World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy stigmatises immigrants and glorifies the French nation

சார்கோசி புலம்பெயர்ந்தோரை இழிவுபடுத்தி பிரெஞ்சு தேசத்தை பெருமைப்படுத்துகிறார்

By Antoine Lerougetel
15 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

வியாழனன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியிலும், வெள்ளியன்று நோர்மண்டியில் Caen என்னும் இடத்தில் 10,000 ஆதரவாளர்கள் நடத்திய அணிவகுப்பிலும், ஆளும் UMP கோலிச பிரிவின் ஜனாதிபதி வேட்பாளரான சார்க்கோசி, தேர்ந்தெடுக்கப்பட்டால், புலம்பெயர்ந்தோர் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றிற்காக ஒரு புதிய அமைச்சரகத்தை நிறுவ இருப்பதாகவும் குடிவரவு கட்டுப்பாடுகளை கூடுதலாக வலுப்படுத்தவும் உள்ள தன்னுடைய விருப்பங்களை அறிவித்தார்.

தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கையில் ஈடுபடுவது நாட்டுப்பற்றுக்கு விரோதமானது எனவும் நாட்டுத் துரோகத்திற்கு ஒப்பானது என்று கருதும் ஒரு சமூக மற்றும் கருத்தியல் தளத்தை தோற்றுவிக்க சார்க்கோசி விரும்புகிறார்.

புலம்பெயர்வோரை அவர் பலிகடாக்களாக ஆக்குவதோடு அவர்களுக்கு மனித உரிமைகளையும் மறுக்கிறார். "சட்டவிரோதமாக எந்த ஒருவர் பிரான்சில் நுழைந்தாலும், பிரெஞ்சு சமூகத்துடன் இணைந்து கொள்ள மறுக்கும் எந்த நபரும், ஒரு பிரெஞ்சுக்காரருக்கு உள்ள அதே உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. ... ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் வீடுகள் பெறுவதற்கான சட்ட உரிமையில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சட்டப்படி வாழ்ந்துவரும் ஒரு புலம்பெயர்ந்தவர் அவர் குடும்பத்திற்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்தால் அன்றி அக்குடும்பத்தை அழைத்துவரக் கூடாது என்பதையும் விரும்புகிறேன்; அதேபோல் அவருடைய பணியில் இருந்து கிடைக்கும் வருமானம் தன்னுடைய குடும்பத்தை காத்து நல்ல வீட்டில் வைக்கும் நிலை இருந்தால் அன்றி அவர் குடும்பத்தை அழைத்துக் கொண்டுவரக் கூடாது." இக்கூற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் தெரிவிப்பதாவது: "பிரான்ஸ் மற்றும் அதன் மதிப்புக்களை நான் பாதுகாக்க விரும்புகிறேன்."

பிரெஞ்சு வாழ்வுமுறை மற்றும் பண்பாட்டிற்கு புலம்பெயர்வோர் ஓர் ஆபத்தை பிரதிபலிக்கின்றனர், கூடுதலான முறையில் அவர்களை வெளியேற்றுவது நியாயமே என்று கூறும் இக்கருத்து, புதிய பாசிச ஜனாதிபதி வேட்பாளர் Jean Marie Le Pen இனால் வரவேற்கப்பட்டுள்ளது. "தேசிய முன்னணியின் ஒட்டு வங்கியில் கயமைத்தனமாக வாக்குகளை சேகரிப்பதில்" சார்க்கோசி செயல்பட்டார் என்று அவர் கூறினார்; ஆனால் அவரை விமர்சிப்பவர்களிடமிருந்து அவரைப் பாதுகாக்கும் வகையில் "புலம்பெயர்தல் மற்றும் தேசிய அடையாளத்தில் அவருடன் இணைய" மறுப்பது, "புலம்பெயர்தல் தேசிய அடையாளத்திற்கு ஊறு விளைவிக்கும்" என்பதை மறுப்பது போல் ஆகிடும் என்றார்.

MRAP என்னும் (இனவெறிக்கு எதிரான மற்றும் மக்களுக்கிடையிலான நட்புக்கான இயக்கம்) எனும், இனவெறி எதிர்ப்பு இயக்கம், சார்க்கோசி "இந்த சொற்றொடர்களை தற்செயலாக தேர்ந்தெடுக்கவில்லை என்றும் இச்சொற்றடர்களை இணைப்பதில் இனவெறி உரை, சிந்தனை இவற்றை கட்டவிழ்த்துவிடுகிறார், தேசிய ஒருங்கிசைவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறார், தர்க்கரீதியாக தீயிடல் போன்ற பிளவுகளை ஏற்படுத்தும், மற்றவர்களை நிராகரிக்கும் ஒரு சமூக தேர்வை கொண்டுவர விரும்புகிறார்" என்று வர்ணித்துள்ளது.

ஜனவரி 14ம் தேதி கட்சி வேட்புத்தன்மையை ஏற்புரை செய்ததிற்கு பின்னர் சற்றே அமைதியாக இருந்த, கருத்துக்கணிப்பில் அவருடைய சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளரான செகோலென் ரோயாலுடைய நெருக்கமான சவாலை எதிர்கொள்ளுவதில் காட்டிய வெறுப்பு மற்றும் ஆத்திரமூட்டல் தோற்றத்தை மாற்றும் வகையில் இருந்த சார்க்கோசி, இப்பொழுது பல காரணங்களுக்காக ஒரு தீவிர வலது மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.

பழமைவாத நாளேடான Le Figaro வில் எழுதிய Bruno Jeudy குறிப்பிடுவதாவது: "வலதின் மீதாக ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்கப்பட இருக்கிறது என்ற நம்பிக்கையில், நிக்கோலா சார்க்கோசி "தேசிய அடையாளம்" பிரச்சினையை முன்கூட்டியே தனதாக்கிக் கொண்டுள்ளார். "இவ்விதத்தில் சார்க்கோசி தன்னுடைய வலது நிலைப்பாட்டை, அவரின் சாத்தியமான வாக்காளர் தொகுதியில் உள்ள மிதவாதிகள் மத்தியில் பேய்ரூ (Bayrou) ஊடுருவும்போது கடினமாக்க முற்பட்டுள்ளார்" என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d'Estaing இன் வலது மைய UDF கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான Francois Bayrou PS க்கும் UMP போட்டியாளர்களுக்கும் இடையே தெளிவான மாற்றீடு இல்லாத சூழ்நிலையில் கருத்துக் கணிப்புக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்; இதன்படி பேய்ரூ, சார்க்கோசி மற்றும் ரோயால் மூவருமே 25 சதவிகித தொகுப்பில் உள்ளனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, பேரூவின் ஆதரவு 6 சதவிகிதத்திற்கு மேல் இருந்ததில்லை. சில கருத்துக் கணிப்புக்கள் ரோயாலோ சார்க்கோசியோ இரண்டாம் சுற்று என்றால், பேய்ரூ வெற்றிபெற வாய்ப்பு உள்ளது எனக் கூறுகின்றன. தான் தேர்ந்தெடுத்தால் இடதிற்கும் வலதிற்கும் நல்லிணக்கம் வாய்ந்த ஒரு வகை தேசிய கூட்டரசாங்கத்தை அமைக்க இருப்பதாக பேய்ரூ உறுதிமொழி கொடுத்துள்ளார்.

இதை ஒரு தெளிவான வலதுசாரி செயற்பட்டியல் என்று சார்க்கோசி நிராகரித்துள்ளார். "தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். பிரெஞ்சு மக்களுக்கு நான் ஏன் துல்லியமான உறுதிமொழிகளை கொடுக்கிறேன்? ஏனெனில், தெளிவாகத் தங்கள் விருப்பத்தை பிரெஞ்சு மக்கள் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." இவ்விதத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல், சமூகப் பணிகளில் கடுமையான செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றை நடத்த இருக்கும் தன்னுடைய உறுதிப்பாட்டை அவர் முன்கூட்டியே அறிவிக்கிறார்.

புருனோ ஜூடியின் கருத்தின்படி, சார்க்கோசியின் முகாம் லூ பென்னின் அச்சுறுத்தலை உதறித்தள்ளவில்லை; சோசலிச கட்சி வேட்பாளர் லியோனல் ஜொஸ்பனுக்கு 2002ல் நிகழ்ந்ததைப்போல, அவர்களுடைய வேட்பாளர் முதல் சுற்றிலேயே லூ பென்னால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். புகழ்பெற்ற கருத்துக் கணிப்பு அமைப்பான Laurent Solly லூ பென் சிறிது காலமாக 14 சதவிகிதத்தை ஒட்டி நிலைத்திருந்தாலும், "பாரிஸ்-மாட்ச் அளவுகோலின்படி இவருடைய ஒப்புதல் விகதம் 6 சதவிகிதம் கூடி 31 சதவிகிதமாகவும், அவருடைய வாக்காளர்கள் உறுதிப்பாடு 80 சதவிகிதத்தை ஒட்டியும் உள்ளது" என்று தெரிவிப்பதாக Le Figaro கூறியுள்ளது. இந்த உண்மையான மதிப்பீடு கருத்துக் கணிப்புக்களைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு சதவிகிதப் புள்ளிகள் அதிகமாக இருக்கும் என்றும் அப்படித்தான் ஏப்ரல் 21, 2002ல் நடந்தது என்றும் ஏடு கூறுகிறது.

உடனடியான தேர்தல் உத்திகளையும் தாண்டி, சார்க்கோசியின் வலதுபுற மாற்றத்திற்கு இன்னும் அடிப்படையான காரணங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பெருகிவரும் பிளவுகள், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விசை இருப்புக்கள், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடு பற்றிய தீவிரங்கள் என்று உள்ள நிலையில், சார்க்கோசி இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான வகையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்க சமூக மற்றும் அரசியல் சக்திகளை திரட்டிக் கொண்டு செல்ல விரும்புகிறார்.

இவருடைய பெப்ருவரி 28 செய்தியாளர் கூட்டத்தில், சார்கோசி ஒரு ஆக்கிரோஷமான வெளிநாட்டுக் கொள்கையைக் கோடிட்டுக் காட்டினார்; அதில் உலகில் பிரெஞ்சு இராணுவத்தின் நிலைப்பாடு வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உள்ளது. இதற்கு ஒரு தேசியவெறித் தன்மையில் "தேசிய நலன்களுக்காக" மூளைச் சலவை செய்யப்பட வேண்டும். எனவே பிரெஞ்சு சமூகத்தின் மிகப் பிற்போக்கு தன்மை நிறைந்த கூறுபாடுகளுக்கு முறையிடும் வகையில் அவர் பரபரப்புடன் தேசியவாதக் கருத்துக்களை முன்வைக்கிறார்; இக்கூறுபாடுகள் இராணுவ சக்திக்கு அல்லது முன்னாள் குடியேற்றங்கள் ஆகியவற்றிடம் ஆழ்ந்த பற்றை கொண்டுள்ளவை ஆகும்.

ஒரு சர்வாதிகார தீக்குறியான ஒலிக்குறிப்பில் அவர் அறிவிப்பதாவது: "பிரான்ஸ் என்று வந்துவிட்டால், முகாம்களுள் எப்பிளவிற்கும் இடமில்லை."

எயர்பஸ் மறுசீரமைப்பு திட்டம் Power 8 பற்றிப் பேசுகையில், தன்னுடைய தொலைக்காட்சி பேட்டியில் அவர் வலியுறுத்துவதாவது: "ஜேர்மனியர்கள் தங்கள் நலன்களை எப்படிக் காக்கிறார்கள் என்று நான் அறிவேன்." "எயர்பஸ் ஒரு சிறப்பு அமைப்பாக நடத்தப்பட வேண்டுமே அன்றி ஒரு தொழிலாக அல்ல." எயர்பஸ் நிறுவனத்தில் அதிக பங்குகள் கொண்ட தனியார் அமைப்பான ஜேர்மன் நிறுவனம் Daimler Benz பொறுப்பற்ற பேராசையை கொண்டுள்ளது என இவர் குற்றம் சாட்டியுள்ளார்; "10.000 பேரை வேலையில் இருந்து அகற்றும் ஒரு நிறுவனத்தில் மூலதனத்திற்கு ஆதாயம் கொடுக்கும் இலாபத் தொகையை இது கேட்கிறது; நான் அதை ஏற்கமுடியாது."

எயர்பஸ் மறுசீரமைப்புத் திட்டம் பிரெஞ்சு பொருளாதாரப் பொதுச்சீரமைப்பின் ஒரு பகுதியாகும்; இது Michelin, Renault, PSA Citroen-Peugeot ஆகிய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எயர்பஸ்ஸின் தொழிற்சங்கங்கள், குறிப்பாக FO (தொழிலாளர்கள் சக்தி), சார்க்கோசியின் தேசியவாத நிலைப்பாட்டை பின்பற்றுகின்றன. எயர்பஸ்ஸின் தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதும் நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராக திரட்டப்பட வேண்டும் என்பதை அவர்கள் மறுத்துள்ளனர்; மேலும் இப்பூசல் பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும் இடையேயான ஒரு பூசல் என்று காட்டுகின்றனர். இவ்விதத்தில் அவர்கள் Power 8 க்கு எதிராக மார்ச் 16ல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ஐரோப்பிய ஆலைகளின் ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்துவிட்டனர்.

வெள்ளியன்று Caen ல் சார்க்கோசி நிகழ்த்திய உரை ஒரு மந்திர உச்சரிப்பு போலவும் இடையிடேயே "பிரான்ஸ்", "பிரெஞ்சு" என்ற சொற்கள் பெரும் ஆரவாரத்துடன், ஒன்பது பக்க உரையில் 200 தடவைக்கும் மேலாக ஒலிக்கப்பட்ட வகையில் அமைந்திருந்தது.

வெற்று வனப்புரைகள், போலி வரலாற்றுக் கருத்துக்கள் ஆகியவற்றின் மூலம் சார்க்கோசி பிரான்சில் வரலாற்றளவு வர்க்கப் போராட்டங்களை ஒரு கற்பனையாக மாற்றும் வகையில் "ஒரே, பிரிக்கமுடியாத பிரான்ஸ்" என்ற வர்ணனையை கொடுத்தார். பிரெஞ்சு சமூகத்தில் இருக்கும் தீவிர வர்க்கப் பிளவை மறைக்கும் வகையில் "தேசிய அடையாளம்" என்ற அருவத்தை தூண்டும் வகையில் அலுப்புத்தட்டும் சொற்றொடர்களை உரைத்தார். "பிரான்ஸ் என்பது ஒரு அற்புதம்... மனித இனம் முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் அத்தகைய மாபெரும் அபிலாஷையுடன் உறுதியாய் அடையாளம் காட்டிக் கொள்வதும் இணைந்த பிரான்சின் ஒரு அற்புதம்..... இது ஒரு புதிரான இணைப்பு... புதிரான ஒரு பிணைப்பு.... இக்குடியரசு அரசர்களின் பண்டைய கனவுகளை சாதித்துள்ளது. நம்மை பிரிவில்லாத ஒரே நாடாக இது செய்துள்ளது."

ஒரு சமூக நெருக்கடியினால் என்று இல்லாமல், "ஒரு அறநெறித் தன்மை நெருக்கடியினால்" பிரான்ஸ் துயரப்படுகிறது என்று சார்க்கோசி வலியுறுத்திப் பேசினார். "நாட்டை இழிவுபடுத்துவது அந்த நெருக்கடியின் இதயத்தானமாக உள்ளது" என்றார். புலம்பெயர்ந்தோர், தேசிய அடையாளம் என்ற அமைச்சரகத்தை தோற்றுவிக்கும் தன்னுடைய திட்டத்தை நியாயப்படுத்துகையில், மார்ச் 11 Le Figaro பதிப்பில் அவர் கூறியதாவது: "இன்னும் 30 ஆண்டுகாலத்திற்குள் பிரான்சின் அடையாளம் என்பதுதான் குடியேற்றக் கொள்கையின் நிலைப்பாடாகும்."

அடித்து நொருக்கும் கும்பலின் தன்மையுடைய கூறுபாடுகளைத்தான் புலம்பெயர்ந்தோர் கொண்டுள்ளனர் என்றார்; "மகளீர் ஆண்களுடன் சமமானவர்கள் என்று உணர்ந்துகொள்ள விருப்பமில்லாத மனிதன், தன்னுடைய மனைவியை பூட்டி வைக்க விரும்பும் மனிதன், தன்னுடைய பெண்ணை பர்தா அணியவேண்டும் என்று வற்புறுத்தும் மனிதன், ஒதுங்கி இருத்தல், கட்டாயத் திருமணத்திற்கு இணங்க வேண்டும் என்று கூறும் மனிதனுக்கு பிரான்சில் இடம் இல்லை." அதே நேரத்தில் அறிவொளி காலத்தில் இருந்து நாஜிக்களுக்கு எதிரான எதிர்ப்பு வரை பிரான்சின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களின் வாரிசுதான் தான் என்றும் அவர் கூறிக்கொண்டார்.

தேசியவாதத்தை வழிபாடு போல் சார்க்கோசி கொண்டு செல்லும் கருத்து, தடையற்ற சந்தை, நலன்புரி அரசு விரோத திட்டங்கள் ஆகியவற்றை எதிர்க்கும் இளைஞர்களையும் தொழிலாளர்களையும், தாக்குவதற்கு அடித்து இறுக்கும் திமிசுக்கட்டையை உருவாக்கும் அவரது முயற்சிகளுடன் இயைந்து போகிறது.

சார்க்கோசி மற்றும் UMP அரசாங்கத்தால் 2002ல் இருந்து தொடர்ச்சியான சட்டங்கள் போலீசை வலிமைப்படுத்துவதற்கு இயற்றப்பட்டுள்ள நிலைமை, மற்றும் சட்டபூர்வ தொழிலாளர் பாதுகாப்பு, குடியுரிமைகள் வலுவிழந்து நிற்பது என்பவற்றிற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகளுடைய எதிர்ப்பு ஏதும் இல்லாத நிலை, சிற்சில சமயங்களில் பெரும் எதிர்ப்புக்கள் இருப்பினும், இவர் கூறிய உள்நோக்கங்கள் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தீவிர அச்சுறுத்தல் ஆகும். இன்னும் கூடுதலான வகையில் இரு நூற்றாண்டு கால போராட்டங்களில் பெற்ற சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் அடித்துச்செல்வதற்கான தளத்தை அமைக்கின்றன.

See Also:

பிரான்ஸ்: நிக்கோலா சார்க்கோசி லண்டனுக்குச் செல்லுகிறார்

 நிக்கோலா சார்க்கோசிக்கு முடிசூட்டுவிழா
ஜனாதிபதி வேட்பாளராக பிரெஞ்சு உள்துறை மந்திரி அறிவிக்கப்படுகிறார்