World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Jack Lang and the continuing disintegration of the French Socialist Party

ஜாக் லோங்கும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் தொடர்ந்த சீரழிவும்

By Pierre Mabut and Stefan Steinberg
23 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சிக்குள் எஞ்சியிருக்கும் கடைசி 'யானைகளுக்குள்" (பழைய பெரும் தலைவர்கள்) ஒருவரான ஜாக் லோங் இப்பொழுது கட்சிக்கு முதுகை காட்டிவிட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியினால் ஏற்படுத்தப்பட்ட "பணி" யின் அளிப்பை எடுத்துக் கொள்ளும் சமீபத்திய மனிதராக உள்ளார். சார்க்கோசி, லாங்கிற்கு அரசு நிறுவனங்களை புதுப்பிப்பதில் ஒரு பங்கை கொடுத்துள்ளார்.

சார்க்கோசியின் கூட்டத்தில் இணைத்து கொள்வதற்காக வரிசையாய் அதன் அணிகளை விட்டு ஓடல்களினால் சோசலிஸ்ட் கட்சி (PS) திகைத்து நிற்கிறது. சமீபத்திய ஜனாதிபதி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கட்சியின் தோல்வி அதன் தலைவர்களிடையே நம்பிக்கை பற்றிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது; அத்துடன் மந்திரி, அரசாங்க பதவிகளை வகிக்கலாம் என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கும் அடி கொடுத்துள்ளது.

ஜூலை 10ம் தேதி பொதுச் செயலாளர் François Hollande இன் தலைமையில், சோசலிஸ்ட் கட்சி தலைமை, குழுப் பணியில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ள சார்க்கோசியின் அழைப்பை லோங் ஏற்றால் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சியின் அனைத்து முக்கிய அமைப்புக்களில் இருந்தும் லோங் இராஜிநாமா செய்து, ஹொலந்தையும், தலைமையையும் "விசுவாசமற்ற தன்மைக்காக" கண்டிக்கவும் செய்தார். இதன்பின் முழுத் தலைமையும் இராஜிநாமா செய்து கட்சி உறுப்பினர்கள் முடிவெடுப்பதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் முறையிட்டார். Liberation ஏட்டிடம் லோங் கூறினார்: "அவர்கள் [சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள்] நான் நீண்ட காலத்திற்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவை எடுப்பதற்கு உதவியுள்ளனர். சுதந்திரம் நீடுழி வாழ்க; வாழ்க்கை நீடித்து விளங்குக." "சுதந்திரம்", "வாழ்வு" என்பவை இங்கு தற்கால பிரெஞ்சு வரலாற்றில் மிகத் தீவிர வலது அரசாங்கத்துடன் அடையாளம் காணப்படுகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

லோங் அறிவிப்பு வந்த நேரத்தில் ஹொலன்ட் தலைமை சோசலிஸ்ட் கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள் சென்றுவிட்டதால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அது முற்றிலும் மீளவில்லை. சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் மனித உரிமைகள் காவலரான பேர்னார்ட் குஷ்நெர் இப்பொழுது சார்க்கோசியின் வெளியுறவு மந்திரியாக உள்ளார்; முன்னாள் முக்கிய காபினெட் மந்திரியான டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் சர்வதேச நிதிய அமைப்பின் இயக்குனர் என்று சார்க்கோசி பரிந்துரைக்கும் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்; Jean-Pierre Jouyet ஐரோப்பிய விவகாரங்களுக்கு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சார்க்கோசியிடம் இருந்து வேலை ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ள மற்றொரு உயர்மட்ட "இடது" நபர் முன்னாள் சோசலிஸ்ட் கட்சித் தலைவர், மற்றும் ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்திரோனுக்கு ஆலோசகராகவும் முன்னாள் பிரான்சின் வெளியுறவு மந்திரியாகவும் இருந்த Hubert Védrine ஆவார். பூகோளமயமாக்கல் விளைவுகள் பற்றி ஆராயும் ஒரு சிந்தனைக் குழுவில் வேட்றன் ஒரு பதவியை ஏற்றுள்ளார்; இவருடன் மித்திரோனின் ஆலோசகராக இருந்த 63 வயது பொருளாதார வல்லுனர் மற்றும் எழுத்தாளரான ஜாக்கும் உள்ளார். சோசலிஸ்ட் கட்சி கட்சியை விட்டு நீங்கிய மற்றொரு முக்கியமான நபர் முன்னாள் பெண் உரிமை ஆர்வலரான படேலா அமாறா ஆவார்; அவர் இப்பொழுது சார்க்கோசியின் கீழான நகர்ப்புறக் கொள்கைக்கு அரசாங்க செயலாளராக உள்ளார்.

சோசலிஸ்ட் கட்சியின் சமீபத்திய தேசிய குழுக் கூட்டம், 2007 தேர்தல் தோல்விகள் பற்றி அடுத்த மார்ச் வரை பரிசீலனை இல்லை என்று முடிவெடுத்துவிட்டது. ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலென் ரோயாலின் வலதுசாரி தன்மை பற்றி தலைமையிடக் கூறுபாடுகள் ஏதும் வினா எழுப்பவில்லை; இப்பொழுதுள்ள UMP அரசாங்கம் அல்லது சார்க்கோசியின் தேர்தல் முயற்சியில் உள்ள பிற்போக்கு கொள்கைகளை சவால் விடுவதற்கும் சோசலிஸ்ட் கட்சி திறனற்று இருக்கிறது.

இதற்கு மாறாக, சமீபத்திய தேர்தல் தோல்வி பற்றிய விவாதம் சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப்படிநிலையில் உள்ள கணிசமானவர்கள் சார்க்கோசியின் முன்னோக்கை பங்கிட்டுக்கொள்கின்றனர் என்ற மட்டத்திற்கு வெளிப்படையாகக் கொண்டு வந்திருக்கும். "இடது-வலது மாறிவருதல்" பொறிந்துபோனது சோசலிஸ்ட் கட்சி பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வெளிப்படையான பாதுகாவலன் என்பது அம்பலமாக்கியது இரண்டும் பிரான்சின் அரசியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க, ஆபத்தான உட்குறிப்புக்களை கொண்டுள்ளன. உள்விவாதத்தை ஒத்திவைத்த வகையில், ஹொலந்தும், சோசலிஸ்ட் கட்சியின் மூத்தவர்களும் கட்சி "ஒரு மாறுபட்ட தன்மையை" பிரதிபலிக்கிறது என்ற போலித் தோற்றத்தை தக்கவைக்க முயன்றுள்ளனர். தங்கள் நடவடிக்கைகளினால் ஸ்ட்வுராஸ்-கான், வேட்றன், லோங் மற்றும் கூட்டாளிகள் தேசிய குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டிருந்த ஒருமித்த உணர்வு பற்றிய தீர்மானத்தை கிழித்தெறிந்து விட்டனர்.

உண்மையில், சோசலிஸ்ட் கட்சியின் திட்டமும் கொள்கையும் சார்க்கோசியின் UMP உடன் பலவற்றை பொதுவாகக் கொண்டுள்ளது. சோசலிஸ்ட் கட்சியில் பல முக்கிய உறுப்பினர்கள் இப்பொழுது தங்களுடைய அரசியல் வாழ்வை மீட்டு, தங்கள் சிறப்புச் சலுகைகளை தக்கவைத்துக் கொள்ள ஒரே வழி சார்க்கோசி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருப்பதுதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

முகாம்கள் மாறியதில், லோங் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்தில் தன்னுடைய தனது சொந்த பங்கை புறக்கணித்துள்ளார். "தேர்தல் தோல்விக்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி ஒரு தீவிர நெருக்கடியை கொண்டிருக்கிறது. ஒரு பகுப்பாய்வு, தலைவர்களிடம் இருந்து சுயவிமர்சனத்தை நாம் எதிர்பார்த்திருப்போம்" என்று லோங் கூறினார். இதே பின்னணியில், "பகுப்பாய்வு", "சுயவிமர்சனம்" என்பது சோசலிஸ்ட் கட்சி இன்னமும் கூடுதலாக வலதிற்கு செல்வதற்கு வாதங்களை கொடுத்தல் என்பது பொருளாகும்.

Liberation க்கு கொடுத்த பேட்டியொன்றில் (ஜூலை 12) கட்சி தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது என்றும் "எனக்கு எதிராக ஒரு மத ஆணையை பிறப்பித்துள்ளது" என்றும் லோங் குறைகூறினார். ஸ்ட்ரவுஸ் கான், குஷ்நெர் இன்னும் பலருடைய "இறகுகளை வெட்டிவிடும்" வகையில் ஹொலந் நடந்து கொள்ளுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்; இவர்கள் அனைவரும் கட்சித் தலைமையிடங்களில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டனர் அல்லது சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு சென்றுவிட்டனர்.

ஆனால் லோங் ஒன்றும் அரசியலுக்கு புதியவர் அல்லர்; அவருடைய இராஜிநாமாவிற்கும் சோசலிஸ்ட் கட்சியின் திட்டத்துடனான வேறுபாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், ஸ்ட்ரவுஸ்-கான் மற்றும் மார்டின் ஓப்ரி இருவருடனும் சேர்ந்துதான் இவர் சோசலிஸ்ட் கட்சி 2007 தேர்தல் கொள்கையை உருவாக்கினார். வேட்பாளர் ரோயாலுக்கு "சிறப்பு ஆலோசகராகவும்" இவர் இருந்தார்.

பலவிதங்களில் சார்க்கோசி அரசாங்கம் இதுகாறும் பிடித்துள்ள மீன்களிலேயே லோங் மிகப் பெரிய மீனாகும். இவருடைய நீண்ட அரசியல் வாழ்வில், லோங் மந்திரிப் பதவிகளை மற்ற சோசலிஸ்ட் தலைவர்களைவிட அதிகமாக வகித்துள்ளார். அரசியல் விஞ்ஞானம் மற்றும் சட்டம் படித்தபின், லோங் ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார், பல்கலைக்கழகத்தில் சட்டம் சொல்லிக் கொடுத்தார் மற்றும் 1977ல் பாரிஸ் மாநகர் மன்ற உறுப்பினராக முதல் அரசியல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968ம் ஆண்டு மாணவர், தொழிலாளர் இயக்கத்தில் லோங் உண்மைப் பங்கு ஒன்றையும் கொள்ளவில்லை; "கருத்தியல் திண்மையுடையவர்" என்ற தேவையற்ற அடைமொழியை தவிர்ப்பவராகத்தான் எப்பொழுதும் கருதப்படுகிறார். ஒரு "புரட்சிகர நடைமுறைவாதி" என்று தன்னை விவரித்துக் கொள்ளுவதை அவர் விரும்புகிறார்; ஆனால் இவருடைய அரசியல் வளர்ச்சி பற்றிய தீவிர ஆய்வானது, அத்தகைய "நடைமுறைவாதம்" என்பது உண்மையில் முற்றிலும் சந்தர்ப்பவாதம் என்பதற்கு மறுபெயராகத்தான் உள்ளது என்பதை தெளிவாக்கும். 1960களை பற்றி நினைவு கூர்கையில், பிரெஞ்சு அமைப்பு முறையையே உலுக்கியிருந்த தொழிலாளர், மாணவர்கள் புரட்சி எழுச்சியின் அரசியல் முக்கியத்துவத்திற்கு பதிலாக "அமைப்புமுறை-எதிர்ப்பு கலாச்சாரம்", "மாற்றீடான வாழ்க்கை முறைகளை" பாராட்டுதல் என்பதாகத்தான் இருந்தது.

கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருந்த பிரெஞ்சு சமூக ஜனநாயகத்தின் தலைமையை 1971ல் எடுத்துக் கொண்டு செயலாற்றிய, வலதுசாரி அரசியல் பின்னணியை கொண்ட, பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு கோலிசத்திற்கு ஒரு தேர்தல் மாற்றீட்டை அளித்திருந்த மித்திரோனின் கீழ்தான் லோங் அரசியல் வாழ்க்கை வெளிப்பட்டது நிகழ்ந்தது. நீண்ட நாட்கள் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக செயலாற்றியபோது, மித்திரோன் தன்னுடைய திறமையை போட்டி அமைப்புக்கள் ஒத்துழைக்கும் வகையில் ஈடுபடச் செய்ததில் --குறிப்பாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை-- தன்னுடைய இயல்பான வலதுசாரி, வணிகச் சார்புடைய கொள்கைகளுக்கு ஒரு அரசியல் மூடிமறைப்பை கொடுக்கச் செய்ததில், தேர்ந்திருந்தார். அறிவார்ந்த வகையில் அதிகப் பெயர் இல்லையென்றாலும், மித்திரோனுக்கு லோங் உற்ற விருப்பமாக இருந்தார்; மித்திரோன் இவரை கலாச்சாரத்துறை மந்திரியாக்கினார்.

மித்திரோன் மற்றும் அவருக்கு பின் வந்த லியோனல் ஜோஸ்பன் கீழ் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்த காலத்தில் கல்வி மந்திரி பதவி உட்பட ஆறு பதவிகளுக்கு குறையாத பொறுப்புக்களில் லோங் இருந்திருக்கிறார். கலாச்சார மந்திரி என்ற நிலையில் இவருடைய மிகப்பெரிய "சாதனை" தேசிய இசை நாள் விழா (Fête de la Musique) என்பதை அரசாங்கத்திற்கு எந்தச் செலவும் இல்லாமல் தோற்றுவித்ததாகும். கலாச்சார மந்திரி என்னும் முறையில் அமெரிக்காவின் எதற்கும் அஞ்சாத, ஆனால் விளைவுகளேதும் கொடுக்காத நடிகர் Sylvester Stallone க்கு தன்னுடைய அமைச்சரகத்தின் மிக உயர்ந்த பரிசை கொடுத்த அளவில் லோங் பல புருவங்களையும் உயர வைத்தார்.

2002ல் ஜோஸ்பன் அரசாங்கம் தோல்வியுற்றதை தொடர்ந்து பாராளுமன்ற எதிர்ப்பு அணிகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, லோங் அதிகரித்த அளவில் சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிப் போக்கிற்கு ஆதரவு கொடுத்தார். 2005 தேர்தலில் ஐரோப்பிய அரசியலமைப்பின் புதிய தாராளக் கொள்கை பற்றிய பிரெஞ்சு வாக்கெடுப்பிற்கு இவர் "வேண்டும்" வாக்கிற்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தார். சமீபத்தில் சார்க்கோசியுடன் உண்மையான அரசியல் வேறுபாடுகள் ஏதும் கொள்ளவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சோசலிஸ்ட் கட்சியை விட்டு நீங்கும் முன் கொடுத்த கடைசி பேட்டிகளில் ஒன்றான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வான Charlie Rose பேட்டியில், சார்க்கோசி நடத்திய தேர்தல் பிரச்சாரம் பற்றி பெரும் ஆர்வத்துடன் பேசினார். சார்க்கோசியின் கொள்கைகள் பற்றிப் பேசுகையில், லோங் கூறினார்: "அவர் ஒரு கன்சர்வேடிவ். அவரிடம் ஒரு பொருளாதாரப் பார்வை உள்ளது; அது புஷ் மற்றும் றேகன் கொண்டிருப்பதில் இருந்து அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை."

புதிய பாசிச தேசிய முன்னணியில் இருந்து கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் சார்க்கோசியின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, லோங் ஊக்கத்துடன் விடையிறுத்தார்: "இது முற்றிலும் தவறானது ஆகும். கம்யூனிஸ்ட்டுக்களுக்கு வாக்களித்தவர்களை கடந்த காலத்தில் மக்களோடு இணைத்துவிடும் முயற்சியில் மித்திரோன் வெற்றி பெற்றிருந்தார். முன்பு தேசிய முன்னணிக்கு வாக்களித்தவர்கள் தொடர்பானதில், இப்பொழுது சார்க்கோசியும் அதேபோல்தான்."

லோங், மற்றும் பல முக்கிய சோசலிஸ்ட் கட்சி "யானைகள்" கட்சியை விட்டு அகன்றது, சோசலிஸ்ட் கட்சி அரசியல் கொள்கைகளுக்கு சார்க்கோசி காட்டும் சலுகைகளினால் என்று செய்தி ஊடகத்தில் முன்வைக்கப்படுவது, அவருடைய தளத்தை விரிவாக்க இது பயன்படுகிறது என்பதோடு அதே நேரத்தில் சோசலிஸ்ட் கட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தன்னுடைய ஆட்சேர்க்கும் கொள்கையினால் சோசலிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சேதம் பற்றி சார்க்கோசி நன்கு அறிவார் என்பதில் ஐயமில்லை; ஆனால் கட்சி வலதுபுறம் பாய்ந்துள்ளதின் தன்மையும் குறைத்து மதிப்பிடப்படக்கூடாதாகும்.

லோங் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்ல நிலையில் இருக்கும் சமூக அடுக்குகள், "முதலாளித்துவ ஒழுங்கற்றவர்கள்", (Bourgeois bohemians), "bobos" என்று அழைக்கப்படுபவர்கள், கடந்த இரு தசாப்தங்களில் செல்வக் கொழிப்பு அடைந்தவர்கள், சார்க்கோசி அரசாங்கத்துடையதை போன்ற அடிப்படை அரசியல் இலக்குகளைத்தான் கொண்டுள்ளனர். பிரான்சை "சீர்திருத்துவதற்கான" அவருடைய திட்டங்களுக்கு --பெருகிய முறையில் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது தீவிர தாக்குதல்கள் நடத்துவதற்கு-- ஒத்துழைப்பு தருவதற்கு அவர்கள் வரிசையில் நிற்கின்றனர்

சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான கருத்துக்களில் ஒன்று, "68ம் ஆண்டு வர்க்கத்தின்" மதிப்பீடுகளுக்கு எதிரான தன்மை ஆகும். "இத்தேர்தலில் மே '68 ன் மரபியம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுமா அல்லது முற்றிலும் ஒரேயடியாக தகர்க்கப்பட்டுவிடுமா என்பதை கண்டறிய வேண்டும்." என்று சார்க்கோசி அறிவித்தார்.

"68 இன் மரபியம்" என்று சார்க்கோசி குறிப்பிடுகையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகர எழுச்சியை பற்றி அவர் குறிப்பிடுகிறார்; இதுவோ பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் காட்டிக் கொடுக்கப்பட்டது; அதே நேரத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தில் இருந்து அடுத்த தசாப்தத்தில் பல தொடர்ச்சியான சமூக, நலன்புரி சீர்திருத்தங்களை பெற்றது. இச்சீர்திருத்தங்களில் எஞ்சியிருப்பதையும் சார்க்கோசி "முறிக்கும் வகையில்" செயல்படத் தொடங்கி "மே 68 மரபியத்தை தகர்க்க" விழைகிறார்; இப்பொழுது அதற்காக அவர் சோசலிஸ்ட் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளார்; இவர்களில் பலரும் "68 இன் மரபியத்துடன்" நெருக்கமான தொடர்புகளை கொண்டவர்கள்தாம்.