World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Presidential elections in France: The nationalism of the Workers Party

பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் தேசியவாதம்

By Pierre Mabut and Peter Schwarz
31 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய கூறுபாடாக அரசியல் நடைமுறையில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் சமூகப் பிளவுகளை மூடிமறைப்பதற்கும், புலம்பெயர்ந்தவர்களை இழிவுபடுத்துவதற்கும், "பிரெஞ்சு நலன்களை" காப்பதற்கும் தேசியவாத சொல்லாட்சிக் லையை பயன்படுத்துதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வழிவகை பழமைவாதிகள் அல்லது சார்க்கோசியின் UMP அல்லது Jean-Marie Le Pen உடைய தேசிய முன்னணி (FN) போன்ற தீவிர வலதுசாரிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபோல் உத்தியோகபூர்வ "இடது" எனப்படும் சோசலிஸ்ட் கட்சி (PS) உடனும் நின்றுவிடவில்லை; இதன் வேட்பாளர் செகோலென் ரோயால் தன்னுடைய ஆதரவாளர்களையே தன்னுடைய தேர்தல் அணிகளின் முடிவில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கூறியவகையிலும், ஒவ்வொரு பிரெஞ்சு குடிமகனும் தன்னுடைய இல்லத்தில் மூவர்ணக் கொடியை பறக்க விடவேண்டும் என்று கூறிய வகையில் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். "தீவிர இடது" என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள தொழிலாளர் கட்சி (Parti des travailleurs -PT) பிரெஞ்சு அரசு, பிரெஞ்சு "தேசிய இறையாண்மை" ஆகியவற்றை பாதுகாக்கும் கொள்கைகள் சொல்லாட்சிகளை பயன்படுத்தும் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

PT ஆனது முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சியான Organisation Communiste Internationaliste (OCI) , 1971ல் நான்காம் அகிலத்திடம் இருந்து முறித்துக் கொண்டதில், தன்னுடைய தோற்றத்தை கொண்டது ஆகும். அப்பொழுதில் இருந்து OCI பெருகிய முறையில் வலதிற்கு மாறிக்கொண்டு வருவதுடன் முதலாளித்துவ அரசிற்கு ஒரு தூணாகவும் வளர்ந்து வருகிறது.

1992ம் ஆண்டு OCI தன்னைக் கலைத்துக் கொண்டுவிட்டு "Parti des travailleurs " (PT) என்ற புதுப் பெயரில் வெளிப்பட்டது. பல்வேறு அரசியல் நீரோட்டங்களை, கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், அராஜகவாத-சிண்டிகலிஸ்ட் என்பறவற்றை தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக PT வலியுறுத்தினாலும், அடிப்படையில் OCI யின் பழைய காரியாளர்களுடைய ஆதிக்கத்தில்தான் உள்ளது; இதில் இப்பொழுது 86 வயது ஆன Pierre Lambert ம் அடங்குவார்.

"சோசலிசம்" அல்லது "தொழிலாள வர்க்கம்" என்ற சொற்றொடர் கூட PT கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஒருவர் காண்பார். "ஜனநாயகத்தின் மறு வெற்றிக்காக", "மதச்சார்பற்ற குடியரசை காப்பதற்காக" போன்ற கறாரான முதலாளித்துவ கோரிக்கைகளை மட்டுமே கட்சியின் வேலைத்திட்டம் கூறுகிறது. PT தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கை" 36,000 உள்ளாட்சி மன்றங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று உள்ளது; இவை பெரும்பாலும் பிரான்சின் கிராமப்புறப் பகுதிகளில் அமைந்தவை ஆகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு PT அதன் தேசியச் செயலாளரான Daniel Gluckstein ஐ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. இம்முறை கட்சியின் வேட்பாளர் Gérard Schivardi ஆவார்; பெரும் கைவினைஞரான இவர் தெற்கு பிரான்சில் உள்ள வைன் வளர்ப்புப் பகுதியான Aude ல் உள்ள 373 பேர் கொண்ட Mailhac கிராமத்தின் மேயர் ஆவார். இவருடைய பிரச்சாரம் பிரத்தியேகமான முறையில் PT யினால் நடத்தப்பட்டாலும், இவர் கட்சியின் சார்பில் பங்கு கொள்வில்லை. மாறாக அவர் தான் "மேயர்களுடைய வேட்பாளர்" என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார்.

ஷிவார்டி மற்றும் PT உடைய கருத்தின்படி பிரான்சின் சிறிய உள்ளாட்சிக் குழுக்கள்தான் ஜனநாயகத்தின் திறனைப் பிரதிபலித்து பொதுப் பணிகள் மற்றும் சமூக நலன்களை தகர்ப்பிற்கு எதிராக நிற்கும் வலிமை படைத்தவை எனப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து கையாளப்படுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகபூர்வ தகுதி கொடுக்கப்பட்ட பின்பு, ஷிவார்டி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: "தங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சபைகளுடன் நம் 36,000 நகரமன்றங்கள் மற்றும் அவற்றுக்கிடையில் சுதந்திரமாக அமைக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் குடியரசின் முதுகெலும்பு ஆகும். பெரிய உள்ளாட்சிக் குழுக்களுடன் இணைத்தல் என்ற போக்கில் இவை மறைந்துவிடக் கூடாது."

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் உள்ள அனைத்து மேயர்களுக்கும் எழுதிய கடிதத்தில் PT செயலரான Gluckstein அறிவித்தார்: "மதசார்பற்ற குடியரசின் ஒற்றுமை, பிரிக்கமுடியாத தன்மை இவற்றுடன் 36,000 நகரமன்றங்கள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன; தன்னுடைய பங்கிற்கு முந்தையது நாட்டின் நிலப்பகுதி முழுவதும் இருக்கும் குடிமக்களுடைய சமத்துவ உரிமைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இச் சமத்துவம் தேசிய பொதுசேவைகளின் இருப்பில் தங்கியுள்ளது; அதுதான் அனைத்து நகராட்சிகளிலும் உள்ள குடிமக்கள் நாட்டின் ஆற்றல், அஞ்சல்துறை, பொதுப் பணிகள் ஆகியவற்றிற்கு சமமாய் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றனர்; அங்குதான் தேசிய ஏகபோகம் ஒரேமாதிரியான கட்டணத்தை உறுதி செய்துள்ளது."

இப்படி சிறு உள்ளாட்சிக் குழுக்களையும் அவர்களுடைய மேயர்களையும் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் காப்பாளர்கள் என்று பெருமைப்படுத்துவது வெளிப்படையாகவே முழு அபத்தமாகும்.

அரசாங்கத்திற்கு எதிரான பிரெஞ்சு வாக்காளர்களின் நலன்களை ஒன்றும் மேயர்கள் பிரதிபலிக்கவில்லை; அவர்கள் அரசாங்க அடக்குமுறைக் கருவிகளின் முக்கியமான பகுதியாகத்தான் விளங்குகின்றனர். கடந்த மாதம் இளைஞர்களின் கட்டுப்பாடற்ற தன்மையை தடுக்கும் வகையில் தற்போதைய வில்ப்பனுடைய அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தது, அது மேயர்களுக்கு உள்ளூர் தலைமை சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரியின் பாத்திரத்தை அளித்தது. பள்ளிக்கு வராத குழந்தைகளின் குடும்பங்கள் பற்றி மேயர் நீதிபதியிடம் தகவல் கொடுத்தால் அக்குடும்பங்கள் சமூக நலன்களை இழக்கக் கூடும். சட்டத்தில் 2ம் விதியின்படி, மேயர் பொது ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பு ஆவார். அண்டைப் பகுதிகளில் வாழ்வோரிடையே பூசல்களை "அடக்குவதற்கும்" அவர்தான் பொறுப்பு. 27-28 விதிகள் சட்டவிரோதமாக வசிக்கும் நாடோடிகளை கட்டாயமாக வெளியேற்றும் அதிகாரங்களை பற்றி எடுத்துரைக்கின்றன.

இதைத்தவிர, பணிகளை வழங்கும் அதிகாரத்தை கொண்டுள்ள பல நகர மன்றங்கள், ஒப்பந்தங்கள் கொடுத்தல் மற்ற சலுகைகள் நிர்ணயிப்பது ஆகியவற்றில் ஊழல்களை கொண்டு இழிந்துள்ளன.

தேசியக் கொள்கைகளை நிர்ணயிக்கும் அரசியல் கட்சிகள்தான் மேயர்களையும் நியமிக்கின்றன என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.

ஷிவார்டியின் வேட்புத் தன்மைக்கு தங்களின் கையெழுத்திட்டு ஆதரவு கொடுத்த மேயர்களுக்கு PT எழுதிய கடிதத்திலும் இந்தப் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "ஜனாதிபதித் தேர்தல்களில் உள்ள வேட்பாளர்கள் அனைவரையும் நாங்கள் தொடர்பு கொண்டு பாராளுமன்ற தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு 'ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு முறிவிற்கு, ஜனநாயகம் மீண்டும் நிறுவப்படுவதற்கு, எமது பொதுப் பணிகள் மறுபடியும் வெற்றியடையப்படுவதற்கு மற்றும் 36,000 நகரமன்றங்கள் அவற்றின் சலுகைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவு ஆகியவற்றை கொடுக்கும் எந்த வேட்பாளராலும் வைக்கப்படும் ஒவ்வொரு அடிவைப்பையும் ஆதரிக்கத் தயார் என்று நாங்கள் கூறியது, சரியாக இருந்ததில்லையா?"

வேறுவிதமாகக் கூறினால், வலதுசாரி மேயர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகப் பேசத் தயாராக இருப்பவர்கள், ஜனநாயம் பற்றி உதட்டளவு மரியாதை காட்டத் தயாராக உள்ளவர்கள், உள்ளாட்சிக் குழுக்களின் தன்னாட்சியை காக்கத்தயாராக இருப்பவர்கள் என்று அனைவருடனும் PT ஒத்துழைக்க தயாராக உள்ளது.

AMF எனப்படும் பிரெஞ்சு மேயர்களின் கூட்டமைப்பு கிட்டத்தட்ட நாட்டின் 36,000 மேயர்களில் அனைவரையும் உள்ளடக்கியுள்ளது; இது ஷிவார்டியின் வேட்புத் தன்மை பற்றி அதிக ஆர்வம் காட்டவில்லை. "முழு மேயர்கள் தொகுப்பின் வேட்பாளர்கள்" என்று ஷிவார்டி காட்டிக் கொள்ளுவதை தடை செய்யும் சட்ட நடவடிக்கைகளையும் அது எடுத்துள்ளது. மேயர்களை பொறுத்தவரையில் கடினமாக அரசியலில் நடுநிலை வேண்டும் என்பதைத்தான் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான சோவினிச பிரச்சாரம்

PT தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாம் மைய அச்சு "ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடைவு வேண்டும்" என்ற கோரிக்கையாகும். ஒரு வர்க்கப் பகுப்பாய்வு அல்லது ஐரோப்பிய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொது நலன்களின் அடிப்படையில் PT ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கவில்லை. மாறாக பிரெஞ்சு தேசத்தை காப்பதற்கும் ஒரு தவறான தேசிய வெறி மற்றும் அமெரிக்க-எதிர்ப்பு பிரச்சாரத்தை வளர்ப்பதற்காகவும்தான் இது அவ்வாறு கோருகிறது.

பிரெஞ்சு சமூகத்தை பீடித்துக் கொண்டிருக்கும் அனைத்து சமூகப் பிரச்சினைகளும், நகரமன்றங்கள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தினால்தான் என்று PT காரணம் காட்டுகிறது. PT உடைய கருத்தின்படி பிந்தையது அமெரிக்கத் தோற்றத்தின் மேலாதிக்கத்தை முக்கியமாக கொண்டுள்ளது. பிரெஞ்சு பெரு வணிகம் மற்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் விமர்சனத்திலிருந்து பெரிதும் நீக்கப்பட்டுள்ளன.

"ஐரோப்பிய ஆணைகள் மற்றும் மாஸ்டிரிட்ச் உடன்பாடு தேசிய பொருளாதாரம் பெருநிதிய மூலதன கொள்ளைக்கார மேட்டுக் குடியினரால் வெட்கமின்றி சூறையாடப்படுவதைத்தான் அம்பலப்படுத்தியுள்ளன" என்று டானியல் க்ளுக்ஸ்ரைன் கட்சியின் Information Ouvrières என்னும் நாளேட்டில் ஒரு தலையங்கத்தில் எழுதினார்.

மற்றொரு தலையங்கத்தில் க்ளுக்ஸ்ரைன் பிரெஞ்சு ஏடான Le POINT ல் முதலில் வெளியிடப்பட்ட கருத்து ஒன்றைக் கூறுகிறது; பிந்தையது பாரிஸ் பங்குச் சந்தையின் மேல் அமெரிக்க கொடி பறந்து கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டியது. "நட்சத்திரங்களும் பட்டைகளும் பாரிஸ் பங்குச் சந்தையான Palace Brongniart மேல் மட்டுமில்லாமல் எயர்பஸ், உற்பத்தி தளங்கள், இறுதிப் பகுப்பாய்வில், நாட்டுப் பொருளாதாரம் அனைத்தின் மீதும் பறந்து கொண்டிருக்கிறது" என்று க்ளூக்ஸ்ரைன் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடைத்துக் கொள்ள பிரான்ஸ் தவறினால், எஞ்சியிருக்கக்கூடியது "சிதைவுகள்தான், அதற்கும் மேலாக அமெரிக்க கொடி அசைந்து கொண்டிருக்கும்."

PT யின் கருத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றீடு "ஒரு சுதந்திரமான ஐரோப்பா, சுதந்திரமான மக்களை கொண்டுள்ள நிலை" என்பதாகும். ஜனாதிபதி பிரச்சார அறிக்கைகள் ஒன்றில் ஷிவார்டி உண்மையில் தன்னை "சுதந்திர மக்களின் சுதந்திர ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளை" காப்பவர் என்று விளக்கிக் கொள்கிறார்.

இப்படிப்பட்ட சொற்களில் உறைந்துள்ள அரசியல் பொருளுரை சந்தேகத்தை கொடுக்கவில்லை. "மக்கள்", "தேசம்" என்ற முறையீடுகள் என பூகோளமாகியுள்ள தற்காலப் பொருளாதாரத்திற்கு இவை தீவிர வலது அரசியல் போக்குகளின் விடையிறுப்பு ஆகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கும் வலதுசாரிகள் "நாடுகளின் கூட்டான ஐரோப்பா" என்ற பெயரில் ஒன்றிணைந்திருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. இந்தக் குழுவில் இத்தாலியில் வலதுசாரிக் கட்சிகள் National Alliance, Northern League, மற்றும் Rassemblement pour la France என்ற Chanrles Pasqua ஆல் வழிநடத்தும் கட்சியில் இருந்து, தற்போது போலந்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் மூன்று வலதுசாரிக் கட்சிகள் வரை உள்ளன.

இத்தகைய போக்குகள் பொதுவாக பூகோளமயமாக்கலின் விளைவுகளினால் அச்ச உணர்வை பெற்றுள்ள மத்தியதர வர்க்க அடுக்குகளுக்கு ஏற்புடைத்தாகின்றன; அவைதான் தேசிய அரசு காக்கப்படுவதற்கு ஏங்குவதோடு வெளிசக்திகள்தான் அனைத்து சமூகத் தீமைகளுக்கும் காரணம் என்ற கோஷங்களுக்கும் ஆதரவைத் தருபவை ஆகும்.

இத்தகைய போக்குகள் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு முக்கிய பங்கை புரிகின்றன. அவை முதலாளித்துவ சொத்துரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து, தொழிலாள வர்க்கத்தை பிரிக்கின்றன; பிந்தையதின் வாழ்வோ மிக நெருக்கமான முறையில் தற்கால, உலகளாவிய உற்பத்தி சக்திகளுடன் பிணைந்துள்ளது. தொழிலாள வர்க்கம் தன்னுடைய சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை சர்வதேச அளவில் ஒன்றுபட்டு உலகப் பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கும் வகையில்தான் காக்க இயலும். வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்யத்திற்கு கொடுக்கும் விடையிறுப்பு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளே அன்றி "தேசங்களின் ஐரோப்பா" அல்ல.

சோசலிச கோரிக்கைகள் PT யின் தேர்தல் திட்டத்தில் முற்றிலும் இடம் பெற்றிருக்கவில்லை. அது எயர்பஸ் மற்றும் தனியார்மயமாக்கப்பட்ட பொதுப் பணிகள் "மறு-தேசியமயமாக்கப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் PT ஐ பொறுத்தவரையில் இதன் பொருள் அவை முதலாளித்துவ அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்; அதுதான் கூடுதலான ஆக்கிரோஷ வகையில் பிரெஞ்சு நிறுவனங்களின் நலன்களை உலகச் சந்தையில் பிரதிபலிக்கும் என்பது இதன் கருத்து.

பிரெஞ்சு வரலாற்றில் இத்தகைய முதலாளித்துவ தேசியமயமாக்கல்களில் பல உதாரணங்கள் உள்ளன; ஆனால் அவை அனைத்தும் தேசியமயமாக்கல் என்பதற்கு சோசலிச வகையின் பொருளை கொண்டிருக்கவில்லை. பிந்தையது தொழிலாளர்கள் செயலூக்கத்துடன் கட்டுப்பாட்டை எடுத்து பங்களிப்பு செய்வதை முன்நிபந்தனையாகக் கொள்கிறது மற்றும் சமூகம் முழுவதையுமே ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

PT யின் வலதுசாரிப் போக்கின் வளர்ச்சி

PT இன் தேசியமுறை தேர்தல் பிரச்சாரம், எந்த அளவிற்கு இந்த அமைப்பு வலதிற்கு மாறியுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தை இது கைவிட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது; தற்போது தன்னை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் "தேசிய நலன்களுடன்" அடையாளம் கண்டுள்ளது. இந்த வலதுசாரிப் போக்கிற்கு பரந்த அளவில் முன் வரலாறு உள்ளது.

1968ம் ஆண்டு மாணவர் மற்றும் தொழிலாளர் எதிர்ப்புக்கள் அரசியலில் அனுபவமில்லாத சக்திகளின் நீரோடை OCI யில் நுழைவதற்கு வழி வகுத்தன; ஆனால் கட்சி இதற்கு விடையிறுக்கும் வகையில் நான்காம் அகிலத்திடம் இருந்து முறித்துக் கொண்டு சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தை நோக்கி திரும்பியது. 1970 களின் தொடக்கத்தில் அது சோசலிஸ்ட் கட்சிக்கு ஏராளமான உறுப்பினர்களை அனுப்பியது; அக்காலத்தில் அது பிரான்சுவா மித்திரோனின் தலைமையில் இருந்தது. OCI உறுப்பினர்களில் இரகசியமாக அங்கு செயல்பட்டிருந்தவர்களில் லியோனல் ஜோஸ்பன் ஒருவர் ஆவர்; இவர் பின்னர் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக உயர்ந்தார்; 1995ல் பிரான்சின் பிரதமராகவும் உயர்ந்தார். OCI சுறுசுறுப்பாக இருந்த அதே காலத்தில், அது குறிப்பிட்டகாலத்திற்கு FO (Force Ouvrière) என்னும் தொழிற்சங்கக் கூட்டமைப்பையும் மேலாதிக்கம் செய்ய முடிந்தது.

சீர்திருத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு கருவியாக இக்கட்சி விளங்கியது; இதை ஒட்டி போருக்குப் பிந்தைய காலத்தில் முக்கியமான பங்கை வர்க்க சமரசத்தை நிறுவுவதில் கொண்டிருந்தது; அதையொட்டி முதலாளித்துவத்திற்கு உறுதிப்பாடு கிடைத்து; அவ்வாறு செய்கையில் தனக்கும் அது கணிசமான வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டது.

உற்பத்திமுறை உலகமயமாக்கப்பட்டது இப்பொழுது அதிகாரத்துவத்தின் சமூக சமரசக் கொள்கையின் அடிப்படையை அகற்றிவிட்டது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கம் எதற்குமே, இயல்பாக விரோதப் போக்கு காட்டும் இந்த அதிகாரத்துவம் மிகத் தொடர்ந்த முறையில் வலதிற்கு மாறியுள்ளது; அப்பொழுதுதான் அது ஆளும் வர்க்கத்திற்கு தன்னுடைய பயன்பாட்டை நிரூபிக்க முடியும். அவ்வாறு செய்கையில் அது தன்னுடைய முந்தைய செல்வாக்கு பலவற்றை இழந்து, சோசலிஸ்ட் கட்சி போலவே உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை அனுபவித்துக் கொண்டுள்ளது.

1992 ம் ஆண்டு PT ஏதேனும் ஒரு காரணத்திற்காக சோசலிஸ்ட் கட்சி அல்லது தொழிற்சங்க கருவிகளில் வெற்றிகரமான வாழ்க்கைத் தொழிலை செய்ய முடியாமல், அதிருப்தி அடைந்த செயலர்களை ஒன்றாகக் கூட்டும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. அதே நேரத்தில், OCI தன்னை சோசலிஸ்ட் கட்சிக் கருவியில் இருந்து துண்டித்துக் கொண்டது; முந்தைய ஆண்டுகளில்தான் அது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் முழுவதையும் பிணைத்துக் கொண்டிருந்தது. ஆனால் OCI சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் முன்னோக்குகளில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளவில்லை; தொழிலாள வர்க்கத்தின் அடித்தள இயக்கம் மற்றும் சுயாதீனச் செயற்பாடு காணும் முயற்சி எதற்கும் முற்றிலும் விரோதப் போக்கைக் காட்டிய வகையில்தான் இருந்தது.

PT யின் அறிக்கைகள் அனைத்தும் இத்தகைய செயலர்கள் அதிரகாரத்துவத்தினர் அடங்கிய தொகுப்பிற்குத்தான் முறையிடப்படுகின்றன. அவை மிகவும் கவனத்துடன் வெகுளித்தன்மையை காட்டி, அரசியல்வாதிகள் பதவி வகிப்பவர்களாவும் போலிக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்திற்கு பதிலாகவும் காட்டப்படுகின்றன. அதன் மறைந்திருக்கும் அமைப்புக்களுள் ஒன்றின் வடிவத்தில் அன்றி PT வெளிப்படையாக தன்னை காட்டிக் கொள்ளுவதில்லை. ஒரு ரஷ்ய பொம்மை, ஒன்றன் பின் ஒன்றாக மற்றொன்றில் மறைந்து கொள்ளும் Matroschka- வைத்தான் கட்சி ஒத்திருக்கிறது; OCI இவ்விதத்தில் PT யில் மறைந்துள்ளது; அவை நீண்ட பெயருடைய அதிகாரத்துவ பெயர்களுடன் மற்ற குழுக்களில் தொடர்ச்சியாக மறைந்துள்ளது.

க்ளூக்ஸ்ரைன் மற்றும் ஷிவார்டி இருவரும் ஒருமுறை "ஜனநாயகத்தை மீண்டும் வெற்றிபெறச் செய்ய இருக்கும் தேசியக் குழுவின் பிரதிநிதிகள் குழுவின்" உறுப்பினர்கள் என்று தோன்றினர். மற்றொரு நிகழ்ச்சியில், Information Ouvrières, எமது வேட்பாளர்களை ஆதரிக்க உடன்பட்டுள்ள 538 மேயர்களுக்கு, மேயர்களின் "Parti des travailleurs ஆதரவுடைய வேட்பாளர் Gérard Schivardi க்கான ஆதரவுக் குழு உறுப்பினர்களாலான க்ளுக்ஸ்ரைன் மற்றும் ஷிவார்டி இருவராலும் கையெழுத்திடப்பட்டிருந்த முறையீட்டை வெளியிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய மறைந்து பிடித்தல் என்னும் அபத்தமான விளையாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது. திரைக்குப் பின்னால் எப்பொழுதும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கையாளும் அதிகாரத்துவ வர்க்கத்தின் சிந்தனைப் போக்குடைய, இரண்டாம் இயல்பின் முன்மாதிரிதான் இது.

இப்படிச் செயலாற்றும் அடுக்கில் 36,000 உள்ளாட்சிக் குழுக்களின் மேயர்களும் அடங்குவர். பிரான்சில் மேயர் பதவி என்பது அரசியல் வாழ்வின் ஆரம்பக் கட்ட அடிப்படையாகும். தேசிய மந்திரி அல்லது அரசாங்கத்தின் தலைவர் என்ற உயர்பதவிகளுக்கு எழுச்சி பெறுபவர்கள் பொதுவாக தங்கள் மேயர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்துவிடுவர். PT இன் சமூக சார்பின் இயல்பான கூறுபாடு "மேயர்களுக்கு ஒரு கடிதம்" என்று எழுதியதில் உள்ளது; அதில் க்ளுக்ஸ்ரைன் 36,000 உள்ளாட்சி குழுக்களையும் தொழிற்சங்க அமைப்புக்களையும் "ஜனநாயகத்தின் இரு பெரும் தூண்கள்" என்று குறிப்பிடுகிறார்.

தொழிலாள வர்க்கத்திலிருந்து வரும் பெருகிய எதிர்ப்பு மற்றும் ஆழ்ந்த சமூகப் பதட்டங்களுக்கு தேசியவாதத்தை தீவிரப்படுத்துதல்தான் முந்தைய சீர்திருந்தவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், இவற்றின் பதிலாக இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயால் தன்னை மூவண்ணக் கொடியில் உடுத்திக் கொண்டு கடமையுணர்வுடன் தேசிய கீதத்தை இசைக்கிறார். எயர்பஸ்ஸில் PT செல்வாக்கிற்குட்பட்ட Force Ouvrière தொழிற்சங்கம்தான் வேலை வெட்டுக்களுக்கு எதிராக வந்துள்ள சீற்றத்தை ஜேர்மனிய ஆலைகளில் உள்ள தொழிலாளர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் திசைதிருப்பும் பணியில் ஈடுபடுகின்றது. PT இன் தேசியவாத தேர்தல் பிரச்சாரம் இந்த வளர்ச்சியின் செறிந்த வெளிப்பாடு ஆகும்.

See Also:

மிகப் பரந்த மக்கள் ஆர்வம், ஆழ்ந்த அரசியல் பதட்டங்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றன

சார்கோசி புலம்பெயர்ந்தோரை இழிவுபடுத்தி பிரெஞ்சு தேசத்தை பெருமைப்படுத்துகிறார்