World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French presidential election: Sarkozy and Royal to compete in second round

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்:சார்க்கோசியும் ரோயாலும் இரண்டாம் சுற்றில் போட்டியிடுகின்றனர்

By Peter Schwarz
23 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

நிக்கோலா சார்க்கோசியும் செகோலென் ரோயாலும் மே 6ம் தேதியன்று பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் போட்டியிடுவர்.

கோலிச UMP யின் வேட்பாளரான சார்க்கோசி நேற்றைய தேர்தலின் முதலாம் சுற்றில் அதிகமான வகையில் பதிவான வாக்குகளில் 31 சதவிகிதத்தை பெற்றார். சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ரோயால் 25.6 சதவிகித வாக்குகளை பெற்றார்.

UDF வேட்பாளரான பிரான்சுவா பேய்ரூ 18.5 சதவிகித வாக்குகளையும், தீவிர வலது தேசிய முன்னணியின் வேட்பாளரான ஜோன் மரி லூ பென் 10.6 சதவிகித வாக்குளையும் பெற்றனர்.

பிரெஞ்சு அரசியலில் வலது-இடது பிளவை சமாளித்துவிடுவேன் என்று காட்டிக் கொண்ட பேய்ரூ முன்னதாக கருத்துக் கணிப்புக்களில் ரோயாலுக்கு பிறகு நெருக்கமாக வந்திருந்தார். ஏனெனில் சார்க்கோசியை எதிர்த்திருந்த பல வாக்காளர்கள் இரண்டாம் சுற்றில் கோலிச வேட்பாளருக்கு எதிராக ரோயாலை விட இவருக்கு அதிகம் வாய்ப்பு உண்டு என்று கருதியிருந்தனர். ஆனால் இறுதியில் இவர் மிகவும் பின்தங்கிவிட்டார். ஆயினும்கூட முதல் சுற்றில் எந்த வேட்பாளருமே 20 சதவகித வாக்குகளை பெறவில்லை என்ற நிலை இருந்த கடந்த 2002 தேர்தலுடன் ஒப்பிடுகையில், இவருடைய முடிவு ஒப்பீட்டளவில் உயர்வாகத்தான் இருந்தது.

2002 தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு வியக்கத்தக்க முறையில் நுழைந்திருந்த லூ பென், கருத்துக் கணிப்புக்கள் கூறியதைவிட மோசமான விளைவுகளைத்தான் சந்தித்தார். இவர் தொடர்ந்து 15 சதவிகிதம் பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. இவருடைய பிரச்சார மேலாளரும் மகளுமான மரியான் லூ பென், சார்க்கோசியின் பிரச்சாரம்தான் லூ பென்னுடைய வாக்குகள் குறைந்ததற்கு காரணம் என்று கூறியுள்ளார். தேசிய முன்னணியின் கருத்துக்களையும் இலக்குகளையும் சார்க்கோசி திருடிவிட்டார் என்று அவர் கூறினார்.

வாக்காளர்கள் மிக அதிக அளவில் வாக்குப் போட வந்திருந்தனர். பதிவு உரிமை பெற்ற வாக்காளர்களில் 85 சதவிகிதத்தினர் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர்; இது 1958ல் ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறைப் பூசல்கள் வெடித்திருந்த வறிய புறநகர்ப்பகுதிகளில், பதிவு செய்திருந்த வாக்காளர்கள் மிக அதிகமாக வாக்களிக்க வந்திருந்தனர்.

இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தமும் பெருகியமுறையில் அரசியல் மயப்பட்டு வருவதன் தெளிவான அடையாளம் ஆகும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறு நகரங்களில்கூட, வேட்பாளர்களின் கூட்டங்களுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் கேட்பதற்கு வந்திருந்தனர். நிலவும் நிலைமையை வாக்குப் பெட்டி வழிமுறைகள் மூலம் மாற்ற வேண்டும் என்ற இந்த விருப்பத்தை எடுத்துக்கொள்ள அனைத்து பிரதான வேட்பாளர்களும் கடமைப்பட்டுள்ளதை உணர்ந்தனர். தன்னுடைய பிரச்சாரத்தின் மையத்தில் "அடிப்படை மாற்றம்" செய்யப்போவதாக சார்க்கோசி உறுதி கூறினார்; ரோயால் "ஒரு மாற்றம் வரும்" என்றும், பேய்ரூ "ஆரஞ்சுப் புரட்சி கூட" வரும் என்றும் கூறினார்.

ஆனால் தெளிவாக உச்சரிக்கப்படாத ஆழ்ந்தகன்ற எதிர்ப்பு அலையை ஸ்தாபன வேட்பாளர்களுக்கு பின் திசை திருப்பிவிடுவது அது "அதி இடது" என்று தவறாகப் பெயரிடப்பட்டுள்ளதின் வேட்பாளர்களிடம் விடப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தீவிர இடது எனக் கூறப்பட்டதின் வேட்பாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிக வாக்குகளை பெற்றனர். LO வின் ஆர்லெட் லாகியே, LCR இன் ஒலிவியே பெசன்ஸநோ, மற்றும் PT இன் டானியல் குளுக்ஸ்ரைன் ஆகியோர் மொத்தமாக 10 சதவிகித வாக்குகளை பெற்றனர். இது சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் தேசிய முன்னணியின் ஜோன் மரி லூ பென் இடத்தில் தோல்வியுறுவதற்கு ஒரு காரணம் ஆயிற்று.

இம்முறை தீவிரப்போக்குடைய இடது, ஆரம்பத்தில் இருந்தே ரோயாலுக்கு ஒரு வெற்றி கிடைப்பதை தாங்கள் விரும்புவதாகவும், தங்கள் பிரச்சாரங்களை சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரை இடது புறம் நகர்த்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிவகையாக காண்பதாகவும் கூறினர். "பயனுடைய வாக்கு" அதாவது சார்க்கோசியை இரண்டாம் சுற்றில் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கும் வேட்பாளருக்கு வாக்களித்தல் பற்றிய விவாதம் தேர்தலின் கடைசி நாட்களில் பொது விவாதங்களில் மேலாதிக்கம் கொண்டிருந்தன.

இதன் விளைவாக, இந்த "இடது" கட்சிகள் 2002 தேர்தலையும்விட மோசமான விளைவை கண்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் Marie-George Buffe 1.9 சதவிகிதம் என்று கட்சியின் வரலாற்றில் இதுவரை இல்லாத குறைந்த அளவு வாக்கை பெற்றார். பசுமைக் கட்சியின் வேட்பாளர் Dominique Voynet அதையும்விட மோசமாக 1.6 சதவிகித வாக்கைத்தான் பெற்றார். LO வின் Arletter Laguiller தன்னுடைய ஆறாம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் நிற்பவர், தான்பெற்ற முந்தைய வாக்குகளில் நான்கில் ஒருபகுதியை, 1.4 சதவிகிதத்தைத்தான் பெற்றார். பூகோளமயமாக்கல் எதிர்ப்பு வேட்பாளர் José Bové 1.3 சதவிகித வாக்கையும், PT வேட்பாளரான Gérard Schivardi 0.3 சதவிகிதத்தையும் பெற்றனர்.

LCR இன் ஒலிவியே பெசன்ஸநோ ஒருவர்தான் விதிவிலக்காக தன்னுடைய பங்கை 4.2 என்று உயர்த்திக் கொண்டார். ஒப்பீட்டளவில் இளமையான, தேர்ந்த பேச்சாளரான பெசன்ஸநோ ஒரு மேம்போக்கான முறையில் மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே அழைப்பு விட முடிந்தது.

வாக்குப் பதிவுகள் முடிவுற்ற ஒரு மணி நேரத்திற்குள், அனைத்து தீவிரப்போக்குடைய வேட்பாளர்களும் ரோயாலுக்கு பின் அணிவகுத்து நின்றனர். Buffet, Voynet, Laguiller ஆகியோர் வெளிப்படையாக சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரினர். லாகியேயை பொறுத்த வரையில் இவ்வாறு நடப்பது முதல்தடவையாகும். முந்தைய தேர்தல்களில் LO எப்பொழுதும் சோசலிஸ்ட் கட்சியை வெளிப்படையாக ஆதரிப்பதை தவிர்த்திருந்து, எதிலும் செயலாற்றலற்ற போக்கை கொண்டிருந்தது. ரோயாலுடைய திட்டத்துடன் உடன்பாடு இல்லை என்று கூறிய பெசன்ஸநோ சார்க்கோசியை தடுக்கும் வகையில் ரோயாலுக்கு வாக்களிக்குமாறு கோரினார்.

தீவிரப்போக்கினர் ரோயாலின் பின் ஓடிய நிலையில், ரோயால் சார்க்கோசியின் பின் ஓடினார். முதல் சுற்று வாக்களிப்பிற்கு முன் நடந்த பிரச்சாரம் இவ்வாறுதான் இருந்தது; அப்பொழுது, தான் தன்னுடைய வலதுசாரி போட்டியாளர் போலவே தன்னை தேசியவாத, சட்டம் ஒழுங்கை காக்க முற்படுபவர் என்று ரோயால் காட்டிக் கொள்ள முயன்றார். தேர்தல் முடிந்த இரவும் அப்படித்தான் இருந்தது.

அதிகம் துருவமுனைப்பட்டு ஒரு கோடியில் இருப்பவர் என்று தோன்றினால் தேர்தலில் இழப்பு ஏற்படலாம் என்று நன்கு அறிந்திருந்த சார்க்கோசி, தன்னுடைய போட்டியாளருக்கு மரியாதை கொடுத்து "கெளரவமான" விவாதம் மற்றும் "சிந்தனைகள் பற்றிய விவாதங்களுக்கு" அழைப்பு விடுத்திருந்தார்; அதேநேரத்தில் தானும் ரோயாலும் இரு முற்றிலும் வேறுபட்ட முன்னோக்குகளைத்தான் பிரதிபலிப்பதாக அவர் வலியுறுத்தினார்.

தன்னுடைய தேர்தல் தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் சார்க்கோசி கடுமையாக உழைக்கும் வறியவர்களுக்கு முறையிட்டார்: "பிரான்ஸ் நிறைய கொடுக்கிறது, எதையும் பெறவில்லை" என்பதற்கு பதிலாக, "கஷ்டப்படும் பிரான்ஸ்" என்று மாற்றிக் கூறினார். "அஞ்சி நிற்பவர்களுக்கு" தான் பாதுகாவலர் என்று தன்னை காட்டிக் கொண்டு, பிரான்ஸ் "ஒரு குடும்பம் போல், மிக நலிவுற்றவர்களும் வலுவானவர்கள் போலவே நேசிக்கப்பட வேண்டும்" என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று அவர் கூறினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பேசிய ரோயால் பழகிப்போன சொற்கருத்துக்களை அள்ளி வீசினார்; தன்னுடைய வலதுசாரிப் போட்டியாளரின் வருங்காலம் பற்றிய கணிப்புக்களை அப்படியே கூறி "பிரான்ஸ் நீடுழி வாழ்க" என்று போர்க் குரலில் முடித்தார். ரோயால் சார்க்கோசியை தொடர்ந்து ஏற்பது வெளிப்படையாகிறது; அடிப்படையில் ரோயாலுக்கு சார்க்கோசியுடன் அரசியல் வேறுபாடுகள் ஏதும் கிடையாது; ஆனால் இப்படி அவருடைய கருத்துக்களை ஏற்பது மக்களின் பரந்த பிரிவுகளிடையே மிக ஆழ்ந்து வெறுக்கப்படும், அஞ்சப்படும் நபரின் தேர்தல் வாய்ப்புக்களை அதிகப்படுத்துகிறது.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு சார்க்கோசிக்கு 54 சதவிகித வாக்குளையும் ரோயாலுக்கு 46 ஐயும் கொடுத்தன.

இரண்டாம் சுற்றில் சமநிலையை கொண்டு முடிவுகூறக்கூடிய தேர்தல் வாக்குகளை கொண்டவரான பேய்ரூ, எவருக்கும் ஒப்புதலை கொடுப்பதை இப்பொழுது கவனத்துடன் தவிர்த்துள்ளார்.

See Also:

பிரெஞ்சுத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்னும் கூடுதலான வலதுபுற சாய்வு

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்கள்: பத்து வாக்காளர்களில் நான்கு பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை