World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government abandons thousands of citizens trapped in Lebanon

இலங்கை அரசாங்கம் லெபனானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பிரஜைகளை கைவிடுகிறது

By Vilani Peiris
26 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

லெபனானில் வறிய நாடுகளில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் மிகப்பெரும் பகுதியினரான 90,000 இலங்கையர்கள், அமெரிக்க ஆதரவிலான இராணுவத் தாக்குதலில் சிக்கியுள்ளனர். 28 வயதான இலங்கைப் பெண் விஜித மாலிகா கொல்லப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் உயிரிழந்துள்ளனராக அல்லது காயமடைந்துள்ளனரா என்ற பீதி நிலவுகிறது. இந்த நிலைமையிலும் இலங்கை அரசாங்கம் அதனது பிரஜைகளுக்கு புறங்காட்டுகிறது.

பாலஸ்தீனர்களுடனான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவரான இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷவோ அல்லது அவரது அரசாங்கமோ, லெபனான், காசா அல்லது மேற்குக்கரை மீதான தாக்குதல்களை கண்டனம் செய்து அறிக்கை விடவில்லை. அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய தாக்குதல்கள் சம்பந்தமாக இராஜபக்ஷ அமைதியாக இருப்பதானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத் தயாரிப்புகளுக்கு வாஷிங்டனின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமது பிரஜைகள் லெபனானில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் விசேடமாக உதவி கோருபவர்களை மட்டும் நாடு திருப்புவதகாவும் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக பிரகடனம் செய்துள்ளது. இதுவரை 264 இலங்கைத் தொழிலாளர்கள் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் சிலர் சிரியாவில் டமஸ்காசுக்கு தப்பிச்செல்லும் வழியை அவர்களாகவே ஏற்பாடு செய்துகொண்டுள்ளனர். அங்கிருந்தே அவர்கள் விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஜகத் வெல்லவத்த, "பலருடன் தொடர்புகளை ஏற்படுத்துவது தர்க்க ரீதியில் மிகமிகக் கடினம்" எனக் கூறுகின்றார். எவ்வாறெனினும், இலங்கைக்கு லெபனானில் சில அலுவலர்கள் உள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். "மக்கள் எங்கே தங்கியிருக்கின்றார்கள் அல்லது அவர்கள் காயமடைந்துள்ளனரா இல்லையா என்பதையிட்டு எமக்குத் தெரியாது," என அவர் கூறினார்.

கடந்த வாரம், லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் அமானுல் ஃபாருக், தென் லெபனானில் சிக்கியுள்ளவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் போக்குவரத்து வழங்கமுடியாதுள்ளதோடு புலம்பெயர் தொழிலாளர்கள் பெய்ரூட்டுக்கான பயணத்தை தாங்களாகவே ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டும் என்றார். இதை எவ்வாறு செய்வது என்பது பற்றி எந்தவொரு விளக்கமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், இராஜபக்ஷ அரசாங்கம் இந்தத் தொழிலாளர்களை அவர்களின் தலைவிதிப்படியே சாதாரணமாக கைவிட்டுள்ளது.

இது இலங்கை தொழில் அமைச்சர் அதாவுத செனவிரட்னவினால் கடந்த வராம் தாராளமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. "மக்கள் வேண்டுகோள் விடுத்தால், மற்றும் வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டால் மட்டுமே" அரசாங்கம் உதவி செய்யும் என அவர் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய செனவிரட்ன, லெபனானில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதை அரசாங்கம் விரும்பவில்லை. இலங்கையில் உள்ள குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் வெளியேறத் தூண்டுவதை நிறுத்த வேண்டும், என்றார்.

"பெருந்தொகையான மக்கள் திரும்பிவர விரும்புகிறார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் வழமையாகவே முரண்படுகிறார்கள்," என செனவிரட்ன சிடுமூஞ்சித்தனமாக குற்றஞ்சாட்டினார். "பிரச்சினை என்னவெனில், இங்குள்ளவர்களே அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திரும்பி வருமாறு அழைக்கின்றார்கள். இவர்கள் அழைக்கவில்லையெனில் அவர்கள் வரப்போவதில்லை... இந்த ஆண்டு மேலும் 400,000 தொழிலாளர்கள் மத்தியகிழக்குக்கு அனுப்பப்படுவதை நான் உறுதிசெய்துகொள்ள வேண்டும்."

செனவிரட்ன தெளிவுபடுத்தியது போல், அரசாங்கத்தின் பிரதான கவலை அது சம்பாதிக்கும் அந்நிய செலாவணியே தவிர தமது பிரஜைகளின் சுகாதாரமும் பாதுகாப்பும் அல்ல.

வெளிநாடுகளில் தொழில் புரியும் சுமார் பத்துலட்சம் தொழிலாளர்களில், பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கிலேயே உள்ளனர். இவர்கள் இலங்கையின் அந்நிய செலாவணிக்கு இரண்டாவது பெரும் மூலாதாரமாகும். ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் லெபனான் மிகக் குறைந்தளவிலான சம்பளத்தையே கொடுக்கின்றது. ஆகவே அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறுமைப் பிடிக்குள் அகப்பட்டுள்ள கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

உதாரணமாக, உயிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணான விஜித மாலிகா, காலிக்கு அருகாமையில் உள்ள பலபிட்டியவில் உள்ள மிக வறிய குடும்பத்தை சேர்ந்தவராவார். அவரது சகோதரிகள் இருவரும் கூட இன்னமும் லெபனானிலேயே இருக்கின்றனர்.

நிச்சயமான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இல்லாவிட்டாலும், லெபனானில் தொழிலில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுத் தொழிலாளர்கள், கூலியாட்கள் மற்றும் சாரதிகளாகவும் சேவையாற்றுவதோடு, இவர்களில் பெருந்தொகையானவர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள தென் லெபனானில் இருப்பதால் அவர்களால் இலங்கையுடன் தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. இலங்கையின் சர்வதேச தபால் சேவைப் பிரிவின்படி, லெபனானில் உள்ள தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள 60,000 கடிதங்களும் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் திரும்பிவரவுள்ளன.

அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற அலட்சியப் போக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்காக அது ஒதுக்கியுள்ள அற்ப தொகையில் இருந்து மேலும் கோடிட்டுக் காட்டப்படுகிறது. கடந்த வாரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் உணவு, தற்காலிக தங்குமிடம், சுகாதாரம், உள்ளூர் போக்குவரத்து மற்றும் ஏனையவற்றுக்கும் தேவையான பணம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அறிவித்த போதிலும், அது ஒதுக்கியுள்ள மொத்த தொகை 2.5 மில்லியன் ரூபாய்களாகும் (25,000 அமெ. டொலர்கள்)

அண்மைய அறிக்கைகளின்படி, பெய்ருட்டில் உள்ள இலங்கை தூதரகத்திலும் மற்றும் நலன்புரி அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்களிலும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் முகாமிட்டுள்ளனர்.

வீட்டு உதவியாளரான 22 வயதுடைய பத்மா, தான் வீடு திரும்புவதை தனது எஜமான் விரும்பவில்லை எனவும் அவர் கடவுச் சீட்டை கைப்பற்றி வைத்திருப்பதாகவும் பி.பி.சீ. க்குத் தெரிவித்துள்ளார். "அவர்கள் எங்களது கடவுச் சீட்டுக்களை கொடுக்க மாட்டார்கள். நான் தொடர்ந்தும் அங்கு வேலை செய்யவேண்டும் என்பதே அவர்களது தேவை மற்றும் நான் திரும்பிச் சென்றால் எனது எஞ்சியுள்ள சம்பளத்தை அவர்கள் கொடுக்கமாட்டார்கள்," என அவர் தெரிவித்துள்ளார். "நான் லெபனானில் ஒன்றரை வருடங்களாக வேலை செய்திருந்த போதிலும் எனக்கு மூன்று மாத சம்பளமே கிடைத்துள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்னொரு பெண் தொழிலாளரான மெனிகா, 21, தெளிவுபடுத்துகையில், தான் அவசரமாக இலங்கைக்கு திரும்ப விரும்பினாலும், இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்து போகக் கூடும் என்ற பீதியினால், பெய்ரூட்டுக்கு செல்ல இலங்கை தூதரகம் ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்யும் வரையும் தன்னை செல்லவிடாமல் தனது எஜமான் தடுத்துக்கொண்டிருப்பதாக கூறினார். "இங்கு எவர் வரப்போகிறார்? பாதைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. வெளியே செல்வதும் உள் வருவதும் மிகக் கடினம்," என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு இரவும் கடுமையான குண்டுத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன என அவர் விளக்கினார்: "அயலில் உள்ள யாரோ கொல்லப்பட்டுள்ளார்கள். நான் வீட்டுக்குப் போக வேண்டும். நான் இலங்கையை பார்க்க வேண்டும்.

வீட்டுப் பணியாளரான ஹேமலதா,30, அவரது எஜமான் அவரை மிக சாதாரணமாக அகதியாக்கி விட்டதாக தெரிவித்தார். "நான் இங்கு வீசப்பட்டுள்ளேன். எனது கணவர் குருடர். நான் எனது பிள்ளைகளை பராமரிக்க வேண்டும். நான் மீண்டும் வீடு திரும்பினால் எனக்கு தொழில் கிடையாது," என்றார்.

புலம்பெயர்ந்தவர்களின் சர்வதேச அமைப்பின் (ஐ.ஒ.எம்) பேச்சாளரான ஜெமினா பாண்டிய, ஐ.ஒ.எம் இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் மொல்டோவாவில் இருந்து வந்தவர்களுக்கு உதவுவதற்காக முயற்சித்த போதிலும், பெரும்பாலான வீட்டுப் பணியாளர்களுக்கு பணமோ அல்லது ஆவணங்களோ கிடையாது. தம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட பணமே உள்ளதாகவும் சுமார் 300 இலங்கையர்களுக்கு மட்டுமே உதவ முடியும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மிகவும் சிரமமான நிலைமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஐ.ஒ.எம். உதவ முடியும் என பண்டியா குறிப்பிட்டார். "இவர்களில் 46 பேர், தொடர்ந்தும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் லெபனான் இராணுவத் தளத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கியிருக்கின்றனர்.

லெபனானை விட்டு வெளியேறக் கூடிய பல இலங்கையர்கள், பெரும்பாலும் கடவுச் சீட்டுக்களை மட்டும் எடுத்துக் கொண்டு உடுத்திய உடையுடன் வந்து தமது சோகக் கதைகளை விவரிக்கின்றனர்.

தென் லெபனானில் சேவையாற்றிய துலானி தரங்கா, வார இறுதியில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "எந்தவொரு எச்சரிக்கையும் இன்றி தாக்குதல் தொடுக்கப்பட்டது. எம்மைச் சூழ உள்ள கண்ணாடிகள் தூளாகிக் கொட்டியதோடு கட்டிடம் உடைவதை நாம் உணர்ந்தோம். நான் வீட்டில் உள்ள பெண் மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுடன் ஐந்தாவது மாடியில் இருந்தேன். விமானத் தாக்குதல் தொடங்கியவுடன் நாம் அடித்தளதிற்குப் பாய்ந்து செல்லத் தீர்மானித்தோம். நாங்கள் படிக்கட்டுகளில் சென்றுகொண்டிருந்த போது மேலும் குண்டுகள் விழுந்தன."

"அடித்தளத்திற்கு ஒரு வழியாக சென்றோம். அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் கட்டிடத்தை விட்டு வெளியேறியபோதே அடுத்த குண்டில் கட்டிடம் தாக்கப்பட்டது. நான் உடனடியாக வெளியே ஓடிவிட்டேன். அப்போது என்னிடம் இருந்தது எல்லாம் என்னுடைய கடவுச் சீட்டும் ஒரு சிறிய தொலைபேசி இலக்க குறிப்பும் மட்டுமே." தான் சேவையாற்றிக் கொண்டிருந்த குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை சென்று பார்க்கக் கூட அவர் பீதியில் இருந்தார்.

"நான் தொடர்ந்து நடந்தேன். எல்லா கட்டிடங்களும் சேதமாகி இருந்ததோடு எங்கிலும் சடலங்கள் கிடந்தன, வாகனங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஒரு வாடகை வாகனத்தை நிறுத்தி ஒரு வழியாக பெய்ரூட்டை அடைய என்னால் முடிந்தது. என்னிடம் 100 அமெரிக்க டொலர்களும் எனது கடவுச் சீட்டும் இருந்தன. நான் வந்த வாகனத்திற்கு மட்டும் 25 அமெரிக்க டொலர்கள் செலவாகின," என அவர் தெரிவித்தார்.

ஜயலத் குமார வெள்ளியன்று கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார். இஸ்ரேலிய குண்டுகளால் பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டதாகவும் மற்றும் இந்த விமானத் தாக்குதல்களின்போது பல இலங்கையர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை கேள்விப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அப்போது விமான நிலையத்தில் இருந்த தொழில் விவகார அமைச்சர் செனவிரட்ன, இந்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை எனக் கூறி குமாரவை தடுத்ததாக சண்டே டைம்ஸ் நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

செனவிரட்னவின் தலையீடானது, லெபனானில் உள்ள உண்மையான நிலைமை பற்றிய தகவல்களை நசுக்க இராஜபக்ஷவின் அரசாங்கம் முரட்டுத் துணிச்சலுடன் முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகிறது.

இலங்கையில் கடந்த வெள்ளியன்று கொழும்பிலும் மற்றும் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை நிறுத்து! அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக!" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

இராஜபக்ஷ அரசாங்கம் தமது சொந்த பிரஜைகளின் தலைவிதியையிட்டு உணர்ச்சியற்ற அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் அதே வேளை, இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருவதையும் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் தலைவிதி பற்றிய கவலை அதிகரித்து வருவதையுமே இந்த ஆர்ப்பாட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Top of page