World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Unemployed youth clash with police in Paris suburbs

பாரிஸ் புறநகர்ப்பகுதிகளில் வேலையில்லா இளைஞர்கள் போலீசாருடன் மோதல்
By Rick Kelly and Chris Marsden
1 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

வேலையில்லாத இளைஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இரண்டு இரவுகள் பூசல்கள் ஏற்பட்டதை அடுத்து, பிரான்சின் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி நூற்றுக்கணக்கான கூடுதல் போலீசாரை பாரிசின் புறநகர்ப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Montfermeil மற்றும் Clichy-sous-Bois மையங்கள்தான் 2005 இலையுதிர் காலத்தில் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பிரான்ஸ் முழுவதும் புறநகர்ப்பகுதிகளில் மூன்று வாரம் நிகழ்ந்த கடுமையான மோதல்கள் நடந்த பகுதிகள் ஆகும். உள்ளூர் போலீசாரின் ஆத்திரமூட்டும் தன்மையுடைய நடவடிக்கைகள் மற்றும் Montfermeil இன் UMP மேயரான Xavier Lemoine உடைய "சட்டம் ஒழுங்கு" பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் விளைவாகத்தான் பூசல்கள் எழுந்தன என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. கோலிச UMP பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் உள்துறை மந்திரி சார்க்கோசி ஆகியோரின் கட்சி ஆகும்.

இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணி வரை, 15ல் இருந்து 18 வயதுடைய இளவயதினர் துணையின்றி குழுக்களில் பயணிப்பது, மூன்று பேருக்கு மேல் செல்வது மற்றும் 16 வயதிற்குட்பட்டவரை பொது இடத்தில் வயதுவந்தவர் துணையின்றி செல்வது ஆகியவற்றை தடுக்கும் சட்டங்களை Lemoine ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவந்ததில் இருந்து, பாரிஸ் நகரத்திற்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகரமான Montfermeil இல் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் குடி உரிமைக்குழுக்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்த பின்னர் நீதிமன்றத்தில் கவிழ்க்கப்பட்டுவிட்டன.

Montfermeil இல் ஒரு பேருந்து ஓட்டுநர்மீது நடந்த தாக்குதல்களை ஒட்டி மே 29 அன்று சிலர் கைது செய்யப்பட்டமை இந்த பூசலுக்கு உடனடித் தீப்பொறியாக அமைந்தது போல் தோன்றுகிறது. மேயர் Lemoine தாக்குதல் நடந்த பொழுது அங்கிருந்தார் என்றும் தலையிட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னர் தாக்கியதாக கருதப்பட்டவர்களில் சிலரை பின்னர் அவர் அடையாளம் காட்டினார்.

சில தகவல்கைள் ஒரு இளைஞர் கைதுசெய்யப்பட்டதாக கூறுகின்றன; அதேவேளை வேறுசில, Bosquets குடியிருப்பு பகுதியில் குடியேறியவரும், பஸ்ஸில் நிகழ்ந்த சம்பவத்திற்காக தேடப்பட்டவருடைய தாயாருமான, புலம்பெயர்ந்த ஒரு மாலியப் பெண்மணி கைது செய்யப்பட்டதால் பூசல் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் முன்பு வாயிற்படிகள் சிலவற்றில் இப்பெண்மணி போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அன்று இரவு, Bosquets பகுதியில் இளைஞர்கள் கார்களை எரித்தனர்; அப்பகுதியில் Montfermeil மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர்; இதில் 50 சதவிகிதத்தினர் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். கைகளில் பேஸ் பந்து மட்டைகளை வைத்திருந்த சிலர் அடங்கிய 100-150 இளைஞர்கள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருடன் சண்டை இட்டனர். இப்பூசல்களில் ஒன்பது போலீசார் காயமுற்றதாக கூறப்படுகிறது.

ஒரு போலீஸ் வாகனம் உட்பட டஜன் கார்கள் எரிக்கப்பட்டன. கட்டடங்களுக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன; நகர மன்றத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன; இதன்பின் இளைஞர்கள் மேயருடைய இல்லத்திற்கு சென்றனர்; அதை செங்கற்கள் கொண்டு தாக்கினர். "மேயர் ஒரு நாயின் மகன்" என்று இளைஞர்கள் குரல் எழுப்பியதாக Lemoine நிருபர்களிடம் கூறினார். இளைஞர்களை கலைக்க போலீசார் ரப்பர் தோட்டாக்களைகள் கொண்டு சுட்டனர்.

அடுத்த நாள் இரவு சற்று சிறிய அளவு அண்மையில் இருந்த பாரிஸ் புறநகரான Clichy-sous-Bois இல் கலவரங்கள் நடந்தன; உள்ளூர் போலீஸ் நிலையம் தாக்கப்பட்டதும் இதில் அடங்கும். நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கலவரங்களின்போது, Zyed Bena, Bouna Traore என்ற இரு இளைஞர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடுகையில் மின்சாரத் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்தவகையில் இப்பகுதிதான் கவனக்குவிப்பாக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 13 இளைஞர்களாவது கைது செய்யப்பட்டனர்; இதில் இதே அக்டோபர் மாதம் போலீசார் துரத்தியபோது Bena மற்றும் Traore மரணத்தில் முடிந்த ஒட்டத்தில், மின்சாரத் தாக்குதலில் இருந்து தப்பிய 18 வயது Muhittin Altun னும் உள்ளார். ஒரு போலீஸ் காரின் மீது கல்லெறிந்ததாக அல்டுன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; ஆனால் அவருடைய வழக்குரைஞர்கள் இக்கூற்றை மறுத்துள்ளனர்.

விசாரணை நடத்தும் நீதிபதிகளுடன் புதனன்று, இவருடைய இரு நண்பர்களும் இறந்த, இவர் கடுமையான தீப்புண்களுக்கு ஆளாகிய மின் துணைநிலையத்திற்கு அல்டுன் செல்லப்படுவதாக இருந்தது. "அவருடைய வீட்டிற்குமுன் அவர் கைது செய்யப்பட்டார்" என்று கூறிய அவருடைய வழக்கறிஞர் Jean Pierre Mignard விளக்கினார்: "முக்கியமான நீதிமன்ற நடவடிக்கை வரவிருக்கும் நாளுக்கு முதல்நாள் இவர் கைது செய்யப்பட்டது பற்றி நாங்கள் திகைப்படைகிறோம்."

UMP அரசாங்கத்தால் புறநகர்ப் பகுதி இளைஞர்கள் மீது சுமத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள ஏராளமான அடக்குமுறை நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்நடவடிக்கைகள் ஆகும். கடந்த ஆண்டு கலகங்களுக்கான சமூகக் காரணங்களுக்கு தீர்வு காண்பதாக கூறப்பட்ட உறுதிமொழிகள் எதையும் சாதிக்கவில்லை; அதேவேளை சார்க்கோசி இந்த கலவரங்களை பயன்படுத்தி குடியேற்ற விரோத, "சட்டம்-ஒழுங்கு" அரங்கின் துணையினால் 2007 ஜனாதிபதி தேர்தலில் UMP வேட்பாளராக நிற்கும் தன்னுடைய வாய்ப்புக்களை பெருக்கிக் கொண்டுள்ளார்.

இந்த வாரக் கலவரங்களுக்கு முன்பு, சார்க்கோசி ஒழுங்கீனமான இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மேயர்களுக்கு கூடுதலான அதிகாரம் வேண்டும் என்று கோரியிருந்தார்; Montfermeil இல் Lemoine உடைய நடவடிக்கைகளுக்கு இவ்வாறு தூண்டுதல் இருந்தது.

இன்னும் கூடுதலான வகையில் வன்முறை நிகழா வண்ணம் ஒடுக்கி விடுவதாக உறுதி மொழி கொடுத்த உள்துறை மந்திரி உள்ளூர் போலிசாருடன் தோன்றினார். "குடியரசில் எவ்விடத்திலும் ஒழுங்கீனத்தை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று செய்தி ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில் அவர் போலீசாரிடம் கூறினார். "நீங்கள் இளைஞர்கள் தவறாக நடந்து கொள்ளுவதை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்; நாம் உண்மையில் அதை நிறுத்த வேண்டும். பிரெஞ்சு மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; காலிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்".

போலீசார் மீது வந்த விமர்சனத்தையும் சார்க்கோசி நிராகரித்துவிட்டார். "ஒழுங்கீனமானவர்களுடன் போரிட்ட வகையில் நாம் சில ஒழுங்கீனமானவர்களுக்கு கவலை கொடுத்துள்ளோம்" என்றார் அவர். சிறுவர்களுக்கு, வயது வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை கூடாது என இயற்றப்பட்ட 1945ம் ஆண்டுச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற பிரச்சினையை எழுப்பிய அவர், "பிரெஞ்சு சமூகத்தின் முன்பு சிறுவயதினர் பிரச்சினையை முன்வைப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் எடுக்கப்படும்" என்றார்.

பாரிஸ் புறநகரங்களில் வன்முறையின் சமீபத்திய வெடிப்பு எந்த அளவிற்கு மிகத் தீவிரமான வகையில் நகரத்தின் வறிய புறநகர்களில் சமூக அழுத்தங்கள் உள்ளன என்பதை நிரூபிக்கிறது. பெருமளவு அரேபிய, கறுப்பு இன மற்றும் புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடங்கள் பரந்த வேலையின்மையால் குறிக்கப்படுகின்றன; குறைந்தது 60 சதவிகித இளைஞர்களாவது சில மாவட்டங்களில் வேலையற்று உள்ளனர். போலீசாரின் இனவாத, மிருகத்தனமான செயல்களை பகுதிவாழ் மக்கள் எதிர்கொள்ளுகின்றனர்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த கலகத்தை தன்னுடைய செயற்பட்டியலுக்கு மேலும் ஆதரவு தேடும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது. கூடுதலான வேலை, நல்ல வாழ்க்கைத்தரம் என்று புறநகர்ப்பகுதிகளில் வாழ்வோருக்கு ஜனாதிபதி சிராக், பிரதம மந்திரி டு வில்ப்பன் ஆகியோரால் கூறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்து பிரெஞ்சு தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு போலிக்காரணங்களாகத்தான் உள்ளன.

"முதல் வேலை ஒப்பந்தம்" என்ற வில்ப்பனுடைய திட்டம் இளந்தொழிலாளர்களை முதலாளிகள் காரணமின்றி வெளியே அனுப்பலாம் என்று இருந்தது, இந்நடவடிக்கை முதலாளிகளை தொழிலாள வர்க்க புறநகர்களில் இருந்து வேலையற்ற இளைஞர்களை நியமிக்க உதவும் நடவடிக்கை என்று நியாயப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஏப்ரல் மாதம் மூன்றுமாத கால எதிர்ப்பு, வேலை நிறுத்தப் போராட்டம் ஆகியவை சட்டத்திற்கு எதிராக வந்தபோது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

ஆனால் "சமவாய்ப்பு சட்டம்" என்பதை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டுள்ளது; கடந்த ஆண்டு கலகங்களை எதிர்கொள்ளும் வகையில்தான் இதுவும் இயற்றப்பட்டது. "சமவாய்ப்புச் சட்டத்தில்" ஏராளமான பிற்போக்கு நடவடிக்கைகள் உள்ளன; வேலை குறைந்த வயது வரம்பை இன்னும் குறைக்கவும், முதலாளிகள் 15 வயது சிறுவர்களை இரவுப் பணியில் ஈடுபடுத்தவும் இது அனுமதிக்கிறது. போலீஸ், இராணுவ பயிற்சி வேலையற்ற இளைஞர்களுக்கு கொடுக்கப்படுவதை சட்டம் ஊக்குவிக்கிறது; அதே நேரத்தில் பல விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் தாய்மார்களுக்கு சமூக நலன்கள் பறிக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறது.

இப்பொழுது புறநகர்ப்பகுதிகளில் வேலையற்றோரை போலீசார் துன்புறத்தும் நடவடிக்கைகளுடன் மேற்கூறிய நடவடிக்கைகளும் இணைந்துள்ளன; அரசாங்கம் கடந்த ஆண்டு கலகங்களுக்கு பின்னர் மூன்று மாத கால நெருக்கடி நிலையை அறிவித்ததை தொடர்ந்து இவை வெளிவந்துள்ளன.

Top of page