World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australia: a socialist alternative in the Victorian state election

ஆஸ்திரேலியா: விக்டோரிய மாநிலத் தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீடு

சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருக

சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
1 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 25ம் தேதி நடைபெறவிருக்கும் விக்டோரியா மாநில தேர்தலில் எமது பிரச்சாரத்திற்கும் மெல்போர்ன் பிராட்மெடோஸ் தொகுதியில் எமது வேட்பாளராக இருக்கும் வில் மார்ஷலுக்கும் ஆதரவு தருமாறும் சோசலிச சமத்துவக் கட்சி நாடெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறது.

தற்போதுள்ள உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புமுறைக்கு முற்றிலும் எதிராக ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை கட்டிமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடிவருகிறது. எமது நோக்கம் ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை போர், ஒடுக்குமுறை, வறுமை, சுற்றுச்சூழல் பேரழிவு இவற்றிற்கு காரணமான பொருளாதார, அரசியல் முறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்வைப்பதாக கொண்டுள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தப்படும் குற்றம் சார்ந்த போர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; அத்துடன் பசிபிக் முழுவதும் ஹோவர்ட் அரசாங்கத்தின் நவ-காலனித்துவ தலையீடுகளையும் எதிர்க்கிறோம். ஜனநாயக உரிமைகள் மீது பெருகி வரும் தாக்குதலுக்கு எதிராகவும், முன்னோடியில்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மையை ஏற்படுத்தியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள்மீது நடத்தப்படும் முடிவில்லாத தாக்குதல்களையும் எதிர்த்து எங்கள் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

செய்தி ஊடகத்தின் முழு ஆதரவுடன், தொழிற்கட்சி, தாராளவாதிகள், ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் சாதாரண உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான பிரச்சினைகள் பற்றி உண்மையான விவாதத்தை அடக்கும் முயற்சியில்தான் உள்ளனர். அவர்களுடைய தந்திரோபாயத்தில் என்ன வேறுபாடு இருந்தாலும், அனைவருமே "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போலிப் போர், ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்படும் போர், கிழக்கு தீமோர் மற்றும் சொலோமன் தீவுகளில் ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கின்றனர். ஹோவர்ட் அரசாங்கத்தின் பேரழிவு தரக்கூடிய இராணுவவாதம், தேசியவெறி இவற்றை வளர்க்கும் கொள்கைகள் பற்றியும், முக்கியமாக இளைஞர்களுடன் ஒரு உண்மையான விவாதத்தை மேற்கொள்ள அவர்கள் எவருமே தயாராக இல்லை.

ஒரு உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரம் இருக்கிறது என்றால், அது அரசியல் சேற்றை ஒருவர்மீது ஒருவர் அள்ளி இறைப்பதும், அச்சத்தை வளர்ப்பதும், ஒரு சில பொறுக்கி எடுக்கப்பட்ட பெயரளவிலான செலவின உறுதிமொழிகளை வழங்குவதுமாகத்தான் இருக்கிறது. பிராக்சின் தொழிற்கட்சி அரசாங்கம் பெருவணிகம் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவை மூன்றாம் முறை அதிகாரத்தை கைப்பற்றவதற்கு ஏற்கனவே வைத்திருக்கின்றது.

பெரும்பாலான வாக்களர்களை பொறுத்தவரையில், தேர்தல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. விக்கோடரியா மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்களுக்கு எதிராக ஆழ்ந்து நிற்கும் எதிர்ப்பு, விரோதப் போக்கு ஆகியவற்றிற்கு தற்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்புமுறையில் எந்த வெளிப்பாடும் கிடைக்காது. ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்.

எமது வேட்பாளரான 43 வயதான வில் மார்ஷல் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினராகவும், இதன் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்திலும் 1987ல் இருந்து அங்கத்துவராக இருக்கிறார். தற்பொழுது அவர் Footscray City Secondary College ல் கற்பிக்கிறார்; முன்பு அவர் பிராட்மெடோஸ் டெக்னிக்கல் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கற்பித்துள்ளார். உலக சோசலிச வலைத் தளத்திற்கு வழமையாக கட்டுரை எழுதுபவர்; கல்வி மற்றும் தெற்கு பசிபிக்கில் அரசியல், சமூக நெருக்கடி பற்றி சிறப்புத் தேர்ச்சி உடையவர். சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக 1998ம் ஆண்டு கூட்டாட்சித் தேர்தல்களில் போது போட்டியிட்டார்.

பாராளுமன்றத்தில் இல்லாத கட்சிகள் முன் தொடர்ச்சியான பல தடைகளை விதித்துள்ள ஜனநாயக விரோத தேர்தல் சட்டங்களினால் --விக்டோரியத் தேர்தலுக்கு குறைந்தது ஓர் ஆண்டு முன்னராகவே பதிவு செய்யவேண்டும் என்ற விதி உட்பட-- வாக்குப் பதிவுச் சீட்டில் மார்ஷலுடைய பெயருக்கு எதிரில் சோசலிசச் சமத்துவக் கட்சியின் பெயர் காணப்படாது. இச்சட்டங்கள் வேண்டுமேன்ற இரு கட்சி முறைக்கு எதிரான உண்மையான அரசியல் எதிர்ப்பை தடுக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன.

பிராக்ஸ் அரசாங்கத்தின் பங்கு

ஆஸ்திரேலிய அரசியல் தற்பொழுது தாராளவாத மற்றும் தொழிற்கட்சிகளுக்கு இடையே நடைமுறையில் இருக்கும் உடன்பாட்டின் ஆதிக்கத்தில் உள்ளது. தாராளவாத-தேசிய அரசாங்கம் கூட்டாட்சி அளவில் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் மாநில தொழிற்கட்சி அரசாங்கம் செயல்படுத்திச் சுமத்துகிறது. வெளிநாட்டு அல்லது உள்நாட்டுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏதும் இரு கட்சிகளுக்கு இடையே கிடையாது. கூட்டாட்சி தொழிற்கட்சி தலைவரான கிம் பீஜ்லி பிரதம மந்திரி ஹோவர்டையும்விடக் கூடுதால இராணுவவாதத்தையும், "ஆஸ்திரேலிய மதிப்புகளையும்" கொண்டு பெருநிறுவனங்களின் ஆதரவை ஈர்க்கிறார். இதற்கிடையில், மாநில தொழிற்கட்சி தலைவர்களின் ஆதரவு இல்லாமல், கூட்டாட்சி அரசாங்கம் தன்னுடைய தீமைகள் நிறைந்த பயங்கரவாத எதிர்ப்பு, அகதிகள்-எதிர்ப்புக் கொள்கை, பொதுநலச் செலவினக் குறைப்புச் சட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது.

இந்த வழிவகையில், பிராக்ஸின் தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு முக்கியமான அரசியல் பங்கை கொண்டுள்ளது. 1999ல் எதிர்க்கட்சித் தலைவராக இருத்தப்பட்ட ஸ்ரீவ் பிராக்ஸ் ஆரம்பத்தில் இருந்தே தொழிற்கட்சி வலதுசாரி சந்தை ஆதரவு உடைய தாராளவாதக்கட்சி கென்னட் அரசாங்கத்தின் கொள்கைகளை தொடர்வதாக பெருவணிகத்திற்கு உறுதியளித்திருந்தார். இவருடைய புதிய தீர்வுகள் இன்னும் அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தில் உபரியை பாதுகாத்தல், பெருவணிக வரி, தீர்வைகள் ஆகியவற்றை இல்லாதொழிப்பது போன்றவற்றை தொடர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் "தனியார்-அரச கூட்டுறவு முறையை" வணிகங்களுக்கு பெரும் இலாபம் தரும் வகையில் அளிப்பதாகவும் உறுதியளித்திருந்தன.

1999 ம் ஆண்டுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தது; அப்பொழுதில் இருந்து பிராக்ஸின் உறுதிமொழிகளை சமூகச் செலவினங்களை குறைத்து, விக்டோரியாவில் முதலீடு செய்வதற்கு "வாய்ப்புக்களை பெருக்கவும்" செய்தது. புதிய "ஒத்துழைப்புக் கூட்டமைப்பு" முறையை பெருக்குவதில் பிராக்ஸ் முன்னணியில் உள்ளார்; இதையொட்டி ஒரு புதிய பொருளாதார மறுசீரமைப்பு, தனியார் மயம், கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல் ஆகியவை பிரதம மந்திரி ஹோவர்ட் மற்றும் பிற ஆஸ்திரேலிய அரசாங்கக் குழுவின் (COAG) மற்ற மாநிலப் பிரதமர்களுடைய ஒத்துழைப்புடன் ஜூலை மாதத்தில் இருந்து செயற்பட்டியலில் உள்ளன.

பெருவணிக உயரடுக்கிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஆஸ்திரேலிய Financial Review ஹோவர்ட், ரூபர்ட் மேர்டோக், ரிசர்வ் வங்கி ஆளுனர், கூட்டாட்சி கருவூலப் பொறுப்பாளர் இவர்களுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் ஐந்தாம் சக்தி வாய்ந்த மனிதர் என்று, சமீபத்தில் பிராக்சை வரிசைப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய தொழில்துறைக் குழுவின் தலைமை நிர்வாகி ஹெதர் ரிடெளட் இவரை "பெரும் தேர்ச்சி உடையவர்" என்று விவரித்தார்; மெல்பேர்ன் நகரத்தின் முக்கிய நாளேடான The Age இவரைப்பற்றி வாடிக்கையாக பிரச்சார வகையில் கருத்துத் தொகுப்புக்களை வழங்கி வருகிறது.

ஒரு சர்வதேச வேலைத்திட்டம்

அனைத்து வகையான தேசிய, இன, மதவெறிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.

அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்ளுகின்றனர்; இப்பிரச்சனைகளுக்கு மூலகாரணம் முதலாளித்துவ முறையினுள் தீர்க்கப்படமுடியாத முரண்பாடுகள் இருப்பதுதான். போர், ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல், வேலையின்மை, வறுமை, இயற்கைச் சூழலை அழித்தல் ஆகியவை உலகளாவிய பிரச்சினைகள் ஆகும்; அவற்றிற்கு உலகளாவிய தீர்வுகள் தேவைப்படுகின்றன.

பகுத்தறிவார்ந்த திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்திற்கான புறநிலையான அடித்தளம் கடந்த மூன்று தசாப்தங்களில் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையின் வளர்ச்சியினால் வலுப்பெற்றுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், உற்பத்தி நுட்பங்களில் அசாதாரணமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அனைவரின் வாழ்க்கையையும் வியத்தகு முறையில் மாற்றுவதற்கான திறன்களைக் கொண்டுள்ளன.

ஆனால் தனியார் இலாபம், தேசிய அரசு முறை இவற்றின் தடைகள் முற்றிலும் எதிரான விளைவுகளை தோற்றுவித்துள்ளன. உற்பத்திச் செலவினங்களை குறைப்பதற்காக வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி வைக்கப்படுகின்றனர். சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் குறைவூதிய தொழிலாளர் பிரிவை அடைவதற்காக பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே நடக்கும் போட்டி பொருளாதார மோதல்கள், செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டி ஆகியவற்றிற்கு எரியூட்டுவதுடன் உலகப் போருக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்ததுலையும் கொடுத்துள்ளன.

பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஒற்றுமையின் தேவையை மாபெரும் அளவில் வலுப்படுத்தியுள்ளது. தேசிய எல்லைகள் கடந்த வகையில் வெகுஜன இயக்கங்களின் வளர்ச்சியில் இது அரசியல் பிரதிபலிப்பை காண்கிறது. 20 மில்லியனுக்கும் மேலான மக்கள் பங்கு பெற்றிருந்த பெப்ருவரி 2003ல் ஈராக் போருக்கு எதிராக தன்னியல்பாக எழுந்த உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வதேச எதிர்ப்புக்கள் ஆகும்.

மற்றும் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய சகோதர கட்சிகளும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களை, ஒரு சர்வதேச சோசலிசத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த போராடி வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மூன்று அடிப்படை தளங்களை கொண்டுள்ளது; இராணுவவாதம், போருக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படல், விரிவுபடுத்தப்படல் என்பதற்கான போராட்டம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டம் என்பவையே அவை.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து ஆஸ்திரேலிய, வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெறு! பசிபிக்கில் ஆஸ்திரேலிய தலையீட்டை நிறுத்து!

ஈராக்கில் சட்ட விரோதமான அமெரிக்க ஆக்கிரமிப்பு எண்ணெய்வள கொழிப்பு உடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளது. படையெடுப்பை நியாயப்படுத்த கூறப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகிவிட்டன: பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள் கண்டுபிடக்கப்படவில்லை, சதாம் ஹுசைனுக்கு அல் கொய்தாவுடன் எந்த தொடர்புகளும் இல்லை; மற்றும் ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு பதிலாக ஈராக்கிய மக்கள் பேரழிவை எதிர்கொண்டு நிற்கின்றனர். கிட்டத்தட்ட 655,000 நிரபராதி ஈராக்கியக் குடிமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இதைத்தவிர நாட்டின் பொருளாதாரம், அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை அழிவில் இருப்பதால் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஹோவர்ட் அரசாங்கம் புஷ் அரசாங்கத்தின் குற்றங்களுக்கு நேரடி உடந்தையாக உள்ளது. இராணுவ, அரசியல் உதவியை இது அளித்துள்ளது; இதற்கு ஈடாக வாஷிங்டன் கான்பெர்ராவின் கிழக்கு தீமோர் மற்றும் சொலோமன் தீவுகளின் மீது நடத்தப்படும் ஆக்கிரோஷ தலையீடுகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. அமெரிக்காவின் இழிவான துணை ஒப்பந்தக்காரர் போல் ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது; இதற்கு அதற்கு கிடைத்த வெகுமதி பசிபிக்கில் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்திற்கு ஆதரவாக அமெரிக்காவை பெற்றுள்ளதாகும்.

தொழிற்கட்சி, ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் அனைவருமே இத்தகைய இராணுவ ஆக்கிரமிப்பு வெடிப்பிற்குப் பின் அணிவகுத்து நிற்கின்றனர். ஈராக்கில் ஆஸ்திரேலிய துருப்புக்கள் பற்றிய பசுமைக் கட்சி தலைவர் பீஜ்லியின் சமீபத்திய "வேறுபாடுகள்" உத்திகளை ஒட்டித்தான். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அவர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்; ஆனால் ஆஸ்திரேலிய படைகள் பசிபிக்கில் நிறுத்தப்பட்டு பெருவணிக ஆஸ்திரேலிய நலன்களை சிறப்பாக காப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். அனைத்துப் பாராளுமன்ற கட்சிகளும் ஹோர்டின் நவ-காலனித்துவ வகையிலான நடவடிக்கைகளை சொலோமன் மற்றும் கிழக்கு தீமோரில் ஆதரிக்கின்றன. மற்றும் சமீபத்தில் பாப்புவா நியூ கினியா, வானுவடு மற்றும் பிஜி பற்றிய அவருடைய கொள்கைகளுக்கும் ஆதரவை கொடுக்கின்றன. ஆஸ்திரேலிய சமூகம் இராணுவ மயமாக்கப்படுவதற்கும், படைகள் விரிவுபடுத்தப்படுவதற்கும் தொழிற்கட்சி தன்னுடைய ஆதரவைக் கொடுத்துள்ளது. ஒரு இளைய தலைமுறை முழுவதும் இந்தப் பேரழிவு விளைவுகளை சுமக்கும்.

ஒரு புதிய இராணுவவாதத்திற்கான பிரச்சாரம் "ஆஸ்திரேலிய மதிப்புகள்" வளர்ச்சியுடன் இணைந்து நிற்கிறது; இச்சொற்றொடரின் பொருள் நாட்டுப்பற்று, போரை பெருமைப்படுத்துல் என்பதாகும். இதன் நோக்கம் சமூகத்தில் தடுமாற்ற நிலையில் இருக்கும் பிரிவுகளை பலிகடாவாக்க கொள்ளும் தளத்தை நிறுவதல் ஆகும். ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய ஆத்திரமூட்டல்கள் நிகழ்கின்றன. அரசாங்கம், தொழிற்கட்சி, செய்தி ஊடகம் ஆகியவற்றின் வெறிக் கூச்சல்களில் "முஸ்லிம்" என்பதற்கு பதிலாக "யூதர்" என்று மாற்றினால், 1930 களில் ஐரோப்பாவில் இருந்த இருண்ட காலத்தை நினைவுகூர முடியும்.

அனைத்து ஆஸ்திரேலிய, மற்றும் வெளிநாட்டுப் படைகளும் ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. இதேபோல், ஆஸ்திரேலிய படைகள், அதிகாரிகள் கிழக்கு தீமோர், சொலோமன் மற்றும் பசிபிக்கில் எஞ்சிய பகுதிகளில் இருந்து திருப்பப் பெற வேண்டும் என்று கோருவதுடன், சோசலிச சமத்துவக் கட்சி ஹோவர்டின் இராணுவ விஸ்தரிப்பிற்கான திட்டத்தையும் எதிர்க்கிறது. புஷ், ஹோவர்ட் மற்றும் சக சதிகாரர்கள் அனைவரும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்த போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, விரிவாக்கம் செய்தல்

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவது அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலை அதிகப்படுத்துவதற்கு போலிக் காரணமாக ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹோவர்ட் அரசாங்கம், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, 37 புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கொண்டுவந்துள்ளது; இது ஏழு வாரங்களுக்கு சராசரியாக ஒரு புதுச்சட்டம் என்று ஆகும்.

இது மாநில தொழிற்கட்சி பிரதமர்களின் ஆதரவினால்தான் செய்ய முடிந்துள்ளது. "பயங்கரவாத-எதிர்ப்பு", நாட்டுத் துரோகம், தணிக்கைச் சட்டங்கள் என்று ஏராளமான கருத்துக்களுக்கு சட்டநெறியை கொடுக்கும் வகையில் சட்டத்தை இயற்றுவதில் பிராக்ஸ்தான் முன்னணியில் நின்றார். மிகப் பரந்த அளவில் "பயங்கரவாதம்" விளக்கப்பட்டுள்ள வகை எந்த அரசியல் எதிர்ப்பு அல்லது தொழில்துறையையும் உட்படுத்தக் கூடிய தன்மையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக கொடுங்கோன்மைக்கு எதிராக இருந்த பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டு, ஒருதலைப்பட்சமான விசாரணை இல்லாத கைது, ASIO இன்னும் பிற பாதுகாப்புப் பிரிவுகளால் மிகப் பரந்த கண்காணிப்புக் கருவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை, பகுதி இரகசிய விசாரணைகள் மற்றும் அரசாங்க உத்தரவின்போரில் அமைப்புக்கள் சட்டத்திற்கு புறம்பானவை என அறிவிக்கப்படுதல் ஆகியவை நடந்துள்ளன.

பிராக்சின் அரசாங்கம் கடந்த ஆண்டு பெரும் பீதியை கிளப்பிவிட்டு புதிய பயங்கரவாத சட்டங்களின் தொகுப்பை கொண்டுவருவதற்கான வழிவகையிலும் நேரடித் தொடர்பை கொண்டிருந்தது. பிராட்மெடோஸ் உட்பட மெல்போர்னின் வடக்குப் புறநகர்களில் இருந்து கைதுசெய்யப்பட்ட 13 இளைஞர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக விசாரணையின்றி உயர்பாதுகாப்பு உடைய சிறையில் வாடிவருகின்றனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ASIO, போலீஸ் ஊடுருவல், தூண்டுதல்கள் முற்றும் முன்பு ஜாக் தோமசிற்கு எதிராக போலி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போன்றவற்றிற்கு வழிவகுத்துள்ளது. ஜாக் தோமஸ் பின்னர் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் "கட்டுப்பாட்டு உத்தரவின்" அடிப்படையில் நடைமுறையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலைதான் தோன்றியுள்ளது.

இச்சட்டங்களின் நோக்கம், பயங்கரவாதத்தை தடுப்பது அல்ல --வன்முறைச் செயல்கள் எப்பொழுதுமே குற்றவியல் சட்டத் தொகுப்பின் படி சட்டத்திற்கு புறம்பானவைதாம்-- ஒரு பீதி உணர்வை ஏற்படுத்தி இன்னும் கூடுதலான வகையில் ஜனநாயக உரிமைகளை அதிகமாக இல்லாதொழித்துவிட வகை செய்தல்தான். தஞ்சம் கோருவோருக்கு எதிராக அச்சுறுத்தல் தன்மை நிறைந்த பிரச்சாரம், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் மூலம் தொடர்கிறது. இது அரசியல், சமூக அமைதியின்மையை அடக்குவதற்குத்தான் விரைவில் செயல்படுத்தப்படும். ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கான சட்டபூர்வ சாரத்தைத்தான் இப்படி இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

"சட்டம், ஒழுங்கு" என்பது தன்னுடை அரசாங்க செயற்பட்டியலில் மத்திய இடத்தைக் கொண்டுள்ளது என்று பிராக்ஸ் கூறுகிறார். புதிய அதிகாரங்களின் விரிவாக்கம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது; இதில் தெருக்களிலும் பள்ளிகளிலும் சோதனைகள் நடத்துவது, விசாரிப்பது ஆகியவை அடங்கியுள்ளன. கென்னட் அரசாங்கத்தில் இருந்ததைவிட 1,400 பேர் அதிகமாக்கப்பட்டு போலீசார் எண்ணிக்கை இப்பொழுது 11,000 ஆக உள்ளது. பிராக்ஸ் அரசாங்கம் உலகளாவிய வணிக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகவும், Feltex, BHP Steel ஆகியவற்றில் நடத்தும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்கு எதிராகவும் ஹோவர்ட் அரசாங்கத்திற்கு ஆதரவாக திரட்டியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி இத்தகைய மாநில, கூட்டரசு "பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டங்கள் அகற்றப்பட வேண்டும், ASIUO மற்ற பாதுகாப்பு உளவுப் பிரிவுகள் கலைக்கப்பட வேண்டும், குடியேறுபவர்கள் தடுப்பு மையங்களை மூடப்படவேண்டும் என்று கோருகிறது. டேவிட் ஹிக்ஸ், மற்றும் அமெரிக்க குவான்டநாமோ குடா இன்னும் பல இரகசிய தடுப்புக் காவல் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

குடியுரிமை சுதந்திரங்கள் மற்றும் பிற ஜனநாயக உரிமைகளை சோசலிச சமத்துவக் கட்சி அயராமல் காத்திட முற்படுகிறது. தேசிய, இன, மத, பால், பால்விருப்ப வேறுபாடுகள் சார்ந்த பாரபட்சங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக்கப் பட வேண்டும். குடியேறுதலில் அனைத்துவகையான தடைகளும் அகற்றப்பட்டு தொழிலாளர்கள் எங்கு விரும்பினாலும் அங்கு வாழ்ந்து, கற்று, வேலை செய்யும் உரிமை, முழு சட்ட, அரசியல் சமூக உரிமைகளை கொள்ளுதல் ஆகியவற்றிற்கும் வகை செய்ய வேண்டும். மகளீருக்கு தடையற்ற முறையில் கருக்கலைப்பு செய்யும் உரிமை வேண்டும்.

சமூக சமத்துவம் இன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

முதலாளித்துவ அமைப்பு முறையின் அரசியல் பிரதிநிதிகளிடம், பரந்துவிரிந்திருக்கும் சமூக சமத்துவமின்மைக்கு தீர்வு ஏதும் கிடையாது. மில்லியன்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய நம்பிக்கையான கெளரவமான கல்வி, பாதுகாப்பான வேலைகள், வசதியான வீடுகள் போன்றவை உலக மூலதனத்தின் தேவையின் ஆணைகளுக்காக ஊதிய வெட்டுக்கள், தனியார்மயம், "உபயோகிப்போர் கட்டணம் செலுத்துதல்" ("User Pays") போன்றவற்றின் விளைவாக தகர்க்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்.

இந்த இகழ்வான உண்மையை செய்தி ஊடகங்கள் மூடிமறைத்தாலும், ஆஸ்திரேலியா ஆழ்ந்த பிளவுற்றிருக்கும் ஒரு சமுதாயம் ஆகும். அண்மையில் Business Review Weeekly வெளியிட்ட ஆண்டின் பணக்காரர் பட்டியல் 200 செல்வம் கொழித்த ஆஸ்திரேலியர்களின் மொத்த வருமானம் 2005-06ல் 22 சதவிகிதம் உயர்ந்து $101.5 பில்லியனை அடைந்தது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது; அதாவது பட்டியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் சராசரியாக அரை மில்லியன் கூடுதலாயிற்று. மறு கோடியில், மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள், குழந்தைகள் உட்பட, அதிகாரபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே, அன்றாடம் தப்பிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ளவர்கள் இழிவான செல்வக் கொழிப்பை, பெரும்பாலான தொழிலாளர்களின் நேரடி இழப்பில் குவிக்கின்றனர். மறுசீரமைப்பு, ஆட்குறைப்பு என்ற பெயரில் இடைவிடா வழிவகை மேற்கொள்ளப்பட்டு பெரும் இலாபங்கள் ஈட்டப்படுகின்றன; இவற்றில் ஊக வகையிலான பெரும் இலாப மழைகளும் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுதல், இணைத்தல், பங்குச் சந்தை நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் பெறலாம் என்ற செயல்பாடும் உள்ளன. பல தலைமுறையாக தொழிலாளர்களால் கட்டியமைக்கப்பட்டிருந்த சமூக உற்பத்தி தகமையை, மனிதனை மனிதன் அடித்துத் தின்னும் முறையினால் பெருவணிக நிர்வாகிகளும் இயக்குனர்களும் மிகப் பெரிய மேலதிக தொகைகளை பெறுகின்றனர்.

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு இன்னும் கூடுதலாகி உள்ளது. 2005ம் ஆண்டு ஜூன் காலாண்டு இறுதியில், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தொழிலாளர்களுடைய ஊதியப் பங்கு கிட்டத்தட்ட இதுகாறும் இல்லாத அளவிற்கு குறைந்த 53.2 சதவிகிதமாக இருந்தது; 1980களின் தொடக்கத்தில் இது 61 சதவிகிதமாக இருந்தது. உத்தியோகபூர்வ ஆஸ்திரேலிய புள்ளிவிவர நிறுவனம் (Official Australian Bureau of Statistics ABS) கொடுத்துள்ள தகவல்களின்படி, ஜூன் 2005 காலாண்டு இறுதியில் நிறுவனங்களின் இலாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிகமான 27.4 சதவிகிதத்தை அடைந்தது; அது 1990 களின் இடைப்பகுதியில் இருந்ததை விட 22.6 சதவிகிதம் அதிகமாகும். 2006ல் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சராசரி தொழிலாளர்களை விட 63 மடங்கு அதிக ஊதியத்தை பெறுகின்றனர்; சில தலைமுறைகள் முன்பு இது 10 மடங்குதான் அதிகமாக இருந்தது.

ஹோவர்ட் அரசாங்கம் வேலையின்மையை குறைத்துவிட்டதாக கூறிக் கொள்ளுகிறது. ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் உண்மையான வேலையின்மை நிலையான 17 சதவிகிதத்தை (5 சதவிகிதம் அல்ல) மறைக்கின்றது. வேலை செய்ய விரும்புவோர், இன்னும் கூடுதலான வேலை வேண்டும் என்போர் கணக்கை சேர்க்கும்போது 17 சதவிகிதம்தான் வரும். பாதுகாப்பான, முழுவேலைகள் தகர்க்கப்பட்டுவிட்டு, பெருகிய முறையில் தற்காலிக, பகுதி நேர, குறைவூதியத் தொழிலாளர் பிரிவு என்பது, பெருகிய முறையில் "வேலைசெய்யும் ஏழைகள்" (Working poor) பட்டாளம் வந்துவிட்டதைத்தான் காட்டுகிறது. உற்பத்தித் துறைகளில் பெரும் பிரிவுகள் தகர்க்கப்பட்டுவிட்டது, பிராட்மெடோசில் குறிப்பாகக் காணப்படுகிறது; இங்கு வேலை வெட்டுக்களும், ஆலைமூடல்களுடன் போர்ட், தெற்கு பசிபிக் டயர்கள், ஆடோலிவ், கிராப்ட் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை பாதித்து விட்டன.

மாநில அரசாங்கங்கள் சமூகநலன செலவினங்களைப் பெரிதும் குறைத்து, வரி வெட்டுக்கள் மற்ற வணிகத்திற்கான நிதி ஊக்கங்களை கொடுத்துள்ளன. விக்டோரியாவில் நிதிமந்திரியான ஜோன் பிரம்பி சமீபத்தின் அவருடைய அரசாங்கம் $4 பில்லியன் மதிப்புள்ள வரிவெட்டுக்களை "மாநிலம் கூடுதலான முதலீட்டை ஈர்ப்பதற்காக" அளித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையொட்டி பொது சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வீடுகட்டுதல், போக்குவரத்து ஆகிய துறைகளில் பெரும் பாதிப்புத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. ஜூன் மாதம் வரை 36,000 பேர் அறுவைச் சிகிச்சைக்கு காத்திருக்கும் பட்டியலிலும் மற்றும் 20,000 பேர் சிறப்பு மருத்துவக் கவனிப்பிற்காகவும் பட்டியலில் காத்துள்ளனர். ஒவ்வொரு இரவும் 20,000 விக்டோரியாக் குடிமக்களுக்கு மேலே கூரை கிடையாது. பொது இல்லங்கள் கொடுக்கப்படுவதற்காக 35,000 பேர் பட்டியலில் காத்திருக்கின்றனர்.

"ஏழைகள்" என்று உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்து மட்டும் அல்லாமல், பெரும்பாலான உழைக்கும் மக்கள் அன்றாட வரவு செலவிற்கு பெரும் போராட்டம் நடத்துகின்றனர். ஜூன் 1993க்கும் ஜூன் 2003க்கும் இடையே விக்டோரியாவில் சராசரி வீட்டு விலைகள் $145,000ல் இருந்து $359,000 என்று இருமடங்காக உயர்ந்து விட்டன. இதையொட்டி வாடகைகள், வட்டிப்பணம் போன்றவை அதிவிரைவாக மேலே சென்றுவிட்டன. கடன் அட்டை திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன்கள் பெரிதும் உயர்ந்து வருமானம், செலவினங்களை சமன்படுத்த முடியாமல் மக்கள் திணறுகின்றனர். இதையொட்டி சூதாட்டத்தில் பெரும் வளர்ச்சி புற்றுநோய் போல் ஏற்பட்டுள்ளது; அரசாங்க, தனியார் அமைப்புக்கள் சூதாடவே முடியாதவர்களின் திகைப்பை பயன்படுத்தி சூதில் ஈடுபடவைக்கின்றன.

இளைஞர்களுக்கு தேர்ந்த வருங்காலத்தை அரசாங்கம் அளிக்க முடியாது. மற்ற சமூக நலன்களை போன்றே கல்வியும் சந்தை விதிகளுக்கு தாழ்ந்திருக்கும் வகையில் தள்ளப்பட்டு விட்டது. பொதுக் கல்வி நிலையங்களுக்கு நிதியங்கள் கொடுக்கப்படுவது இல்லை; பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெரும் கட்டணச் செலவை ஏற்கவேண்டியுள்ளது. மூன்றம் அடுக்கில் உள்ள நிறுவனங்களில் சேர கஷ்டப்பட்டு வெற்றிய அடைந்தவர்களும் வாழ்க்கை முழுவதும் கடனாளியாக இருக்க வேண்டுமே என்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர்; ஏனெனில் இடைவிடாமல் பெருகி வரும் கல்விக் கட்டணத்தின் விளைவு அப்படித்தான் இருக்கும். கல்வியும் இல்லாமல் இளைஞர்கள் முன்னேற்றமே இல்லாத வேலைகள், அடிக்கடி வேலையின்மையை எதிர்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பரந்த வழிவகையின் ஒரு சிறுகுவிப்பைத்தான் காட்டும் வகையில் பிராட்மெடோஸ் உள்ளது. தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர். அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் 13.4 ஆகும்; ஆனால் உண்மை எண்ணிக்கை இதைவிட மிக உயர்ந்தது ஆகும். சரிந்து விட்ட பொது வீடுகள் குடியிருப்புக்களையும் --95 சதவிகிதத்தினர் பொதுநல உதவித்தொகையை நம்பி இருப்பவர்கள்-- மற்றும் இளைஞர்கள் மிகப் பெரும் கடன்சுமைகளை கொண்டுள்ள இளைய குடும்பங்களையும் கொண்ட புதிய தனியார் வளர்ச்சிப் பகுதிகளையும் இணைத்த வகையில் இத்தொகுதி உள்ளது. பிராட்மெடோசின் மாணவர்களில் 30 சதவிகித்தினர்தான் 12 வயது வரை படிக்கின்றனர்; இது மாநில சராசரியில் பாதிதான். இங்கு பொது மருத்துவமனை கிடையாது; கடுமையான நோய்களுக்கு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் எப்பிங்கிற்கோ, மெல்போர்ன் நகரத்திற்கோ தான் செல்ல வேண்டும்.

சோசலிச மாற்றீடு

சோசலிச சமத்துவக் கட்சி கீழ்க்கண்ட கொள்கைகளுக்காக போராடுகிறது:

* பொது உடைமையாக்கல்: வீணடித்தல், தவறான நிர்வாகம் மற்றும் சமூகத்தின் உற்பத்தித் திறன் தனியார் ஏகபோகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விளைவாக ஏற்படும் குறுகிய கால இலாபம் ஆகியவற்றுக்கு எதிராக, நாங்கள் வங்கி, நிதிநிறுவனங்களுடன் சேர்த்து அனைத்து பெரிய தொழிற்துறைகள், சுரங்கங்கள், விவசாய நிறுவனங்களையும் பொது உடைமை கொண்டுள்ள நிறுவனங்களாக மாற்றமடைவதை ஆதரிக்கிறோம். சிறிய பங்குதாரர்கள் தக்க முறையில் முழு இழப்பீட்டையும் பெறுவர், அதேவேளை பெரும் பங்குதாரர்கள் பகிரங்கமான பேச்சுவார்த்தைகள் மூலம் இழப்பீட்டை பெறுவர்.

* வேலைகள்: அனைவருக்கும் நல்ல ஊதியத்துடன் முழு வேலை, திருப்திகரமான மற்றும் பாதுகாப்பான வேலைகள் என்பதை உறுதிப்படுத்த, அனைவரது வாழ்க்கைத் தரங்களையும் முன்னேற்றுவதற்கு பொதுப் பணிகள் தொடர்பாக பரந்த வேலைத்திட்டங்கள் அவசியம் நிறுவப்பட வேண்டும்; வேலைகளை உருவாக்க உதவவும் தொழிலாளர்கள் அரசியல், பண்பாட்டு வாழ்வுக் கூறுபாடுகளில் பங்கு பெறுவதை அனுமதிக்கும் வகையில், உழைப்பு வாரம் என்பது 30 மணி நேரமாக, ஊதிய இழப்பின்றி கட்டாயம் குறைக்கப்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் ஆண்டு ஒன்றிற்குக் குறைந்தது ஐந்து வாரங்களாவது முழு ஊதியத்துடன் ஆண்டு விடுமுறை பெற வேண்டும்.

* சமூகப் பாதுகாப்பு: வறுமை ஒழிக்கப்பட வேண்டும்: அத்துடன் வேலையற்றவர்களை குறைவூதிய தொகுப்பான தொழிலாளர்களை சுரண்டுதலும் நிறுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு உழைப்பாளிக்கும் தன்னுடைய குடும்பத்தை வசதியுடன் காக்கும் அளவிற்குப் போதுமான வருமானம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். வேலை செய்ய இயலாதவர்கள் -- குறையுற்றவர்கள், வயதானவர்கள், ஒரே பெற்றோராக இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் --- ஆகியோருக்கு கெளரவமான, வசதியான வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான வாழ்வு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

* கல்வி, சுகாதாரம், சமூகப் பணிகள்: பொது மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், சிறார் காப்பு வசதிகள் ஆகியவற்றை தரத்தில் உயர்த்தவும், விரிவாக்கவும், போதுமான ஊழியர்களை நியமிக்கவும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இப்பணிகள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படும். பொது இல்லங்கள் கட்டுவதை குறைப்பது நிறுத்தப்பட வேண்டும்; புதிய உயர்தர வீடுகள் கட்டப்பட வேண்டும்; வாடகைகளும், வீட்டுக் கடன்களும் குறைக்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளி உறைவிடத்திற்கு தன் வருமானத்தில் 20 சதவிகிதத்திற்கு குறைவாக செலவழிக்குமாறு இருக்க வேண்டும்.

* கலைகள்: கலைகள், பண்பாட்டுத் துறைகளில் நிதி செலவழிக்கப்பட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் அரங்குகள், இசை மன்றங்கள், திரையரங்குகள், நூலகங்கள், பொதுத் தொலைக் காட்சி, வானொலி, கலை, இசைக் கல்வி ஆகியவை கிடைக்குமாறு செய்ய வேண்டும். தனியார் இலாபத்திற்காக பண்பாட்டு வாழ்வை தாழ்த்திக்கொள்ளல், இராணுவவாதம், மிருகத்தனம், பிற்போக்குத்தனம் ஆகியவற்றை பெருமைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு பதிலாக அனைத்து வகையான பண்பாட்டு வெளிப்பாடுகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்; அதற்கு உதவித் தொகைகள், நிதியங்கள் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். கலைஞர்கள், இசைவாணர்கள் மற்ற பண்பாட்டுப் பிரிவினர் கொண்ட குழுக்கள் அவற்றை கட்டுப்படுத்தும்.

* சுற்றுச் சூழல்: ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதியைத் தற்பொழுது பாதித்துள்ள வறட்சி நிலை இலாபமுறையின் பெரும் குழப்பம் ஏற்படுத்தியுள்ள பெருகிய சுற்றுச் சூழல் அழிவு என்ற பேரழிவின் விளைவிற்கு ஒரு உதாரணம் ஆகும். இதை தீர்ப்பதற்கு குறுகிய கால உதவி கடுமையாக வாடும் கிராமப்புற சமூகங்களுக்கு, குறிப்பாக பெரும் தேவையில் இருப்பவருக்கு வேண்டும் என்று மட்டும் இல்லாமல், பரந்த முறையில், நீண்ட கால அடிப்படையில் நீரை பகுத்தறிவார்ந்த முறையில் பாதுகாத்துப் பயன்படுத்துதல், உலகம் உஷ்ணமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தத் தீர்மானமும் ஜனநாயக முறையில் திட்டமிட்டு உண்மையான உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்; இலாப முறை, சந்தைப் பொருளாதாரம் மற்றும் தேசிய அரசு ஆகிய கருத்துக்களால் இயக்கப்படும் சமூகத்தில் இது இயலாது,

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள் மகத்தான பிரச்சினைகள் ஏதும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள தனியார் சொத்துக் குவிப்பின் பரந்த இருப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் சாதிக்கப்பட முடியாது. பாராளுமன்ற ஜனநாயகமுறை என்னும் கருவி, பொருளாதார சக்தியின் நெம்பு கோல்கள், சாதாரண மக்கள் அறியாவகையில், அவர்களுடைய விதியை நிர்ணியிக்கும் வகையில், சர்வாதிகார முடிவுகளை எடுக்கும் பெரு நிறுவன உயரடுக்கினரால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை மறைத்துள்ளது. உண்மையான ஜனநாயகம் என்பதை அடைவதற்கு, தங்களுடைய அன்றாட வாழ்வின் சூழ்நிலை, வேலைநிலைகள் ஆகியவை பற்றிய பொருளாதார முடிவு எடுக்கும் அதிகாரம் சாதாரண மக்களிடம் இருக்க வேணும்.

இறுதியில், உண்மையான ஜனநாயகமானது சோசலிசத்திற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் நன்கு அறிந்து, வெளிப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்படுவதன் மூலம் மட்டுமே அடையப்பட முடியும். தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களை பிரதிநிதித்துவம் செய்து மற்றும் அவர்களுக்கு தங்கள் வாழ்வை பாதிக்கும் முடிவுகள் மீதாக முழு ஜனநாயக கட்டுப்பாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் ஓர் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கின்றது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் தற்போதுள்ள சமூக அரசியல் ஒழுங்கைத்தான் காக்கின்றன என்னும் இந்லையில் அவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் கட்டமைப்பிற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. பல மத்தியதர வர்க்க எதிர்ப்பு அமைப்புக்கள் Socialist Alliance போன்றவை, தொழிற்கட்சி, தாராளவாதக் கட்சியுடன் ஒப்பிடும்போது "குறைந்த தீமை" போன்ற கருத்துக்களை நாம் முற்றிலும் நிராகரிக்கிறோம். கடந்த இரு தசாப்தங்களின் அனுபவங்கள் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகக் குறுகிய கால நலன்களை காத்து பிரதிபலிக்கும் தன்மையுடையவை என்ற நிலையில் இருந்துங்கூட முற்றிலும் சரிந்து விட்டன. அவை புத்துயிர்கொடுக்கப்பட இயலாதவை.

தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் வரலாறானது, தெளிவான தேசிய சீர்திருத்த வாதம், பொருளாதர கட்டுப்பாட்டு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள கட்சிகள் எங்கும் சரிந்துவிட்டதற்கு தெளிவான உதாரணங்களாக உள்ளது. உலகந்தழுவிய உற்பத்திமுறையின் தாக்கத்தினால், தொழிற் கட்சியும் தொழிற்சங்க தலைவர்களும் எட்டு-மணி நேர வேலை, அபராத விகிதங்கள், விடுப்பு நலன்கள் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை பாதுகாத்தலை, மூலதனத்தை ஈர்த்து உலக சந்தைகளை திருப்திப்படுத்துவதற்காக கைவிட்டுவிட்டன.

போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கப் போராட்டங்களை கண்ட நீண்டகால வரலாறு விக்டோரியாவிற்கு உண்டு. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளின் கசப்பான அனுபவங்கள் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை எப்படி முற்போக்குத்தனமாகவும், போர்க்குணம் மிக்கதாக இருந்தாலும், இருக்கும் அதிகாரங்களுக்கு முறையீடு என்ற நிலையில் பயன் ஏதும் தரா என்பதை நிரூபித்துவிட்டன. விக்டோரியாவில் இருந்து 240,000 தொழிலாளர் உட்பட, கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய முழுவதும் அரை மில்லியன் தொழிலாளர்கள், "வேலை விருப்பத் தேர்வுகள்" ("Work Choices") என்ற கூட்டரசு சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பரித்தனர். ஆனால் சிறிதும் விட்டுக் கொடுக்க ஹோவர்ட் மறுத்த அளவில், தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு மத்தியில் ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் வரும் வரை பொறுத்திருக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், பாதிப்பிற்கு உட்படுவதும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

பசுமை கட்சியினர் தொழிலாள வர்க்கத்தினருக்கு ஓர் உண்மையான மாற்றீட்டைக் கொடுக்கவில்லை. இலாப முறையை எதிர்ப்பது என்பதில் இருந்து வெகு தொலைவில் இருந்து பசுமைக் கட்சியினர் பெருவணிக நிர்வாகக் குழுக்கள், அரசாங்கங்கள் ஆகியவை சமூக, சுற்றுச்சூழல் இணக்கத்திற்கு பொறுப்பு கொள்ள வேண்டும் என்ற பயனற்ற முறையில் முயல்கின்றனர். தொழிற்கட்சி போலவே, பசுமைக் கட்சியினரும் கொள்கை அளவில் ஈராக் போரை எதிர்க்கவில்லை; மாறாக ஆஸ்திரேலிய துருப்புக்கள் அங்கு இருப்பதற்கு பதிலாக நாட்டிற்கு அருகில் வரவேண்டும் என்றனர். இதையொட்டி பசிபிக் பகுதியில் ஹோவர்டின் ஆக்கிரமிப்பு கொள்கையை அவர்கள் ஆர்வத்துடன் ஆதரித்துள்ளனர்; அதேபோல் கிழக்கு தீமோர் மற்றும் சொலோமன் தீவுகளிலும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பசுமைக் கட்சியினர்பால் ஈர்க்கப்படும் எவரும் ஜேர்மனியில் அவர்களுடைய வரலாற்றை கவனிக்க வேண்டும்; அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அங்கு செயல்பட்டு அவர்கள் பிற்போக்குத்தனமான பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தியதுடன் ஜேர்மனிய படைகளை பால்கன்களுக்கும் ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பி வைத்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி சமூகத்தை உயர்மட்டத்தில் இருந்து அடிப்பகுதி வரை, சோசலிச கொள்கையின் அடிப்படையில் மாற்றி அமைக்க விரும்புகிறது. சாதாரண மக்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கு ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டமைக்கும் வரை அத்தகைய பணி நினைத்துப் பார்க்க முடியாதது ஆகும். தொழிலாள வர்க்கம் கற்பதற்கும், திரளுவதற்கும் இன்றியமையாத முன்னிபந்தனை சோசலிசம், சர்வதேசியம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய வெகுஜனக் கட்சியை அமைப்பதுதான்.

அனைத்துவிதமான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக, தைரியமான, தொலைநோக்குடைய தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகள் பல தசாப்தங்கள் நடத்திய நீடித்த போராட்டத்தின் முக்கியமான படிப்பினைகளை எங்கள் இயக்கம் அடித்தளமாக கொண்டுள்ளது. இந்த மரபின் மாபெரும் உருவகமாக விளங்குபவர் ரஷ்ய புரட்சியின் இணைத்தலைவரான லியோன் டிராட்ஸ்கி ஆவார்; சோசலிசத்தின் மகத்தான உயர் இலக்குகளை தவறாகப் பயன்படுத்தி காட்டிக் கொடுத்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக சிறிதும் விட்டுக் கொடுக்காத அரசியல் போராட்டத்தை நடத்தியவராவர். ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினராக உள்ளனர்: இது 1938ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி நிறுவிய உலக சோசலிஸ்ட் புரட்சிக் கட்சியின் தொடர்ச்சியான அமைப்பு ஆகும்.

போர், இராணுவவாதம் ஆகியவற்றை எதிர்ப்பவர்கள், ஜனநாயக உரிமைகள், சமூக சமத்துவம் ஆகியவற்றிற்காக போராட விழைபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் விக்டோரியா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற வருமாறு நாங்கள் அழைக்கிறோம். ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ளுமாறும் எமது கட்சியில் இணைந்து அதைக் கட்டமைக்குமாறும் அழைப்பு விடுகிறோம்.