World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Prodi government takes power in Italy: a right-wing regime with a left fig leaf

பிரோடி அரசாங்கம் இத்தாலியில் அதிகாரத்தை எடுக்கிறது: ஒரு இடதுசாரி முகமூடியுடன் வந்திருக்கிற வலதுசாரி ஆட்சி

By Peter Schwarz
20 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து ஐந்தரை வாரங்களுக்குப் பின்னர் புதன்கிழமையன்று புதியதொரு இத்தாலிய அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது.

ஆளும் கூட்டணி மிதவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்காரர்களில் இருந்து தாராளவாதிகள், பசுமை கட்சிக்காரர்கள் சமூக ஜனநாயக கட்சிக்காரர்கள் ஜனநாயக இடது (இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் வாரிசு அமைப்பு), மற்றும் Rifondazione Comunista (ரிபொன்டசியோனே கம்யூனிஸ்ட்டா) ஆகிய பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆளுகின்ற 8 கட்சிகளை திருப்திப்படுத்துகின்ற வகையில் அரசாங்கத்தின் தலைவரான ரோமனோ பிரோடி மொத்தம் 25 அமைச்சர் பதவிகளை தந்திருக்கிறார். இது, முந்திய சில்வியோ பெர்லூஸ்கோனி அரசாங்கத்தைவிட ஒரு காபினட் மந்திரியை அதிகமாகக் கொண்டதாகும். துணை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களையும் சேர்த்துக்கொண்டால், அரசாங்க அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும்.

காபினட் அமைச்சர் பதவிகளில் பெரும்பாலானவை ஜனநாயக இடதுசாரிக்கு-கிடைத்துள்ளது. அது ஒன்பது அமைச்சர் பதவிகளையும் மற்றும் முதலாளித்துவ மார்கெரிட்டா ஏழு பதவிகளையும் பெற்றுள்ளது. சிறிய கட்சிகளுக்கு ஆளுக்கு ஒரு பதவி கிடைத்திருக்கிறது. இவ்வளவு விரிவான கட்சிகளைக்கொண்ட அமைச்சரவையாக இருந்தாலும் முக்கிய அமைச்சரவைகள் பாதுகாப்பாக பிரோடிக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளது. அவர்கள் வலதுசாரி வர்த்தக ஆதரவு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருப்பவர்கள். முக்கியத்துவம் குறைந்த அமைச்சகங்கள் பல்வேறு கட்சிகளுக்கு இடையில் பிரித்துத்தரப்பட்டாலும், நிதி மற்றும் பொருளாதார அமைச்சகங்கள் ஒருவரது கையில்தான் உள்ளது. அவர் 66 வயதான (Tommaso Padoa-Schioppa) தொமாசோ படோவா-சியாப்பா. பிரோடியை போன்று அவரும் எந்தக் குறிப்பிட்ட கட்சியையும் சேராதவர். மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் நம்பிக்கையை பெற்றிருப்பவர்.

படோவா-சியாப்பா, அமெரிக்காவின் (Massachusetts) மாசாசுசெட்ஸ் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் தனது தொழில்முறைப் பணிக்காலம் முழுவதிலும் பெரிய வங்கிகளில் நிர்வாகப் பணிகளிலேயே ஈடுபட்டு வந்தவர். தனது 28 வயதில், பாங்க் ஆப் இத்தாலியில் பணியில் சேர்ந்தார். பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர் 1979-ல் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார மற்றும் நிதிவிவகாரங்கள் கமிஷனின் டைரக்டராக இணைந்தார். 4 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீண்டும் பாங்க் ஆப் இத்தாலிக்கு திரும்பினார். 1997-ல் ஓராண்டிற்கு இத்தாலிய பங்குச்சந்தையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதற்குப் பின்னர் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கி நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார்.

படோவா-சியாப்பாவின் பணி பெருகிவரும் இத்தாலியின் பட்ஜெட் பற்றாக்குறையை வெட்டிக் குறைப்பதாக அமைந்திருக்கும் (தற்போது GNP-ல் 4.1 சதவீதம் இத்தாலியின் பட்ஜெட் பற்றாக்குறையாக உள்ளது. அது 3 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனை) மற்றும் சரிந்துகொண்டு வரும், இத்தாலியின் பொருளாதாரத்தில் புத்துயிரூட்டுவது இவரது பணியாக இருக்கும். புதிய அரசாங்கத்தின் எல்லா சமூக திட்டங்களும் இந்த நோக்கத்திற்கு, உதவும் வகையில் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் புதிய அமைச்சர் எந்த உறுதிமொழியளிக்கப்பட்ட சீர்திருத்தத்தையும் இரத்துச்செய்வதற்கு உரிமை படைத்தவர்.

இத்தாலியின் உள்துறை அமைச்சகம் அந்த நாட்டில் (Kafkaesque) காப்காயிஷ பாணியில் பெருகியுள்ள போலீஸ் மற்றும் பாதுகாப்புச் சேவைப் பிரிவுகளை நடத்துகின்ற பொறுப்புள்ள அமைச்சரவை ஆகும். அது பழைய நம்பிக்கைக்குரிய ஆளும் செல்வந்தத்தட்டின் நிபுணரிடம் செல்கிறது. 68 வயதான நீதித்துறை நிபுணர் கியுளியானோ அமாட்டோ 1980-களின் இறுதியிலிருந்து பல்வேறு அரசாங்கங்களில் பணியாற்றியவர் மற்றும் இரண்டு சந்தர்ப்பங்களில் பிரதமராகவும் பணியாற்றியவர்: 1992 முதல் 1993 வரை இத்தாலியில் பழைய கட்சிக் கட்டுக்கோப்பு சீர்குலைகின்ற வகையில் ஊழல் மோசடிகள் தலைகாட்டிய நேரத்திலும், மீண்டும் ஒரு முறை 2000 முதல் 2001 வரையிலும் பிரதமராக பணியாற்றினார்.

பெட்டினோ கிராக்சி தலைமையில் இயங்கிவந்த சோசலிஸ்ட் கட்சிக்கு உள்ளேயிருந்து அரசியல் ஏணியில் படிப்படியாக உயர்ந்தவர். மற்றும் நீண்டகாலம் அவரது வலதுகை போன்று கருதப்பட்டவர். கிராக்சியைப் பொறுத்தவரை சில்வியோ பெர்லூஸ்கோனியுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவர். பெர்லூஸ்கோனி, கிராக்சியின் கோட்டையாக விளங்கிய மிலான் பகுதியில் அவரது SP தலைவரது பாதுகாப்பு கவசத்தின்கீழ் தனது பெரிய வர்த்தக மற்றும் ஊடக சாம்ராஜியத்திற்கு அடித்தளம் அமைத்தார். கிராக்சி தனது செல்வாக்கை இழக்கும் முன்னர் அமட்டோ தன்னை அவரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றிய சமூக ஜனநாயக இயக்கத்தில் இன்னும் ஒரு முன்னணி பங்கை அவர் வகித்து வந்தாலும், அவர், ஒரு கட்சி முத்திரை இல்லாமல் புதிய அரசாங்கத்தில் சேர்ந்திருக்கிறார்.

நீதித்துறை அமைச்சகத்திற்கு, பெர்லூஸ்கோனி சகாப்தம் நீடிப்பதற்கு உறுதியளித்துள்ள ஒருவர் அமைச்சராக, பொறுப்பேற்றுள்ளார். பெர்லூஸ்கோனி இதுவரை நடந்திராத அளவிற்கு நீதித்துறையின் மீது கண்டனக்கணைகளை விடுத்தார், நீதித்துறையில் முத்திரை குத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் ("சிவப்பு ஆடை") இடம்பெற்றிருக்கிறார்கள் என்று கண்டித்தார், அரசாங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் நீதித்துறையை பற்றி படுமோசமாக விமர்சனங்களை வெளியிட்ட சம்பவங்களில் இது ஒன்றாகும்.

புதிய நீதித்துறை அமைச்சர் (Clemente Mastella) கிளமண்ட் மாஸ்டெல்லா ஐரோப்பாவிற்கான கிருஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் (UDEUR) அவர் இந்த வகையில் பெர்லூஸ்கோனிக்கு சற்றும் குறைந்தவர் அல்ல. மாஸ்டெல்லா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களில், இத்தாலிய நீதிபதிகள் நடத்தி வருகின்ற புலன்விசாரணைகள் "ஒரு பயங்கரமூட்டும் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக" குறிப்பிட்டதும் அடங்கும். பெர்லூஸ்கோனியை போன்று மாஸ்டெல்லா மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. பத்திரிகையாளர் (Marco Travaglio Trauzeuge) மார்கோ ( Marco Travaglio Trauzeuge) ட்ராவாக்கிலியோ ட்ராசுஜி தந்துள்ள தகவலின்படி, அவர் மாபியா கும்பல் நடவடிக்கையில் சம்மந்தப்பட்டிருந்தார் மற்றும், மாபியா தலைவர் பெர்னாடோ பிரோவன்சானோவிற்கு தவறான ஆவணங்களை வழங்கினார்.

பிரோடியின் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதாக UDEUR அச்சுறுத்திய பின்னர் தான் மாஸ்டெல்லாவிற்கு இந்த புதிய பதவி கிடைத்தது என்று செய்திபத்திரிகை கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தீவிர வலதுசாரி அணியைச் சேர்ந்த (Francesco Rutelli) பிரான்சிஸ்கோ ரூட்டெல்லி மார்கரட்டா கட்சியின் தலைவர், அவர் துணைப்பிரதமராகவும், பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தில் சுற்றுலாத்துறையும் இடம்பெற்றிருக்கிறது, அது இத்தாலிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பிரிவாகும்.

ஒரு ஆண்டினை பூர்த்தி செய்துள்ள ரூட்டெல்லி இத்தாலிய அரசாங்க முன்னாள் அமைச்சர்களில் ஒரு தற்பெருமை கொண்ட இளைஞராக கருதப்பட்டு வருகிறார். அப்படி இருந்தாலும் அவருக்கு ஒரு நீண்ட முக்கிய சம்பவங்கள் நிறைந்த அரசியல் வாழ்வு உண்டு. அவர் தனிநபர் கோரிக்கையை முன்னெடுத்து வைத்த உள்ளியல்பார்ந்த கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை துவக்கினார் மற்றும் அக்கட்சியின் சார்பில் தமது 29-வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார். 1992-ல் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்சியை அமைத்தார் மற்றும் ஒரு நாள் மட்டுமே, சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றி வந்தார். 1993-க்கும் 2001-க்கும் இடையில் அவர் ரோம் நகரத்தின் மேயராக, பணியாற்றி வந்தார். மற்றும் இறுதியாக எந்தவகையான அரசியல் தீவிரவாதத்திலிருந்தும் தன்னை வெட்டிப்பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையில் இந்த முன்னாள் தீவிரவாதி, இத்தாலிய பிஷப்புகள் மாநாட்டுக் கட்சித்தலைவர் காமில்லோ ரூஹினியின் ஒரு நெருக்கமான நண்பர் மற்றும் வாடிகனின், குடும்பம் தொடர்பான கொள்கைகளுக்காக வாதாடி வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய அளவில், மார்கரட்டா ஐரோப்பிய ஜனநாயகவாதிகள் மற்றும் தாராளவாதிகள் கூட்டணியில் ஒரு உறுப்பினர், அந்தக் கூட்டணியில் ஜேர்மனியை சேர்ந்த சுதந்திர ஜனநாயகக் கட்சியும், பிரிட்டனின் தாராளவாத ஜனநாயக கட்சிக்காரர்களும், பிரான்சின் UDF-ம் அடங்கியுள்ளன. அரசாங்க தலைவரின், நெருக்கமான நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டுவரும் 65 வயது ஆர்ட்ரோ பாரிசி ஒரு மார்கெரிட்டா உறுப்பினர், அவரிடம் பாதுகாப்பு அமைச்சகப் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது.

வெளியுறவு அமைச்சர் மற்றும் துணைபிரதமருடன் இணைந்து ரூட்டெல்லி பணியாற்றி வருகிறார். அவர்களோடு மாசிமோ டலேமாவும் இடம்பெற்றிருக்கிறார். ஜனநாயக இடது கட்சியின் இந்த முன்னணி தலைவர் ஏற்கெனவே, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி பதவியில் அக்கறை காட்டியுள்ளார். இறுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர், Rifondazione Comunista கட்சியை சேர்ந்த பாஸ்டோ பெர்டினோட்டி, அதே நேரத்தில் மாநில அதிபர் பதவி 81 வயதான ஜனநாயக இடதுசாரி தலைவர், ஜோர்ஜியோ நெப்போலிடானோவிற்கு கிடைத்திருக்கிறது. அவர் வலதுசாரி அணியின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். டலேமாவிற்கு அமைச்சரவை பதவி தரப்பட்டிருக்கிறது.

57 வயது டலேமா ஸ்ராலினிச தலைவர்கள் அடங்கிய ஒரு குடும்பத்தில் இளம் வயதில் வளர்க்கப்பட்டு தமது 14-வது வயதில் கம்யூனிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்தார், மற்றும் அதற்குப்பின்னர் CP கட்சியின் தினசரி பத்திரிகையான யூனிட்டா பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல ஸ்ராலினிச தலைவர்களைப்போன்று குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய தலைவர்களைப்போன்று டலோமா சோவியத் யூனியன் சிதைந்ததை வரவேற்றார். கம்யூனிசத்திற்கு தனது வாய்வீச்சு விசுவாசத்தை, குழிதோண்டி புதைப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். மற்றும் முதலாளித்துவ அரசியலில் தனது அபிலாஷைகள் நிறைந்த அரசியல் வாழ்வை தொடக்கினார். 1994-ல் அவர் ஜனநாயக, இடது கட்சி தலைவரானார், மற்றும் 1998-ல் பிரோடி கூட்டணியை தள்ளிவிட்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.

டலேமா (D'Alema) ஒரு தந்திரம் நிறைந்த கபடவேடதாரி என்று கருதப்படுகிறார். அரசாங்க தலைவர் என்ற முறையில் வலதுசாரி போக்கில் மிக தீவிரமாக ஈடுபட்டதால், அவரது பொருளாதார அமைச்சர், கைடோ போசி (Guido Bossi) ட'லேமாவின் கீழ் அரசாங்கப்பதவி "ஆங்கிலம் தெரியாத வர்த்தக வங்கி" என்று விமர்சிக்கின்ற அளவிற்கு வலதுசாரி போக்கை மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகளே பதவியில் இருந்த ட'லேமா, பிராந்தியத் தேர்தல்களில் படுதோல்வி ஏற்பட்டதன் விளைவாக, பதவியிலிருந்து விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குப்பின்னர் இதுவரை அவர் தனது வலதுசாரி கொள்கையில் எந்த மாற்றமும் செய்துகொள்ளவில்லை.

டலேமா நியமிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் ஆதரவு வட்டாரங்கள் கண்டனங்களை தெரிவித்தன, அதற்குக்காரணம் கடந்த காலத்தில் அவர் அடிக்கடி இஸ்ரேலை கண்டித்து வந்ததுடன் பாலஸ்தீனர்களுக்கும் வாய்வீச்சு சமிக்கைகளை காட்டி வந்தார். ஆனால், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை, அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளுக்கு எந்த கடுமையான எதிர்ப்பும் வரும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. டலேமா மிகத்தீவிரமாக தன்னை மாற்றிக்கொள்கின்ற இயல்பு படைத்தவர் மற்றும் நடைமுறையோடு ஒட்டி நடந்து கொள்பவர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதட்டங்கள் நிலவிவந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு கொள்கையை நிலைநாட்டி வருகிறது. மற்றும் பெர்லூஸ்கோனி அரசாங்கத்தோடு, ஒப்பிடும்போது, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான தனது அணுகுமுறை போக்கை, புதிய இத்தாலிய அரசாங்கம், வலுப்படுத்தவே செய்யும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்ற வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஒரு காலக்கட்டத்தில் பணியாற்றி வந்த டலேமா தலைமையில் அரசாங்கம், அமைந்திருப்பது, மட்டுமல்லாமல் குறிப்பாக, பிரோடி மற்றும் அவரது நெருக்கமான, நம்பிக்கைக்குரியவர்கள் அனைவரும் (Brussels) பிரஸ்சல்சின் முக்கிய பதவிகளில் இடம்பெற்றுள்ளனர்: பிரோடி ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் தலைவர், உள்துறை அமைச்சர் (Amato) அமட்டோ ஐரோப்பிய ஒன்றிய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் துணைத்தலைவர், மற்றும் படோவா-சியாப்பா முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியாளர்.

பிரஸ்சல்சில் இந்தத்தலைவர்கள், பெரிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு பயன்படும் கொள்கைகளை வகுப்பதற்கு காரணமாக இருந்தவர்கள், மற்றும் அந்தக் கொள்கைகள் இந்த கண்டம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் பரவலான எதிர்ப்பிற்கு இலக்காகின. 2004-ல் அமெரிக்க ஜனாதிபதி புஷ்சிற்கு எழுதிய தனிப்பட்ட ஒரு கடிதத்தில் அமட்டோ "ஒரு வலுவான ஐரோப்பா, ஒரு வலுவான கூட்டணியில் சேர்ந்திருப்பது", அமெரிக்காவின் நலன்களுக்கு, விரோதமாக அமையாது ஆனால் "அமெரிக்காவின் நீண்டகால நலன்களுக்கு உதவுவதாக அமையும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை போக்கு அவருக்கு முந்திய சில்வியோ பெர்லூஸ்கோனி அல்லது பிரான்சின் ஜாக் சிராக் அல்லது ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கல் போன்ற ஐரோப்பிய அரசு தலைவர்களின் கொள்கைகளில் இருந்து ஒரு குறைந்தபட்ச அளவிற்கே, வேறுபட்டிருப்பதாகும். பிரோடி அரசாங்கத்திற்கு பொதுமக்களிடமிருந்து எந்தவிதமான ஆதரவும் கிடைக்காது, தனது அரசாங்கத்திற்கு ஓரளவு முற்போக்கு மற்றும் இடது சாயலை தருவதற்காக பிரோடி இத்தாலிய ஸ்ராலினிஸ்ட்டுகள் மற்றும் Rifondazione Comunista சேவைகளை ஒட்டுமொத்தமாக நம்பியிருக்கிறார். இந்தக்கட்சிகள் பிரோடி அரசாங்கத்திற்கு பொதுமக்களிடையே, செல்வாக்கை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதுடன், நாடாளுமன்றத்தில், அந்த ஆட்சியை தாங்கி நிற்கும் முக்கிய பங்களிப்பையும், செய்து வருகின்றன.

கீழ்சபை தேர்தல்களில் 5.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்ற Rifondazione Comunista பிரோடியின் தேர்தல் வெற்றியில் ஒரு கணிசமான பங்களிப்பு செய்திருக்கின்றன. நாடாளுமன்ற சபாநாயகர் என்ற முறையில், RC தலைவர் (Fausto Bertinotti) பாஸ்டோ பெர்டிநோட்டி அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்வதற்கு, சுதந்திரமாக செயல்பட வகை செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார். தற்போது RC அரசாங்கத்தில் தனது சொந்த அமைச்சரையும் பெற்றிருக்கிறது. (Paolo Ferrero) பாலோ பெர்ரேரோ சமூகநல அமைச்சகத்திற்கு ஒரு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், உலக சோசலிச வலைத் தளம், Rifondazione Comunista கட்சியை சேர்ந்த இந்த முன்னணி உறுப்பினரை பேட்டி கண்டது, அப்போது அக்கட்சி ஒரு விரிவான இடதுசாரி கட்சிக்கு ஐரோப்பா முழுவதிலும், ஒரு முன் மாதிரியாக செயல்பட்டு வருவதாக, பலர் கருதினர், பல்வேறு குழுக்களை விரிவான அடிப்படையில் சேர்த்து வைக்கின்ற ஒரு நிறமாலை என்று கருதினர். பெர்ரேரோவேகூட தொடர்ந்து அவர் வர்ணித்த "பூகோள நவீன தாராளவாதத்திற்கு" இடைவிடாது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தார்.

அப்போது அவர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது முற்றிலும் சந்தர்ப்பவாதம் கொண்டது, அந்த நேரத்தில் நாங்கள் செய்திருந்த விமர்சனம்: "பெர்ரோராவுடன் நடைபெற்ற விவாதம் முன்னேறி சென்று கொண்டிருந்த நேரத்தில் PRC எந்த ஒரு பிரச்சினையிலும் ஒரு கொள்கைவழி நிலைப்பாட்டை எடுத்து அதற்காக, போராடுகின்ற நிலையை ஏற்கின்ற நிலையில் இல்லை என்பது அதிக அளவில் நமக்கு தெளிவாகி வந்தது. அவர்களது அரசியல் ஒரு தொடர் தந்திரோபாய முயற்சிகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கிறது."

Top of page