World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Deportations increase as asylum applications plummet

ஜேர்மனி: தஞ்சம் கோருவோர் வீழ்ச்சியடைகையில் நாடுகடத்துவது அதிகரிக்கின்றது

By Elisabeth Zimmermann
31 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கமும் நடப்பு பாரிய கூட்டணி அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்ற கொள்கைகளின் காரணமாக, ஜேர்மனியில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 1998ல் 98,644 அகதிகள் தஞ்சம்கோரும் மனுச்செய்தனர். 2005 வாக்கில், இது வெறும் 28,914 மனுக்களாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் தஞ்சம்புக விரும்பும் உரிமையை தொடர்ந்து கட்டுப்படுத்தி வந்தது. சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவோடு ஏற்கனவே முந்திய ஹெல்முட் கோலின் கிறிஸ்தவ ஜனநாயக அரசாங்கத்தால் முடிவெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வெளியே தெரியாதவாறு தொடரப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை ஒட்டி, சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களும், பசுமைக் கட்சிக்காரர்களும் புலம்பெயர்வோருக்கு எதிரான இரக்கமற்ற கொள்கைகளை செயல்படுத்தி வந்தனர், இந்தக் கொள்கைகள் புலம்பெயர்வோர்களையும், அகதிகளையும் தடுக்கவும், அவர்களை இழிவுபடுத்தவும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டவை. நடப்பு அரசாங்கம் இந்த போக்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு விளைவாக, தஞ்சம்புக விரும்புவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதம் 2,140 ஆக வீழ்ச்சியடைந்து மீண்டும் மூன்றில் ஒரு பங்காக ஏப்ரல் மாதம் 1,500 ஆக குறைந்துவிட்டது. மனுச்செய்பவர்கள் 1.1 சதவீதம் பேருக்கு மட்டுமே-தஞ்சம்புக அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் மிகப்பெரும்பாலோர் சேர்பியா மற்றும் மொண்டநீக்ரோ, துருக்கி மற்றும் ஈராக்கை சேர்ந்தவர்களாவர்.

தஞ்சம் புகுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் அல்லது, தற்காலிக வதிவிட அனுமதிக்காலம் முடிந்தவர்கள் 10,000 கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்படுகின்றனர். மிக அண்மைக்காலத்தில் இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது, ஜேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்ந்து பிள்ளைகளை பெற்று இங்கேயே அவர்கள் வளர்ந்திருக்கும் பல குடும்பங்களை சார்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். ஒரு தற்காலிக வதிவிட அனுமதி மூலம் நிச்சயமற்ற அந்தஸ்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 200,000 பேரில், 120,000 பேர் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

Pro Asyl அகதிகள் அமைப்பும், இதர ஆதரவு குழுக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு மாநில உள்துறை அமைச்சர்களுக்கு தற்காலிக விசாக்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், நிரந்தர குடியிருப்பு உரிமை பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மே மாத தொடக்கத்தில் Garmisch-Partenkirchen நகரில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்களது மாநாட்டில் அண்மையில் அகதிகளுக்கு இந்த உரிமை தருவதில்லை என்று மீண்டும் முடிவு செய்யப்பட்டிகின்றது. மாறாக ஜேர்மன் பிரஜா உரிமை பெறுவது மிகவும் கடினமாக்கப்பட்டுவிட்டது.

அண்மை மாதங்களில் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் ஈராக்கிலிருந்து வந்த அகதிகளுக்கு தஞ்சம்புகும் அந்தஸ்த்தை இரத்து செய்தது. ஈராக்கில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள், உயிரையும் அங்கங்களையும் இழக்கின்ற வன்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மைக்கு அப்பாலும், ஈராக்கிற்கு அகதிகளை நாடு கடத்துவதற்குரிய சாத்தியக் கூறுபற்றி உள்துறை அமைச்சர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஜேர்மன் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளானது, அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் ஐரோப்பாவில் தனித்தன்மையானதாகவும் உள்ளதாக Pro Asyl அகதிகள் அமைப்பு கருதுகிறது.

நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானுக்கு அகதிகளை நாடு கடத்துவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆப்கனிஸ்தானில் போரினாலும், உள்நாட்டு போரினாலும் அண்மை மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை சீர்குலைந்து நாடே சின்னபின்னமாகி கிடக்கும் நிலையிலும் ஆப்கானிஸ்தான் பெண்களை சில ஜேர்மன் மாநிலங்கள் நாடு கடத்தி வருகின்றன.

அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரான்கின் டார்பா பாண்டா ஒரு செய்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆப்கான் அகதிகளை நாடு கடத்தி நிலவரத்தை முற்றச்செய்துவிட வேண்டாம் என்று ஜேர்மனிக்கு வேண்டுகோள் விடுத்தார். "இந்த மக்கள் ஜேர்மனியை தங்களது இரண்டாவது தாய்நாடாக கொண்டு ஒருங்கிணைந்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களே விரும்பி வருவார்களானால் ஆப்கானிஸ்தான் வரவேற்கிறது. ஆனால் மற்றவர்கள் நாடு கடத்தப்படக்கூடாது. இந்த வழியில்தான் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என அவர் Frankfurter Rundschau பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

என்றாலும், ஜேர்மன் வெளிநாட்டவர்களுக்கான அலுவலகம், மனிதநேய கோரிக்கைகளுக்கோ மருத்துவ அறிக்கைகளுக்கோ அல்லது சர்வதேச சட்டத்திற்கோ எந்த மதிப்பும் தருவதில்லை. அகதிகளும் அவர்களது குழந்தைகளும் ஜேர்மன் சமுதாயத்துடன் எந்த அளவிற்கு இணைந்திருக்கிறார்கள் என்பதையும், அந்த அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை. கீழ்கண்ட எடுத்துக்காட்டுகள், ஜேர்மனியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்களின் வழக்குகளில், சில குடும்பங்களாக நாடு கடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட வழக்குகள் பற்றியதாகும்.

2005, செப்டம்பர் 24ல் 15 வயது வியட்நாம் புலம்பெயர்ந்தவர் காண் டூயி ரியூ அவரது பெற்றோர்கள் மற்றும் தம்பியுடன் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக ஜேர்மனியை விட்டு வெளியேற வேண்டி வந்தது. இவர் Straubing நகரில் 13 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர். சென்ற ஆண்டு பவேரியா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கணிதப் போட்டியில் இரண்டாவது பரிசை பெற்றவர்.

"முன்னாள் வியட்நாம் அகதி தொடர்ந்து ஜேர்மனியில் இருப்பதற்கு அனுமதிப்பதற்கு, எந்த அடிப்படைகளும் இல்லை" என்று அதிகாரபூர்வமான நாடு கடத்தல் காரணம் கூறப்பட்டிருக்கிறது. ஜேர்மன் சமுதாயத்தில் சிறப்பாக இணைந்துவிட்ட இந்த குடும்பம் பற்றிய வழக்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்பட்டிருக்கின்றன. தாயும் தந்தையும் வேலை செய்துகொண்டிருக்கின்றனர், மற்றும் கான் அவரது பள்ளி ஆண்டின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவர். அந்தக் குடும்பம் தற்போது ஹனாய் (வியட்நாம் நகரம்) பகுதியில் அந்த சிறுவனின் பாட்டன் பாட்டிக்கு சொந்தமான ஒரு சிறிய வாடகை, குடியிருப்பில் வாழ்வு நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம், ஹனாயிலுள்ள கோத்தே பயிற்சி கழகத்தின் தலைவர் பிரான்ஸ் சேவியர் அகஸ்டின் உறுதிப்படுத்தியுள்ள ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட வியட்நாமிய புலம்பெயர்ந்தோர் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. 1995ல் ஜேர்மனிக்கும் வியட்நாமிற்கும் இடையே திரும்புவது தொடர்பான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 1995க்கும் 2002க்கும் இடைப்பட்ட காலத்தில் 10,149 வியட்நாமியர் ஜேர்மனியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு மே 4ல், ஜேர்மன் தொலைக்காட்சியின் Kontraste என்ற நிகழ்ச்சியில், தான்தோன்றித்தனமாக அரசு அதிகாரிகள் முறையான ஆய்வு எதுவும் நடத்தாமல் நாடு கடத்திய ஒரு சம்பவத்தை விவரித்திருக்கிறது.

22 வயதான ஆப்கானிஸ்தானை சேர்ந்த குவாய்ஸ் கம்ரான் தனது பெற்றோர்களுடனும் குழந்தைகளுடனும் ஹெஸ மாகாணத்திலுள்ள Friedberg நகரில் 16 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும், வெளிநாட்டவர்களுக்கான அலுவலகத்தின் கவனத்திற்கு வந்ததே அந்த இளைஞர் போலீஸ் படையில் பயிற்சி பெறுவதற்கான மனு செய்தபோதுான்.

அவர் தேர்ந்தெடுத்த பதவிக்கு தேவைப்படும் எல்லா நிபந்தனைகளையும் குவாய்ஸ் பூர்த்தி செய்துவிட்டார்: ஜேர்மன் கூட்டாட்சி குடியரசில் அவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்ந்து, அவரது தாய்மொழியிலும், ஜேர்மன் மொழியிலும் சிறப்புத்தகுதி பெறவேண்டும். அவரிடம் ஒரே ஒரு தகுதிதான் இல்லை. அது ஒரு நிரந்தர குடியிருப்பு அனுமதியாகும்.

குவாய்ஸ் கம்ரான் வெளிநாட்டவர்களுக்கான Friedberg அலுவலகத்தில் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறுவதற்கு மனு செய்வதற்காக சென்றார். ஆனால் அவருக்கு முறையான வேலை எதுவும் இல்லாததாலும் அவர் நலன்புரி அரசு சலுகைகளை பெற்றுவந்ததாலும், அவருக்கு நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கப்படவில்லை. இதர ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களை போன்று குவாய்ஸ் கம்ரான் ஜேர்மனியின் பிற்போக்குத்தனமான வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர்: ஒரு குடியிருப்பு அனுமதி இல்லாமல், தொழிற்பயிற்சி அல்லது வேலை இல்லாதது மட்டுமல்லாது வேலை இல்லாததால் குடியிருப்பு உரிமையும் வழங்கப்படுவதில்லை. ஆனால் அத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை-அவரும் அவரது குடும்பம் முழுவதும் இப்போது ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டாக வேண்டும்.

அவரது பள்ளியில் படிப்பவர்களும் ஆசிரியர்களும் அவர் சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர் மற்றும் அவர் சார்பில் அவரது பள்ளியின் முதல்வர், வெளிநாட்டவர்களுக்கான அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள் விடுத்தார், அப்படியிருந்தும், உள்துறை அமைச்சரோ ஹெஸ மாகாண சட்டமன்றமோ அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ அந்தக் குடும்பத்திற்கு எந்த வகையிலும் விட்டுக்கொடுத்து வழிவகை செய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சுறுத்தல் தொடர்பாக குவாய்ஸ் கம்ரான் இப்போது தன்னைத்தானே குற்றம்சாட்டிக்கொள்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. குடியிருப்பு உரிமை கோரி அவர் மனுச்செய்தது, தனது குடும்பத்தினருக்கு உதவவேண்டும் என்ற அக்கறையினால்தான்.

மற்றொரு துயர சம்பவம், மொராக்கோவை சார்ந்த R. ஹசான் என்கின்ற மனநிலை குன்றியவர் தொடர்பான அரசு நடத்துகின்ற வடக்கு ஹெஸ மருத்துவமனையிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இரண்டு வாரங்களுக்கு பின்னர், அந்த ஊனமுற்ற மனிதரது தடயங்கள் எதையும் அவரது உறவினர்கள் இழந்துவிட்டனர். 35 வயதான ஹசனின் தந்தை Rödermark இல் வாழ்ந்து கொண்டிருப்பவர் தனது மகனைத் தேடி Casablanca விற்கு விமானத்தில் சென்றார். இதுவரை அவரது மகனை கண்டுபிடிப்பதில் வெற்றி பெறவில்லை. R. ஹசன் கடந்த 10 ஆண்டுகளாக, மூளைக்கோளாறு காக்காய் வலிப்பு முதலிய பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருபவர். திறமையான கவனிப்பு மற்றும் மருத்துவ உதவியின்றி அவர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு அரிதாகும்.

மே 11ல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு தமிழ் குடும்பம், கொடுமைப்படுத்தப்பட்டதை சித்தரித்தது. சவர்லாந்து மெஸடே பகுதியில் ஒரு கடுமையான மூளைக்கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தமிழ் குடும்பம் நாடு கடத்தப்பட்டது பற்றிய நிகழ்ச்சி அது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் இரவில் மர்மமான முறையில் அந்தக் குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டது. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அந்தக் குடும்பம் நாடு கடத்தப்படுவதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பக்கத்து வீட்டை சார்ந்தவர், அதிகாரிகளும் போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி "நாம் மீண்டும் ஹிட்லரின் சகாப்தத்திற்கு வந்துவிட்டோமா?" என்று சொன்னார்.

Top of page