World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party to contest state elections in Illinois, Maine, Oregon and Washington

இல்லிநோய், மைன், ஒரேகன் மற்றும் வாஷிங்டன் மாநில தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது

15 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி, இல்லிநோய், மைன், ஒரேகன் மற்றும் வாஷிங்டன் மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துகிறது. நியூயோர்க்கில் அமெரிக்க செனட் சபைக்கும் (பில் வான் ஓகென்) மிச்சிகனின் 12வது மாவட்டத்தில் அமெரிக்க காங்கிரசிற்கும் (ஜெரோம் வைட்) கலிபோர்னியாவின் 29வது மாவட்டத்திற்கும் (ஜோன் பேர்ட்டன்) சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களுடன் இணைந்து இந்த பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. ("நியூயோர்க், மிச்சிகன், கலிபோர்னியாவில் வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது" என்ற கட்டுரையையும் காண்க.")

அமெரிக்க செனட் மற்றும் காங்கிரசிற்கு நாங்கள் நடத்திவரும் பிரசாரங்களை போன்று, அமெரிக்க பெருநிறுவன செல்வந்ததட்டுகளின் இரண்டு கட்சிகளுக்கு மாற்றீடாக, இராணுவ வாதத்தையும் சமூக நலன்களின் மீதான தாக்குதல்களையும் எதிர்க்க விரும்புபவர்களும் மற்றும் ஒரு சோசலிச தொழிலாள வர்க்கத்திற்கான மாற்றீட்டின் தேவையை காண விரும்புபவர்கள் அனைவரும், நமது வாசகர்களும், ஆதரவாளர்களும் பங்கெடுத்து, செயலூக்கத்துடன் ஆதரிப்பதை பொறுத்தே இந்த நான்கு மாநிலத்திலும் போட்டியிட வாக்குச்சீட்டு அந்தஸ்தை பெறுவதற்கான நமது தகுதி கிடைக்கும்.

இல்லிநோய் மாநில 52வது மாவட்ட சட்டமன்ற தொகுதியில், மாநில செனட்டிற்கு 52 வயதான ஜோ பர்னாரவ்ஸ்கீ சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த மாவட்டத்தில் வெர்மில்லியான் மற்றும் சேம்பைன் ஆகிய பிராந்தியங்களும், மாநிலத்தின் கிழக்கு மத்திய பகுதியில் உள்ள இரட்டை நகரங்களான கேம்பைன்-அர்பானாவும் அடங்கும். இதில் இல்லிநோய் பல்கலைக்கழக பிரதான வளாகமும் அடங்கும்.

வாழ்நாள் முழுவதும் இந்த மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற 52 வயதான பர்னாரவ்ஸ்கீ இரண்டு தசாப்தங்களாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செவிலியராகும். அவர் நிலக்கரி சுரங்க வரலாற்றில் இடம்பெற்றிருந்த வெஸ்ட்டர்வில்லி சமுதாயத்தில் வளர்ந்தவர். பர்னாரவ்ஸ்கீ மாநில மற்றும் உள்ளூர் ஜனநாயகக் கட்சி அரசியலில் நீண்டநெடுங்காலமாக நிலைபெற்றுள்ள மைக்கேல் டபிள்யூ. பெரிச்சை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் பழைமைவாத வரிகளையும், கருக்கலைப்பு உரிமைகளில் கட்டுப்பாடுகளையும் முன்னெடுத்து வைப்பவர். மற்றும் ஈரான் அணுத்திட்டங்களை நிறுத்துவதற்கு அந்நாட்டின் மீது குண்டுவீசுவதற்கான கோரிக்கை விடுகின்ற இல்லிநாய் அமெரிக்க செனட்டர் பேரக் ஒபாமாவுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருப்பவர். அவரை எதிர்த்து நிற்கும் குடியரசு கட்சி போட்டியாளர், பெருநிறுவனங்களுக்கு மேலும் வரிவிட்டுகொடுப்புகளுக்கு வாதிடும் மாநில முன்னாள் செனட்டர் ஜூடி மியர்ஸ் ஆவார்.

பங்கோருக்கும் ஹெர்மானுக்கும் நடுப்பகுதியிலுள்ள, மைனேயின் 32ஆவது சட்டமன்ற மாவட்டத்தில், ஓரனோவில் உள்ள மைனே பல்கலைக்கழக பட்ட மாணவர் எரிக் டெஸ்மரைன், மாநில செனட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராகும். மைனின் கிழக்கு மத்திய மற்றும் வடக்குப்பகுதிகளில் பொருளாதார அச்சாணியாக செயல்பட்டுவரும் பங்கோர் நகரில், 31,473 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பங்கோரில் கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் டெஸ்மரைஸ் ஜனநாயகக் கட்சி மாநில செனட்டர் ஜோசப் பெர்ரி மற்றும், குடியரசு கட்சி வேட்பாளர் பிராங்க் பாரிங்டன் ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார். ஒரு சிறிய வர்த்தகரான பெர்ரி, பாங்கரில் வரிவிதிப்பு தொடர்பான மாநில செனட்டின் கூட்டுநிலைக்குழு தலைவராவர். மற்றும் அவர் வர்த்தகத்திற்கான வரி வெட்டுக்களுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பாரிங்டன், நிதிக் குழு தலைவரும் மற்றும் பங்கோர் நகரசபையில் ஒரு உறுப்பினருமாவர். மற்றும் அவர் வர்த்தகத்திற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலையை, அதாவது பெருநிறுவன வரிகளை குறைத்து மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூக பாதுகாப்புக்களை மேலும் வெட்டி உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஒரேகனின் 19ஆவது மாவட்டத்தில் தென்மேற்கு போர்ட்லாந்தின் ஒரு பிரிவும் வெஸ்ட் லின், வில்சன்வில்லி, லேக் ஓஸ்வெகோ மற்றும் டவுலாட்டின் புறநகர்களும் அடங்கியுள்ளன. இங்கு மாநில செனட் சபைக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் கிறிஸ்டி ஷேபர். அவர் செனட்டராக பதவி வகிக்கும் ரிச்சர்ட் டெல்வினை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஒரேகனில் இப்போதுதான் முதல் தடவையாக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இது உலக சோசலிச வலைத் தளம் விரிவடைவதன் மூலம் கட்சியின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குரிய வாக்கு சீட்டு தகுதியை பெறுவதற்கு ஒரேகனில் கடுமையான நிபந்தனைகள் இருப்பதால், ஒரு சேவைத்தொழிலாளியான கிறிஸ்டி ஷேபர் வாக்குசீட்டு தொடர்பான கட்சியோடு இணையப்பட்ட அடையாளமில்லாமல் ஒரு சுயேட்சை வேட்பாளராவதற்கான வாக்குச்சீட்டு அந்தஸ்தை முயற்சிக்கிறார்.

வாஷிங்டனின் 36ஆவது சட்டமன்ற மாவட்டத்தில், 31 வயது கணணி ஆலோசகர் போல் பலின்காஸ், மாநில பிரதிநிதிக்கான ே

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். 36ஆவது மாவட்டத்தில் சியாட்டில் புறநகர்களான பல்லார்ட், பின்னி ரிட்ஜ், மக்னோலியா, குயூன் ஆனி, பெல்டவுன் மற்றும் கிரீன்வூட், கிரீன்லேக் ஆகிய சில பகுதிகளும் அடங்கும்.

தற்போது பதவியில் இருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹெலன் சோமர்ஸ் போட்டியிடுகிறார். இவர் வாஷிங்டன் மாநில சட்ட கீழ்சபை நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவராக இருக்கிறார். 34 ஆண்டுகளாக மாநில பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை வழங்குவதுடன் மற்றும் ஈராக்கில் போரை எதிர்க்கவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், பெருநிறுவனங்களால் வேலை மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கும் உழைக்கும் மக்களுக்கு ஒரு அரசியல் மூலோபாயத்தை முன்னெடுத்து வைப்பர்.

எங்களது தேர்தல் பிரசாரத்தின் மூலம் சோசலிச சமத்துவக் கட்சி புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் கொண்டுள்ள கடுமையான ஆத்திரத்திற்கும், எதிர்ப்பிற்கும் குரல் கொடுக்க முயல்வது மட்டுமல்லாமல், முதுகெலும்பற்ற ஜனநாயகக் கட்சி மேற்கொள்ளும் வலதுசாரி கொள்கைகள் மீதான அவர்களது அதிருப்திக்கும் குரல் கொடுக்க முயலுவர்.

குடியரசுக் கட்சிக்கு எதிராக, சோசலிச கொள்கைகள் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அமைப்பிற்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளர்களோடு ஐக்கியம் கொண்டு அமெரிக்கத் தொழிலாளர்கள் ஒரு பொது போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சியின் பிரசாரம் வலியுறுத்தும். பிரச்சினைகள் அல்லது போர், சுரண்டல், வேலையின்மை, வறுமை, மற்றும் ஜனநாயக உரிமை மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு ஒரு தேசிய ரீதியான தீர்வு எதுவுமில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்துமே, ஒரு சிறிய ஆளும் செல்வந்த தட்டு தனிப்பட்ட செல்வத்தை திரட்டுவதற்கும், பெருநிறுவன இலாபத்தின் நலன்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகள் அனைத்தையும் உலக முதலாளித்துவம் கீழ்ப்படுத்துகின்றது என்ற ஒரு முக்கிய உண்மையில் இருந்து எழுகின்றது.

எங்களது நோக்கம் முதலாளித்துவத்தை சீர்திருத்தம் செய்வதல்ல, ஆனால் ஒரு சோசலிச அமைப்பினால் அதனை மாற்றி, அதில் பொருளாதாரம் உழைக்கும் மக்களது தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் அமையுமே தவிர பெருநிறுவன நிர்வாகிகளின் பேராசைக்காக அமையாது.

எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அனைத்து மாவட்டங்களிலும், இரு கட்சியின் போர் கொள்கைகள், சமூக பிற்போக்குத்தனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நெருக்கடி நிலைமையை உருவாக்கியுள்ளது.

இல்லிநோய் 52ஆவது மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை கொண்டுள்ளது. அங்கு தன்வில்லி கிழக்குப் பகுதியில் சிறுதொழில்துறை கலந்து உள்ளது. அந்த மாவட்டத்தின் மேற்குப்பகுதியான சேம்பைன்-அர்பானாவில் இல்லிநோய் பல்கலைக்கழகம் பாரிய வேலைவாய்ப்பு தருகின்ற ஒரு நிறுவனமாகும். அத்துடன் Kraft போன்ற உணவை பக்குவப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 20 சதவீதம் வெட்டப்பட்டதன் ஒரு விளைவாக பத்தாயிரக்கணக்கான மாணவர்கள் அந்தப் பகுதியில் கல்விக்கட்டணம் உயர்ந்து கொண்டே வருவதை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் ஹிஸ்பானிய புலம்பெயர்ந்த மக்கள் தொகை வளர்ந்துகொண்டு வருவதுடன் மற்றும் பத்தாயிரம் கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக போராடும் நிலையில் உள்ளனர். வெர்மில்லியான் பிராந்தியத்தில் குறிப்பாக வேலையில்லாதவர்கள் சதவீதம் மிக அதிகமாகும், அங்கு, ஜெனரல் மோட்டார்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் ஹிஸ்டர் போர்க்லிப்ட் உற்பத்தியாளர் ஆகியவை அண்மை தசாப்தங்களில் பல தொழிற்சாலைகளை மூடியுள்ளன. மாநில சராசரி விகிதம் 5.1 சதவீதத்தோடு ஒப்பிடும்பொழுது இந்த பிராந்தியத்தில் உத்தியோகப்பூர்வ வேலையில்லாதோர் விகிதம் 6.5 சதவீதமாகும். இங்கு ஏராளமான தொழிலாளர்களும் இளைஞர்களும் இல்லாத வேலைகளை தேடி அலைவதை கைவிட்டுவிட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான ஜோ பர்னாரவுஸ்கியின் ஆரம்ப அரசியல் அனுபவங்கள் முதலில், ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவராகவும் அதற்குப் பின்னர் இல்லிநோய் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதும் வியட்நாம் போருக்கு எதிராகவும் சிவில் உரிமைகளுக்காகவும் நடைபெற்ற வெகுஜனக்கண்டனங்களில் உருவாயிற்று. ஒரு சுகாதார சேவை ஊழியர் என்ற முறையில், மத்திய மற்றும் மாநில வரவு செலவு வெட்டுக்களாலும் உழைக்கும் மக்களுக்கு மருத்துவக்காப்பீடு இல்லாததாலும் ஏற்படுகின்ற தாக்கத்தை நன்றாக அறிந்தவர்.

கடந்த 3 ஆண்டுகளாக அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராவர். 2004 தேர்தல்களில் 103ஆவது இல்லிநோய்ஸ் மாவட்டத்தில் மாநில கீழ்சபை பிரதிநிதிக்கு போட்டியிட்ட சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான ரொம் மக்கமானின் பிரசார மேலாளராக பணியாற்றினார். சோசலிச சமத்துவக் கட்சி நியமன மனுக்களில் கையெழுத்திட்ட, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் கையெழுத்தை, தகுதி இழக்கச்செய்து மக்கமானை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிடுவதற்கு இல்லிநோய் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிப்பதற்கான பிரச்சாரத்தில் முக்கிய பங்கை வகித்தவர்.

வாக்குச்சீட்டில் பர்னரஸ்கிஸ் இடம் பெறுவதற்கு ஜூன் 27 வாக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் குறைந்தபட்சம் 3,000 கையெழுத்துகளை திரட்டுவதற்காக மனுக்களை தொடங்கியதன் காரணமாக வாக்க்சீட்டு நுழைவை பெறுவதிலிருந்து மூன்றாவது கட்சி வேட்பாளரை தடுப்பதற்கு மீண்டும் ஒரு முறை இல்லிநோய் ஜனநாயகக் கட்சி சாதனம் செயல்பட்டு வருகிறது என்பதற்கான ஏற்கனவே சமிக்கைகள் தோன்றியுள்ளன.

ஜவுளி, மரம் வெட்டுதல் மற்றும் காகித தொழில்துறைகள் வீழ்ச்சியின் காரணமாக மைன் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் அண்மையில் குறைந்த ஊதிய அழைப்பு மையங்களும் (Call Centers) சில்லறை விற்பனை வேலைகளும் அதிகரித்துள்ளது. பங்கோரில், தனிநபர் சராசரி வருமானம் 19,295 டாலர்களாகவே உள்ளது. உத்தியோகபூர்வமான வறுமைக்கோட்டிற்கு கீழே 16.6 சதவீதம் தனிநபர்களும், 11.9 சதவீத குடும்பங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதி இல்லாததாலும், ஊதிய அதிகரிப்பின்மையாலும், வீட்டுவசதிக்கான செலவினங்கள் உச்சாணிக்கு சென்றுவிட்டதாலும் அவர்களது நிலைமை மோசமடைந்துள்ளது.

மைன் தனது சுற்றுப்புறச் சூழல் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற பெருநிறுவனங்கள் அழுத்தங்களுக்கும் உட்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் தொழிற்துறை கழிவுப் பொருட்களை கொண்டு வந்து கொட்டுதல், அழித்தல் மற்றும் பல தொன்கள் நிறையுள்ள ரொக்சினை உருவாக்கும் பிளாஸ்டிக், ஆர்சனிக் பூசப்பட்ட மரங்கள், பாதரசம் மற்றும் ஈயம் கொண்ட வர்ணங்கள் பூசப்பட்ட மரங்கள் போன்ற விஷத்தன்மையுள்ள கழிவு பொருட்களை எரிப்பதால் அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப்பொருட்களில் இருந்து அப்பகுதி மக்களை பாதுகாப்பதற்காக இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டது. வனவிலங்குகளில் உள்ள ரொக்சின் அளவும், குழந்தை ஆஸ்துமா விகிதமும் நாட்டிலேயே ஏற்கனவே மைனில் அதிகமாக காணப்படுகிறது.

வாக்குச்சீட்டு தகுதியை பெறுவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் எரிக் டெஸ்மராய்ஸ், இந்த மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்டுள்ள 200 வாக்காளர்களின் கையெழுத்தை பெற்றாக வேண்டும். இந்த கையெழுத்துக்களை நகரசபைகள் மே 25 அளவில் மதிப்பிட்டு ஜூன் 2 வாக்கில் மாநில செயலாளருக்கு சமர்பிக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பொதுக்கல்வி முறையில் தலைசிறந்து விளங்கிய ஒரேகன் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கூர்மையாக மோசமடைந்துவிட்டது. இது பெரும் வரிவெட்டுக்களுடன் இணையாக, பெருநிறுவனங்களையும் மிகவும் சலுகைமிக்க சமூக தட்டினரையும் செழித்து வளரச்செய்தது. இந்த வரிவெட்டுக்களோடு ஒரேகனின் சமூக சேவைகள் பொது சுகாதார மற்றும் கல்வியின் முழு சீர்குலைவு நிலை பின்னிப்பிணைந்திருக்கிறது.

ஒரேகன் மனித வளங்கள் துறை 172 மில்லியன் டாலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது மற்றும் அவற்றின் மிகப்பெரிய நகரான போர்ட்லாந்து, மாநில நிதி பற்றாக்குறை அளவு 57 மில்லியன் டாலர்களாக இருப்பதால் ஆறு பள்ளிக்கூடங்களை மூடிவிட திட்டமிட்டிருக்கிறது. மற்றும் பிற பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைக்க வகைசெய்து வருகிறது. அப்படியிருந்தும் மாநிலத்தின் தனித்ததனித்தன்மை கொண்ட "கிக்கர்" சட்டத்தினால் 2006ல் பெருநிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரிகளில் இருந்து 205 மில்லியன் டாலர்களை திரும்பப் பெறவிருக்கின்றன.

2006 ஏப்ரல் 16 Oregonian கட்டுரையில் தந்துள்ள தகவலின்படி, Fortune சஞ்சிகையில் 2005ம் ஆண்டு அமெரிக்காவிலேயே 49வது பெரிய நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள, 12.6 பில்லியன் வருவாயை கொண்ட Intel பெருநிறுவனம், 2006ல் வெறும் 10 டாலர் மட்டுமே ஓரகனின் குறைந்தபட்ச பெருநிறுவன வரி செலுத்த வேண்டும். இது ஒரேகனிலுள்ள பல பூகோள பெருநிறுவனங்களில் குறைந்தபட்ச வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அமெரிக்காவிலேயே ஒரேகன் மாநிலத்தில்தான் மிகக்குறைந்த அளவிற்கு பெருநிறுவன வரிகள் விதிக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் குடியரசுக் கட்சிக்காரர்களும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும், பெருநிறுவனங்களும் புதிதாக வரிவெட்டுக்கள் தேவை என்றும் ஏழை மற்றும் தொழிலாள வர்க்கத்தை தீவிரமாக பாதிக்கின்ற விற்பனை வரியை கொண்டு வரவேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பி வருகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் கிரிஸ்டி ஷேபரின் ஆதரவாளர்கள், ஆகஸ்ட் 29 வரையில் அவரை வாக்குப்பதிவில் இடம்பெறச் செய்வதற்காக 750 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் கையெழுத்தை திரட்டியாக வேண்டும்.

வாஷிங்டனில், விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் 1990களில் தொடங்கி 40,000 இற்கு மேற்பட்ட வேலைகளை அழித்துவிட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சியாட்டில் உட்பட மாநிலத்தின் மேற்கு பகுதியை சார்ந்தவர்கள். சென்ற ஆண்டு ஓய்வூதியங்களை குறைப்பதற்காகவும் இதர விட்டுக்கொடுப்புகளையும் நிறுவனம் கோரியதற்கு எதிராக 18,000 இயந்திர தொழிலாளர்கள் மூன்று வாரம் வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த நகரத்தின் முந்தைய ஆதிக்க தொழில் வழங்குனர்களின் வீழ்ச்சிக்கு பின்னரும் கடந்த இரண்டு தசாப்தங்களாக Microsoft, இதர மென்பொருள் மற்றும் கணணி தொடர்புடைய நிறுவனங்கள் சியாட்டலில் மகத்தான வளர்ச்சியடைந்துள்ளன. அத்துடன் அந்த நகரத்தில், காபி சில்லறை விற்பனை Starbucks வளர்ந்துள்ளது. Costco, வாஷிங்டன் பல்கலைக்கழகம், Amazon.com, மற்றும் Alaska Airlines ஆகியன இதர சியாட்டில் பெரும் நகர நிறுவனங்களில் அடங்கும்.

சியாட்டிலில் இவர்கள் மிகப்பெரிய தொழில்வழங்குனராக செயல்பட்டுவந்தாலும், மாநிலத்தில் மலிவூதிய தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், காசாளர்கள் மற்றும் எழுதுவினைஞர்கள் அதிகளவிற்கு வளர்ந்துள்ளனர். 1990களின் கடைசிப்பகுதி, தொழில்நுட்ப செழுமை காலம் என்றாலும் அதனால் வீட்டுவசதி விலைவாசி உயர்ந்தது, மற்றும் பொருளாதார சமத்துவமின்மைகள் மோசமடைந்தன. இந்த பிராந்தியத்தில் வறுமையும், வீடற்றவர்களும் குறிப்பாக வளர்ந்தனர்.

ஜூன் கடைசி வாரத்தில் சுயேட்சை மற்றும் சிறுபான்மை கட்சிகள் தங்களது மாநாடுகளை நடத்தவேண்டும் என்பது வாஷிங்டன் மாநில தேர்தல் சட்டமாகும். இதன்பொருள் என்னவென்றால், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் போல் பாலின்காஸ் வாக்குப்பதிவில் இடம்பெறுவதற்கு அவரது ஆதரவாளர்கள் ஒரு வார காலத்திற்குள் 100 செல்லுபடியாகும் கையெழுத்துக்களை திரட்டியாக வேண்டும். இது கடுமையான விதி அல்ல என்றாலும், நேரத்தை கட்டுப்படுத்துவது, சுயேட்சை மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் வாக்குசீட்டு அந்தஸ்தை பெறுவதற்கு கடினத்தை உருவாக்குவதற்கு திட்டமிட இடம்பெற்றதாகும்.

தொழிலாள வர்க்கத்தின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு தங்களது அரசியல் ஏகபோகத்தை தாங்கி நிற்பதற்காகவும், இரு பெரு வணிக கட்சிகள் விதித்துள்ள ஜனநாயக விரோத கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சீட்டில் அமெரிக்க செனட் மற்றும் கீழ்சபை வேட்பாளர்களாக இடம்பெறுவதற்கு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். மிகப்பெரும்பாலும் செனட் மற்றும் கீழ்சபை வேட்பாளர்களுக்கு திரட்ட வேண்டிய கையெழுத்துக்களைவிட குறைந்த கையெழுத்துக்கள் போதும் என்றாலும், வாக்காளர்கள் கூட்டமாக திரள்கின்ற இடங்களில் கையெழுத்துக்களை வாங்குவதற்கு போராட வேண்டியுள்ளது. தேவையான கையெழுத்துக்களை சோசலிச சமத்துவக் கட்சி திரட்டிய பின்னரும் கூட அந்த நியமன பத்திரங்களில் பெறப்பட்ட கையெழுத்துக்களை உள்ளூர் தேர்தல் வாரியங்கள் சட்ட நுட்ப அடிப்படையில் இரத்து செய்வதற்கு எல்லாவகையான சாத்தியக்கூறுகளும் உண்டு.

இத்தகைய முறை, இரண்டு பெரு வணிக கட்சிகளுக்கு மக்களது வெறுப்பு வளர்ந்து வருவதற்கு அமெரிக்காவில் ஆளும் செல்வந்த தட்டினரின் பிரதிபலிப்பாகும். அரசியல் ஏகபோகத்தை பராமரிப்பதற்கான அதன் இயந்திரமாக இரண்டு-கட்சி முறையை நிலைநாட்டுவதற்கு மிகவும் ஜனநாயக விரோத முறையை கையாள்வதற்கு அவை உறுதியுடன் செயல்படுவதை இது பிரதிபலிக்கிறது.

இரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிராகவும் அவற்றின் கொள்கையான போர், சமூக பிற்போக்குத்தனம், ஒடுக்குமுறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை வளர்ச்சியுறச்செய்ய நோக்கும் அனைவரையும் மற்றும் நமது வாசகர்களையும் எமது வேட்பாளர்களை வாக்குப்பதிவில் இடம்பெறச்செய்வதற்கான முயற்சிகளில் அவர்களை செயலூக்கத்துடன் உதவி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அவசர அழைப்பை விடுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பங்குகொள்ள இங்கே அழுத்தவும்.

Top of page