World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர்

UN-backed report indicts Indonesia, Australia and US for Timor atrocities

திமோரில் இழைத்த கொடுமைகளுக்காக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா மீது ஐ.நா. ஆதரவுடைய அறிக்கை குற்றம் சுமத்துகிறது

By Mike Head
13 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

அதன் மட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிப்பினும், (East Timor Commission for Reception, Truth and Reconciliation (CAVR), வரவேற்றல், உண்மை மற்றும் சமரச இணக்கத்திற்கான கிழக்கு திமோர் குழு (see: Incriminating documents looted in East Timor), இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மீது தொடர்ச்சியான பழிகூறும் கண்டறிதல்களை செய்துள்ளது.

இந்தோனேசிய அரசாங்கமும் அதன் பாதுகாப்பு படைகளும் 1975ல் இருந்து 1999 வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட 183,000 சாதாரண மக்களின் இறப்புக் காரணம் என்று இந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது; இதில் 90 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் பசியினாலும், நோய்களினாலும் மாண்டு போயினர். 18,600 சட்ட விரோதக் கொலைகள் மற்றும் காணமற்போன நிகழ்வுகளுக்கு தக்க ஆவணம் கொடுத்துள்ளதுடன், சித்திரவதை, பொது இடத்தில் தலையை சீவுதல், பிறப்பு உறுப்பை வெட்டிவிடுதல், பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு எரித்தல் அல்லது புதைத்தல், சிகரெட்டினால் பாதிப்பாளர்களின் உடலைப் பொசுக்கி சுடுதல், குடும்பத்தினருக்கு காட்டுவதற்காக காதுகளையும் பிறப்பு உறுப்புக்களையும் வெட்டி எடுத்தல் என்ற வகையில் 8,500 நிகழ்வுகளுக்கும் ஆவணங்களை தயாரித்துள்ளது.

கிழக்குத் திமோரில் படையெடுப்பிற்கு முன் இருந்த மொத்த மக்கட்தொகையில் இந்த இறப்புக்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். நாபாம் மற்றும் பிற அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை தவிர, இந்தோனேசிய பாதுகாப்புப் படைகள், "வேண்டுமென்றே கிழக்கு திமோரிய மக்களுக்கு எதிராக பட்டினி போடுதல் என்பதை போரின் ஒரு கருவியாக முழு நனவுடன் பயன்படுத்தினர்" என்று அறிக்கை கூறுகிறது. கிழக்கு திமோரிய குடிமக்கள்மீது வேண்டுமென்றே சுமத்திய வாழ்வின் நிலைமைகள் அவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை வாழமுடியாமல் செய்துவிட்டது கிழக்கு திமோரின் மக்கள்மீது இயக்கப்பெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றம், பூண்டோடு அழித்துவிடும் குற்றம் எனக் கூறலாம்."

ஆயிரக்கணக்கான கிழக்கு திமோரிய மகளிர் பாலியல் தாக்குதலுக்கு உட்பட்டனர். "கற்பழிப்பு, பாலியில் முறையில் அடிமைத்தனம், பாலியல் பலாத்காரம் ஆகிய கருவிகள் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுக்கும் மக்கள்மீது சுமத்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டன; அவை பெரும் பயங்கரம், சக்தியின்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை சுமத்தும் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் ஒரு பகுதியாக இருந்தன" என்று CAVR கண்டறிந்துள்ளது.

ஆக்கிரமிப்பு பகுதியில் எதையும் செய்யலாம் என்ற வகையிலான உணர்வு ஆக்கிரமிப்பாளர்களிடம் படர்ந்திருந்தது. "மிக உயர்மட்டத்தில் உள்ள இந்தோனேசிய இராணுவத் தளபதிகளின் ஒப்புதல் பெற்று அவர்களால் நடத்தப்பட்டு, அவர்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் முறையாக இந்த அத்துமீறல்கள் திட்டமிட்டபடி செயற்படுத்தப்பட்டன."

இராணுவத்தில் உள்ள போக்கிரித்தனமான கூறுபாடுகள், ஜாகர்த்தாவில் இருந்த அவர்களுடைய உயரதிகாரிகளுக்கு தெரியாமலேயே, தங்கள் சொந்த முயற்சியிலேயே இவ்வாறு ஈடுபட்டனர் என்பது நம்பத்தகுந்தது அல்ல. "சுதந்திர வேட்கை இயக்கத்தினரை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து 1999ல் தொடர்ச்சியாக இந்தோனேசிய பாதுகாப்புப் படைகளும் அவற்றின் துணைப் படைகளும் நடத்தின. ...இராணுவத் தளங்கள் பகிரங்கமாகவே போராளிகளின் தலைமையிடங்களாக செயல்பட்டதுடன், போராளிக் குழுக்களுக்கு சிறந்த ஆயுதங்கள் உட்படப் பல இராணுவக் கருவிகளும் வழங்கப்பட்டன."

"இத்தகைய மிகக் கொடூரமான முறையில் மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு, உத்தரவிட்டு, செயல்படுத்தியவர்கள் நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றில் பிணைக்கப்பட வேண்டும்; இவர்களில் பலர் தங்களுடைய நடவடிக்கைகளின் விளைவாக இராணுவ மற்றும் சாதார வாழ்வுப் போக்கில் பெரும் நலன்களை அடைந்துள்ளனர்."

அமெரிக்க, ஆஸ்திரேலிய கூட்டுச் சதித்திட்டம்

வியட்நாமில் அமெரிக்கா தோல்வியுற்றதை அடுத்து சுகோர்டோ ஆட்சிக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் 1975 படையெடுப்பை ஆதரித்ததற்காக அமெரிக்கா கடுமையான குற்றச் சாட்டிற்கு உட்பட்டுள்ளது. "பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர், மற்றும் பெரும் வல்லரசு என்ற முறையில் அமெரிக்கா இந்தோனேசியாவின் இராணுவத் தலையீட்டை தடுக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றிருந்தாலும், அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது. படையெடுப்பிற்கு அது ஆதரவு கொடுத்ததுடன், தன்னுடைய இராணுவக் கருவிகளை பயன்படுத்தவும் இந்தோனேசியாவை அனுமதித்தது; இவ்விதத்தில் அமெரிக்க சட்டத்தை மீறுகிறோம், தன்னாட்சி உரிமையை அடக்குவதற்கு இவ்வுதவி பயன்படுத்தப்படும் என்று தெரிந்தே அது அவ்வாறு செய்தது."

இந்தோனேசிய ஆக்கிரமிப்பிற்கு நீண்ட காலம் நடைமுறையில் அங்கீகாரம் கொடுத்தற்காக CAVR ஆஸ்திரேலியாவை கண்டித்ததுடன் கிழக்கு திமோரில் சக்தியை பயன்படுத்துவதை தடுப்பதில் தோல்வியடைந்ததற்கும் குற்றம் சாட்டியுள்ளது. தன்னுடைய எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் தொடர்புடைய கடல் எல்லைப் பேச்சு வார்த்தைகளில் மிக அதிகமான ஆதாயம் அடைய வேண்டும் என்ற விருப்பத்தை ஒட்டித்தான் ஆஸ்திரேலியா இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்ற முடிவிற்கும் இவ்வறிக்கை வந்துள்ளது.

இந்தோனேசியாவிற்கு அது ஆக்கிரமித்திருந்த 24 ஆண்டுகளிலும் ஆஸ்திரேலியா ஆதரவு கொடுத்திருந்ததுடன், சர்வதேச சமூகத்தில் அதன் சார்பாக வாதிடவும் செய்தது என்று குழு கண்டறிந்துள்ளது. 1999ல் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மந்தரியின் சமீபத்திய பங்கைப் பற்றியும் அறிக்கை குறிப்பாக எடுத்துரைத்துள்ளது.

கிழக்கு திமோரியர்களுக்கு, இந்தோனேசியாவுடன் தொடர்ந்து இருப்பது மற்றும் சுதந்திரம் வழங்குவது இவற்றுக்கிடையே எது வேண்டும் என்று முடிவெடுக்கும் விருப்பத்தை வழங்குவது தொடர்பான தனது முடிவை (முன்னாள் ஜனாதிபதி BJ) ஹாபிபி கொடுத்தபோது, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரியான அலெக்சாந்தர் டெளனர் அத்தகைய விருப்பத்தை முடிவெடுப்பதற்கு பல ஆண்டுகள் கிழக்கு திமோரியருக்கு பிடிக்கும் என்று தனது அரசாங்கம் நம்புவதால், ஆஸ்திரேலிய கண்ணோட்டத்தில் திமோர்-லெஸ்டே இந்தோனேசியாவின் பகுதியாக தொடர்ந்து இருப்பதுதான் விரும்பத்தக்கது என்று தன்னுடைய அரசாங்கம் நம்புவதாக தெரிவித்தார், என்று அக்குழு கண்டறிந்துள்ளது."

இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஐ.நா.பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், இந்தோனேசியாவிற்கு 1974ல் இருந்து 1999 வரை இராணுவ ஆதரவு கொடுத்தவர்களிடம் இருந்து இழப்புத் தொகை பெறப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா உட்பட ஜாகர்த்தாவிற்கு இராணுவ உதவி அளித்த நாடுகளும் இழப்புத் தொகை அளிக்க வேண்டும் என்று CAVR பரிந்துரைத்துள்ளது. இந்த இழப்பீடு செய்தலில் "போரிலிருந்தும் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளில் திமோர்-லெஸ்டேயில் நிகழ்ந்த நடவடிக்கைகளிலிருந்தும் ஆதாயம் அடைந்த வணிக நிறுவனங்களும் சேர்க்கப்பட வேண்டும்."

பாதிப்படைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இழப்புத் தொகை, "ஆரம்பத்தில் 5 ஆண்டு காலத்திற்கு இருக்க வேண்டும்; தேவையானால் இக்காலம் விரிவாக்கப்படலாம். "குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்; குறைந்தது சிறார்கள் 18 வயது அடையும் வரை, அதாவது 2017 வரை" இது கொடுக்கப்பட வேண்டும்."

See Also:

கிழக்கு திமோரின் தீவிரக் குற்றங்கள் பிரிவு சூறையாடல்

கிழக்கு திமோரின் பிரதம மந்திரி மரி அல்காட்டிரியை வெளியேற்றுவதற்கான பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் முடுக்கி விடுகின்றது

ஆஸ்திரேலியா, திமோர் மற்றும் எண்ணெய் வளம்: அதுதான் காரணம்
 

Top of page