World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர்

Australian-led campaign pressures East Timorese prime minister to resign

ஆஸ்திரேலியா தலைமையிலான பிரச்சார அழுத்தத்தையொட்டி கிழக்கு திமோரிய பிரதம மந்திரி இராஜினாமா

By Peter Symonds
27 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

அவர் பதவி விலக வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் இடையறாத பிரச்சாரத்திற்கு மத்தியில் நேற்று கிழக்கு திமோரின் பிரதம மந்திரியான மாரி அல்காட்டிரி இராஜினாமா செய்தார். "சட்டவிரோத தலைமை கொண்டுள்ள" அல்காட்டிரி மற்றும் கட்சித் தலைவர் பிரான்சிஸ்கோ "லூ-ஒலு" கடெரெஸ் இருவரும் நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜானனா குஸ்மாவோவின் கோரிக்கைகளை ஆளும் பிரெடிலின் கட்சியின் கூட்டம் ஏற்க மறுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. நாடகமாடும் வகையில் தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தான் இராஜினாமா செய்துவிடுவதாக குஸ்மாவோ மிரட்டியிருந்தார், ஆனால் வார இறுதியில் அதைச் செய்யவில்லை.

பிரெட்லினுடைய மத்தியக்குழு குஸ்மாவோ, அல்காட்டிரி இருவரையும் தங்கள் பதவிகளில் இருக்குமாறு முறையிட்டிருந்தது; ஆனால் குஸ்மாவோவின் நெருங்கிய நண்பரான வெளியுறவு மந்திரி ஜோஸ் ரோமாஸ் ஹோர்ட்டாவிடம் இருந்து பெரும் அழுத்தத்தை உடனடியாக அல்காட்டிரி அடைந்தார்; பிந்தையவர் "அரசாங்கம் சரியாக நடைபெறவில்லை" என்பதனால் ஞாயிறன்று தான் பதவி விலக இருக்கும் விருப்பத்தை அறிவித்தார். உடனடியாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி, "அவர் (ராமோஸ்-ஹோர்ட்டா) எனக்கு நல்ல நண்பர், மிகத் திறமையான வெளியுறவு மந்திரி" என்று கூறி, இந்த இராஜிநாமா உறுதி செய்யப்பட்டால் தான் "மிகவும் வருத்தம் அடையக்கூடும்" என்று அறிவித்தார்.

அல்காட்டிரியின் முடிவிற்கு ஒரு காரணி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் ஜூன் 17 அன்று "நான்கு மூலைகள்" என்ற நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, அதில் அவரும் முன்னாள் உள்துறை மந்திரி ரோஜரியா லோபடோவும் அரசியல் எதிரிகளைக் கொல்லுவதற்குத் "தாக்குதல் படை" நிறுவியாக கூறியிருந்தது. கடந்த வாரம் ஆஸ்திரேலிய இராணுவத்தினர்களுடைய உதவியுடன் லோபடோ குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இவர் இராஜினாமா செய்யவேண்டும் என்ற தூண்டுதல் நிறைந்த பிரச்சாரத்தால் அல்காட்டிரி இராஜினாமா செய்தார் என்று கூறுவதைவிட பிரெட்லினுடைய சொந்த ஆதரவாளர்களே பூசலில் களத்தில் இறங்கி இதை ஒரு வெளிப்படையான உள்நாட்டுப் போராக செய்து விடுவரோ என்ற அச்சம் எழுந்ததுதான். பல வாரங்களாக, பிரெடிலின் தலைவர்கள் குஸ்மாவோ, ராமோஸ்-ஹோர்டா, எதிர்த்தரப்பு அரசியல் வாதிகள் மற்றும் எழுச்சியுற்றிருக்கும் போலீஸ், இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வந்த ஒப்புமையில் சிறிய அளவிலான அல்காட்டிரி எதிர்ப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் அணிவகுப்பு ஆகியவற்றை உறுப்பினர்கள் செய்வதை பிரெட்லின் தலைவர்கள் தடுத்து நிறுத்தி வந்திருந்தனர். நேற்று 18 லாரிகளில் பிரெட்லின் ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதற்காக டிலியை நோக்கிப் புறப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா தலைமையிலான ஆக்கிரமிப்பு, மற்றும் அதன் கைக்கூலிகளுக்கு எதிராக பிரெட்லினுடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே ஓர் இயக்கம் வளர்வதை கண்டு அல்காட்டிரி அச்சமுற்றார். அவருடைய சுருக்கமான செய்தி ஊடகத்திற்கான அறிக்கையில் "நெருக்கடி எவ்வகையிலும் ஆழ்ந்து போதலை" தடுப்பதற்காக தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், "போராளிகள் மற்றும் பிரெட்லினுடைய ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நிலைமையை உணர்ந்து ஆதரவு கொடுப்பார்கள்" என்று தான் நம்புவதாகவும் அறிவித்தார். இவருக்கு அடுத்தாற்போல் பதவிக்கு வரவிருப்பவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; ஆனால் பிரெடிலின் கான்பராவின் ஆதரவு பெற்றுள்ள குஸ்மாவோ, மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஏற்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுக்காவிட்டால், அது மீண்டும் இத்தகைய வகையிலான பிரச்சாரத்தை சந்திக்க நேரிடும்.

இராஜினாமா இறுதி என உறுதிப்படுத்தும் வகையில், அல்காட்டிரி மீது நாட்டிற்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் வைக்கப்படலாம் என்றும் இதற்காக 15 ஆண்டுகள் அவர் சிறைத் தண்டனை பெறக்கூடும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது. தலைமை அரசாங்க வழக்கறிஞரான Longuinhos Montiero, ஆஸ்திரேலியன் ஏட்டிற்கு கூறினார்: "அது ஆயுதங்கள் விநியோகம் பற்றி அவர் அறிந்திருந்தது பற்றியது, அது தொடர்பாக ஏதும் செய்தாரா எனபதை பற்றியதல்ல". அல்காட்டிரியும் லோபடவும் பிரெடிலின் ஆதரவாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது உண்மையானாலும், நாட்டின் பாதுகாப்புப் படைகள் சரிவுற்ற நிலையிலும், கிளர்ச்சித் தலைவர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் மத்தியிலும் இடம்பெற்றது. மேஜர் ஆல்பிரடோ ரெய்னடோ போன்ற ஆஸ்திரேலிய சார்புடைய கிளர்ச்சிக்காரர் இதேபோன்று அரசாங்கத்திற்கு எதிரான சதி, துரோகம் போன்ற குற்றங்களுக்காக குற்றவிசாரணைக்கு உட்பட வேண்டும் என்று எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இந்தோனேசியாவில் இருந்து பேசுகையில், பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட், அல்காட்டிரி இராஜிநாமாவை பற்றித் தன்னுடைய களிப்பை மறைக்கக்கூட முடியவில்லை. "இடர்பாடுகளை அகற்றும் வழிவகையின் ஒரு பகுதியாக, தேக்க நிலையை தீர்க்கும் தன்மை உடையதான, நிலையற்ற தன்மையை முறிக்கும் வழிவகையின் ஒரு பகுதியாக இது அமையும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார் அவர். குறிப்பிடத்தக்க வகையில் பாசாங்குத்தனம் நிறைந்திருந்த வகையில் அல்காட்டிரிக்கு பின்னர் எவர் வருவார் என்பதைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றும், "அந்த நாட்டின் பிரதம மந்திரி யார் என நியமிப்பவன் நான் அல்ல; அது ஒரு முழு உரிமை பெற்ற சுதந்திர நாடு" என்றும் கூறினார்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலிய அரசாங்கம் உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி கிழக்கு திமோரின் இறைமையை மிதித்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெடித்து எழுந்த அரசியல் பெருங்குழப்பத்தின் மையத்தானத்தில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கூடத்தில் பயின்ற ரெய்னடோ போன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் உள்ளனர்; இவருக்கு ராமோஸ்-ஹோர்டா போன்றவர்களுடன் நெருக்கமான அரசியல் தொடர்புகள் உள்ளன.

டிலி அசாங்கத்திற்கு தெரிவிக்காமல் மே 12 அன்று கிழக்கு திமோரிய கடல் எல்லைப் பகுதிகளுக்கு ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களை ஹோவர்ட் அனுப்பி வைத்தார்; பின்னர் மே 17-19 அன்று பிரெடிலினுடைய மாநாட்டில் அல்கட்டிரிக்கு விடுக்கப்பட்ட சவாலின் விளைவிற்குக் காத்திருந்தார். பிரெடிலினின் பிரதிநிதிகள் பெரிய அளவில் அல்காட்டிரியின் தலைமைக்கு ஒப்புதல் கொடுத்தபின்னர்தான் கான்பெரா அவருடைய அரசியல் விரோதிகள் மற்றும் எழுச்சி வீரர்கள் தூண்டியிருந்த வன்முறை வளர்ச்சியை பயன்படுத்தி ஆஸ்திரேலிய தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு "அழைப்பு" கொடுக்குமாறு டிலிக்கு அழுத்தம் கொடுத்தது.

கிழக்கும் திமோரில் படைகள் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, மே 26ம் தேதி நாட்டின் அரசாங்கம் "நல்ல முறையில் இயக்கப்படவில்லை" என்று ஹோவர்ட் அறிவித்தார். இது ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் அல்காட்டிரியை "பரந்த அளவில் வெறுக்கப்படும்" சர்வாதிகாரி, ஒரு மார்க்சிசவாதி என்று கடுமையான வகையில் அரக்கத்தனமாக சித்தரித்து, தொடர் தாக்குதல்களை ஆரம்பிக்க சமிக்கைகொடுத்தது; ஊடகமும், அல்காட்டிரிதான் நாட்டின் நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்று கோரியது. தேவை ஏற்பட்டால் ஒரு ஜனாதிபதி என்ற வகையில் குஸ்மாவோ பிரதம மந்திரியை நீக்க வேண்டி இருக்கும்.

ஆனால் அல்காட்டிரி இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்; அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தை குஸ்மாவோ பெற்றிருக்கவில்லை. எனவே அல்காட்டிரிக்கு எதிரான பிரச்சாரம் முடக்கப்பட்டுவிட்டது. அல்காட்டிரியை பற்றி இடைவிடாமல் அவதூறு கூறியதோடு, ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் அவருடைய அரசியல் எதிர்ப்பாளர்களிடம் இருந்து பல குற்றச் சாட்டுக்களை வெளிக் கொண்டுவந்தனர்: இவை அவருக்கு எதிரான சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு தளமாயின. எதுவும் கற்பனைக்கு அப்பாற்பட்டிருக்கவில்லை. "நான்கு மூலைகள்" நிகழ்ச்சியில் கிளர்ச்சித் தலைவர் லெப்டினன்ட் காஸ்டோ சால்சினா 60 பேர் கொலை செய்யப்பட்டதற்கு அல்காட்டிரி பொறுப்பு கொண்டவர் என்று கூறினாலும், இரகசிய கல்லறைகள் எங்கு உள்ளன என்று காட்டுவதற்கு நிருபரை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார்.

இதே நேரத்தில் ஆஸ்திரேலிய செய்தி ஊடகத்தின் ஆதரவுடன் குஸ்மாவோவும் ராமோஸ்-ஹோர்ட்டாவும் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆதரவுடன் கூடிய "வர்ண புரட்சிகளுடன்" கிழக்கு திமோரிய வண்ணத்தை உயர்த்திக் காட்டினர். ஆஸ்திரேலிய படைகளின் பாதுகாப்புடன் நூற்றுக் கணக்கான அல்காட்டிரி எதிர்ப்பாளர்கள் அரசாங்கக் கட்டிடங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக லாரிகளில் டிலிக்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த எதிர்ப்புக்களின் படங்கள் உலகம் முழுவதும் காணும் வகையில் ஒளிபரப்பப்பட்டு, அவை அல்காட்டிரி செல்வாக்கிழந்துள்ளார், அவரைப் பதவியில் இருந்து அகற்றுவது அவசியம் என்பதற்கு "நிரூபணம்" எனக் கூறப்பட்டது.

அல்காட்டிரி அரசாங்கத்திற்கு எதிரான ஹோவர்ட் அரசாங்கத்தின் விரோதப்போக்கு ஒரு சர்வாதிகார வகை ஆட்சி அல்லது "மார்க்சிச" அரசியல் என்பதைப் பற்றி அல்ல. சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஏட்டின் நிருபரான Hamish McDonald கடந்த வார இறுதியில் குறிப்பிட்டுள்ளது போல், "பிரெடிலின் பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருப்பது பற்றி எதிர்ப்பு இல்லை. அது உறுதியாக மார்க்சிச முறையில் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் சிக்கனமான பட்ஜெட்தான் நடைமுறையில் உள்ளது ...புதிய தாராளக் கொள்கை வாதியினர் ஏற்கும் வகையில் சிறந்ததாகத்தான் அவை உள்ளது என்று வெளிநாட்டு நிதி உதவி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்."

கிழக்கு திமோரைத் தன்னுடைய அரசியல் பாதுகாப்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்னும் ஆஸ்திரேலிய அபிலாசைகளை தாக்கும் வகையில் அல்காட்டிரியின் நிலைப்பாடு இருந்ததுதான் கான்பராவின் உண்மை எதிர்ப்பிற்கு காரணமாகும். 1999ம் ஆண்டு இராணுவத் தலையீட்டை மேற்கொண்ட பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் ஹோவர்ட் அரசாங்கத்திற்கு உளைச்சலை கொடுத்தது மற்ற நாடுகள், குறிப்பாக போர்த்துக்கல், பல நலன்களையும் ஈட்டியுள்ளன என்பதுதான். 2002ம் ஆண்டு முறையாக சுதந்திரம் பெற்ற பின் அல்காட்டிரி அரசாங்கம் தன்னுடைய முன்னாள் காலனித்துவ சக்தியுடன் பிணைப்புக்களை வலுப்படுத்திக் கொண்டதுடன் சீனா, ஜப்பான் ஆகியவற்றிடம் இருந்து பொருளாதார உதவி கேட்டதுடன், கியூபாவிடம் இருந்தும் உதவி பெற்றது.

ஆஸ்திரேலிய ஏகாதிபத்தயத்தை பொறுத்தவரையில், அல்காட்டிரியின் "குற்றம்" அவர் கான்பராவின் ஆணைகளை பின்பற்றாமல் போட்டியிடும் சக்திகளுக்கிடையில் ஒரு சமநிலையை காண முற்பட்டதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் திமோர் கடல் எண்ணெய், எரிவாயுவின் பெரும் பங்கு வேண்டும் என்ற ஆஸ்திரேலியக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்; சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் இவை கிழக்கு திமோருக்குத்தான் உரியவை ஆகும். மூன்று ஆண்டுகள் கடுமையாக பேரம் பேசிய பின்னர் இந்த ஜனவரியில் வந்த உடன்பாட்டில் டிலிக்குக் குறிப்பிடத்தக்க வகையில் சலுகைகளைக் கொடுக்குமாறு கான்பரா கட்டயாத்திற்கு உள்ளானது.

இன்றைய மூர்டோக்கின் ஆஸ்திரேலியன் பதிப்பில், வண்ணனையாளர் மார்க் டோட் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்: "டிலியுடன் வணிகம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடைய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு அல்காட்டிரி வெளியேறியிருப்பது நல்ல செய்தியாகும். அவர் பொறுப்பில் இருக்கும்போது பலரும் அச்சத்தினால் அணுக முடியாமல் இருந்தனர்." தன்னுடைய தலையங்கத்தில் அல்காட்டிரிக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த ஆஸ்திரேலியன், ஆஸ்திரேலிய தலைமையிலான ஆக்கிரமிப்பு காலவரையற்று நீடிக்கக்கூடும் என்பதை முன்னிழலிட்டுக் காட்டியுள்ளது: "ஆஸ்திரேலியா கிழக்குத் திமோரில் தன்னுடைய படைகளை பல ஆண்டுகள் தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்திருக்க வேண்டும்" என்று அறிவித்துள்ளது.

அல்காட்டிரி அகற்றப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா கிழக்குத் திமோரின்மீது தன்னுடைய பிடியை கடுமையாக்கி கொண்டுள்ளது. அரைத்தீவின் மீதான சர்வதேச போட்டியை முடிப்பதிலிருந்து விலகி, அது தீவிரமாகும் என்பதுதான் உறுதியாகிவிட்டது. கடந்த வார இறுதியில் ஒரு பேட்டியில் முன்னாள் ஐ.நா. இராணுவப் படைகளின் பொறுப்பை 2000-01ல் கிழக்குத் திமோரில் ஏற்றிருந்த ஓய்வு பெற்ற போர்த்துகிசீய தளபதி ஆல்பிரெடோ அசுங்கோ கடுமையான கசப்பு உணர்வுடன் கான்பராவின் கொள்ளை நோக்கங்கள் பற்றி அறிவித்தார்: "ஆஸ்திரேலியர்களுக்கு உள்ள அக்கறையெல்லாம் பெரும்பாலும் எண்ணெய், எரிவாயு ஆகியவைதான்.. எனவே இத்தகைய அபரிமிதமான செல்வச்செழிப்பு மிக்க வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் இருந்து அதன் அரசியல் முறையைக் கட்டுப்படுத்துவதை விட வேறு எது சிறந்த முறை.?"

ஆஸ்திரேலியாதான் "நாட்டின் [கிழக்கு திமோரின்] முக்கிய எதிரி என்று விவரித்த அசுங்காவோ ஆஸ்திரேலியா "அனைத்தையும், அனைவரையும்" கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்றார். அல்காட்டிரியை அகற்ற விரும்புவதுடன் "அதன் அண்டை நாடுகளின் அபிலாசைகளுக்கு எதிராக கிழக்குத் திமோரை இருத்த வேண்டும் என்று கருதும் எவரையும்" ஆஸ்திரேலியா அகற்றிவிட முயல்கிறது என்றும் கூறினார். கிழக்குத் திமோரில் போர்த்துகீசிய ஆளும் வர்க்கத்தின் விழைவுகளைப் பற்றி வெளிப்படையாக கூறினாலும், டிலியில் ஒரு கைப்பாவை அரசாங்கம் இருக்கும் நிலை தவிர வேறு எதையும் ஹோவர்ட் அரசாங்கம் ஏற்கத் தயாராக இருக்காது என்ற உண்மையைத்தான் அசுங்காவோ சுட்டிக் காட்டியுள்ளார்.

கிழக்கு திமோரில் அரசியல் பெருங்குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பதிலாக அல்காட்டிரி அகற்றப்பட்டுள்ளது சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். செய்தி ஊடகத்தில் செயற்கைத்தனமாக "கிழக்கு பகுதியினர்", "மேற்கு பகுதியினர்" இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சித்தரிக்கப்படுவது, உண்மையில் நாட்டின் ஆளும் உயரடுக்கின் இரு பிரிவுகளுக்கும் இடையேயான பூசலாகும்; இரண்டில் எதுவும் வறிய மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் திறன் உடையவை அல்ல. டிலியில் வரக்கூடிய அடுத்த அரசாங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருந்தாலும்கூட, ஆஸ்திரேலியாவின் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பு தவிர்க்க முடியாமல் வளரும்.

See Also :

கிழக்கு திமோரில் ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்க நடவடிக்கைகள்

Top of page