World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Bush administration and the killing of Zarqawi

சர்காவி கொல்லப்படலும் புஷ் நிர்வாகமும்

By Barry Grey
9 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

அபு முசப் அல்-சர்காவி கொல்லப்பட்டதானது, அமெரிக்க இராணுவத்திற்கும் அண்மையில் நிறுவப்பட்ட பாக்தாத் அரசாங்கத்திற்கும் மகத்தான வெற்றி என்று புஷ் நிர்வாகமும் அமெரிக்க செய்தி ஊடகமும் சித்தரித்துக்காட்ட முயன்று வருகின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதியின் மரணத்தை அமெரிக்க அரசாங்கமும் அதன் சார்பாக செயல்படும் பாக்தாத் அரசாங்கமும் வெற்றி என்று பிரச்சாரம் செய்ய முற்பட்டுள்ளது சிடுமூஞ்சித்தனமும் அவநம்பிக்கையும் இணைந்த, ஓர் இழிந்த காட்சியாகும்.

அமெரிக்க நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலையில், ஈராக்கிய பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி, பக்கவாட்டில் ஈராக்கிலுள்ள அமெரிக்க தலைமைத் தளபதியான ஜோர்ஜ் கேசி, மற்றும் அமெரிக்க தூதர், ஜால்மே காலில்ஜாத், புடைசூழ பாக்தாத்தின் பலத்த பாதுகாப்பு பச்சை வலையத்தில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தி, ஜோர்டானில் பிறந்த பயங்கரவாதி இன்னும் ஐவருடன் சேர்த்து கொல்லப்பட்டு விட்டார் என்பதை அறிவித்தார், இது பாக்தாத்திற்கு அருகில் உள்ள வடகிழக்கு நகரமான பாகுபாவிற்கு வெளியே, அவர் தங்கியிருந்த "பாதுகாப்பான இல்லம்" அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு உட்பட்டதில் இம்மரணம் நிகழ்ந்ததாகவும் கூறினார்.

சர்காவிக்கு "முற்றுப்புள்ளி" வைக்கப்பட்டுவிட்டதாக மாலிகி இறுமாப்புடன் கூறினார். ஒரு அமெரிக்க தளபதி பின்னர் கூறுகையில், புதன் மாலை அமெரிக்கர்களால் வீசப்பட்ட 500-பவுண்டு குண்டுகளினால் கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கர்கள் நிகழ்த்தும் படுகொலைகள் பற்றிய செய்திகள், வெளிப்பட்டு வருகையில் பொதுமக்கள் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் இச்செய்தியை பயன்படுத்துவதில் ஜனாதிபதி புஷ் நேரத்தை சிறிதும் வீணடித்துவிடவில்லை, போருக்கு பெருகிய பரந்த முறையில் எதிர்ப்பு இருப்பதின் விளைவாக அவருடைய நிர்வாகத்தின் அங்கீகார மதிப்பீட்டில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இது நிறுத்தும் என்றும் அவர் நம்பினார்.

வெள்ளை மாளிகையில் வியாழனன்று உரையாற்றுகையில், "ஈராக்கின் பயங்கரவாத இயக்கத்தின் நடைமுறை தளபதிக்கு," "நீதி" "அளிப்பட்டுவிட்டது" என்று புஷ் அறிவித்தார். "உலகின் தலைசிறந்த இராணுவத்தின்," "தைரியம் மற்றும் வாழ்க்கை தொழிலுக்கான பண்புகள்" ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.

ஈராக்கில் மரணமும் அழிவும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள், அமெரிக்கப் படைகள் மீண்டும் தாய்நாட்டிற்கு விரைவில் எந்நேரத்திலும் திரும்பி வந்துவிடும் என்பது போன்ற அனைத்து எதிர்பார்ப்புக்களுக்கும் எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். "சர்காவி இறந்துவிட்டார்," "ஆனால் ஈராக்கில் நடக்கவேண்டிய கடினமான மற்றும் அவசியமான பணி தொடர்கிறது என்று அவர் கூறினார். அவர் இல்லாமலும் பயங்கரவாதிகளும் எழுச்சியாளர்களும் செயல்படுவர் என்று நாம் எதிர்பார்க்கலாம்." "வரவிருக்கும் நாட்கள் மிகக் கடினமானவை," என்று எச்சரித்த புஷ் "அமெரிக்க மக்கள் தொடர்ந்து பொறுமை காட்ட வேண்டும்" என்றும் கோரினார்.

சர்காவி கொலையை பாராட்டுவதில் ஜனநாயகக் கட்சியினரும் விரைவில் சேர்ந்து கொண்டனர். 2008 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருக்க விருப்பத்தை தெரிவித்துள்ள செனட்டர் ஜோசப் பைடன், இக்கொலை ஒரு "நல்ல செய்தி" என்று CNN இடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்க இராணுவத்திற்கு புகழாரமும் சூட்டினார்.

இவர்களுடைய சொந்த அறிக்கையின்படி, அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை சக்திகள் சர்காவியை சில காலமாக கண்காணித்து வந்ததாகவும், வருவதாகவும் கைப்பற்றப்பட்ட அவருடைய ஈராக்கிய அல்-கொய்தா குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் (ஒருவேளை சித்திரவதை மூலம் என நம்பலாம்), அவருடைய நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான தகவல்கள் பெறப்பட்டதால் இது முடிந்தது என்றும் தெரிய வருகிறது. ஏன் இப்பொழுது அவர்கள் நடவடிக்கை எடுக்கப் புறப்பட்டனர்? புஷ் நிர்வாகத்திற்குள்ளேயான அரசியல் நெருக்கடியின் பெருகிவரும் அடையாளம் மற்றும் ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்கத்துருப்புக்கள் மத்தியில் இராணுவம் பற்றி சீர்குலைவு ஆகியவை தாக்குதலின் நேரத்திற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் பிணைப்பை கொண்டுள்ளது.

சில நாட்கள் முன்புதான், ஈராக்கிய பிரதம மந்திரி மாலிகி ஈராக்கிய மக்களின் உயிர் பற்றி பெரும் அசட்டையை காட்டும் அமெரிக்க இராணுவத்தின் தன்மையை பற்றி பகிரங்கமாக கண்டித்திருந்தார். ஹடிதாவில் அமெரிக்க சிறப்புக் கடற்படையினர் 24 பேரை கொன்றதற்கு விடையிறுக்கும் வகையில் மாலிகி இத்தகைய கொடூரங்கள் "அன்றாட நிகழ்வுகளாக," போய்விட்டன மற்றும் "அமெரிக்க படைகள் ஈராக்கிய மக்களை மதிப்பதில்லை.... ஒரு சந்தேகம் அல்லது உள்ளுணர்வு என்ற அடிப்படையில் கூட அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிய மக்கள் மீது தங்கள் வாகனங்களை ஓட்டி நசுக்குவதின் மூலம் கொல்லுகின்றனர்" என்றும் அவர் கூறினார். .

சர்காவியைப் பொறுத்தவரையில், அவர், அமெரிக்க உளவுத்துறையினால் நன்கு அறியப்பட்டிருந்த நிழல் உலக நபர்களில் ஒருவராவர், எக்குறிப்பிட்ட காலத்திலும் அவர் எவருக்கு விசுவாசமாக இருந்தார் என்று உறுதியாகக் கூறுவது கடினம். சுன்னி முஸ்லிம் அடிப்படைவாத வெறியாளரான, அவர் ஈராக்கிற்குள்ளேயே மிகவும் பிற்போக்கான கூறுபாடுகளை பிரதிபலித்தவராவார். வாஷிங்டன் செய்த கணக்கிலடங்கா கொடூரங்களில் அவர் தொடர்பு கொண்டிருந்த வரையில், அவருடைய பங்கு ஈராக்கிய எதிர்ப்பை கீழறுப்பதும் சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இடையே உள்நாட்டளவிலான உட்பகையை தூண்டிவிடுவதுமாகத்தான் இருந்தது.

ஒரு மத போர் வெறியராக, ஓசாமா பின் லேடன் இன்னும் பலரை போலவேதான் சர்காவி தன்னுடைய வாழ்க்கை போக்கை தொடங்கினார், இவர்கள் அனைவரும் பின்னர் அமெரிக்காவிற்கு எதிராக மாறி, 1989-ம் ஆண்டிலேயே ஆப்கானிஸ்தானத்திற்கு பயணித்து, சோவியத் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக அமெரிக்க ஆதரவில் நிகழ்த்தப்பட்ட முஜாஹிதின் கொரில்லாப் போரில் சேர்ந்து இருந்தனர்.

2003-ம் ஆண்டில் நிகழ்ந்த ஈராக்கிய படையெடுப்பிற்கு முன்னரே, புஷ் நிர்வாகம் மிகப் பெரிய அளவில் நாட்டில் சர்காவியின் பங்கு பற்றி தன்னுடைய சட்டவிரோத தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக பெரிதும் மிகைப்படுத்தியிருந்தனர். 2003 பெப்ரவரியில், ஐ. நா. பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் முன்னர், அப்பொழுது- வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கொலின் பவல் தன்னுடைய இழிபுகழ்பெற்ற உரையில் சதாம் ஹீசைன், பாத்திஸ்ட் ஆட்சி மற்றும் அல் கொய்தாவிற்கு இடையே இருந்த உறவின் மொத்த உருவாக சர்க்காவி இருந்தார் என்று தனித்துச் சுட்டிக்காட்டினார். வியாழக்கிழமை தன்னுடைய வலைத் தளத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இக்கூற்றை பதிப்பித்த வெளியுறவுகள் தொடர்பான சபையானது, ராஜதந்திரரீதியான சாமர்த்தியத்தை காட்டி இது "பின்னர் நிரூபணம் ஆகவில்லை" என்று எழுதியுள்ளது.

ஆக்கிரமிப்பிற்கு பின்னர் ஈராக்கிய எழுச்சி வளர்கையில், செய்தி ஊடகமும் ஜனநாயகக் கட்சியும் தன் பின்னே ஓடிவந்த நிலையில், புஷ் நிர்வாகம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான அனைத்து ஆயுதமேந்திய எதிர்ப்பிலும் சர்காவி பின்னணியில் உள்ளார் என்று அடையாளம் காட்ட முற்பட்டது, இதற்கு காரணம் வெளிநாட்டு படையெடுப்பாளர்களை வெளியேற்ற கருதிய ஈராக்கியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று இழிவுபடுத்தும் முயற்சியாக இருந்ததுதான்.

அதே நேரத்தில், முக்கிய இடங்களில் சர்காவி செய்ததாக கூறப்பட்ட செயல்கள் அனைத்தும் அமெரிக்க நலன்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்தன. 2004 பெப்ரவரியில், சுன்னிப் பகுதிகளில் முக்கியமாக நடைபெற்ற ஆயுதமேந்திய எழுச்சிகளில் ஷியைட் மக்களும் எக்கணமும் சேரலாம் என்று இருந்த நிலையில், சர்காவி எழுதியதாகக் கூறப்பட்ட பகிரங்கக் கடிதம் ஒன்று, ஷியாட்டுக்களை சுன்னிகளுடன் உள்நாட்டு போருக்கு போரிடுமாறு அறை கூவியது. சில வாரங்களுக்கு பின்னர், கார்பாலா மற்றும் பாக்தாத்தில் இருந்த ஷியாட் மசூதிகளில் நடந்த தற்கெலை குண்டுவீச்சுக்களுக்கு "சர்காவியின் வலைப்பின்னல்கள்தான்" காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மே 2004-ல், அபு கிறைப்பில் நிகழ்ந்த சித்திரவதை பற்றிய கொடூரமான புகைப்படங்கள் வெளிவந்த பின், அமெரிக்க வணிகரான நிக்கோலாஸ் பேர்க் ஈராக்கிற்கு கடத்தப்பட்டார், அமெரிக்கரின் கூற்றின்படி, அவர் சர்காவியினால் நேரடியாக தலை துண்டிக்கப்பட்டார். அமெரிக்க இராணுவம் பேர்க்கை பிடித்துவைத்திருந்தது, அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன் அவரை 13 நாட்கள் விசாரணை செய்தது, அவர் விடுவிக்கப்பட்ட பின்னர், விரைவிலேயே கடத்தியவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். இந்த பெரும் குழப்பமான சூழ்நிலையில் நிகழ்ந்த குற்றம், அதில் அமெரிக்க அதிகாரிகளின் பங்கு ஆகியவை முறையாக விளக்கப்படவே இல்லை.

இத்தகைய அட்டூழியங்கள் ஈராக்கிய எதிர்ப்பை தடுக்கவும் முடியாமல் அமெரிக்காவிற்குள்ளேயும் போர் எதிர்ப்பு உணர்வு பெருகுவதையும் தடுக்க முடியாமல் போயின, அதிகாரமும் உறுதியும் சற்றேனும் உடைய அரசாங்கத்தை பாக்தாத்தில் எப்படியும் நிறுவ வேண்டும் என்ற பெருந்திகைப்பில் இருந்த வாஷிங்டனுக்கு அமெரிக்க தேவைகளுக்கு பெருந்தடையாக சர்காவியின் நடவடிக்கைகள் பெருகிய முறையில் இருந்தன.

அவர் அதிகாரம் பெற்றிருந்தார் என்று அமெரிக்கா சொல்லும் அளவிற்கு, சர்காவி ஒன்றும் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை என்பதை புஷ் நிர்வாகம் நன்கு அறியும். ஈராக்கில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள கடுமையான சூழ்நிலையில் அவர் அழிக்கப்பட்டதன் பாதிப்பை ஒட்டி புஷ்ஷும் மற்ற நிர்வாகத்தின் உயர் செய்தி தொடர்பாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்து அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ நடைமுறையில் உள்ள கூறுபாடுகளுடன் நெருக்கமான தொடர்புடைய அமெரிக்க வலைத் தளமாகிய Stratfor, வியாழனன்று எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: "ஈராக்கில் செயலாற்றி வரும் வெளிநாட்டு புனிதப்போர் நடத்துபவர்களின் எண்ணிக்கை பற்றிய பெரும்பாலான மதிப்பீடுகள் 800-ல் இருந்து 1,000 வரை எக்காலகட்டத்திலும் இருக்கலாம்- இதுகூட மொத்த எழுச்சியில் மிகச் சிறிய பகுதிதான், எழுச்சி எண்ணிக்கை 15,000-தில் இருந்து 20,000 வரை இருக்கக்கூடும்."

இக்கட்டுரை பின்னர் சர்காவியின் அமைப்பு பெருகிய முறையில் எழுச்சியில் ஈடுபட்டுள்ள ஈராக்கியத் தேசிய குழுக்களுடன் பூசலுக்குட்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது.

நாள் முழுவதும் செய்தி ஊடகம் பெரும் களிப்பு கொண்டிருந்த நேரத்தில் ஒரு சில மாறுபட்ட கருத்துக்களும் வெளிவந்தன; நிருபரும் எழுத்தாளருமான நிர் ரோசன் CNN-க்கு கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்: "சர்காவியை பற்றிய புனைந்துரைகள் அமெரிக்கரால் தோற்றுவிக்கப்பட்டவை." ஈராக்கிய எழுச்சியை இழிவுபடுத்துவதற்காக அமெரிக்கா வேண்டுமென்றே சர்காவியின் பங்கை மிகைப்படுத்திக் கூறியது என்றும், அவருடைய இறப்பு ஈராக்கில் அமெரிக்க நிலைமையை முன்னேற்றாது என்றும் முடிவுரையாக கூறியுள்ளார்.

வெளிப்படையான பேச்சிற்கும் கொள்கைப்பிடிப்பிற்கும் குறிப்பிடத்தக்க வகையில் மற்றொரு முக்கிய கருத்தும் வந்துள்ளது. சர்காவியினால் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் நிக்கோலசின் தந்தை மைக்கேல் பேர்க் பயங்கரவாதியின் மரணம் பற்றிய செய்திக்கு தன்னுடைய விடையிறுப்பை கொடுக்குமாறு CNN தொகுப்பாளர் கேட்டபோது, அவரை திகைக்க வைக்கும் வகையில் சொன்னார். "புஷ் படையெடுப்பதற்கு முன்பு ஈராக்கில் அல்-கொய்தா இருந்தது கிடையாது," என்று அவர் கூறினார். "சதாம் ஹீசைன் நல்லவர் என்று நான் கூறவில்லை ஆனால் அவருடைய ஆட்சியில் ஆண்டு ஒன்றுக்கு 30,000 மக்கள் இறந்து வந்தனர், இப்பொழுது ஆண்டு ஒன்றுக்கு 60,000 பேர் கொல்லப்படுகின்றனர்..... சதாம் ஹீசைனைவிட புஷ் மன்னராக இருக்கும்போது ஈராக் சிறப்பாக உள்ளது என்று எப்படிக் கூறமுடியும்?"

Top of page