக்கவும், ஆலங் தளத்தில் தொழிலாளர் இருந்துவரும் மோசமான சூழ்நிலைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சம்மந்தமான குறைபாடுகள் பற்றி எடுத்துரைக்கும் வல்லுனர்கள் மற்றும் அவர்களை ஆதரிப்போர்களால் செய்யப்படும் பகிரங்க அம்பலப்படுத்தலை தடுக்கவும் உச்சநீதிமன்றத்தின் கிளெமென்சோ குறித்த இந்த வாய்க்கட்டு ஆணை உள்ளது.

கிளெமென்சோ கப்பலை உடைப்பது பற்றிய பிரச்சினை வந்த பொழுது, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் கழிவுகளை முறையாக கையாள்வதற்காக 1995ம் ஆண்டில் நீதிமன்றம் ஏற்படுத்திய மேற்பார்வையிடும் குழுவை "திறமையானது அல்ல" என்று இதற்கு முந்திய ஒரு தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருப்பது, அரசு மற்றும் மற்றைய நிறுவனத்தின் அழுத்தங்களுக்கு நீதிமன்றம் எளிதில் ஆட்படுவதை தெளிவாகவே விளக்கிக்காட்டுகிறது. இந்த மேற்பார்வைக் குழுவுக்குப் பதிலாக கடற்படை வல்லுநர்களிடமும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களிடமும் அபிப்பிராயங்களைக் கோர உச்ச நீதி மன்றம் முடிவு செய்தது. மேலும் வெள்ளிக் கிழமையன்று கிளெமென்சோ திரும்ப வர அழைக்கப்பட்டபிறகு இந்த அந்தருவருப்பான வியாபாரம் - கப்பல் உடைக்கும் பணி - "மற்ற நாடுகளுக்குப் போகும்" என இந்த நீதி மன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த வாய்ப்பூட்டு தடை வேறு எந்த சர்ச்சைக்குரிய பிரச்சினையின் - கைது செய்யப்படும் அச்சுறுத்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு இவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு தடை மீதாக வாதங்களுக்கும் எதிர்ப்புக்கும் தடைகள் போன்றவற்றை திணிக்க முன்னுதாரணத்தை அமைக்கிறது. அத்தகைய தடைகள், கிளெமென்சோ விஷயத்தில் போல அரசாங்க மற்றும் கார்ப்பொரேட் நடவடிக்கைகளின் எதிராளிகளை அச்சுறுத்தவும் வாயைமூடப்பண்ணவும், பயன்படும், மற்றும் பொதுக் கருத்துக்கள் மற்றும் அழுத்தத்திலிருந்து நீதிமன்றங்களை தனிமைப்படுத்துவதற்கு உதவும்.

தொழிற்சங்கங்களும், வழக்கறிஞர்களும் மற்றும் பத்திரிகைகளின் பல பிரிவுகளும் இந்த வாய்ப்பூட்டு ஆணைக்கு எதிராக பேசியுள்ளனர்.

விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்தின் பேரில், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடல் போன்றவைகளுக்கு எதிரான இந்த தடை அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதற்கான பொதுமக்களின் உரிமையை இழக்கச் செய்துள்ளது என தற்போதைய இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ.-எம்) மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் சி.ஐ.டி.யூ என அழைக்கப்படும் இந்திய தொழிற்சங்கங்களின் மையமும் தெரிவித்துள்ளன.

சட்டம் சார்ந்த வட்டங்களில் இது குறித்து தங்கள் கவலையை பலர் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜீவ் தவான் என்னும் முதுநிலை வழக்கறிஞர், இந்த நீதிமன்ற தடை நீதிமன்ற அவமதிப்பு குறித்த சட்டத்தை தேவைக்கு அதிகமாக விரிவுபடுத்தியிருக்கும் செயல் என கல்கத்தாவிலிருந்து வெளிவரும் டெலிகிராப் என்னும் பத்திரிகையிடம் கூறியிருப்பதுடன், ப்ரஸாந்த் பூஷன் என்னும் இன்னொரு வழக்கறிஞர் இந்த மாதிரியான வாய்ப்பூட்டு ஆணைகள் "ஜனநாயகம் முடிவுக்கு வருவதை" சுட்டிக்காட்டுகிறது என கூறினார்.

இந்த வாய்ப்பூட்டு ஆணை, நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்மந்தப்பட்ட வாதி பிரதி வாதிகளுக்கு அல்லது சட்டம் சார்ந்த வினாக்களுக்கு மட்டுமே வரையறைப்படுத்தாதிருப்பது "பாரதூர விளைவுகளையும் சில முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தும்" என இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. வலதுசாரி நோக்குகளுக்காக வசைப் பெயர் எடுத்த பெரிய வணிக நிறுவனங்களின் ஊதுகுழல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூட இந்த நீதிமன்ற தடை ஆணையை குறை கூறி விமரிசித்துள்ளது. "செய்தி ஊடகங்களில் மற்றும் அவற்றால் விசாரணைகள் நடத்தப்படுவதை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது சரியானதே" என்றாலும் அதன் தீர்மானம் "எந்த ஒரு விவாதத்தையும் மூடி மறைத்துவிடலாம்" எனவும் இது "ஒரு அமைதியை குலைக்கும் முன்னுதாரணமாகவும் இருக்கலாம் எனவும்" பெப்ரவரி மாதம் 15ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

திடீர் எழுச்சிக்கு ஆளாகும் தன்மையுடைய ஜனநாயக விரோதமான உச்ச நீதிமன்றத்தின் இந்த வாய்ப்பூட்டு ஆணை ஒரு மாதிரியை ஒத்திருக்கிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் தொடக்கநிலை உரிமைகளை தாக்குகின்ற கீழ் நீதிமன்றங்களின் வெள்ளப் பெருக்கம் போன்ற பல தீர்மானங்களை, அவற்றுள் பலவற்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதை மற்றும் அதனால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை கடந்த சில ஆண்டுகளாக காண முடிகிறது.

2003ம் ஆண்டு கோடைகாலத்தில் தமிழ்நாட்டு மாநில அரசு 200,000 அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியபோது அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேலை நீக்கம் செய்ததில் அரசு தனது அதிகார எல்லைக்குள் தான் நடந்துள்ளது எனவும் மாநில அரசு ஊழியர்களும் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமைகளை இயற்கையாய் கொண்டிருக்கவில்லை. சட்டத்தின்படி இயல்பாகவே வேலை நிறுத்த நடவடிக்கைகளால் பணிகள் நிறுத்தப்படும் செயல்பாடுகளை "பந்த்" நடவடிக்கைகளை சட்ட விரோதமானது என பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் நிர்வாகத்தினரின் உரிமைகள் குறித்தும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரிசையான ஆணைகள் தொழிலாளர் சம்மந்தப்பட்ட சட்டங்களில் அதிகம் "நெகிழ்ச்சித்தன்மைக்கான" வணிக நிறுவனங்களின் கோரிக்கையை எதிர்கொள்ளும் வழியில் இணைந்து செல்கின்றன.

தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இத்தகைய விரிந்துவரும் நீதிமன்ற தாக்குதல்களுக்கு பின்னால் 15 ஆண்டுகால புதிய தாராள பொருளாதார கொள்கைகளின் விளைவாக பெருகிவரும் ஏழ்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவம் இன்மைக்கு எதிரான பெரும் எதிர்ப்பு பற்றிய ஆளும் வர்க்கத்தின் உணர்தலும் அவர்கள் கொண்டுள்ள அச்சமும் இருக்கின்றன.

Top of page