World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Best Years of Our Lives (1946): realism and reformism

எமது வாழ்வின் சிறந்த ஆண்டுகள் (1946): யதார்த்தமும் சீர்திருத்தவாதமும்

By Charles Bogle
11 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீதான போர் பற்றிய பெருகிய இகழ்வுணர்வு மற்றும் கவலை இருக்கும் நேரத்தில் போரில் இருந்து திரும்பிய துருப்புகள் பற்றி மூன்று திரைப்படங்கள் அடுத்த ஆறு மாதங்களில் வெளியிடப்படுகின்றன என்ற செய்தி வந்துள்ளது (In the Valley of Elah, September 14: Grace is Gone, October: Stop-Loss, next March); ஆனால் போர் ஒன்றும் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

மரபார்ந்த முறையில், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் நீண்ட காலம் பணியாற்றிய தங்கள் முன்னாள் படையினரின் கதையை கூறுவதற்கு முன் சிறிது காலம் காத்திருப்பர் வியட்நாம் போரைப் பொறுத்தவரையில், Coming Home (1978), The Deer Hunter (1979), Born on the Fourth of July (1989) ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட்ட தேதிகள், அமெரிக்காவும் அதன் திரைப்படத் தயாரிப்பாளர்களும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றி சரிவரக் கூற வந்திருந்த அல்லது சரிவர கூற முயற்சித்திருந்த கஷ்டங்கள் பற்றி எடுத்துரைக்கின்றன.

The Best Years of our Lives என்று வில்லியம் வைலரால் இயக்கப்பட்ட திரைப்படம் 1946ல் வெளியிடப்பட்டது, இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பிய மூத்த படையினர் பற்றி மிகவும் அறியப்பட்டதும், பெருமைப்படுத்தப்பட்டதுமான படமாகும்; அதில் மோதல்களைப் பற்றி கூறுவதில் அமெரிக்கர்கள் அதிக தொந்திரவிற்கு உட்படவில்லை என வாதிடமுடிகிறது. மக்கள் செல்வாக்கிற்கு இடையே இது உண்மைதான்; ஏனெனில் இது ஒரு "சிறந்த போர்" என்றும் அதையும்விட முக்கியமாக (அதிலும் குறிப்பாக அதைத் தொடர்ந்த போர்களோடு பார்க்கும்போது), அமெரிக்கா வெற்றியை பெற்றிருந்தது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் பல கவலையளிக்கக்கூடிய, விடையளிக்கப்படா வினாக்களையும் எழுப்பியது. ஐரோப்பாவும் ஜப்பானும் பொருளாதார, பண்பாட்டு அளவில் பேரழிவிற்கு ஆளாகியிருந்தன; நிதிய உறுதிப்பாடும் தங்களுடைய பொருட்களுக்கு சந்தைகளும் இல்லாவிடில் உலகந்தழுவிய சமூக எழுச்சி அச்சுறுத்திக் கொண்டிருந்தது என்பதை அமெரிக்க ஆளும் உயரடுக்கு நன்கு அறிந்திருந்தது (அதையொட்டித்தான் பிரெட்டென் உட்ஸ் உடன்பாடும், மார்ஷல் திட்டமும் வெளிவந்தன). போருக்குப் பின் மகத்தான வேலைநிறுத்த அலைகள் வெடித்தெழுந்தன. குளிர்யுத்தம் தொடங்குவதற்கு இன்னமும் சிறிது காலம் இருந்தது; ஆனால் அமெரிக்க சோவியத் உடன்பாடு முடிவுற்றது வரவிருந்த பிரச்சாரப் போர்களுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது. போரில் ஈடுபட்டிருந்த மூத்த படையினர்கள் மாறுபட்ட பொருளாதார மற்றும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

The Best Years of Our Lives' இன் பதட்டங்கள், உண்மைகள் இப்பிரச்சினைகளை பற்றி அதிகம் தெரிவிக்கின்றன; ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கான தாராளவாத "விடைகள்" முயற்சி செய்து கொண்டுவரப்பட்டுள்ளன என்பதுடன் அவை பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் கொண்டுவந்த சமூக சீர்திருத்த வாதத்தை திறனாயாமல் ஏற்கின்ற வகையிலும் உள்ளன அவ்வாதமோ திடீரென ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. படத்தின் பொதுக் கவலை மற்றும் அமைதியற்ற தன்மை ஆகியவையே அதன் ஆழ்ந்த உண்மைகளை புலப்படுத்துகின்றன.

இராணுவத்தில் நீடித்துப் பணியாற்றிய மூன்று படையினர், விமானப்படை மேஜர் பிரென் பெரி (Dana Andrews), கடற்படை வீரர் ஹோமர் பாரிஷ் (Harold Russel) மற்றும் தரைப்படை சார்ஜென்ட் அல் ஸ்டீபன்ஸன் (Frederic March) ஆகியோர் ஒரு அமெரிக்க நகரத்திற்கு ஒரே P17 விமானத்தில் திரும்புகின்றனர்; நகரமோ போருக்குப் பிந்தைய உலகை சமாளிப்பதில் ஈடுபட்டிருக்கிறதே அன்றி இவர்களுடைய வருகையை வரவேற்பதிலோ அவர்களுடைய அக்கறைகள், உயர் சிந்தனைகள் ஆகியவற்றை கேட்பதற்கோ நேரம் இல்லாமல் இருக்கிறது.

தான்வசித்து, வளர்ந்திருந்த நகரின் வறிய பகுதிக்குத் திரும்பும் பிரெட் பெரி, வேலைச் சந்தையில் தான் பெற்றிருந்த விமானப்படை மேஜர் என்ற அந்தஸ்திற்கு மதிப்பு ஏதும் இல்லை என்பதை விரைவில் உணர்கிறார்; போருக்கு முன்னால் ஒரு மருந்துக்கடையில் தான் செய்து வந்திருந்த சோடா விற்பனையாளராகவே மீண்டும் சேரும் கட்டாயத்திற்கு ஆளாகிறார். போருக்குச் செல்வதற்கு சில வாரங்கள் முன்பு திருமணம் புரிந்திருந்த இவருடைய மனைவியான மேரி (Virginia Mayo), இவர் இல்லாத காலத்தில் இரவு விடுதியில் நடனம் ஆடுபவராக மாறியிருந்தார்; அவர்கள் வெளியே செல்லும்போது அவரை மேஜர் உடையை அணியுமாறும் வற்புறுத்துகிறார். மனைவியின் கோரிக்கைகளை பிரெட் நிராகரிக்கிறார்; (ஒரு வாடிக்கையாளர் அமெரிக்கா "தவறான பகைவனை" எதிர்த்திருந்தது, அதாவது சோவியத் ஒன்றியத்தை எதிர்ப்பதற்கு பதிலாக அச்சு நாடுகளை எதிர்த்தது என்று குறைகூறியதற்கு எதிராக ஊனமுற்றிருந்த ஹோமர் பாரிஷுக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் சோடா விற்பனையாளர் வேலையையும் இழக்கிறார்); பின்னர் இவர்களிடையே திருமண முறிவும் ஏற்பட்டு விடுகிறது.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் போரில் சேர்ந்திருந்த பாரிஷ் போரில் இரு கைகளையும் இழந்து விட்டு, தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த தன்னுடைய பெற்றோர்கள் வீட்டிற்குத் திரும்புகிறார். தான் புதிதாக அணியும் துணைக் கருவிகளை அவர் பயன்படுத்தப் பயிற்சி பெற்றுவிட்டதால் பிறருடைய உதவியை நாடாமல் இருப்பதில் பெருமிதம் கொள்ளுகிறார் ஆனால் அவருடைய பெண் தோழி வில்மா (Cathy O'Donnell) இன் தந்தையார் அவரிடம், "இந்நாடு மோசமான நிலையை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது" என்றும் அவர் தன்னுடைய தகப்பனாருடைய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைபார்க்க வேண்டும் என்றும் (ஏனெனில் சற்று ஊனமுற்ற நபர்கள் சிறந்த விற்பனையாளர்களாக இருப்பர்) என்றும் கூறினார். தன்னுடைய நாற்காலியில் இடிந்துபோய் சோர்ந்து விழுந்த ஹோமர் அமைதியாக இருக்கிறார்; ஒரு வேலையைப் பெறுவதற்காக தான் ஒரு இரக்கத்திற்கு உரிய மனிதராக இருக்க வேண்டுமா என்ற நினைப்பு அவருக்கு எழுகிறது.

மேல் தட்டு வர்க்க வங்கியாளரான ஆல் ஸ்டீபன்சனுக்கு தன்னுடைய வேலைக்கு திரும்புவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; உண்மையில் ஆலின் நீண்டகாலம் பண்யாற்றிய வீரர் என்ற அந்தஸ்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய வங்கியின் தலைவர், மூத்த இராணுவ படையினர்களுக்கு உதவும் GI Bill of Rights ஐச் செயல்படுத்துவதற்காக அவரை சிறு கடன்கள் பிரிவிற்கு, துணைத் தலைவராக பணி உயர்வு கொடுக்கிறார். ஒரு காட்சியில், ஒரு மூத்த வீரர் ஆலிடம் உலகந்தழுவிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்த்துப் போரிடும் வகையில் ஒரு பண்ணை வாங்குவதற்கு தனக்குக் கடன் வேண்டும் என்று கூறுகிறார். இந்த படையினரின் "இதயம் மற்றும் கைகளின்" அடிப்படையில் தக்க சொத்து ஆதாரங்கள் இல்லாமல் தான் கடன் கொடுத்ததாக ஆல், வங்கித் தலைவரிடம் கூறுகையில்-- அந்த படையினர் படையில் சார்ஜென்ட் ஆக கற்றிருந்தார் என்று அறிந்த அடையாளத்தில்--தலைவர் இனி எவருக்கும் தக்க சொத்து ஆதாரங்கள் இல்லாமல் கடன் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். இந்த இரக்கமற்ற, மரத்த பண உந்ததுதல், இலாப நோக்குடைய சமுதாயத்தின் தன்மை ஆலுக்கு நன்கு தெரியவருகிறது.

பழைய இராணுவ துருப்புக்கள், ஒவ்வொரு போரின்போது மதிப்பு மிக்க திறமைகளை கற்றிருந்தனர். போரில் அவர்கள் தப்பிப் பிழைத்ததும் வெற்றிபெற்றதும் தனிநபருடைய விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கு என்று இல்லாமல் அவர்களுடைய பகுத்தாராயும் திறமை குழுவின் தேவைகளை பூர்த்தி செய்வதில்தான் இருந்தது. இந்த இலக்குத் தேவையின் விளைவு பலவிதமான, கூடுதலான மனிதத்தன்மை நிறைந்த மதிப்பீடுகளும் நெறிகளும் வளர்ச்சியுற்றதும் ஆகும். மேலும் தங்களுடைய மனதிலேயே இவர்கள் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், "ஜனநாயகத்திற்கு" ஆதரவாகவும் இவர்கள் போரிட்டிருந்தனர்.

ஆனால், இந்த மதிப்பீடுகளையும் நெறிகளையும் அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய சமூகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவர்களுடைய முயற்சிகள் ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொதுப் பெரும் குழப்பம் மற்றும் இச்சமூகத்தின் பணம் சேர்க்கும் முனைப்பு மற்றும் குறுகிய பார்வை ஆகியவற்றால் மோதலுக்கு உட்படுகின்றன.

பழைய படையினர்களின் நிலைமையில் இருக்கும் கடக்கவியலாத முரண்பாடுகள், மற்றும் இப்பிரச்சினைகளுக்கு விடைகாண முடியாத திரைப்படத் தயாரிப்பாளரின் குறுகிய நோக்கு, வரம்புகள் -- அல்லது அமெரிக்க திரைப்படத் தொழிலில் இத்தகைய தன்மை-- தங்களுடைய விதியைப் பற்றி (அவ்வப்பொழுது வாய்ச் சொற்கள் மூலம்) சிரமப்பட்டு ஏற்றல் என்ற வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

காப்பீட்டு நிறுவனத்தில் தன்னுடைய பணியின் விதிகளைப் பற்றிக் கேட்டு பெரும் துயர் அடையும் ஹோமரின் நிலை, அரசாங்கத்திடம் இருந்து மாதத்திற்கு 200 டாலர் என்று ஊனமுற்றோர் உதவித்தொகையை பெறுகின்றதில் நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சியாக மாறுகிறது. வில்மா தன்னுடைய கருவிகளை பயன்படுத்தும் தன்மையை ஏற்கின்றாள் என்பதை ஹோமர் அறிந்த பிறகுதான் படத்தின் முடிவில் வில்மாவுடன் ஹோமர் திருமணம் செய்து கொள்ளுவதில் படம் நிறைவடைகிறது. இந்த செயல்கள் மூலம் ஹோமர் பக்குவம் அடைந்துவிட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலும்; ஆனால் 200 டாலர்களில் தம்பதியர் எப்படி வாழ்வார்கள் என்பது வியப்பிற்கு உரியதே ஆகும்.

வங்கியில் ஆல் ஸ்டீபன்சனின் புழுக்கமான நிலை, நான்கு ஆண்டுகள் போரினால் இவருக்கும் குடும்பத்திற்கும் இடையே தோன்றிவிட்ட இடைவெளி --இரண்டாம் உலகப்போரின் பல பழைய துருப்புக்கள் நிலையும் இதுதான் -- ஆகியவை ஒரு வங்கிக் கூட்டத்தில் வெளிப்படுகின்றன. முக்கிய பேச்சாளர் என்ற முறையில் வங்கியின் சொத்துக் காப்பு இருப்புக்கள் பற்றி ஆல் ஒரு போர்க் கதையை அங்கதாமாகக் கூறுகிறார்; ஆனால் பழைய துருப்புகளுக்கு இயன்றதை வங்கி செய்யும் என்ற உத்தரவாதத்துடனும் வங்கித் தலைவருக்கு உறுதியான கைகுலுக்கலுடனும் உரையை முடிக்கிறார்.

வங்கியின் கொள்கைகளை மட்டும் அல்லாமல் முதலாளித்துவத்தின் இதயமற்ற கணக்கையும் ஆலின் உரை மாற்றிவிட்டது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? ஹோமருடைய திருமணத்தில் மனைவியுடன் நிதானமாக அவர் காட்சியளித்ததில் இருந்து ஆல் இப்பொழுது முற்றிலும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று நாம் நம்ப வேண்டுமா? இருக்கலாம், ஆனால் மிகச் சிறிய நிரூபணங்கள்தானே அதற்கு உள்ளது?

தன்னுடைய சோடா விற்பனை வேலையை இழந்தபின், பயன்படுத்தப்படாத போர் விமானங்களில் இருந்து கிடைக்கும் உலோகத்தைக் கொண்டு முன் இணைவு வீடுகளாக மாற்றும் அரசாங்கத் தொழில் ஒன்றை பிரெட் அடைகிறார். இந்த வேலையைப் பெற்றுக் கொள்ள இருக்கிறோம் என்ற நிலையில் பிரெட்டின் முகபாவம் விமானங்களை போலவே தானும் மறுபிறவி எடுத்து மீண்டும் பயனுடைய வாழ்க்கையை கழிக்கலாம் என்பதை வெளிப்படுத்துவது போல் இருக்கிறது. சிரமப்பட்டு கொண்டுவரப்பட்டாலும், இச்சீர்திருத்த ஒப்புமை பிரெட்டின் வேலை வரையறுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையைச் சார்ந்து உள்ளது என்ற உண்மை அளவிற்கு சரியாக இருந்திருக்காது. .

ஹோமரின் திருமணத்திற்கு பிரெட் வருவது எமது நம்பும் தன்மையை மிகவும் சோதிக்கிறது. அவருடைய விவாகரத்து ஆலின் மகள் பெக்கியை (Teresa Wright) அவர் வெளிப்படையாகக் காண்பதை எளிதாக்குகிறது; முதல் காட்சியிலேயே பிரெட்டும் பெக்கியும் ஒருவரை ஒருவர் ஈர்த்தல் வெளிப்படையாகத் தெரிகிறது; ஆனால் பிரெட்டின் திருமணம் அவர்களுடைய உறவை இரகசியமாக வைத்திருக்கச் செய்தது. இறுதிக்காட்சியில் பெக்கியை பிரெட் தழுவிக் கொண்டு, "எப்படி இருக்கப் போகிறோம் என்பது உனக்கே தேரியும் பெக்கி. நாம் ஒரு நல்ல நிலை பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். நமக்கு நல்ல வேலை இல்லை; கெளரவமான வசிக்குமிடம் இல்லை. அலைந்து திரிய வேண்டும்" என்று கூறுகிறார். இந்த நிலையற்ற போக்குடன் திரைப்படம் முடிவடைகிறது.

சோதனைகளை ஆண்மையுடன் பிரெட் ஏற்றுக் கொள்ளுவதும், தழுவிக் கொள்ளுதலும் வாடிக்கையான ஹோலிவுட் விஷயம்தான்; அதாவது, தனிப்பட்ட இலக்கான தவிர்க்க முடியாத திருமணம், பொது இலக்கான ஒரு சமூகத்தின் புதிய பிறப்பு அடையப்பட்டுவிட்டது என்பதை நாம் நம்பினால்; ஆனால் பிரெட்டின் சொற்கள், அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டால், வரவிருக்கும் சோதனைகளை ஆண்மைத்தனமாக பிரெட் ஏற்பது என்பதை குறிப்பிடுதவதற்குப் பதிலாக இவ்விருவரையும் (அமெரிக்காவையும்கூட) எந்த கொடிய விலங்கு அழிப்பதற்கு பாய்ந்து கொண்டிருக்கிறதோ என்றுதான் நினைக்க வைக்கிறது.