World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Sharp tensions between US military and Iraqi prime minister

அமெரிக்க இராணுவத்திற்கும் ஈராக்கியப் பிரதம மந்திரிக்கும் இடையே கடும் பதட்டங்கள்

By James Cogan
3 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் தளபதியாக இருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரியஸிற்கும் ஈராக்கிய பிரதம மந்திரி நூரி அல்-மாலிக்கிக்கும் இடையே உறவுகள் கிட்டத்தட்ட முறிந்து போகும் அளவிற்கு சென்றுவிட்டன. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் பற்றிய வதந்திகள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக கசிந்த வண்ணம் வந்துள்ளன. கடந்த வார இறுதியில் Associated Press இடம் பேசிய ஈராக்கிய அரசியல் வாதிகள் கூற்றின்படி "உங்களுடன் நான் இனியும் செயற்பாடுகளை கையாள முடியாது. உங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நியமிக்கச் சொல்லுகிறேன்." என்று மாலிகி, பெட்ரியஸியிடம் கூறும் அளவிற்கு அழுத்தங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டன.

அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற பாக்தாதின் கைப்பாவை அரசாங்கத்திற்கு எதிராக முக்கியமாக சுன்னி அரேபியரின் எழுச்சியை அடக்கும் தளபதியின் முயற்சிகளில் முக்கியமான கூறுபாடு பற்றி ஷியைட் பிரதம மந்தரி காட்டும் எதிர்ப்புத்தான் விரோதப்போக்கிற்கு மூலமாகும். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக் காட்டுவதை நிறுத்துவற்கு உடன்படும் சுன்னி கெரில்லாக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பொது மன்னிப்பு, பணம், உள்ளூர் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கொடுக்குமாறும் பெட்ரியஸ் தனக்குக் கீழேயுள்ள அதிகாரிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார்.

சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு பொதுமன்னிப்புக்கள் வழங்கப்படுதல் தன்னுடைய அரசாங்கத்திற்கு பெரும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய செயல் என்று மாலிக்கி கருதுகிறார். ஷியைட் கட்சிகளுக்குத் தங்கள் விரோதத்தை காட்டுவதில் சுன்னிக் குழுக்கள் எந்த இரகசியத்தையும் கொள்ளவில்லை. இவற்றில் பெரும்பாலானவர்கள் அரபு தேசியவாதக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சிக்கு பரிவுணர்வு காட்டுபவர்கள்; பிந்தையது சுன்னி மக்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. அவர்கள் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள பாக்தாத்தின் ஷியைட் அடிப்படைவாத அமைப்புக்களை -- மாலிகியின் Da' Wa கட்சி, SIIC என்னும் ஈராக்கிய இஸ்லாமியத் தலைமைக் குழு போன்றவற்றை அண்டை நாடான ஈரானின் முகவர்களுக்கு ஒப்பாகத்தான் கருதுகின்றனர்.

மாலிகியும் ஈராக்கிய ஷியைட் அமைப்பும் பெருகிய முறையில் பெட்ரியஸ் தன்னுடைய திட்டத்தைச் செயல்படுத்தும் நிலையில் பெரும் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளனர். தொடக்கத்தில் இக்கொள்கை பெரும் துடிப்பு நிறைந்திருந்த மேலை மாநிலமான அன்பரில் அமெரிக்கத் துருப்புக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் குறைக்கும் நடைமுறை செயலாக இருந்தது. பொதுவாக மொத்தத்தில் இவை அனைத்தையுமே "அல் கொய்தா" என்று அமெரிக்கா முத்திரையிட்டிருந்த, கடுமையான நிலைப்பாடு கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ---- அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு ஈடாக ரமடி நகரத்தின் மீதான முழுக் கட்டுப்பாடு ஒரு சுன்னி பழங்குடிக் குழுவிற்கு கொடுக்கப்பட்டிருந்தது.

சுன்னி பழங்குடி மக்கள், எதிர்ப்புக் குழுக்களுக்கு காட்டப்பட்ட ஆரம்ப ஆர்வங்கள் பின்னர் பரந்த அளவில் பெருகிவிட்டன. பாக்தாத் புறநகரங்களில் இருக்கும் குழுக்கள் மற்றும் தியாலா, சலாஹுத்தின், பபில் என்று சுற்றியுள்ள சுன்னிப் பெரும்பான்மை இருக்கும் இடங்களிலும் உடன்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய அரசாங்கத் துருப்புக்களை எதிர்த்துப் போரிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இப்பொழுது "வட்டாரக் கண்காணிப்பாளர்கள்", "இடைக்கால போலீஸ்", "நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரிவுகள்" என்று பெயரிடப்பட்டு ஊதியமும் பெறுகின்றனர்.

இவ்வாறு நடந்து கொள்ளும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈராக்கிய அரசாங்கத்தின் கவலைகளை ஈவிரக்கமின்றி மிதித்து நசுக்குகிறது; மாலிகி ஒரு ஜனாநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு முழு உரிமை பெற்ற நாட்டின் தலைவர் என்று அழைக்கப்படும் வெள்ளை மாளிகையின் கூற்றுக்களை இவை கேலிக்கூத்தாக்குகின்றன. உண்மையில் நாட்டின் பெரும்பகுதியை சுன்னி சக்திகளிடம் பெட்ரியஸ் ஒப்படைத்து விடுவதை மாலிகி முற்றிலும் தடுக்கும் சக்தியற்று உள்ளார்; சுன்னி சக்திகளோ அவருடைய அதிகாரத்தை நிராகரித்து அவருடைய ஆட்சியைக் கவிழ்ப்பதில் உறுதியாக இருக்கின்றன. மாலிகியின் எதிர்ப்புக் குரல்கள் அமெரிக்க தளபதியினால் அமுக்கப்படுவதுடன், புஷ் நிர்வாகத்தாலும் தயக்கமின்றி உதறித்தள்ளப்படுகின்றன.

சுன்னிக்களுக்கும் ஷியைட்டுக்களுக்கும் இடையே உள்ள குறுகிய குழுவாத அழுத்தங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஈராக்கியர்களின் இறப்புக்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்படுவதை விளைவித்துள்ளன; இதையொட்டி எரியூட்டும் வகையிலான ஆத்திரமூட்டல்கள்தான் வெளிவந்துள்ளன. மாலிகியின் உதவியாளர்களுள் ஒருவரான சமி அஸ்காரி கடந்த வாரம் Los Angeles Times இடம் சுன்னி கிளர்ச்சியாளர்கள்பாலான அமெரிக்க கொள்கை "உள்நாட்டுப் போருக்கான" வித்தை கொண்டிருக்கிறது என்றார்.

கடந்த மாதம் புஷ்ஷிடம் நடத்திய வீடியோ ஒன்றுகூடலில், விரக்தியுற்ற ஈராக்கிய பிரதம மந்திரி பெட்ரியஸ் தனது அரசாங்கத்தின் சுன்னி எதிர்ப்பாளர்களுக்கு உதவி கொடுப்பதை தொடர்ந்தால் தான் ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதை மிக இகழ்ச்சியான வகையில் எதிர்கொண்ட புஷ் மாலிகியிடம் "அமைதியாக இருங்கள்" என்றாராம். அமெரிக்க இராணுவம் ஈராக்கிய இராணுவத்தின் ஷியைட் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள பிரிவுகளை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுன்னி சக்திகள் அதிகம் இருக்கும் பிரிவுகளிடம் இருந்து ஒதுங்கி இருக்குமாறு உத்தரவு இட்டுள்ளது; ஏற்கனவே பல பூசல்கள் வெடிக்கும் தன்மையில் இருந்ந்தன. ஜூன் 16ம் தேதி அமெரிக்கத் துருப்புக்கள் ஹெலிகாப்டர் துப்பாக்கி பிரிவுகளை அழைத்து தங்கள் ஆயுதங்களை ஷியைட் வீரர்கள்மீது காட்டி அவர்கள் ஒரு பாக்தாத் புறநகரில் முன்னாள் சுன்னி கெரில்லாக்களை தாக்குவதை தடுக்கும் பொருட்டு மிரட்டி நிறுத்தினர் என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.

ஈராக்கிய பாராளுமன்றத்திற்குள்ளேயே, சுன்னிக் கட்சிகள் மாலிகி அரசாங்கத்துடன் முறித்துக் கொள்ளும் வகையில் ஊக்கம் பெற்றுள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக பாராளுமன்றத்தை புறக்கணித்த பின்னர், முக்கிய சுன்னி முகாமான Iraqi Accofdance Front (IAF) புதனன்று மாலிகி இதன் 11 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை நிராகரித்ததை அடுத்து, தங்கள் மந்திரிகளை அமைச்சரவையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக அறிவித்தது. இன்னும் கூடுதலான வகையில் ஈராக்கிய பாதுகாப்பு பிரிவுகளின்மீது சுன்னி செல்வாக்கு, புதிய ஈராக்கிய இராணுவத்தில் இருந்து ஷியைட் அடிப்படைவாத விசுவாசிகள் வெளியேற்றப்படல், ஊழல் எதிர்ப்பு எழுச்சியில் பங்கு பெற்ற அல்லது அதற்கு ஆதரவு கொடுத்த சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுன்னிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பவை கோரிக்கைகளில் அடங்கியிருந்தன.

அமெரிக்காவின் உள் நோக்கங்கள்

வெடிக்கும் தன்மையைக் கூடுதலாக ஒவ்வொரு வாரமும் அடையும் நிலையில், அமெரிக்கச் செய்தி ஊடகம் சுன்னி பழங்குடி மக்கள், எதிர்ப்பு இயங்கங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்க இராணுவத்தின் செயல்முறைகளை சூழ்ந்துள்ள முரண்பாடுகளை பற்றி ஆராய்வதற்கு அமெரிக்க செய்தி ஊடகம் கவனத்துடன் தவிர்த்து வருகிறது; அதேபோல் அவற்றின் பரந்த உட்குறிப்புக்களையும் ஆராயவில்லை.

இத்தகைய அமைப்புக்கள் தன்னுடைய சக்திகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்பை விட தங்களுடைய நலனுக்கு அல் கொய்தாவினால் ஊக்குவிக்கப்படும் சுன்னி தீவிரவாதிகள் கூடுதலான, உடனடியான சவால் என்று அவை கருதுவதால் இந்நிலைப்பாடு என்றும் பெட்ரியஸ் கூறிகிறார். முன்னாள் பாத்திஸ்ட்டுக்களும், பழங்குடி போராளிகளும் மத தளத்தைக் கொண்டுள்ள சுன்னிக் குழுக்களும் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; அவை அமெரிக்கப் பணம், நிலைப்பாடு, இராணுவ உதவிகளை தங்களுடைய போட்டியாளர்களை அழிப்பதற்காக ஏற்றுள்ளன.

சுன்னிப் பிரிவுகளுக்கு இடையே உள்ள பூசல் நான்கு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடக்கும் கெரில்லாப் போரில் அல் கொய்தாதான் முக்கிய தொகுப்பு என்றும் அமெரிக்க கூற்றுக்களின் அபத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அல் கொய்தா வகையிலான இஸ்லாமிய பிற்போக்கு முக்கிய ஈராக்கிய எதிர்ப்பு அமைப்புக்களால் விரோதப்போக்குடன்தான் காணப்படுகின்றன; அவற்றின் முன்னோக்கு புஷ் கூறுவதுபோல் ஒரு சுன்னி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவுதல் அல்ல, மாறாக, அமெரிக்க ஆக்கிரமிப்பை அகற்றுதல் என்பதாகும். அமெரிக்க இராணுவத்திற்கு சுன்னி நண்பர்கள் எனக் கூறிக் கொள்ளுபவர்கள் அமெரிக்க துருப்புக்கள்மீது தங்கள் துப்பாக்கிகளை மீண்டும் செலுத்த மாட்டர்கள் என்பதற்கு எந்தவிட உத்தரவாதமும் கிடையாது.

இந்த சுன்னிப்பிரிவுகளின் மனப்பான்மை புஷ் நிர்வாகம் மாலிகி அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதைப் பொறுத்து உள்ளது; அவர்கள் இவ் அரசாங்கத்தை இவை சுன்னி மத தீவிரவாதிகளைவிட கூடுதலான அச்சுறுத்தல் கொண்டது என்று கருதுகின்றனர். பெட்ரியசின் துணைத் தளபதிகளுள் ஒருவரான தளபதி ரிக் லிஞ்ச் ஜூன் மாதம் அன்பர் மாநிலத்தில் உள்ள சுன்னி பழங்குடித் தலைவர்கள், "நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் உங்களை நாங்கள் வெறுக்கிறோம்; ஆனால் அல் கொய்தாவை அதைவிடக் கூடுதலாக வெறுக்கிறோம்; பேர்சியர்களையும் [ஈரான் மற்றும் ஈராக்கிய ஷியைட் கட்சிகளை] இன்னும் கூடுதலான வகையில் வெறுக்கிறோம்." என்று அவரிடம் அப்பட்டமாக கூறியதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு சுன்னி போராளிகள் ஏற்றத்திற்கு உதவுகிறது என்ற உண்மை வெள்ளை மாளிகை ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை ஈராக்கில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்ட இலக்கை கைவிட்டுவிட்டது மற்றும் நாடு பல போர்களில் ஈடுபடும் பகுதிகளாக சிதைவதைக்கூட விரும்புகிறது எனத் தோன்றுகிறது. அமெரிக்க நோக்கங்களின் நிலைப்பாடான மத்திய கிழக்கு, அதன் ஆதாரங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற பார்வையில் இருந்து, தற்போதைய அரசியல் உடன்பாட்டுமுறை நீடித்திருக்காது. சுன்னி, குர்திஷ் மற்றும் சில ஷியைட் பிரிவுகள் ஆகியவற்றுடன் முரண்பட்டிருக்கும் ஷியைட் அடிப்படைவாத கட்சிகளுடைய மேலாதிக்கம் நிறைந்த ஒரு ஆட்சிக்கு மாலிகி தலைமை தாங்குகிறார். இதன் விளைவு பாராளுமன்றம் முடக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற முடியாத திறனைத் தான் கொண்டுள்ளதாக மாலிகி அரசாங்கம் நிரூபித்து விட்டது; குறிப்பாக ஈராக்கிய எண்ணெய்த் தொழிலை வெளியார் முதலீட்டிற்கு திறந்துவிடுதல், வெளிநாட்டினர் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை நெறிப்படுத்தும் எண்ணெய் பற்றிய சட்டம் முக்கிய கோரிக்கையாகும்.

வாஷிங்டனில் இதே போன்ற அல்லது இன்னும் கூடுதலான முக்கிய அக்கறை, ஈரானிய ஆட்சியுடன் ஈராக்கிய ஷியைட் கட்சிகள் தங்களின் நீண்டகால அரசியல் தொடர்புகள் மற்றும் மத பிணைப்புக்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். செளதி அரேபியா, ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற சுன்னித் தலைமையிலான வட்டார நாடுகள் மாலிகி மீது தங்கள் விரோதப் போக்கை மறைக்காமல் வெளிப்படுத்தி சுன்னி எழுச்சியாளர்களுக்கு பரிவு உணர்வு காட்டும் நிலையில், ஈரான் ஒன்றுதான் மாலிகி அரசாங்கம் நம்பக்கூடிய வட்டார நட்பு நாடாக உள்ளது. தெஹ்ரானுடன் இராணுவ மோதலுக்கான திறனைக் கொண்டுள்ள தூதரக, அரசியல் வழிவகைகளில் புஷ் நிர்வாகம் தீவிரமாக இருக்கும்போது, ஈராக்கிய நாட்டை மாலிகியின் கரங்களில் விட்டுச் செல்வதின் அறிவுத் தன்மை பற்றி அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் ஐயங்கள் நிலவுகின்றன. ஈரானுடன் போர் ஏற்படுமேயாயின், அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் ஈராக்கிற்கு தளவாடங்கள் அனுப்பும் வகைகள் அனைத்தும் ஷியைட் போராளிகளாலோ அல்லது அமெரிக்கா ஆயுதம் கொடுத்துள்ள இராணுவத்தின் ஷியைட் பிரிவுகள் அல்லது போலிசாரால் தாக்கப்படலாம் என்று அமெரிக்க இராணுவப் பகுப்பாய்வாளர்கள் அச்சத்தைத் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய கணக்கீடுகள் சுன்னி போராளிகளை வளர்த்தல் மற்றும் இடைவிடாமல் அமெரிக்கா சுன்னி நபர்கள் ஈராக்கிய அரசாங்கத்திலும் பாதுகாப்புத் துறைகளிலும் முக்கிய பதவிகளில் இருத்தப்பட வேண்டும், என்று கூறுப்படுவதின் பின்னணியில் உள்ளன. பெட்ரியஸும் அவருடைய அதிகாரிகளும் ஷியைட் ஆயுத வலிமைக்கு ஒரு எதிர் எடையை சேகரித்து கொண்டிருக்கையில், ஷியைட் அரசியல் ஆதிக்கத்திற்கு மாற்றீடு கொடுக்கக்கூடிய திறன் உடைய குழுக்களுடன் வெள்ளை மாளிகை நல்லுறவை நாடுகிறது. இவ்வாறு செய்கையில், ஈராக்கில் குறுங்குழு போருக்குத்தான் அமெரிக்கா எரியூட்டுகிறது; அது ஏற்கனவே மகத்தான இறப்புக்கள், பேரழிவுகள் ஆகியவற்றிற்கு காரணமாக இருந்துள்ளது.