World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Bush secures nuclear accord with India

இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புஷ் உறுதிசெய்கிறார்

By Keith Jones
3 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும், நேற்று புது டெல்லியில், அமெரிக்க உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புக்குள்ளே இந்தியாவிற்கு ஒரு "தனிச்சிறப்பான அந்தஸ்து" கிடைப்பதற்கு பெரிதும் முயலும் வகையில் ஓர் ஒப்பந்தத்தை "முடிவுக் கட்டத்திற்கு" கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தானே முயன்று அணுசக்தி ஆயுதங்களைத் தயாரித்துள்ள நாடான இந்தியா, மற்றும் அந்தவகையில் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ள போதிலும், கடந்த ஜூலையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையை ஒட்டி, 45 உறுப்பு நாடுகள் கொண்ட அணுக்கரு ஆற்றல் அளிக்கும் குழுவிடமும் சர்வதேச அணுசக்தி அமைப்பிடமும் இந்தியாவிற்கு அணுசக்திக்கான எரிபொருளையும் இராணுவமல்லாத அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்பத்தையும் ஏற்றுமதி செய்யும் வகையில் தங்களுடைய விதிகளை திருத்திக் கொள்ளுமாறு வாஷிங்டன் வலியுறுத்தும்.

ஒரு கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மன்மோகன் சிங்குடன் இணைந்து உரையாற்றுகையில் புஷ், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை "வரலாற்றுப் புகழ் வாய்ந்தது" என்று முத்திரையிட்டார். அதன் பின் அது அமெரிக்க தேசிய நலன்களுக்கு உகந்ததாகத்தான் இருக்கும் என்றார்; ஏனெனில் இந்தியாவின் சிவிலிய அணுசக்தித்திறனின் விரிவாக்கம் அந்நாட்டின் ஆற்றலுக்கான இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய தன்மையை குறைக்கும் என்றும் அதனால் உலக எண்ணெய், எரிவாயு விலைகளின் மீதான அழுத்தமும் குறையும் என்றும் அவர் கூறினார்.

ஐயத்திற்கிடமின்றி, உடன்பாட்டின் பின்னணியில் பொருளாதார உள்நோக்கங்கள் உள்ளன. ஒன்று உறுதியானது, அமெரிக்க அணுசக்தி தொழில்பிரிவு இதைப் பெரிதும் பயன்படுத்தி இலாபம் பெறும்.

ஆனால் வாஷிங்டனுடைய உண்மையான நோக்கம், அமெரிக்க இந்திய உறவுகளை, இந்தியா ஒரு "உலக சக்தி" யாக ஆவதற்கு அமெரிக்காவின் உதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், கொண்டலீசா ரைஸ் ஒரு வருடம் முன்னர் தெரிவித்ததற்கேற்ப ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு செல்வதாக உள்ளது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை தக்க வைக்கும் அதன் மூலோபாயத்திற்கு இந்த தெற்கு ஆசிய நாட்டின் ஆதரவை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதன் காரணமாக, அதற்கும் மேலாக, சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு பொருளாதார, இராணுவ, புவிசார் அரசியல் எதிர்எடையாக பயன்படுத்துவதற்கும் புஷ் நிர்வாகம் மிகத் தீவிரமான முறையில் இந்திய நட்பை நாடுகிறது.

"அமெரிக்க-இந்திய உறவில் மாற்றம்" என்பது வரவிருக்கும் நூற்றாண்டில் உலக புவிசார் அரசியல் ஒழுங்கில் "தீர்க்கமான செல்வாக்கை" கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டபொழுது, புது டெல்லியுடனான "உலகந்தழுவிய பங்காண்மை" என்று அது அழைப்பதை உருவாக்குவதற்கு வாஷிங்டன் மேற்கொண்டுள்ள முயற்சிக்கான மூலோபாய உள்நோக்கத்தை பற்றி புஷ் மறைமுகமாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை இரண்டு காரணங்களுக்காக விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறது. அது இந்தியாவை நடைமுறையில் ஒரு அணுவாயுத அரசாக அங்கீகாரம் செய்கிறது; இதையொட்டி இந்தியாவிற்கு உலக வல்லரசு என்ற அந்தஸ்தின் மற்ற கூறுபாடுகள் கிடைக்க வழிகிடைக்கும் என இந்தியாவின் மேற்தட்டு பெரிதும் ஆர்வத்துடன் விரும்புகிறது. ஆற்றல் இறக்குமதிகளின் மீது பெரிதும் நம்பியிருப்பதை சிவிலியன் (இராணுவமல்லாத) அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்ப இறக்குமதி குறைக்குமாதலால், அணுக்கரு ஆற்றல் திட்டங்களின் வளங்களின் பெரும்பாலான பகுதியை அணுவாயுத வளர்ச்சிக்கும் செலவழிக்கலாம் என்பது அடுத்த காரணமாகும்.

1998ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) மீறி, உலக அணுக்கரு ஆற்றல் ஒழுங்கமைப்பிற்குள் நிலவும் சலுகைமிக்க அந்தஸ்தை மறுத்து, அணுவாயுதங்களை வெடித்த நாட்டிற்கு அமெரிக்கா ஏன் "வெகுமதி" கொடுக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு, புஷ் விடையிறுத்தார்: "விஷயங்கள் மாறுகின்றன, காலங்கள் மாறுகின்றன."

அமெரிக்க நடைமுறைக்குள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை பற்றியும் பின்னர் ஜனாதிபதி தாக்கிப் பேசினார்: அவர்கள் சீனா இதை ஒரு தூண்டுதலாக பார்க்கும் எனக் கருதுகின்றனர் என்றும் அது ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் எதிராக சர்வதேச ஆதரவு பெற முயலும் வாஷிங்டனின் முயற்சிகளை கீழறுக்கும் என்று அவர்கள் நினைப்பதாகவும் புஷ் கூறினார். இவ்வொப்பந்தத்திற்கு தங்கள் நாட்டு 'தேசிய சட்டமன்றத்தை இணங்க வைப்பது' கடினம் என்று கருத்துரைத்த பின்னர், "காலத்தோடு மாறுவதற்கு சில மனிதர்களுக்கு விருப்பமே இல்லை" என்று புஷ் குறைகூறினார்.

கட்டாயமாக கேட்கப்பட்டிருக்க வேண்டிய வெளிப்படையான வினாவை ஒருவரும் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை: NPT யில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஈரான் அதன் சிவிலியன் அணுக்கரு ஆற்றல் திட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு தன்னுடைய உரிமையை தொடர அனுமதிக்கப்படக்கூடாது என வாஷிங்டன் கோருகின்ற நிலையில், உலக அணுசக்தி கட்டுப்பாட்டுக் குழு எவ்வாறு இந்தியாவை அணுக்கரு ஆற்றல் ஆயுதம் கொண்டதாக ஆக்குவதற்கான அமெரிக்க முயற்சியில் விலக்கு அளிக்கலாம்? என்பதே அவ்வினா.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, புஷ்ஷும் மன்மோகன் சிங்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை கொண்டுவந்துவிட்ட அறிவிப்பை தெரிவிக்கையில் அவர்கள் ஒரு வெற்றி வாகை சூடிய பெருமிதத்துடன் இருந்தனர் என்று கூறப்படுகிறது. புஷ் நிர்வாகம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலமையிலான UPA இரண்டிடமிருந்தும் ஜனாதிபதியின் இந்திய வருகையின்போது ஓர் உடன்பாட்டை காணவேண்டும் என்ற தீவிரத்துடிப்பு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய அச்சம் இந்தியாவில் பெருகிவரும் எதிர்ப்பு, அமெரிக்க அரசியல் உயரடுக்கினரின் கணிசமான விமர்சனம் இவற்றிற்கிடையில் ஒப்பந்தம் காணமுடியாமற் போய்விடுமோ என்று இருந்தது. புஷ்ஷின் உயர்மட்ட ஆலோசகர்கள் புது டெல்லியில் உள்ள அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் ஒப்பந்ததத்தின் சில விதிகள் பற்றி அவர்கள் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு முதலில் ஆப்கானிஸ்தான், பின்னர் இந்தியா வரும் வரை பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

புஷ், மன்மோகன் சிங் மற்றும் அவர்களுடைய அதிகாரிகள் இந்தியாவின் அணுசக்தித் திட்டம் சர்வதேச கட்டுப்பாடு, ஆய்வுகள் இவற்றிற்கு உட்படுத்தப்பட்ட முறையில் சிவிலிய வகையில் பிரிக்கப்படுதல், பின்னர் ஒரு மூடப்பட்ட இராணுவப் பிரிவு என ஒன்றைக் கொள்ளுதல் என உடன்பாட்டின் "இறுதி வடிவம்" அடையப்பட்டுவிட்டது எனக் கூற ஆர்வத்துடன் இருந்தாலும், உண்மையில் இன்னும் பல கூறுபாடுகள் பேச்சுவார்த்தைகளில் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன.

IAEA உடன் தன்னுடைய சிவிலிய திட்டத்தை ஆய்விற்கு உட்படுத்துவது பற்றி விவரித்து ஒரு சிறப்பு உடன்பாட்டை இந்தியா தயாரிக்க வேண்டும்; புஷ் நிர்வாகம் அணுசக்தி தேவைகள் அளிப்புக் குழு மற்றும் அமெரிக்க தேசியச்சட்ட மன்றம் இரண்டையுமே நம்பிக்கைக்கு உட்படுத்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுக்க வைக்க வேண்டும்; இதனால் ஒருவேளை வரவிருக்கும் கால கட்டத்தில் வாஷிங்டன் புது டெல்லியை சில திருத்தங்கள் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.

அண்மையில் NSG யில் சேர்ந்துள்ள சீனா புஷ் மற்றும் மன்மோகன் சிங் அறிவிப்புக்கு விடையிறுக்கும் வகையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள எந்த அணுசக்தி ஒப்பந்தமும் "சர்வதேச அணுஆயுத பரவல் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது; இப்பொழுது அப்படி இல்லை. பாகிஸ்தானிலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு இல்லை; ஏற்கனவே இந்தியாவின் பொருளாதார, இராணுவ வலிமையினாலும் தனக்கும் அதற்கும் இடையே உள்ள பெருத்த ஏற்றத்தாழ்வினாலும் அதன் அச்சங்கள் பெருகியுள்ளன. இந்தியாவிற்கு மட்டுமேதான் அணுக்குரு ஆற்றல் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிவிலக்கு பொருந்தும் என்று அமெரிக்கா வலியுறுத்திக் கூறியதில் கோபமடைந்துள்ள பாகிஸ்தானிய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் கடந்த மாதம் கூடுதலான சீன உதவியை பாகிஸ்தானிய சிவிலிய அணுசக்தித்திட்டத்திற்கு கேட்பதற்கு பெய்ஜிங்கிற்கு பறந்து சென்றார்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிரிட்டனை தளமாகக் கொண்ட எகானமிஸ்ட் என்னும் இரு ஏடுகளுமே இந்த வாரம் பெரும் வல்லரசுகள் அணுவாயுதங்களில் தாங்கள் கொண்டிருக்கும் ஏகபோக உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் உரிமைகளை காற்றில் பறக்கவிட்டு, இந்தியாவிடம் அதிக ஆதரவு பெறுவதற்கு புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளன. டைம்ஸ் அறிவித்துள்ளதாவது: "சிவிலிய அணுசக்தி நுட்பத்தை புது டெல்லியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உடன்படுவதன் மூலம் அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்த சட்டத்தை சுற்றி ஓடிக்கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு கட்டிய கடந்த ஆண்டு ஜனாதிபதி புஷ் தவறாக தலைமை வகித்து எடுக்கப்பட்ட முடிவானது, இந்தியாவை வளர்த்தல் மூலம் சீனாவை அமெரிக்கா கட்டுப்படுத்தல் என்ற மூலோபாயம் சற்று கூடுதலாகவே வாஷிங்டன் செல்லுகிறது என்பதைக் காட்டியுள்ளது."

வாஷிங்டனுக்கு கடந்த ஜூலையில் மன்மோகன் சிங் வருகைதந்தபோது செய்துகொண்ட தற்காலிக ஒப்பந்தத்திற்கு எதிரான விமர்சனம் கணிசமாக இந்தியாவில் மாதக்கணக்கில் பெருகிவருகிறது. அரசாங்கத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் குறிப்பான பகிரங்க எச்சரிக்கைகள் முன்னாள், தற்பொழுதைய இந்திய அணுசக்தித் திட்டத் தலைவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது; அமெரிக்கா பேச்சு வார்த்தைகளை பயன்படுத்தி இந்தியாவின் அணுவாயுதத் திறனை செயலற்றதாக்கிவிடும் நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தின்பால் இந்திய அணுசக்தித்திட்டம் நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவை அமெரிக்க-- ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து IAEA ல் ஈரானுக்கு எதிராகச் சேருமாறு அச்சுறுத்தி தன்விருப்பப்படி நடக்கச்செய்யும் வகையில் வாஷிங்டன் கொடுத்த அழுத்தங்களுக்கும் பரந்த முறையில் சீற்றம் வெளிப்பட்டுள்ளது.

இறுதி ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் செய்தி ஊடகத் தகவல்கள் வாஷிங்டன் தன்னுடைய சில கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கியுள்ளது என்று கூறுகின்றன. இந்தியாவின் விரைவு ஈனுலை ஆய்வுத் திட்டம் சர்வதேச கட்டுப்பாடு, ஆய்வு ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட மாட்டாது என்று தெரிகிறது. புஷ் நிர்வாகம் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த 22 அணுசக்தி நிலையங்களில் 18 சிவிலிய திட்டத்தின் கீழ் உள்ளவை எனப் பகுக்கப்படலாம் என்று கூறியிருந்தாலும், பின்னர் இதை 14ஆகக் குறைப்பதற்கு அது ஒப்புக் கொண்டுள்ளது. புஷ் நிர்வாகத்துடன் 2002 ல் ஒரு அணுசக்தி ஒப்பந்தம் தேவை என்று இந்து மேலாதிக்க பாரதிய ஜனாதா கட்சி தலைமையிலான முந்தைய கூட்டணி திட்டமிட்டிருந்தபோது இந்த எண்ணிக்கைதான் ஒப்புக்கொள்ளப்பட்டது.

வாஷிங்டன் பின்வாங்கியுள்ளது போல் பார்த்தால் தோன்றும் இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படவேண்டும்; புஷ் நிர்வாகம் எப்படியும் தன்னுடைய புவிசார் அரசியல் மூலோபாயத்தில் இந்தியாவை இன்னும் நெருக்கமாகப் பிணைக்க வேண்டும் என்பது ஒரு கருத்து; கடந்த ஜூலையில் ஆரம்ப இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் புஷ் நிர்வாகம் எந்தப் பொது விதியிலும் காணப்படாத விஷயங்களை பேரம் பேசுகின்றது என்பதை விரைவில் காட்டியது. IAEA கூட்டத்தில் ஈரானுடன் தான் கொண்டுள்ள எதிர்ப்பிற்கு இந்தியா ஆதரவைத் தந்தால்தான் இந்த ஒப்பந்தம் முறையான அங்கீகாரம் பெறும் என்று பலமுறையும் பகிரங்கமாக புஷ் நிர்வாகம் கூறிவந்தது; இதன் விளைவாக ஈரானில் இருந்து குழாய்த்திட்டத்தின் மூலம் எரிவாயுவை துணைக் கண்டத்திற்கு கொண்டுவரும் பாகிஸ்தானுடன் குழாய் வழிப்பாதை அமைப்பதற்கான திட்டத்தை கைவிடும்படி இந்தியாவை அது மிரட்டும் முயற்சியை கொண்டது.

அதன் வெள்ளிக் கிழமை பதிப்பில், அணுசக்தி உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் கோரிக்கை பற்றி மிகவும் வெளிப்படையாக குறைகூறியுள்ள இந்து நாளேடு "கடினமான பேரம்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. வியாழக் கிழமை ஒப்பந்தம் எந்தவித துணை நிபந்தனைகளுடனும் வரவில்லை என்ற வெகுளித்தனமான கருத்தை அது கூறியது: "அணுக்கரு ஆற்றல் பேரம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பரந்த அளவில் மூலோபாயக் கூட்டுக்கு அடிப்படையாக மாற்றப்பட்டுவிடக் கூடாது என்பது மிக முக்கியமானது ஆகும்" என்று எழுதியது. அது மேலும் கூறியது: "புது டெல்லி போலவே அக்கறையுடன் செயல்பட்டு வாஷிங்டனும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமாறு செய்யவேண்டும்; மன்மோகன் சிங் அரசாங்கமும் அமெரிக்க ஆலோசனையான ஈரானுடனான ஆற்றல் உறவு இல்லாமல் இப்பொழுது செயல்படலாம் என்பதை ஏற்கத் தேவையில்லை."

புஷ் நிர்வாகத்தின் கீழ், உலக புவிசார் அரசியலில் அமெரிக்கா மிகவும் ஆக்கிரமிப்பு நோக்கத்தையும், ஈவிரக்கமற்ற சக்தியாகவும் வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு அமெரிக்காவின் இராணுவ வலிமையை பயன்படுத்தி பொருளாதாரத்தில் தனது சரிவுநிலையை சமன் செய்வதற்கு முயன்றுவருகிறது. உலகின் அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியாவிற்கு விலக்கு அளிக்க அது முன்வருகிறது என்று கூறினால், அத்தகைய ஆசைகாட்டி முன்னே இழுத்துச்செல்லும் முறைகளின் மூலம் இந்தியாவை தன்னுடைய புவிசார் அரசியல் மூலோபாயத்துக்கும் பேரவாவிற்கும் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அது கொண்டிருப்பதுதான் காரணமாகும்.

மன்மோகன் சிங்குடன் சேர்ந்து கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மியான்மருடைய மனித உரிமைகள் மீறல்களை பற்றி புஷ் மிகக் கடுமையாக விமர்சித்தார்; விரைவில் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அங்கு இராணுவ வலிமையுடன் ஆளும் பர்வேஷ் முஷாரப்பின் புகழை துதிபாடுவோம் என்ற வெளிப்படையான விந்தையை மறந்தார் போலும். எப்படிப்பார்த்தாலும், புஷ்ஷின் குறுக்கீடு இந்தியா மியான்மரில் இருந்து ஆற்றலை எதிர்பார்க்கும் திட்டத்தை தொடரக் கூடாது என்பதாகத்தான் இருந்தது.

தன்னுடை பங்கிற்கு மன்மோகன் சிங் புஷ்ஷின் தயவை நாடப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். அணுசக்தி ஒப்பந்தத்தை அடைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி காட்டிய தலைமை முயற்சிக்கு அவர் பெரும் பாராட்டை தெரிவித்தார்; அதன் பின்பு புஷ்ஷும் அவர் நிர்வாகமும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களை நியாயப்படுத்திய வகையில் செய்த செயல்களையும் மந்திரம் போல் உச்சரித்தார்: "ஜனாதிபதி புஷ் அவருடைய பயங்கரவாதத்திற்கெதிரான பலமான நிலைப்பாட்டிற்காக பெரிதும் மதிக்கப்படுகிறார்" என்று கூறிய சிங், "மிகக் குறிப்பிடத்தக்க வகையில் பயங்கரவாதம் வேருடன் களையப்படவேண்டும் என்பதில் நாங்கள் உடன்பாடு கண்டுள்ளோம்; இந்தியா பயங்கரவாதத்தினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது." என்றும் கூறினார்.

புதன்கிழமையன்று, அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது தெளிவாக இல்லாத நிலைமையில், கொண்டலிசா ரைஸ் புஷ்ஷின் வருகை அணு ஒப்பந்தம் பற்றி மட்டும் அல்ல என்பதை வலியுறுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்: "இது ஒரு வணிக வளர்ச்சி; இது விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியது; விவசாயத்தில் இருந்து இது தொடங்கியது. இது மிகப் பரந்த உறவாகும்; ஆழ்ந்த தன்மையுடையது; ஈரான் பற்றிய ஒருமித்த கருத்தில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது IAEA ஆளுநர்கள் குழுவில் விளக்கிக்காட்டியது போல், சுனாமிக்கு செய்தது போல்... உலகம் முழுவதும் நன்மை பெறும் என நான் நினைக்கிறேன். எனவே இங்கு இன்னும் பலவும் கூடுதலான முறையில் உறுதிபெறும்."

உண்மையில், புஷ் நிர்வாகமும் UPA அரசாங்கமும், இந்திய, அமெரிக்க முதலாளிகளும், இந்தியாவின் மனித, இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தையும் தகர்ப்பதற்கு மிகத் தீவிரமான முறையில் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றனர். அணுசக்தி ஒப்பந்தம் தவிர, புஷ்ஷும் சிங்கும், வணிகம், இராணுவம், அறிவியல் உறவுகளை விரிவாக்கம் செய்ய தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் வரவிருப்பதாகவும், அவற்றில் மிகப் பெரிய விவசாய வணிக பெருநிறுவனங்களான Monsanto போன்றவை ஒரு பெரும் பங்கு கொண்டு இந்தியாவின் விவசாய ஆராய்ச்சியை மேம்படுத்தும் என்றும் அறிவித்தனர். உலக சோசலிச வலைத்தளம் வரவிருக்கும் நாட்களில் இந்த உடன்பாடுகள் பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கும்.

See Also:

இந்தியாவில் புஷ்ஷிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்: ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்

இந்தியாவுடனான முக்கிய மூலோபாய "பங்காண்மையை" தொடர புஷ் தெற்கு ஆசியாவிற்கு பயணம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுச் சேரலில் இந்தியாவின் பங்கு, இந்திய - அமெரிக்க உறவுகள் மீதான விவாதத்தை பற்ற வைத்துள்ளது

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு ஈரான்பற்றி முறையீடு செய்யுமாறு IAEA வை அமெரிக்கா மிரட்டுகிறது

ஒரு "உலக வல்லரசாக'' ஆவதில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தந்து ஊடாடுகிறது

Top of page