World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hurricane Katrina and the "war on terrorism"

கத்ரீனா சூறாவளி மற்றும் "பயங்கரவாதத்தின்மீதான போர்"

By Joe Kay
18 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

புதன்கிழமையன்று, சட்டமன்ற சிறப்புக் குழு ஒன்று கத்ரீனா சூறாவளி பற்றி அரசாங்கம் தயாரித்த முறை, அதை எதிர்கொண்ட முறை பற்றிய தன்னுடைய ஆய்வுகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதேதினம், உள்நாட்டு பாதுகாப்பு துறைப் பிரிவின் செயலாளரான மைக்கேல் ஷேர்ட்டாப் செனட் மன்றத்தின் உள்நாட்டு பாதுகாப்புக் குழுவின் முன் தோன்றி சாட்சியம் அளித்தார்; பேரழிவு பற்றிய அவருடைய துறையின் நடவடிக்கைகள் பற்றி அவர் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

மன்றக் குழு அளித்துள்ள 520-பக்க அறிக்கை, தயாரிப்புக்கள் இல்லா நிலையில் அரசாங்கத்தின் பல கூறுபாடுகள் இருந்தது, மற்றும் போதுமான விடையிறுப்பு இல்லா நிலை பற்றி நிறையத் தகவல்களை கொண்டுள்ளது. கல்ப் கோஸ்ட்டின் மற்ற பகுதிகளிலும், நியூ ஓர்லீயன்ஸ் நகரத்தின் பெரும் பகுதியையும் அழித்துப் பெரும் சோகத்தை கொடுத்த கத்ரீனா சூறாவளி பற்றியும் புஷ் நிர்வாகம், மற்ற அரசாங்க அதிகாரிகள் அச்சோகத்தை அதிகரிக்கச்செய்த தன்மையில் கொண்டிருந்த பொறுப்புக்கள் பற்றி ஓரளவேனும் அம்பலப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை தீவிரமாக ஆராயப்படுதல் அவசியமாகும்.

ஆனால் அறிக்கையும் செனட் மன்றத்தின் ஆய்வுகளும் இறுதியில் வெண்பூச்சு அடிக்கும் இலக்கில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதுடன், சூறாவளி எழுப்பியுள்ள மிக அடிப்படை வினாக்களை மறைத்துவிடக்கூடியன.

உதாரணமாக, சமூக அநீதி மற்றும் பல தசாப்தங்களாக வலதுசாரி அரசியல் விளைவு ஆகியவற்றின் பங்கு என்ன என்பது பற்றி தக்க ஆய்வு இல்லை; அவற்றின் விளைவாகத்தான் சமூக உள்கட்டுமான பராமரிப்பு -நியூ ஓர்லீயன்ஸ் வரிவசூலிப்பு முறை, அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை கொண்டுள்ள மன்றக் குழுவின் அறிக்கை முன்னாள் அவைத் தலைவர் Newt Gingrich உடைய "தொழில்முயலுவோரின்" அரசாங்கத்திற்கு எதிராக "அதிகாரத்துவத்தின்" இயல்பான திறமையின்மை பற்றிய கருத்துக்களை சுட்டிக்காட்டி தொடங்குகிறது. சூறாவளியால் வெளிக்காட்டப்பட்ட உள்கட்டுமான சிதைவு மற்றும் வறுமைநிலைகளை எதிர்கொள்ள திட்டமிடல் அல்லது சமூக நலத்திட்டங்களில் அதிகரித்த செலவிடல்களுக்கான முன்மொழிவுகள் அங்கு இருக்காது என்பதற்கு இது ஒரு தெளிவான சமிக்கை ஆகும்.

விடை காணப்படுவது ஒருபுறம் இருக்க, செய்தி ஊடகத்தில் தொடர்ந்து வரும் கருத்துக்களிலும் பல விசாரணை அறிக்கைகளிலும், மற்றொரு வினாவும் எந்த இடத்திலும்தீவிரமாக எழுப்பப்படக் கூடவில்லை. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து, புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை அறிவித்தது. இந்தப் போரின் ஒரு பகுதியாக அரசாங்கம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறிக் கொண்டது; பெரும் தாக்குதல்கள் மீண்டும் வந்தால் காத்துக் கொள்ளுவதற்குத் தயாரிப்புக்கள் இருக்கும் என்றும், பேரழிவு நிர்வாகம் இனி திட்டமிட்டுச் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரச்சினை பற்றி ஒருமுகமான முனைப்புடன் நான்கு ஆண்டுகள் குவிப்பு இருந்த பின்னரும் கூட, இத்தகைய பேரழிவு ஒன்றிற்கு முன் செயலற்ற நிலையில் அரசாங்கம் தன்னை விளக்கிகாட்டியது என்ற உண்மையை எவ்வாறு ஒருவர் விளக்குவது?

இந்த வினாவை செய்தி ஊடகத்திலோ, அரசியல் நடைமுறையிலோ எவரும் எழுப்ப முடியாது; ஏனெனில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற முழு மோசடியை அது தெளிவாக வெளிப்படுத்திவிடும்; அந்த மத்திய பொய்யின் அடிப்படையில்தான் புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகள் தங்கியிருக்கின்றன.

சட்டமன்ற அறிக்கை மற்றும் செனட் ஆய்வுகளின் முடிவுகள் இரண்டிலுமே குவிப்பு சில நிர்வாக அதிகாரிகளின் திறமையற்ற தன்மைமீது உள்ளது; குறிப்பாக முன்னாள் கூட்டாட்சி நெருக்கடிக் கால நிர்வாக அமைப்பின் தலைவரான மைகேல் பிரெளன் மற்றும் DHS செயலாளர் ஷேர்டாப் ஆகியோரின் மீது உள்ளது. மன்ற அறிக்கை தொகுத்துக் காட்டும் மத்திய படிப்பினை "காட்ரினா தொடக்க முயற்சியின் தோல்வியாக இருந்தது. தலைமையின் தோல்விதான் இது."

இந்த தோல்வியுற்ற தலைமை பற்றி அறிக்கை பல உதாரணங்களை கொடுத்துள்ளது; "நெருக்கடி முன்கூட்டியே கணிக்கப்பட முடியும் என்பது மட்டுமில்லாமல், முன்கூட்டியே கணிக்கப்பட்டுக் கூறப்பட்டது" என்ற நிலையில் சூறாவளி தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தயாரிப்பு நடவடிக்கைகள் இல்லாமற் போனது உட்பட பல தகவல்கள் வந்துள்ளன. "தேசிய எதிர்கொள்ளல் திட்டத்தின் (National Response Plan) முக்கியமான கூறுபாடுகள்" பலனற்றவகையில் மிகவும் காலதாமதமாகத்தான் செயல்படுத்தப்பட்டன; அல்லது செயல்படுத்தப்படவே இல்லை" என்று அறிக்கை கூறுகிறது; மேலும், "சூறாவளி தோற்றுவித்திருந்த பிரச்சினைகள் பலவும் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படவில்லை". தொடர்புகள் தடைக்குட்பட்டுவிட்டன, மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்படவில்லை; இடத்தை விட்டு மக்களை அகற்றும் பணி பல நாட்கள் தாமதப்படுத்தப்பட்டது; பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் முகாம்கள் பற்றிய திட்டங்கள் "போதுமானதாக இல்லை, அரைகுறை தன்மையுடன்" இருந்தன.

அறிக்கையின்படி, இவ்விதத் தன்மைக்கு முக்கிய காரணம் சில அதிகாரிகள் தக்க "ஆரம்ப முயற்சிகளை" கொள்ளாததேயாகும். கட்ரீனா சூறாவளிக்கு பின்னர், "அமெரிக்கா மீண்டும் கொள்கை ஏற்படுத்துதல், கொள்கை செயல்படுத்துதல், கோட்பாடு, நடைமுறை இவற்றிற்கிடையே உள்ள பெரும் பிளவை எதிர்கொண்டுள்ளது" என்று அறிக்கை கூறுகிறது. வேறுவிதமாகக் கூறினால், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதில் ஒரு பகுதியாக வரையப்பட்டுள்ள கொள்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதுதான் பிரச்சினை ஆகும்.

செனட் மன்ற ஆய்வுகளும் இதேவகையில்தான் சென்றுள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்புக் குழு பிரெளன், ஷெர்டாப் உட்பட பல அதிகாரிகளின் சாட்சியங்களை கேட்டுள்ளது. திறமையின்மை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் பிரெளனுடைய முக்கிய வாதம் பேரழிவின் பரிணாமம் பற்றி தான் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டதாகவும், பரந்த அரசாங்க தோல்விகளுக்கு தான் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். புதன்கிழமையன்று, செனட் உறுப்பினர்களுடைய குறைகளுக்கு விடையிறுக்கும் வகையில் ஷெர்டாப் தான் பொறுப்பை பிரெளனுக்கு வழங்கியிருந்ததாகவும், பிரெளனுடைய கட்டுப்பாட்டின்கீழ் அனைத்தும் இருந்ததாக தான் அறிந்ததாகவும் தெரிவித்தார். இரண்டையும் ஒன்றாகப் பார்க்கையில், செனட் மன்ற சாட்சியம் நியூ ஓர்லீயன்சில் என்ன நடந்தது என்பது பற்றி ஒருவரும் கவலைப்படாமல் இருந்த அரசாங்கத்தின் தன்மையைத்தான் காட்டியுள்ளது; ஒருவரும் நெருக்கடியை எதிர்கொள்வதில் குறிப்பிட்ட வகையில் பொறுப்பை உணர்ந்திருந்ததாக தெரியவில்லை.

குடியரசுக் கட்சியைச் சார்ந்த குழுவின் தலைவர், செனட்டர் சூசன் கோலின்ஸ் தன்னுடைய ஆரம்ப கருத்துக்களில் மிகப் பெரிய தவறுகளின் உதாரணங்களை பட்டியல் இட்டுக் காட்டியிருந்தார்: மைக்கேல் பிரெளன் உறுதிமொழியளித்திருந்த பஸ்களை தக்க நேரத்தில் வரவழைக்காதது; திருவாளர் பிரெளனுக்கு மாநாட்டு மையத்தில் இருந்தவர்களில் பரிதாபமான நிலை தெரியவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னரும் இன்றியமையாத பொருட்களை வழங்காமல் இருந்தது; லூயிசியானா மற்றும் மிசிசிபி முழுவதும் இன்றியமையாத பொருட்களை விரைவில் வழங்குவதில் தோல்வியுற்றதும், அவை வழங்கப்பட்டனவா என்று கண்காணிக்காமலும் இருந்தது; வெள்ளம் ஏற்பட்டவுடன், இன்னும் கூடுதலான தேடும் பணி, மீட்புப் பணி, நெருக்கடிப் பணி, மருத்துவ பணிக் குழுக்களை அமைக்காதது; பெருஞ்சிதைவிற்குட்பட்டிருந்த தொலைத் தொடர்பு முறையை விரைவில் மீட்கத் தவறியது" என இன்னும் அடுக்கிக் கொண்டே போகிறது பட்டியல்.

ஆனால் செனட் உறுப்பினர்கள் வேண்டுமென்றே இன்னும் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்வதை தவிர்த்தனர்; அவர்களுடைய கவனங்கள் இரண்டாம் பட்ச விஷயங்களிலும், தனிநபர் "ஆரம்ப முயற்சியிலும்தான்" குவிப்பைக் காட்டின. கோலின்ஸ் ஷேர்ட்டாப்பிடம் எழுப்பிய இரு கேள்விகளாவன: நீங்கள் ஏன் மைக்கேல் பிரெளனை காட்ரினாவை எதிர்கொள்ளும் முக்கிய கூட்டரசுப் பொறுப்பாளராக நியமனம் செய்தீர்கள்? மற்றும், சூறாவளிக்கு மறுநாள் பறவைக் காய்ச்சல் மாநாட்டிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள்? உயர்மட்ட செனட் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜோசப் லைபெர்மென் சற்று மாறுபட்ட வகையைக் கொண்டு சூறாவளி கரையைத் தாக்குவதற்கு முன்பே ஏன் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வினவினார்.

சூறாவளியை தொடர்ந்தும் அதையொட்டிய மாதங்களிலும் வெளிப்பட்டிருந்த சமூக சமத்துவமின்மை பிரச்சினைகள் குறித்து எவரும் ஆராய முற்படவில்லை. செனட் உறுப்பினர்களுக்கும் நிர்வாகப் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு ஒருபுறமும், பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு மறுபுறமும் குழு விசாரணையின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் வெளிப்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒரு நபர் FEMA எடுத்திருந்த முடிவான சூறாவளியில் தப்பியிருந்தவர்களை அவ்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் முடிவை கண்டித்துப் பேசினார். பேச்சை நிறுத்துமாறு அவர் பணிக்கப்பட்டார்; வேறு ஏதும் பேசவில்லை என்று கூறினால்தான் அங்கு தொடர்ந்து இருக்கலாம் என்றும் அவர் கூறப்பட்டார். ஆயினும்கூட ஒரு காவலாளி அவரை வெளியே அழைத்துச் சென்றார்; எனினும் பின்னர் அவர் விசாரணைகளின் ஒரு பகுதியைக் கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இயற்கை சீற்றங்கள் மற்றும் பயங்கரவாத தாங்குதல்களை எதிர்கொள்ளும் பொறுப்பை கொண்டிருந்த துறையின் தலைவரான ஷேர்டாப்பை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அது நிறுவப்பட்டதில் இருந்து என்ன செய்துவந்தது என்று எவருக்கும் கேட்கத் தோன்றவில்லை. DHS வலைதளத்தின்படி, இந்தப்பிரிவு, "இயற்கை சீற்றங்கள் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளுவதற்கு தடுப்பு முறையில் திட்டம் இடுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த முயற்சிகளை தயாரித்தல்" ஆகியவற்றை செய்திருக்க வேண்டும் என்பதோடு, "முழு அளவு மாநில, உள்ளூர், தனியார் பங்கையும் கொண்டு ஒரு பேரழிவுத் திறன் சீற்றத்தை எதிர்கொள்ள திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்". கத்ரினா சூறாவளி தோற்றுவிக்கும் நிலைமைகள் போன்றவற்றை எதிர்கொள்ளுவதற்கு தக்க வழிவகைகளை தயாரிக்காவிட்டால் பயங்கரவாதத்தின்மீதான போர் என்பதற்கு என்னதான் பொருள்?

செப்டம்பர் 11 தாக்குதல்களில் இருந்தே, புஷ் பல முறையும் தன்னுடைய "மிகப் புனிதனமான கடமை", "அமெரிக்க உள்நாட்டைப் பாதுகாப்பது ஆகும்" என்றும் நிர்வாகத்துறையின் மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்க மக்களுடைய பாதுகாப்பை போற்றுவது என்றும் கூறியுள்ளார். ஆயினும் கூட "அமெரிக்க உள்நாட்டில்" அச்சுறுத்தப்படும் நிலைமை ஏற்படும்போது, அமெரிக்க மக்கள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளபோது, பேரழிவை எதிர்கொள்ளும் தருணம் வந்தபோது, அனைத்துத் தயாரிப்புக்களும் ....... பூஜ்யத்தில்தான் முடிந்தன."

சூறாவளி கத்ரினா போன்ற நிகழ்வை எதிர்கொள்ளுவதற்கு தக்கத் தயாரிப்புக்கள் இல்லாமற் போயிற்று; ஏனெனில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் முழு நோக்கமும் ஒரு இயற்கையோ வேறுவிதத்திலோ வரும் பேரழிவை எதிர்கொள்ளுவதற்காக திட்டமிடப்பட்டிருக்கவில்லை. மாறாக அது ஒரு போலிக் காரணமாகக் கொள்ளப்பட்டு அமெரிக்க இராணுவவாதம் மகத்தான முறையில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கும், முன்னோடியில்லாத வகையில் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமெரிக்க உளவுத்துறைகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ-போலீஸ் கருவியை செப்படனிடவும்தான் நிறுவப்பட்டது. துறையின் நோக்கம் அதை இயக்கும் நபர்களை தேர்ந்தெடுத்ததில் நன்கு பிரதிபலித்தது. முதல் DHS செயலாளரான டாம் ரிட்ஜுக்குப் பதிலாக ஷேர்ட்டாப் கொண்டுவரப்பட்டது, நீதித்துறையில் அவர் கொண்டிருந்த பங்கிற்காக; அதாவது தேச பக்த சட்டத்தை இயற்றுவதற்கு அவர் உதவியதும் செப்டம்பர் 11க்குப் பிந்தைய வாரங்களில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய குடியேறியவர்கள் ஏராளமானவர்களை கைது செய்ததில் அவர் கொண்டிருந்த பங்கும்தான். அவருடைய பதவி நிலைநிறுத்தத்தின் குழுவிசாரணையின் போது அவர் குடியரசு, ஜனநாயக என்ற இரு கட்சிகளின் முழு ஆதரவையும் கொண்டிருந்தார்.

புஷ்ஷின் முதல் விருப்பமான பெர்நார்ட் கெரிக் -- அதிகபட்சம் ஒரு போலீஸ் குண்டர் என்று விவரிக்கப்படலாம் -- தொடர்ந்து செய்துவந்த குற்றங்கள் அம்பலமாகிவிடுமோ என்ற காரணத்தால் தன்னுடைய பெயரை நீக்கிக் கொண்ட பின்னர்தான், ஷேர்ட்டாப் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். FEMA என்னும் பேரழிவை எதிர்கொள்ளும் நிறுவனம் தொடர்ச்சியாக பல அரசியல் போலிகளையும் புஷ்ஷின் துதிபாடுபவர்களையும் சுமக்க நேரிட்டுள்ளது; இவர்களுள் மைக்கேல் பிரெளன் மிகத் திறமையற்றவராவார். இந்த அமைப்பு அரசியலில் வெகுமதி அளிப்பவர்களுக்கு என நிறுவப்பட்டுள்ளது.

"பயங்கரவாதத்தின்மீதான போர்" என்பது ஆப்கானிஸ்தான, ஈராக் போர்கள், தேச பக்த சட்டம் இயற்றப்படல், உள்நாட்டில் ஒற்று வேலை நடத்துதல் இன்னும் ஏராளமான மற்ற வலதுசாரி ஜனநாயக விரோதச் செயல்களை நடத்துவதற்கு காரணங்களை கொண்டுள்ள தொகுப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் செப்டம்பர் 11 தாக்குதல்களை பயன்படுத்துவதுடன் --அதுபற்றி முறையான விசாரணைகூட நடக்கவில்லை-- இன்னும் கூடுதலான வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தன்னுடைய ஆட்சிக்கு அரசியல் எதிர்ப்பு வந்தால் அடக்குவதற்கும் அதைப் பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள முழு அரசியல், செய்தி ஸ்தாபனமும் பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பொய்யை ஏற்றுள்ளது. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர், நிர்வாகத்தை எவ்விதத்திலும் தீவிரமாக அறைகூவ முடியில்லை. பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற போலிக் கூற்றை சவாலுக்கு உட்படுத்துவது என்பது எந்த சமூக நலன்களை காக்க அது தோற்றுவிக்கப்பட்டதோ அதை தாக்குவதற்கு ஒப்பாகும்; ஆனால் இரண்டு அரசியல் கட்சிகளும் அந்த நலன்களைத்தான் ஆதரிக்கின்றன. கத்ரினா சூறாவளி உலகிற்கு அமெரிக்காவில் உள்ள மகத்தான சமூக சமத்துவமற்ற நிலையை உணர்த்தியதோடு மட்டுமில்லாமல், அந்த சமத்துவமின்மையை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் பயங்கரமான மோசடியையும் உணர்த்தியுள்ளது. இந்தப் படிப்பனைகளை மறைப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

Top of page