World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush and the Haditha massacre

ஜோர்ஜ் புஷ்ஷும் ஹடித் படுகொலைகளும்

By Barry Grey
2 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஹடித் நகரத்தில் 24 நிராயுதபாணிகளான ஈராக்கிய குடிமக்களை தூண்டுதலின்றி படுகொலை செய்தது பற்றி இதுகாறும் மெளனம் சாதித்துவந்த ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், புதனன்று அதைக் கலைத்தார். இந்நிகழ்வு நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவருடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரால் இதுபற்றி அறிவுறுத்தப்பட்டு இருமாதங்களுக்கு பிறகு, Time ஏட்டில் இதுபற்றிய விரிவான தகவல் வெளிவந்து இருமாதங்களுக்கு பின்னர், புஷ் "ஆரம்பத்தில் வந்த செய்தித் தகவல்கள் பற்றி தான் மிகவும் உளைச்சலுற்றதாக" கூறினார்.

ருவண்டாவின் ஜனாதிபதி போல் ககாமேயுடன் வெள்ளைமாளிகையில் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கு பின் பேசிய புஷ், மேலும் கூறினார்: "முழுமையான விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றி நான் அறிவேன். உண்மையில் சட்டங்கள் மீறப்பட்டிருந்தால், தண்டனை அளிக்கப்படும்."

இதே கருத்தை வியாழனன்று மீண்டும் வலியுறுத்தி புஷ் கூறியதாவது: "தவறு ஒன்று நடந்திருந்தால், செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்". அமெரிக்க படைகளுக்கு "நன்னெறி பயிற்சி" திட்டம் ஒன்று கொடுக்கப்பட்டு வருவதை பாராட்டிப் பேசிய அவர் அறிவித்தார், "இது ஒரு நினைவுபடுத்துதல் ஆகும் -- ஏனெனில் ஈராக்கிலோ மற்ற இடங்களிலோ எமது படைகளுக்கு -- ஏற்கனவே அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் மிக உயர்ந்த நெறிகள் பற்றியும் ஈடுபட்டிருக்கும் வேலையின் வலுவான விதிமுறைகள் பற்றியும் நன்கு தெரியும்."

இத்தகைய அறிக்கைகள் மூலம் தன்னுடைய நிர்வாகம் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபு கிறைப் சிறையில் தனக்குக் களிப்புத் தருவதற்காக பிறரை துன்புறுத்திய செயல்கள் அம்பலமானதின் முடிவு எப்படி இருக்கும் என்று புஷ் அடையாளம் காட்டிவிட்டார்: அதாவது அடிமட்ட துருப்புக்களை, குற்றத்தில் தொடர்பு உடையவர்களை, பரிதவிக்கச் செய்துவிடல், எப்பொறுப்பினின்றும் உயர்மட்ட அதிகாரிகளை விடுவித்துவிடல் என்பதேயாகும் அது.

தன்னுடைய நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட ஈராக்கியர்கள் பற்றி அசட்டைத் தன்மை, இகழ்வு என்பதை புஷ்ஷின் கருத்துக்கள் வெளிப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், காலனித்துவ பாணியிலான இராணுவ ஆக்கிரமிப்பு என்ற தீய கனாவில் தள்ளப்பட்டுள்ள அமெரிக்க வீரர்கள்மீதும் இகழ்வையும் அசட்டையையும் வெளிப்படுத்துகின்றன. "அமெரிக்காவின் மிகச் சிறந்த படை அணிவகுப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முன்னணியில் உள்ளது" என்று அரசியல் அளவில் ஆதாயம் தேடும் புகழாரங்களை சூட்டினாலும், ஈராக்கில் போர்க் குற்றங்களுக்கான குற்றச்சாட்டை முழுமையாக அமெரிக்க தனி துருப்புக்கள் மீது சுமத்துவதில் அவருக்கு தயக்கமோ, பிரச்சினையோ இல்லை; அப்பொழுதுதான் அவர், தான் உட்பட, போர்க் கொடுமைகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாததாக்கிய கொள்கைகளை வகுத்தவர்களிடமிருந்து கவனத்தை திசை திருப்ப முடியும்.

"சட்டங்கள் மீறப்பட்டால், தண்டனை அளிக்கப்படும்." உண்மையிலேயா? போரே சர்வதேச சட்டத்தை மீறியது; இதைத்தவிர கைதிகள் தவறாக நடத்தப்பட்டது, சித்திரவதைக்கு உட்பட்டது ஆகியவை நிகழ்ந்தன; பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டவர்கள் கடத்தப்பட்டனர்; வாஷிங்டனுடன் நட்பு கொண்டுள்ள ஆட்சியிடங்களில் அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்; இரகசிய CIA சிறைகளின் வலைப்பின்னல் இருந்தது; மற்றும் சட்டம் முறையாக செயல்படுதல், ஜெனிவா மரபுகள் உரிமை மீறப்படுதல் என்பதெல்லாம் அமெரிக்காவின் சர்வதேச வலைவீச்சின்கீழ் மிதித்துத் தள்ளப்பட்டன.

புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், பவெல், ரைஸ், இராணுவத் தளபதிகள் இன்னும் மற்றவர்கள், பொய்களின் அடிப்படையில் போரைத் திட்டமிட்டு தொடக்கியவர்கள்தான் முக்கியமாக சட்டத்தை மீறியவர்கள் ஆவர். போரை தொடக்க பிரச்சாரம் செய்த குடியரசு, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆமாம்-சாமிகள் அனைவரும் ஆக்கிரமிப்பை ஆதரித்தவர்கள் அவர்களுக்கு உடந்தையாக நின்றவர்கள் ஆவர்.

ஹடிதாவில் நிகழ்ந்தது ஒரு போர்க்குற்றமாகும்; அதிலும் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் கொடூரமானது ஆகும். ஏனெனில் இதை நிகழ்த்தியவர்கள் முறையான முறையில் ஐந்து மணிநேர காலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை தனிமைப்படுத்திக் கொன்றவர்கள் ஆவர். ஆனால் பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களை கொன்றுகுவித்து பல்லூஜா, தல் அபர் போன்ற நகரங்கள் முற்றிலுமாய் அழிக்கப்பட்ட நிகழ்வுகளை பற்றி என்ன கூறுவது? புஷ்ஷும் செய்தி ஊடகமும் இவற்றை பெரும் வெற்றிகள் என்று போற்றுகின்றனர்.

ஈராக்கிய மக்கள் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பினால் இழைக்கப்பட்ட கொடூரத்தின் தன்மை, குறைந்தபட்சம் சில அமெரிக்க செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஹடிதாவில் நிகழ்ந்த கொடூரங்கள் ஈராக்கிய மக்களின் நனவில் பெரும் பாதிப்பை இன்னமும் ஏற்படுத்தவில்லை. ஜூன் 1ம் தேதி பதிப்பில் The Los Angeles Times, படுகொலையை பற்றித் தகவல் கொடுக்கும்போது, பாக்தாத்தில் உள்ள அரசியல் பகுப்பாய்வாளர் Hassan Bazzaz, "அமெரிக்கர்கள் 20 பேரைக் கொன்றார்கள் என்பதைக் கேட்கும்போது அதிக திகைப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் மக்கள் கொல்லப்பட்டு தெருக்களில் தூக்கி எறியப்படுகிறார்கள்; குப்பைத் தொட்டிகளில் எறியப்படுகிறார்கள். மக்கள் பெரும்பீதியில் வாழ்கின்றனர். ஹடிதாவில் என்ன நடந்தது என்பது பற்றி நினைப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை" என்று கூறியதை மேற்கோளிட்டுள்ளது.

புஷ்ஷின் கருத்துக்கூறிய அன்றே, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அமெரிக்கப்படைகள் இரண்டு ஈராக்கிய பெண்மணிகளை கொன்றதாகவும், அவர்களில் ஒருவர் குழந்தையை பெறும் தறுவாயில் இருந்ததாகவும், சமாராவில் அந்நேரத்தில் அவர்களுடைய காரின்மீது படைகள் சுட்டன என்றும் கூறியுள்ளனர்.

ஹடிதா நிகழ்வுகள் பற்றிய உத்தியோகபூர்வ விசாரணை பற்றிக் கொடுத்துள்ள தகவலில், வாஷிங்டன் போஸ்ட் ஜூன் 1ம் தேதி பதிப்பில், அமெரிக்கப் படைகள் மற்றும் அவர்களுடைய ஈராக்கிய ஆதரவாளர்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் அனைத்திலும் அடியிற்கிடக்கும் உண்மை அரசியல், இராணுவத்தன்மை பற்றி குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. "ஒரு அரேபிய நாட்டை முதலாவதாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், எழுச்சியை அடக்கும் கடுமையான நீண்ட பணியை இராணுவம் நிறைவேற்றத் தயார் செய்யப்பட்டிருக்கிறதா?" என்றும் செய்தித்தாள் கேட்டுள்ளது.

ஹடிதாவில் 24 பேரைக் கொன்ற துருப்புக்கள் குற்றவாளிகள், தங்களுடைய குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை பெற வேண்டும். ஆனால் அவர்களுடைய செயலில் குற்றத்தன்மை இருப்பதுபோல சோகமும் உண்டு. இப்படிக் குற்றங்களை செய்பவர்களும், போருக்குக் காரணமான புஷ்ஷை பற்றியும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்களை பற்றியும், இவ்வாறு கூறமுடியாத பாதிக்கப்பட்டவர்கள்தான்.

மூன்றாவது பட்டாலியன், கிலோ இராணுவப் பிரிவில் இருந்த பல கடற்படை துருப்புகளும், நவம்பர் 19 காலையில் விடிந்தவுடன் ஹடிதாவிற்கு சென்ற முதல் கடற்படை துருப்புகளும் ஈராக்கிற்கு மூன்றாம் முறையாக அனுப்பப்பட்டவர்கள் ஆவர். மூன்று ஆண்டுகள் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் சுன்னி மக்கள் அதிகமாக இருக்கும் அன்பர் மாநிலத்தில் அமெரிக்க படைகளை எதிர்கொள்ளும் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்துவிட்டது என்பதை அவர்கள் நன்கு அறிவர். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும், அதன் கைப்பாவை பாக்தாத் அரசாங்கத்திற்கும் எதிரான, மக்கள் எழுச்சியின் மையமாகத்தான் ஹடிதாவே இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வேறொரு கடற்படை பிரிவில் இருந்து 20 துருப்புகள் இந்த நகரத்தில் மூன்று நாட்கள் காலஅவகாசத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

ஈராக்கில் உள்ள மற்ற அமெரிக்க படைகளை போலவே, இவர்களும் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழ்ந்த, முறையான விருப்பத்தின் உந்துதலால் எழுச்சியுற்றிருக்கும் மக்களை அடக்கி, ஒடுக்கும் நிலையில் இருந்திருந்தனர். பொய்யான முன்கருத்துக்களை ஒட்டி போருக்கு அனுப்பப்பட்ட இவர்கள், வாஷிங்டனுடைய உண்மையான போர் நோக்கம் அல்லது ஈராக்கில் இருக்கும் நிலைமையின் உண்மை ஆகியவற்றுக்கு தொடர்பே இல்லாத பிரச்சாரம் மற்றும் பொய்களின் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர்.

எப்பொழும் நிலவும் பெரும் கவலை, அச்சம் என்பதில் இருந்து தப்பிப் பிழைக்க போராடும் இவர்கள், கொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்; அவர்களுடைய தோழர்கள் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவதையும் காண்கின்றனர்; ஈராக்கிற்கு அனுப்பப்படும் இளைஞர்கள் தீவிர உடற்காயம் ஏற்படாமல் அவர்கள் தப்பித்தால்கூட, பெரும்பாலும் தவிர்க்கமுடியாமல் உளவியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் வாழ்நாள் முழுவதும் வடுவை சுமப்பர்.

ஹடிதாவில் நிகழ்ந்த கொலைக் கோரம், லான்ஸ் கார்ப்போரல் மிகுவில் டெராஜாசின் திடீர் மரணத்திற்கு கிலோ பிரிவின் சில உறுப்பினர்கள் கொடுத்த விடையிறுப்பு என்றுதான் வெளிப்படையாக தெரிகிறது; டெராஜாஸ் மீது, தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வீசப்பட்டு அவருடைய humvee அழிக்கப்பட்டது. இந்தப் படுகொலையை செய்தவர்கள் பெரும் அரக்கத்தன்மையினால் செய்தார்கள் என்று கருதிவிடுவது தவறாகும். ஆனால் ஒன்று நிச்சயம்; அவர்கள் இருக்கும் சூழ்நிலை அவர்களை அரக்கத்தன்மை உடைய செயல்களை செய்யத் தூண்டி வளர்க்கிறது.

ஆனால் இவர்களுடைய உயரதிகாரிகள் பற்றி இவ்வாறு கூறமுடியாது; இராணுவ மற்றும் குடிப்பணி யினர் கொடூரத்தை மூடிமறைக்க முற்பட்டனர். இப்படி மூடிமறைக்கப்பட்ட நிகழ்வின் முதல் கட்டம் வெளிவந்தபின், இரண்டாம் கட்டம் பற்றிய தகவல் வரவுள்ளது. இதுதான் "முழுமையான விசாரணை" என்ற வடிவைக் கொண்டுள்ளது, இராணுவத் தலைமையால் குற்றவியல், நிர்வாக முறைகள் இருவகைகளிலும் விசாரணையை நடத்தப்படுகிறது.

கிலோ படைப்பிரிவில் இருந்து குறைந்தது 12 பேராவது குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பென்டகன் அதிகாரிகள் தெளிவாக்கியுள்ளனர். மூன்று பேர் மீது கொலைக்குற்றமும் மற்றவர்கள் கடமையில் இருந்து பிறழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்படுவர். அதேநேரத்தில் இந்த நிர்வாக விசாரணையானது மேஜர் ஜெனரல் எல்டன் பார்ஜ்வெல்லின் மேற்பார்வையின் கீழ் ஹடிதா நிகழ்வுகள் பற்றி தவறான அறிக்கைகள் கொடுத்ததற்கும், விசாரணையை தடுப்பதற்கும் காரணமானவர்கள் பற்றி உறுதிப்படுத்துவதற்கு நடத்தப்படுகிறது.

இத்தகைய உள் விசாரணைக்கு பார்ஜ்வெல் தலைமை தாங்குவதற்கு தேர்வு செய்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மிகவும் மூத்த, சிறப்பு நடவடிக்கைகள் அதிகாரியான இவர் 1971ம் ஆண்டு வியட்நாம் போரில் அவர் பங்கிற்காக பெருமைப்படுத்தப்பட்டார். அப்பொழுது அவர் அங்கு இருந்து வியட்நாம் படைகளை பெரிதும் கடந்து இராணுவ வேவுப்பணியில் ஈடுபட்ட குழுவின் உறுப்பினராக இருந்தார். ஜூன் 1ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் கூறியது: "பார்ஜ்வெல்லின் முடிவுரைகளில் ஒன்று ஈராக் படைவீரர்கள் பயிற்சியில் பெரும் தவறு உள்ளது.. கூடுதலான வகையில் மரபார்ந்த போருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையில் சண்டையிடுவது பற்றி அதிகமான கவனக்குவிப்பு காட்டப்படவில்லை என்பதாகும்."

வேறுவிதமாகக் கூறினால், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவப் படை இன்னும் கூடுதலான வகையில் கட்டுப்பாட்டை காட்டி ஈராக்கிய எதிர்ப்பை உடைக்கும் மரண அடி தரும் கருவியாக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டில் நீண்ட காலம் இருக்க வேண்டிய விதத்தில் அது தயாரிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

கடற்படை தளபதியான ஜெனரல் மைக்கேல் ஹாகீ ஈராக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்; அங்கு இருக்கும் கடற்படை சிறப்பு துருப்புகளுக்கு "எமது முக்கிய மதிப்பீடுகளின் முக்கியத்துவம்" பற்றி அவர் பேச உள்ளார்; அதாவது "அறநெறிகள்" பற்றி ஆர்வ உரைகள், சட்டம் போன்றவை போரின் தன்மை, கொலைவெறியை தூண்டும் வெடிப்புக்களை தடுத்துவிடும் என்ற நினைப்பில் இது ஏற்பாடாகியுள்ளது. ஆனால் இத்தகைய உயர்மட்ட நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இராணுவ மற்றும் அரசியலின் தீவிர உந்துதல் உள்ளது. ஹடிதா நிகழ்வுகள் அம்பலமாதல் போன்றவை ஈராக்கில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள இராணுவ நிலைமை, மற்றும் வாஷிங்டனுடைய சர்வதேச அரசியல் மற்றும் ராஜீய நிலைப்பாட்டுக்கும் பெரிதும் ஊறு விளைவிக்கும். எனவே பாதிப்பை குறைக்கும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

மேலும் ஹடிதாவில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் போன்றவை தளர்வுற்று, திகைப்புற்று நிற்கும் ஒரு படையின் நோய்க்குறி ஆகும். இவ்விஷயத்தில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் ஐயத்திற்கு இடமின்றி உண்மையான கவலையை கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், கடற்படை சிறப்பு பிரிவு, போஸ்ட்டின் கருத்தின்படி, ஹடிதா வழக்கைப் பற்றி விரிவாக பேசவேண்டாம் என்ற உத்தரவையும் தளபதிகளுக்கு கொடுத்துள்ளது; ஏனெனில் இக்கதையை பற்றி அதிகம் பேசுவது மரைன் சிப்பாய்களின் நலன்களுக்கு உகந்தது அல்ல" என்று கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ மூடிமறைத்தலில் குடிப் பணியினரின் பங்கு உள்ளது என்பதும் செனட் மன்றத்தின் இராணுவப் படைகளின் குழுவின் தலைவரான, வர்ஜீனியாவின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் வார்னர் பேச்சில் தெரிய வந்துள்ளது. "இந்த வாரம்" என்னும் ABC தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த வாரம், வார்னர் தன்னுடைய குழு சட்டமன்றம் மீண்டும் கூடியபின் ஹடிதா பற்றிய விசாரணைகளை நடத்தும் என்று கூறினார். அபு கிறைப்பில் என்ன செய்தோமோ, அதையே நான் துல்லியமாக இங்கும் செய்வேன்" என்றார் அவர்.

Top of page