World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SLMM report exposes Sri Lankan military's complicity in violence and murder

கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வன்முறைகள் மற்றும் கொலைகளுக்கு இலங்கை இராணுவம் உடந்தையாய் இருந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது

By Deepal Jayasekera
14 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

கொழும்பு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கை, தீவின் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் படுகொலைகளில் இலங்கை இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

பெப்பிரவரியில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் கண்காணிப்புக் குழு இந்த அறிக்கையை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கான தமது ஆதரவை மீள் உறுதி செய்தனர். இந்த அறிக்கை ஏப்பிரலில் ஜெனீவாவில் நடக்கவிருந்த இன்னுமொரு சுற்று பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்படவிருந்தது. ஆனால், இரு பக்கத்திலும் அதிகரித்து வந்த வன்முறைகளின் மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டது.

இதன் விளைவாக, ஜூன் 8-9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடக்கவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுக்களுக்காக இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. அது கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜனர் ஜெனரல் உல்ஃவ் ஹென்ரிக்சனால் கைச்சாத்திடப்பட்டு ஜூன் 4 திகதியிடப்பட்டிருந்த போதிலும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக வெளியிடப்படவில்லை. சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, அதன் உள்ளடக்கத்தைப் பற்றி அரசாங்கம் சீற்றங்கொண்டதோடு இந்த அறிக்கை பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகவோ அல்லது பேச்சுக்களின்போதோ முன்வைக்கப்பட்டால் தமது பிரதிநிதிகளை விலக்கிக்கொள்வதாகவும் அச்சுறுத்தியது. ஏவ்வாறெனினும் பிரதிநிதிகள் ஒஸ்லோவில் சந்திக்கவேயில்லை. (பார்க்க: "இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை குழம்பியது).

இரு தரப்பினரும் யுத்த நிறுத்தத்தை மீறியுள்ளதை மேற்கோள் காட்டும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை, ஒரு எச்சரிக்கை விடுக்கும் இராஜதந்திர ஆவணமாகும். எவ்வாறெனினும், கொழும்பு அரசாங்கம் கவலையடைந்திருப்பது போல் இரு தரப்பினரையும் சமமாக அணுகும் முறை ஒரு சாபக்கேடாகும். அதன் பிரச்சாரத்தைப் பொறுத்தளவில், புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களில் இராணுவத்திற்குத் தொடர்பில்லாத அதே வேளை, தற்போதைய வன்முறைகளுக்கான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் "பயங்கரவாத" புலிகள் மீதே தங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் கண்காணிப்புக் குழு புலிகளுக்கு பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக கண்டனம் செய்து அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கண்காணிப்புக் குழுவின் உத்தியோகபூர்வ ஆவணம் இந்தக் குற்றச்சாட்டுக்களை துளைத்துள்ளதையிட்டு அரசாங்கம் சீற்றமடைந்துள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பாகமாக, கொழும்பு அரசாங்கமானது "இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அரசாங்க பாதுகாப்புப் படைகளைத் தவிர ஏனைய ஆயுதக் குழுக்களோ அல்லது தனி நபரோ ஆயுதம் ஏந்தாமல் இருக்க அல்லது ஆயுதம் ஏந்தி நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க" நடவடிக்கை எடுப்பதாக உடன்பட்டது. அரசாங்கம் ஜெனீவா பேச்சுக்களின் போதும் இந்த விதியை உறுதிப்படுத்தியதோடு புலிகளுக்கு எதிரான துணைப்படைக் குழுக்களின் தாக்குதல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற குற்றஞ்சாட்டுக்களையும் மறுத்தது.

இந்த அறிக்கை, இராணுவத்திற்கும் தமிழ் ஆயுதக்குழுக்களின் கொலைகார நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பை ஸ்தாபிக்கும் ஆதரங்கள் கொண்ட குறிப்பிடத்தக்க பகுதியை வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, புலி விரோத படைகளால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பான ஆத்திரமூட்டல் படுகொலைகளை அடுத்தே வன்முறைகள் மிகக் கூர்மையாக மோசமடைந்தன என்ற உண்மையை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏப்பிரல் 7, திருகோணமலையில் புலிகளுக்கு சார்பான ஒரு முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது: "(பெப்பிரவரியில்) உயர்மட்ட பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதை அடுத்து வன்முறைகளின் மட்டம் தீவிரமாகக் குறைந்திருந்தாலும், 2006 ஏப்பிரல் 7 அன்று திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவரைப் படுகொலை செய்ததை அடுத்து நிலைமை மீண்டும் மிகவும் பதற்றமடைந்தது. இந்தப் படுகொலை அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் வெடிக்கச் செய்ததோடு விசேடமாக கிழக்கில் கைக்குண்டு மற்றும் கண்ணிவெடித் தாக்குதல்களிலேயே இது தொடங்கியது.

இந்தப் படுகொலையில் பாதுகாப்புப் படைகள் சம்பத்தப்பட்டிருப்பதை கண்காணிப்புக் குழு சாடை காட்டியுள்ளது. "பிரதான பொலிஸ் மற்றும் பாதுகாப்பு நிலைகளுக்கு நெருக்கமான இடத்தில் இந்த தமிழ் அமைப்பின் முன்னணி உறுப்பினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதானது சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் இயலுமையைப் பற்றி பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது," என அது சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் அல்லது கடந்த நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வென்றது முதல் புலி ஆதரவாளர்கள் மீதான ஏனைய எந்தவொரு தாக்குதலுடனும் தொடர்புடைய எந்த நபரையும் இலங்கை பொலிஸ் கைதுசெய்திருக்கவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்க முடியும்.

விக்னேஸ்வரனின் கொலை ஒரு தனிப்பட்ட விடயமல்ல. "ஏப்பிரல் 10ம் திகதிக்குப் பின்னர் மட்டும் ஏறத்தாழ குறிவைக்கப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் மட்டும் 43 பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களிலும் இந்தப் படுகொலைகள் பாதுகாப்புப் படையினர் நிரந்தரமாக இருக்கும் இடங்களுக்கு மிக நெருக்கமாகவே இடம்பெற்றுள்ளன. ஆனால், இன்னமும் இத்தகைய கொலைகளுக்கு சாட்சிகள் வழங்க மறுத்து வருகின்றனர்," என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தாக்குதல்களைத் தொடுக்கும் புலி விரோத துணைப்படைகளின் குறிப்பிட்ட விவகாரத்தை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. "கண்காணிப்புக் குழுவால் மூன்று தாக்குதல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இந்தத் தாக்குதல்களின் போது தாக்குதல்காரர்கள் (புலி விரோத நடவடிக்கையில்) இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்தார்கள் அல்லது திரும்பி ஓடினார்கள்: மார்ச் 2 வவுனதீவில் புலிகளின் காவலரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மார்ச் 23 மஹிந்தபுர, பூநகரில் புலிகளின் காவலரன் மீதான தாக்குதல் மற்றும் ஏப்பிரல் 6 பனிச்சங்கேனியில் புலிகளின் காவலரன் மீதான தாக்குதலும் இதில் அடங்கும்."

கருணா குழு (புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழு) அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து இயங்கவில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றுடன் கண்காணிப்புக் குழு நேரடியாக முரண்படுகின்றது. "தெளிவாக அடையாளங் காணப்பட்டுள்ள ஒரே ஆயுதக் குழு கருணா குழுவும் அவர்களின் அரசியல் முன்னணியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுமேயாகும். இந்தக் குழு இலங்கை அரசாங்கத்தின் கூற்றுக்கு முரணாக, மார்ச் மாதத்தில் கிழக்கில் அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இயங்குவது தெளிவாக அம்பலத்திற்கு வந்துள்ளது. கண்காணிப்புக் குழு கருணா ஆதரவளர்களுடனும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடனும் நேரடியாகத் தொடர்புகொண்டதோடு அவர்களது இருப்பும் மற்றும் நடவடிக்கைகளும் அரசாங்க அலுவலர்களால் அடிக்கடி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என அது தெரிவித்துள்ளது.

கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பதாவது: "இலங்கை அரசாங்கம் கருணா குழுவுக்கு செயற்திறனுடன் ஆதரவளித்துக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் பல உள்ளன. கருணா ஆதரவாளர்கள் என அறியப்பட்டுள்ளவர்கள் இலங்கை இராணுவத்தின் முகாங்களுக்கும் மற்றும் முகாம்களில் இருந்தும் நடமாடிக்கொண்டிருப்பதோடு இது பாதுகாப்புப் படையினரும் பொலிசும் சில பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவதை தவிர்க்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதற்கும் ஆதாரமாகும்... பொதுமக்கள் மீதான ஆயுதபாணிகளின் வன்முறைகள் சம்பந்தமான கண்காணிப்புக் குழுவின் விசாரணைகள், வவுனியா மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களுக்கு இராணுவப் புலனாய்வுத் துறையும் இராணுவமும் ஆதரவளிப்பது பலம்வாய்ந்த முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது."

கண்காணிப்புக் குழு ஒரு விசேட சம்பவத்தை மேற்கோள் காட்டியுள்ளது. ஏப்பிரல் 30 அன்று கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் முகாமை புலிகள் தாக்கியதை அடுத்து காயமடைந்த 10 கருணா குழு உறுப்பினர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்களை கண்காணிப்புக் குழு பார்வையிடுவதை இராணுவம் மறுத்தது. இராணுவத்தின் நடவடிக்கைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறுவதோடு கருணா குழுவுடனான அதனது உறவைப் பற்றி கண்காணிப்புக் குழு அறிந்துகொள்வதை தவிர்ப்பதில் இராணுவம் அக்கறையாக இருந்தது என குறிப்பிடப்படுகிறது.

படுகொலைகளில் இராணுவ சிப்பாய்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து கண்காணிப்புக் குழுவின் அணுகுமுறைகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. "அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ரோந்துசெல்லும் போதும் கண்காணிப்புக் குழு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட படுகொலைகளில் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டைப் பற்றி ஏப்பிரல் 29 கண்காணிப்புக் குழு ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டதில் இருந்து, பல சந்தர்ப்பங்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் உள்செல்லும்/வெளி செல்லும் சோதனை நிலையங்களில் செல்வதற்கும் கண்காணிப்புக் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது." கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளவாறு இந்த முடிவுகள் உயர்மட்டத்தில் இருந்து வந்துள்ளன. "தாம் கொழும்பில் இருந்து வரும் கட்டளைகளுக்கு இணங்கவே செயற்படுவதாக பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன." என அறிக்கை குறிப்பிடுகின்றது.

தமது புலன் விசாரணைகளுடன் இராணுவம் ஒத்துழைக்கத் தவறிவிட்டது என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தளவில், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் ஆகிய இரண்டும் குறிப்பாக வவுனியாவில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி கண்காணிப்புக் குழு விசாரணைகளுக்கு வந்த போது கட்டுப்படுகளை விதித்தன. 2005 டிசம்பர் 23 அன்று மன்னார், பேசாலையில் கடற்படையினரின் பஸ்மீதான தாக்குதலை அடுத்து நான்கு பொது மக்கள் காணாமல் போனது சம்பந்தமாக விசாரிப்பது கண்காணிப்புக் குழுவுக்கு மிகச் சிரமமாக இருந்தது. இந்த காணாமல் போன சம்பவத்திற்குப் பின்னால் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கடற்படை இந்த சம்பவத்தில் தெளிவு பெறுவதற்காக கடற்படை கண்காணிப்புக் குழுவுடன் ஒத்துழைக்க முற்றிலும் விருப்பமின்றி இருந்தது.

உண்மையில், கண்காணிப்புக் குழுவின் அறிக்கை இராணுவ சிப்பாய்கள் மீதான புலிகளின் தாக்குதலையும் சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக 88 பேர் உயிரிழந்துள்ளனர். புலிகளின் மறுப்புக்களை நிராகரிக்கும் அது, "தாக்குதல்களின் தொகை, இலக்குகள், பயன்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டம் மற்றும் நில இயல்சார்ந்த அளவுகளும் புலிகளையே சூத்திரதாரிகளாக சுட்டிக்காட்டுகின்றன," என பிரகடனம் செய்துள்ளது. ஜெனீவாவில் ஒப்புக்கொண்டதையும் மீறி தமது படைகளை பெரிதாக்குவதற்காக "சிறுவர்களை படையில் சேர்த்தல் மற்றும் சிறுவர் கடத்தலையும்" உக்கிரப்படுத்தியிருப்பதாகவும் கண்காணிப்புக் குழு புலிகள் மீது குற்றஞ்சாட்டுகிறது.

இந்த அறிக்கை, ஏப்பிரல் 25 மத்திய கொழும்பில் இராணுவத் தலைமையகத்தின் மீதான புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை கண்டனம் செய்ததோடு மே 11 அன்று யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் ஒருவரின் உயிரையும் ஆபத்திற்குள்ளாக்கிய பிரதான கடல் மோதலைத் தூண்டியதற்காகவும் புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. எவ்வாறெனினும், அதே சமயம், இந்தத் தாக்குதல்களுக்கு இராணுவத்தின் இயல்புக்குப் பொருந்தாத மற்றும் உக்கிரமான பிரதிபலிப்பையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. "பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கை ஆயுதப் படைகள் ஏப்பிரல் 25 மற்றும் 26ம் திகதிகளில் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்காக விமானங்களையும் ஆட்டிலரிகளையும் பயன்படுத்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூர் மற்றும் இலக்கந்தை கிராமங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இந்த நடவடிக்கைகளில் சுமார் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்," என அது குறிப்பிட்டுள்ளது.

இராணுவம் மற்றும் அதன் துணைப்படை பங்காளிகள் மீதான வன்முறைத் தாக்குதல்களில் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெளிவுபடுத்துவது என்னவென்றால், அதிகரித்துவரும் வன்முறைகளுக்கான பொறுப்பு, புலிகளை பதில் தாக்குதல் தொடுக்கத் தூண்டுவதற்காக தமிழ் துணைப்படைக் குழுக்களுடன் கூட்டு வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தையும் மற்றும் இராணுவத்தையுமே சாரும் என்பதாகும்.

தனது மொழி மற்றும் அணுகுமுறையில் எச்சரிக்கையாக இருந்த போதிலும் இந்த அறிக்கையானது புலிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டின் எடுத்துக்காட்டாக உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடங்களில் இராஜபக்ஷ வளர்த்துவிட்டிருந்த கட்டுக்கதைகளை துளைத்துள்ளது. தனது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளைத் தீர்க்க இலாயக்கற்ற நிலையில், ஜனாதிபதி தனக்கு முன்னர் இருந்த கொழும்பு அரசியல்வாதிகளைப் போலவே உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே இனவாத பதற்றங்களை கிளறிவிடுவதோடு அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றார்.

Top of page