World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Bush administration seeks funds for regime change in Iran

ஈரான் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் நிதிகள் கோருகிறது

By Peter Symonds
18 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

டெஹ்ரான் ஆட்சியை அரசியல் ஸ்திரமற்றதாக்குவதற்காக, மிகவும் அதிகளவில் நிதி கோரிக்கைகளை ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தில் புதன்கிழமையன்று புஷ் நிர்வாகம் ஒரு கூடுதலான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

செனட் வெளிவிவகார கமிட்டியில் உரையாற்றிய அரசுத் துறை செயலாளர் கொண்டாலிசா ரைஸ் அமெரிக்கா, ஈரானை ''செயலூக்கத்துடன் எதிர்கொள்ளும்'' என்று அறிவித்தார். மற்றும் அந்த நாட்டிற்கு வெளியிலும் உள்ளேயும் டெஹ்ரான்-எதிர்ப்பு பிரச்சாரத்திற்காகவும் மற்றும் எதிர்க்கட்சி குழுக்களை ஆதரிப்பதற்காகவும் அதிகப்படியாக 75 மில்லியன் டாலர்கள் நிதியைக் கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு இந்த நடவடிக்கைக்காக 10 மில்லியன் டாலர்களே ஒதுக்கப்பட்டது.

ஈராக் மீதான சட்ட விரோதமான போரில் முடிவான அமெரிக்க பிரச்சாரத்துடன் வெளிப்படையாக இது தொடர்பு கொண்டுள்ளதால், ரைஸ் ''ஆட்சி மாற்றம்'' என்ற பதத்தை கவனமாக தவிர்த்து விட்டார். ஆனால், தற்போதைய ஈரான் ஆட்சியை கவிழ்ப்பதும் நீக்குவதும் தான் புஷ் நிர்வாகத்தின் நோக்கம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஈரானில் ஜனநாயகத்தை வளர்ப்பதற்காக என்ற ரைசின் கூற்றுக்களின் முட்டாள்தனத்தை ஈராக்கிற்குள் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களை ஈராக்கில் கொடூரமாக ஒடுக்குவதில் அமெரிக்க துருப்புக்கள் ஈடுபட்டிருக்கும் நேரத்திலேயே அமெரிக்க தூதர் சல்மே கலீல்ஷாத் வாஷிங்டனின் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஒரு புதிய பொம்மை ஆட்சியை ஈரானில் உருவாக்குவதற்கு பின்னணி முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஈரானில் ''ஜனநாயகத்திற்கான'' புஷ் நிர்வாகத்தின் ஆதரவு டெஹ்ரானின் அணுத் திட்டங்களுக்கு அதன் எதிர்ப்பை போன்று வளங்கள்-செறிந்த பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்திற்கான அமெரிக்க அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு சாக்குப் போக்கு மட்டுமே இருக்கிறது. வாஷிங்டனைப் பொறுத்தவரை டெஹ்ரானில் ''ஒரு ஜனநாயக அரசாங்கம்'' என்பதன் பொருள், ஒரு அமெரிக்க-சார்பு ஆட்சியாகும். அது நாட்டின் அதிகளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை அமெரிக்காவின் பெரு நிறுவனங்களுக்கு திறந்து விடுவதும், உலக நாணய நிதியத்தின் கட்டளைப்படி சந்தை சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதும் மற்றும் அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கொத்தடிமை முறையில் ஆதரிப்பது என்பதாகும்.

1990 கள் முழுவதும் ஈராக்கில் இருந்து புலம்பெயர்ந்த குழுக்களான வாஷிங்டனின் ஆதரவாளர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு சமாந்தரமாக, அதிக நிதி ரைசினால் கோரப்படுகிறது. முன்னாள் பாத்திஸ்ட் குண்டரான இயத் அல்லாவி மற்றும் மோசடி குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட அஹம்மது சலாபி ஆகியோருடன் CIA நெருக்கமாக பணிபுரிந்து, அவர்களுக்கு நிதியளித்து தூண்டிவிடப்பட்ட எதிர்ப்பும், ஈராக்குள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியும் தோல்வியைக் கண்டது. அடுத்த ஈராக் அரசாங்கத்தில் இந்த இரண்டு நபர்களுக்கும் முக்கிய பதிவிக்காக கலில்சாத் தற்போது உறுதியளிக்க முயற்சித்தாலும் எந்த குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவும் அவர்களுக்கு கிடையாது.

ஈரானிலுள்ள வாஷிங்டனின் கூட்டணியாகக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் அதே போன்றதொரு இழிவுற்ற சாதனையை கொண்டவர்கள் ஆவர். அவர்களில் முன்னாள் சர்வாதிகாரி ஷா ராஸா பலவியின் (Shah Reza Pahlavi) குடும்பத்தோடு கூட்டணியுடைய முடியாட்சிக் குழுக்கள் மற்றும் ஈரானின் மக்கள் முஜாஹீதினும் (MEK) அடங்கியுள்ளன. ஒரு குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்பான MEK 1979 ல் ஷா ஆட்சியை வெளியேற்றியதை தொடர்ந்து ஈரானில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியை ஆதரித்தது. ஆனால், அந்த அமைப்பின் மீது புதிய பழமைவாத மதவாத ஆட்சி திரும்பியதும் அதன் தலைவர்கள் ஈராக்கிற்கு தப்பி ஓடினர். ஈரானுக்குள்ளிருந்து தாக்குதல்கள் நடத்தி விட்டு தப்பி ஓடும் நடவடிக்கைகளை MEK மேற்கொண்டு வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதரவையும் இந்த அமைப்பு நாடியது. சுதந்திரச் சந்தை கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு மேற்கு நாடு-சார்பு இயக்கமாக தன்னை மறுவார்ப்பும் அது செய்து கொண்டது.

தற்போது MEK அமெரிக்க அரசுத் துறை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சென்ற மாதம் ரைஸ் அந்த அமைப்போடு பணியாற்றுவது அமெரிக்க கொள்கையல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் MEK யை ''பயங்கரவாதிகள்'' என்பதிலிருந்து ''சுதந்திரப் போராளிகள்'' என்று மாற்றுவதற்கு ஏற்கனவே நகர்வுகள் ஆயத்த நிலையில் உள்ளன. புதன் கிழமையன்று நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொம் டேன்கிரீடோ MEK யை பயங்கரவாதிகள் பட்டியலில் வைப்பதற்கான முடிவு முந்திய கிளிண்டன் நிர்வாகம் ''முல்லாக்களுக்கு வழங்கிய ஒரு லஞ்சம்'' என்று குறிப்பிட்டு, அது மாற்றப்படும் என்று கோடிட்டுக்காட்டினார்.

ஈரானுக்குள் தொழிற்சங்க எதிர்க்கட்சியோடு தொடர்பு வைத்துக் கொள்ள புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது. AFL-CIO அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும் மற்றும் CIA விலும் ஒரு இழிபுகழ் பெற்ற அங்கமாக செயற்படுகிறது. தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் சிறந்த நிலைமைகளுக்காகவும் டெஹ்ரான் பேருந்து ஓட்டுனர்கள் நடத்திய ஒரு போராட்டத்தை தன் கையில் AFL-CIO எடுத்துக் கொண்டது. இந்த வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவம் பல தசாப்தங்களாக தனது சொந்த உறுப்பினர்களின் வேலை வாய்ப்பு மற்றும் நிலைமைகள் சிதைக்கப்படுவதற்கு தலைமை வகித்து வந்ததுடன், உலகம் முழுவதும் தொழிலாளர்களின் துன்பத்தை அலட்சியப்படுத்தியும் வந்தது. டெஹ்ரான் பேருந்து ஊழியர் தொழிற்சங்கம் ஒடுக்கப்படுவதற்கு எதிராக இதர நாடுகளின் 17 தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு சென்ற புதன் கிழமையன்று ஒரு கூட்டுக் கண்டனங்களை இத் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்ய திடீரென்று முடிவு செய்தது.

இந்த முயற்சிகள் எளிதாக சிதைந்துவிடக்கூடும். ஈரானுக்குள் மதவாத ஆட்சிக்கு எதிரான விரோதப்போக்கு உடனடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் திட்டங்களுக்கு ஆதரவாக மாறிவிடாது. மூத்த ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதி நிர்வாகத்தின் போது ஒரு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆய்வாளராகயிருந்த ரேமாண்ட் டான்டர் அமெரிக்க ஆதரவு குழுக்கள் ''சேர்ந்திருப்பதனால் கரிபூசப்பட்டு விடும்'' என்று எச்சரித்தார். ''நிர்வாகம் பணத்தை பகிரங்கமாக எதிர்க்கட்சி குழுக்களுக்கு தருமானால்'' அது ஈரானின் சுப்ரீம் தலைவரையும் [ஆயத்துல்லா அய்ல் காமேனி] அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அஹமதினேஜாத்தையும் வலுப்படுத்துவதாகவே அமைந்து விடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

நவீன-பழமைவாத விமர்சனங்கள்

ஈரான் மீதான புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு பிரதான விமர்சனம் அதிதீவிர வலதுசாரிகளிடமிருந்து வருகிறது. குறிப்பாக நவீன-பழமைவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வருகிறது. அவர்கள் ஈராக் மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்காக போராடினர். இந்த நவீன- பாசிச பிரிவுகள் ரைசின் இராஜதந்திர முயற்சிகளை நகைப்பிற்குள்ளாக்குகிறது. மற்றும் ஈரானின் அணு வசதி நிலையங்களுக்கு எதிராக ஆகாயத் தாக்குதல்களை நடத்துகின்ற பென்டகனின் திட்டங்கள் பயனற்றவை மற்றும் போதுமானவை அல்ல என்றும் விமர்சிக்கின்றன.

நாடாளுமன்ற நிதிகளுக்கான ரைசின் வேண்டுகோளின் ஒரு பகுதி இந்த வலதுசாரி விமர்சகர்களை சமாதானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முன்னணி குடியரசுக் கட்சியின் செனட்டரான சாம் பிரெளன்பேக் இந்த நகர்வை முன் கூட்டியே ஆக்கப்பூர்வமாக பிப்ரவரி 2 அன்று நவீன பழமைவாத அமெரிக்க எண்டர்பிரைஸ் அமைப்பில் (American Enterprise Institute) உரையாற்றினார். ''ஈரானுக்குள் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு'' நாடாளுமன்றம் நிதியை 10 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் மற்றும் ஈரானுக்கு நிதியளிப்பதை உலக வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும், பிரெளன்பேக் மேலும் செல்லவில்லை என்பதற்காக கண்டிக்கப்பட்டார். அமெரிக்க எண்டர்பிரைஸ் அமைப்பின் ஆய்வாளரான மைக்கேல் லீடன் ''இந்த உரையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் பிரெளன்பேக் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார். அதை அவர் ஆதரிக்கிறார். அப்படியிருக்கும் போது அதை ஏன் பகிரங்கமாக அவர் சொல்லவில்லை. ஏன் அவர் சன்டோரம் மசோதாவை ஏற்றுக் கொள்ளவில்லை? என்று அறிவித்தார். சென்ற ஆண்டு செனட்டர் ரிக் சன்டோரம் முன்மொழிவு செய்த ஈரானின் சுதந்திரம் மற்றும் அதற்கான ஆதரவு சட்டம், புஷ் நிர்வாகம் ஈரானில் ''ஆட்சி மாற்றத்திற்கான'' திட்டம் ஒன்றை மேற்கொள்ள வகை செய்தது.

சன்டோரம் சட்டம் 1998ல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஈராக் விடுதலை சட்டத்திற்கு இணையானது. அது சதாம் ஹூசேன் ஆட்சியை வெளியேற்றுவதை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஓர் அங்கமாக்கியது. மற்றும் இராணுவ உதவி உட்பட ஈராக்கில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் குழுக்களுக்கு 97 மில்லியன் டாலர்கள் வழங்க வகை செய்தது. அவற்றின் ஆதரவாளர்கள் தந்துள்ள தகவலின்படி, நடப்பு ஈரான் சுதந்திரம் மற்றும் ஆதரவு சட்டத்திற்கு 42 செனட்டர்களும் 333 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தருகின்றனர்.

ஈரானில் ஆட்சி மாற்ற ஆதரவு நிதிகளுக்கான ரைசின் கோரிக்கையை பொதுவாக நவீன பழமைவாதிகள் வரவேற்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று லீடன் வெளியிட்டிருந்த கருத்தில்: ''நடுக்கத்தின் பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஈரானில் புரட்சியை ஆதரிப்பதற்கு இந்த நிர்வாகம் விருப்பம் கொண்டிருக்கிறது என்பதற்கு முதலாவது உற்சாகமூட்டும் சமிக்கைகளை நாம் தற்போது பெற்றிருக்கிறோம். அரசு செயலர் ரைஸ் வெளியுறவு சேவையை பாராட்டத்தக்க வகையில் சீர்திருத்திய பின்னர், இப்போது நாடாளுமன்றம் ஈரானில் சுதந்திர நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கூடுதலாக 75 மில்லியன் டாலர்களை தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இது உண்மையிலேயே நல்ல செய்தியாகும். குறிப்பாக செனட் வெளியுறவுகள் குழுவில் புதன் கிழமையன்று அவர் அளித்த வாக்குமூலத்தில் நாம் ஏற்கனவே ஈரானின் தொழிற்சங்கங்களை ஆதரிக்க துவங்கிவிட்டோம். மற்றும் சில அவர்களது தலைவர்களுக்கு பயிற்சியைக் கூட தந்து வருகிறோம் என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.''

ஈரானில் ஒரு போலிப் புரட்சியை தூண்டிவிடுவதற்கான திட்டம் தோல்வியடையுமானால் இந்த வட்டாரங்கள் நேரடி இராணுவ நடவடிக்கையை விரும்பும். பழமைவாத Human Events இணையத் தளத்திற்கு பிப்ரவரி 10 ல் ஒரு பேட்டியளித்த முன்னாள் குடியரசு கட்சி பேச்சாளரான நியூவிட் கிங்ரிச் மாற்றீடுகள் தோல்வியடையுமானால், ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிப்பதாக தனது ஆதரவை அறிவித்தார். படைக்கான போதிய காரணத்தை கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: ''இது [ஈரான்] அத்தகையதொரு உயர்ந்த ஆபத்துக்கள் நிறைந்தது என்று நான் நம்புகிறேன். எனவே இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஆட்சி மாற்றப்படவிருக்கிறது என்று சொல்லுகின்ற ஒரு மூலோபாயத்தை நாம் வைத்திருப்பது முற்றிலும் பகுத்தறிவுக்கு மாறாய் இருக்கிறது.''

மார்ச் மாத துவக்கத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பின் (IAEA) ஒரு முக்கிய கூட்டம் நடப்பதில் பதட்டங்களை அதிகரிப்பதை எண்ணமாகக் கொண்டு கடைசியாக நிதிக் கோரிக்கை வந்திருக்கிறது. பிப்ரவரி 4 ல் நிறைவேற்றப்பட்ட ஒரு IAEA தீர்மானத்தின்படி, ஈரான் அதன் யுரேனிய செறிவூட்டத் திட்டங்களை முடக்கி வைக்க சம்மதிக்கவும் IAEA வுடன் முழுமையாக ஒத்துழைக்கவும் தவறுமானால் அது ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு சாத்தியமான தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆய்விற்கு விடப்படும்.

சென்ற வாரம் ஈரானுக்கு எதிரான விமானப் படைத் தாக்குதல்கள் தொடர்பான திட்டங்கள் திட்டமிட்டு கசியவிட்டதைப்போல், ரைசின் இந்த அறிவிப்பானது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க வேண்டும் என்று அழுத்தங்கள் தருவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதில் தெளிவான அச்சுறுத்தல் என்னவென்றால், புஷ் நிர்வாகம் சர்வதேச ஆதரவு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களை பின்தொடர்வதற்கு தேவையானது என்று கருதுகின்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கும். கிங்ரிச் மற்றும் பிறர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால், வாஷிங்டனின் நடவடிக்கைகளின் மாற்ற இயலாத தர்க்கவியல் மற்றொரு சட்ட விரோத ஆக்கிரமிப்பு போர் அமையும் என்பதாகும்.

Top of page