World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Amid danger of civil war, Sri Lankan president visits New Delhi

உள்நாட்டு யுத்த ஆபத்தின் மத்தியில் இலங்கை ஜனாதிபதி புது டில்லி பயணித்தார்

By Wije Dias
4 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தீவில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் ஆபத்து உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்திய அரசாங்கத்திடமிருந்து உயர்ந்த ஆதரவை எதிர்பார்த்து புது டில்லிக்கு தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவதற்காக டிசம்பர் மாத கடைப்பகுதியை தேர்ந்தெடுத்தார்.

இராஜபக்ஷ நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின் ஆதரவுடன் மிகக் குறுகிய வெற்றியை பெற்றார். இந்த பிரச்சாரத்தின் போது அவரும் அவரது பங்காளிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் கோரிக்கைகளை முன்வைத்துடன் இனவாத உணர்வுகளை கிளறிவிட்டனர். இந்தக் கோரிக்கைகளில் தற்போதைய சமாதான மத்தியஸ்தராக இருக்கும் நோர்வேக்கு பதிலாக இந்தியாவை இருத்துவதும் அடங்கும்.

ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும், நோர்வே புலிகளுக்கு பக்கசார்பாக இருப்பதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டிவந்துள்ளன. மறுபக்கம், இந்தியாவானது தமிழ் பிரிவினைவாதத்திற்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும், மற்றும் "சமாதான முன்னெடுப்புகள்" தோல்வியடையும் பட்சத்தில் ஒரு புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் முக்கியமான பங்காளியாக இருக்கக்கூடியதாக தோன்றுகிறது. ஆயினும், 1980களின் கடைப்பகுதியில், "அமைதிகாக்கும் படை" அழிவை சந்தித்ததை அடுத்து வட இலங்கையில் இருந்து தனது இராணுவத்தை விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்ட புது டில்லி, மிகவும் நெருக்கமாக தலையீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளது.

இராஜபக்ஷ, இந்தியத் தலையீட்டை எதிர்பார்த்து டிசம்பர் முற்பகுதியில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை அனுப்பிவைத்திருந்த போதிலும் பயன் கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கம் சமாதான மத்தியஸ்தரின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடன்றி, நோர்வேக்கும் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான அடிப்படையாக "ஒற்றை" ஆட்சியை விட "ஐக்கிய" இலங்கைக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. புலிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வகிபாகத்தை வழங்கக்கூடிய எந்தவொரு "ஐக்கிய" சமஷ்டி அரசு அமைப்புக்கும் எதிராக ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதை இராஜபக்ஷ வலியுறுத்தினார்.

இந்தியாவின் மறுப்பானது ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், தனது போக்கை மாற்றி சமாதான மத்தியஸ்தராக நோர்வேயை தொடர்ந்தும் பணியாற்றுமாறு அழைக்க இராஜபக்ஷ தள்ளப்பட்டார். ஆனால், இந்தியாவின் சிறந்த பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ள இன்னமும் எண்ணங்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி, இலங்கைக்கான சர்வதேச நிதிக் குழுவின் இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக அங்கம் வகிக்குமாறு புது டில்லிக்கு அழைப்பு விடுத்தார். இதை மனதில் வைத்துக்கொண்டே இராஜபக்ஷ டிசம்பர் 27 புது டில்லிக்கு பயணமானார்.

இலங்கையில் மீண்டும் ஒட்டுமொத்த யுத்தத்திற்கு திரும்பும் அபாயம் நிலவிய நிலையிலேயே அவரது விஜயம் இடம்பெற்றது. கடந்த மாதம் பூராவும் 46 இராணுவ சிப்பாய்கள், புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதேபோல் பொதுமக்கள் உட்பட 90க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவமானது ஜனாதிபதியின் மெளன ஆதரவுடன், தமிழர்கள் மீது பாய்ந்துவிழுதல், அதேபோல் குறிப்பாக கிழக்கில் புலிகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு இரகசியமாக ஆதரவளிப்பதிலும் ஈடுபடுகின்றது.

இந்த அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்ட அளவில், புது டில்லியிடமிருந்து எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதரவையும் பெற்றுக்கொள்ளவதில் இராஜபக்ஷ தோல்வி கண்டார். நான்கு நாள் பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளியான கூட்டு அறிக்கையின் 24 அம்ச பிரகடனத்தில், இலங்கையிலான அரசியல் விவகாரங்கள் 21ம், 22ம் மற்றும் 23ம் பந்திகளுக்கு பின்தள்ளப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக அது இந்திய நலன்களிலேயே குவியப்படுத்தப்பட்டிருந்தது: பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையில் பாக்கு நீரிணையில் ஒரு கப்பல் வாய்க்காலை கட்டுவது மற்றும் புதிய மின்சார நிலையம் உட்பட இலங்கையின் திருகோணமலையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யத் திட்டமிடுவது போன்றவை இதில் அடங்கியிருந்தன.

குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு வருடங்களாக பிரேரணையில் இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளும் மற்றும் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எதிர்த்து வரும் இந்த ஒப்பந்தம், இலங்கை இராணுவத்தின் கொள்ளளவை உயர்ந்த மட்டத்தில் விரிவுபடுத்தக் கூடியதாகும். இராஜபக்ஷ தனது விஜயத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சரை கூட சந்திக்கவில்லை.

"இந்தியா இலங்கையின் பாதுகாப்பில் ஒரு நிரந்தரமான நலன்களை தொடர்ந்தும் பேணிக்காக்கும்" என்று மட்டுமே அந்த கூட்டறிக்கை பிரகடனம் செய்கின்றது. புதுப்பிக்கப்பட்ட யுத்தம் பற்றிய கவலையுடன் பிரதிபலித்த அந்த அறிக்கை, "யுத்த நிறுத்தத்தை கடுமையாக கண்காணிப்பதும் மற்றும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பேச்சுக்களை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் தேவையை" பிரகடனம் செய்தது.

சமாதானப் பேச்சுக்களுக்கான அடிப்படையாக அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது: "ஜனநாயகம், பன்மையாக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, ஒரு பிரிக்கப்படாத இலங்கை என்ற வரம்பிற்குள் இலங்கை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒரு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வை எதிர்பார்த்து, சமாதானப் முன்னெடுப்புகளுக்கான தனது ஆதரவை இந்தியா வலியுறுத்துகிறது." "பிரிக்கப்படாத" என்ற பதத்தை இராஜதந்திர முறையில் பயன்படுத்தியிருப்பதானது "ஐக்கிய" அல்லது "ஒற்றை" ஆட்சி சம்பந்தமாக உடன்பாடுகாணத் தவறியுள்ளதை பிரதிபலிக்கின்றது. புது டில்லியை நிதிக் குழுவின் இணைத் தலைமை நாடுகளுள் ஒன்றாக இணைத்துக் கொள்ளும் முயற்சியிலும் இராஜபக்ஷ தோல்விகண்டார்.

கொழும்பு அரசாங்கத்தின் பக்கம் வெளிப்படையாக சார்ந்து நிற்க அல்லது "சமாதன முன்னெடுப்புகளில்" நெருக்கமாக மிக நெருக்கமாக தலையிட இந்திய தயங்குவதானது தலையிடாக் கொள்கையின் காரணமாக அல்ல. உண்மையில், புது டில்லி பிராந்திய மட்டத்திலும் மற்றும் உலக அளவிலும் ஒரு பிரமாண்டமான அரசியல் வகிபாகத்தை இட்டுநிரப்ப எதிர்பார்க்கின்றது. நவம்பரில் பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய நாடுகளின் அமைப்பின் (சார்க்) கூட்டத்திற்கு முன்னதாக, மிகவும் தலையீடு செய்யும் அனுகுமுறையுடன் சமிக்ஞை செய்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா "தோலவியடைந்த அரசுகளால்" சூழப்பட்டுள்ளது என்றார்.

எவ்வாறெனினும், புது டில்லியில் உள்ள சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டரசாங்கமானது, இலங்கையில் தமிழர் விரோத பாரபட்சங்களில் கொழும்பின் சாதனைகளுக்கு ஆழமான எதிர்ப்பு நிலவும் தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகளின் பாராளுமன்ற ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது. தேசிய பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் இருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியும் தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம், இராஜபக்ஷவின் விஜயத்தின் போது அவரை சந்திக்க மறுத்ததன் மூலம் அலட்சியம் செய்தார்.

இராஜபக்ஷவிற்கு சிங் வழங்கும் எந்தவொரு பிரதான சலுகையும், தமிழ் நாட்டில் உள்ள அவரது சொந்த பங்காளிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கும். அதே சமயம், புது டில்லி புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக சட்ட விரோதமானதாக்கியுள்ளதோடு, தனி அரசிற்கான புலிகளின் கோரிக்கையையும் மீண்டும் மீண்டும் எதிர்த்து வந்துள்ளது. தனது சொந்த பிராந்தியங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்காமல் இருப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்தியா, யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்பினாலும், அது புலிகளுக்கு அதிகம் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் வரம்பிற்குள் அல்ல. தற்போது அது தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதை தடுப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளது. இதன் விளைவாக, புது டில்லி அதிகளவில் கொழும்பின் பின்னால் சுழல்கிறது என்ற சமிக்ஞையை சிங் இராஜபக்ஷவிற்கு கொடுக்கவில்லை.

ஆகவே இராஜபக்ஷ வெறுங்கையுடன் கொழும்புக்கு திரும்பினார். அவரது பங்காளிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் நோர்வேயை பதிலீடு செய்யும் தமது கோரிக்கையை, பிரதான தூதர் எரிக் சொல்ஹெய்மை பதிலீடு செய்யும் கோரிக்கையாக மாற்றிக்கொண்டனர். ஆனால் நோர்வே இதை மறுதலித்தது. பெரும் வல்லரசுகளுக்கு மத்தியில், இலங்கை மீண்டும் யுத்தத்தை நோக்கி சரிந்துகொண்டிருப்பது பற்றி உண்மையான பீதி நிலவுவதோடு, அவர்களின் ஆதரவுடன் தற்போதைய யுத்த நிறுத்தத்தை பேணவும் மற்றும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்லவும் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் தனது முயற்சியை நோர்வே உக்கிமாகியுள்ளது.

ஆயினும், இந்த அழுத்தங்கள் இருந்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் படுகொலைகள் தொடர்வதோடு அதன் மூலம் மீண்டும் வெளிப்படையான இராணுவ மோதல் வெடிப்பதற்கான அபாயமும் தொடர்கின்றது.

Top of page