World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The real aims of the US-backed Israeli war against Lebanon

லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்

Statement of the Editorial Board
21 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

லெபனான் மீதான தாக்குதல் பத்தாவது நாளை அடைந்துள்ள நேரத்தில், இஸ்ரேலிய துருப்புக்கள் கொலைகாரத்தனமான வான்வழி குண்டுவீச்சுக்களினால் தயாராகியுள்ள முழு அளவு படையெடுப்பிற்கு தயாராகிவிட்டனர்; மேலும் போரின் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஏகாதிபத்திய நோக்கங்களும் இன்னும் தெளிவாகியுள்ளன.

அமெரிக்காவின் முழு அரசியல், நிதிய, இராணுவ ஆதரவுடன் சியோனிச ஆட்சி லெபனானை ஒரு இஸ்ரேல் ஆளுகைக்குட்பட்ட பாதுகாப்பு நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிலும் ஈராக்கிலும் நிகழ்த்தப்பட்ட படையெடுப்புக்களில் ஆரம்பித்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் ஏகாதிபத்திய புவிசார்-அரசியல் மறுசீரைமைப்பு தீவிரமடைந்து தொடரும் வகையில் இந்த இராணுவ நடவடிக்கை உள்ளது; இதன் இலக்கு முழுப்பகுதியிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாகும்.

ஹெஸ்பொல்லாவை லெபனானுக்குள் ஒரு இராணுவ, அரசியல் சக்தி என்னும் நிலையில் இருந்து அகற்றும் இப்போரின் உடனடி நோக்கம், இஸ்ரேலிய-அமெரிக்க ஆதிக்கம் நாட்டிற்குள் வராமல் தடுத்து நிறுத்த முற்படும் அனைத்து வெகுஜன இயக்கத்திற்கும் எதிராக செயல்படுத்தப்படுகிறது. புஷ் நிர்வாகமும் அதன் ஜெருசலேம் நண்பர்களும் இதை கீழ்க்கண்டவற்றிற்கு முக்கியமான கட்டமாக கருதுகின்றனர்: 1) சிரியாவில் உள்ள பாத்திச ஆட்சியை அகற்றுதல்; மற்றும் 2) ஈரானுக்கு எதிராக முழு அளவு போரை தொடங்குதல்.

இஸ்ரேலிய அரசாங்கமும், புஷ் நிர்வாகமும் முடிவில்லாத பிரச்சாரங்களை மீண்டும் மீண்டும் கூறிவருவது லெபனானுக்கு எதிரான தாக்குதல் ஒரு "தற்காப்பு நடவடிக்கை" என்றும் இதற்கு தூண்டுதலாக இருந்தது இரண்டு படையினர் சிறைபிடிக்கப்பட்டதும் என்பதாகும்; அறிவார்ந்த பார்வையாளர்களிடையே இந்தக் கூற்றுக்கு எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை.

லண்டனில் உள்ள Financial Times தன்னுடைய முக்கிய தலையங்கத்தில் ஜூலை 17 அன்று, "லெபனானை இஸ்ரேல் நிலம், கடல், ஆகாயம் மூலம் குண்டுவீச்சிற்கு ஆளாக்கியது --ஹெஸ்பொல்லாவின் கடந்த வார எல்லை கடந்த செயலுக்கு விடையிறுப்பதற்கு-- இப்பொழுது இஸ்லாமிய கொரில்லாக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலிய படையினரை மீட்பது என்பதை காட்டிலும் கூடுதலான தன்மையை அடைந்து விட்டது; ஒருவேளை ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்" என்று எழுதியுள்ளது.

இதேபோன்ற மதிப்பீடுகள்தான் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ேவால்ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் கணக்கிலடங்கா சர்வதேச செய்தித்தாட்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இப்பொழுது மிகவும் வெளிப்படையாகிவிட்டதைத்தான் அவை கூறுகின்றன; நீண்டகால ஆக்கிரமிப்பு திட்டத்தை அடைவதுதான் இஸ்ரேல் லெபனோன் மீது நடத்தும் தாக்குதல் ஆகும்.

சமீபத்திய நிகழ்வுகள் இன்னும் தெளிவான முன்னோக்கில் பெப்ருவரி 20005ல் லெபனிய பல பில்லியனரும் முன்னாள் பிரதம மந்திரியுமான ரபிக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன.

சிரியாவின் நண்பரான எமிலி லஹெளட் தன்னுடைய லெபனானின் ஜனாதிபதி பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு ஹரிரி எதிர்ப்பு தெரிவித்த பின், அதையொட்டி தன்னுடைய பிரதம மந்திரி பதவியை இராஜிநாமா செய்த நான்கு மாதங்களுக்கு பின்னர் பெய்ரூட்டில் இவருடைய கார்கள் அணிவகுப்பு பெரும் வெடிப்பினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஹரிரி கொலையுண்டார். அமெரிக்காவும், இந்தாட்டின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளருமான பிரான்சும் உடனே ஹரிரியின் மரணத்திற்கு டமாஸ்கஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டின. லெபனானுக்குள் இருந்த அவர்களுடைய சிரிய-எதிர்ப்பு நண்பர்கள் --சமூகத்தில் வசதியான அடுக்குகளில் இருப்பவர்கள்-- ஹரிரியின் கொலையை பயன்படுத்தி செடர் புரட்சி என்று அழைக்கப்படுவதை தொடங்கினர்; இது கடந்த ஆண்டு சிரிய படைகள் திரும்பப் பெறப்பட்டதில் முடிவடைந்தது; அப்படைகள் 1970 களில் இருந்து லெபனானை ஆக்கிரமித்திருந்தன.

உண்மையில், சிரிய ஆட்சி கொலையின் பின்னணியில் இருந்தால், அமெரிக்க-இஸ்ரேலிய திட்டமான சிரியாவை லெபனானில் இருந்து விரட்டுவதற்கு ஹரிரி தன்னுடைய ஆதரவை கொடுத்தார் என்று நம்பிக்கை பெற்றிருந்ததன் காரணமாக, வறிய ஷியைட் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளதுடன் லெபனானுக்கு தெற்கிலும் ஆதிக்கத்தை கொண்டுள்ள ஹெஸ்பொல்லா இயக்கத்தின் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அது மேற்கொள்ளப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து டமாஸ்கசில் இருக்கும் பாத்திச ஆட்சிக்கு எதிரான ஒரு தாக்குதலும் இருக்கும் என்பதை அது நன்கு அறிந்திருந்தது.

ஆனால் வேறுவிதமாகப் பார்த்தால், அக்கொலை இஸ்ரேலிய அல்லது அமெரிக்க உளவுத் துறை பிரிவுகளினால் இதே திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு போலிக் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறமுடியும்.

எப்படிப் பார்த்தாலும், தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல் அத்தகைய செயற்பாட்டைத்தான் துல்லியமாக கொண்டுள்ளது. செடர் புரட்சியே இஸ்ரேலிய, அமெரிக்கர்களிடையே ஏமாற்றம் தரும் விளைவுகளைத்தான் தோற்றுவித்தது. வாஷிங்டன், பாரிஸ் இரண்டும் கூட்டாக கொண்டுவந்த ஐ.நா.வின் பாதுகாப்புக்குழு தீர்மான விதிகளின் கீழ் லெபனானில் இருந்து சிரியா படைகளை திரும்பப் பெறுதல் கட்டாயமாயிற்று. ஆனால் அதன் நட்பு அமைப்பான ஹெஸ்பொல்லாவின் சக்தி பாதிக்கப்படாமல் இருந்தது.

உண்மையில், சிரிய-எதிர்ப்பு போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் -பெய்ரூட்டில் பெரும் விளம்பரத்துடன் மரோனைட் கிறிஸ்துவ சக்திகளும் மற்ற வாஷிங்டனுடன் பிணைந்த லெபனிய கட்சிகளும் அமைத்திருந்தது- ஹெஸ்போல்லாவும் இன்னும் அதிகமான எதிர்-ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி தலைநகரத்தின் தெருக்களுக்கு நூறாயிரக்கணக்கான மக்களைக் கொண்டுவந்தது. ஒரு புதிய உள்நாட்டுப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில், செடர் புரட்சியை ஒட்டி ஏற்பட்ட அரசாங்கம் ஓர் உடன்பாட்டிற்கு வந்தது; அதன்படி ஹெஸ்பொல்லாவின் பிரதிநிதிகள் காபினெட் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.

ஜூலை 20 அன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸ் புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வட்டங்களில் பிரதிபலித்த பெருந்திகைப்பை பற்றி எழுதியதாவது: "மூன்று தசாப்தங்கள் இருந்த சிரிய கட்டுப்பாட்டை முடிவிற்குக் கொண்டுவந்த செடர் புரட்சி என அழைக்கப்பட்ட நிகழ்வில் வெளிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், அரசியல் அலுவலகங்கள் மதத்தால் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு அமைப்பின் இறுக்கமான குறுகிய பிடிக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது." (டைம்ஸும் லெபனானின் தெற்கில் உள்ள அண்டை நாட்டுக்கு இத்தகைய "குறுகிய இறுக்கமான பிடி" பற்றிய ஆட்சேபனைகளை கொண்டது கிடையாது; அது அனைத்து அரசியல் அதிகாரமும் ஒரு மதத்தின் பிரதிநிதிகளால் எடுத்துக் கொள்ளப்படுவதுடன் மட்டுமல்லாமல், தன்னையே அது "யூதர்கள் அரசு" என்றும் வரையறுத்துக் கொண்டுள்ளது.)

இக்கருத்து லெபனிய மக்கள்மீதான தற்போதைய தாக்குதல்களின் உண்மை நோக்கத்தை சுட்டிக் காட்டுகிறது. இதன் நோக்கம் அந்நாட்டை மறு சீரமைப்பிற்கு முற்றிலும் உட்படுத்துவதாகும்; அதில் பாலஸ்தீனிய சார்பு, இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வுடைய ஷியைட் மக்கள் முற்றிலும் நசுக்கப்பட வேண்டும்; அமெரிக்க சார்பு உடைய வலதுசாரி சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவ பலாஞ்சிஸ்ட், மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

1975ல் இருந்து 1990 வரை பெரும் சேதத்தை விளைவித்த லெபனிய உள்நாட்டுப் போரின் விளைவை தலைகீழாக்கிவிட வேண்டும் என்ற முயற்சிதான் இது. அமெரிக்க, இஸ்ரேல், பிரான்ஸ் உட்பட மற்ற ஏகாதிபத்திய சக்திகள் அந்த நீண்ட குருதி கொட்டிய பூசலில் மத்திய பங்கை கொண்டிருந்து, அது தொடருமாறு செய்தன; அதில் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு சக்திகளும் புகுத்தப்பட்டன; அதன் பின்னர் 1982ல் ஒரு இஸ்ரேலிய படையெடுப்பும் நிகழ்ந்தது; அதன் பின்னர் 18 ஆண்டுகள் இஸ்ரேல் தெற்கில் ஆக்கிரமித்திருந்தது. வாஷிங்டனுடைய முக்கிய நட்பு அமைப்பாக பாசிச பலாஞ்சி இருந்தது; பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு மற்றும் லெபனிய இடது என்ற கூட்டணிக்கு எதிராக வலதுசாரி சக்திகளின் கூட்டணிக்கு பலாஞ்சி தலைமை வகித்தது.

ஏகாதிபத்திய சதிகளும், குறுக்கீடுகளும் லெபனானில் இருந்து பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை (PLO) விரட்டுவதில் வெற்றி அடைந்தன; ஆனால் பின்னர் வந்த உடன்பாடு பலாஞ்சியின் அதிகாரத்தை ஒருபுறம் குறைத்ததுடன், ஈரானிய சிரிய ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவின் எழுச்சியை மறுபுறம் கண்டது. இதைத்தான் வாஷிங்டன் மாற்றுவதற்கு உறுதியாக உள்ளது. தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல் குறிப்பிடத்தக்க வகையில், 1983 அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் அமெரிக்க மரைன் முகாம்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பின்னர், திரும்பப்பெற்ற பின்னர், இப்பொழுதுதான் அமெரிக்கா தன்னுடைய இராணுவப் படைகளை முதல்தடைவயாக லெபனானுக்கு நகர்த்திக் கொள்ளக்கூடியதாக செய்திருக்கிறது.

வரலாற்றுப் பின்னணி

இராணுவ அழுத்தம் மற்றும் அரசியல் உடன்பாடுகளை அந்நாட்டில் உள்ள வலதுசாரிகளுடன் கொண்ட வகையில் லெபனானை, அதை கிட்டத்தட்ட தன்னுடைய காப்பு நாடாக மாற்றும் வகையில் இஸ்ரேலுக்கு நீண்ட வரலாறு உள்ளது

மார்ச் 1978ல் லெபனிய உள்நாட்டு போரின் இடையில், இஸ்ரேல் இராணுவத் துருப்புக்களை எல்லையை தாண்டி லெபனானுக்கு அனுப்பி வைத்தது; PLO பயங்கரவாத கொடுமைக்கு இந்த நடவடிக்கைகள் விடையிறுப்பாக இருக்கும் என்று அவற்றை நியாயமும் படுத்தியது. இதன் நடவடிக்கைகள் 2,000 க்கும் மேற்பட்ட லெபனியர்களின் இறப்புக்களில் முடிவடைந்ததை அடுத்து சர்வதேச அழுத்தத்தினால் தன்னுடைய இராணுவ நடவடிக்கையை திருப்பப் பெற்றுக் கொண்டாலும், வடக்கு எல்லையின் 12 மைல் நீளத்திற்கு ஒரு வலதுசாரி குடிப்படையை நிறுவிய வகையில் இஸ்ரேல் தன்னுடைய கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டது; தெற்கு லெபனிய இராணுவம் என்று பெயரிடப்பட்ட அப்போராளி அமைப்பு மேஜர் சாத் ஹட்டாட்டின் தலைமையில் இஸ்ரேல் சார்பில் செயல்பட்டுவந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் 1982ல் இஸ்ரேலிய பிரதம மந்திரி மேனாசெம் பெகின்னும் அவருடைய பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோனும் இன்னும் கூடுதலான அவாக்கள் நிறைந்த திட்டத்தை செயல்படுத்தி அனைத்து லெபனான் மீது அரசியல் கட்டுப்பாட்டை கொண்டுவந்து PLO வை நாட்டில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மீண்டும் இதற்கான வசதியான போலிக்காரணம் ஜூன் 1982ல் இஸ்ரேலிய தூதர் ஒருவர் லண்டனில் பாலஸ்தீனிய கொலைகாரர் ஒருவரால் காயப்படுத்தியது பயன்படுத்தப்பட்டது. உளவுத்துறை வல்லுனர்கள் PLO இந்த நிகழ்வில் எத்தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று ஒப்புக் கொண்டாலும், பெகின் அரசாங்கம் லெபனான் மீது படையெடுப்பதற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டது. அவநம்பிக்கையின் முழுத்தன்மையை வெளிப்படுத்திய "கலீலீயின் சமாதனாம்" என்ற தலைப்பை கொண்டிருந்த செயற்பாட்டில், இஸ்ரேலிய துருப்புக்கள் வடக்கே அலைமோதி பெய்ரூட்டிற்கு புறத்தே நின்றது; அந்நகரமும் நீடித்த குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட்டது.

இப்போர் லெபனோனில் இருந்து PLO வெளியேறுவதை கட்டாயப்படுத்தி, இஸ்ரேல் ஒப்புதலுடன் லெபனிய பாசிச குடிப்படையினர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளை படுகொலை செய்வதற்கு வழிவகுத்தது.

ரேகன் நிர்வாகம் பெய்ரூட்டில் மரைன்களை நிறுத்திய அளவில் அமெரிக்காவும் லெபனானை அடக்கி வைத்ததில் தொடர்பை கொண்டது. ஆனால் பெய்ரூட்டின் வறிய பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக பங்கு கொண்டது ஆழ்ந்த விரோதப் போக்கை தோற்றுவித்தது (இவை அமெரிக்க கடற்படை கப்பல்களால் குண்டுவீச்சிற்கு உட்பட்டன); இதையொட்டி தற்கொலை படைகள் பதிலடி கொடுத்ததில் 250 மரைன்கள் கொல்லப்பட்டனர். ரேகன் நிர்வாகம் தன்னுடைய இழப்புக்களை குறைத்துக் கொள்ள விரும்பி லெபனானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால், இஸ்ரேலிய ஆட்சி தெற்கு லெபனானில் கணிசமான பகுதிகளில் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முற்பட்டது. ஆக்கிரமிப்பிற்கு மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்புணர்வினால்தான் ஹெஸ்பொல்லா ஒரு சக்தி வாய்ந்த இராணுவ, அரசியல் அமைப்பாக எழுச்சி பெற்றது. ஹெஸ்பொல்லா நடத்திய கொரில்லாப் போர் இறுதியில் இஸ்ரேலை தன்னுடைய படைகளை 2000த்தில் திரும்ப பெற வைத்தது.

இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள்

தற்போதைய போர் ஹெஸ்பொல்லாவை அழித்துவிடுவதை பற்றி மட்டும் இல்லாமல், லெபனானிற்குள் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் அதை அழித்துவிடும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாகும். இந்த உகந்த இலக்கை அவர்கள் கொண்டிருப்பதுதான் தற்போதைய அவர்களின் வழிவகைகளை சரியாக விளக்குகிறது. தெற்கில், வறிய ஷியைட் மக்களின் பகுதிகளை பொறுப்பற்ற வகையில் குண்டுவீச்சிற்கு இஸ்ரேல் உட்படுத்துகிறது; இந்த இடம்தான் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவு கொடுக்கும் முக்கிய தளமாகும். இஸ்ரேலிய இராணுவம் வேண்டுமென்றே குடிமக்களை தாக்குவதை இலக்காக கொண்டு, இப்பகுதி முழுவதும் வசிப்பதற்கு இலாயக்கற்ற வகையில் கிராமங்களையும் மற்ற இடங்களையும் அழித்து வருகிறது.

Washington Post வியாழக் கிழமை இஸ்ரேல் தெற்குப் பகுதியில் லிற்டனி ஆற்றிற்கு கீழுள்ள பகுதியில் வசிக்கும் அனைத்து லெபனியர்களும் அப்பகுதியை விட்டு 24 மணி நேரத்திற்குள் இடம் பெயருமாறு உத்திரவிட்டதாக தெரிவிக்கிறது.

இதன் இலக்கு தெற்கு லெபனானை ஒருவரும் வசிக்காத பகுதியாக மாற்றி, இஸ்ரேலிய துருப்புக்கள் அல்லது ஒரு கூட்டு இஸ்ரேலிய அமெரிக்க படைகள் நுழைவதற்கு வசதியாக செய்ய வேண்டும் என்பதாகும்; ஒருவேளை நாடுகளின் படைப் பிரிவுகளும் "சர்வதேச அமைதி காக்கும் படை" என்று ஐ.நா.வின் ஆணையின் கீழ் கொண்டுவரப்படலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக லெபனிய வறியவர்களுக்கு எதிராகத்தான் இஸ்ரேலிய தாக்குதல் ஒரு போராக உள்ளது. பெய்ரூட் மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள செல்வந்தர் வாழும் குடியிருப்புக்கள் அதிக அளவில் தாக்கப்படவில்லை. உள்நாட்டு போரின்போதும் இருந்த அமெரிக்க, இஸ்ரேலிய கொள்கையின் தொடர்ச்சிதான் இது; அப்பொழுது அவர்கள் பலாஞ்சிகளுடன் சேர்ந்து கொண்டு ஷியைட் மக்கள் மற்றும் பாலஸ்தீனிய அகதி மக்களுக்கு எதிராக செயல்பட்டனர்.

இறப்பு, பேரழிவு ஆகியவை தெற்கு லெபனானில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது பெய்ரூட்டின் ஷியைட் தெற்கு புறநகர்ப்பகுதிகள் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள், பாலங்கள் இன்னும் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விசை உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை குண்டுவீசி தகர்ப்பதுடன் இணைந்ததாகும். நாட்டின் உள்கட்டுமானத்தையே அழித்துவிடும் நோக்கத்தைத்தான் இது கொண்டுள்ளது. லெபனானை மீண்டும் அரசியல் தன்மைய உடையதாக உருவாக்க, அதை பெளதீக ரீதியில் முதலில் அழிக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் இளைய பங்காளி இஸ்ரேல் ஆகியவை சிரியா, ஈரான் இவற்றிற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு என்ன கதி நேரிடலாம் என்பதை பற்றி இது ஓரளவு குறிப்பைக் கொடுக்கிறது.

முழு அளவில் தரைப் படையெடுப்பு திட்டம் ஏதும் இல்லை என இஸ்ரேல் கூறுவதை நம்புவதற்கும் எக்காரணமும் இல்லை. இஸ்ரேலியர்கள் இதைக் கூடுதலாக மறுக்கின்றனர் என்றால், அது உறுதியாக நடக்கும் என்றுதான் பொருள்படும். தெற்கு லெபனானில் நடக்கும் குண்டுவீச்சின் அளவு பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல போதுமானதாக இருக்கும் அதேவேளை, ஹெஸ்பொல்லாவை ஒரு அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக அழிக்க வேண்டும் மற்றும் லெபனானை ஒரு சியோனிச பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக மாற்றச் செய்ய வேண்டும் என்னும் இஸ்ரேலின் நோக்கங்களை அது நிறைவேற்றவில்லை.

இஸ்ரேலிய செய்தித்தாள் Haaretz ஐ மேற்கோளிட்டு NBC யின் மாலைச் செய்திகள் வியாழனன்று தெற்கு லெபனான் எல்லையை கடந்து பல ஆயிரம் இஸ்ரேல் படைகள் உள்ளே சென்றுள்ளன எனத் தெரிவித்தது.

அமெரிக்காவின் பங்கு

இப்போரில் அமெரிக்கா ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. முன்கூட்டியே இது போருக்கு ஒப்புதல் கொடுத்து மிக நெருக்கமான முறையில் இஸ்ரேலிய இராணுவத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அமெரிக்காவால் நிதியம் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள் போர் இயந்திரத்தை அது செயல்படுத்தவும் ஒத்துழைப்பை கொடுத்து வருகிறது.

இராஜதந்திர மட்டத்தில், புஷ் நிர்வாகம் வெளிப்படையாகவே தன்னுடைய நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கத்தின் இராணுவ இலக்குகள், அரசியல் கணக்குகள் ஆகியவற்றுடன் பிணைத்து கொண்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் இப்பகுதியில் மேற்கொள்ளவிருக்கும் வருகையை ஒட்டி இஸ்ரேலுடன் ஒத்துழைத்து தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் சாத்தியமான அளவு மிக அதிக அழிவை ஏற்படுத்துவதற்கு கால அவகாசத்தையும் கொடுத்துள்ளது. ஜூலை 19 பதிப்பில் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், "இன்னும் கூடுதலான வகையில் ஹெஸ்பொல்லா சக்திகள் வலுவிழப்பதற்கு இஸ்ரேல் ஆவன செய்வதற்கு மேலும் சில நாட்கள் கொடுக்கப்பட்டு, அதுவரை செல்வி ரைஸ் காத்திருப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் சமிக்கை காட்டியுள்ளனர்".

போர்நிறுத்தத்திற்கு தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் காட்டும் வெளிப்படையான எதிர்ப்பு முன்னோடியில்லாத ஒரு செயலாகும். ஜூலை 19 அன்று வெளியிட்ட அமெரிக்க கொள்கையை பற்றிய வெளிப்படையான மதிப்பீட்டில் Wall Street Journal, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் கடைசியாக வெடித்த பெரிய பூசலில் வாஷிங்டன் கொண்டிருந்த இராஜதந்திர பங்கை கூறத் தொடங்கியது:

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலிய படைகளும் பல வாரம் நீடித்த குருதி பெருக்கில் கைகலந்தபோது, ஜனாதிபதி கிளின்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் வாரன் கிறிஸ்டோபரை அப்பகுதிக்கு அனுப்பிவைத்து, ஆறுநாட்கள் தீவிரமான முறையில் டமாஸ்கசுக்கும் ஜெருசலத்திற்கும் இடையே தூதரக முயற்சிகளில் ஈடுபட பணித்தார். இறுதியில் குறைந்தபட்சம் தற்காலிகமாகத்தான் என்றாலும் கூட அம்முயற்சியினால் சண்டை நின்ற அளவில் அவர் போர் நிறுத்த பேரத்தில் வென்றார்.

"இன்றோ, புஷ் நிர்வாகம் அப்பட்டமான முறையில் மாறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளது."

அமெரிக்கா, போரை, முழுமையாகவும் வெளிப்படையாகவும் வெளியுறவுக் கொள்கையின் கருவியாக நெறிப்படுத்தி வருகிறது. இது ஈராக்கில் அது கொண்டிருக்கும் இராணுவ வலிந்துதாக்குதலின் தொடர்ச்சியாகும், மற்றும் சிரியா, ஈரான், இன்னும் பிற நாடுகளில் அது மேற்கொள்ளவிருக்கும் வருங்கால ஆக்கிரமிப்பு பற்றி முன்கூட்டிக் கூறுவதும் ஆகும். புஷ்ஷின் "முன்கூட்டியே தாக்கி தனதாக்கும் போர்" என்ற கொள்கை நெறியுடன் இது பிணைந்து உள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சிகளான ஜனநாயக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் என்று அமெரிக்க அரசியல் நடைமுறை முழுவதும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டது.

லெபனானில் படுகொலையை தொடர இஸ்ரேலை அமெரிக்க உறுதியுடன் அனுமதிக்கும் முயற்சியானது, தற்போதைய போர் அமெரிக்க ஏகாதிபத்திய உந்துதலின் ஒரு பகுதி என்பதையும், எப்படியும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படவேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இந்த பொறுப்பற்ற, குற்றம்சார்ந்த இராணுவ செயல் குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைய உதவுமா அல்லது வாஷிங்டனை இப்பகுதியில் இன்னும் ஆழ்ந்த சங்கடத்திற்கு உட்படுத்துமா என்பதை பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.

 Top of page