World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

SEP public meeting on Canadian elections

Workers need a new political orientation

கனேடிய தேர்தல்கள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம்

தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் நோக்குநிலை தேவை

By David Adelaide
24 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

கனடாவின் கூட்டாட்சித் தேர்தல் ஜனவரி 23, திங்களன்று நடைபெற்றது. உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 23, புதன்கிழமை முடிவுகள் பற்றிய மதிப்பீட்டை ஜனவரி 25 அன்று வழங்கும்.

ஜனவரி 23, ஞாயிறு பிற்பகல், சோசலிச சமத்துவக் கட்சி 2006 கனேடிய தேர்தல்களில் உண்மையான பிரச்சினைகளைப்பற்றி விவாதிப்பதற்கு, நாட்டின் மிகப்பெரிய நகரமான டோரன்டோவில் வெற்றிகரமான ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது.

கூட்டத்திற்கு டொரன்டோ பகுதியிலும் அதைச் சுற்றிலும் இருந்து உ.சோ.வ.த வாசகர்கள் மற்றும் மொன்ட்ரீயாலிருந்து உ.சோ.வ.த ஆதரவாளர்களின் தொகுதி ஒன்று உள்பட, பல்வேறு வகைப்பட்ட மற்றும் புதிய ஆய்வுகளை ஏற்கவல்ல அவையோர் கூட்டம் வருகை தந்தது. சோசலிச சமத்துவக் கட்சி (கனடா) யின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான கீத் ஜோன்ஸ் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சின் முன்னணி உறுப்பினரான ஜெர்ரி ஐசக் ஆகியோர் இரு பிரதான பேச்சாளர்கள் ஆவர்.

முதலில் பேசிய ஜோன்ஸ், 2006 கனேடிய கூட்டாட்சித் தேர்தல்கள் சர்வதேச தொழிலாள வர்க்கம் தன்னுள் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அமைந்திருப்பதற்கான அவசியத்தை இரு வழிகளில் கோடிட்டுக்காட்டியிருக்கின்றது என்று குறிப்பிட்டு பேச்சை தொடங்கினார்.

ஒரு புறம், "ஒரு பழமைவாத (கன்சர்வேட்டிவ்) அரசாங்கத்தை ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான அவர்களின் குறிக்கோளை பின்தொடர்வதில், ஆளும் வர்க்கமானது முன் என்றுமிராத செயற்பரப்பு எல்லை மற்றும் துணிவுடன் கொண்ட சூழ்ச்சித்திறமாய் கையாளும் செய்தி ஊடகப் பிரச்சாரத்தை குவித்து இருந்தது. பெருநிறுவன செய்தி ஊடகம் ஒவ்வொரு திருப்பத்திலும் இந்தத் தேர்தல் லிபரல் ஊழல் என்று அழைக்கப்படுபவை மீதான கருத்து வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என்ற கன்சர்வேட்டிவ் கூற்றை பெரிதாக ஒலித்தன, அதேவேளை, கன்சர்வேட்டிவினருக்கு தலைமைதாங்கும் கன்சர்வேட்டிவ் புதிய கருத்தியலாளர் ஸ்டீபன் ஹார்ப்பெரின் நிலைச்சான்று உள்பட, புதிய கன்சர்வேட்டிவில் ஒன்று சேர்ந்துள்ள சக்திகளின் அரசியல் நிலைச்சான்றை பூசிமெழுகுகின்றன."

மற்றொருபுறம் 2006 கனேடிய தேர்தல்கள் தொழிலாள வர்க்கத்தின் உத்தியோகபூர்வ தலைமையின் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் நிலவும் சமூக ஒழுங்கின் உள்ளார்ந்த பகுதியாக செயல்படும் தொழிற்சங்க அலுவர் தொகுதி ஆகியோரின் அப்பட்டமான பிற்போக்கு பாத்திரத்தை மீட்டும் எடுத்துக்காட்டி இருக்கிறது.

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கனேடிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை பொறுத்தவரை, தேர்தல் பிரச்சாரம் என்பது, அடுத்த நாடாளுமன்றத்தில் அதிகாரச் சமநிலையை நிறுத்துவதற்கான பாத்திரத்தை புஜக (NDP) கேட்டறிவதற்கான ஒரு சம்பவமாகும், புஜகவின் குறிக்கோள் பெருவணிகத்தின் இரு பிரதான கட்சிகளுள் ஒன்றை அரசாங்கமாக தான் ஆதரிக்கக்கூடிய அளவுக்கு போதுமான இருக்கைகளை வென்றெடுப்பது என்று கூறவேண்டியிருக்கிறது. இந்தக் குறிக்கோளை பற்றிக்கொண்டு, "நிதிப் பொறுப்பு" என்பதற்காக தனது ஆதரவை பறைசாற்றிக் கொண்டு, வசதிபடைத்தோர் மீது அதிக வரிவிதிப்பிற்கான அதன் அழைப்பைக் கைவிட்டுவிட்டு, ஜனநாயக விரோத தெளிவுபடுத்தல் சட்டத்தை தழுவி புதிய ஜனநாயகக் கட்சியானது மேலும் வலதுபுறம் நகர்ந்துள்ளது.

"கனேடியன் கார் தொழிலாளர் சங்கத் தலைவர் Buzz Hargrove-ஆல் வழிநடத்தப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு அதிருப்தி பிரிவு (கன்னை) சிறுபான்மை லிபரல் அரசாங்கம் மறு தேர்வு செய்யப்படுவதற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்திருக்கிறது. அதேவேளை, புதிய ஜனநாயகக் கட்சி தலைவர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர், அவர்களது உடன்படாமை தந்திரோபாயங்கள் மீதானது மட்டுமே ஆகும். லிபரல்களுக்கான ஹார்குரோவின் தேர்தல் ஆதரவு புஜக வின் வாக்கை துண்டாடி விடும், சமூக ஜனநாயகவாதிகள் ஆட்சியதிகாரத்தில் தங்களை தக்கவைத்துக் கொள்ளும் நிபந்தனைகள் மீதாக லிபரல்களுடனும் கன்சர்வேட்டிவ்களுடனும் நடத்தும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் புஜக வின் கரத்தை இவ்வாறு பலவீனமாக்கும் என்று புஜக தலைமை நம்புகிறது.

தங்களின் பங்கிற்கு கியூபெக் யூனியன்கள் கியூபெக் கட்சியின் (Bloc Québécois- PQ) சகோதரக் கட்சியான கியூபெக் அணியின் (Bloc Québécois- BQ) பின்னே அணிதிரண்டுள்ளனர். BQ மற்றும் PQ ஆகியன வெறுப்பூட்டும் அளவுக்கு தாங்கள் கியூபெக் நலன்களை காப்பதாக பறைசாற்றும் அதேவேளை, புஷ் முன்னுக்குத்தள்ள வரும்பொழுது அவற்றின் அர்த்தம் கியூபெக் மக்கட்தொகையின் பெரும்பான்மைக்கு - தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கியூபெக் பெருவணிக நலன்களை காப்பது என்று மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறார்கள்." ஜோன்ஸ் பின்னர் Lucien Bouchard மற்றும் Bernard Landry ஆகியோரின் முந்தைய PQ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு வெட்டு தொடர்பான வரலாற்றை மீளாய்வு செய்தார்.

"எம்மிடம் தெளிவாகக் காட்டும் பளிங்குப் பந்து ஒன்றும் இல்லை. கட்சியோ அல்லது கட்சிகளின் நோக்கையோ அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போகும் ஜனவரி 23ல் என்ன முடிவு வரப்போகிறது என்பதை முன்கணிப்பது இயலாததாகும். ஆனால் நிச்சயமாக நம்மால் என்ன சொல்லமுடியும் என்றால் 23ம் தேதியை அடுத்து பொதுமக்கள் அவையில் இருக்கைகளின் துல்லியமான பகிர்வு என்னவாக இருந்தாலும், வருகின்ற காலகட்டம் வர்க்கப்போராட்டத்தின் திடீர் உக்கிரத்தை காணப்போகிறது. இது கன்சர்வேட்டிவ்களுக்கு பின்னால் ஆளும் செல்வந்தத்தட்டின் தீர்மானகரமான நகர்வாலும், மேலும் மார்ட்டினையும் லிபரலையும் ஒரு ஹார்ப்பெர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மூலம் பதிலீடு செய்யும் தங்களின் இலக்கினை நிறைவேற்ற ஜனநாயக விரோத முறைகளை பயன்படுத்துவதற்கான ஆளும் வர்க்கத்தின் தயார் நிலையாலும் விளக்கிக் காட்டப்படுகிறது."

ஜோன்ஸ் வெளியேறும் லிபரல் அரசாங்கத்தின் நிலைச்சான்றை மீளாய்வு செய்தார், அது "எந்த வகையிலும்....பெரும் பொருளாதார மந்தத்திற்கு பின்னரான மிகவும் வலதுசாரி கனேடியன் அரசாங்கமாக இருந்து வந்திருக்கிறது. லிபரல்கள் அவர்களின் வலதுபுறத்திலுள்ள பிரதான கட்சிக்கு எதிராக ஒரு அரணாகத் தங்களை காட்டிக் கொண்டு ஒரு வரிசையில் நான்கு தேர்தல்களில் வென்றிருந்தனர்...... ஒருமுறை ஆட்சிஅதிகாரத்தில் பாதுகாப்பாக தங்கியதும், அவர்களது வெளிவேடம்போடும் வலதுசாரி எதிர்ப்பாளர்களின் வேலைத்திட்டத்தின் பெரும்பான்மையானவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலைச்சான்று இருப்பினும், "ஆளும் வர்க்கமானது லிபரல்களுடன் ஏமாற்றமடைந்துள்ளது அதிகரித்த அளவில் வளர்ந்து வருகிறது ஏனெனில் அடிப்படை சமூகத் திட்டங்களின் மீதாக பரந்த தாக்குதலுக்கூடாக முன்னெடுப்பதில் அவர்கள் நடுக்கம் கொள்கின்றனர் என்று அவர்கள் நம்புகின்றனர் மற்றும் உலக அரங்கின் மீது அதன் சூறையாடும் நலன்களை போதுமான உறுதியுடன் வலியுறுத்தி இருக்கவில்லை. ஜோன்ஸ் பின்னர் எப்படி மருத்துவ பராமரிப்பை நிர்மூலமாக்குவதை சிறந்த முறையில் நிறைவேற்றுவது, மற்றும் Chaouilli வழக்கில் உச்சநீதி மன்றத்தின் முடிவின் மூலமாக மருத்துவப் பராமரிப்பை அழிக்கவும் இரண்டு அடுக்கு சுகாதாரப் பராமரிப்பு முறையை உருவாக்கவும் எப்படி ஒரு இயங்குமுறை உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஆளும் வர்க்க வட்டாரங்களுக்குள்ளேயான விவாதத்தைப்பற்றி விவாதித்தார்.

அடுத்து, கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு மிதவாத கட்சியாக, முக்கிய கட்சியாக பரிணாமமடைந்துள்ளது என்ற பெருவணிக ஊடகத்தின் கூற்றை எடுத்துக் கொண்டார். அவர் கன்சர்வேட்டிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பெரின் அரசியல் சுயசரிதையை மீளாய்வு செய்தார், அவர் பிரையன் மல்ரோனியின் 1984 பிரச்சாரத்தை ஆதரித்தார், பின்னரே டோரிக்களுடன் அவர்களின் புது கன்சர்வேட்டிவ் கோட்பாடுகள் பற்றிய காட்டிக் கொடுப்பு என்று சொல்லப்படுவதற்காக முறித்துக் கொண்டார். பின்னர் ஹார்ப்பெர் புதிதாக அமைக்கப்பட்ட சீர்திருத்தக் கட்சிக்கு முக்கிய கொள்கை ஆலோசகரானார், மற்றும் மத்திய கூட்டாட்சி பற்றாக்குறையை நீக்கல் என்ற பெயரில் பொது மற்றும் சமூக சேவைகளை அழிப்பது மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் ஆதரவாளரானார் (இது பின்னர் Martin-Chrétien ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது).

தற்போதைய பிரச்சாரத்தில், ஹார்ப்பெர் கட்சியில் உள்ள சமூக கன்சர்வேட்டிவ்கள், கன்சர்வேட்டிவ் வேட்பாளர்கள் பத்திரிகையுடனோ அல்லது பொதுமக்களுடனோ கட்டுப்பாடில்லாது ஒன்றையொன்று பாதித்தலுக்கான எந்தவிதமான வாய்ப்புக்கும் முன்னால் அவர்களை அடக்கியாள்பவர்களினால் கூட்டங்களில் இருந்து அழைத்துச்செல்லப்படும் கட்டத்திற்கு "கட்டி இழுக்கப்படுகிறார்கள் அல்லது வாய்மூடப்படுகிறார்கள்" என ஜோன்ஸ் விளக்கினார். "இந்தப் பொய்களின் பின்னால், சமூக கன்சர்வேட்டிவ்களின் நிகழ்ச்சிநிரல் ஒரு மின்னல் உலோகத்தண்டாக பயன்பட்டு, வலதுசாரி பொருளாதார நடவடிக்கைகளை திணித்தலை, உண்மையான பிரச்சினை என்று அவர்கள் பார்க்கும் பிரச்சினையை இடையூறூக்கு ஆளாக்கும் என்ற கனேடிய பெருவணிக தட்டின் அச்சங்கள் இருக்கின்றன.

பெரு வணிகத்தினரின் வலதுசாரி வேலைத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு உருவாவதை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்பாக்கிறது என்று ஜோன்ஸ் வலியுறுத்தினார். "ஆனால் பிரச்சினை என்னவென்றால் தொழிலாள வர்க்கம் பாதிக்கப்பட்ட கடந்த கால் நூற்றாண்டு தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் பற்றிய படிப்பினைகளை பெறுதல் ஒன்றாகும். 1995 மற்றும் 1997க்கு இடையில் இங்கு ஒன்டோரியாவில் ஹாரிஸ் அரசாங்கத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பு, அண்மைய BC ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் போன்ற தொழிலாள வர்க்கத்தின் பிரதான இயக்கங்களை அப்பொழும் மீண்டும் பார்த்திருக்கிறோம். அத்தகைய எதிர்ப்பு இயக்கம் தொழிசங்கங்களாலும் புதிய ஜனநாயகக் கட்சியாலும் குரல்வளை நெரிக்கப்பட்டதை பார்த்திருக்கிறோம்.

"சோசலிச சமத்துவக் கட்சியில் உள்ள நாம் புதியவேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை மறுநோக்குநிலைப்படுத்துவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அந்த வேலைத்திட்டத்தின் மையத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியப்படுத்தலுக்கான போராட்டம் இருக்கிறது. பூகோள ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களை தோற்கடிப்பதற்கான ஒரேவழி தொழிலாள வர்க்கத்தின் ஒரு பூகோள தாக்குதலை அபிவிருத்தி செய்வதாகும்."

தனது குறிப்புக்களை ஒரு முடிவுக்கு கொண்டுவருகையில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜனக் கட்சியை கட்டி எழுப்புவதற்கான போராட்டம் அடிப்படையாக கொண்டிருப்பதாக ஜோன்ஸ் மூன்று அடிப்படை கோட்பாடுகளை திறந்து காட்டினார்: (1) தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவதற்கான போராட்டம்; (2) முதலாளித்துவ இலாப ஆணைகளுக்கு சமூகப் பொருளாதார வாழ்வை கீழ்ப்படுத்த மறுத்தலும் சோசலிசத்திற்கான போராட்டமும்; (3) அதனை இலாப அமைப்புடன் கட்டிப்போட முயலும், புதிய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளிலிருந்து அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கான போராட்டம்.

பின்னர் கூட்டத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள கனேடியன் சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதர கட்சியிலிருந்து வந்த ஜெர்ரி ஐசக்கால் உரையாற்றப்பட்டது. கனடாவின் பிரமராக வரவிருப்பதாகக் கருதப்படும் ஹார்ப்பெரால் அந்த அளவுக்கு புகழப்படும் புஷ் நிர்வாகத்தின் கீழ் அவிழ்ந்து வரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை விளக்குவதன் மூலம் கூட்டத்திற்கான தனது பங்களிப்பை ஐசக் தொடங்கினார்.

புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அழைக்கப்படுவதை தொடங்கியற்கு பின்னர் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில், வெள்ளைமாளிகை ஜனாதிபதிக்கு தடுக்கமுடியாத அதிகாரங்களை கோரிக் கொண்டு, அமெரிக்க அரசாங்கமானது முன்னோடி இல்லாத அளவு குற்றத்தன்மையின் மட்டத்திற்கு இறங்கிவிட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் தலைமைத் தளபதி என்ற அங்கியை தவறாகப் பாவனை செய்துகொண்டு, ஜனாதிபதி இப்பொழுது அமெரிக்க குடிமக்களை உளவறியும் உரிமையைக் கோருகிறார், ஜனாதிபதி அச்சுறுத்தல் எனக் கருதும் எவரையும் குற்றச்சாட்டுக்கள் இன்றி காலவரையின்றி சிறையில் வைக்கவும், சித்திரவதை செய்யவும், தொலைதூர நாடுகளில் உள்ள இரகசிய சிறைச்சாலைகளுக்குள் எதிராளிகளை 'மறைக்கச்செய்யவும்' உரிமை கோருகிறார்.

அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி இரண்டினாலும் தசாப்தகாலங்களாக முன்னெடுக்கப்பட்ட சுதந்திர சந்தை மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தல்களால் உருவாக்கப்பட்ட சமூகத் துன்பங்களை பார்த்து கனேடிய தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று ஒருவர் எதிர்காலத்தை பார்க்க முடியும்."

அமெரிக்க அரசாங்கமானது "இயற்கைப் பேரழிவில் இருந்து தனது சொந்தக் குடிமக்களை பாதுகாக்க திராணியற்றிருக்கிறது, அது அதன் குடிமக்களின் பத்து மில்லியன் கணக்கானோருக்கு சுகாதாரப் பரமரிப்பு வசதிகளையோ அல்லது பொருளாதார பாதுகாப்பையோ உத்திரவாதப்படுத்த முடியவில்லை, பாதுகாப்பான வேலை நிலைமைகளை உத்திரவாதப்படுத்துவதற்கு அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதும் இல்லை, எடுத்துக்காட்டாக, நிலக்கரி நிறுவனங்களுடன் 'பங்கான்மை' என்ற பெயரில், கிளிண்டன் மற்றும் புஷ் நிர்வாகங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை ஒழித்ததன் பின்னர், கடந்த மூன்று வாரங்களில் நிலக்கரிச் சுரங்கங்களில் 15 சுரங்கத் தொழிலாளர்களுக்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஐசக், புஷ் நிர்வாகத்திற்கு வளர்ந்துவரும் மக்களின் குரோதத்தை சுட்டிக்காட்டி, மக்களின் குரோதம் உண்மையில் உத்தியகபூர்வ வாஷிங்டனில் வெளிப்பாட்டை காணாது என்றார். ஜனவரி ஆரம்பத்தில் ஜோக்பி சர்வதேச வாக்கெடுப்பு அமைப்பால் நடாத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பின்படி, நீதிபதியின் அனுமதி இன்றி அமெரிக்க குடிமக்களின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்க புஷ் ஆணையிட்டிருந்தால் (அவர் செய்ததால்) அவரை காங்கிரஸ் பதவி நீக்க விசாரணையை தொடர பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் விரும்புகின்றனர்.

ஐசக் பின்னர் ஜனநாயகக் கட்சியால் ஆற்றப்படும் பாத்திரம் பற்றி விவாதித்தார், "அது புஷ் நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆதரவு பெற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகி அதன் கோழைத்தனமான உடந்தையாளாக வேலைசெய்கிறது.

ஏகாதிபத்திய சூறையாடல் கொள்கைகளுக்கு அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் இரு கிளைகளது ஆதரவிற்கான புறநிலை அடிப்படை அமெரிக்க முதலாளித்துவத்தின் அந்தஸ்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பின்னே இருக்கிறது, அது "ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற பெரு நிறுவன உருவங்களின் பொறிவு, வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறைகள் மற்றும் அந்நிய மூலதனத்தை சார்ந்து இருத்தல், குறிப்பாக சீனாவிலிருந்து மற்றும் மொத்த மக்கட்தொகையும் தாங்கமுடியாத அளவுக்கு கடன்பட்டிருத்தல் ஆகியவற்றால் பண்பிட்டுக்காட்டப்படுகிறது."

டெல்பி தலைமை நிர்வாக அதிகாரி றொபர்ட் மில்லர் வேலை கொடுப்போருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான "சமூக ஒப்பந்தம்" முடிந்து விட்டது மற்றும் தொழிலாளர்களை பொறுத்தவரை தொழிலாளர்கள் ஓய்வூதிய நலன்களுக்கு உத்திரவாதம் செய்யப்படுவர் என்ற எந்த எண்ணத்தையும் விட்டுவிடுதல் அவசியமானது என்று கூறியதை ஐசக் எடுத்துக்கொண்டார். மில்லருக்கு விடையிறுக்கும் முகமாக ஐசக் கூறினார்: "அமெரிக்கா அல்லது கனடா அல்லது வேறு எந்த நாடும் அதன் தொழிலாளர்களுக்கு அளிக்க முடியாது என்பது அல்ல. உண்மையான பிரச்சினை அமெரிக்கா அதன் செல்வந்தர்களுக்கு அளிக்க முடியவில்லை என்பதாகும்."

1979க்கு பின்னர் இருந்து இரண்டரை தசாப்தகால போக்கில் சமூக சமத்துவமின்மையின் பெரும் வளர்ச்சியை பற்றி புள்ளி விவரங்களை அவர் சுட்டிக்காட்டிச் சென்றார், அதில் மக்கட் தொகையில் 1 சதவீதமாக உள்ள செல்வக் கொழிப்புடையவர்களால் அனுபவிக்கப்படும் அமெரிக்க தேசிய செல்வத்தின் பங்கு 19 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக இரட்டிப்பாகி இருக்கிறது. சாராசரி பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஒரு சராசரி தொழிலாளியின் சம்பளத்தை விட 431 மடங்கு பெறுகிறார் என்று ஐசக் குறிப்பிட்டார்.

பின்னர் ஐசக் 2006 அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீடு பற்றி விவாதித்தார்: "இந்த பிரச்சாரத்தின் மையம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும், மற்றும் நிதி ஆதிக்க சிலர் நல ஆட்சியை கொழிக்கச் செய்வதற்கு உலக மக்களின் தேவைகள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்ற முடிவில்லாத கோரிக்கைகளை, பரந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொருளாதார வாழ்வை அறிவார்ந்த ரீதியில், ஜனநாயக ரீதியில் மற்றும் கூட்டுறவான முறையில் மறு ஒழுங்குபடுத்தலை எதிராக வைப்பதாகும்.

அமெரிக்கா மற்றும் கனடா இரண்டிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் சர்வதேச இயல்பை சுட்டிக்காட்டியதன் மூலம் ஐசக் தனது குறிப்புரையை முடித்தார்: "போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், சுரண்டல், வேலையின்மை, வறுமை மற்றும் இயற்கை சுற்றுச்சூழலை அழித்தல் ஆகியன வெறுமனே அமெரிக்கப் பிரச்சினைகள் அல்ல. அவை உலகப் பிரச்சினைகளாகும் மற்றும் அவற்றுக்கு பூகோளத் தீர்வுகள் தேவைப்படுகின்றன. உலகப் பொருளாதார சகாப்தத்தில், பரந்த மக்கள் சமுதாயத்தின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்."

பின்னர் கூட்டத்திற்கு வருகை தந்தோரிடமிருந்து கேள்விகள் வரவேற்கப்பட்டது. அது மேலும் கியூபெக் தேசியவாதம், புஜக மற்றும் தொழிற்சங்கங்கள், கனேடிய தேர்தல்களில் தீவிர இடதின் பாத்திரம் இவற்றின்பாலான சோசலிச சமத்துவக் கட்சியின் விமர்சன ரீதியான நிலைப்பாட்டை மேலும் விவாதிப்பதற்கு இட்டுச்சென்றது மற்றும் ஊகோ சாவேஸ் பற்றிய சோசக வின் நிலைப்பாடு, மற்றும் கனேடிய தேர்தல்களில் சோசகவின் தலையீடு பற்றியும் விவாதிப்பதற்கு வழிவகுத்தது.

கூட்டம் நடத்துவதற்கான செலவுக்கு உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது, அதன் விளைவாக குறிப்பிட்ட அளவு நிதி சேர்ந்தது. சோசலிசம் பற்றிய, குறிப்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு பற்றிய கணிசமான அளவு வெளியீடுகளும் விற்பனையாயின.

Top of page