World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese police massacre protestors in Guangdong

குவாங்டோங்கில் கண்டனக்காரர்கள் மீது சீனப்போலீஸ் படுகொலை நடவடிக்கை

By John Chan
15 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

குவாங்டோங் தெற்கு மாகாணத்தில் மீனவர்கள் மற்றும் கண்டனம் செய்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலில் சீன துணை இராணுவ போலீசார் துப்பாக்கிகளாலும் தானியங்கி துப்பாக்கிகளாலும் சுட்டனர். மற்றும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு இரவு நேரத்தில் நடைபெற்ற மோதல்களில் குறைந்த பட்சம் நான்கு பேரை சுட்டுக் கொன்றனர். இந்த இரத்தக் களரி ஒடுக்குமுறை சான்வே நகரத்திற்கு அருகில் 10000 கிராம மக்கள் வாழ்கின்ற டோங்சோவ்வில் நடைபெற்றது.

சென்ற வாரக் கடைசியில் சீன அரசாங்கம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அறிவித்தது. என்றாலும் சர்வதேச பொது மன்னிப்பு சபை நான்கு பேர் இறந்ததாக உறுதிபடுத்தியது மற்றும் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தது. 20 முதல் 50 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று கிராம மக்கள் கூறியதாக ஹாங்காங் ஊடகங்கள் செய்திகளை மேற்கோள்காட்டியிருக்கின்றன. டசின் கணக்கில் அந்த கிராம மக்களை இன்னும் காணவில்லை.

1989 ஜீன் 4 இல் நடைபெற்ற தியானென்மென் சதுக்க படுகொலைகளுக்கு பின் சீன பாதுகாப்புப் படைகள் பேரணி நடத்தியவர்களை நோக்கி சுட்டதாக கூறப்படும் முதலாவது சம்பவம் இதுதான். நாட்டில் வளர்ந்து வரும் கண்டனப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டால் மக்கள் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சுட்டிக்காட்டுவதற்காக ஏழை விவசாயிகள் மட்டுமல்லாமல் குவாங்டோங் மற்றும் சீனாவில் முழுவதிலும் உள்ள மில்லியன்கணக்கான தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் திட்டமிடப்பட்டதாக இந்த நடவடிக்கை தோன்றுகிறது.

டோங்செளவ் கிராம மக்கள் அருகாமையிலுள்ள குன்றுப் பகுதியில் ஒரு மின்நிலையத்தை அமைப்பதற்காக அரசாங்கம் பறிமுதல் செய்த நிலத்திற்கு இழப்பீடு தரவில்லை என்பதற்காக பேரணி நடத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இழப்பிட்டு பண ஒதுக்கீடுகளை திருடிவிட்டனர் என்று நம்பி விவசாயிகள் அக்டோபர் முதல் அந்த கட்டுமானம் நடைபெறுகின்ற இடத்திற்கு வெளியில் கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியிலுள்ள ஏரியில் மீன்பிடிப்பதும் பாதிக்கப்படும் என்று உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

அந்தப்பிராந்தியத்தில் பெருகி வரும் தொழிற்துறை மற்றும் நகர்புற வளர்ச்சிக்கு தேவைபடும் மின்சாரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 700 மில்லியன் டாலரில் திட்டமிட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தை அரசிற்கு சொந்தமான குவாங்டோங் செங்குடாக்கடல் மின் உற்பத்தி நிறுவனம் கட்டி வருகிறது.

டிசம்பர் 8ல் Washington Post வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் அந்த சம்பவங்கள் பற்றிய விரிவான விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. டிசம்பர் பிற்பகலில் மூன்று கிராமத் தலைவர்கள் ஒரு புகாரை தாக்கல் செய்வதற்காக அந்த தொழிற்சாலைக்கு சென்றதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. காவலுக்கு நின்ற கலவரத் தடுப்பு போலீசார் அவர்களை கைது செய்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அந்தப் பகுதிக்கு வெளியில் திரண்டுவிட்டனர்.

போலீசார் ஆரம்பத்தில் கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைகுண்டுகளை வெடித்தனர் ஆனால் விரைவில் 400-500 இற்கு மேலாக அதிகாரிகள் துணை இராணுவ மற்றும் கலவரத் தடுப்பு போலீசாரை அனுப்பி பலத்தை பெருக்கினர். இந்த நடவடிக்கைகள் நிலவரத்தை மோசமடைய செய்தன மற்றும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் மீண்டும் போலீசாரை எதிர்கொண்டனர். போலீசாரை தாக்குவதற்கு நாட்டு வெடி குண்டுகளை கிராம மக்கள் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறினார் ஆனால் மற்ற செய்திகளின்படி பட்டாசு வெடிகள்தான் சம்மந்தப்பட்டிருந்தன.

நிலவரம் எதுவாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் நடவடிக்கையை ஒரு படுகொலை என்று தான் வர்ணிக்க முடியும்.

Washington Post பின்வருமாறுகுறிப்பிட்டிருந்தது: ''ஒரு கிராமவாசி அந்த நேரத்தில் நடந்ததை சொல்லும்போது தான் கண்டதாகவும் கேட்டதாகவும் குறிப்பிட்டவை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு பதிலடியாக போலீசார் செவ்வாய் மற்றும் புதன் இரவுகளில் ஏழு மணி நேரத்திற்கு மேல் 'மிகவும் வேகமாக வெடிக்கும் துப்பாக்கிகளால் சுட்டனர்.' சில கிராம மக்கள் ஆயுத போலீசார் AK-47 தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்தி வந்ததாக கூறினார் இது சீன இராணுவம் பயன்படுத்துகின்ற ஆயுதங்களில் ஒன்று. எல்லா கிராம மக்களையும் விரட்டுகின்ற வரை போலீசார் சுட்டுக் கொண்டேயிருந்தனர்'' என்று நேரில் கண்ட மற்றொருவர் கூறினார்.

குறிப்பாக ஒரு கொடூரமான சம்பவத்தின்போது அருகாமையிலுள்ள மலையில் ஏறி வன்முறையிலிருந்து தப்பிப்பதற்கு முயன்ற ஆறு பேரை ஆயுதம் தாங்கிய போலீசார் விரட்டிச் சென்றனர். அவர்களில் ஐந்து கிராமியர்கள் கொல்லப்பட்டனர். காலில் காயத்துடன் தப்பித்தவர் தந்த தகவலை டிசம்பர் 10ல் New York Times வெளியிட்டிருக்கிறது. மிகத் தொலைவிலிருந்து அவர்கள் முதலில் சுட்டதாக கூறப்பட்டது. அதற்குப் பின்னர் நெருங்கி வந்த போது காயமடைந்து நகர முடியாதிருந்தவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார்.

அந்த கிராமத்து பிரதான சாலையில் அடுத்த நாள் மாலையிலும் அதேபோன்ற மோதல்கள் நடைபெற்றன. தமது இளைய சகோதரர் இரண்டு சுற்று துப்பாக்கி ரவைகளால் சுடப்பட்டதில் ஒன்று அவரது மார்பிலும் மற்றொன்று அவரது சிறுநீர்ப்பையிலும் புகுந்தது என்று அந்த கிராமத்தை சேர்ந்த லியூ யுஜிங் குறிப்பிட்டார். மருத்துவமனை செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார்.

இரண்டு இரவுகள் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளுக்கு பின்னர் எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய நூற்றுக் கணக்கான போலீஸ் அதிகாரிகள் அந்தப் பகுதியை மூடி விட்டனர். தெருக்களில் கிடந்த உடல்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்த சிலர்கள் எடுத்து வர முடியவில்லை. ''அங்கு உடல்கள் கிடப்பதை நான் பார்த்தேன். குடும்ப உறுப்பினர்கள் அங்கு சென்று உடலை எடுத்து வர அஞ்சினர்'' என்று நேரில் கண்டவர் சொன்னதை Washington Post வெளியிட்டிருக்கிறது.

சாங் என்ற புனைபெயரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கூறிய தகவலை New York Times மேற்கொள்காட்டியிருக்கிறது. அவர் உள்ளூர் மருத்துவ மனையில் மூன்று உடல்களை பார்த்ததாகவும் மோதல்கள் நடைபெற்ற இடத்தில் அதிக அளவில் கண்டதாகவும் குறிப்பிட்டார். ''நான் அங்கு சென்றேன் மற்றும் அங்கு ஒரே வரிசையில் ஏழு அல்லது எட்டு உடல்கள் கிடந்ததை பார்த்தேன் பல போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர் அந்த உடல்களை எடுத்துச் செல்வதற்கு அந்தக் குடும்பங்கள் முயன்றதற்கு அவர்களால் மறுக்கப்பட்டது. நேரில் கண்ட மற்றொருவர் `Li` வேறு இடத்திற்கு உடல்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றதாக'' கூறினார். ''கிராம மக்கள் நெருங்கி வந்து பார்க்க அனுமதி தராமல் சில உடல்கள் சாலை சந்திப்புக்களில் எரிக்கப்பட்டன'', கடலுக்குள் 13 சடலங்கள் வீசி எறியப்பட்டதை தாங்கள் கண்டதாக மற்றவர்கள் கூறினர்.

டிசம்பர் 11 அன்று கனடாவின் Globe and Mailக்கு தொலைபேசியில் பேட்டியளித்த வீ என்ற புனைபெயர் கொண்ட ஒரு கிராமவாசி குறிப்பிட்டார்: ''நாங்கள் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறோம். எங்களில் சிலர் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களது தலைவர்களின் வீடுகள் இன்று மூடிவிடப்பட்டுவிட்டன மற்றும் ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு தலைமை வகிக்க யாரும் துணிச்சலாக முன் வரவில்லை. எங்களது கிராமத்தை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு இராணுவ டாங்கிகள் வருகின்றன என்று வதந்திகள் உலவுகின்றன... தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்''.

உள்ளூர் விவசாயிகள் இந்தப் படுகொலையை சீனாவில் ஜப்பான் இராணுவம் 1930களிலும் மற்றும் 1940களிலும் மேற்கொண்ட போர்க்கால அட்டூழியங்களோடும் மற்றும் 1949 புரட்சிக்கு முன்னர் சியாங்கே ஷேக்கின் கொடூரமான சர்வாதிகாரத்தின் போது நடைபெற்ற அட்டூழியங்களோடும் ஒப்பு நோக்கினர்.

அந்த சம்பவம் பற்றிய செய்தியை மறைக்க முயன்ற பின்னர், அந்த செய்தி சீன வலைத் தளங்கள் மூலமும் மற்றும் ஹாங்காங் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மூலமும் பரவ தொடங்கியதை தொடர்ந்து அரசு நடத்துகின்ற ஊடகங்கள் அந்த செய்தி பற்றி பதில் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ''தொந்தரவு கொடுக்கின்ற'' 170 மக்கள் தலைமையில் வந்தவர்கள் அந்த மின்சார நிலையத்தை கத்திகளாலும் பெட்ரோலியம் நிரப்பிய புட்டிகளாலும் மீன்பிடிக்கும் வெடிகுண்டுகளாலும் தாக்க முயன்றதாக அதிகாரபூர்வமான செய்தி நிறுவனம் சின்ஹூவா தெரிவித்தது. ''அந்த குழப்பம் விளைவிக்கும் கும்பல் வெடி குண்டுகளை போலீஸ் நிலையத்தில் வீசிய நேரத்தில் இருட்டாகி விட்டது. கலவர உணர்வில் போலீசார் துப்பாக்கியால் சுட வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது'' என்று சின்ஹூவா தகவல் தந்தது.

பொது மக்களிடை ஆத்திரம் வளர்ந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் சீன அரசாங்கம் அந்த துப்பாக்கி சூட்டிற்கு நேரடியாக கட்டளையிட்ட ஒரு போலீஸ் படைத்தலைவரை கைது செய்தது. என்றாலும் அந்த படைத்தலைவர் யார் என்று அடையாளப்படுத்தவில்லை மற்றும் அரசு ஊடகம் அந்த அதிகாரியை பாதுகாத்து, ''குறிப்பிட்ட அவசர சூழ்நிலைகளின் கீழ்'' துப்பாக்கி சூடு நடத்துவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது என்று கூறியது.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது முதல் ஊடகங்களில் அந்தச் செய்தி திரித்து வெளியிடப்பட்டது வரை நடத்தப்பட்ட பெரும் எடுப்பிலான நடிவடிக்கைகளில் அரசாங்கத்தின் உயர்மட்டங்களை சேர்ந்தவர்கள் இதில் தொடர்பு கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரி சென்ற சனிக்கிழமையன்று அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தார் மற்றும் ஒரு ஒலிபெருக்கியை பயன்படுத்தி கிராம மக்களை ''காட்டுமிராண்டிகள்'' என்று கண்டித்தார். ''நாங்கள் துப்பாக்கியால் சுடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டோம்'' என்று அறிவித்தார்.

சர்வதேச பொது மன்னிப்பு சபை ஒரு புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. பொது மன்னிப்பு சபையின் ஒரு இயக்குனரான காத்தரின் பார்பர் அந்தக் கொலைகள் ''உள்ளத்தை உறையச் செய்பவை'' என்றார். ''கிராமப்புற சீனாவில் இது போன்ற நிலத் தகராறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது மற்றும் அதை தீர்த்து வைக்க பலாத்காரம் பயன்படுத்தப்பட்டு வருவது தகராறுகளை தீர்த்து வைப்பதற்கு பயனுள்ள வழி முறைகளில் கவனம் செலுத்த வேண்டியது சீன அதிகாரிகளுக்கு ஒரு அவசர தேவை என்பதை உணர்த்துகின்றன'' என அவர் மேலும் கூறினார்.

நிலத்தகராறுகளுக்கு பின்னணியாக அமைந்திருப்பது வளர்ச்சியுற்ற பகுதிகளுக்கான சந்தை தேவை பெருகி வருவதில் அடங்கியுள்ளது. பெய்ஜிங் டோங்செளவ் மின்சார உற்பத்தி நிலையத்தை ஒரு தேசிய அளவிலான திட்டம் என்று அறிவித்திருக்கிறது மற்றும் பெற்றோர் நிறுவனமான Guangdong Yuedian Group மாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக சீன அரசிற்கு சொந்தமான நிலங்களை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் வசமுள்ள இடங்களில் தொழிற்துறை திட்டங்களையும் உள் கட்டமைப்புகளையும் கட்டி வருகிறார்கள். இது குறிப்பாக சீனாவின் பிரதான ஏற்றுமதி மண்டலமான குவாங்டோங் மாகாணத்தில் அலைபோன்றதொரு கண்டனங்களை தூண்டிவிட்டிருக்கிறது. சென்ற ஆண்டு 74,000 கண்டனங்களும் கலவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன அவற்றில் 3.7 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இது தவிர அருகாமயிலுள்ள ஹாங்காங்கின் சீன ஆதரவு பெற்ற புதிய தலைமை நிர்வாகிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற வெகுஜன கண்டனத்தை ஒரு முன் உதாரணமாக முக்கிய நிலப்பகுதி (சீன) தொழிலாளர்களும் விவசாயிகளும் பின்பற்றக் கூடும் என்று அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது.

அத்துடன் ஆழமான சமூக கொந்தளிப்புக்களும் உருவாகி வருகின்றன. ஹாங்காங்கில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னர் டிசம்பர் 8ல் வெளியிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒன்றியத்தின் ஒரு சர்வதேச மாநாட்டு (ICFTU) அறிக்கை சீனா உலகின் கடும் சுரண்டும் தொழிற்கூடமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது'' என்று வர்ணித்துள்ளது.

சீனா உலக வர்த்தக அமைப்பில் நுழைந்திருப்பதால் முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிறிய தட்டினர்தான் பயனடைந்திருக்கின்றனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சுமார் 250 மில்லியன் சீன மக்கள் தினசரி 1 டாலருக்கும் குறைந்த வருவாயில் வாழ்ந்த கொண்டிருக்கின்றனர் மற்றும் 700 மில்லியன் அல்லது 47 சதவீத மக்கள் தினசரி 2 டாலருக்கும் குறைந்த ஊதியம் பெறுகின்றனர். இதன் விளைவாக ''உலக நுகர்வோருக்கு டி ஷர்ட்களிலிருந்து DVD பிளேயர்கள் வரை வழங்குகின்ற மக்கள் வாரத்திற்கு 60 முதல் 70 மணி நேரம் பணியாற்றுகின்றனர். ஒரே அறையில் எட்டு முதல் 16 பேர் தங்கியிருக்கின்றனர் மாதம் 44 டாலர்கள் என்று மிகக் குறைவான ஊதியங்கள் சம்பாதிக்கின்றனர் மற்றும் தொழிற்சாலைகளில் அவர்கள் காயமடைவார்களானால் அவர்களுக்குள்ள ஒரே எதிர்காலம் வேலையில்லாது இருப்பதுதான்.'' எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஹாங்காங்கில் கூட்டம் நடத்திய உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் டோங்செளவ் படுகொலை ஒரு செய்தியை தெரிவிக்கவும் பயன்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் 16 ஆண்டுகளுக்கு முன் தியானெமென் சதுக்கத்தில் அது செய்ததைப்போன்று தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு மிகக் கொடூரமான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பெய்ஜிங் தயங்காது என்பது தான்.

Top of page