World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Killing of Sri Lankan general: another sign of civil war

இலங்கை ஜெனரல் படுகொலை: உள்நாட்டு யுத்தத்திற்கான இன்னுமொரு அறிகுறி

By K. Ratnayake
28 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் சிரேஷ்ட இராணுவத் தளபதி திங்களன்று கொல்லப்பட்டமை தீவில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைவதை மேலும் உறுதிப்படுத்துகிறது. அரசாங்கம் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்ட இந்த சம்பவத்தைப் பற்றிக்கொண்ட அதே வேளை, நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியதற்கான பிரதான அரசியல் பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும்.

மிகவும் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படுகொலை சம்பவத்தில், மோட்டார் சைக்கிலில் வந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க பயணித்த வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளார். ஜெனரலும் அவரது இரண்டு இராணுவ உதவியாளர்களும் மற்றும் ஒரு பொதுமகனும் கொழும்பு தேசிய வைத்தியசாலையீல் அனுமதிக்கும் முன் உயிரழந்ததாக அறிவிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பன்னிபிட்டியவில் சுமார் 7.45 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளின் பிரதித் தலைவரான குலதுங்க மூன்றாம் நிலை அதிகாரியுமாவார். புலிகளின் தலைமையகம் உள்ள மற்றும் பிராந்தியத்தில் பெரும்பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள வடக்கு மாகாணத்தின் வன்னிப் பிரதேசத்தில் எல்லா பாதுகாப்பு படையினருக்கும் குலதுங்கவே தளபதியாவார். அவர் 2002 யுத்த நிறுத்தத்திற்கு முன்னதாக புலிகளுக்கு எதிரான சில பிரதான இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார்.

புலிகள் பொறுப்பேற்காவிட்டாலும் இந்தத் தாக்குதலை நிச்சயமாக அவர்களே முன்னெடுத்திருக்க முடியும். தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது புலிகளின் நீண்டகால உரிமைச் சின்னமாகும். ஏப்பிரல் கடைப்பகுதியில், மத்திய கொழும்பில் உள்ள கடும் பாதுகாப்பிற்குள்ளான இராணுவத் தலைமையகத்தின் மீது கவனமாக திட்டமிட்ட நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உயிர் மிகவும் ஆபத்துக்குள்ளாகியது. மேலும் பத்து இராணுவ சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர், அரசாங்கம் உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டுவதாக விமர்சித்த போதிலும் அவர் இந்தத் தாக்குதலில் புலிகளின் பொறுப்பை மறுக்கவில்லை. புலிகளுக்கு சார்பான தமிழ் நெட் இணையம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், "வன்னியில் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளை இலக்கு வைத்து இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை தாக்குதல்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே" இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

குலதுங்க படுகொலை செய்யப்பட்டமை ஒரு தனியான சம்பவம் அல்ல. மாறாக அது கடந்த நவம்பரில் மஹிந்த இராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அதிகரித்து வந்த வன்முறைகளின் ஒரு பாகமேயாகும். தமக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்ற அதன் வழமையான மறுப்புக்களின் மத்தியில், புலிகளின் காரியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை படுகொலை செய்வதன் ஊடாக புலிகளுக்கு ஆத்திரமூட்டுவதில் இலங்கை இராணுவம் அதன் பங்காளிகளான தமிழ் துணைப்படைகளுடன் சேர்ந்து செயற்திறனுடன் ஈடுபட்டுள்ளதற்கான ஆதரங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. 2002 யுத்த நிறுத்தத்தை மீண்டும் தொடங்குவதற்காக ஒஸ்லோவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதை அடுத்து, அண்மைய வாரங்களில் இந்த பிரமாண்டமான இரகசிய யுத்தம் அதிகளவில் பகிரங்கத்திற்கு வந்தது.

பீதியான சூழ்நிலையை உக்கிரப்படுத்துவதற்கும் மற்றும் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட எதிர்த் தாக்குதலுக்கு ஆதரவைத் தூண்டவும் இந்தப் படுகொலையை இராஜபக்ஷ உடனடியாக சுரண்டிக்கொண்டார். "இந்த வன்முறை நடவடிக்கையானது... பொதுமக்களையோ அல்லது பாதுகாப்பு படையினரையோ கிலிகொள்ளச் செய்யவில்லை. அல்லது புலிகள் மற்றும் அதன் பயங்கரவாதத்தில் இருந்து மீள்வதில் இருந்து அவர்களை அச்சமூட்ட முடியாது," என அவர் பிரகடனம் செய்தார். "இந்த கொடூரமான படுகொலைகள் பயங்கரவாத மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளைத் தோற்கடிப்பதற்கான எமது மன உறுதியில் எங்கள் அனைவரையும் மேலும் பலப்படுத்துவதோடு எமது நாட்டில் நியாயமானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தை அடைவதை நோக்கி எம்மை நகர்த்துகிறது," என அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்களப் பேரினவாத தட்டுக்களின் மத்தியில், "நியாமான" சமாதானம் எனக் கருதப்படுவது புலிகளுக்கு சமரசமும் சலுகையும் கிடையாது என்ற இரகசிய குறியாகும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் இராஜபக்ஷவின் அரசியல் பங்காளிகளாகும். இந்தக் கட்சிகளும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிந்துவிட்டு புலிகள் மீது ஒட்டுமொத்த தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றன.

குலதுங்கவின் மரணம் மேலதிக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாக்குப் போக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இராஜபக்ஷவின் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை திங்களன்று கூடிய பின் அரசாங்கம் கொழும்பிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது. புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆழமான வெறுப்பை ஏற்படுத்தும் என்பதையிட்டு கவலை கொண்ட இராணுவப் பேச்சாளர், பாதுகாப்புப் படையினர் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் போது தமது உரிமைகளை மீறுவது பற்றி முறைப்பாடு செய்ய வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த சில மாதங்களாக, 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் அகற்றப்பட்டிருந்த வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் தலைநகர் பூராவும் பல இடங்களில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இப்போது உள்நாட்டு யுத்தத்தின் போது போலவே வாகனங்களும் மக்களும் அதே விதமான தாங்கமுடியாத சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அடக்குமுறை மற்றும் துஷ்பிரயோகத்தின் இலக்காக இருப்பர். இந்த புதிய நடவடிக்கைகள், ஜனவரியில் அதிகாலையில் நடந்த பரந்த தேடுதல் நடவடிக்கை போல், தலை நகரில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு வழி திறக்கும். ஜனவரியில் நடந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் சுமார் ஆயிரம் தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டனர்.

கிழிந்து போயுள்ள யுத்தநிறுத்தம்

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை இன்னமும் உத்தியோகபூர்வமாக அமுலில் உள்ள அதே வேளை, அது நூலில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதன் அனுசரணையாளரான நோர்வே ஜனவரி 8-9ம் திகதிகளில் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடுவதற்காக இரு தரப்பினரையும் ஒஸ்லோவிற்கு அழைத்திருந்தது. பரஸ்பர எதிர்க் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இரு பிரதிநிதிகள் குழுவும் பேச்சுவார்த்தை மேசையில் ஒன்றாக அமர முடியாமல் போனது.

இப்போது கண்காணிப்புக் குழுவின் பாத்திரம் சந்தேகத்திற்குரியதாகி உள்ளது. ஸகன்டினேவிய கண்காணிப்புக் குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட்டுக்கு முதல் மாற்றப்பட வேண்டும் என புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த மாதம் வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது. ஐரோப்பிய ஒன்றிய முடிவை கசப்புடன் விமர்சித்த புலிகள், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இனிமேலும் நடுநிலை வகிப்பார்கள் என கருத முடியாது என வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நோர்வேயும் ஐஸ்லாந்தும் வெற்றிடங்களை நிரப்பும் நிலையில் தாம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளன.

இன்னொரு தடங்களை சேர்க்கும் வகையில், இராஜபக்ஷ கண்காணிப்புக் குழுவின் தலைவராக சுவிஸ் பிரஜையான உல்ஃவ் ஹென்றிக்சனுக்கு பதிலாக நோர்வே பிரஜையை நியமிப்பதை எதிர்த்துள்ளார். சற்றே இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, அரசாங்கமும் மற்றும் அதன் சமாதானச் செயலகமும், புலிகள் மீதான தாக்குதல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை வழங்கிய ஒரு அறிக்கையை கண்காணிப்புக் குழு வெளியிட்டதை அடுத்து, புலிகளுக்கு சார்பாக இருப்பதாக கண்காணிப்புக் குழுவையும் ஹென்றிக்ஸனையும் தாக்கின. ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும், "புலிகள் சார்பு" என நோர்வேயையும் யுத்தநிறுத்த உடன்படிக்கையையும் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்து வருவதோடு சமாதான அனுசரணையாளரான நோர்வேயை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

அரசாங்கத்தின் சமாதான செயலக தலைவரான பாலித கோஹன, "எமது (அரசாங்கத்தின்) ஒப்புதல் இன்றி கண்காணிப்புக் குழுவால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என நோர்வேயை எச்சரித்தார். சமரசம் காண அரசாங்கம் மறுப்பதானது யுத்த நிறுத்த உடன்படிக்கை மீதான கடைசி அடிக்கு சமமானதாகும். இராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கு பிரதிபலித்த புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வன், "கண்காணிப்பு நடவடிக்கைகளை நோர்வே இடைநிறுத்தினால் யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிடும்" என கடந்த ஞாயிறன்று எச்சரிக்கை செய்தார்.

ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய பகிரங்கமாக யுத்தத்திற்காக ஆரவாரம் செய்கின்றன. குலதுங்க கொல்லப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. வெளியிட்ட அறிக்கை "கொலைகார புலி பயங்கரவாதம் இலங்கை மக்களுக்கு பிரதான சவால்," என வகைப்படுத்தியதோடு "இந்த பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக முழு இனமும் அணிதிரள வேண்டும்," என அழைப்பு விடுத்தது.

புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின்" ஒரு பாகமாக நேரடி அமெரிக்க இராணுவ உதவிக்கு ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்தது. "(இலங்கையில்) பயங்கரவாதத்தின் தலைமையகத்தை அழிப்பதே சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும், இது மறுபக்கம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்," என அது பிரகடனம் செய்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய, புலிகளைத் தடை செய்யுமாறும் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் பரந்த அதிகாரங்களை பாதுகாப்பு படைக்கு வழங்கும் நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

தற்கொலைத் தாக்குதலை கண்டனம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சு, "எமது இரு நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான எமது பொதுப் போராட்டத்தில்" இந்தியா இலங்கை மக்களுடன் நிற்கின்றது எனப் பிரகடனம் செய்தது. பேச்சாளர் புதுப்புக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுத்த அதே வேளை, அதே தினம் இந்திய அரசாங்கமானது இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார் கருவிகளை தருவதாக அறிவித்தது.

அமெரிக்காவைப் போல் பகிரங்கமாக யுத்தத்திற்கு பரிந்துரைக்காத இந்தியா, அண்மைய மாதங்களாக கொழும்பு அரசாங்கத்திற்கு மிகவும் வெளிப்படையான ஆதரவாளராகவும் புலிகளுக்கு எதிரானவர்களாகவும் முன்வந்துள்ளது. இந்த நகர்வு, புலிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அதன் பேரினவாத பங்காளிகளுக்கும் உற்சாகமூட்டுவதில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பதோடு, இந்த நிலைப்பாடு நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லும்.

See Also :

இலங்கை அரசாங்கம் சமாதானம் என்ற போர்வையில் உள்நாட்டு யுத்தத்திற்கான நகர்வை துரிதப்படுத்துகிறது

Top of page