World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Supreme Court refuses to hear ballot access case brought by SEP

சோசலிச சமத்துவக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட வாக்குச்சீட்டில் இடம்பெறத் தகுதி கோரும் வழக்கை விசாரிக்க அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

By Jerome White
6 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஓஹியோ மாநிலம் பாரபட்சமாக முடிவு செய்திருப்பதை ஆட்சேபித்து 2004 நாடாளுமன்ற சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்திருந்த ஒரு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஜூன் முதல் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் அரசியல் சட்ட அடிப்படை உரிமை பிரச்சினை சம்மந்தப்பட்டிருந்தும் உச்சநீதிமன்றம் விளக்கம் எதுவும் தராமல், ஓஹியோ மாகாண அரசு செயலர் ஜே. கென்னத் பிளாக் வெல்லுக்கும், டேவிட் லோரன்சிற்கும் இடையிலான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம், ஒரு மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 9 நீதிபதிகளில் 4 பேர் அந்த வழக்கை விசாரிக்க சம்மதித்தால் அது, மேல் முறையீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஓஹியோவின் முதலாவது தேர்தல் மாவட்டத்தில் சின்சினாட்டி பகுதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது, அந்தத் தொகுதியில் அமெரிக்க நாடாளுமன்ற வேட்பாளராக, SEP-யை சேர்ந்த டேவிட் லோரன்ஸ் போட்டியிட விரும்பினார். அவரது வழக்குரைஞர்கள், 6-வது சேர்கியூட் மேல்முறையீடுகள் நீதிமன்றம், ஓஹியோ மாகாணத்தின் மார்ச் 1 என்ற காலக்கெடுவை இரத்து செய்ய மறுத்துவிட்டதால், நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தனர். அமெரிக்காவின் 6-வது சேர்கியூட் அப்பீல்கள் நீதிமன்றம் மேல் முறையீட்டை ஏற்க மறுத்ததன் காரணமாக சுயேட்சை வேட்பாளர்கள் குளிர்வாட்டும் மாதங்களில் நியமன மனுக்களை வாக்காளர்களிடையே சுற்றுக்கு விடவேண்டும். மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிக்காரர்கள் தங்களது வேட்பாளர்களை மாநில தொடக்கநிலை தேர்தல்களில் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் இந்த நியமன மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அப்பீல்கள் நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று நீதிபதிகள் 2005 நவம்பர் 29-ல் பிளாக் வெல்லுக்கு எதிரான லோரன்ஸ் வழக்கில் தீர்ப்பளித்தனர். அந்த முடிவை அறிவிக்கும்போது அந்த மேல் முறையீட்டு நீதிமன்றக்குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர், புஷ்ஷால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் மற்றொரு நீதிபதி கிளிண்டனால் நியமிக்கப்பட்டவர். அவர்கள், தங்களது தீர்ப்பில் உண்மையிலேயே குறிப்பிட்டது என்னவென்றால், ஓஹியோ தனது காலக்கெடுவை மாற்றுமானால், வாக்குப்பதிவு தகுதி கோரி மனுச்செய்வதற்கு அதிக காலக்கெடு வழங்குமானால் அது, சுயேட்சை வேட்பாளர்களுக்கு இரண்டு பெரிய கட்சிகளையும்விட "நியாயமற்ற அனுகூலம்" கிடைக்கச் செய்துவிடும் என்பதாகும்.

மாநில தேர்தல் சட்டத்தின் கீழ் தேவைப்படும் 1695 வாக்குகளைவிட அதிகமாக லோரன்ஸ் 2660 வாக்காளர்களின் கையெழுத்துக்களை திரட்டிவிட்டிருந்தார். என்றாலும், முன்கூட்டி மனுச்செய்வதை தடுக்கும் காலக்கெடுவிற்கு பின்னர் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அந்த விதியை நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கு கருதுகிறது. அந்த காலக்கெடு பொது தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது, பாராளுமன்றத்திற்கான சுயேட்சை வேட்பாளர்களுக்கு மிகவும் முந்திய காலக்கெடுவாகும்.

2004 ஜூன் 14-ல் லோரன்ஸ் ஒரு முதலாவது CD வாக்காளர் இபாத் ஹைலோவும் அரசியல் சட்ட அடிப்படைகளில் சுயேட்சை வேட்பாளர்கள் ஓஹியோவின் மார்ச் முதல் தேதி என்ற மனுச்செய்வதற்கான காலக்கெடுவை ஆட்சேபித்து, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர் அந்த நேரத்தில் லோரன்ஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம் சொன்னார்: "ஓஹியோ சட்டமன்றம் ஜனநாயக விரோதமான முன்கூட்டியே மனுவை தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற விதியை, சட்டப் புத்தகங்களில் வைத்திருப்பது, இரண்டு கட்சிகளின் அரசியல் ஏகபோகத்தை காப்பதற்குத்தான். அரசியல் விவாதங்களின் குரல் வளையை நெரிப்பதற்கும், போர் எதிர்ப்பு ஆட்குறைப்பு மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பற்றிய குரல்கள் கேட்காது உறுதிசெய்து தருவதற்கும் 3-வது கட்சிகளுக்கு இடம்கொடுக்க மறுப்பதாக அந்த விதி அமைந்திருக்கிறது."

லோரன்சின் வழக்குரைஞர்கள், 1983-ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் செலிபரிஸ்க்கு எதிரான ஆண்டர்சன் வழக்கில் இதேபோன்று ஓஹியோவில், ஜனாதிபதிக்கான சுயேட்சை வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை இரத்து செய்த தீர்ப்பைத்தான், லோரன்சின் வழக்குரைஞர்கள் பெருமளவில் வாதத்திற்கு எடுத்துக்கொண்டனர். அந்த நேரத்தில், ஜனாதிபதிக்கான சுயேட்சை வேட்பாளர்கள் பெரிய கட்சிகளின் ஆரம்பநிலைத் தேர்தல்கள் நடப்பதற்கு 75 நாட்களுக்கு முன்னர், மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு நிலைநாட்டி இருந்தது என்னவென்றால், இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஒரு நியாயமற்ற நடைமுறையாகும். குறிப்பாக, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நியமனம் செய்யும் வேட்பாளர்களை விரும்பாத மற்றொரு வேட்பாளரை அல்லது கட்சியை, வாக்காளர்கள் ஆதரிப்பதற்குரிய வாய்ப்பை ஒழித்துக்கட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த ஆண்டர்சன் வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து ஓஹியோ சுயேட்சை வேட்பாளர்கள் நியமன மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஆகஸ்ட் 19 என்று மாற்றினர்- இது சுயேட்சை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மார்ச் முதல் தேதி என்ற காலக்கெடுவிற்கு ஏறத்தாழ 6 மாதங்கள் பிந்தி வருவதாகும். ஓஹியோ அதிகாரிகள் சுயேட்சை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது போன்று, காலக்கெடு மாற்றத்தை செய்ய மறுத்துவிட்டனர்.

அதற்கு பதிலாக பெரிய கட்சிகளின் ஆரம்பநிலைகளை மார்ச் 2-க்கு மாற்றினர், அதன் மூலம், சுயேட்சை நாடாளுமன்ற வேட்பாளர்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆரம்பநிலைகள் நடந்தும் தேதிக்குமுன் ஒரு நாளைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மாற்றினர். அதற்குப்பின்னர், மாநில சட்டமன்றம் சுயேட்சை நாடாளுமன்ற வேட்பாளர்கள் மே 1 அல்லது அதற்கு முன்னர், மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்தனர் இது, இரண்டு பெரிய கட்சிகளும் நடத்தும், ஆரம்பநிலைகளை ஒட்டி நிர்ணயிக்கப்பட்டது.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றமும் பின்னர், அமெரிக்க மேல்முறையீடுகள் நீதிமன்றமும், லோரன்ஸ் வழக்கில் எழுப்பப்பட்ட அரசியல் சட்ட பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டன. மற்றும் மார்ச் 1 மனுச் செய்வதற்கு கடைசி தேதி என்பதை ஏற்றுக்கொண்டன. அப்படிச் செய்தபோது ஓஹியோவின் குடியரசுக் கட்சியின் மாநில அரசு செயலாளர் கென்னத் பிளாக் வெல்லின் மோசடி கூற்றை ஏற்றுக்கொண்டன, பெரிய கட்சிகள் தங்கள் ஆரம்பநிலைகளை நடத்துகின்ற அதே காலத்தை ஒட்டி சுயேட்சைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், இது "சரிசமமாக நடத்துதல்" என்ற ஓஹியோவின் வாதத்தை ஏற்றுக்கொண்டனர்.

லோரன்ஸ் சார்பில் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு ஓஹியோ, கொலம்பஸை சேர்ந்த மார்க் பிரெளன், மற்றும் கேபிட்டல் பல்கலைக்கழகத்தின் சட்டப்பேராசிரியர், ஒரு மனுவைத் தாக்கல் செய்தார், அதில் பிளாக் வெல்லின் கூற்றிற்கு பதிலளித்திருக்கிறார். அவரது வாதத்தின்படி "தேர்தல் சமத்துவம்" என்பது இயற்கையாக நிர்ணயிக்கப்படும் தரவரிசை மற்றும் வேட்பாளர்களுக்கு அதிக காலக்கெடு தருவது அவர்களுக்கு ஒரு நியாயமற்ற அனுகூலத்தை தருகிறது என்று கூறுகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, எந்த நியாயமான நீதிமன்றமும் அதைக் கோராது.

பிரெளன் ஏற்கெனவே நான்காவது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட, பல அமெரிக்க நீதிமன்றங்கள் "சமமாக நடத்துதல்" என்ற கூற்றை தள்ளுபடி செய்திருப்பதை சுட்டிக்காட்டினார், 1990-ல் சவுத் கரோலினாவின் விதிகளை, நான்காவது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது அளித்த தீர்ப்பில் சம காலக்கெடுவை நிர்ணயிப்பது "மேலெழுந்த வாரியான 'சமத்துவத்தை' த்தான் நிலைநாட்டுகிறது. இரண்டு வகையான வேட்பாளர்கள் சமத்துவம் இல்லாத நிலையில், அவர்கள் மீது சமமான சுமைகள் திணிக்கப்படுகின்றனவே தவிர, சமமாக நடத்தப்படவில்லை என்று நான்காவது சர்கியூட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேபோன்று 11-வது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் 1991-ல் அலபாமாவின், சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தகுதிபெறும் காலக்கெடுவாக விதிக்கப்பட்டிருந்த ஏப்ரல் என்ற காலக்கெடுவை தள்ளுபடி செய்தது. மாநிலத்தின் நியாயமான நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு சிறிய கட்சியும் அதன் வேட்பாளரும் தேர்தலுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னரே மனு தாக்கல் செய்யவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிப்பதை எவரும் சரி என்று வாதிட முடியாது என்று அப்போது 11-வது சர்கியூட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உலக சோசலிச வலைத்தளத்திடம் பிரெளன் கூறுகையில்: "பெரிய கட்சிகளோடு சுயேட்சைகள் சந்திக்கின்ற தடைக்கற்களை நாம் ஒப்பிட முடியாது. அங்கு சமமாக நடத்துதல் இல்லை. மிகப்பெரும்பாலான ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிக்காரர்கள் இயல்பாகவே வாக்குச்சீட்டில் இடம்பெறும் தகுதியை பெற்றுவிடுகின்றனர். அவர்கள் சிறப்பு விதிகளை இயற்றியுள்ளனர், அவை சுயேட்சைகளுக்கு பொருந்தாது."

2004-ல் பிளாக் வெல்லுக்கு எதிராக சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரால்ப் நாடர் தொடர்ந்த வழக்கில் அவருக்காக வாதாடிய அட்டர்னி சொன்னார்: "மார்ச் வாக்கில் நியமன மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் வேட்பாளர்களை நிர்பந்தப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அவை இரண்டு கட்சி கட்டுக்கோப்பை பாதுகாப்பதற்காகத்தான். ஆனால் மாநில சட்டமன்றங்களில் இதற்கான நிவாரணத்தை பெற முடியாது ஏனென்றால் அவற்றை ஜனநாயக, மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மாகாண மற்றும் மத்திய நீதிமன்றங்களில் வெளியார் மீது எந்த அனுதாபமும் இல்லை, அதற்குக்காரணம் அந்த நீதிபதிகள் அந்த இரண்டு கட்சிகளிலும் இருந்து வந்தவர்கள்.

இந்த காலக்கெடு இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்கு எதிராக எழும் நமது சவால்களை முடக்குவதற்காகத்தான். மார்ச் 1 வாக்கில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது, சுயேட்சைகளுக்கு நியாயமற்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனென்றால் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை அவர்கள் பெற்றாக வேண்டும், வணிக நிலையங்களில் அந்த நிர்வாகங்கள் அந்த கையெழுத்து வாங்குதை அனுமதிப்பதில்லை ஆகையால் அதில் பெரும்பகுதி வீட்டுக்கு வீடு சென்று பெற வேண்டியிருக்கும்.

டேவிட் லோரன்சிற்கு எதிரான தாக்குதலுடன், 2004-ல் நாடரை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிட மேற்கொண்ட முயற்சிகள் மூலம் பிளாக் வெல், SEP ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான பில்வான் ஒகென் மற்றும் ஜிம் லோரன்ஸ் ஆகியோரை அவர்கள் எல்லா சட்டபூர்வ நிபந்தனைகளையும் நிறைவேற்றிய பின்னரும், கட்சி ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சேகரித்த பின்னரும், அவர்களை வாக்குப்பதிவிலிருந்து நீக்குவதற்கு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தேர்தலில் ஓஹியோவின் வாக்குரிமைகளை கட்டுப்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதன் மூலமும் அந்த மாகாண வாக்குகளை ஜோர்ஜ் புஷ்சிற்கு அளித்தது மூலம் பிளாக்வெல் இழிபுகழ் பெற்றார். முன்னாள் மாநில அரசு செயலரான அவர் தற்போது குடியரசுக் கட்சியின் சார்பில் ஓஹியோ கவர்னராக போட்டியிடுவதற்கான நியமனம் பெற்றிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் லோரன்ஸ் வழக்கை மறு ஆய்வு செய்வதற்கு மறுத்திருப்பது, 2000 தேர்தலில் புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கையை தடுத்து மற்றும் அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலை உச்சநீதிமன்றம் ஜோர்ஜ் W. புஷ்சிற்கு சாதகமாக தந்தது உள்பட, கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக வாக்களிக்கும் உரிமைகள் மீது உச்சநீதிமன்றம் மேற்கொண்டிருக்கும் பிற்போக்குத்தனமான தாக்குதல்களின் ஓர் அங்கமாகும்.

1992 முதல் Ballot Access News என்ற வெளியீட்டை நடத்தி வருகின்ற ரிச்சார்ட் வேக்னர் தந்துள்ள தகவலின்படி, அந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளர் ரோஸ் பெரோட் மில்லியன் கணக்கான வாக்குகளை பெற்றிருந்தும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தவே முயன்று வந்திருக்கிறது மற்றும் இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்கு வெளியில் எவரையும் தேர்ந்தெடுப்பதற்கு வாக்காளர்களை தடுத்து வந்திருக்கிறது. "ஒவ்வொரு முறையும் கீழ் நீதிமன்றங்களில் நாங்கள் வெற்றி பெறும்போது அரசு தரப்பிலிருந்து வருகின்ற மேல்முறையீட்டை ஒட்டி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றிவிடுகிறது. நாங்கள் கீழ் நீதிமன்றங்களில் தோல்வியடையும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்களது மேல்முறையீடுகளை விசாரிக்க மறுத்துவிடுகின்றனர்" என்று வாக்னர் சொன்னார்.

எல்லா வேட்பாளர்களையும் விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்கு தொலைக்காட்சி நிலையங்கள் ஏற்பாடு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட மூன்று கீழ் நீதிமன்ற வழக்குகளில் வாக்குச்சீட்டில் இடம்பெறல் விரிவுபடுத்தப்படல், உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று வாக்னர் சொன்னார்.

நாடு முழுவதிலும் வாக்களிக்கும் உரிமைகளையும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கான உரிமைகளையும் கட்டுப்படுத்துவதற்கு பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஓர் அங்கம்தான் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மத்திய மற்றும் மாநில அளவில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கும் வாக்களிப்பதற்கும் அவற்றை எண்ணுவதற்கும், புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக ஏழை மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்கும் உரிமை மீது சுயேட்சை மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான உரிமை மீதும் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தாக்குதல் அமெரிக்க ஜனநாயகம் சிதைந்துகொண்டு வருகிறது என்பதற்கான கூர்மையான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஒட்டுமொத்த அரசியல் கட்டுக்கோப்பும் ஒரு செல்வந்தத்தட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது, அவர்களது நலன்கள் பெரும்பாலான மக்களது நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாக, அமைந்திருப்பதால், அந்த தரப்பினர் தங்களது நோக்கங்களை ஜனநாயக பொதுக்கருத்து மூலம் வென்றெடுக்க இயலாது என்ற நிலையில், அவர்கள் எதேச்சதிகார ஆட்சிமுறைகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

போர் தொடர்பாகவும், தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுத்து வருகின்ற நடவடிக்கைகளும், பிற்போக்குத்தனமான கொள்கைகளை நோக்கி அதிக அளவில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு பெரிய வர்த்தக கட்சிகளின் ஆதரவு அடித்தளமும் சிதைந்து கொண்டு வருகின்ற நேரத்தில், எந்த அரசியல் அறைகூவலும் தோன்றுவதை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் அச்சத்தோடும் பகை உணர்வோடும் நோக்குகின்றனர், குறிப்பாக, உழைக்கும் மக்களது அபிலாஷைகளுக்கு, அவர்களது அக்கறைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முயன்று வருகின்ற சோசலிஸ்ட்டுகளிடமிருந்து வருகின்ற சவால்களை, அவர்கள் பகை உணர்வோடும், எதிர்ப்பு உணர்வோடும் அணுகுகின்றனர். இது, இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்கு ஒரு சோசலிச மாற்றாக தொழிலாள வர்க்கத்தின் வலுவான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கான சோசலிச சமத்துவக் கட்சி 2006 தேர்தல்களில் மேற்கொண்டுள்ள அரசியல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது.

Top of page