World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Protests against Bush in India: For an international socialist strategy to fight imperialism

இந்தியாவில் புஷ்ஷிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்: ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்

By the Editorial Board
1 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் வருகைக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்களால் இந்த அறிக்கை விநியோகிக்கப்படும். இந்த அறிக்கையை RTF வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் இருக்கும் நம்முடைய வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த அறிக்கையை பிரதி எடுத்து மிகப் பரந்த முறையில் விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

இந்தியா முழுவதும் வரவிருக்கும் நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் வருகைக்கு எதிராக, மற்றும் இந்திய பூர்ஷ்வா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மேற்கொள்ளும் ஒரு "உலகந்தழுவிய" பங்காளித்தனத்தின் உந்துதலுக்கு எதிராக நடக்கும் அணிகள், ஆர்ப்பாட்டங்களில் பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் பங்குகொள்வர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியுள்ள கொள்ளைக்கார ஆட்சியின் தலைவர்தான் புஷ் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சரியான முறையில் அறிந்துள்ளதுடன், அப்போர்கள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிறுவும் நோக்கத்தை கொண்டது என்றும், அமெரிக்கா இப்பொழுது சிரியா அல்லது ஈரானை அடுத்த இலக்காக அச்சுறுத்திக் கொண்டுள்ளது என்பதையும் அறிவர்.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்திற்கு (United Progressive Alliance UPA) பெரும் திகைப்பு, ஏமாற்றம் ஆகியவை வரும் அளவிற்கு புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக சர்வதேச குண்டர் முறையில் சேருமாறு இந்தியாவை மிரட்டியது மட்டுமில்லாமல், ஈரானில் மற்றும் சிரியாவில் இருந்து இந்தியா தன்னுடைய சக்தி (Energy) தேவைகளை வாங்குவதை தடுக்கவும் முற்பட்டுள்ளது.

உலகின் இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே புதிய நட்பு மலர்வதைப் பற்றி உயர்சிந்தனையாக ஐயத்திற்கு இடமின்றி புஷ்ஷும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் உரைப்பர். உண்மையில், அமெரிக்காவும், இந்தியாவும் பொதுவாகக் கொண்டிருப்பது என்னவென்றால், சமூக சமத்துவின்மையின் பாரிய அதிகரிப்பும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையும்தான். ஆளும் தட்டுக்களின் புதிய தாராளவாத கொள்கைத் திட்டங்களான தனியார்மயமாக்குதல், கட்டுப்பாடுகளை அகற்றுதல், சமூக வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளிலும் தடையற்ற முறையில் சந்தையின் ஆதிக்கத்தை செலுத்த அனுமதித்தல், ஆகியவற்றின் விளைவுதான் இது. மக்களை பொறுத்தவரையில் அரசாங்கமே ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் நடத்தி வருவதையும் கண்ணுறுகின்றனர்.

புஷ் நிர்வாகம் மற்றும் UPA ஆட்சியின் இந்திய - அமெரிக்க மூலோபாய முறையிலான பங்காளித்தனம் நிறைந்த நட்பானது, இந்தியா, வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான வகையில் பிணைக்கப்படுகிறது.

ஆசியாவில் அமெரிக்காவின் நிலைக்கு சீனா ஓர் அச்சுறுத்தலாக வருவதைத் தடுக்கும் முறையில் இந்தியாவை அதற்கு எதிர் அச்சாக நிலைநிறுத்தும் முயற்சியாக இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு அமெரிக்கா மிக ஆக்கிரோஷமான முறையில் முயல்கிறது.

இந்தியா பற்றிய தன்னுடைய கொள்கையில் இருக்கும் சீன-விரோதப்போக்கை பற்றி புஷ் நிர்வாகம் இரகசியமாக எதையும் விட்டுவைக்கவில்லை.

பைனான்சியல் டைம்ஸ்சுக்கு அமெரிக்க உளவுத்துறை மற்றும் புவிசார்-அரசியல் பகுப்பாய்வாளர்கள் வழமையாக 21ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருக்கும் சீனா, இந்தியா இரண்டின் எழுச்சியையும் நிலையையும், 19ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஜேர்மனியும் அமெரிக்காவும் உலகின் மிகப் பெரும் இயக்க சக்தியுடைய தொழில் வல்லரசுகளாக வெளிப்பட்ட தன்மையுடன் ஒப்பிட்டுள்ளனர். அதாவது இத்தகைய புவிசார்-அரசியல் மாற்றங்கள்தாம் கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு அரங்கை அமைத்தது.

தன்னுடைய உலகப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு ஆற்றும் பணியை நிலைப்படுத்தும் அமெரிக்க முயற்சி பற்றி இந்தியா விழிப்புடன் இருந்தாலும், இந்திய உயரடுக்குகள் வாஷிங்டனுடைய ஆதரவு உலக அரங்கில் இந்தியா ஒரு பெரும் நாடு என ஏற்கப்படுவதற்குத் தேவை என்று கவலையுடன் உள்ளனர். ஒரு அணுவாயுதம் கொண்ட நாடு, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்புநாட்டுத் தகுதி, தெற்கு ஆசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் மேலாதிக்கம் நிறைந்த சக்தி என ஏற்கப்பட வேண்டும் ஆகியவை இந்தியாவின் இலக்குகளாகும்.

திட்டமிடப்பட்டுள்ள இந்திய-அமெரிக்க கூட்டுறவில் இரண்டாவது முக்கிய நோக்கம், உலகத் தகவல் தொழில்நுட்பத் துறை, வர்த்தக செயற்பாடுகள், விஞ்ஞான ஆய்வு, உற்பத்திப் பெருக்கமுறை ஆகியவற்றில் இந்தியாவை மலிவுகூலி தொழிலாளர் தொகுப்பாக மாற்றுவதை விரைவுபடுத்த வேண்டும் என்பதாகும். அமெரிக்க, இந்திய பெருவணிகங்களுக்கு இடையே இந்தியா இறுதியில் உலகப் பொருளாதாரத்தில் முழுமையாக இணைக்கப்படுவது பற்றி சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், விலை ஆதரவு, மானியங்களை வழங்குல் ஆகியவை துடைத்துக்கட்டப்பட வேண்டும், பொது உள்கட்டுமானத்தில் வர்த்தகத்திற்கு முக்கிய பங்கு கொடுக்கவேண்டும், 60 சதவிகித மக்கள் நம்பியுள்ள விவசாய பிரிவை விவசாய வர்த்தகத்திற்கு திறந்துவிடப்படவேண்டும், தொழிலாளர் பற்றிய சட்டங்கள் ஒப்பந்த முறை, பணிநீக்கம், ஆலை மூடல் ஆகியவற்றிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் ஆகிய கருத்துக்களுக்கு முன்னுரிமை கோரப்படுகின்றன.

இதனை வேறு வார்த்தையில் கூறினால், அமெரிக்க, இந்திய மூலதனம் இரண்டும் எந்தக் கொள்கைகள் கிராமப்புற இந்தியாவில் பெருந்தீமையான சமூக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனவோ, விவசாயிகள் தற்கொலை எனத் துண்டிவிட்டுள்ள நிலை ஏற்படுத்தியனவோ, நகரங்களில் வேலையின்மை பெருக்கத்திற்கு வகை செய்துள்ளனவோ, அவை இன்னும் தீவிரப் படுத்தப்பட வேண்டும் என்று ஒத்துக் கொள்ளுகின்றன.

இந்தியாவில் அவருடைய பயணத்தின் போது நிழல்போல் பின் தொடரவுள்ள இப் பரந்த மக்கள் எதிர்ப்புக்கள், அமெரிக்க-இந்திய தந்திரோபாய பங்காளித்தனத்தை போலவே முக்கியமான வினா ஒன்றை பொதுநிலையில் எழுப்புகின்றன: ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான உலகந்தழுவிய தாக்குதல் முறை வெற்றியடைவதற்கு எத்தகைய தளத்தை அவ்வியக்கம் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்?

புஷ்-விரோத எதிர்ப்புக்களுக்கு தலைமைதாங்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்டுகளும் (CPI-M) அவர்களது இடது முன்னணியில் கூட்டாளிகளாக இருப்பவர்களும், தொழிற்சங்கத்தினரும், இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் முதலாளித்துவ முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான முறையில் அரசியலில் அணிதிரட்டுவதை பிடிவாதத்துடன் எதிர்க்கின்றனர் என்பதை அப்பட்டமாக முதற்கண் கூறியே தீரவேண்டும்.

மாறாக இடது முன்னணியும், தொழிற்சங்கங்களும் புஷ்ஷிற்கு எதிரான போராட்டங்களை, UPA அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து புவிசார்-பொருளாதார நலன்களுக்காக பெரும் சக்திகளிடையே நடக்கும் போராட்டத்தில் இந்தியா வேறுவித நிலைப்பாட்டை காணவேண்டும் என்றும் UPA ஆட்சிக்கு தாங்கள் வழங்கும் ஆதரவிற்கு ஒரு அரசியல் திரை இடவும் பயன்படுத்திகின்றன.

21 மாதமாக நிலைத்துள்ள UPA அரசாங்கம் புதிய தாராளவாத சீர்திருத்தக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்றும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு திருப்பத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என்று இடது முன்னணி ஒப்புக் கொள்ளுகிறது. ஆயினும்கூட மரபுவழியில் இந்திய முதலாளித்துவத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட UPA கூட்டணி ஒன்றுதான் இப்பொழுது இந்துத்துவ நிலைப்பாட்டைக் கொண்டுள்ள BJP மீண்டும் பதவிக்கு வராமல் இருப்பதற்கு ஒரே வழி என்று கூறுகிறது.

தொழிலாளர்களின் மோசமான விரோதி BJP என்பதில் கேள்விக்கு இடமில்லை. இந்திய முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பிந்தைய தேசியப் பொருளாதார திட்டத்தின் சரிவு, இந்து வலதின் தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்பட்டமை என்பது தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதே ஆகும்; பல தசாப்தங்கள் இக்கட்சி இந்திய அரசியலில் ஓர் ஓரங்கட்டப்பட்டிருந்த சக்தியாகவே இருந்தது.

BJP மற்றும் பல ஜாதியக் கட்சிகள் முக்கிய அரசியல் பங்காளர்களாக 1980 களிலும் 1990களிலும் எழுச்சி பெற்றமைக்கு CPI-M மற்றும் CPI கட்சிகள் பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை பாராளுமன்றமுறை, தொழிற்சங்கப் போராட்டங்கள் என்ற முன்னோக்கிற்கு பிணைத்ததை நேரடியாகப் பொறுப்பாக்கலாம். இரண்டு ஸ்ராலினிச கட்சிகளும் சில நேரங்களில் இந்திய முதலாளித்துவ பிரிவில் எக்கட்சி அல்லது கட்சிகள் "முற்போக்கானது" என்பதில் வேறுபாடுகள் கொண்டிருந்தபோதிலும், எவை நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தன்மை, ஏகாதிபத்திய ஆதரவு ஆகியவற்றிற்கு எதிராக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை பெற்றிருந்த போதிலும், இரண்டுமே இந்திய முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராக ஒடுக்கப்படும் மக்களுக்கு தொழிலாள வர்க்கம் தலைமை தாங்கக் கூடாது என்று வலியுறுத்தித்தான் வந்தன.

இந்த முன்னோக்கை ஒட்டியே, CPI-M மற்றும் CPI ஆகிய இரண்டும் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மூலோபாய பங்காளித்தனத்தை நிறுவும், புதிய தாராளவாத கொள்கை செயற்பட்டியல் என்ற சமூகப் பிற்போக்குக் கொள்கையில் உறுதியாக இருக்கும் அரசாங்கம் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், அதுதான் இதைவிடப் பிற்போக்கான BJP ஆட்சி பதவிக்கு வராமல் தடுக்கும் என்றும் கூறுகின்றன.

இந்தியா உலக சக்தியாவதற்கு இரக்கமற்ற முறையில் அதன் மிகப்பரந்த மலிவுகூலி தொழிலாளர் தொகுப்பு பயன்படுத்தப்பட வேண்டும், மிகப் பெரிய இராணுவமுறை வேண்டும், அமெரிக்கா அல்லது மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டு வேண்டும் ஆகிய கருத்துக்களுக்கு எதிராக இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலை நிறுத்துவதற்கு, இந்தியாவில் உழைக்கும் மக்களிடையே உள்ள மகத்தான சமூகச் சீற்றம், மற்றும் தொழிலாள வர்க்கத் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்பது பலமுறையும் நிகழ்வுகளால் நிரூபணமாகியுள்ளது.

அனைத்து வேலைநிறுத்தங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவை அடக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த புதிய இந்திய எக்ஸ்பிரஸ் ஆசிரிய தலையங்கத்தில் உதாரணம் கூறக்கூடிய இந்திய ஆளும் வர்க்கம் கடந்த செப்டம்பர் மாதம் UPA உடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக நடந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பெருந்திரளான மக்கள் பங்கு பெற்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், இடது முன்னணியோ ஒழுங்குமுறையாக வர்க்கப் போராட்டத்தை அடக்கியுள்ளது. அண்மையில் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தனியார் மயமாக்குதலை எதிர்த்து நடந்த போர்க் குணம் மிக்க வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் வகையில் தொழிற்சங்கங்களுடன் இடது முன்னணி சேர்ந்துகொண்டு UPA ஆட்சி தப்பிப் பிழைப்பதற்கு வகை செய்தது. இது அரசாங்கம் அமைத்துள்ள மேற்கு வங்கத்தில் UPA மற்றும் அதன் முன்னோடியான NDA அரசாங்கங்கள் செய்துவந்த பொருளாதார "சீர்திருத்தங்களைத்தான்" செய்து வருகிறது.

பிற்போக்குத்தனமான UPA வுடன் தொழிலாளர்களை பிணைத்துள்ள முறையில், இடது முன்னணி முதலாளித்துவத்தின் புதிய தாராளவாத கொள்கை செயற்பட்டியலை நடைமுறைக்கு கொண்டுவரும் வகைகளுக்குத்தான் ஊக்கம் தருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அது BJP மற்றும் இழிவிற்குட்பட்ட வகுப்புவாத, ஜாதியக் கட்சிகள் UPA யின் சமூகப் பிற்போக்குத்தனம் நிறைந்த கொள்கைகளுக்கு எதிராக வலுப்பெறவும் உதவியளிக்கிறது.

UPA புஷ் நிர்வாகத்தை அணைத்து நிற்பதற்கு எதிரான பிரச்சாரத்தில், இடது முன்னணியும் தொழிற்சங்கங்களும் இதேபோல் தொழிலாளர்களையும் பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும் முதலாளித்துவத்துடன் கட்டிவைக்க செயல்படுகின்றன. இந்திய அரசாங்கம் "சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை" தொடர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் முன்னாள் பிரதம மந்திரி வி.பி.சிங், மற்றும் வட்டார-ஜாதிய முதலாளித்துவ அமைப்புக்களான சமாஜ்வாடிக் கட்சி போன்ற அமைப்புக்களுடனும், அமெரிக்காவுடனான திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடு இந்திய முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கொள்ளை முறையை தொடர சுதந்திரம் போய்விடும் என்று பயப்படும் அணுசக்தி, இராணுவ-பாதுகாப்பு நடைமுறைகளின் ஆதரவையும் நாடி நிற்கின்றன.

CPI-M, பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கருத்தான பன்முகப் பிரிவு உலகம் (Multi-Polar World) என்ற கருத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. அது வெளிப்படையாக இந்திய அமெரிக்க உடன்பாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து, சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் முக்கூட்டு ஒன்றை இந்தியா அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இதேபோல், CPI-M மற்றும் இடது முன்னணி, குளிர் யுத்த காலத்தில் இந்தியா கொண்டிருந்த அணிசேரா நிலைமையை சுட்டிக்காட்டி அது முற்போக்கான பாரம்பாரியம் என்றும், அதில் இருந்து முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு பெறலாம் என்றும் கூறுகின்றன. (CPI-M கட்சியின் திட்டம் "மொத்தத்தில் நாட்டின் நலன்களுக்கு நல்ல முறையில்" அணிசேரா கொள்கை பொருந்தியிருந்தது எனக் கூறியுள்ளது.)

உண்மையில், "அணிசேரா கொள்கை" என்பது இந்திய முதலாளித்துவத்தின் கருவியாகும். அது சோவியத் ஒன்றியத்திடம் சார்பு கொண்டிருந்தது. அதே நேரத்தில் தொழிற்துறை பொருளாதாரத்தை வளர்க்கவும், ஓரளவிற்கு சர்வதேச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஒப்புமையில் தடையற்று இருக்கவும், தேசியப் பொருளாதார கட்டுப்பாட்டை விரும்பியும், முக்கிய இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துதலை விரும்பவும் செய்தது. அணிசேரா கொள்கை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆயுதமாகவும் இருந்தது. இந்திய பூர்ஷ்வாசியின் முற்போக்கான பாத்திரம் என்ற போலித் தோற்றத்தை முறையாக வளர்க்க அது பயன்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் பல ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெறும் சொல் வலிமை கொடுப்பதற்கும் அது பயன்படுத்தப்பட்டது. ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் மாஸ்கோவுடனான நல்ல உறவுகள் என்பது கம்யூனிஸ்ட் கட்சி நல்ல முறையில் நடப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும் என்று கணக்குப் போட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு CPI உடைய ஆதரவு அப்பட்டமாக இருந்த தன்மையானது அதன் தலைமையில் ஒரு பிரிவை முறித்துக் கொண்டு CPI-M என்று அமைக்க வகை செய்தது. ஆனால், அவர்களும் இதைச் செய்தது முற்றிலும் தேசியவாத அடிப்படையில்தான்; அதன் வரலாறு முழுவதிலும் CPI-M மற்றபடி CPI இன் அடிப்படை கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது: உதாரணமாக ஸ்ராலின் தலைமையில் சலுகை பெற்றிருந்த அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து, "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச கோட்பாடு உட்பட, மேலும் இந்திய முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கை கொள்ளலாம் என்று கூறியதை ஆதரித்தது, 1947ல் தோன்றிய இந்திய நாடு காங்கிரஸ் தலைமையிலான ஏகாதிபத்திய போராட்டத்தின் குறைப் பிரசவம் என்றும் துணைக்கண்டம் வகுப்புவாத வகையில் துண்டாடப்பட்டது மக்களுடைய வெற்றி எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது இன்றைய முக்கிய புள்ளியாக இருக்கின்றது எனக் கூறுதல் ஆகியவை இதில் அடங்கும்.

உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலமும், லியோன் ட்ரொட்ஸ்கியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சோசலிசப் புரட்சிக் கட்சியும் முற்றிலும் மாறுபட்ட போக்கைத்தான் கொண்டிருந்தன.

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும், உலகந்ழுவிய முறையில் உள்ள முதலாளித்துவத்தின் சமூகப் பிற்போக்குத்தனமான தாக்குதலை எதிர்ப்பதற்கும் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு உண்மையான நண்பர்கள் வட அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள்தாம்.

இந்தியாவில் இருக்கும் தொழிலாளர்கள் தங்களை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக திரட்டிக் கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவை பெருக்கும் வகையில் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும். ஜாதிய அடக்குமுறை, நிலப்பிரபுத்துவமுறை மற்றும் இந்தியாவின் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்பட்டிருந்த நிலை மற்றும் காலம் தாழ்ந்துவந்த முதலாளித்துவ முறையின் வளர்ச்சி ஆகியவற்றை உலக சோசலிசப் புரட்சியின் விளைவாகத்தான் முற்றிலும் அகற்றப்படமுடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பொழுது மிகவும் பிடிவாதமான மற்றும் வலிந்து தாக்கும் ஏகாதிபத்திய சக்தியாக உள்ளபொழுதிலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் முழு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டமாக அமையவேண்டியுள்ளதுடன், அதேபோல் வரலாற்று ரீதியாக அது வேரூன்றியுள்ள காலம்கடந்துவிட்ட தேசிய அரசு முறைக்கு எதிராகவும் போராட வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க முன்வருபவர்கள் அனைவரும் உலக சோசலிச வலைத் தளத்தை, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் உலகத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் புத்துயிர்ப்பிக்கும் கருவியாக்க, செயலாற்ற வேண்டும்.

See Also:

இந்தியாவுடனான முக்கிய மூலோபாய "பங்காண்மையை" தொடர புஷ் தெற்கு ஆசியாவிற்கு பயணம்

Top of page