World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Unanswered questions in the killing of Zarqawi

சர்காவி கொலையில் விடை கூறப்படாத வினாக்கள்

By Kate Randall
14 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

அபு முசப் அல்-சர்காவி கொல்லப்பட்டதற்கு பிந்தைய தினங்களில், இந்த சம்பவம் தொடர்பான அமெரிக்காவின் அதிகாரபூர்வமான அறிக்கைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. சாட்சிகள் மற்றும் இதர ஆதாரங்கள் கொடுத்துள்ள விபரங்களுடனும், அதேபோல இந்த நிகழ்வுகளின் தொடக்கத்தில் இராணுவம் கொடுத்துள்ள சொந்த விளக்கங்களுடனும், இந்நிகழ்வின் முக்கியமான அம்சங்களில் அமெரிக்க அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் வேறுபாட்டை காட்டுகின்றன.

பாக்தாத் நகரின் வடக்கில் 35 மைல்கள் தொலைவில் உள்ள பாகுபா பகுதியின் வெளிப்புறத்தில் புறவெளியில் இருந்த "பாதுகாப்பு வீட்டில்" சர்காவியும் ஷேக் அப்துல் ரஹ்மான் என்கிற சர்காவியின் ஆன்மீக தலைவரும் மற்றைய சில நபர்களுடன் தங்கியிருந்தபோது, கடந்த புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு பின்னர் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியாகி உள்ளார்கள் என்பதே பொருத்தமான வகையில் உறுதியாய் தெரிய வந்துள்ளது. இலக்கின் மீது அமெரிக்கா வீசிய 500-பவுண்டு குண்டுகள் இரண்டு, 40 அடி குழியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், மற்றைய முக்கியமான விபரங்கள், தெளிவாக இல்லை: எவ்விதம் எப்போது சர்காவி இறந்தார்? மரணமடைந்த மற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளங்கள் என்ன? இந்த தாக்குதல் நடைபெற்ற பின் யார் முதலில் இந்தக் காட்சியில் இருந்தார்கள்? குண்டுவீச்சுக்கு முன்னதாக அமெரிக்க படைகள் இந்த பகுதியில் இருந்தனவா? இத்தகைய மற்றும் இதர கேள்விகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் அளித்துள்ள பதில்கள்-அல்லது-பதிலளிக்காமல் மழுப்பியிருப்பது இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா ஜூன் 7ம் நாள் வெளியிட்டுள்ள அவர்களுடைய கூற்றுகளின் நம்பகத்தன்மையில் அதிகரித்தளவில் சந்தேகத்துக்குக்கிடமிருப்பதை விளக்கிக்கூறுகிறது.

சர்காவி "முடிக்கப்பட்டுவிட்டார்" என இந்த சோதனை நடந்த அடுத்த நாள், ஜூன் 8ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஈராக்கிய பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி அறிவித்தார். ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படையின் உயர் தலைவர் ஜென். ஜோர்ஜ் காசேய் என்பவரும், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சேர்ந்து கொண்டு அமெரிக்கப் படைகள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றபோது சர்காவி இறந்து போயிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். சர்காவியின் உதவியாளர்கள் ஏழு பேரும் இந்த தாக்குதலில் இறந்தார்கள் என்று மாலிகி கூறினார்.

அதே தினத்தில் அடுத்து நிகழ்ந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இறந்துபோன இஸ்லாமிய பயங்கரவாதியின் பெரிதாக்கப்பட்ட நிழற்படங்களை இராணுவம் காட்சிக்கு வைத்தது. இந்த நிழற்படங்கள், பார்ப்பதற்கு-கோரமாக சர்காவியின் தலையும் உடலின் மேற்பகுதியும் இரத்த வெள்ளத்தில் படுத்திருக்கின்ற நிலையில் அவருடைய முகத்தில் கிழிந்த காயங்களுடனும் அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததும் - ஒரு குண்டுவீச்சுத் தாக்குதலினால் துடைத்தழிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர் கொல்லப்பட்டதை ஒத்திருப்பதாக தோன்றவில்லை. மேல்விரிப்பு போல் தோன்றிய ஒன்றில் இளைப்பாறுவது போல அதிக அளவில் உருக்குலைந்த முகத்துடன் மற்றொரு புதிய நிழற்படம் அதே தினத்தில் வெளியிடப்பட்டது.

மொத்தத்தில் எட்டு பேர்கள் இறந்து போனார்கள் என்னும் மாலிகியின் கூற்றிற்கு முரண்பாடாக, அமெரிக்க இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் கால்டுவெல் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இந்த தாக்குதலில் ஏழு பேர் இறந்து போனார்கள், இதில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள், வெள்ளிக்கிழமை, சர்காவி எப்போது இறந்தார் என்பது குறித்த அமெரிக்க கணக்கு மாறியது. "இந்த வான்வழி விமானத் தாக்குதலில் உண்மையில் சர்காவி உயிர் பிழைத்திருந்தார்" என மேஜர் ஜெனரல் வில்லியம் கால்டுவெல் இப்போது தெரிவித்தார். அமெரிக்கப் படைவீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லும் முன்பாகவே ஈராக்கிய காவல் அதிகாரிகள் அங்கு சென்ற போது, அவர் கடுமையான காயங்களை அடைந்திருந்த போதிலும் இன்னும் உயிருடன் இருந்ததை கண்டு, அவரை உலோகத்தாலான காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்குரிய சாதனத்தில் வாரால் இணைந்துக் கட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்காவி தெளிவில்லாமல் ஏதோ முணுமுணுத்து அந்த சாதனத்திலிருந்து உருள முயற்சித்தபோது அமெரிக்கப் படைவீரர்களால் மீண்டும் பிடிக்கப்பட்டார், என கால்டுவெல் கூறியிருக்கிறார். "வான் தாக்குதலில் சர்காவி அடைந்த காயங்களினால் அதன் பின்னர் ஏறக்குறைய அவர் உடனடியாக இறந்துவிட்டார்" என்றும் அவர் கூறியுள்ளார். "யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறிக்கை கூறுவதாகவும்," அவர் மேலும் தெரிவித்தார். பத்திரிகை செய்தி அறிக்கையில் வெளிவந்துள்ள செய்தியில் குறைந்தபட்சம் ஒரு குழந்தை இந்த தாக்குதலில் கொல்லப்பட்டது என்பதை கால்டுவெல் மறுத்துதுள்ளார்.

சனிக்கிழமை பத்திரிகையாளர்களுக்கு செய்தி அளிக்கும் போது, மேஜர் ஜெனரல் கால்டுவெல் தான் ஏற்கனவே தெரிவித்ததை தலைகீழாக மாற்றி இறந்தவர்களுள் ஒரு ஐந்து அல்லது ஆறு வயதுள்ள ஒரு சிறு பெண்ணும் அடங்குவாள் என்று கூறியிருக்கிறார். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதில் சர்காவியையும் சேர்த்து இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் (ஒரு குழந்தை உட்பட) இப்போது ஐந்து என அறிக்கை கூறுகிறது.

"Fox News Sunday" நிகழ்ச்சியில் தோன்றிய ஜெனரல் காசே இந்த சம்பவத்தில் நடந்தவைகளை கூறினார். "எங்களுடைய படைவீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது ஈராக்கிய காவல் துறையினர் சர்காவியை, காயம்பட்டவர்களை ஏற்றும் வண்டியில் ஏற்றிக்கொண்டு; அவரை கொண்டு சென்றார்கள், முதலுதவி அளித்தார்கள், பின்னர் அவர் இறந்துவிட்டார்." "அமெரிக்க படையினர் சர்காவியின் உயிரைக் காப்பாற்ற முயன்றபோது அவர் இறந்துவிட்டார்" என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை வாக்கில், ஆரம்பத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சுக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேரம் ஏறத்தாழ 52 நிமிடங்கள், சர்காவி உயிருடன் இருந்ததாக கால்டுவெல் தெரிவித்தார். குண்டுவீச்சுக்கு 28 நிமிடங்கள் கழித்து அமெரிக்கப் படையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். "சர்காவிக்கு சுயநினைவு வந்து கொண்டும் போய்கொண்டும் இருந்த நிலையில் ஒரு கூட்டிணைவு மருத்துவர் சிகிச்சை அளித்தார்" எனவும் அவர் தெரிவித்தார். "மூச்சுவிடும் வழியை அந்த மருத்துவர் உறுதிப்படுத்தும் தருணத்தில், சர்காவி இரத்தத்தை வெளித்தள்ளியிருக்கிறார்." மூச்சுவிடுவது மேலீடானதாகவும் கஷ்டமாகவும் இருந்துள்ளதை அந்த மருத்துவர் குறித்துள்ளதாக கால்ட்வெல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் படைத்துறை சாராத மருத்துவ ஆய்வுத்துறை மற்றும் நோய்க்குறியாய்வு வல்லுநர்கள் அடங்கிய ஐந்து-நபர்கள் குழுவினர் மற்றும் மருத்துவ பரிசோதனையாளர்கள் ஆகியோர் ஈராக்குக்கு பறந்து சென்று நடத்திய சர்காவி மற்றும் அப்துல்-ரஹ்மான் ஆகியோரின் சாவுக்கு பிந்தைய மரண பரிசோதனைகளின் முடிவுகளை திங்கட்கிழமை அன்று இராணுவத்தினர் வெளியிட்டனர். சுவாசப்பை உடைப்பு மற்றும் அவர் உடம்பு முழுவதிலிருந்தும் பெரிய அளவிலான இரத்தப்போக்கு ஆகிய காரணங்களால் சர்காவி மரணமடைந்துள்ளார் என இராணுவத்தினர் கொடுத்துள்ள சர்காவின் பின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்பிரிவை சார்ந்த கேர்னல். ஸ்டீவ் ஜோன்ஸ் என்னும் நோய்க்குறியாய்வு வல்லுநர், பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு செய்தி கலந்தாய்வு கூட்டத்தின் போது இந்த சாவின் பின் ஆய்வு அறிக்கையின் முடிவுகளை பட விளக்கம் மூலம் காட்சிப்படுத்தினார். குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அதிர்வலைகள் தொடர்ந்து வாழ இயலாத நிலையில் இருந்த சர்காவியின் சுவாசப்பையில் "கடுங்காயங்களை ஏற்படுத்தியதாகவும்" அதுவே இறுதியில் அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். "அவர் வெடிமருந்து தகர்ப்புக் காயங்களால் மரணமடைந்ததாகவும் இதயத் துடிப்பு இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை," என்றும் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ஈராக்கிய சாட்சியான ஒருவர் சர்காவி அமெரிக்கப் படைவீரர்களால் அடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்ததாக வெளியாகிய பத்திரிகை அறிக்கைகள் மற்றும் வாக்குமூலங்களை எதிர்த்து கூறுவதே இந்த விரிவான விளக்கத்தின் நோக்கமாக இருந்தது.

தி அசோசியேட்டட் பிரஸ், தி நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் அனைத்தும் சம்பவம் நிகழ்ந்த "பாதுகாப்பான வீடு," அருகில் வசித்து வந்த, தன் பெயர் மொஹமது என்று கூறிய ஒருவரிடம் கண்ட பேட்டியை வெளியிட்டிருக்கின்றன. இரண்டாவது குண்டுவீச்சு முடிந்தவுடன் அவர் அந்த வீட்டுக்குச் சென்று சோர்ந்து உட்கார்ந்திருந்த ஒருவரை உடைந்த கற்கூளங்களை விட்டு தூரமாக முரட்டுத்தனமாக தான் இழுத்ததாக அவர் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். அந்த மனிதன் சர்காவியாகத்தான் இருக்க வேண்டும் என தான் நம்பியதாகவும், "அவர் அப்போது உயிருடன் தான் இருந்தார்" என்றும் தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், ஈராக்கிய காவல் துறையினர் அந்த மனிதனை நோயாளிகளை எடுத்துச் செல்லும் வண்டியில் ஏற்றினார்கள் என்று மொஹமது கூறியிருக்கிறார். அதன் பின்னர் அங்கு வந்த அமெரிக்கப் படைகள், அந்த மனிதனை நோயாளிகளை எடுத்துச் செல்லும் வண்டியில் இருந்து கீழிறக்கி அங்கிருந்த எல்லா ஈராக்கியர்களையும் தூரமாக அனுப்பினார்கள். அந்த மனிதனின் பெயரை அமெரிக்கர்கள் கேட்டார்கள் என்றும், அவர்களில் ஒருவர் அவருடைய துப்பாக்கியின் தடித்த முனையால் அந்த மனிதனை அடித்தார் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வு குறித்து ஜூன் 7ம் தேதியில் அமெரிக்க இராணுவம் காரணம் கூறியபோது வான்வழி குண்டுவீச்சு நடத்திய சமயத்தில் அந்த பாதுகாப்பு வீட்டுக்கு அருகில் அமெரிக்கப் படைகள் இல்லை என்றும், ஈராக்கிய காவல் துறையினர் தான் முதலில் அந்த இடத்துக்கு வந்தார்கள் என்றும் தெரிவித்திருப்பது வழக்கத்துக்கு மாறாக மிகவும் வினோதமாக இருப்பவற்றுள் ஒன்றாக இருக்கின்றது

ஆயினும், குண்டுவீச்சு நடந்த வீட்டிற்கு அருகில் பல்வேறு சிறப்பு இயக்கப் படைகள் பணியில் இருந்ததாக ஒரு முதுநிலை இராணுவ அலுவலரும் பென்டகனின் ஒரு முதுநிலை ஆலோசகரும் தங்கள் பெயரைத் தெரிவிக்கக் கூடாது என்கிற நிபந்தனையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையினரிடம் தெரிவித்துள்ளார்கள். டைம்ஸ் பத்திரிக்கையின்படி, "குண்டுகள் கீழே விழுவதற்கு முன்பாகவே அமெரிக்க கொமாண்டோ படையைச் சேர்ந்தவர்கள் ஸெலிகாப்டர்களிலிருந்து கயிறு மூலம் சறுக்கி கீழ் இறங்கி அந்த வீட்டை வட்ட வடிவமாக சூழ்ந்து வளைத்துக் கொண்டதை அந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஈராக்கியர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேராவது பார்த்ததை விவரித்துள்ளார்கள்.

டைம் பத்திரிகையில் ஜூன் 19-ல் வெளியான அறிக்கை இந்த விவரங்களை சான்று காட்டி உறுதிப்படுத்துகிறது. டைம் இதழின்படி, வான்வழி குண்டுவீச்சிற்கு முன்னதாக, டெல்டா படையின் மூலமாக "அரை டஜன் நபர்களுக்கும் குறைவான அமெரிக்க இராணுவ சம்மந்தமான வேவுப்பணி மற்றும் கண்காணிப்புக்குழுவினர் பேரீச்சம்பழம் மற்றும் பனை மரம் தோப்புகளில் மறைந்து நின்று கண்காணித்தனர்" என்று டைம் சஞ்சிகை கூறுகிறது.

இராணுவ நுண்ணறிவுப் பிரிவு செயல்பாட்டாளர்கள், டெல்டா படையின் பயங்கரவாத எதிர்ப்பு கொமாண்டோ படைப்பிரிவு, மற்றும் கடற்படையின் SEAL Team 6, மற்றும் அலைந்து திரியும் தரைப்படை பிரிவு ஆகியவை இணைந்த "ஒரு இரகசிய சிறப்பு-இயக்க குறிப்பிட்ட செயல்களை செய்து முடிக்க அனுப்பப்பட்ட படைத் தொகுதியால் .... இரண்டு வருடங்களுக்கு மேலாகவே சர்காவி வேட்டையாடப்பட்டு வந்ததாக" இந்த பத்திரிகை தெரிவிக்கிறது. ஈராக்கில் "மிகவும் தேடப்பட்டு வந்த" மனிதன் என்று புஷ் நிர்வாகத்தால் பெயர் குறிக்கப்பட்ட ஒருவர் திடீரென்று தாக்கப்படும் போது அந்த இடத்தில் இந்த குறிப்பிட்ட செயல்களை செய்து முடிக்க அனுப்பப்படும் படைத் தொகுதி இல்லை என்று கூறப்படுவது உண்மையில் வழக்கத்திற்கு மாறாக விசித்திரமாக இருக்கிறது.

இராணுவத்தினரின் 4-வது காலாட்படை பிரிவிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை ஏற்றிக்கொண்டு வந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் "குண்டுவீச்சு தாக்குதலுக்கு பின்னர் உடனடியாய் அந்த வீட்டில் கைகளையும் கால்களையும் தொற்றிக் கொண்டு ஏறியதாகவும்" டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. குண்டுவீச்சு தாக்குதல் முடிவுற்று கிட்டத்தட்ட அரை மணிநேரம் வரையிலும் அமெரிக்கப் படைகள் சம்பவம் நடந்த இடத்துக்கு வரவே இல்லை என்னும் கால்டுவெல்லின் கூற்றினை இது நேரடியாகவே மறுக்கிறது.

ஜோர்டானிய பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் தகவலின்படி, இறந்தவர்களில் அல்-சர்காவியின் 16 வயதே ஆன மனைவியும் அடங்குவார் எனவும் டைம் பத்திரிகை அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. சர்காவியின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈராக் பத்திரிகைகளில் வந்திருக்கும் செய்தியைத் தாங்கள் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ தங்களிடம் தகவல் ஏதுமில்லை என அமெரிக்க இராணுவம் கூறி வருகிறது. உண்மையில், சர்காவி மற்றும் அப்துல்-ரஹ்மான் ஆகியவர்களை தவிர, இந்த தாக்குதலில் இறந்த மற்றவர்களின் பிரேத நிலைகள் குறித்து எந்த தகவலையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.

அப்படியென்றால் அமெரிக்கப் படைகள்-சர்காவி இருந்த உண்மையான இடத்தை-அறிந்திருந்த நிலையில் ஏன் அவரை உயிருடன் பிடிக்க முயற்சிக்கவில்லை என்கிற வினா எழுகிறது. வாஷிங்டன் நிலை நிறுத்தி வந்தது போல, ஈராக்கின் உயர்நிலை பயங்கரவாதியாக இருந்த சர்காவி அந்நாட்டில் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிகள் மூலம் நாட்டை பேரிடருக்கு அழைத்துச் செல்லும் வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருந்தால், அவரிடமிருந்தும் அவருடைய நெருங்கிய சகாக்களிடமிருந்தும் தகவல்களை தெரிந்து கொண்டிருந்தால் அது மிகுந்த பயனுள்ளதாக இருந்திருக்குமே.

அந்த வீட்டை துல்லியமான வான்வழி குண்டுவீச்சு மூலம் தாக்க எடுத்த முடிவிற்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கும் விளக்கங்கள் நம்பும்படி இல்லை. சர்காவி உயிருடன் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமெரிக்கர்கள் அநேகர் உயிரிழக்க வேண்டியிருந்திருக்கும் என மேஜர் ஜெனரல் கால்டுவெல் தெரிவித்துள்ளார். சர்காவி தப்பி ஓடியிருக்கலாம் என பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்டு கடந்த வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.

நடந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை மற்றைய விளக்கங்கள் தெரிவிக்கின்றன. குண்டுவீசப்பட்ட போது சர்காவி அந்த வீட்டில் தான் இருந்தார் என்பதை விமர்சனமற்று ஏற்றுக்கொள்வதற்கான காரணம் எதுவுமில்லை; அமெரிக்காவின் சிறைக்காவலில் அந்த நேரத்தில் அவர் வந்திருக்கலாம். அவரது உடல் குண்டு வீச்சினால் அரைத்துத் தூளாக்கப்படவில்லை என்பதை நிழற்படத்திலிருந்த அவரது முகம் சுட்டிக்காட்டுகிறபோது, அமெரிக்க தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒளிநாடா சுருளில் இலக்கின் பெரும்பகுதி கொன்றழிக்கப்பட்டதாக தென்படுகிறது என்பதிலிருந்து இது விளங்கும்.

அமெரிக்க இராணுவம் மற்றும் நுண்ணறிவு நிறுவனங்களுடன் தொடர்புடைய Stratfor என்னும் அமெரிக்க வலைத் தளத்தில், ஜூன் 12ம் தேதி காலை உளவுத் தகவல் செய்திச் சுருக்கத்தில், "அவர் இரண்டு 500-பவுண்டு வெடிகுண்டாலோ அல்லது ஒரு டெல்ட்டா படையாலோ கொல்லப்பட்டார் என்பது மிகச்சிறிய வேறுபாட்டைத்தான் காட்டுகிறது," என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சர்காவியின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை அமெரிக்காவின் ஐயுறவு மனப்பான்மையை சுட்டிக்காண்பிக்கிறது இந்த அமைப்புகளுக்குள்ளாகவே அமெரிக்க சிறப்பு இயக்கப்படைகள் இந்த இஸ்லாமிய பயங்கரவாதியை கொன்றிருக்குமோ என்ற ஊகத்தை குறிப்பாய் தெரிவிக்கிறது.

சதாம் ஹூசைனை சிறைப்பிடித்து விசாரணை நடத்தி வருவதில் அடைந்துள்ள அனுபவம், அமெரிக்க பிரசார முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள அவற்றின் துரதிர்ஷ்டமான மற்றும் எதிர்பாராத விளைவுகள், ஒருவேளை சிறையில் இருக்கும்போது, சர்காவி ஈராக்கில் அமெரிக்க செயல்பாடுகளை பற்றி தங்களுக்காக சாதகமாக இல்லாத உண்மைகள் எவற்றையாவது கூறியோ, அல்லது முன்பு அமெரிக்க உளவு அமைப்பான CIA-யால் ஆதரிக்கப்பட்ட முஜாஹிதீன் கொரில்லாப் படை ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்து சண்டையிட்டபோது அவருக்கு அமெரிக்காவுடனிருந்த உறவைக் கூறி அதனால் ஏதேனும் தர்மசங்கடமான உண்மைகள் வெளிவந்து சிக்கலாகிவிடுமோ என்கின்ற விழிப்புணர்விலோ இவ்வாறு நடந்திருக்கலாம். இறந்தவர்கள் கதைகள் எதனையும் சொல்வதில்லை என்கிறாற்போல.

See Also :

சர்காவி கொல்லப்படலும் புஷ் நிர்வாகமும்

Top of page