World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Moussaoui verdict deals blow to Bush administration's 9/11 coverup

9/11 இனை மூடிமறைக்க புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு பேரிடியாக அமைந்துவிட்ட முஷவ்வி தீர்ப்பு

By Patrick Martin
5 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

சக்கரியாஸ் முஸ்ஸாவிக்கு, அலெக்ஸாண்ட்ரியா, வெர்ஜீனியா நீதிமன்ற நடுவர்கள் (Jury) ஆயுள்தண்டனை விதித்து, தூக்கு தண்டனையிலிருந்து அவரை காப்பாற்றியது ஒரு மனிதநேய, அறிவுத்திறன் வாய்ந்த நடவடிக்கையாவும் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு ஒரு எதிர்த்தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. தனது தீர்ப்பை வழங்கியதன் மூலம், நீதிமன்றம் மரண தண்டனைக்கான அரசாங்கத்தின் கோரிக்கையை புறக்கணித்தது மற்றும் அதன் உட்குறிப்புகளினால் 9/11க்கு முன்னரும் அதற்கு பின்னரும், நடைபெற்ற சம்பவங்களை மூடிமறைப்பதற்கு முஸ்ஸாவி வழக்கை பயன்படுத்த முயற்சித்ததை தள்ளுபடி செய்வதாகவும் மற்றும் 9/11 சதி ஆலோசனையில் சம்மந்தப்பட்ட பிரதான பிரமுகர்கள் எவரையும் விசாரணையில் நிறுத்த மறுத்ததற்கு விளக்கம் எதுவும் தரவியலாத நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.

எல்லா வகைகளிலும் 12, நீதிமன்ற நடுவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு சாட்சியத்தை இந்த வழக்கில் மீளாய்வு செய்தனர். சாட்சிகள் தொடர்பான தங்களது குறிப்புக்களை ஆராய்ந்து ஒரு சிக்கலான 42பக்க படிவத்தை நிரப்பி குற்றத்தை தூண்டும் மற்றும் அதை மட்டுப்படுத்தும் அரசுத்தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்களில் இருந்த காரணிகளை மதிப்பிட்டனர். 9/11 தாக்குதல்களுக்கு இட்டுச் சென்ற சதி ஆலோசனையில் பங்கெடுத்துக் கொண்டதாக ஓராண்டிற்கு முன்னர், முஸ்ஸாவி ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். வழக்கு விசாரணை, விடுதலையற்ற ஆயுள் சிறைதண்டனை அல்லது மரண தண்டனை விதிப்பது இரண்டு வகையான தண்டனைகளுக்கு இடையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.

அரச தரப்பில் பிரதான தடைக்கல் எந்த உண்மை அடிப்படையாக கொண்டது என்றால், 2001 ஆகஸ்டில் முஸ்ஸாவி புலம்பெயர்ந்தோர் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டார் அப்போது அவர் ஒரு மின்னசோட்டா விமானம் ஓட்டும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த பின்னர் அவரது வழமைக்கு மாறான நடவடிக்கைகள் உள்ளூர் FBI முகவர்களின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்தது. 9/11 தாக்குதல்கள் நடைபெற்றபோது அவர் சிறையில் இருந்தார் மற்றும் ஏறத்தாழ 3,000 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வரலாற்றிலேயே படுமோசமான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதில் அவர் நேரடி பங்கு எதையும் வகிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தூக்கு தண்டனை விதிக்க கோரிய நீதித்துறை வாதிட்டது என்னவென்றால், அல்-கொய்தா சதி ஆலோசனை பற்றி முஸ்ஸாவி மெளனம் சாதிப்பதும், பெரிய விமானங்களை எப்படி ஓட்டுவது என்பதை அறிந்து கொள்வது என்பது மட்டுமே தனக்கு அக்கறை இருந்ததாக அவரது தவறான கூற்றுக்கள், தற்கொலை விமான கடத்தல்களை தடுத்திருக்க கூடிய விமானநிலைய பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுப்பதை தடுத்தது என்பதாகும். இது ஒரு பலவீனமான வாதமாகும், அந்த வாதம், நீதிபதி லியோனி பிரிங்கேமா சுட்டிக் காட்டியதை போல், அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அமைதியாக இருக்கும் அரசியல் சட்ட ஐந்தாவது திருத்தப்படி முஸ்ஸாவிக்கு உரிமை இருப்பதற்கு அறைகூவல் விடுப்பதை நெருங்கி வருவதாக இருந்தது.

ஆனால், நீதிமன்ற நடுவர்கள் அரசுதரப்பின் வாதத்தை ஒப்புக் கொண்டதாக தெளிவாக தெரிந்த பின்னர் சென்ற மாதம் முஸ்ஸாவி தூக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்று ஆரம்ப முடிவு கட்டளையிட்டது. நீதிமன்ற அவதானிகள் பலரும் தூக்கு தண்டனை முன்னரே முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று என்று கூறினர். முஸ்ஸாவி மெளனம் சாதிப்பது, 2001 செப்டம்பர் 11ல் நடந்த மரணங்களில் அவருக்கு ஒரு பொறுப்பை பகிரிந்து அளிப்பதால் நீதிமன்ற நடுவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது அவசியமானதாகியிருக்கும்.

என்றாலும், மாறாக, சாட்சியங்களை அவர்கள் மீளாய்வு செய்தபோது, நீதிமன்ற நடுவர்களில் சிலர் தங்களது முந்தய முடிவுகளை பயனுள்ள வகையில் மாற்றிக் கொண்டனர். மூன்று நீதிமன்ற நடுவர்கள், மேலும் ஒரு மட்டுப்படுத்தும் காரணியை குறிப்பிட்டுள்ளனர். இதை எதிர்தரப்பு வாதிடவில்லை, ஏனென்றால் அது ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. அந்த மூன்று நீதிமன்ற நடுவர்களும், தங்களது படிவத்தில் முஸ்ஸாவி தூக்கிலிடப்படக் கூடாது ஏனென்றால் அவர் 9/11 சதி ஆலோசனை குறித்து மிகச் சொற்பமாகவே அறிவார் என்று அறிவித்தனர்.

நீதிமன்ற நடுவர்கள் அநாமதேயமாக இருப்பதாலும் மற்றும் அவர்களது துல்லியமான காரண நிலைகளை முடிவு செய்வது இதுவரை இயலவில்லை என்றாலும் சில பொதுவான கவனங்கள் தெளிவாக உள்ளன. 12 நீதிமன்ற நடுவர்களில் ஒன்பது பேர் முஸ்ஸாவி குழந்தை பருவத்தில் வளர்க்கப்பட்ட விதம் மற்றும் அவரது தந்தையினால் உருவாக்கப்பட்ட இனவன்முறை துஷ்பிரயோகத்தின் வரலாறு ஆகியவை கடுமையை குறைக்கும் காரணிகளாகும். அவர் வளர்கின்ற பருவத்தில் பிரான்சில் இன அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்ட முஸ்ஸாவியின் அனுபவம் மற்றொரு கடுமையை குறைக்கும் காரணியாகும். முஸ்ஸாவியின் வக்கீல்கள் அவர் ஒரு மூளைக் கோளாறுள்ளவர் என்ற கூற்றை நீதிமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள் என்றாலும், அவர்கள் முஸ்ஸாவியின் இரண்டு சகோதரிகளது பதிவு நாடா செய்யப்பட்ட வாக்குமூலங்களை கேட்டனர். அவர்கள் அந்த மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரான்சில் புகலிடம் அடைந்துள்ளனர்.

எதிர்தரப்பு சாட்சிகளாக நீதிமன்றத்தில் கலந்து கொள்வதற்கு 9/11 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சார்ந்த இரண்டு டசின் பேர் அசாதாரணமான முறையில் சாட்சியமளிக்க சம்மதித்தது நீதிமன்ற நடுவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அவர்கள் சாட்சி கூண்டில் முஸ்ஸாவிக்கான தகுந்த தண்டனை பற்றி கருத்து எதுவும் கூற அனுமதிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் சாட்சி கூண்டில் ஏறியது தெளிவாக அரசாங்கத்தின் மரண தண்டனை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்ததுடன் மற்றும் அத்தகைய மரண தண்டனைதான் 9/11 குடும்பங்களுக்கு ''முடிவை'' வழங்கும் என்ற கூற்றையும் சீர்குலைப்பதாக அமைந்தது. நீதிமன்ற அறைக்கு வெளியே 9/11ல் பலியானவர்களில் பல உறவினர்கள் மரண தண்டனைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் மற்றும் அல்-கொய்தாவின் ஒரு தியாகியாக முஸ்ஸாவியை ஆக்கிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

9/11 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள் ஆகிய இருவர்களுக்கிடையே பகிரங்கமாக மரண தண்டனைக்கு எதிர்ப்பு வளர்வது தெரிந்தது. அதிகளவிலான தாராளவாத நியூயோர்க்கை தேர்ந்தெடுக்காது, பென்டகனுக்கு அருகிலுள்ள பழமைவாத வெர்ஜீனியா நகரில் அந்த வழக்கை விசாரணைக்கு விடுவதற்கு புஷ் நிர்வாகம் தேர்ந்தெடுத்தது என்றாலும் அலெக்ஸாண்டிரியா நீதிமன்ற நடுவர்கள் குழு மரணதண்டனைக்கு ஆதரவானது அல்ல என்பது தெளிவாயிற்று. 1998 முதல் அந்த மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளிலும் மத்திய நீதிமன்ற நடுவர்கள் அலெக்ஸாண்டிரியாவில் மரண தண்டனை விதிக்க மறுத்துவிட்டனர் என்று ஒரு தகவல் கூறுகிறது.

முஸ்ஸாவியின் மனநிலை குறித்து நிபுணர்களின் முற்றிலும் முரண்படுகின்ற சாட்சியங்களை நீதிமன்ற நடுவர்கள் கேட்டனர், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சொந்த நடவடிக்கைகள் அவரது மூளை திறன் பற்றி சந்தேகங்களை எழுப்பின என்பது நிச்சயம். 9/11 தாக்குதல்களின் போதும் மற்றும் இன்றைய தினம் ஆகிய இரண்டுலும் அத்தகைய தன்மை வெளிப்பட்டது. அவர் வெறுப்புண்டாக்கும் வகையில் அப்பாவி மக்களது மரணங்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் மற்றும் தனது சொந்த வக்கீல்கள் மீது பாய்ந்ததும் (அவர்களில் ஒருவர் யூதர்) அத்துடன் அல்-கொய்தாவில் தனது சொந்த மைய பங்கு பற்றி தவறான மற்றும் ஆரவாரமான பிரகடனங்களை வெளியிட்டார்.

சாட்சி கூண்டில் ஏறி அவர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு சாட்சியமளித்த போது மிகவும் நம்பத்தகாத வாக்குமூலத்தை வெளியிட்டார். கடத்தப்பட்ட ஐந்தாவது விமானத்தில், தோல்வியுற்ற சப்பாத்துக்களில் குண்டுகடத்திய ரிச்சார்ட் ரெய்ட் மற்றும் இதர அல்-கொய்தா ஆதரவாளர்களுடன் விமானியாக செயல்பட்டிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். 2001 கோடை காலத்தில் ரெய்ட் அமெரிக்காவில் இல்லை என்ற உண்மையுடன் 9/11 சதியில் அவருக்கு எந்த தொடர்பும் இருந்ததாக தெரியவில்லை. அவர் தனது உயிலில் முஸ்ஸாவியையும் பயன்பெறுபவராக குறிப்பிட்டிருக்கிறார். அந்த செயல் மூலம் இருவரும் அதே தற்கொலை, விமானக் கடத்தலில் ஈடுபட்டிருக்க முடியுமா என்பதை பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. FBI உம் கூட முஸ்ஸாவியின் கூற்றுக்களை ஆதரிப்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.

அத்துடன் CIA 9/11 சதி ஆலோசனையில் சம்மந்தப்பட்ட இரு தலைவர்கள் என்று பெயர் குறிப்பிட்டுள்ள இவர்களது வாக்குமூலங்களை தாக்கல் செய்திருக்கிறது. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ள அமெரிக்காவின் இரகசிய சிறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காலித் ஷேக் முகமது மற்றும் ரம்சீ பினால்சித் ஆகிய இருவரும் முஸ்ஸாவி மிகுந்த குழப்பத்திலும், நம்பகத்தன்மையற்ற நிலையிலும் இருப்பதால் அவரை ஒரு தற்கொலை விமானக் கடத்தியாக கூட நியமித்திருக்க முடியாது அப்படியிருந்தாலும் கூட அவர் ஒரு இரண்டாம் நிலை பங்களிப்பைதான் செய்திருக்க முடியும் என்று தங்களது சாட்சியங்களில் கூறியுள்ளனர்.

இது முஸ்ஸாவி வழக்கில் மற்றொரு அம்சத்தை எழுப்புகிறது அது நீதிமன்ற நடுவர்களது வாதங்களில் விசாரணைகளில் என்ன பங்கை வகித்திருக்க கூடும் என்றாலும் அது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு சிறிய பங்கெடுத்துக் கொண்ட முஸ்ஸாவி மீது விசாரணை நடக்கும்போது 9/11 தாக்குதல்களுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் ஏற்பாடு செய்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் காவலில் உள்ளவர்கள் மீது ஏன் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை? 2002 செப்டம்பரில் பின்னால்சித் கைது செய்யப்பட்டார், ஆறு மாதங்களுக்கு பின்னர் முஹமது கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடமிருந்து, அவர்களுக்கு தெரிந்த எந்த தகவலையும் பெற்றிருக்க முடியும்-----நிச்சயமாக இன்றைய தினம், சமகாலத்து புலனாய்வு மதிப்புள்ள, எந்த தகவலையும் அவர்கள் அறிந்திருக்க முடியாது. அப்படி இருந்தும் CIA இன் காவலில் அவர்களது குற்றங்களுக்கான எந்தவித நீதிமன்றத்தையும் எதிர்கொள்ளாமல் காலவரையற்ற காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

முஹம்மது மற்றும் பினால்சித் மீது விசாரணைகள் நடத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். முதலாவதாக அவர்கள், விசாரணையில் கலந்து கொள்வதற்கு உரிய மனநிலையோ அல்லது உடல்நிலையோ இல்லாத அளவிற்கு திட்டமிட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம். இரண்டாவது ஒரு பொது விசாரணை வாய்ப்பு வழங்கப்பட்டால், தகுதி வாய்ந்த வக்கீலை பெற்று அல்-கொய்தாவிற்கும், அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவுகின்ற தொடர்புகள் குறித்து பிரச்சனைகள் கொடுக்கின்ற உண்மைகளை அம்பலப்படுத்திவிடலாம் என்பதாக இருக்கலாம்.

CIA தான் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்-எதிர்ப்பு கொரில்லா போரில் பங்கெடுத்துக் கொள்வதற்கு, பின் லாடன் உட்பட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சேர்த்ததன் மூலம் அல்-கொய்தாவை உருவாக்கியது. இந்த தொடர்புகளை முஸ்ஸாவி தனிப்பட்டரீதியாக தெரிந்துகொள்வதற்கு மிகவும் இளமையும், அனுபவம் இல்லாதவருமாகும். ஆனால், பின் லாடனின் நெருக்கமான தளபதிகளான முகமதுவும் பினால்சித்தும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

மேலும், இந்த தொடர்புகள் பின் லாடன் அமெரிக்கா மீது 1996ல் போர் பிரகடனம் செய்த பின்னர் உடனடியாக முடிந்துவிடவில்லை என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. 2001 கோடைகாலத்தில் கூட CIA- பின் லாடன் தொடர்புகள் பற்றி ஊர்ஜிதமாகாத செய்திகள் உள்ளன. மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி 9/11 தாக்குதல்கள் ஏற்பாடு செய்யப்பட்ட காலகட்டம் முழுவதிலும் அமெரிக்க அரசாங்கம் முஹமது அட்டாவை கண்காணித்து வந்தது.

9/11 தொடர்பாக, அடிப்படையான பதிலளிக்கப்படாத கேள்வி என்னவென்றால், புஷ் நிர்வாகமும் அமெரிக்க புலனாய்வு சேவைகளும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களை எந்த அளவிற்கு அறிந்திருந்தன மற்றும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் அமெரிக்கா இராணுவ தலையீட்டிற்காக ஒரு தகுந்த சாக்குப்போக்கை பெறுவதற்காக இந்த தயாரிப்புகளில் எந்தளவிற்கு தலையிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

முஸ்ஸாவிக்கு ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற நடுவர்களின் தீர்ப்பு, புஷ்ஷிடமிருந்தும் நியூயோர்க் முன்னாள் மேயர் ரூடோல்ப் கிலியானி, Wall Street Journal மற்றும் New York Daily News போன்ற ஊடகங்களில் ஒரு கசப்பான மற்றும் விரக்தி கொண்ட கருத்துகளை துண்டிவிட்டிருக்கின்றது.

புஷ் தனக்கே உரிய பாணியில் உண்மைக்கு மாறான வகையில் குறிப்பிட்டார்: "இந்த விசாரணையின் முடிவு இந்த வழக்கின் முடிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்துவிடவில்லை." நீதிமன்ற நடுவர்கள் முஸ்ஸாவியின் வாழ்வை காப்பாற்றி இருக்கின்றனர். அதையே, அப்பாவி அமெரிக்க குடிமக்கள் மீது காட்டுவதற்கு அவர் விருப்பம் இல்லாதவராக இருந்தார் என்பது தெளிவாகிறது'' என்று கூறினார். அல்-கொய்தா பயங்கரவாதிகளைவிட பரந்த அறிவுடன் செயல்பட்டிருக்கும் நீதிமன்ற நடுவர்களின் முடிவை குறித்து ஜனாதிபதி வருந்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Wall Street Journal தலையங்க பக்கத்தில் றேகனின் முன்னாள் உரை எழுத்தாளர் பெக்கி நூனான், "அவர்கள் அவரை கொன்றிருக்க வேண்டும்," என்ற தலைப்பிட்டு, எழுதியுள்ள ஒரு கட்டுரையில் முஸ்ஸாவியை நீதிமன்ற நடுவர்களே நீதிமன்ற அறையில் தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும் என்பது போல் எழுதியிருக்கிறார். அதை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள ஒரு தலையங்கத்தில் சித்திரவதை முகாம் திறந்த பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் மீது வழக்கு மற்றும் விசாரணை எதுவும் நடைபெறாமல் குவாண்டனாநாமோ வளைகுடாவில் சிறையில் உள்ளவர்களுக்கு புஷ் நிர்வாகம் கோருவதைப்போன்று ஒட்டுமொத்த இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு பதிலாக, நீதிமன்ற முறையின் மூலம் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுவதினால் ஏற்படுகின்ற ஆபத்தை இத்தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மிகவும் சீற்றமான கருத்து, பரபரப்பு செய்திதாளான Daily News இல் வந்திருக்கிறது குழந்தை பருவத்தில் நடைபெற்ற வன்முறை துஷ்பிரயோகங்கள் போன்ற கடுமையை குறைக்கும் காரணியை கவனத்தில் எடுக்கும் நீதிமன்றத்தை அது கண்டித்துள்ளது, "அமெரிக்க நீதிமன்ற உறுப்பினர்கள் அத்தகைய குழம்பிய சிந்தனையுள்ளவர்கள் என்று நினைப்பதே பயங்கரமூட்டுவதாக உள்ளது". "9/11-ல் எந்த பங்களிப்பு செய்திருந்தாலும், தாக்குதல் பற்றி முன்கூட்டியே எந்த தகவல் தெரிந்திருந்தாலும், அல்-கொய்தாவிற்கு எந்த உதவி அல்லது வசதிகள் தந்திருந்தாலும் அது மரண தண்டனைக்குரிய அடித்தளமாகும்" என்று GÎv கருத்து தெரிவித்துள்ளது.

9/11 பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்த நிலையில் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது இறுதி குற்றமாகும். அதில் முன்னாள் CIA டைரக்டர் ஜோர்ஜ் டேனட், பல்வேறு FBI கண்காணிப்பாளர்கள், அத்துடன் புஷ், ஷெனி மற்றும் கொண்டாலிசா ரைஸ் ஆகிய அனைவரும் கிரிமினல் புலன்விசாரணைகளையும், குற்றச்சாட்டுக்களையும் சந்தித்தாக வேண்டும். 2001 ஆகஸ்ட் 6ல் ரைஸ் அமெரிக்காவிற்குள் விமானங்களை கடத்துவதற்கு அல்-கொய்தா தீட்டியுள்ள திட்டங்கள் பற்றிய எச்சரிக்கை குறிப்பை புஷ்சிடம் தந்தார், அந்த விமானங்களை தற்கொலை தாக்குதல்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறும் உண்டு. அந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய அமைப்பு தவறிவிட்டது.

வெள்ளை மாளிகையும் ஊடகங்களும் எழுப்பிய ஆவேசத்தையும், மூடிமறைக்கும் முயற்சிகளையும் ஒப்பிடும்போது, 9/11ல் பாதிக்கப்பட்டவர்களது பல உறவினர்கள், முஸ்ஸாவி வழக்கை தொடர்ந்து பயங்கரவாதிகளது தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டுபிடிப்பதற்கும் அதை தூண்டியவர்களை தண்டிப்பதற்கும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுபடியும் கோரியுள்ளனர்.

செப்டம்பர் 11 அன்று பென்டகனில் தனது கணவரை பறிகொடுத்த ரோஸ்மேரி டில்லார்ட் ஒரு பத்திரிகை மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது நீதிமன்ற நடுவர்களின் முடிவுகளை தான் மதிப்பதாக கூறியுள்ளார், "பயங்கரவாதிகளுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை உலகிற்கு நாம் காட்டிவிட்டோம். நம்மீது அவர்கள் எவ்வளவுதான் அவமரியாதை காட்டினாலும், நாம் அவர்களுக்கு மரியாதை தருகிறோம். ஒரு நேர்த்தியான சமுதாயமாக நம்மை அது உருவாக்கும்.

வெர்ஜீனியா நீதிமன்ற நடுவர்கள் செயல்பட்டவிதம் பற்றி பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ள அத்தகைய மனப்பான்மைகள், எவ்வளவுதான் ஊடகங்களும், அரசாங்கமும் பொது மக்களது உணர்மைகளை இழிவுபடுத்திகாட்டுவதற்கு முயன்றாலும், அமெரிக்க மக்களது ஜனநாயக உணர்வுகளையும் மனிதநேயங்களையும் அவர்களால் ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

Top of page