World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president recruits union leaders to police public sector workers

இலங்கை ஜனாதிபதி அரசாங்க ஊழியர்களின் ஒழுங்கை நிலைநாட்ட தொழிற்சங்கத் தலைவர்களை திரட்டுகிறார்

By Vilani Peiris
22 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசாங்க ஊழியர்கள் கடந்த மாதம் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அடுத்து வந்த ஒரு வாரத்திற்குள், பிரதான அரசாங்க அமைச்சுக்களில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்க இணைப்புச் செயலாளர் பதவிகளை நிரப்புவதற்காக 21 தொழிற்சங்க தலைவர்களை திரட்டியுள்ளார். அவர்களது தொழிலின் விபரங்கள் "அரசாங்கத்தை காக்கும்" தேவை பற்றிய குறிப்பையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், நிலையான சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தை கீழறுத்து அடிபணியச் செய்வது பிரதான எடுத்துக்காட்டாகும்.

1980களின் பின்னர் அரசாங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரதான கைத்தொழில் நடவடிக்கையான இந்த ஒரு நாள் வேலை நிறுத்தமானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. அரசாங்கத்தோடு இணைந்த தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபற்றுவதை தடுப்பதற்காக முயற்சித்த போதிலும், சுமார் 300,000 தொழிலாளர்கள் தமது 65 வீத சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக வேலைத் தளங்களில் இருந்து வெளியேறினர். சுமார் 200 சுயாதீன சங்கங்களின் கூட்டமைப்பான அரசாங்கத்துறை சம்பள ஆய்வுக்கான தொழிற்சங்க கமிட்டி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியை பெற்ற இராஜபக்ஷ, அரசாங்க ஊழியர்களின் பிரச்சாரம் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளதும் ஆதரவை ஈர்க்கக் கூடும் என்பதையிட்டு கவலை கொண்டுள்ளார். உழைக்கும் மக்கள் மத்தியில் விலைவாசி அதிகரிப்பு சம்பந்தமாக, குறிப்பாக எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்து கட்டணம், அதேபோல் தொழில் மற்றும் வாழ்க்கை தரம் மீதான அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சம்பந்தமாக ஏற்கனவே பரந்த எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவுகிறது.

அரசாங்கத்துறை சம்பள ஆய்வுக்கான தொழிற்சங்க கமிட்டியின் தலைவர்கள், மார்ச் 30 உள்ளூராட்சி சபை தேர்தல்களில் வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ள யோசனை தெரிவித்தபோது, கோபாவேசமாக பிரதிபலித்த இராஜபக்ஷ, "பொறுப்பின்மைக்காக" அவர்களை பகிரங்கமாக தாக்கினார். மார்ச் 22, சுதந்திர முன்னணியோடு இணைந்த தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்த அவர், 21 இணைச் செயலாளர்களின் பதவிகளை ஸ்தாபிப்பதற்காக அனுமதி வழங்கினார். அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளில் இராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) அதேபோல் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் அடங்குவர்.

இந்தக் கூட்டம், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இராஜபக்ஷவுக்காக பிரச்சாரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அரச சேவை தொழிற் சங்க சம்மேளனத்தின் அலுவலருமான டபிள்யூ.எச். பியதாசவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு ஒரு பெருத்த சம்பளத்துடன் சாரதியுடன் ஒரு வாகனமும் சேர்த்து அரசிற்கு சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியில் ஆணையாளர் பதவி ஒன்று கொடுக்கப்பட்டு ஏற்கனவே கணக்குத் தீர்க்கப்பட்டிருந்தது. ராவய செய்திப்பத்திரிகையின் படி, இந்த இணைப்பு செயலாளர்கள் ஒரு அரசாங்க நிர்வாக அலுவலருக்கு கொடுக்கப்படும் ஊதியமான 23,750 ரூபாய்களை ஆரம்பத்தில் பெறுவார்கள். இந்தத் தொகை சாதாரண தொழிலாளி ஒருவரின் சம்பளத்தின் மூன்று அல்லது நான்கு மடங்காகும்.

இராஜபக்ஷவுடனான சந்திப்பு நடந்து மறுநாள், தேர்தலை புறக்கணிப்பதற்கன அரசாங்கத்துறை சம்பள ஆய்வுக்கான தொழிற்சங்க கமிட்டியின் அழைப்பை எதிர்ப்பதற்காக ஸ்ரீ.ல.சு.க தொழிற்சங்கத்தின் தலைவர் அலவி மெளலானாவும் பியதாசவும் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தனர். இராஜபக்ஷவையும் சுதந்திர முன்னணியையும் வெட்கமின்றி பாதுகாத்த பியதாச: "நாம் உழைக்கும் மக்கள் என்ற வகையில், உழைக்கும் மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு செயற்படுவதில்லை," என பிரகடனம் செய்தார். சம்பள ஆய்வு தொழிற்சங்க கமிட்டி ஏப்பிரல் 3 நடத்திய இன்னுமொரு போராட்டத்திற்கு அவர்களது தொழிற்சங்கம் ஆதரவளிக்க மறுத்துவிட்டது.

இணைப்பு செயலாளர் பதவிகளில் பல ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளரும் மற்றும் ல.ச.ச.க துணைச் செயலாளருமான ஜகத் ஜேமச்சந்தர விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கு நியமனம் பெற்றுள்ளார். இலங்கை சுயாதீன அரசாங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் டுடர் ரணசிங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நியமனம் பெற்றுள்ளார்.

ரணசிங்க தன்னிடம் "கடமைகளின் பட்டியலே" இருப்பதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்த போதிலும், "அது அரசாங்கத்தை பாதுகாப்பதே" என்பதையும் ஏற்றுக்கொண்டார். அமைச்சுக்குள் தொழிலாளர்களின் அரசியல் நடவடிக்கை பற்றி, குறிப்பாக "எந்தவொரு தொந்தரவான நடவடிக்கைகள்" பற்றியும் அறிவிப்பதும் இந்தக் கடமைகளில் அடங்கும். கடந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இவ்வாறு 64 பதவிகளை கொண்டிருந்ததாக கூறி இந்தத் தொழிலை தான் ஏற்றுக்கொண்டதை நியாயப்படுத்தினார்.

ஏனையவர்களும் புதிய நியமனங்களை பெற்றுள்ளார்கள். அவர்களில், அரசாங்க தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் டி.எம். அபேரட்ன புகையிரத அமைச்சுக்கும், இலங்கை சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் டி.சி. வீரரட்ன பிரதமர் அலுவலகத்திற்கும், ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு ஹேமசிரி ஜயலத்தும் மற்றும் இலங்கை அரசாங்க தொழிற்சங்க சம்மேளனத்தில் இருந்து பந்து ஜெயசிங்ஹ சுகாதார அமைச்சுக்கும் நியமனம் பெற்றுள்ளனர்.

அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்துகொண்டுள்ள இந்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் பிரச்சாரத்தை நிறுத்துமாறும் இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள புதிய சம்பள ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறும் அழைப்புவிடுக்கின்றன. ஆயினும், ஊடகங்களின்படி, இந்த அறிக்கை இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட பிரேரணைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இதன் விளைவாக, இந்த புதிய பிரேரணைகள் தொழிலாளர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட பிரேரணைகளில் இருந்து கணிசமானளவு வேறுபடுவதாக தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கோரிக்கைகளுக்கு அமைய, சம்பளமானது பல அரசாங்கத்துறை தொழில்களில் உற்பத்தி இலக்குகள் மற்றும் "மீளாய்வுடன்" இறுக்கி பிணைக்கப்படும்.

நியமிக்கப்பட்டுள்ள 21 இணைப்பு செயலாளர்களும், இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் பொலிஸ்காரர்களாகவே செயற்படுவர். இத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பியதானது, இன்றைய தசாப்தத்தில் தொழிற்சங்களின் நிலை பற்றிய சமிக்ஞை மட்டுமன்றி, இப்போது எந்தவிதத்திலும் குறைவின்றி ஸ்ரீ.ல.சு.க யின் அடிவருடிகளாக இருக்கும் ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடுமாகும்.

இந்த நிமயனங்களை வழங்குவதற்கு இராஜபக்ஷ எடுத்து முடிவு ஒரு அவநம்பிக்கையின் அறிகுறியாகும். இந்த தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரத்தை இட்டு நிரப்ப முடியுமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மார்ச் 16 மற்றும் ஏப்பிரல் 3ம் திகதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்தோடு இணைந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தமது தலைவர்களை எதிர்த்து பிரச்சாரத்தில் பங்குபற்றினர். சுயாதீன அல்லது கட்சிகள் சாராத தொழிற்சங்கங்களின் தோற்றமானது, நீண்டகால தொழிற்சங்கங்களின் தலைமைத்துவத்தின் மீதான தொழிலாளர்களின் அதிருப்தியும் பகைமையின் உற்பத்தியேயாகும்.

சம்பள ஆய்வுக் கமிட்டியின் தலைவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சம்பளப் பிரச்சாரத்தை ஒழுங்கு செய்திருந்த அதேவேளை, அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் எதிர்த்தாக்குதலை முன்னெடுக்க தயாரில்லை. கமிட்டியின் ஆளுனரான சமன் ரட்ணப்ரிய உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடுகையில், கமிட்டியானது எந்தவொரு மேலதிக நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னதாக அரசாங்கம் புதிய பிரேரணைகளை முன்வைக்கும் வரை காத்திருக்கிறது, என்றார். புதிதாக நியமிக்கப்பட்ட இணைப்புச் செயலாளர்கள் பற்றி கேட்டபோது, தானும் வாழ்ந்து பிறரையும் வாழ விடுவதே அவரது போக்காக இருந்தது. "அது அவர்களது தேர்வு, நாங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாங்கள் எமது போராட்டத்தை தொடர்கின்றோம்," எனத் தெரிவித்தார்.

உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளை நியமிக்க இராஜபக்ஷ எடுத்த முடிவானது, அரசாங்க ஊழியர்களுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வும் வழங்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லாததோடு, அது இந்த கைத்தொழில் பொலிஸ்காரர்களின் உதவியுடன் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பலவிதத்திலும் எதிர்த் தாக்குதல்களை தொடுக்கத் தயாராகிக்கொண்டிருப்பதற்கான மேலதிக எச்சரிக்கையாகும்.

Top of page