World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

The ETA ceasefire, the Catalan Statute and the fracturing of Spain

ETA போர்நிறுத்தம், கட்டலான் சட்டம் மற்றும் ஸ்பெயினின் உடைவு

பகுதி 1|பகுதி 2

By Paul Mitchell
17 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

இது அண்மையில் ஸ்பெயினில் பெரிய பிராந்திய தன்னாட்சிக்கான நகர்வுகளை விளக்கும் இரு பகுதி கட்டுரையின் முதல் பகுதியாகும் .

மார்ச் 24ம் தேதி Euskadi ta Askatasuna (Basque Homeland and Freedom-ETA) என்னும் பாஸ்க் பிரிவினைவாத குழு 800 மக்கள் இறந்ததற்கு காரணமான 38 ஆண்டுகள் இராணுவ நடவடிக்கைகளான குண்டுவீச்சுக்கள், துப்பாக்கி தாக்குதல்கள் ஆகியவற்றை நிரந்தரமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஆறு நாட்களுக்கு பின்னர் ஸ்பெயினின் பிரதிநிதிகள் மன்றம் கட்டலோனிய பிராந்தியத்திற்கு கூடிய உரிமைகளை கொடுக்கும் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்தை 189 ஆதரவான, 154 எதிர்ப்பு வாக்குகள் என்னும் முறையில் நிறைவேற்றியது. ஜூன் மாதத்தில் இந்த பிராந்தியத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்பட முன்னர் செனட்டில் இத் திட்டத்திற்கு தற்பொழுது ஒப்புதலை பெறவேண்டும்.

இந்த வேறுபட்ட அரசியல் நிகழ்வுகளுக்கு காரணம் ஸ்பெயினின் உடைவில் உள்ளது; அதாவது உற்பத்தியின் பூகோளமயமாக்கல் பொருளாதார ஒழுங்கமைப்பின் முதன்மை அலகு என்ற தேசிய அரசின் நிலையை காலத்திற்கு ஒவ்வாததாக்கியுள்ளது.

போர்நிறுத்தத்தை அறிவிக்கையில், பாஸ்க் சுயநிர்ணயம் பற்றியோ, சுதந்திரம் பற்றியோ ETA எதையும் குறிப்பிடவில்லை; "மக்கள் என்ற முறையில் எங்கள் உரிமைகள்" என்று வெறுமனே குறிப்பிட்டிருந்தது. இவ்வமைப்பு முன்பு போர்நிறுத்தத்தை நிரந்தரம் என்றோ "உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள்" என்றோ குறிப்பிட்டு பேசியது கிடையாது. உண்மையில் ETA உருவாகியிருந்த ஒரே கோரிக்கை, பாஸ்க் பேசும் மக்களுள்ள ஸ்பெயினின் மற்றும் பிரான்ஸின் பகுதிகள் தங்களுடைய வருங்காலத்தை மாட்ரிட் அல்லது பாரிசின் "தலையீடு" இல்லாமல் முடிவெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இருந்தது.

ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியின் (PSOE) பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ரொட்ரீகஸ் சபடேரோ ETA உடனான முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்றும், அதற்கு அமைப்பின் போர்நிறுத்தம் முழுமைபெற்றிருக்கவேண்டும், தெரு வன்முறைகள் மற்றும் வணிகத்தின்மீது அது நடத்திவரும் "புரட்சிகர வரிக்கு" முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள், நவம்பர் 2004ல் ETA அரசியல் பிரிவான Batasunaவின் தலைவர் Arnaldo Otegi முன்வைத்துள்ள "இரண்டு-மேசைகள்" முன்மாதிரியில் பின்தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மேசையில் அரசாங்கமும் ETA வும் ஆயுதங்கள் களைதல் மற்றும் கைதிகள் விடுதலை பற்றிய பிரச்சினைகளை ஆராய்வார்கள்; மற்ற மேசையில் Batasuna உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாஸ்க் பிராந்தியத்தின் வருங்காலம் பற்றி விவாதிக்கும்.

இந்த அமைப்புகள் பாஸ்க் பிராந்தியத்திற்கான பெரிய தன்னாட்சியை பெற முடியும் எனவும், ஒரு அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டின் மூலம் வடஅயர்லாந்தில் சின் பின்னுடன் அடையப்பெற்றது போன்று அரசு அமைப்பின் பதவிகளை பெறலாம் என்றும் ETA தலைவர்கள் நம்புகின்றனர். முன்னாள் ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர்கள் (IRA), ETA பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது; அவர்கள் பாஸ்க் பிராந்தியத்திற்கு கடந்த ஆண்டில் பல முறை பயணித்துள்ளனர்.

போர்நிறுத்தத்தில் IRA இன் தலையீடு என்ன நிகழவிருக்கின்றது என்பது பற்றி எடுத்துக்காட்டுகிறது. வடஅயர்லாந்து சமாதான முன்னெடுப்பு ஐரிஷ், பிரிட்டிஸ், கத்தோலிக்க, புரோடஸ்டென்ட், வடக்கு, தெற்கு உழைக்கும் மக்களின் வெகுஜனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் முன்னெடுக்கப்பட்டது ஆகும். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களில் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பெரும் பிரிவுகள், ஐரிஷ் குடியரசில் ஆளும் பொருளாதார மற்றும் அரசியல் நலனுள்ளவர்கள், யூனியனிஸ்ட் முதலாளித்துவத்தினர் மற்றும் கத்தோலிக்க/குடியரசு முதலாளித்துவ நலன்களின் பிரிவினர், சின் பின்னின் தலைமையைச்சுற்றி நின்றவர்களின் பிரதிநிதிகள் என்று அனைத்தும் அயர்லாந்தில் உள்ள பெரிய சர்வதேச முதலீட்டாளர்களான அமெரிக்க தலைமையில் நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக, ஐரிஷ் குடியரசு தன்னை பெருநிறுவனங்கள் கோரும் பெருந்திறமையுடைய, குறைவூதியத் தொழிலாளர்களின் மேடையாகவும் மற்றும் ஐரோப்பிய சந்தையை அடைவதற்காகவுமாக தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு கொள்கையை பின்தொடர்ந்து உள்ளது. ஆனால் வடஅயர்லாந்து தன்னுடைய அண்டை நாட்டை பின்பற்றி நடக்க முடியவில்லை; ஏனெனில் மூன்று தசாப்தங்களாக இராணுவப் பூசலும் பிரிவினையும் நடைபெற்றன. 1998ம் ஆண்டு பெரிய வெள்ளி உடன்பாடு (Good Friday Agreement), தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக சர்வதேச மூலதனத்தினால் வடக்கிலும் தெற்கிலும் இலாபகரமான முதலீட்டிற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதை தொடக்கியது.

தனது ஐரிஷ் நண்பர்களை பின்பற்றும் கருத்தில், Batasuna வில் ஒரு பிரிவினர் பிராந்திய அரசாங்கத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மேலாதிக்கம் செலுத்தியுள்ள மிகப்பெரிய பாஸ்க் தேசியவாதக் கட்சியின் (Partido Nacionalista Vasco, PNV) தலைவரான Juan José Ibarretxe ஆல் இயற்றப்பெற்ற பாஸ்க் பிராந்தியத்தில் ஸ்பெயினுடன் "சுதந்திரமான உறவைக் கொண்டிருக்கும்" ''தன்னாட்சி நடத்தும்'' திட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். தன்னுடைய பங்கிற்கு பாஸ்க் தேசியவாதக் கட்சி Batasuna மற்றும் ETA வை அரசாங்க அமைப்பிற்குள் வரவேற்க ஆர்வம் காட்டியுள்ளது; ஆனால் தான் மறைக்கப்பட்டுவிடப்படும் நிலை ஏற்படுமோ என்றும் அஞ்சுகிறது. சமீபத்தில் பாஸ்க் தேசியவாத கட்சியின் இளைஞர்கள் பிரிவு, Batasuna ஆல் அழைப்புவிடப்பட்ட 50,000 மக்களை ஈர்த்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவேண்டாம் என்ற உத்தரவை மறுத்துவிட்டது.

Ibarretxe திட்டம் பூகோளச் சந்தை இடத்தில் பாஸ்க் முதலாளித்துவத்திற்கு ஓர் இடத்தை நிறுவ நோக்கம் கொண்டுள்ளது; இதன் எண்ணமோ, "தனியார் சொத்துடமைக்கான உரிமை மற்றும் சந்தைப் பொருளாதார வடிவமைப்பிற்குள் தொழில் முயற்சிகளின் சுதந்திரத்திற்கான மதிப்பு வேண்டும்" என்பதாகும். "சுயநிர்ணயம்" என்ற மொழியில் மறைத்துவைக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவுகள் பாஸ்க் உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; மாறாக அவர்களை ஐரோப்பிய முதலாளித்துவத்தினருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைவூதிய தொழிலாளர் சக்தியாக விற்றுவிடும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் கொள்கை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக கூடுதலான கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கும் ஒரு புதிய கட்டலோனிய சட்டம் பிராந்தியத்தின் அதிகாரங்களை பெருக்கி, அதையொட்டி கூடுதலான வரிவருவாயின் பெரும்பகுதியை கொள்ளவும், தன் நீதித்துறையில் நிலைமையை வலுப்படுத்தவும் புலம்பெயர்ந்தோர் கொள்கை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக கூடுதலான கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது. சட்டம் குடியிருப்பவர்கள் கட்டலான் மொழியைக் கற்க வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது.

மக்கள் கட்சி இந்த நகர்வை எதிர்க்கிறது

சபடேரோவும் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியும் (PSOE) ஸ்பானிய முதலாளித்துவத்தின் பொது நலன்களை பேண முற்பட்டுள்ளனர்; அதேநேரத்தில் பிராந்திய நலன்களுக்கு தவிர்க்க முடியாத விட்டுக்கொடுப்புகளை வழங்கவும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். ஸ்பானிய அரசின் ஐக்கியம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், இவர்கள் தங்கள் மக்கள் கட்சியின் முன்னோடிகளைவிட மாறுபட்ட அணுகுமுறையை பிராந்திய உரையாடலில் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த, தேசிய முதலாளித்துவத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரிவுகளை விரோதப்படுத்திக்கொள்ளாமல் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்பதில் தீவிர வரம்புகள் உள்ளன. இதையொட்டித்தான் சட்ட ஆவணத்தில் தெளிவற்ற தன்மை உள்ளது. இப்பிராந்தியம் ஒரு "நாடு" என்று கட்டலோன் தேசிய சட்டமன்றத்தினால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முன்னுரை குறிப்பில் வருகிறது. (ஆனால் எந்த இடத்திலும் அந்த கருத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை). அதே நேரத்தில் ஆவணம் ஸ்பெயினின் அரசியலமைப்பு பற்றிக் குறிப்பிட்டு, கட்டலோனியா ஏற்கனவே ''தேசிய இனம் என்ற ஒரு தேசிய யதார்த்தத்தை கொண்டுள்ளது" என்று கூறப்பட்டதை குறிக்கிறது --இத்தகைய வடிவமைப்பு 1978ல் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் இரட்டை அர்த்தத்தைத்தான் கொண்டிருந்தது.

ஆனால் கட்டலான் சட்டமன்ற சட்டத்தை இயற்றியவர்கள் -- கட்டலோனியாவின் குடியரசு இடது Esquerra Republicana de Catalunya ERC) சபடேரோவின் கருத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்; அவர்கள் அது கட்டலோனியாவின் மீது ஒரு ''அடிப்படை வெட்டிக்குறைப்பு" என்று கூறி அதை செயல்படுத்துவதை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றால் சபடேரோ ERCஐ நம்பியிருக்க வேண்டும்; கட்டலோனிய அரசாங்கத்தில் சோசலிச தொழிலாளர் கட்சியின் சகோதரக் கட்சியான கட்டலான் சோசலிச கட்சி (Parti Socialist de Catalunya, PSC) இதன் சகோதர கட்சியாகும்.

ERC இன் தலைவரான யிஷீsமீஜீ லிறீuணs சிணீக்ஷீஷீபீ-ஸிஷீஸ்வீக்ஷீணீ "ERC கட்டலோனியாவிற்கு கேட்பது ஒரு புதிய பிராந்திய சட்டம் அல்ல, ஒரு அரசு என்பதாகும். இதை எவரும் மறந்துவிடக்கூடாது, குறிப்பாக நாம் மறந்துவிடக் கூடாது. வாக்குளில் 16 சதவிகிதத்தைக் கொண்டு நமக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அறிவோம்; எனவே நாம் படிப்படியான அணுகுமுறைக்குத்தான் ஆதரவை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் ஒரு அரசை விரும்புகிறது; ஆனால் எல்லா மக்களுக்கும் நாடு கிடைத்துவிடுவதில்லை." என்பதை தெளிவாக்கினார். Carod-Rovira, "நான் ஒரு பிரிவினைவாதி, எனக்கு ஒரு குடியரசு வேண்டும்" என்று சேர்த்துக் கொண்டார்.

சட்டத்தை ஸ்பானிய சட்டமன்றத்தில் இயற்றுவதற்கு, சோசலிச தொழிலாளர் கட்சி வலதுசாரி கட்டலான் கன்வர் ஜென்ஸ் மற்றும் யூனிடி (Catalan Convergence and Unity, CiU), மற்றும் பிராந்தியக் கட்சிகள் PNV உட்பட்டவற்றின் உதவியை நம்ப வேண்டியதாயிற்று; அவை கட்டலான் சட்டத்தை தன்னுடைய சொந்த அபிலாசைகளுக்கு முன்மாதிரியாகக் காண்கின்றன. காலிசியாவின் துணைப் பிரதமரான Anxo Quintana "காலிசியா ஸ்பெயினுக்கு இரண்டாம் தரமானது என்ற எண்ணத்தை அகற்றிக் கொள்ளவேண்டும்; அரசிற்கும் அப்பிராந்தியத்திற்கும் இடையே புதிய அதிகாரப்பிரிவை வரையறுப்பது நமக்கு தேவையாகும்; மேலும் வரிவதிப்பு மீதான புதிய அடிப்படை அளவுகோலை கொண்டிருக்க வேண்டும். இறுதி விளைவாக ஸ்பானிய அரசு ஒரு நாடு என்று அங்கீகரிக்கப்படவில்லை ஆனால் மாறாக பல நாடுகளின் உருவாக்கம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது." வாலன்சியாவில், பிராந்திய சட்டமன்றம் தன்னுடைய தனிச்சட்டத்தை மார்ச் 27 அன்று இயற்றிக் கொண்டது; அது வாலென்சியாவை "வரலாற்று ரீதியான தேசியம்" எனக் கூறியிருக்கிறது'' என கூறினார்.

சட்டத்தை எதிர்த்து வாக்களித்த பெரிய கட்சி வலதுசாரி எதிர்க்கட்சியான மக்கள் கட்சியாகும் (Popular Party-PP). மக்கள் கட்சியின் தலைவரான Manriano Rajoy கட்டலான் சட்டம் "1978ல் ஸ்பானிய மக்களினால் அமைத்திருந்த அரசின் முடிவிற்கு தொடக்கமாகும்" எனக் கூறினார்.

"இது ஒன்றும் பெரிய உடன்பாடு இல்லை என்ற கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், அனைத்து நடைமுறை பாணிகளிலும் நாம் இரு அரசுகளை காண்கிறோம், ஸ்பெயின் மற்றும் கட்டலோனியா." என்று அவர் குறிப்பிட்டார்.

சோசலிச தொழிலாளர் கட்சி, அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்குவதற்கான பிரச்சாரத்தில் இராணுவத்தில் உள்ள சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட அமைப்புகளை போன்ற தீவிர வலதுசாரி சக்திகளை அணிதிரட்டுவதற்கு கட்டலான் சட்டம் மற்றும் ETA பிரச்சினைகளை மக்கள் கட்சி பயன்படுத்துகிறது. "ஜனநாயக விரோத பலாத்காரத்தின்" விளைவாகத்தான் சபடேரோ சட்டவிரோதமாக பதவிக்கு வந்தார் என்றும் இது குற்றம்சாட்டியுள்ளது-----அனைத்து சான்றுகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல் எனச் சுட்டிக் காட்டியபோதிலும் மாட்ரிட்டில் மார்ச் 11ல் நிகழ்ந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்கு ETA ஐக் குறைகூற முயற்சித்த பின்னர் ஜோஸ் மரியா அஸ்னாருடைய மக்கள் கட்சி அரசாங்கம் வெகுஜன இயக்கத்தால் கீழிறக்கப்பட்டது.

ஸ்பெயினின் 50,000 பேர் கொண்ட தரைப்படையில் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோஸ் மேனா அகுவாடோ, இராணுவம் அரசியலமைப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் "பணியைக்" கொண்டுள்ளதாக ஜனவரியில் எச்சரித்தார்; அதேபோல் இராணுவம், "ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை" உறுதி செய்து, கட்டலோனியாவிற்கு நாடு என்ற அந்தஸ்து கொடுக்கும் சட்டம் இயற்றப்பட்டால் "தீவிர விளைவுகள்" வரும் என்றும் எச்சரித்தார். அவருடைய உரை "பல தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடைய கருத்துக்கள், அக்கறை, உணர்வுகள் ஆகியவற்றின் விசுவாசமான நம்பிக்கையின் பிரதிபலிப்பு" என்று வரவேற்கப்பட்டது.

தொழிலாளர்களை தேசியரீதியாக பிரிக்கும் முயற்சி

கட்டலான் மற்றும் பாஸ்க் சுதந்திரத்திற்கான உந்துதல் ஸ்பெயினின் மிகவும் வளமுடைய இரு பிராந்தியங்களில் ஏற்கனவே தங்களுக்கு இருக்கும் சலுகைமிக்க பொருளாதார நிலையை முதலாளித்துவம் மற்றும் உயர்தர மத்தியதர வர்க்கத்தினரின் சுரண்டும் முயற்சியுடன் பிணைந்துள்ளது. உண்மையில் கட்டலான் உயரடுக்கின் முக்கிய புகார்களில் ஒன்று ஸ்பெயினின் வறிய பிராந்தியங்களுக்கு மானியங்கள் அளிப்பதற்காக தங்களிடம் வரிகள் வசூலிக்கக்கூடாது என்பதுதான்.

ஸ்பெயினின் 17 தன்னாட்சிப் பிராந்தியங்களில் கட்டலோனியா செல்வக் கொழிப்பு உடையதாகும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தை அது கொண்டுள்ளது. கட்டலோனியாவும் மாட்ரிட்டும் தங்களுக்கு இடையே உள்-பிராந்திய ஒருமைப்பாடு நிதியில் 80 சதவிகிதத்தைக் கொடுத்து அது வறிய பிராந்தியங்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. 2002ம் ஆண்டு கட்டலான் மாகாணத்தின் ஜிரோனா நகரத்தின் நிகர இல்ல வருமானம் வறிய தெற்கு மாநிலமான ஆன்டலுசியாவில் உள்ள ஜேன் பகுதியைவிட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.

கட்டலோனிய பகுதி ஏற்கனவே ஸ்பெயினில் உள்ள 3000க்கும் மேலான சர்வதேச நிறுவனங்களுக்கு தளமாக உள்ளது. 2002ம் ஆண்டில் இதன் தொழிற்சாலைகள் 146.1 பில்லியன் டாலர் வருவாயை, அதாவது ஸ்பெயினின் மொத்தத்தில் 25 சதவிகிதத்தை ஈட்டின. அழைப்பு மையங்கள் போன்ற சேவைத் தொழில்துறைகளை பார்சிலோனா காந்தம் போல் ஈர்த்துள்ளது; குறைவூதிய மற்றும் பல மொழி பேசும் தொழிலாளர் சக்திகளை வழங்க அவற்றிற்கு வாக்குறுதியளித்துள்ளது. கடந்த மாதம் கார்களை வாடகைக்கு கொடுக்கும் குழுவான Avis தன்னுடைய அழைப்பு மையத்தை மாஞ்செஸ்டரில் இருந்து பார்சிலோனாவிற்கு மாற்றியது; இதையொட்டி 180 வேலைகள் மாறின; ஏற்கனவே இத்தொழிற்துறையில் இருந்த 10,000 தொழிலாளர்களோடு கூடுதலான ஊழியர்களும் சேர்ந்தனர். சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, கட்டலோனியா ஆய்வு மற்றும் அபிவிருத்தி (R&D) செயற்பாடுகளை பொறுத்தவரையில், ஸ்பெயினுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பாதிக்கும் மேலாக ஈர்த்துள்ளது. அது விரைவில் ஸ்பெயினின் உயிரியல் தொழில்நுட்ப மையமாக உருவாகி இப்பிராந்தியத்தில் ஸ்பெயினின் மொத்த மருந்தக உற்பத்தியில் 60 சதவிகிதத்தை கொள்ளும்.

பிராந்தியங்களை பற்றிய தற்போதைய அரசியல் நெருக்கடி, ஆளும் உயரடுக்கு ஸ்பெயினின் தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றூண்டு முழுவதும் கொண்டிருந்த போர்குணத்தை எதிர்க்கும் வகையில் அதை தேசிய வழிகளில் பிரிப்பதற்கான முயற்சியை தொடர்வதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

கட்டலான் மற்றும் பாஸ்க் தேசியவாதமும் பத்தொன்பதாம் நூற்றாண்டு கடைசியில் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில் வளர்ச்சியுற்றன. குட்டி-முதலாளித்துவ அறிவுஜீவிகளுடையே கூடுதலாக ஆதிக்கம் செலுத்தும் வகையில் எழுச்சியுற்ற இத்தேசியவாதம், பெரிய மூலதனத்தினதும் அதிகாரத்துவத்தினதும் கொள்ளைக்கு எதிராக விவசாயிகளிடம் ஆதரவை தேட முற்பட்டது. ஒவ்வொரு முறையும் ஒரு புரட்சிகர இயக்கம் வளர்ந்தபோது, இக்கூறுபாடுகள் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து தங்களுடைய சொந்த நன்மைக்காக அதை பயன்படுத்திக்கொள்ளத்தான் முயன்றுள்ளன.

தளபதி மிகுவல் பிரமோ டி ரிவேராவின் சர்வாதிகாரம் 1931ல் வீழ்ச்சியுற்று, ஸ்பானிய புரட்சி தொடங்கியபோது, PNV (பாஸ்க் பிராந்திய கட்சி-Patido Nacionalista Vasco) தன்னுடைய இலக்கு "தொழிலாளர்கள் இயக்கத்தையும் புரட்சியின் சாத்தியத்தையும் நிறுத்துவதாகும்" என அறிவித்தது. தன்னுடைய உறுப்பினர்கள் "எவ்வித வர்க்க இயக்கத்திலும் பங்கு பெறுவதிலிருந்து முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தேவையானால் அதிகாரிகளிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நிற்க வேண்டும்" என்றும் கோரியது. பாஸ்க் பிராந்தியத்தில் தொழில்துறை பகுதிகளில் தேசியவாதம் பெரிய ஆதிக்கத்தை ஒருபோதும் கொண்டிருக்காததற்கு இது ஒரு காரணமாகும்.

கட்டலோனியாவில் நிலைமை வித்தியாசமானது. 1931ல் கட்டலானிய சுயாட்சி சட்டம் குறித்த ஒரு பொதுஜனவாக்கடுப்பில் 99% ஆனோரின் ஆதரவை பெற்றது. பார்சிலோனாவில் ஒரு மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்டலானியர்கள் அல்லாதவர்களாக இருக்கையில், அதற்கு எதிராக 3,000 வாக்குகள் மட்டுமே போடப்பட்டது.

தொடரும்...

Top of page