World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Millions of workers and students strike against Gaullist government

பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கில் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலைநிறுத்தம்

By Rick Kelly and Antoine Lerougetel
29 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

முதலாளிகள், இளந்தொழிலாளர்களை வேலையில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் எந்தக் காரணமும், இழப்பீட்டுத் தொகையும் இன்றி பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" (சிறிணிசிஷீஸீtக்ஷீணீt ஜீக்ஷீமீனீவீகக்ஷீமீ மீனீதீணீuநீலீமீ) சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 2ல் இருந்து 3 மில்லியன் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர்.

குளிரும் ஈரப்பதமும் இருந்த நிலையில் 700,000 மக்கள் அணிவகுத்துச் சென்ற மிகப் பெரிய ஊர்வலம் பாரிசில் நடைபெற்றது. Marseille இல் அமைப்பாளர்களின் மதிப்பீட்டின்படி 250,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்; Bordeaux இல் 100,000, Toulouse இல் 80,000, Nantes இல் 70,000, Grenoble இல் 60,000 என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை இருந்தது. இத்தகைய எண்ணிக்கை மார்ச் 18 அன்று CPE க்கு எதிராக நடந்த முந்தைய தேசிய நடவடிக்கை நாள் கூட்டத்தை விட இருமடங்கு ஆகும்.

பல தொழில்களில் இருந்தும் தொழிலாளர்கள் நேற்றைய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாரிஸ் மற்றும் ஏனைய 75 நகரங்களிலும் பேரூர்களிலும், பேருந்து, இரயில்வே, மெட்ரோ நிறுத்தங்கள் பொதுப் போக்குவரத்து பணிகளை பாதிப்பிற்கு உட்படுத்தின. மூன்றில் ஒரு பங்கு விமானப் போக்குவரத்து பணிகள் இரத்து செய்யப்பட்டுவிட்டன; விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஏர் பிரான்சின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால், மற்றவையும் கால தாமத்திற்கு ஆளாயின. வேலை நிறுத்தம் செய்த ஏனைய பொதுத்துறை ஊழியர்களுள் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் Gaz de France SA and Electricite de France SA ஆற்றல்துறை ஊழியர்களும் அடங்குவர். அச்சிடும் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் நடைபெற்றமை பிரான்சின் நாளாந்த செய்தித்தாள்களை அச்சிடாமல் பண்ணியது, அதேவேளை அரசு செய்தி வானொலி நிலையம் France-Info முன்பே பதிவு செய்யப்பட்ட இசையை ஒலி பரப்பிற்று.

தனியார்துறை தொழிலாளர்களும் கணிசமான அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர்; இளந்தொழிலாளர் பலரும் முதல் தடவையாக வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான உயர்நிலை, பல்கலைக்கழக மாணவர்களும் மீண்டும் நாடு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். முக்கிய பல்கலைக்கழக மாணவர் சங்கமான UNEF, பிரான்சின் 84 பல்கலைக் கழகங்களில் 56 எதிர்ப்புக்களினால் மூடப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது. அனைத்து உயர்நிலை பள்ளிகளில் 25 சதவிகிதம், நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அரசாங்கத்திற்கு மக்களுடைய எதிர்ப்பின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது; அத்துடன் தொழிலாளர்கள் நிலைமை மீதான அரசாங்கத்தின் தாக்குதலை தோற்கடிக்கவேண்டும் என்ற பிரெஞ்சு மக்களின் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது. வில்ப்பனும் ஜனாதிபதி ஜாக் சிராக்கும், உண்மையில் பிரான்சின் ஆளும் உயரடுக்கு முழுவதும் மிகவும் பலவீனமுற்றும் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளன. Le Monde மற்றும் France2 தொலைக்காட்சியும் நடத்திய கருத்துக் கணிப்பு, நான்கு சதவிகிதத்தினர் மட்டுமே CPE மாற்றப்பட வேண்டாம் என்று கூறுவதாகவும் மூன்றில் ஒரு பங்கினர்தான் பிரதம மந்திரியை ஆதரிப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த நெருக்கடியானது, சிறிணி எதிர்ப்பு இயக்கம், ஆளும் நிர்வாகத்தை அகற்றி அதற்குப் பதிலாக உண்மையில் பிரெஞ்சு தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் நலன்களை பிரதிபலிக்கும் அரசாங்கத்தை நிறுவ வேண்டிய தேவையை எழுப்பியுள்ளது. அத்தகைய போராட்டம் ஒரு புதிய, சுதந்திரமான சர்வதேச சோசலிசக் கட்சி தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட வேண்டிய அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட முடியும். பாரிசில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் WSWS அறிக்கையான பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது http://www.wsws.org/tamil/articles/2006/mar/290306_FrCPEStat.shtml என்பதின் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை வினியோகித்தனர். அதில் இந்த முன்னோக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளபடி, சிராக்-வில்ப்பன் நிர்வாகத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கம் முழு பிரெஞ்சு "இடது", தொழிற்சங்கங்கள், சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் "தீவிர இடது" என அழைத்துக் கொள்ளும் குழுக்களிடம் இருந்து முறித்துக் கொள்வதை அவசியமாகக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கள் தங்களால் முடிந்தவரை CPE எதிர்ப்பு இயக்கம் அரசாங்கம் மற்றும் அதன் வலதுசாரி இயக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்கு பாடுபடுகின்றன. அவர்களுடைய முக்கிய அக்கறையே பிரான்சின் உறுதிப்பாட்டை காக்கவேண்டும் என்பதுதான்.

சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு உடைய UNEF தலைவர் Bruno Julliard, தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை பற்றி சுருக்கமாக Europe 1 வானொலி பேட்டியில் கடந்த திங்களன்று கூறியதாவது: "அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் நான் பங்கேற்கவில்லை; ஏனெனில் நாங்கள் அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கத்தை அமைக்கவில்லை. டொமினிக் டு வில்ப்பன்மீது ஒரு தோல்வியை சுமத்த நான் விரும்பவில்லை -- எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ... இயக்கத்தின் முடிவில் ஒரு தோற்றவர், ஒரு வெற்றிபெற்றவர் என்று வருவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு தேவையானது இப்படி திரண்டுவந்துள்ளதற்கு ஒரு முடிவு வேண்டும். விவாதம் வேண்டும் எனக் கோருகிறோம்-- இரு அணியில் எவரும் அவமானப்பட வேண்டாம். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழிகாண்போம்."

பிரான்சின் "இடது" வில்ப்பனுக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தவேண்டும் என்று முயலுதல் ஸ்தாபனமாய் நிறுவப்பட்டுள்ள கட்சிகள் உண்மையில் அவருடைய திட்டத்துடன் வேறுபாடுகளை காணவில்லை என்று பொருள்படுவதைத்தான் பிரதிபலிக்கிறது. பிரெஞ்சு அரசியல் நடைமுறையிலேயே இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பல தசாப்தங்கள் பாடுபட்டு தொழிலாள வர்க்கத்தால் பெறப்பட்ட ஆதாயங்கள் இழக்கப்பட வேண்டும் என்றும் அவை "சுதந்திர சந்தையின்" கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்றும் ஒருமித்த உணர்வு உள்ளது. பிரான்சின் முதலாளித்துவ அமைப்பு அதன் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்களுக்கு எதிராக சர்வதேச போட்டியை ஊக்கமாக கொள்ளுவதற்கு தொழிலாளர்களின், ஊதியங்கள், நிலைமைகள் ஆகியவை முறையாக தாழ்த்தப்பட்டாக வேண்டும். விவாதத்தின் ஒரே விஷயம் அத்தகைய தேவையான நடவடிக்கைகள் மக்களுடைய எதிர்ப்பை தூண்டிவிடாமல் எப்படி செயல்படுத்தப்படலாம் என்பதுதான்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள "இடதில்" இருந்து முறித்துக் கொண்டு தங்களுடைய சொந்த, சுயாதீன சோசலிச கட்சியைக் கட்டியமைப்பது என்ற தேவைதான் CPE எதிர்ப்பு இயக்கத்தின் முன்வைக்கப்பட்டுள்ள உடனடிப் பணியாகும். இது இன்னும் காலதாமதப்படுத்தப்பட்டால், கூடுதலான வகையில் இயக்கம் காட்டிக்கொடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுவிடுவதற்கான ஆபத்து பெருகும்.

CPE திரும்பப்பெறப்பட மாட்டது என்பதில் வில்ப்பன் உறுதியாக உள்ளார். தேசிய பாராளுமன்றத்தில் நேற்று பேசுகையில் அவர் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதில் சில கூறுபாடுகள் மாற்றப்பட வேண்டும் என்பதை பற்றி வேண்டுமானால் பேசத் தயார் என்று கூறியுள்ளார்; சீர்திருத்தம் முற்றிலும் கைவிடப்படும் என்பதை அவர் செயல்படுத்த தயாராக இல்லை.

இந்த நெருக்கடி ஆளும் உயரடுக்கின் உட்பிரிவுகளில் இருந்தே ஒரு புதிய அணுகுமுறையை காண வேண்டும் என்ற கோரிக்கைகளை கொண்டு வந்துள்ளது. உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி அறிவித்தார்: "சமூகப் பேச்சு வார்த்தை என்பது அனைத்து சீர்திருத்தத்தின் வெற்றிக்கும் இன்றியமையாத நிபந்தனை ஆகும்." இதையொட்டி அனைத்து வயதுப் பிரிவு குழுக்களுக்கும் ஒரே மாதிரியான வேலை ஒப்பந்தம் வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். "பின்வாங்குவதற்கு என்ற வழியைக் காணமால், தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் விவாத மேசைக்கு வருமாறு அனுமதிக்கும் வழியை நாம் காணவேண்டும்" என்று சார்க்கோசியின் ஆலோசகரான Eric Woerth விளக்கினார். MEDEF என்னும் வணிகக் குழுவின் தலைவரான Laurence Parisot, தான் CPE நிறுத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்; பிரான்சின் அரசியலமைப்புக் குழு நாளை CPE இன் சட்டபூர்வத்தன்மை பற்றி தீர்ப்பை அளிக்க உள்ளது; இது சட்டத்தை தள்ளி வைக்கக்கூடும் எனத் தெரிகிறது; இதை ஒட்டி அரசாங்கம் சட்டத்தை மாற்றங்களுடன் வேறுவடிவில் கொண்டுவரக்கூடும்.

சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிற்சங்கங்கள் அத்தகைய தீர்ப்பு பெரும் வெற்றி என்று பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை; அதைப்பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை நிறுத்திவிடும். உண்மையில் CPE திரும்பப்பெறப்படுவதோ அல்லது வில்ப்பனுக்கு பதிலாக அரசியல் ஸ்தாபனத்தில் இருந்து வேறு ஒருவர் பதவிக்கு வருவது என்பதோ தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான வலதுசாரித் தாங்குதலுக்கு தோல்வி என்பதைக் குறிக்காது.

இதற்கிடையில் அரசாங்கம் CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை அதிகரித்துள்ளது. நேற்றைய எதிர்ப்பு அணிக்கு முன்பு மூத்த போலீஸ் அதிகாரிகளை சார்க்கோசி சந்தித்து, "முடிந்த அளவு நிறைய குண்டர்களை, அதாவது சட்டத்தை மீறுபவர்களை நீங்கள் கைது செய்யுங்கள்" என்று உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்; பாரிசில் மட்டும் 4,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகரின் வறிய புறநகர்ப்பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஏராளமான இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்தி, தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

குண்டர்கள் குழுக்களால் வன்முறை, திருட்டுக்கள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன; இதைத்தவிர போலீசாருக்கும் ஆர்பாட்டங்களில் சிறு பிரிவினருக்கும் இடையே பாரிசிலும் ஏனைய நகரங்களிலும் பூசல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. பாரிஸ், Rouen, Grenoble இன்னும் மற்ற நகரங்களிலும் கலவரத்தடுப்பு போலீசார் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தியுள்ளனர். நேற்று மொத்தத்தில் 387 பேர், பெரும்பாலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், பாரிசில் மட்டும் பாதிக்கும் மேலானோர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* * *

WSWS நிருபர்கள் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் பல தொழிலாளர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

"என்னுடைய உயர்நிலைப்பள்ளி lycee Dorian இப்பொழுது ஒரு வாரமாக முற்றுகைக்கு உட்பட்டுள்ளது" என்று Vincent Assailly கூறினார்: "பெரும்பாலான மாணவர்கள் இதில் தீவிர தொடர்பு கொண்டுள்ளனர். பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது."

"விட்டுவிடுவதற்கு வில்ப்பன் தயாராக இல்லை; ஆனால் இவ்வளவு பெரிய வகையில் மக்கள் திரண்டு எழுந்துள்ளபோது அவர் ஏதேனும் செய்தே தீர வேண்டும். தற்போதைக்கு வெறும் தைரியப் போக்கைத்தான் அவர் காட்டுகிறார். உண்மையில் அவர் பயப்படுகிறார்; அவமானத்தை தாங்க முடியாது; பிடி அவரை விட்டு நழுவுகிறது; ஆனால் அவர் பின்வாங்கப் போகிறார், ஏனெனில் அரசாங்கம் நிலைக்குமா என்பது கேள்விக்கு உரியதாகிவிட்டது."

"இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கும் CPE க்கும் அப்பால் செல்லவேண்டியது தேவை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் சந்தையின் தர்க்கத்தை நிராகரித்துள்ளனர்; அது நம்மையும் பொருட்களாகத்தான் பார்க்கிறது; நம்முடைய இழப்பில் கொழுத்த பங்கு வைத்திருப்பவர்களை இன்னும் கொழுக்க வைக்கிறது; ஆனால் இயக்கத்தின் ஒரு பகுதி போராட்டம் இன்னும் கூடுதலாக போகவேண்டும் என்று விரும்புகிறது. இளைஞர்கள் மட்டும் இல்லை: தொழிலாளர்களும் கூட பொதுவாக இருக்கும் பாதுகாப்பு தன்மையை நிராகரிக்கின்றனர். உண்மையில் எங்களுடைய வாழ்வு வெறும் பொருட்கள் போன்று இருப்பதை நிறுத்த வேண்டும் என்றால், முதலாளித்துவ அமைப்புடன் முற்றிலும் ஒரு முறிவைக் காண வேண்டும். ஆனால் எல்லா ஆர்ப்பாட்டக்காரர்களும் இப்படி நினைக்கவில்லை; நான் அப்படி நினைக்கிறேன்."

"பல இயக்கங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு தன்மை என்பது கொடூரமான முறையில் இல்லாமல் உள்ளது. உலகம் முழுவதும் நாடுகள் தங்களை பற்றிக் கவலை கொண்டுள்ளன; தங்கள் பிரச்சினைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளன; இது வெட்ககரமானது ஆகும். தேசிய அடிப்படை பற்றிப் பேசலாம்; ஆனால் உள்ளூர் அளவில் கூட நாம் சரியாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்தப் பிரிவுகளில் இருந்து வலைப்பின்னல்களை உருவாக்கி உலக அளவில் செயல் படவேண்டும். உண்மையிலேயே உலகைப் பாதிக்கும் நோய்களை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், அதற்கான திறவுகோல் உலக அளவில் பொதுப் பணிகளை தோற்றுவிக்க வேண்டும்; உண்மையான சமூகப் பணிகளாக இவை இருக்க வேண்டும்; வெறும் அஞ்சல் அலுவலக முத்திரை போல் இருக்கக்கூடாது; உணவு, இல்லம், பண்பாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்க வேண்டும். அதுதான் பூமியில் வசிப்பவர்களை எதிர்காலத்தை அச்சமில்லாமல் எதிர்கொள்ளச் செய்யும். நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பிரச்சினைதான்."

தனியார் துறையில் ஒரு தகவல் தொழில்நுட்ப தொழிலாளராக பணியாற்றும் Matthieu Grimbert, WSWS உடன் பேசினார்: "ஐந்தாண்டுகளாக நான் தொழிலாளியாக இருந்து வருகிறேன். இன்று நான் இளைஞர்களுக்கு ஆதரவாக வந்துள்ளேன்; பாதுகாப்பற்ற தன்மையில் அவர்கள் வாழ்வது நிறுத்தப்படவேண்டும்; நாளுக்குநாள் அந்நிலைமை மோசமாகத்தான் பிரான்சில் போய்க்கொண்டிருக்கிறது. CPE பிரச்சினை பற்றி இப்பொழுதுதான் முதல்தடைவையாக நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளோம்; நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து முதல் தடவையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளேன்.

"இந்தப் போராட்டம் CPE மட்டும் இல்லாமல் அதற்கு அப்பாலும் செல்லுகிறது; உலக நிலைமைக்கும், பிரான்சில் உள்ள நிலைமைக்கும் எதிராகச் செல்லுகிறது; இந்நாட்டில் தொடர்ந்து சரிவுதான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் எப்பொழுதுமே தொழிலாளர்கள் உரிமை, சமூக நலன்கள் ஆகியவற்றை தாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அவ்வாறு அவர்கள் செய்வதை நாம் அனுமதிக்க முடியாது; கூடுதலான அளவில் எங்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலைப் பாதுகாப்பின்மைதான் வரும்; ஒன்று வேலையற்று இருப்போம் அல்லது குறுகிய கால ஒப்பந்தங்கள்தான் வரும். எனவேதான் நாங்கள் CPE ஐ அரசாங்கம் பின்வாங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இதில் CPE ஐ விடக் கூடுதலானது சம்பந்தப்பட்டுள்ளது.

"பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு குழுவுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். அனைத்திற்கும் இப்பொழுது நாம் போராட வேண்டும். அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு நான் ஒப்புதல் கொடுக்கிறேன். இளைஞர்கள் கூறுவதை அது கேட்பதில்லை; நாட்டில் நடப்பதுடன் தொடர்பு இல்லாத வகையில் அது செயல்படுகிறது. வில்ப்பன் இல்லாத அரசாங்கம் கூட ஏதும் செய்யமுடியாது; அதுவும் தன்னுடைய மற்றும் தன்னுடைய முதலாளிகளின் நலன்களுக்காகத்தான் செயல்பட முடியும்; எனவே அரசாங்கம் மாற்றப்பட வேண்டும். நாட்டைப் பொருளாதாரம் ஆளுகிறது, அரசியல் வாதிகளை பொருளாதாரம் ஆளுகிறது என்று நம்மை அவர்கள் நம்பவைக்க முயலுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல என்று நான் நம்புகிறேன், நினைக்கிறேன். அரசியல் வாதிகள் மேசையில் அடித்துக் கூறவேண்டும், "இல்லை; பொருளாதாரம் ஒன்றும் நாட்டை நடத்தவில்லை; இது பற்றி ஏதேனும் கண்டிப்பாகச் செய்யப்படவேண்டும். இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில் இன்னும் கூடுதலான பாதுகாப்பின்மை, மகத்தான வேலையின்மை ஐரோப்பா முழுவதும் இருக்கும். இது ஒன்றும் பிரெஞ்சுப் பிரச்சினை அல்ல; ஐரோப்பிய பிரச்சினை ஆகும்.

"2002ல் துரதிருஷ்டவசமாக நான் சிராக்கிற்கு வாக்குப் போட்டேன். அதைப் பற்றி கடுமையாக வருத்தப்படுகிறேன். பதவிக்காலத்தில் சிராக்கின் தன்மை கொடூரமானது. எனக்கு கூடுதலான வயதும் அனுபவமும் இருந்திருந்தால், பிரான்சில் அரசியல் ஸ்தாபனத்தில் இருந்து முற்றிலுமாக சுயாதீனமாக தீவிர புறக்கணிப்புக்கான உங்களுடைய பிரச்சாரத்தை ஆதரித்திருப்பேன். அப்பொழுதிருந்த நிலையில் நான் வேறு ஏதும் செய்வதற்கில்லை. வேறுவழியின்றி சிராக்கிற்கு வாக்குப் போட வேண்டும் என்று கருதினேன். வேறு ஒரு மாற்றீடு இருந்திருந்தால், அதைப் பற்றி எடுத்துக் கொண்டிருப்பேன்."

See Also:

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது

பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக திரள்வதற்கு தயாராகின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

1936ம் ஆண்டு பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்

பிரான்ஸ் : மே-ஜூன் 1968ம் இன்றும்

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page