World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

US and Russia at loggerheads over Kosovo independence

கொசோவோ சுதந்திரம் குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சண்டையிடுகின்றன

By Paul Mitchell
23 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதம் G8 உச்சி மாநாட்டின்போது ஏற்கனவே கொதித்துப் போயிருந்த அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையேயான பதட்டங்கள் கொசோவோவிற்கு சுதந்திரம் பற்றிய பிரச்சினையில் மீண்டும் வெடித்துள்ளன. இச்சர்ச்சை ஐரோப்பாவையும் பிளவிற்கு உட்படுத்தியுள்ளது; மற்ற இடங்களிலும் பிரிவினை இயக்கங்களுக்கு இது சுதந்திரத்தை வலியுறுத்த ஊக்கம் கொடுத்துள்ளதுடன் பால்கன் பகுதியில் மேலும் ஸ்திரமின்மைக்கும் அச்சுறுத்தல் கொடுத்துள்ளது. சுதந்திரம் அடைவதோ அல்லது அடையாததோ ஒருபுறம் இருக்க, இன்னும் கூடுதலான வகையில் பரந்த வன்முறை பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுதந்திரம் வழங்குவதை நிறுத்துவதற்கு ரஷ்யா பாதுகாப்புக் குழுவில் தன்னுடைய தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்கும்பொருட்டு, ஐக்கியநாடுகள் மன்றத்தை புறக்கணிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஜூலை 18ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் நிக்கோலஸ் பேர்ன்ஸ், கடந்த மாதம் அல்பானிய பிரதம மந்திரி சாலி பெரிஷாவைச் சந்தித்தபொழுது அவரிடம் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கொடுத்த உறுதிமொழியை வலியுறுத்தும் வகையில் 2007 முடிவிற்குள் கொசோவோ சுதந்திர நாடாகும் என்று அறிவித்தார்.

Koha Ditore என்னும் நாளேட்டிடம் பேர்ன்ஸ் கூறினார்: "கொசோவோவின் சுதந்திரத்திற்கு குறுக்கே எவரையும் அமெரிக்கா அனுமதிக்காது". அவர் மேலும் கூறினார்: "ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு மூலமோ மற்ற இயங்குமுறைகள் மூலமோ இது நடந்தேறும்."

ரஷ்யாவும் இந்த வழிவகையின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சிறப்புத் தூதர் மார்ட்டி அஹிடிசாரியினால் முன்மொழியப்பட்ட கொசோவோவிற்கான இறுதி நிலைத் தீர்வை செயல்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா ஏற்கனவே தாமதப்படுத்தியுள்ளது, "ஆனால் ரஷ்யா ஆக்கபூர்வமாக செயல்படவில்லை" என்று பேர்ன்ஸ் கூறினார்.

அன்றே, பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அமெரிக்க நிலைப்பாட்டை உறுதிசெய்யும் வகையில், "கொசோவோ ஒரு சுதந்திர நாடு என்பதை அங்கீகரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டு விட்டோம்; ஏதேனும் ஒருவிதத்தில் அதை நாங்கள் அடைந்து விடுவோம்" என்றார்.

1999ம் ஆண்டில் இருந்து ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானம் 1244ன் கீழ் ஐ.நா ஆட்சிக்குட்பட்ட பாதுகாப்பு பகுதியாக கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வருகிறது; இதன்படி சேர்பியா இம் மாநிலத்தின் மீது கொண்டுள்ள இறைமை அங்கீகரிக்கப்பட்டு, அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படாத ஐ.நா. வைசிராயினால் ஆளும் வெளிநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

முறையாக கொசோவோவின் சுதந்திரத்திற்கு வழியமைப்பதற்கு ஒரு புதிய பாதுகாப்புக் குழு தீர்மானம் தேவைப்படும். ஆனால் இதைப் பொறுத்தவரையில், "சுதந்திரம்" என்பது இன்னும் தெளிவான முறையில் மேலைநாடுகள் தோற்றுவித்த நடைமுறையில் இருக்கும் சிறு பகுதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரு ஐ.நா. உயர் பிரதிநிதியிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிக்கு மாற்றம் என்று புரிந்துகொள்ளப்படும், கொசோவோ பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை அகற்றுவதற்கும், பொது அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதற்கும் சர்வதேச நிதிய அமைப்புக்களின் ஆணைகளை செயல்படுத்தவும் இது பயன்படுத்தப்படும்.

அந்த இலக்கைக் கருத்திற்கொண்டு, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு புதிய பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தை இயற்றின; இதன்படி ஒரு 120 நாள் காலக் கெடுவில் அதிகார மாற்றம் நிகழும்; அக்காலத்தில் மேலை சக்திகள் கொசோவோவில் இருக்கும் அல்பானிய பெரும்பான்மை மற்றும் மாநிலம் சேர்பியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் சிறுபான்மை இரண்டையும் ஓர் உடன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தாங்கள் செப்டம்பர் மாதம் தொடங்கி இன்னும் ஒரு "நெருக்கமான பேச்சுவார்த்தை" சுற்றுக்களை நடத்த இருப்பதாக குறிப்புக் காட்டியுள்ளனர்; அல்லது 1995ம் ஆண்டு டேய்ற்ரன் ஒப்பந்த மாதிரியில் சர்வதேச மாநாடு ஒன்றை கூட்டுவதாக உள்ளனர்; டேய்ற்ரன் ஒப்பந்தம் பொஸ்னியாவில் போரை முடிவிற்குக் கொண்டுவந்தது; அப்பொழுது முதல் மூன்று பொஸ்னிய சிறு மாநிலங்களிலும் இனப் பிளவுகள் பேணப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தினால், அவை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ரஷ்யா அடங்கிய முறைசார கோசோவா தொடர்புக் குழு (Informal Kosovo Contact Group) மூலம் கொசோவோ சுதந்திரத்தை தொடர இருப்பதாக அச்சுறுத்தியுள்ளது; ஏனெனில் இதில் ரஷ்யாவின் தடுப்பதிகாரம் கிடையாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான Javier Solana கூறினார்: "இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இது இயலாமற் போகும் என்று ஏற்பட்டால், தொடர்புக் குழு உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தைகள் வழிவகையை ஏற்படுத்த உடன்பாடு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்."

எப்படியும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு பேர்லினில் ஜூலை 25 அன்று பிரச்சினையை விவாதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால் சுதந்திரம் வேண்டும் என்று வெளிப்படையாக தீர்மானம் கூறவில்லை; ஆனால் பொருளுரையில் இன்னமும் கொசோவோவின் சுதந்திரம் பற்றி மறைக்கப்பட்ட வழிவகை இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது; இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வரைவை பற்றி தூதர் Vilaly Churkin கூறினார்: "முழுப் பொருளுரையும், ஓரளவு பிற்சேர்க்கைகளும் கொசோவோ சுதந்திரம் என்ற கருத்தாய்வை நிறைய கொண்டிருக்கலாம்."

கொசோவோவின் சுதந்திரத்திற்காக மேலை சக்திகள் இவ்வளவு அவசரப்பட்டு செயலாற்றுவது, 1999 வான்வழிப் போரின் போது KLA எனப்பட்ட Kosovo Liberation Army க்கு ஊக்கம் கொடுத்து சேர்பிய ஜனாதிபதி Slobodan Milosevic ஐ வெளியேற்றுவதற்காக அல்பானியத் தேசியம் என்ற பூதத்தை போத்தலில் இருந்து வெளியிட்டதின் விளைவுதான் எனலாம். இவ்வாண்டின் ஆரம்பத்தில் பல ஆயிரக் கணக்கான கொசோவோ அல்பானியர்கள் சுதந்திரத்திற்கான காலதாமதம் பற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். ஐ.நா. போலீசார் ரப்பர் தோட்டாக்களை சுட்ட அளவில் இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்; இதையொட்டி ஐ.நா. போலீஸ் தலைவர் மற்றும் கொசோவோ உள்துறை மந்திரி ஆகியோர் இராஜிநாமா செய்ய நேரிட்டது.

இப்பொழுது மாநில அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளை அனுபவிக்கும் KLA தலைவர்கள் ஒருதலைப்பட்சமாக சுதந்திரத்தை அறிவிப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். கொசோவோ பிரதம மந்திரியும் முன்னாள் KLA தளபதியுமான அகிம் சேகு ஜூலை 14ம் தேதி, "இப்பொழுதுதான் சரியான நேரம். விவாதத்திற்கு ஒரு தேவையும் இல்லை. பேசித் தீர்க்க வேண்டியது ஒன்றுமில்லை." என்று அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் தீர்மானம் இயற்றப்படுவது தோல்வியடைந்தவுடன், கொசோவோ பாராளுமன்றம் நவம்பர் 28 அன்று சேர்பியாவில் இருந்து சுதந்திரம் அடைந்து விட்டதாக ஒருதலைப்பட்சமாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறையும் அழைப்புக்கள் விடுத்துள்ளார் --இந்த நாள்தான் அண்டைப் பகுதியான அல்பானியாவின் சுதந்திர நாளும் ஆகும். சேகு, ஜூலை 23 அன்று வாஷிங்டனில் கொண்டலீசா ரைசை சந்தித்து, திரும்பிய பின்னர் தான் பாராளுமன்றம் இதை விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்; வாஷிங்டனில் கொசோவோவில் நடைபெற இருக்கும் தேர்தல்கள் பற்றிய விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

சில பகுப்பாய்வாளர்கள் பிரிவினை வேண்டும் என்று கூறியதை எதிர்த்து, கொசோவோவை இனவழியில் பிரிவினை செய்வதைக் குறைகூறும் வகையில் சேகு, "பிரிவினை ஒரு தீர்வு அல்ல, அது இயலாததாகும்... எவரும் அதற்கு உடன்படமாட்டார்கள், அது ஏற்கப்பட முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.

பால்கன் பகுதியை இனவழியில் பிரித்து சேர்பிய சிறுபான்மையினர் எதிர் கொண்டுள்ள கொடூரமான விளைவுகளில் (சேர்பிய அகதிகளுக்கு சொந்தமான 20,000 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன; அவற்றில் 600 தான் திரும்பிக் கொடுக்கப்பட்டுள்ளன) தன்னுடைய பங்கை மறந்துவிட்ட வகையில், சேகு கூறினார்: "பால்கன் பகுதிகளில் எல்லைக் கோடுகளை போடத் தொடங்கினால், அது எங்கு முடியும்?"

ஆயினும்கூட பிரச்சினைக்கு தக்க விடை தேவைப்படுகிறது. பால்கன் பகுதிகளுக்கு அப்பாலும் உட்குறிப்புக்களை அது கொண்டிருக்கிறது.

சேர்பியாவின் பிரதம மந்திரி Vojislav Kostunica சேர்பியாவின் பிரதேச ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை மீண்டும் கூறும் வகையில், "எங்கள் நிலப்பகுதியில் 15 சதவிகிதத்தை துண்டாடுவதற்கு நாங்கள் அனுமதியோம். எங்கள் அரசியல் அமைப்பின்படி, கொசோவோ சேர்பியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியாகும்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு சேர்பியா கொசோவோவிற்கு சுதந்திரம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் விடையிறுத்ததாவது: "இந்த அளிப்பு இதுபோல் உள்ளது: உங்களுக்கு ஐரோப்பா வேண்டும் என்றால் கொசோவோவை நீங்கள் மறந்துவிடவேண்டும்; கொசோவோ வேண்டும் என்றால் ஐரோப்பாவை நீங்கள் மறக்க வேண்டும்." "விஷயங்கள் இப்படி இருக்க முடியாது; இது ஒரு கேவலமான அளிப்பு ஆகும்." என்று அவர் புகார் கூறினார்.

ஆனால், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்னெர், இவ்வாண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஆரம்ப உடன்பாட்டில் சேர்பியா கையெழுத்திடும் என்றும் 2008 பிற்பகுதியில், பிரான்சின் ஐரோப்பிய ஒன்றிய தலைமைக் காலத்தில் ஒரு வேட்பு உறுப்பு நாடாகும் என்றும் தெரியப்படுத்தி உள்ளார். "ஆயினும் கூட நாங்கள் போலித் தோற்றத்தை கொடுக்கவில்லை; கொசோவோ பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும்" என்று சேர்பியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

சுதந்திரத்திற்காக மற்ற பிரிவினை சக்திகள் குரல் எழுப்புவதை கடக்கும் வகையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் கொசோவோ ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்றும், அதன் அந்தஸ்து பற்றி இறுதித் தீர்வு எப்படி இருந்தாலும், மற்ற சர்ச்சைகளுக்கு அதை அப்படியே ஏற்க முடியாது என்றும் கூறிவிட்டன. ஆனால் ரஷ்ய அரசாங்கத்தின் டுமா தலைவரான போரிஸ் கிறிஸ்லோவ் கொசோவோவிற்கான சுதந்திரம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் --Avjgazuam Bagirbi-Karabakh, Armenia, Azerbaijan, Moldova, Spain, the U.K. மற்றும் பல ஆபிரிக்க நாடுகளிலும்-- பிரிவினைவாதத்திற்கு ஊக்கம் கொடுக்கும் என்று கூறினார்

முன்னாள் துணை வெளியுறவு மந்திரியும் Nagorono Karabakh க்கின் ஜனாதிபதி வேட்பாளருமான Masis Mailyan கருத்துத் தெரிவித்தார்: "கொசோவோ மாதிரி பூசலுக்கான தீர்வு மற்ற பூசல்களுக்கு தீர்வு காண்பதற்கும் ஒரு உதாரணமாக இருக்க முடியும்.... அதாவது கொசோவோ முன்மாதிரி எங்களுக்கும் ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. அதாவது ஒரு புதிய நிலைப்பாட்டில் நாங்களும் அங்கீகாரம் பெறமுடியும் எனலாம்."

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மற்ற இடங்களில், ஜோர்ஜியாவின் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா பகுதிப் பிரிவினைவாதிகள் இடையேயும், மோல்டோவோவின் Transdniestrias பிரிவினைவாதிகளும் ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற விரும்புகின்றனர்; அவர்கள் கொசோவோவில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

தன்னுடைய செல்வாக்கு மண்டலத்திற்கு எத்தகைய பிரச்சினை இது என்பது பற்றி மாஸ்கோ தீவிரமாக இருப்பது Novosti செய்தி நிறுவனத்தின் அரசியல் கருத்தாளர் Pyotgr Romanov ஒரு எதிர்ப்பு தலையங்க கட்டுரையில் எழுதியிருப்பதன்மூலம் குறிப்பாகிறது. "நம் கண்களுக்கு முன்னரேயே பழைய ஒழுங்கு சிதைந்து கொண்டிருக்கிறது. இப்பகுதிகளுடன் அதன் உறவு மிக சிறந்த நிலையில் இல்லை என்றாலும், ஜோர்ஜியா மற்றும் மோல்டோவோவின் நிலப்பகுதி இறைமையை ரஷ்யா உறுதியாகத் தக்க வைத்துள்ளது; இது சர்வதேச சட்ட நெறிக்கு உட்பட்ட வகையில் இருக்கிறது. இப்பொழுது தன்னுடைய எல்லைக்கு அருகே பிரிவினைவாதத்திற்கு ஆதரவை அது தருமா? அல்லது ஐக்கிய நாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமா? அனைத்து நாட்டுக் கழகம் (League of Nations) மடிந்ததையும் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு இருந்த நிலையையும்தான் இது என்னுடைய நினைவிற்குக் கொண்டுவருகிறது.

பால்கன் பகுதி மீண்டுமொரு முறை பெரும் வல்லரசுகளின் சதிகளுக்கு ஆளாகி இனவழியில் பிளவுற்றுள்ள அரசுகளின் ஒட்டு வேலை போல் ஆகியுள்ளது.

இதில் உறைந்துள்ள ஆபத்துக்களை புரிந்து கொள்ளுவதற்கு நாம் ஒன்றும் 1939 ஐ காணவேண்டியது இல்லை. ஜூன் 1999ல் கொசோவோ முரண்பாடுகள் முடிந்தபின்னரேயே, ரஷ்யப் படைகள் ஒரு குறுகிய காலத்திற்கு Pristina விமான நிலையத்தை ஆக்கிரமித்தன. நேட்டோவில் இருந்து சுதந்திரமான முறையில் கொசோவோவின் தன் பகுதியைத் தானே கண்காணிக்க மாஸ்கோ விரும்பியது.

நேட்டோவின் K-For அமைதிப்படையாளர்கள் ஜூன் 12 அன்று கொசோவோவில் நுழையத் தயாரித்துக் கொண்டிருந்தனர்; ஆனால் அவர்கள் பொஸ்னியாவில் இருந்து வந்திருந்த ரஷ்ய படைகளால் எதிர்கொள்ளப்பட்டனர். நேட்டோவின் தலைமைச் செயலாளர் Javier Solana வின் ஒத்துழைப்புடன் நேட்டோவின் தலைமைத் தளபதியான வெஸ்லி கிளார்க் 500 பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பாரட்ரூப்பர்களை விமான நிலையத்தை ஆக்கிரமிக்கத் தயாராக இருக்குமாறு உத்தரவு இட்டார்.

இந்தத் திட்டம் தளபதி K-For உடைய பிரிட்டிஷ் தளபதி சேர் மைக் ஜாக்சனால் தடுக்கப்பட்டது; அவர்: "உங்களுக்காக நான் மூன்றாம் உலகப் போரை தொடங்க போவதில்லை." என்று கிளார்க்கிடம் கூறினார்.

ரஷ்யர்கள் விமான நிலையத்தை கைப்பற்றி ஆயிரக்கணக்கான துருப்புக்களை கொண்டுவரும் திட்டங்களை கொண்டிருந்தனர். தளபதி Leonid Ivashev கூறினார்: "சில ஏர்பஸ் விமானங்கள் தயாரக இருக்கின்றன என்பதை அறிவோம். இரண்டு மணி நேரத்திற்குள் பட்டாலியன் (பிரிவுகள்) கணக்கில் பாரட்ரூப்பர்கள் கூடுவதற்குத் தயாராக உள்ளனர்."

பிரிட்டிஷ் டாங்குகள் மற்றும் கவச ஊர்திகள் விமான ஓடுதளத்தைத் தடுக்க வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு கிளார்க் திட்டமிட்டிருந்தார்; ஆனால் மீண்டும் பிரிட்டன் தடுப்பாதிகாரத்தை பயன்படுத்தியது. ரஷ்ய எந்த அளவிற்கு படைகளை இயக்க வேண்டும் என்ற உடன்பாடு பின்னர் ஏற்பட்டது; ஆனால் சில கணங்களுக்கு கொசோவோ வடக்கில் ஒரு சேர்பியப் பகுதி, தெற்கில் இனவழி அல்பானிய பகுதி எனப் பிரிக்கப்படுவது போல் தோன்றியது. சுதந்திரத்திற்கான திட்டம் இந்த அச்சங்களை மீண்டும் எழுப்பியுள்ளது; இவற்றுடன் போர் ஏற்படுவதற்கான மிக யதார்த்தமான சாத்தியமும் உள்ளது.