World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Bolivia's "socialist" president-elect Morales guarantees private property

பொலிவியாவின் ''சோசலிஸ்ட்'' ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொராலஸ் தனியார் சொத்துடமைக்கு உறுதியளிக்கிறார்

By Bill Van Auken
4 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

வாக்குப்பதிவில் டிசம்பர் 18 அன்று வெற்றி பெற்று இரண்டு வாரங்களுக்கு பின்னர் பொலிவியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவோ மொராலஸ் வாஷிங்டனை வாயளவில் பேசியும் கியூபாவிற்கும் வெனிசூலாவிற்கும் மின்னல்வேக விஜயங்களையும் மேற்கொண்டுள்ளதுடன், பொலிவியாவின் ஒருசிலவராட்சி மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் தனியார் சொத்துடமையை மரியாதையாய் நடத்துவதற்கு உள்நாட்டில் மனப்பூர்வமாக உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்.

சோசலிசத்தை நோக்கி செல்கின்ற இயக்கம் அல்லது MAS, (Movement towards Socialism) இன் வேட்பாளராக 54 சதவீத வாக்குகளை வென்றெடுத்துள்ள அவர், நவீன பொலிவியன் வரலாற்றில் வாக்குப் பதிவின் ஒரு அறுதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசியல்வாதியாவார். 85 சதவீதமான மக்கள் ஆதிபூர்வக் குடியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில் அந்த நாட்டில் ஜனாதிபதி பதவியில் அமரும் முதலாவது அமெரிக்க இந்தியர் ஆவார்.

பொலிவிய ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கான ஒரு வரலாற்று ரீதியான வெற்றியாக சர்வதேச இடதுகளின் பெரும்பகுதியினரால் மொராலஸின் வெற்றியை அறிவிக்கப்பட்டுவருகிறது. அதே நேரத்தில் வாஷிங்டனில் புஷ் நிர்வாகம் வெளிப்படையாக MAS தலைவர் ஆட்சிக்கு வருவதை எதிர்த்ததுடன், பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் கியூபா அல்லது வெனிசூலாவின் சூழ்சியின் விளைவுகள் என்று மறைமுகமாக கோடிட்டுக் காட்டியது.

அமெரிக்காவின் எதிர்ப்பு இருந்தபோதிலும் மொராலஸின் இடது ஜனரஞ்சகமான வாய்வீச்சு மூலம் அவர் பதவிக்கு வந்திருப்பது புரட்சிகரமான எழுச்சிகளிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்வதற்கு அந்த நாட்டின் ஆளும் செல்வந்ததட்டினரால் மேற்கொள்ளப்படும் கடைசி நம்பிக்கையற்ற முயற்சிதான் என்பதை பொலிவியாவில் எழுச்சியுற்றுக் கொண்டுள்ள சம்பவங்கள் காட்டுகின்றன.

தேர்தலை பின்தொடர்ந்து அவர் கியூபாவிற்கு முதலிலும் மற்றும் அதற்குப் பின்னர் வெனிசூலாவிற்கும் சர்வதேச சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடக்கியதால் ஜனவரி 22 வரை மொராலஸ் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளமாட்டார். இந்த இரு நாடுகளுடனும் ஒரு ''நல்ல அச்சாணியை'' உருவாக்குவதை பொலிவியா நோக்கமாகக்கொண்டிருக்கிறது என்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டரின் ஒரு பேச்சாளர் தெரிவித்தார். இது பிடல் கேஸ்ரோ மற்றும் ஹிகோ சாவேஸ் அரசாங்கங்களை பூதாகரமாக சித்தரிப்பதற்கு புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒரு மறைமுகமான எடுத்துக்காட்டாகும்.

''தேசிய பெரும்பான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் வெனிசூலாவில் ஹிகோவுடனும் மற்றும் கியூபாவில் பிடலுடனும் நாங்கள் பணியில் இணைந்திருக்கிறோம்'', ''இவை புதிய காலங்கள். இந்த புத்தாயிரமாண்டு மக்களுக்காகவே தவிர பேரரசுக்கு அல்ல.'' என்று செவ்வாயன்று காரகாசில் மொராலஸ் குறிப்பிட்டார்.

கியூபாவிற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 30ல் பயணம் செய்தார். அமெரிக்கா ''இரு தரப்பு இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புமானால் அவற்றை அது பெரும் ஆனால் கீழ்படிதல் எதுவுமில்லாமல், அடிபணிந்து நடக்காமல், நிபந்தனைகள் எதுவுமில்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும்'' என்று மொராலஸ் அறிவித்தார். பொலிவியன் மக்கள் ''ஜனநாயகத்தின் வழிவகையினால்'' ஒரு மாற்றத்தை முடிவு செய்திருப்பதால் அது ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்க்கான அடித்தளத்தின் அச்சுறுத்தலை அவர் தள்ளுபடி செய்தார். ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி சிந்திப்பதற்கு முன்னர், அமெரிக்காவிலுள்ள அரசாங்கம் ஈராக்கிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக் கொள்வது பற்றியும் தெற்கு அமெரிக்க நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களை மூடி விடுவது தொடர்பாக பற்றி முன்னதாக சிந்திப்பது நல்லது'' என்று அவர் மேலும் கூறினார்.

''அமெரிக்காவுடன் எப்போதுமே தமக்கு நல்லுறவுகள் இருந்ததில்லை'' என்று மொராலஸ் குறிப்பிட்டார். 1990களில் பொலிவியன் முன்னாள் இராணுவ சர்வாதிகரி ஹிகோ பான்சரின் அரசாங்கம் அமெரிக்கா ஆதரவோடு கொக்கோ ஒழித்துக்கட்டும் பிரச்சாரத்திற்கு எதிராக கொக்கோ வளர்ப்பவர்களுடைய கண்டனங்களின் தலைவராக 1990களில் அவர் அரசியலுக்கு வந்தார். அந்தக் காலகட்டத்தில் அலை போன்று தனியார்மயமாக்கலினால் பாரிய வேலைகள் அழிக்கப்பட்டபோது வேலை இழந்த முன்னாள் சுரங்கத் தொழிலாளர்களில் பலர் உயிர் வாழ்வதற்கு ஒரு வழியாக இந்த செடியை பயிரிடத் தொடங்கினர்.

2002ல் மொராலஸ் முதலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது பொலியாவில் அமெரிக்கத் தூதராக பணியாற்றி வந்த மானுவேல் ரோச்சா அவர் வெற்றி பெற்றால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு உதவியை வெட்டி விடும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த தலையீட்டினால் ஒரு ஆவேச தேசியவாத எதிர்விளைவு தூண்டப்பட்டு MAS இற்கு வாக்குகள் கணிசமான அளவிற்கு சேர்ந்தன.

கடைசியாக நடைபெற்ற தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையே நபைெற்றிருப்பதற்கு காரணம் பொலிவியாவின் ஸ்திரமற்ற தன்மையையும் அதிதீவிரமான நெருக்கடியும் தான். தென் அமெரிக்காவிலேயே பரம ஏழை நாடான பொலிவியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெகுஜன ஆர்பாட்டங்களாலும் வேலை நிறுத்தங்களாலும் இரண்டு அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தன.

வாக்களிப்பின்போது முன்னணி அமெரிக்க அதிகாரிகள் பல்வேறு அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை வெளியிட்டனர். ஜூலையில் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான பென்டகனின் பிரதிநிதி துணைச் செயலாளர் ரோஜர் பர்டோ மாரர் ஹட்சின் கழகத்தின் வலதுசாரி சிந்தனையாளர் குழுவில் உரையாற்றும்போது விடுத்த எச்சரிக்கை ''பொலிவியாவில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது அந்தப் புரட்சி 1959ல் நடைபெற்ற கியூபா புரட்சியை போன்று தீவிரமான விளைபயன்களை கொண்டதாக அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது. பொலிவியாவில் நடைபெற்றுக் கொண்டுள்ள சம்பவங்கள் இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் பிற இடங்களிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அவற்றை உங்களது வாழ்நாளின் மிகுதிக்காலம் முழுவதிலும் சமாளித்தாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

சென்ற ஆகஸ்ட்டில் அந்த பிராந்தியத்திற்கு மிக அண்மைக் காலத்தில் தமது விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ''கியூபா மற்றும் வெனிசூலா ஆகிய இரண்டு நாடுகளும் பொலிவியாவின் நிலைமைகளில் பயனற்ற வழிகளில் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு நிச்சயமாக சான்று உள்ளது'' என்று கூறினார். இந்த இரண்டு அரசாங்கங்களுக்கு எதிராக வாஷிங்டன் நாசவேலை குற்றச்சாட்டை சுமத்துகையில், பொலிவிய அரசாங்கத்தின் ஒரு ஏறத்தாழ முதுநிலை கிளையாக தசாப்தங்களாக La Paz இல் உள்ள அமெரிக்க தூதரகம் செயல்பட்டு வந்திருப்பதை பொலிவிய மக்களில் பலர் மறந்துவிடவில்லை.

ஹவானாவிலும் கராகாசிலும் மொராலஸின் இடது-தேசியவாத அறிவிப்புக்களுக்கும், கியூபாவை முற்றுகையிடுவதற்கு 46 ஆண்டுகளாக தான் மேற்கொண்டுள்ள முயற்சிகளை சீர்குலைப்பதற்கு இலத்தீன் அமெரிக்காவில் மற்றொரு ஆட்சி தோன்றியிருப்பதன் மீது வாஷிங்டனின் ஆத்திரத்திற்கு அப்பாலும் மொராலஸின் உலக சுற்றுப்பயணத்தில் மிக முக்கியமான நிறுத்தங்கள் (நாடுகள்) இன்னும் வர வேண்டியிருக்கிறது.

இதில் ஐரோப்பா சீனா மற்றும் பிரேசில் ஆகியவையும் அடங்கும் --இவை அனைத்தும் பொலிவியாவின் பொருளாதாரத்தில் அமெரிக்காவை விட மிகவும் கணிசமான பங்கு வகிப்பதற்கு சமநிலையில் இருக்கின்றன அல்லது செயல்படவிருக்கின்றன. நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 11 சதவீத அளவிற்குத் தான் அமெரிக்கா பங்களிப்பு செய்கிறது. வாஷிங்டன் இன்னும் பொலிவியாவின் மிகப்பெரிய இரு தரப்பு நன்கொடையாளராக இருந்து வந்தாலும் அவற்றில் 150 மில்லியன் டாலர் ஆண்டு உதவியில் மூன்றில் இரண்டு பங்கு கொக்கோ பயிரிடுவதை ஒழித்துக் கட்டுவதற்கு செல்கிறது இதற்கு முற்றுப் புள்ளி வைக்க மொராலஸ் உறுதி மொழியளித்துள்ளார்.

வாஷிங்டன் இதற்கு முன்னர் தனது ''புழக்கடை'' (கொல்லைப்புறம்) என்று கூறி வந்த ஒரு கண்டத்தின் சின்னமாக இருந்த அந்த நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரும்பகுதி அமெரிக்காவின் பிடியிலிருந்து வேகமாக தளர்ந்து கொண்டு வருவதால் பொலிவியாவின் நிகழ்வுகள் அமெரிக்காவின் ஆத்திரத்தை உசுப்பிவிடப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களான ஸ்பெயினின் Repsol, பிரான்சின் Total மற்றும் British Gas, பிரேசிலின் அரசு நடத்துகின்ற Petrobras நிறுவனத்துடன் சேர்ந்து பொலிவியாவின் எரிவாயு இருப்புக்களை சுரண்டிக்கொள்வதில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. அது 50 டிரில்லியன் கன அடிக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது வெனிசூலாவிற்கு அடுத்து கண்டத்தில் இரண்டாவது பெரிய அளவாகும். பதிவி விலகும் பொலிவிய அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் புதியதொரு இரு தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது அது ஆர்ஜன்டினாவிற்கு சொந்தமான எரிசக்தி நிறுவனத்தின் பொலிவியா பங்குகளை வாங்குவதில் முயன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அது தென்அமெரிக்காவிலிருந்து எரிசக்தி வளங்களையும் இதர கச்சாப்பொருட்களையும் பெறுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பங்காகும்.

மொராலஸ் வெற்றியை மிகத் தீவிரமாக ஆதரித்து நிற்பது ஜனாதிபதியான லூயிஸ் 'இனசியோ ''லூலா'' டா சில்வாவின் பிரேசில் அரசாங்கமாகும். அது MAS தலைவர் பொலிவியாவின் அரசு பதவியை ஏற்பதற்கு தெளிவற்ற ''இடது'' உணர்வுகளின் உந்துதலால் அல்ல ஆனால் மாறாக பிராந்தியத்தில் பொருளாதார மேலாதிக்கத்திற்காக பிரேசில் முதலீடுகள் மேலும் உந்து சக்தியாக செயல்படும் என்ற நம்பிக்கையாலாகும். மொராலஸை ஆதரிக்கின்ற இதர தெற்கு முனை நாடுகளான மெர்கோசூரில் இப்போது வெனிசூலாவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை இந்த பிராந்தியத்தில் ''சுதந்திர வர்த்தக'' உடன்பாட்டை திணிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளை எதிர்க்கின்றன.

புஷ் நிர்வாகம் கருத்தியல்ரீதியாக கண்டனங்களை தெரிவித்து வருவதற்கு அப்பாலும் சர்வதேச நிதி வட்டாரங்களுக்குள் மொராலஸின் வெற்றியை மிகக்கவனத்துடன் பார்க்கின்றனர். முன்னணி கடன்-நிர்ணய அமைப்பான பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் ''அந்த அரசியல்வாதி பிரச்சாரத்தின் வாய் வீச்சு பற்றி கவலை கொண்டிருந்தாலும் அவை சமீப கால அரசாங்கங்கத்தினால் மேற்கொண்டு வந்திருக்கும் தாராளவாத பொருளாதார கொள்கைகளையும் கொக்கோ சாகுபடியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வாதிட்டுவரும் அமெரிக்கவின் பிராந்திய கொள்கைகளுக்கு சவால் விடுவதாக அமைந்திருந்தாலும் மொராலஸின் வெற்றி அவரது அரசாங்கத்திற்கு மிக அண்மைக்கால முன்னோடி அரசாங்கங்களை விட மிக அதிகமான சட்டப்பூர்வமான தன்மையை வழங்குகிறது மற்றும் அது நிர்வாகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இட்டுச் செல்லும்''.

பிரான்சிற்கு சொந்தமான ஒரு அமைப்பு ''தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மொராலஸ் தனியார் சொத்துடைமையை மதிப்பதாக உறுதிமொழி அளித்திருக்கிறார்'' என்பதை ஒப்புதல் அளித்து குறிப்பிட்டிருக்கிறது. மற்றும் அது பன்முக கடனை இரத்துச் செய்ய அறிவிப்பது அவரது முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களின் சுதந்திர சந்தை பொருளாதாரக் கொள்கைகளை அவர் தொடர்ந்தும் நிலைநாட்ட போதுமானதாக இருக்கும் என அது முன்கணித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னரே மொராலஸ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு இரண்டிற்கும் கஷ்டப்பட்டு மறு உறுதிமொழிகளை வழங்கினார். அது அவர் எந்தவிதமான திடீர் பொருளாதார அல்லது சமூக மாற்றங்களை மேற்கொள்ள போவதில்லை என்பதாகும். ''நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் துரதிருஷ்டவசமாய் அந்த நவீன தாராளவாத சட்டங்களை மதிப்பது எனது கடமையாகும். சில மாற்றங்களை கட்டளைகள் மூலமும் இதர மாற்றங்களை சட்டம் இயற்றுவதன் மூலமும் நாங்கள் செயல்படுத்த முடியும் ஆனால் ஏற்கனவே 20 ஆண்டுகளாக நவீன தாராளவாத சட்டங்கள் இருந்து வருவதால் மகத்தான மாற்றங்கள் எதுவும் நடைபெறப் போவதில்லை. அவற்றை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி விட முடியாது'' என்று பொலிவியாவின் நாளிதழான La Gacetaவிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அரசாங்கம் ''இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துடமைகளை ''பறி முதல் செய்யவோ அல்லது கையகப்படுத்தவோ'' முடியாது என்று அவர் வெற்றி பெற்ற மறுநாள் மொராலஸ் அறிவித்தார். ''சொத்துடமைகளின் உரிமைக்கான மதிப்பை நாங்கள் செயல்படுத்துவோம். எங்களது அரசாங்கம் சட்டத்தை மதிப்பதற்கு அர்ப்பணிப்பு செய்து கொள்கிறது ஆனால் பெட்ரோலிய நிறுவனங்களும் அதை கூடுதலாக மதிக்க வேண்டும்'' என்று மேலும் அவர் கூறினார். முதலில் அவர் பொலிவியாவின் வங்கியாளர்களை சந்தித்தார் அவர்களிடம் பொருளாதார மற்றும் அரசியல் ''ஸ்திரத்தன்மைக்கு'' உழைக்கப்போவதாக உறுதியளித்தார்.

''புதிய அரசாங்கம் பொலிவியாவின் அனைவருக்காகவும் ஆட்சி நடத்தும் ஒரு பிரிவிற்காகவோ அல்லது ஒரு சமூக வர்த்தகத்திற்காக அல்ல. வர்த்தகர்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தைகள் நடத்தி அவர்களிடமிருந்து பரிந்துரைகளை நாங்கள் பெற்று அவற்றை நடவடிக்கைகளாக அமுல்படுத்தவிருக்கிறோம். நாட்டின் எந்த துறையும் தன்னை ஒதுக்கிவிட்டதாக கருதுகின்ற நிலை ஏற்படாது மற்றும் நிச்சயமாக வர்த்தகத்துறையை ஒதுக்கிவிடமாட்டோம்'' என்று தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் மொரலேசின் துணை ஜனாதிபதியான ஆல்வரோ கார்சியா லினேரா அறிவித்தார்.

''ஒரு அரசாங்கம் என்ற முறையில் வர்த்தக சூழ்நிலைகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதிமொழியை அளிக்கிறோம் முதலீடுகளுக்கு இழப்பீடு அளிப்போம் மற்றும் நாங்கள் இலாபம் ஈட்டுவோம்....'' புதிய அரசாங்கத்தின் திட்டம் ''ஆன்டேயன் முதலாளித்துவத்தை'' (தென்அமெரிக்க முதாளித்துவத்தை) உருவாக்குவதாக இருக்கும் அது தேசிய வளர்ச்சிக்கு ஒரு பாதையாக அமையும் என்று கார்சியா லினேரா உறுதி மொழியளித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் மொராலஸ் சாந்தா குரூசிற்கு பயணம் செய்தார். அது பொலிவியாவின் வலதுசாரி ஒருசிலவர் நல ஆட்சியின் தலைநகராகும் அது பிராந்திய தன்னாட்சி உரிமை கோரிக்கை அடிப்படையில் அமைந்த ஒரு அரை-பாசிச அரசியல் கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது மற்றும் நாட்டின் பூர்வகுடி பெரும்பான்மையினர் மீது விரோதப்போக்கு கொண்டு வருகிறது. அந்த பிராந்தியம் நாட்டின் செல்வ செழிப்புள்ள மற்றும் எரிவாயு உற்பத்தி மையம்.

தனது முன்னாள் அரசியல் எதிரிகளின் மகிழ்ச்சி ஆராவார கைதட்டல்களுக்கு இடையில் வலதுசாரி சந்தா குரூஸ்-சார்பு சிவிக் குழுவில் உரையாற்றிய மொரலேஸ் ''யாரையும் நான் பாரபட்சமாக நடத்த விரும்பவில்லை. எந்த செல்வத்தையும் கையகப்படுத்தவோ அல்லது பறிமுதல் செய்யவோ நான் விரும்பவில்லை. வர்த்தகர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்''. என குறிப்பிட்டார்.

அவரது அரசாங்கம் ''தன்னாட்சி அதிகாரத்திற்கு உறுதியளிக்கும்'' அது தான் சாந்தா குரூசின் ஆளும் செல்வந்தத்தட்டினர் மற்றும் வெளிநாட்டு எரிசக்தி பெரு நிறுவனங்களின் நெருக்கமான கூட்டணியில் பணியாற்றுபவர்களின் இதர மூன்று துறைகளின் மைய கோரிக்கையாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிவிக் குழுவின் தலைவரான ஜெர்மன் ஆன்டேலோ ''MAS இன் சிறந்த போராளிகளில் ஒருவர்'' என்று அறிவிக்கும் அளவிற்கு மொரலேஸ் சென்றார் ஏனென்றால் பொலிவியாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் இருவருக்கும் ஒரேகருத்து நிலவுவதாகவும் குறிப்பிட்டார். அதிதீவிர வலதுசாரியான ஆன்டேலோ சாந்தாக்குரூஸ் இளைஞர் ஒன்றியத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். அவ்வமைப்பு உள்ளூர் ஒருசிலவர் நல ஆட்சியர்களின் எதிரிகளை உடல்ரீதியாக தாக்குவதற்கு அதிரடித்துருப்புக்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முன்னணி உறுப்பினர்கள் மொராலஸ் தெரிவித்த கருத்துக்கள் மீது திருப்தியடைதாக தெரிவித்தனர். "நாங்கள் மனநிறைவு அடைந்தோம் ஏனெனில்.... நிலைநாட்டப்பட்டுவிட்ட எந்த விதியையும் தான் மாற்றப்போவதில்லை என்று அவர் எங்களுக்கு உறுதிமொழி அளித்திருக்கிறார், அது இந்த முறையை அவர் தொடர்வார் செயல்படுத்துவார்" என்று வங்கிகள் சங்கத்தலைவரான பெர்சே ஆனிஸ் குறிப்பிட்டார்.

மூட்டூன் இரும்பு மற்றும் மெக்னீசிய சுரங்கம் சாந்தாகுரூசில் உள்ளது. அதன் வளங்களை தனியார் சுரண்டுவதற்காக முயற்சி செய்யும் வெளிநாட்டு நாடுகடந்த நிறுவனங்களை ஏலத்தில் கலந்து கொள்வதற்கு அவர் ஆதரிப்பதாக மொராலஸ் மிகவும் திட்டவட்டமாக அறிவித்தார். சமூகக்குழுக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் MAS இன் வேட்பாளர்களும் சேர்ந்துகொண்டு அந்த ஏலம் நடப்பதை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது பொலிவியாவைவிட வெளிநாட்டு நிறுவனங்கள்தான் அந்த பேரத்தில் அதிக பயன்பெறும் என்ற கவலைகளையும், அத்துடன் அந்தத் திட்டம் ஒரு சுற்றுப்புறச்சூழல் பேரழிவை கட்டவிழ்த்துவிடும் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

இந்த பேரம் செயல்படுத்தப்படாவிட்டால், பிரேசிலுக்கு செல்லும் இரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலைகளில் முற்றுகையிடப்போவதாக ஒருசிலவர் நல ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்ற வலதுசாரி அமைப்புக்கள் அச்சுறுத்தின.

மூட்டன் சுரங்கம் உலகின் மிக முக்கியமான இரும்பு மற்றும் மெக்னீசியத்தாதுக்களை இருப்பு வைத்திருப்பதாகும். சீன அரசாங்கம் அதை சுரண்டிக்கொள்வதில் குறிப்பாக அக்கறை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சுற்றுப்புறச்சூழல் தொடர்பான பொலிவியன் மன்றம் (Fobomade) விடுத்துள்ள எச்சரிக்கை என்னவென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுமானால், மண் மற்றும் நீர் வழங்கீடுகள் கடுமையாகி மாசுக்களை அகற்றமுடியாததாக உருவாகி அது சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் பராகுவே ஆறுவரை நச்சுத்தன்மையுள்ள கனிமப்பொருட்களை பரப்பிவிடும்.

பொலிவியா இதற்கு முன்னர் எண்ணெய் வள பெருநிறுவனங்களோடு செய்து கொண்ட அதே பேரத்தை போன்று அதன் வளங்கள் முழுவதையும் மாற்றிக்கொள்வதற்கு உரிமைகளை இப்போது வழங்குகிறது என்று சொல்லுவதற்கு வழியில்லை என்று இந்த திட்டத்தை எதிர்க்கும் மற்றொரு அமைப்பான தேசிய செல்வத்தை பாதுகாக்கும் குழு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இறுதியாக நாட்டிற்கு 3 சதவீத அளவிற்குத்தான் வருமானம் கிடைக்கும் என்று அந்த குழு மதிப்பிட்டிருக்கிறது.

MAS ஆதரவாளர்கள் இடைக்கால அரசாங்கம் ஏலத்தை தேர்தல் முடியும்வரை நிறுத்தி வைக்க கட்டாயப்படுத்துவதில் வெற்றி பெற்றனர் என்றாலும் அவர்கள் மொராலஸ் அடுத்ததாக வந்தால் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவார் என்று அனுமானித்தனர். தற்போது MAS தலைவர் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்துக்கொள்வதற்கு வழிதிறந்து விட்டுவிட்டார்.

தொழிற்சங்க பிரிவுகளும் லா பாஸ் அருகிலுள்ள El Alto தீவிரவாத மையத்தை சேர்ந்த பொதுமக்களது அமைப்புக்களும் 90 நாட்களில் மொராலஸ் எரிசக்தி துறையை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

இந்த கோரிக்கைகளை கண்டிக்கின்ற அளவிற்கு மொராலஸ் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். கோச்சாபம்பாவில் பேசிய அவர் ''நமக்கு ஒரு மகத்தான வரலாற்று பொறுப்பு உள்ளது மற்றும் இந்தச் சூழ்நிலையில் சிலர் கொடுக்கின்ற காலக்கெடுக்கள் பேரரசு மற்றும் ஒருசிலவர் நல ஆட்சியாளர்களுக்குத்தான் மிகச்சிறந்த கருவியாகும்... வேறு பக்கத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்" என அறிவித்தார்.

இறுதியில் மொரலேசின் தேர்தல் ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலில் லூலாவைப்போன்று, அனைத்து பாரம்பரிய கட்சிகளும் அரசியல் வாதிகளும் ஒட்டுமொத்தமாக சீரழிந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையின் கீழ் உள்நாட்டு ஆளும் செல்வந்தத்தட்டினருக்கும், மற்றும் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு சமூக அமைதிக்கான சாத்தியக்கூறை உருவாக்கியிருக்கிறது மற்றும் தீவிரமயப்படுத்தப்பட்ட வெகுஜன தொழிலாளர்களும் ஏழைகளும் நாட்டை ஏறத்தாழ ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள MAS தலைவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை சமாதானப்படுத்துவதற்கு, மேற்கொண்டுள்ள முயற்சிகள் மிக குறுகிய காலத்தில் வெகுஜன கொந்தளிப்புக்களை மீண்டும் வெடிக்கச் செய்யும் அச்சுறுத்தலை உருவாக்கிவிடும்.

Top of page