World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

ஜிலீமீ நிuணீஸீtஊஸீணீனீஷீ suவீநீவீபீமீs ணீஸீபீ tலீமீவீக்ஷீ வீனீஜீணீநீt ஷீஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ ஜீஷீறீவீtவீநீணீறீ றீவீயீமீ

குவாண்டநாமோ தற்கொலைகளும் அமெரிக்க அரசியல் வாழ்வின் மீது அவற்றின் தாக்கமும்

By David Walsh
15 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

குவாண்டநாமோ வளைகுடாவில் இருக்கும் தடுப்புக் காவல் முகாமில் மூன்று கைதிகள் தற்கொலை செய்து கொண்டது ஒரு அவமானகரமான நிகழ்வு ஆகும்; அமெரிக்காவிற்குள் சமூக அரசியல் நெருக்கடி அதிகரிப்பதை இது இன்னும் தீவிரமாக்கும்.

நாட்டில் உள்ள ஆழமான ஒழுக்கநெறி சார்ந்த பிளவை பூசி மெழுகிவிட முடியாது. அமெரிக்க இராணுவமும் மற்றும் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளும் மிருகத்தனமான முறையில் பெரும் அலட்சியத்துடன் இந்நிகழ்வுகள் பற்றி கருத்துக் கூறினால், செய்தி ஊடகங்களும் ஜனநாயக கட்சியினரும் ஏமாற்றான வாதங்களுடனும் அல்லது மெளனமாக இருப்பதன் மூலம் இதற்கு பிரதிபலிக்கும் நிலையில், அமெரிக்க மக்களின் அதிகரித்துவரும் பிரிவினர் தங்களுடைய பெயரில் நடப்பது பற்றி அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் தமது கண்களால் பார்ப்பதை தவிர்க்க விரும்புகின்றனர். ஆனால் இத்தகைய வெறுப்புணர்வு, விரைவிலோ, தாமதித்தோ அரசியல் வெளிப்பாடு ஒன்றை காணும்.

ஈராக்கில் நடக்கும் போர் முடிவில்லாமல் நடந்து கொண்டிருப்பதுடன், நிலைமை தொடர்ந்து சீர்குலைந்து போகும். படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் நிகழ்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும், இறுமாப்புத்தனமாக "பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டது" என்று அறிவித்த பின்னரும், 70,000 அமெரிக்க மற்றும் ஈராக்கியத் துருப்புக்கள் புதன்கிழமை அன்று "பாக்தாத்தைப் பாதுகாத்தல்" என்ற நடவடிக்கையை துவங்கின.

சகல இடத்திலும் தமது வரவு வெறுக்கப்படும் நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகள் மனச்சீர்குலைவும் மிருகத்தனமும் ஹடிதாக்கள் போல் பல நிகழ்வுகள் வரும் என்பதற்குத்தான் உத்தரவாதமாக உள்ளது. அரக்கத்தனமுள்ளதாக சித்தரித்துக்காட்டப்பட்ட சர்ஹாவிக்கு பதிலாக மற்றொரு பேயின் மறுபதிப்பு பிரதியீடு செய்யப்பட்டு அந்தப் பெயர் குழப்பத்திலும் மற்றும் பெருகிய முறையில் அந்நியப்பட்டுவரும் அமெரிக்க மக்களிடையை பரப்பப்படும். குவாண்டநாமோ சித்திரவதை முகாம் மூடப்பட்டாலும்கூட, சட்டவிரோத தடுப்பு மற்றும் தவறான நடத்தைகள் மற்றொரு முகாமில் புதிதாக தொடங்கும். இதற்கிடையில் CIA உலகம் முழுவதும் அது நிறுவியுள்ள இரகசிய சித்திரவதை சிறைகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு புதிய நடவடிக்கையுடனும், வாஷிங்டனில் உள்ள ஆட்சி தன்னுடைய குண்டர் வகையிலான தன்மையைத்தான் புலப்படுத்திக் கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் அமெரிக்க தனக்கு விருப்பமானதை செய்யும் ஒரு சட்டத்திற்கு புறம்பான நாடு என்றுதான் பரந்த அளவில் கருதப்படுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் அதிகாரபூர்வ அமெரிக்க நடவடிக்கைகள் பற்றி பெருகிய முறையில் இகழ்வுணர்வு மற்றும் சந்தேகத்தைத்தான் சுட்டிக் காட்டுகின்றன; இதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பெருகிய முறையில் சிதைந்து நிற்பதோடு, பழிவாங்கும் தன்மை, பகுத்தறிவற்ற தன்மை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட வெளிப்படையான முட்டாள்த்தன்மையின் பின்னணியில், கிறுக்குப்பிடித்த முன்னோக்காயினும் கூட, ஒரு முன்னோக்கு இருப்பதைக் காணலாம்: அதுதான் அமெரிக்க பெருவணிக, நிதி உயரடுக்கின் உலக ஆதிக்கத்திற்கான் உந்துதல் ஆகும்.

குவாண்டநாமோ இறப்புக்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள நிர்வாகத்தினதும் மற்றும் அதன் ஆதரவாளர்களுடைய கருத்துக்களும் தனித்தன்மையுடையவையாகும். நான்கு ஆண்டுகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தாங்கள் நிரந்தரமாக கூண்டில் வைக்கப்பட்ட விலங்குகளை போல் வாழவேண்டியிருக்கும் என்ற கருதி மனம் உடைந்த மனிதர்களுடைய தற்கொலை பற்றி குவாண்டநாமோ முகாமின் தளபதி துணை அட்மிரல் ஹாரி ஹாரிஸ் இகழ்வுடன் கூறியதாவது: "இது ஒன்றும் நம்பிக்கையின்மையால் விளைந்த செயல் என நான் நினைக்கவில்லை; நமக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பொருத்தமற்ற போர் நடவடிக்கையாகும். "

அமெரிக்க துணைச் செயல் உதவியாளர் என்று பொது இராஜதந்திர பிரிவில் இருக்கும் கோலீன் கிராவ்வி இத்தகைய கருத்தைத்தான் BBC யின் "செய்தி நேரம்" நிகழ்ச்சியில் கூறினார். "இது ஒரு மூலோபாயத்தின் பகுதி போல் உள்ளது; அவர்கள் தங்களுடைய உயிருக்கே மதிப்பு கொடுக்கவில்லை; நிச்சயமாக எமது உயிர்களையும் மதிக்கவில்லை; தற்கொலைப்படை குண்டுதாக்குதல்ளை அவர்கள் ஓர் தந்திரோபாயம்போல் பயன்படுத்துகின்றனர். தங்களுடைய உயிர்களையே மாய்த்துக் கொள்ளுதல் தேவையற்றது; ஆனால் செய்தி தொடர்பாக வரும்போது அது ஒரு கவனத்தை ஈர்க்கும் செயல்."

இத்தகைய மிருகத்தனமான கருத்துக்கள் உலகம் முழுவதும் (அமெரிக்க அதிகாரிகளால்) கூறப்படுகின்றன. பிரிட்டனின் இஸ்லாமிய மனித உரிமைக்குழுவின் மசூத் சாத்யாரியா "இத்தகைய அறிக்கைகள் கொடுப்பது பற்றி ஜேர்மனியின் நாஜி அதிகாரிகள் கூட பொறாமையுடன் பார்த்திருப்பர்." என கூறினார்.

எப்படியும் அரேபிய உலகில் பலரும் தற்கொலை பற்றிய கதையை பற்றிச் சந்தேகம்தான் கொண்டுள்ளனர். அரபு முழுவதும் தழுவிய பதிப்பான Al-Qds Al-Arabi கூறியதாவது: "குவாண்டநாமோ வளைகுடாவில் இரண்டு சவுதி நாட்டவரும் யெமன் கைதிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளது பற்றிய அமெரிக்காவின் அதிகாரபூர்வ அறிக்கை வக்கீல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினால் பெரும் அவநம்பிக்கையுடன் நோக்கப்படுகிறது. இப்பொழுது நம்பப்படுவது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டனர் என்பதுதான்."

தங்கள் கையாலேயே கைதிகள் மரணமடைந்தது பற்றி கேட்கப்பட்டதற்கு, தன்னுடைய வழக்கமான கொடூரப் புன்னகையை காட்டிய ஜோர்ஜ் புஷ் ஜூன் 14ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: "குவாண்டநாமோ ... உதாரணமாக மற்ற நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கும் மதிப்புகளை அமெரிக்காவே கடைப்பிடிப்பதில்லை எனக் கூறுவதற்கு ஒரு போலிக் காரணத்தை கொடுக்கிறது. அவர்களுக்கு நான் கொடுக்கும் விடை நாங்கள் சட்டங்களை பின்பற்றும் நாடு, சட்டத்தின் ஆட்சியை கொண்டுள்ள நாடு என்பதுதான்." அமெரிக்க வரலாற்றில் எந்த நிர்வாகமும் சர்வதேச, அரசியலமைப்பு சட்டங்கள் தொடர்பாக இத்தகைய இழிவுடன் செயல்பட்டதில்லை.

ஐரோப்பிய பாராளுமன்றம் பற்றி புஷ் குறிப்பிட்டிருக்கலாம்; அதுதான் முதல்நாள் 597 ஆதரவு, 15 எதிர்ப்பு 20 நடுநிலை வாக்குகளுடன் குவாண்டநாமோ முகாம் மூடப்படவேண்டும் என்று தீர்மானத்தை இயற்றியிருந்தது. "சர்வதேச மனித உரிமைகளுக்கு ஏற்புடைத்த வகையில் ஒவ்வொரு கைதியும் நடத்தப்பட வேண்டும்" என்றும் தீர்மானம் கோரியது. தீர்மானத்திற்கு முக்கிய எதிர்ப்பு போலந்து குடும்பத்தின் குழு (League of Polish Families -LPR) என்னும் யூத எதிர்ப்பு தீவிர தேசியவாத அமைப்பில் இருந்து வந்தது.

வலதுசாரி அமெரிக்க செய்தி ஊடகம் தன்னுடைய வழக்கமான குருதி வெறியுடன் இதை எதிர்கொண்டது. ஜூன் 13ம் தேதி ஒரு தலையங்கத்தில் Wall Street Journal தெரிவித்ததாவது: "குவாண்டநாமோ வளைகுடாவில் மூன்று கைதிகள் தற்கொலை செய்து கொண்டது தம்மையை "மனித உரிமையாளர்கள்" என அழைத்துக் கொள்ளும் கூட்டத்தில் இருந்து அமெரிக்க எதிர்ப்பு வனப்புரையை மற்றொரு கோஷ்டி கானமாக வெளிப்படுத்திக் கொண்டுவந்துள்ளது. சிறிதும் திருத்த முடியாத ஜிகாத் வாதிகளை சேர்ந்தவர்கள்தாம் இறந்தவர்கள்; அதனால்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வீழ்ந்த பின்னும் நீண்டகாலம் அங்கு இருந்தனர்."

முதலில் கூண்டுகளிலும் பின்னர் 6 x 8 அடி சிற்றறைகளிலும், ஒரு கட்டில்கூடப் போட முடியாத இடத்தில் பூட்டிவைக்கப்பட்ட மனிதர்களை பற்றித்தான் இப்படிக் கூறப்படுகிறது; தங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்கொண்டு தங்கள் வழக்கு பற்றி வாதிப்பதற்கான வாய்ப்பு வழங்காதது ஒருபுறம் இருக்க, இவர்கள்மீது எந்தக் குற்றமும் சாட்டப்படவில்லை.

தற்கொலைகள் பற்றிய அறிக்கை ஒன்றில், குவாண்டநாமோவில் இருந்து வெளியே வந்த ஒன்பது பிரித்தானியர்கள் முகாமில் இருந்த மன, உடலியல் நிலைமைகளை பற்றி பின்வருமாறு கூறினர்: "அமெரிக்க விசாரணையாளர்கள் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று (குவாண்டநாமோவில் பணியாற்றிய பல முன்னாள் அமெரிக்கர்களாலும் இது ஒப்புக் கொள்ளப்பட்டது ஆகும்) அனைத்துவித நம்பிக்கைகளையும் அகற்றிவிடுவது ஆகும். எங்கள் குடும்பங்களை நாங்கள் இனிக் காணமுடியாது என்ற கருத்தை எங்களிடையே ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், பல தசாப்தங்கள் குற்றச்சாட்டு விசாரணை ஏதுமின்றி சிறையில் இருப்போம் என்றும் தோன்றவைத்துவிட்டனர்... நாங்கள் அனைவரும் உடலளவிலும், பாலியல் வகையிலும் இழிவிற்குட்படுத்தப்பட்டோம், அடிக்கப்பட்டோம், கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கப்பட்டு, சவரம் செய்யப்பட்டுவிட்டு பின்னர் 3 ஆண்டுகள் எங்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்டுவிட்டோம். பல ஆண்டுகள் இயற்கை வெளிச்சமே இல்லாத தனிமைச் சிறையில் எங்களில் சிலர் வைக்கப்பட்டோம். ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவருமே தற்கொலை பற்றிச் சிந்தித்தோம்."

36 குவாண்டநாமோ கைதிகளுக்காக வாதிடும் Reprieve என்னும் அமைப்பின் மூத்த வக்கீலான Zachary Katnelson, ஜூன் 12 கார்டியன் பதிப்பில் எழுதினார்: "இந்த மூன்று பேரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. இவர்கள் முகாம் I இல் இருந்தனர்; இது மிக அதிக பாதுகாப்பு பகுதியாகும்; இங்கு கைதிகளுக்கு கழிவறை காகிதம் ஒரு கட்டுகூட மறுக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு இறந்தவர்களின் கதைபற்றித் தெரியாது. குவாண்டநாமோவில் பெரும்பாலனவர்கள் தங்கள் நியாயமான உரிமைகளுக்கு போரிட வக்கீல்களை அமர்த்தியிருந்தாலும், இம்மூவரும் அவ்வாறு செய்யவில்லை. இந்த சட்டபூர்வ இருட்டறையில்தான் தற்கொலை செய்து கொண்டவர்கள் தங்களை அடைத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எவ்விதமான சட்ட வழிவகையும் கிடையாது; சிறையில், தனிமையில் வாட வேண்டும், குடும்பம் கிடையாது, நண்பர்கள் கிடையாது, எதுவும் கிடையாது என்றிருந்த நிலைதான் இருந்தது."

தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருவரான 22 வயதுக் கைதி யாசெர் டலால் அல் ஜக்ரானி, 17 வயதில் இருந்து சிறையில் இருப்பவர். அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் ஒரு டாலிபன் போராளி என்று விவரிக்கப்படுகிறார். அமெரிக்க ஆப்கானிய படைகள் வட ஆப்கானிஸ்தானில் 2001 கடைசிப் பகுதியிலுள்ள மஸார் -அல்-ஷரீவ் சிறையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் அங்கிருந்து அழைத்துவரப்பட்டார். இரண்டு அமெரிக்க போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவராவார்."

அமெரிக்க இராணுவ இயந்திரத்திற்கு அமெரிக்க செய்தி ஊடகத்தின் பெரும் பகுதியினர் அடிபணிந்து நிற்பது கிட்டத்தட்ட முழுமையான செயற்பாடு ஆகும். இல்லாவிடின் ABC செய்தி வலைத் தளத்தில் வந்துள்ள கீழ்க்கண்ட தகவலை பற்றி என்ன கூறமுடியும்: "குவாண்டாநாமோவில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? பென்டகன் அறிக்கைகள் கைதிகள் காவல்காரர்களைத் தவறாக நடத்தியது பற்றி விரிவாக கூறுகின்றன."

யுத்த கைதிகளின் முகாம்களில் காவலர்களால் "தொடர்ந்து சீரான முறையில் தொந்தரவுக்கும் தவறான செயல்களுக்கும் உட்படுத்தப்பட்டது பற்றியும்" இக்கட்டுரை எழுதியுள்ளது. "கைதிகளுடன் நடக்கும் பூசல்களில் அவர்கள் மலம், உமிழ்நீர், உணவுப் பாத்திரங்கள் ஆகியவற்றை காவலர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர்."

"முகாமின் காவலர்களுக்கு மேற்பார்வையாளராக இருக்கும் கேர்னல் மைக்கேல் பம்கார்னர், Fox News இடம் தற்கொலைகளுக்கு முன்பு கைதிகள் அவநம்பிக்கையினால் அல்லாமல் வெறுப்பினால் அவ்வாறு செய்தனர். இது வினோதமானது; இதை உங்களுக்கு விளக்குவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். அவர்கள் நம்மை வெறுக்கின்றனர்; அவர்கள் அமெரிக்கர்களை வெறுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இதை நான் பார்க்கிறேன். அவர்களுடைய கண்களில் ஒரு பார்வை உள்ளது. அதை உங்களுக்கு விளக்க முடியாது. அவர்களுடன் பழகும்போது, அந்த ஒரு கிறுக்குத்தனமான பார்வை தெரியும்."

இது ஒரு நயமான வரலாற்று வினாவை எழுப்புகிறது. நாஜி சித்திரவதை முகாமில் காவலர்கள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் புகார் கூறினார்களா?

குவாண்டநாமோ தொடர்ந்திருப்பதோ அல்லது மூன்று அவநம்பிக்கையுற்ற கைதிகள் பரிதாபமாக இறந்ததோ அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் தீவிர எதிர்ப்பு ஒன்றையும் ஏற்படுத்திவிடவில்லை. இங்கும் அங்குமாக சில தலையங்கங்கள், சற்று தாராளவாதம் தலைதூக்கி கை பிழிதல்கள் ஆகியவற்றுடன் பிரச்சாரக் கருவியினால் இழிநோக்குடன் நிர்வாகத்தின் பொய்கள் அனைத்துயும் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் நிகழ்ச்சி நடந்து நான்கு நாட்களின் பின் புதன்கிழமையன்று தலையங்க கருத்துக்கள் உதிர்ந்து மறைந்துவிட்டன. வாஷிங்டனில் இருக்கும் குற்றவாளிகள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும் என எவரும் கூறமாட்டார்கள்.

ஜூன் 12ம் தேதி New York Times ல் "குவாண்டநாமோவை எடுத்துக்காட்டும் விசாரணையை காவலாளிகள் திரிக்கின்றனர்" என்ற தலைப்பில் மிக அவநம்பிக்கைத்தன்மையும், நிலையை வெளிப்படுத்தும் கட்டுரைகளில் ஒன்று வெளிவந்தது. தங்களுடைய வாழ்வை முடித்துக் கொள்ளுவதற்கு கைதிகள் மேற்கொண்ட சாமர்த்தியமான போக்கு பற்றி கட்டுரை எடுத்துக் காட்டியுள்ளது. "ஒரு மூத்த இராணுவ அதிகாரி ஞாயிறன்று தெரிவித்ததாவது: மூன்று கைதிகளும் தங்களுடைய அறைக்குள் தங்களை தோய்க்கப்போடும் துணிகளால் மறைத்தும் மற்ற செயல்கள் மூலமும் மறைத்துக் கொள்ள முற்பட்டனர்; இதனால் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளுவதை காவலர்கள் காண்பது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தனர். கைதிகளின் இப்படிப்பட்ட ஏமாற்றுத்தனம் சடலங்களை கண்டுபிடிக்க இராணுவ காவலர்களுக்கு எத்தனை நேரம் பிடித்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது."

"உலகம் முழுவதும் இதை எதிர்கொண்டவிதம் ஊமைத்தனமாக இருந்தது" என அக்கட்டுரை குறிப்பிட்டது. உண்மையில், சுதந்திரமான குரலை எழுப்ப முற்பட்ட குரல்கள் அனைத்துமே சீற்றத்தைத்தான் வெளிப்படுத்தின. ஐரோப்பாவில் உள்ள புஷ் நிர்வாகத்தின் சில நட்பு அரசாங்கங்கள் கூட குவாண்டநாமோவில் இருக்கும் நிலைமைகள் பற்றிக் கண்டித்துத்தான் உள்ளது. "ஊமைத்தனமானது" என்பது பிறர் துன்பத்தின் களிப்பு காணும் தன்மையில் இருந்து முழு அசட்டைத்தனமான அமெரிக்க அரசியல் நடைமுறைக்குள் இந்நிகழ்ச்சி எதிர்கொள்ளப்பட்ட விதத்தை பற்றி பார்க்கையில் மிகப்பொருத்தமாக இருக்கும்.

டைம்ஸ் கட்டுரை தொடர்ந்து எழுதியதாவது: "அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் அதிகம் ஏதும் கூறவில்லை. ஒருகால் அவ்வாறு கூறினால், கைதிகளுக்கு பரிவு உணர்வு காட்டுதல் என்பது முக்கியமான பயங்கரவாத தொடர்புகளுக்கு பரிவு உணர்வு என்ற பொருளை தந்துவிடும் என்பதால் அத்தகைய நிலைப்பாடு போலும்." உண்மையில் நியூயோர்க்கின் செனட்டர் ஹில்லாரி கிளின்டன், அல்லது ஹோவர்ட் டீன் அல்லது மற்ற கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து கருத்துப் பெறலாம் என்ற செயல் பலனற்றதாகும்.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் படையெடுப்புக்களுக்கு ஆதரவைக் கொடுத்திருந்த ஜனநாயக கட்சி குவாண்டநாமோ சோகத்தில் முற்றிலும் நெருக்கமாக தொடர்புடையது ஆகும். 2004ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மாசாசூசட்ஸின் செனட்டரான ஜோன் கெர்ரி, தற்கொலைகள் நிகழ்ந்து இரு நாட்களில் கொடுத்த திங்கள் செய்தி ஏட்டிற்கான குறிப்பை பின்வருமாறு கூறித் தொடங்கியிருந்தார்: "ஈராக்கை பொறுத்தவரையில் எந்த அமெரிக்க தலைவரும் மெளனமாக இருந்துவிட முடியாது." ஆனால் ஒரு அமெரிக்க காவல் மையத்தில் நிகழ்ந்த கொடூரமான மரணங்களை பற்றி கெரி மெளனமாக இருப்பதில் வெற்றி கண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியினர் மக்களுடைய, மற்றும் தங்களுக்கே வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்களுடைய போர் எதிர்ப்பு உணர்வுகளுடன், தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட விரும்பவில்லை. 2006 இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தில், ஜனநாயக கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பிரதிநதிகள் மன்றமோ அல்லது ஜனநாயகக் கட்சி நிர்வாகமோ, கட்சியின் வலதுசாரித் தன்மை எப்படி இருக்கும் என்பதை இது முன்னிழல் இட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் உயரடுக்கினர், குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் இருவருமே, "நம்புவதற்கான விருப்பம்" என்ற மனப்பாங்கின் தீவிரமான முறையினால் அவதிக்குட்பட்டுள்ளன. இதுதான் நடைமுறை தன்னிலை நெறிகளில் மிக முக்கியமானது ஆகும். தாங்கள் விரும்புவதுதான் உண்மை என்ற அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள்; கசப்பான உண்மைகள் செய்தி ஊடகத்திடம் அவற்றைப் பற்றிப் பேசாமல் இருந்தவிட்டால் மறைந்துவிடும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்; தங்களுடைய சமூக, அரசியல் நலன்களை ஒட்டித்தான் உண்மை முற்றிலும் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் நினைக்கின்றனர்.

இவர்கள் மிகத் தீவிரமான தவறை செய்கின்றனர். முந்தைய காலத்தில் பிரச்சார அமைச்சர்கள் கனவில் மட்டுமே கருதக் கூடிய பரந்த இருப்புக்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ள அமெரிக்க செய்தி ஊடகம் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் குவாண்டநாமோ அல்லது அமெரிக்காவில் இருக்கும் நிலைமைகளை விருப்பத்தின்மூலம் மறைத்துவிட முடியாது. அதேபோல் பென்டகனினதும் வெள்ளை மாளிகையினதும் பொய்களும், மூடிமறைத்துக்கொள்ளுதலும் கூடுதலான வெற்றியைக் கொடுத்துவிடாது.

ஒரு தொடுமுனை வந்துவிட்டது. அமெரிக்க மக்களிடையே மிகப் பாரியளவில் அரசியல், சிந்தனை குழப்பம் உள்ளது; ஆனால் இடையாற சமூகம் பின்னடைவு, பொருளாதார தாக்குதல்கள், ஏகாதிபத்திய வன்முறை மற்றும் அதிகாரபூர்வ சீரழிவு ஆகியவை கூட்டு விளைவுகளை கொடுத்துவிடும்.

புஷ்ஷின் அதிகாரிகள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் டைம்ஸ் அனைத்தும் கியூபாவில் நிகழ்ந்த ஒதுங்கிய மரணங்களைப்பற்றி ஒருவரும் கவனிக்கவில்லை என்று நம்புகின்றன; அல்லது தங்களையே நம்பவைத்துக் கொள்ளுகின்றன. குருதியும், ஒழுக்ககேடும் வேண்டும் என நினைப்பு உள்ளது; அது எப்பொழுதும் இருக்கும்; ஆனால் இன்னும் அதிகமான மக்கள் குமுறி எழுகின்றனர். இந்தக் கசப்பு உணர்வு சீற்றமாக வெளிப்படும்.

மிகத் திணற அடிக்கும் அல்லது மாற்றமுடியாது என முதலில் தோன்றும் பெருந்துன்ப நிகழ்வுப்போக்குகள் மக்கட்தொகுப்பின் பரந்த அடுக்குகளை ஏற்கனவே தீவிரமடைய செய்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலையின் சக்தியால், எழுச்சியுறும் வெகுஜன இயக்கம் தற்போது இருக்கும் மதிப்பிழந்திருக்கும் அரசியல் வழிவகைக்கு புறத்தே செயலாற்றும். சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் இந்த இயக்கத்தை அரசியல், தத்துவார்த்த ரீதியாக தயார் செய்து ஒரு உணர்மைமிக்க சோசலிச முன்னோக்கினால் அதனை ஆயுதபாணியாக்கும்.

Top of page